வியாழன், 7 ஏப்ரல், 2022

மேகமலை -5






மேகமலை 

மேகமலையை பிப்ரவரி 13ம் தேதி குடும்பத்துடன் சென்று வந்தோம். தொடர் பதிவு.

மேகமலையில் நாம் பார்த்து ரசிக்க நிறைய இடம்  இருக்கிறது. மூன்று நாட்கள் தங்கி இருந்து பார்க்கலாம். நாங்கள் சனிக்கிழமையும், ஞாயிற்று கிழமையும் பார்த்தோம். தேயிலை தோட்டம், மலைமேல் போய் இயற்கை அழகை ரசித்தோம்.

பசுமை மாறா காடுகள், தேயிலை, காப்பி, ஏலக்காய் பண்ணைகள் பார்க்க அழகு. யானை, புலி,  மான்கள் பார்க்கலாம் என்றார்கள், நாங்கள் ஏரிக்கரையோரம் மாடுகள், பறவைகள்   தான் பார்த்தோம். 

மாடுகள் அருகே பறவைகள் நிற்கிறது.


 கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர்  உயரத்தில் இருக்கிறது மேகமலை . மேகம் அடிக்கடிவந்து மலையை மறைப்பதால் மேகமலை. சட்டென்று  வெண்மேகம் மறைக்கிறது, சட்டென்று மலை தெரிகிறது. மாயாஜாலம் போல. நாலைந்து மலைசிகரங்களுக்கு நடுவே உள்ளது இந்த பள்ளத்தாக்கு. இங்கு  மிதமான குளிர் எப்போதும் இருப்பதால் கோடை காலத்துக்கு ஏற்ற சுற்றுலா தலம். குற்றால சாரல் போல சாரல் மழை பெய்கிறது.

யானைகள் சுற்றித் திரியும் என்றார்கள். யானையின் கழிவுகள்(சாணம்) தான் நிறைய இடங்களில் கிடந்தது. யானைகள் குடும்பமாக சில நேரம் வருமாம்.


 முள்ளம்பன்றியின் முற்கள் கீழே  நிறைய இடங்களில் விழுந்து கிடந்தது.  முள்ளம் பன்றியின் முற்கள் கீழே விழுந்து கிடப்பதை படம் எடுத்தேன், தேடினால் கிடைக்கவில்லை.

யானைகள் பனி மூட்டம் இருக்கும் போது எதிரில் போனால் கூட  தெரியாது என்றார்கள். தூரத்தில் ஏதோ அசைவது தெரிந்தது. "அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்" என்பது போல   பனி மூட்டத்தில் கருப்பாக தெரிந்தது,  யானை என்று எல்லோரும் கொஞ்சம் பின்னால் நகர்ந்து போகப்பார்த்தோம், ஒருவர் நீண்ட மழை கோட் அணிந்து  குடை பிடித்துக் கொண்டு வந்தார்.

அப்புறம் நிம்மதி பெருமூச்சு விட்டு  ஒரே சிரிப்புதான்.

அவரிடம் சொன்னோம் ,யானை என்று பயந்து விட்டோம் என்று .

அவரும் சிரித்து விட்டு இப்போ கொஞ்ச நேரம் முன்புதான் யானை போனது என்றார்.

இந்த இடத்திற்கு நீர் அருந்த வரும் என்றார்


அப்புறம் தேயிலை தோட்டத்தில் அசைவு தெரிந்தது பார்த்தால் காட்டு பன்றிகள் மூன்று ஓடியது.

புதர் நடுவில் ஒளிந்து கொண்டன. ஒரு பன்றியின் முதுகு மட்டும்  கொஞ்சம் தெரிகிறது. உங்களுக்கு தெரியுதா?

மலை மேல் ஏறும் போது எடுத்த படங்கள்



 மேலே இருந்து கீழே  தெரியும் தேயிலை தோட்டம்


ஏரியில் மீன் பிடித்து கொண்டு இருக்கிறார் பனி மூட்டத்தில் தெளிவாக தெரியவில்லை


மலைக்கு போகும் பாதை  கொஞ்ச தூரம் இப்படி , அப்புறம் மண் தரை.





