வியாழன், 5 ஆகஸ்ட், 2021

மழையும், மரங்கொத்திப் பறவையும்


மகன் வீட்டுத்தோட்டத்திற்கு வந்த அரிசோனா மரகொத்திப் பறவை.
 

போன மாதம்  மழை நன்றாக பெய்தது. பயங்கர இடி, மின்னலுடன் மாலை  முதல்  காலைவரை விட்டு விட்டு  பெய்து கொண்டு இருந்தது. மறுநாள் காலையில் மழை கொஞ்சம் விட்டு சாரல் மழை போல் பெய்தது. அதை ரசித்து சாரல் மழையில் உடல் நனைத்து நின்றது மரகொத்திப்பறவை.



 மதில் சுவரில் தொற்றிக் கொண்டு  நின்றது  வெகு நேரம்.

மண் புயல்  எச்சரிக்கை, இது போல் மழை  எச்சரிக்கை,  வெள்ள எச்சரிக்கை எல்லாம் உடனுக்கு  உடன் வந்து கொண்டு இருந்தது.


என் போனில் வந்த எச்சரிக்கையைப் பார்த்து   நான் பயந்து போய் கேட்டேன் மகனிடம் " என்ன இப்படி வந்து இருக்கே? ." என்று. இப்படித்தான் வரும் இந்த ஊரில் என்றான். சிறிது நேரத்தில் காற்று பயங்கரமாக வீசியது. மாடி பால்கனியில் போட்டு இருந்த நாற்காலி பறந்து வந்து தோட்டத்தில் விழுந்தது.

                                     
                                                          மண்புயல் 


வீட்டுக்கு வெளியே இருந்த மரம் காற்றில் பயங்கரமாக ஆடியது . சில வீடுகளில் மரம் சாய்ந்து விட்டதாம். மறு நாள் செய்தி படித்தேன். (மான் சூன்) பருவ கால மழையில் சில நேரம்  வெள்ளம் வருமாம்.  பத்திரிக்கை செய்தி மறு நாள் படித்தேன். 

//தேசிய வானிலை சேவை வெள்ளிக்கிழமை வானிலை அறிக்கைகளை வெளியிட்டது, இது மாநிலம் முழுவதும் வெள்ள அபாயங்கள் குறித்து எச்சரித்தது. ஜூன் மாதத்தின் நடுப்பகுதி முதல் செப்டம்பர் வரை ஓடிய 2020 பருவமழை காலத்தை விட பல இடங்களில் கடந்த மாதத்தில் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை சேவை தெரிவித்துள்ளது.

 ஃபிளாக்ஸ்டாஃப் நகரம், அதன் நகர்ப்புற பாதை அமைப்பின் பல பிரிவுகள் சேதமடைந்துள்ளன//

 தினம் போகும் வழியில் மறு நாள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. போக்குவரத்து தடை ஏற்பட்டது.

மண் புயலில் இந்த மலை எல்லாம் தெரியவில்லை.



மாலை நேரம்-  செவ்வானமும், மழை மேகமும்
மலையை  மழை மேகம் மூடி விட்டது.

"மேகம் கருக்குது மழை வர பார்க்குது வீசி அடிக்குது காத்து மழைக் காத்து"


மழை பெய்கிறது

வானத்திலே பிறந்த மழையே வா! -இந்த
வையத்தை வாழவைக்க மழையே வா!
சீனிக்கரும்பு தர மழையே வா!- நல்ல
செந்நெல் செழிப்பாக்க மழையே வா!
கானல் தணிக்க நல்ல மழையே வா! - நல்ல
காடு செழிக்க வைக்க  மழையே வா! 
ஆன கிணறு குளம் ஏரி எல்லாம் -நீ
அழகு படுத்த நல்ல மழையே வா!

பாவேந்தர் பாரதி தாசன் அவர்கள் இயற்கையை ரசித்து பாடிய மழை பாட்டு.