    அரிய வகை மரங்கள் என்றார் 

யானை உரிக்குமாம் பட்டைகளை அதற்கு உடல் நிலை சரியில்லை என்றால் மரப்பட்டைகளை உரித்து  கடித்து துப்பும் போல. அல்லது குழந்தைகள் போல உரித்து விளையாடுமோ தெரியவில்லை. நின்று பார்த்துக் கொண்டு இருந்தோம் "வெகு நேரம் நிற்க கூடாது பார்த்து விட்டு உடனே கீழே இறங்கி விட வேண்டும்" என்று அழைத்து வந்தார்.

நம் மக்கள் அதில் தங்கள் பெயர்களை எழுதி வைத்து இருக்கிறார்கள்.

புல் புல் பறவை (Red- whiskered bulbul) மலை மேல் இருந்த மரங்களில் பார்த்த பறவைகள்
 


கரு நீலமும், வெளிர் நீலமும் உள்ள பறவை   தெரிகிறதா மரக்கிளையின் நடுவில்? 

Purple sunbird  என்று கூகுள் சொல்கிறது. சரியா என்று பறவையை  பற்றிய தகவல் நன்கு  தெரிந்தவர்கள் சொல்வார்கள். 

கீதா ரங்கன் கூகுளில் தேடி அனுப்பி விட்டார்கள்  அவர்களுக்கு நன்றி. ஆசிய தேவதையாம் இதன் பேர். தேவதை போல சட்டென்று மௌகம் காட்டி மறைந்து கொண்டார்.

 நிறைய பறவைகள் சத்தம் கேட்டது ஆனால் கண்ணுக்கு கிடைக்கவில்லை.

கொண்டைலாத்தி பறவை



தங்கி இருந்த இடத்தில் மலைக்கு போகும் போது வழித்துணையாக இவரை அனுப்பி வைத்தார்கள். இவர் தேயிலை செடிகளை தொடாமல் கொஞ்சம் நகர்ந்து  வரச் சொன்னார் மருந்து அடித்து இருக்கிறது, அப்புறம் நாம் அதை பிடிமானமாக பற்ற கூடாது என்றார். 


மலை மேல் எந்த இடத்தில் நிற்கலாம்  தூரத்தில் தெரியும் இடம் என்ன என்பது பற்றி எல்லாம் வழிகாட்டி சொன்னார்.

நான் சின்ன வயதில் ஐயப்ப மலைக்கு நடந்தே அந்த வழியாக போவேன். தூரத்தில் வெள்ளையாக தெரிகிறதா? அது கண்ணகி  அம்மன் கோவில் என்று எல்லாம் சொன்னார். நமக்கு ஒரே மேக மூட்டமாக தெரிந்தது அவர் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டினோம்.

மலை சரிவாக இருப்பதால் நடக்கும் போது கவனமாக நடந்து வர சொன்னார். "தண்ணீர் பாட்டில் கொண்டு வந்து இருந்தால் அதை எல்லாம் கையோடு எடுத்து வந்துவிட வேண்டும் காலி பாட்டிலை அங்கு போடக் கூடாது" என்றார். நாங்கள் எங்கு சுற்றுலா சென்றாலும் குப்பைகளை போட மாட்டோம்.  குப்பை போடு இடத்தில் போடுவோம் குப்பை போட பை எடுத்து போவோம் என்றோம் மகிழ்ந்து பாராட்டினார்.



ஹெல்மெட்டை கவிழ்த்தார் போல மலை



தங்கும் விடுதியில் கேரம் போர்ட்,  இருந்தது, பல்லாங்க்குழி கொண்டு போய் இருந்தோம். எல்லோரும் விளையாடி மகிழ்ந்தோம்.



தங்கும் இடத்தில்  இட்லி, சப்பாத்தி, கேசரி, வெண்பொங்கல் , சாம்பார், ரசம் கூட்டு, பொரியல் என்று முதல் நாள் மதியம், இரவு, மறு நாள் காலை வரை நன்கு சமைத்து தந்தார்கள். வயிற்றை கெடுக்கவில்லை உணவுகள்.

  இயற்கையை ரசித்து மகிழ்ந்தோம்.  மேகமலை தொடர் பதிவை தொடர்ந்து படித்தவர்களுக்கு நன்றி.

வாழ்க வையகம்!  வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.

-----------------------------------------------------------------------------------------

48 கருத்துகள்:

  1. அழகான படங்கள். அந்த ஹெல்மெட் என் கண்களுக்குப் பெரிய கழுகு ஒன்று சிறகை விரித்துப் படுத்திருப்பது போலவும், அருகே ஒரு கழுகு நின்று கொண்டு பார்ப்பது போலவும் தெரிந்தது. வண்ணப்பறவைகளையும், முள்ளம்பன்றியையும் கண்டு பிடிச்சுட்டேன். வழிகாட்டி நல்லவராய் இருந்திருக்கார். யானையைப் பார்க்க முடியாமல் போச்சே என வருத்தமாக இருக்கு. விடுதியில் நல்ல சாப்பாடும் சமைத்துக் கொடுத்து உடலையும் பாதுகாத்ததுக்கு இறைவனுக்கு நன்றி. நல்லதொரு பயணம். ஆனால் இப்படி மலை மேல் ஏறுவதை எல்லாம் என்னால் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //அந்த ஹெல்மெட் என் கண்களுக்குப் பெரிய கழுகு ஒன்று சிறகை விரித்துப் படுத்திருப்பது போலவும், அருகே ஒரு கழுகு நின்று கொண்டு பார்ப்பது போலவும் தெரிந்தது. //

      ஓ! பார்ப்பவர் பார்வைக்கு விட்டு இருக்கலாம் போலவே! உங்களுக்கு தெரிந்த காட்சியை நானும் மீண்டும் பார்த்தேன்.

      காட்டு பன்றி தெரிகிரதா என்றேன், உங்களுக்கு தெரிந்து இருக்கிறது, பறவையும் உங்களுக்கு தெரிந்து விட்டது மகிழ்ச்சி.
      யானையை பார்க்க முடியவில்லை அது வருத்தம்தான் எங்களுக்கும்.
      வழிகாட்டியும் நல்லவர். மலை ஏற சிரமம் இல்லை. ஏறிவிடலாம் நீங்களும்.
      கீழே போய் தான் அவர்கள் உணவுக்கு பொருட்கள் வாங்கி வர வேண்டும் அசைவமா, சைவமா என்று கேட்டு , காரம், உப்பு எப்படி வேண்டும் என்று கேட்டு சமைத்து தருகிறார்கள். சைவ சாப்பாடு மிதமான காரம், உப்பு, புளி வேண்டும் என்று சொல்லி விட்டோம். அதனால் அது போல சமைத்து தந்தார்கள்.


      பேத்திக்கு சுக்கு காப்பி போட்டு தந்தார். இறைவனுக்கு நன்றிதான் சொன்னோம். பேத்திக்கு உடல் நலம் கொஞ்சம் சரியில்லாமல் போய் விட்டது கால நிலையால் .(முதல்னாள் மாலை மழையில் நனைந்தது)ஊருக்கு திரும்பி வந்து மருத்துவரிடம் சென்று வந்தோம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. //என் கண்களுக்குப் பெரிய கழுகு ஒன்று சிறகை விரித்துப் படுத்திருப்பது போலவும், அருகே ஒரு கழுகு நின்று கொண்டு பார்ப்பது போலவும் தெரிந்தது. //

      ஆ..  உங்களுக்கு அபப்டியா தெரிகிறது?  மறுபடி சென்று பார்த்தல் தவளையின் முகம் க்ளோசப்பில் தெரிவது போல தெரிகிறது!

      நீக்கு
    3. ஸ்ரீராம், உங்களுக்கு தவளை மாதிரி தெரிகிறதா!

      நீக்கு
    4. ஆமாம்..  முதுகு தாண்டி கழுத்து வரை மண்ணில் புதைந்து கழுத்துக்கு மேலே முகம் மட்டும் மெகா சைஸில்..   