அவர் போல மழை பாட்டு பாடி மழையை வா!  என்று பாடவில்லை என்றாலும் மழையை வேண்டியது மனது. மழை பெய்ததும் அவர் சொன்னது போல்  கானல் தணிந்தது.

மழை பெய்தவுடன் வெயிலின் தாக்கம் குறைந்து நன்றாக இருந்தது. செடி, கொடி , மரம் எல்லாம் மீண்டும் துளிர்த்தது. மீண்டும் ஒரு வசந்தம் வந்து விட்டது. (கோடை வெயிலில் எல்லாம் வாடி கருகி கிடந்தது)


செம்பருத்தி மொட்டுக்கள் மலராமல் கருகி விழுந்து கொண்டு இருந்தது. ஒரு வாரம் பெய்த தொடர் மழையால் செம்பருத்தி பூ சின்னதாக ரோஜா போல் பூத்தது. (பெரிதாக பூக்கும் பூ இது)

போன மாதம் தயார் செய்து வைத்து இருந்த பதிவு.  

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!

---------------------------------------------------------------------------------------------------

30 கருத்துகள்:

  1. மரங்கொத்தி என்றால் சற்று பெரிய அளவிலேயே பார்த்து இது மினி சைஸாக இருக்கிறது!   பிடிமானம் இல்லாமல் கூட எப்படி அழகாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      அரிசோனா மரங்கொத்தி பறவைக்கு தனி பதிவு போட்டு இருக்கிறேன். அதற்கு நம் ஊர் மரங்கொத்தி போல கொண்டை இருக்காது, ஆணுக்கு பொட்டு மாதிரி தலையில் இருக்கும் பென்ணுக்கு இருக்காது. பெண் பறவைமெலிதாக இருக்கும். என்று உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்.

      இப்படி பிடிமானம் இல்லாமல் அந்த மதில் சுவரில் அடிக்கடி உட்காரும்.

      நீக்கு
  2. முதல் காணொளியில் நாற்காலி பறக்கப்போவதைப் பார்க்கக் காத்திருந்தேன்!  எனவே சுற்றுப்புறத்தை கவனிக்க இரண்டாவதுமுறை பார்க்க வேண்டி இருந்தது!  இரண்டாவது காணொளியில் தலையை விரித்து மாரியம்மா ஆட்டம் ஆடும் சிறுமரம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் இரண்டு நாற்காலி உண்டு படம் எடுத்தபின் தான் ஒன்றை காணவில்லை என்று பார்த்தோம். கீழே தோட்டத்தில் மறு நாள் பார்த்தோம். மின்னல் வானத்துக்கும் பூமிக்கும் பயமுறுத்தியது அதை தொடர்ந்து இடி வேறு அச்சம் கொடுத்தது.

      //மாரியம்மா ஆட்டம் ஆடும் சிறுமரம்!//

      மரங்கள் எல்லாம் தலைவிரித்த மாதிரிதான் இருக்கும்.

      நீக்கு
  3. நம்மூர் போலவே அங்கும் வெள்ளம்!  வெள்ளம் காரணமாக அல்லாமல், கொரோனா பணமிழப்பு காரணமாக வாடகை கொடுக்க முடியாமல் லட்சக்கணக்கான பேர் வீடிழப்பு செய்ய நேரிடும் என்று செய்தியில் படித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மூர் போலவே தான் இங்கும் வெள்ளம். ஆனால் முன்னால் எச்சரிக்கை கொடுத்து விடுவதால் உயிர் இழப்பு குறைச்சல்.

      வேறு சில இடங்களில் நீங்கள் செய்தியில் படித்தது போல் நடந்து இருக்கிறது. இங்கு காட்டுத்தீ வேறு ஏற்பட்டு வெப்பம் நாளுக்கு நாள் அதிகமாய் இருந்தது.குளுர் காற்று வீசியது இந்த மழை பெய்தகாரணத்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
      இப்போது மீண்டும் வெயில் அடிக்கிறது அதிகமாய்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. படங்கள் மிக அழகாக எடுத்து இருக்கிறீர்கள்.
    காணொளிகள் கண்டேன்

    குறுஞ்செய்தி தகவல்கள் நல்லதுதானே...