      முன்னர் ஒரு படம் வரும்.. தவளை படம் போல இருக்கும்..   /உற்றுப்பாருங்கள்..  குதிரை தெரிகிறதா/ என்பார்கள்..  அந்தப் படம் நினைவுக்கு வருகிறது!

      நீக்கு
    5. //ஆமாம்.. முதுகு தாண்டி கழுத்து வரை மண்ணில் புதைந்து கழுத்துக்கு மேலே முகம் மட்டும் மெகா சைஸில்.. //

      மீண்டும் போய் பார்த்தேன் , அப்படித்தான் தோன்றுகிறது. நினைப்பு ஏற்றமாதிரி காட்சி அளிக்கும் போலவே இந்த மாயமலை.


      //முன்னர் ஒரு படம் வரும்.. தவளை படம் போல இருக்கும்.. /உற்றுப்பாருங்கள்.. குதிரை தெரிகிறதா/ என்பார்கள்.. அந்தப் படம் நினைவுக்கு வருகிறது!//

      குமுதம் பத்திரிக்கையிலா?

      நீக்கு
  2. படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது இதில் முதலாவது படம் மிகவும் அருமை.

    பயண விவரங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      முதலாவது படம் உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
      படங்களையும், பதிவையும் ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  3. படங்கள் அத்தனையும் அழகு.. அழகு.. கீதாக்கா அவர்கள் சொல்வது போல -

    இப்படி மலை மேல் ஏறுவது எல்லாம் சாத்தியம் இல்லை என்றே நினைத்துக் கொள்கிறேன்...

    உங்களது பதிவினால் இந்த இடங்களையும் பார்த்துக் கொள்ள முடிகின்றது..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      மலை மேல் ஏறுவது என்பது இந்த இடத்தில் கடினம் இல்லை.
      பாதை நன்றாக இருக்கிறது.கொஞ்சம் ஏற்றம் இருக்கும் அவ்வளவுதான்.
      இடுப்பு, கால்வலியோடு நான் ஏறி பார்த்து வந்து விட்டேன்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. உணவகக் காட்சிகள் கண்ணைக் கவர்கின்றன..
    அழகு..

    பதிலளிநீக்கு
  5. தேயிலைத்தோட்டப் படங்கள் அழகு.  அதில் ஒரு படத்தில் தேயிலைத்தோட்டம் மெகா சைஸ் வாழையிலை போல இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //அதில் ஒரு படத்தில் தேயிலைத்தோட்டம் மெகா சைஸ் வாழையிலை போல இருக்கிறது..//

      9 வது படம் நீங்கள் சொல்வது போல இருக்கிறது.நானும் எந்த படம் அப்படி தெரிகிறது என்று பார்த்தேன்.

      //தேயிலைத்தோட்டப் படங்கள் அழகு.//

      நன்றி.



      நீக்கு
    2. //9 வது படம் நீங்கள் சொல்வது போல இருக்கிறது.நானும் எந்த படம் அப்படி தெரிகிறது என்று பார்த்தேன்.//

      ஆம்.  ஒன்பதாவது படம்.  உங்கள் பதில் கண்டு நானும் எண்ணிப்பார்த்து விட்டு வந்தேன்!!

      நீக்கு
    3. நீங்களும் எண்ணிப்பார்த்து விட்டீர்களா ?
      நன்றி.

      நீக்கு
  6. யானை விஷயம் பயமுறுத்திகிறது.  பனிமூட்டத்தில் திடீரென கண்ணெதிரே ஒற்றை யானை நின்றாள் என்ன ஆகும், எப்படி இருக்கும்?  அம்மாடி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //யானை விஷயம் பயமுறுத்திகிறது. பனிமூட்டத்தில் திடீரென கண்ணெதிரே ஒற்றை யானை நின்றாள் என்ன ஆகும், எப்படி இருக்கும்? அம்மாடி.//


      ஆமாம்,ஒற்றை யானை பயம் என்பார்கள். அங்கு உள்ள மக்கள் அந்த பாதையில் நடந்து வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

      நீக்கு
  7. படத்தில் பன்றியின் முதுகு தெரிகிறது. மாலிமேலிருந்து கீழே தெரியும் காட்சிகள் அற்புதம்.   ஹெல்மெட் மலை நல்ல கற்பனை.  எத்தனை நாட்கள் தங்கி இருந்தீர்கள் அங்கு?  தங்குவதற்கு என்ன கட்டணம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மாலிமேலிருந்து கீழே தெரியும் காட்சிகள் அற்புதம்.//

      மலை மேலிருந்து என்று படிக்கவும்!!!.

      நீக்கு
    2. அப்படித்தான் படித்தேன்.

      நீக்கு
  8. பன்றியின் முதுகு பார்த்து விட்டீர்களா மகிழ்ச்சி. காமிராவை எடுப்பதற்குள் மிக வேகமாய் ஓடி ஒளிந்து கொண்டது.

    சனிக்கிழமை மதியம் போனோம், ஞாயிறு காலை மதியம் கீழே வந்து வந்து விட்டோம்.
    பதிவில் சொல்லி இருக்கிறேன். 10 பேர் போய் இருந்தோம்.
    பிள்ளைகளிடம் கேட்டு சொல்கிறேன்.

    ஹெல்மெட் போல எனக்கு தெரிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்



    1. Briar Tea Bungalows
      teabungalows.com
      http://teabunglows.com/
      உணவு, தங்கும் நபர்கள் வைத்து கணக்கு செய்யபடுகிறதாம்.
      வசதியான தங்கும் இடம், பயமில்லை. நெட் வசதி இருக்கிறது.
      முன் பதிவு செய்ய வேண்டும். திடீரென்று கிடைக்காது.

      நீக்கு
  9. படங்கள் எல்லாம் அருமை. தேயிலைத் தோட்டம் படங்கள், கொண்டைலாத்தி பறவை, மேலிருந்து மலையின் கீழான படங்கள் ஒவ்வொன்றையும் ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
      படங்கள் எல்லா வற்றையும் ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  10. கோமதிக்கா படங்கள் எல்லாம் அட்டகாசம். தேயிலை தோட்டத்தை டிசைனாகக் கட் பண்ணிவிடுவாங்க போல. எல்லா மலைகளிலுமே இப்படித்தான் டிசைனாகத் தெரியும். இடையிடையே பாதைகள் இருப்பது படம் எடுக்கும் போது அழகாக இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
      தேயிலை தோட்டம் பார்க்கவே அழகுதான். போதிய இடைவெளி விட்டு நட்டு இருப்பது அளவாக கத்தரித்து வைத்து இருப்பது எல்லாம் அழகுதான்.

      திருமண ஆலபம் செய்ய மணமக்களை அழைத்து வருகிறார்கள்.

      நீக்கு
  11. கொண்டைலாத்தி, புல் புல் அழகு.

    அக்கா நான் கூகுளில் நீலக்கலர் தலை கழுத்து கறுப்பு என்று போட்டப்ப ஏதேதோ பறவைகள். பர்ப்பிள் சன்பேர்ட்னு தேடினப்போ வீடியோ கூட வந்தது ஆனால் அதில் இருக்கும் அலகும் , நீங்கள் எடுத்திருக்கும் படத்தில் உள்ள பறவையின் அலகும் வித்தியாசமாக இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீலப்பறவை மனதை கவர்ந்து விட்டது.நீங்களும் தேடி விட்டீர்களா?
      நீலப்பறவை சிட்டு வகையை சேர்ந்தது நீலச்சிட்டு என்று வைத்துக் கொள்வோம் நாம்.
      கொண்டைலாத்தியை நிறைய படம் எடுத்தேன்.
      புல் புல் போஸ் கொடுத்து விட்டு உடனே பறந்து விட்ட்டது.நீலப்பறவஒ கொஞ்சம் முகம் காட்டி பின் மறைந்து கொண்டது.


      நீக்கு
  12. அக்கா யானை என்று ஏமாந்தது...ஹாஹாஹா சிரித்துவிட்டேன். ஆமாம் தூரத்திலிருந்து பார்க்க அப்படித்தான் தோன்றும்.

    பன்றியின் முதுகு தெரிகிறதே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யானை என்று நினைத்தை, பக்கத்தில் வந்த பின் சிரித்ததும் நினைவுகளில் என்றும் இருக்கும்.