    மரங்கொத்தியின் படத்தை கண்டதும்...
    தர்மராஜா திரைப்படத்தில் வரும் கண்ணதாசனின் பாடல் வரிகள் ஞாபகத்திற்கு வந்தது.

    //மரங்கொத்தி பறவையைப் போலே...
    எனது மனங்கொத்தி போவது யாரோ...//

    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் மிக அழகாக எடுத்து இருக்கிறீர்கள்.
      காணொளிகள் கண்டேன்//
      நன்றி.


      //குறுஞ்செய்தி தகவல்கள் நல்லதுதானே..//
      ஆமாம், முன்பே வந்து விடுவதால் நல்லதுதான்.


      //மரங்கொத்தி பறவையைப் போலே...
      எனது மனங்கொத்தி போவது யாரோ...//

      இந்த பாடல் கேட்ட நினைவுக்கு வந்து விட்டதா!

      உங்கள் கருத்துக்கு நன்றி.
      வாழ்க வையகம்








      நீக்கு
  5. அழகான மரங்கொத்திப் பறவை...

    காணொளிகளில் இயற்கையின் பல பரிணாமங்களை அறிய முடிகிறது...

    பாவேந்தரின் பாட்டும் செம்பருத்தி பூவும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //காணொளிகளில் இயற்கையின் பல பரிணாமங்களை அறிய முடிகிறது//

      ஆமாம், தனபாலன் அதுதான் அதை பகிர்ந்து கொண்டேன்.


      //பாவேந்தரின் பாட்டும் செம்பருத்தி பூவும் அருமை...//

      உங்களுக்கு பாவேந்தரின் கவிதை பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. மரங்கொத்தி பறவை அழகாக இருக்கிறது. அதற்கு மழைச் சாரல் பிடிக்கும் போலிருக்கிறது. சுவரோடு ஒட்டினாற் போல எவ்வளவு நேரம் நிற்க முடியும்.? பாவம் அதற்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறதே.. அதை வாழ்ந்துதானே ஆக வேண்டும்.

    மழை, வெள்ளம், புயல் எச்சரிக்கைகளை அரசு உடன் தந்து விடுவது நல்லதுதான். ஒரளவு நம்மையும், குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள வசதியாய் இருக்கும்.

    வெள்ளம் காட்டாற்று வெள்ளம் மாதிரி கரை புரண்டு ஓடுகிறது. பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. காணொளிகள் கண்டேன். காற்றில் மரங்கள் ஆட்டம் போடுகின்றன. மழை நல்லதுதான். "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பதைப் போல, எதுவுமே அதிகமானாலும் ஆபத்தை தருபவையும் கூட...! அளவோடு நல்லதை மட்டும் இறைவன் அனைவருக்கும் தர வேண்டும். பிரார்த்திப்போம்.

    செம்பருத்தி பூ அழகாக உள்ளது. இன்னமும் பெரிதானால் பார்க்க மிக வசீகரமாக இருக்கும். அனைத்து உயிருக்கும் மழையும். வெயிலும் இரண்டு கண்கள் அல்லவா.? அனைவரும் நலமுடன் இருக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன். நீங்களும் பத்திரமாக இருங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      மரங்கொத்தி பறவைக்கு மழை சாரல் பிடிக்கும். மழை காலத்தில் அதற்கு கவலை இல்லை கள்ளிச்செடியில் கூடு கட்டி வாழ்கிறது.புயல், மழையால் அதற்கு சேதம் அவ்வளவாக இருக்காது. மரத்தில் கூடு கட்டி வாழும் பறவைகள் வாழ்க்கைதான் கஷ்டம். முன்புறம் இருந்த மரத்தில் கூடு கட்டி இருந்த மணிப்புறா முட்டைகள் கீழே விழுந்து உடைந்து விட்டது.
      பறவைகள் இந்த இடர்பாடுகளில் தப்பித்து வாழ வேண்டும்.