      நான் வேறு என் மப்ளரை கீழே போட்டு விட்டு வந்து விட்டேன். மகளும், பேத்தியும் தேடி எடுத்து வந்தார்கள். பனிமூட்டத்தில் அவர்களை போனது தெரியவில்லை
      கவலையாக இருந்தது.பன்றியின் முதுகு தெரிந்து விட்டதா உங்களுக்கும் மகிழ்ச்சி.

      நீக்கு
  13. கோமதிக்கா ஆஹா பாருங்க மேகமலைல ஒரு தேவதைய பார்த்து படம் பிடித்து எங்களுக்கும் காட்டியிருக்க்கீங்க. தேவதைகள் னாலே வானத்துல மேகத்துக்கு நடுலன்னுதானே படம் போடுவாண்க என்ன சொல்றேன்னு கண்டுபிடிச்சீங்களா!!?

    அந்த நீலக்கலர் பறவை - ஏசியன் ஃபெயரி பர்ட்- ஆசிய தேவதைப் பறவை!!!!! அது கண்ணு கொஞ்சம் சிவப்பா இருக்கு பாருங்க. நான் பறவையை வர்ணித்து போட்டுத் தேடியதும் கிடைத்தது. படம் அனுப்பறேன் உங்களுக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசிய தேவதையை பதிவில் போட்டு விட்டேன் கீதா, உங்களுக்கு நன்றி.
      தேவதை எல்லாம் முகம் காட்டி மறைந்து விடுவார்கள். அதுபோல இந்த ஆசிய தேவதை நீலசிட்டும் சிட்டு போல மறைந்து கொண்டது.
      ஆர்வமாக தேடி தந்தமைக்கு நன்றி.

      மேகமலை தேவதை மரங்களுக்கு இடையே முகம் காட்டுவார் போல!

      நீக்கு
  14. யானைகள் வந்து நீர் அருந்தும்னு சொல்ற இடம் தண்ணி ரொம்பக் குறைவா இருக்கே அக்கா அது சுனையோ? அவங்களுக்கு அது போதுமோ?!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யானை ஏறியில் வந்து த்ண்ணீர் அருந்தும். நடந்து வரும் பாதையில் இந்த இடத்தில் உள்ள தண்ணீரை அருந்துமாம். அங்கு எப்போதும் தண்ணீர் இருக்குமாம், மலையிலிருந்து ஓடி வரும் தண்ணீர்.

      நீக்கு
  15. மலைக்குத் துணைக்குவழிகாட்டியாய் பெரியவர் வந்தது நல்ல விஷயம்.

    யானை உரித்து விளையாடும்/கடித்துத் துப்பும் மரப் பட்டைகள் ஆச்சரியமான தகவல்!

    அவர்களின் உலகமே தனிதான்

    அது சரி ஏன் அவர் உங்களை அங்கு அதிக நேரம் இருக்கக் கூடாது என்று சொன்னார்?

    எல்லாமே மிகவும் ரசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரியவர் வந்தது நல்ல விஷ்யம் தான். அவர் வந்தது பாதுகாப்பு. ஓற்றை யானை வந்தால் ஒதுங்க இடம் கிடையாது. யானையின் வழிதடம் அது அதனால் நாம் வெகு நேரம் நிற்க கூடாது என்றார்.

      அனுமதி இல்லாமல் மேலே போக முடியாது. அவர்கள் அனுப்பும் வழி காட்டி இல்லாமல் மேலே போக கூடாது.
      ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  16. அங்கே தங்கும் விடுதியில் உணவு எல்லாம் அருமையாகக் கிடைத்தது மகிழ்ச்சியான விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவு வயிற்றை கெடுக்காமல் இருக்க வேண்டும். அது போதும் எங்களுக்கு.
      கீழே போய் தான் உணவு பொருட்களை வாங்கி வருகிறார்கள். காய்கறி தோட்டம் சமையல் அறை பக்கம் போட்டு இருக்கிறார்கள், அதிலிருந்து எடுத்து கொள்வார்களாம்.
      மற்றவை கீழே போய் ஒருவர் வாங்கி வருகிறார்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  17. உயரத்திலிருந்து எடுத்த புகைப்படங்கள் மிகவும் கவர்ந்தது... அழகான காட்சிகள்... கொண்டைலாத்தி பறவை அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உயரத்திலிருந்து எடுத்த புகைப்படங்கள், மற்றும் பறவைகளை ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  18. அன்பின் கோமதிமா,

    வாழ்க வளமுடன்.
    அனைத்துப் படங்களும் மிக அருமை.
    ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு வடிவங்களிலும் காட்சி தரும் மேகமலை
    மிக அற்புதமான அனுபவம்.

    அதைத் தொடர்ந்து நீங்கள் படங்கள் எடுத்திருப்பது எங்களுக்கு நல் விருந்து.
    நன்றி அன்பு தங்கச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      ஆமாம் அக்கா, ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு வடிவத்தில் அழகாய் காட்சி அளிக்கிறது மேகமலை.

      அற்புத அனுபவம் தான்.
      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி அக்கா.

      நீக்கு
  19. அந்த வழிகாட்டி தான் மிகவும் கவர்ந்தார்.
    எத்தனை ஆர்வமாகச் சொல்லி வருகிறார்.

    முன்பு எப்பொழுதோ படித்த தேக்கடி கதை
    நினைவுக்கு வந்தது. முதுகு காட்டி ஓடும் முள்ளம்பன்றி.
    மலை முகட்டு ஆடுகள்.
    யானை போல் வந்து வேடிக்கை காட்டிய
    குடை மனிதர்!!
    மஞ்சுலாவும் மலைகள்.
    யானைகள் தடம். எல்லாமே மிக அழகு.
    அத்துனூண்டு ஓடைக்கு யானை எப்படி வருமோ பாவம்.

    எங்கும் பறக்காமல் இந்த இடத்துக்கு
    அழைத்து வந்து விட்டீர்கள் கோமதிமா.

    பதிலளிநீக்கு
  20. வழிகாட்டி ஆரவமாக சொன்னார்.
    தேக்கடி கதை என்ன என்று சொல்லுங்கள் ஒரு பதிவில்.

    //முதுகு காட்டி ஓடும் முள்ளம்பன்றி.
    மலை முகட்டு ஆடுகள்.
    யானை போல் வந்து வேடிக்கை காட்டிய
    குடை மனிதர்!!
    மஞ்சுலாவும் மலைகள்.
    யானைகள் தடம்.//

    பதிவை அழகாய் நாலு வரிகளில் அடக்கி விட்டீர்கள்.

    ஓடை எப்போதும் நீர் வற்றாமல் இருக்கும் போல .

    தொலைக்காட்சியில் இருந்த இடத்திலிருந்து மதுரை திருவிழாவை பார்த்து கொண்டு இருக்கிறேன். தங்கை அழைக்கிறாள் போக அலுப்பு. இதுவே பிள்ளைகளுடன் வெளியில் போகும் போது உற்சாகம்.

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. படங்களும் பகிர்வும் மிக நன்று. இயற்கைக் காட்சிகள் அருமை. ஆம், மறைந்திருக்கும் காட்டுப் பன்றி தெரிகிறது. ஆசியத் தேவதை கண்டிராத பறவை, மிக அழகு. கொண்டலாத்தி குடியிருப்புக்கு வருவதுண்டு ஆனால் என் கேமராவுக்கு சிக்கவில்லை:). அரிய வகை மரமும், யானைகள் அதைக் கடித்துத் துப்பும் செய்தியும் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலஷ்மி, வாழ்க வளமுடன்
      மேகமலையில் 10 வகை பறவைகள் இருக்கிறது என்று சொல்கிறார்கள் அரிய வகை என்றார்கள்
      ஆறு் கண்ணில பட்டது , மற்றவை் கண்ணில் தட்டுபடவில்லை
      படங்களை , பகிரவை ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி .

      நீக்கு
  22. மேகமலை குறித்த தங்களது தொடர் மிகவும் சிறப்பு. எல்லா படங்களும் அழகு. அனைத்தையும் ரசித்தேன்....

    பதிலளிநீக்கு