      நிறைய இடங்களில் காட்டாற்று வெள்ளம் தான் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

      இயற்கையை ரசிக்கலாம் எல்லாம் அளவாக இருக்கும் போது அளவுக்கு மிஞ்சினால் கஷ்டம் தான்.

      இறைவன் அனைத்து உயிர்களுக்கும் பாதுகாப்பு தர வேண்டும் . பிரார்த்திப்போம்.

      செம்பருத்தி பூ பெரிதாக பூத்ததை முன்பு தோட்டத்து மலர்கள் பதிவில் போட்டு இருக்கிறேன். மொட்டாக கருகி போனதற்கு இந்தளவு பூத்தது மகிழ்ச்சி.


      //அனைத்து உயிருக்கும் மழையும். வெயிலும் இரண்டு கண்கள் அல்லவா.? அனைவரும் நலமுடன் இருக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன். நீங்களும் பத்திரமாக இருங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      ஆமாம், நீங்கள் சொல்வது போல அனைத்து உயிர்களுக்கும் மழையும், வெயிலும் இரண்டு கண்கள்தான். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி.
      பத்திரமாக இருக்கிறோம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. இயற்கையின் ஆட்டம்
    யார் வெல்ல முடியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      இயற்கையை வெல்ல யார்லால் முடியும்! முடியாதுதான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. அன்பின் கோமதி மா.
    வாழ்க வளமுடன்.
    மரங்கொத்திப் பறவை அழகு. அது சுவற்றில்
    பற்றி இருப்பதும் அருமை.
    நன்றி மா.

    மணற்புயலின் அச்சத்தை உணர்ந்திருக்கிறேன்.

    காற்று வீசி ,மழையும் பொழிந்து இடியும் இடிப்பது
    மனதையே குலுக்கிவிடும்.
    அந்த ஊரில் சிமெண்ட் வீடுகளா, மர வீடுகளா?

    இங்கே மழையில் வீடுகளே இடிந்து விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

      மரங்கொத்தி பறவை உடலை சிலிர்த்து கொண்டு நினறது அழகாய் இருந்தது அக்கா.
      //காற்று வீசி ,மழையும் பொழிந்து இடியும் இடிப்பது
      மனதையே குலுக்கிவிடும்.
      அந்த ஊரில் சிமெண்ட் வீடுகளா, மர வீடுகளா?//

      ஆமாம் அக்கா, இடையும் மின்னலும் வெளியே மழை பெய்வதை கூட பார்க்க போக முடியவில்லை.
      மரவீடுகள்தான் இங்கு.
      பழைய வீடுகள் இங்கும் விழுந்து இருக்கிறது.

      நீக்கு
  9. எல்லாக் காணொளிகளும் ஆச்சர்யப் பட வைக்கின்றன.
    பழைய திரைப்படங்களில் பார்த்த காட்சிகள் உங்கள் பதிவில் நிஜமாகி
    இருப்பதைக் காண்கிறேன்.

    எல்லாவிதமான சீதோஷ்ண எச்சரிக்கைகளும்
    அலைபேசியில் வந்து கொண்டே இருக்கும்.
    அது பெரிய நன்மை தான்.

    நீங்கள் பத்திரமாக இருங்கள்.
    இறைவன் துணை.

    பதிலளிநீக்கு
  10. //பழைய திரைப்படங்களில் பார்த்த காட்சிகள் உங்கள் பதிவில் நிஜமாகி
    இருப்பதைக் காண்கிறேன்.//

    ஆமாம், பழைய திரைப்படங்களில் சோகத்தை காட்ட இடி, மின்னல், மழையை காட்டுவார்கள், அதுவும் பிரசவத்திற்கு போக்குவரத்து வசதி கிடைக்காமல் மழை பெய்யும்.


    //எல்லாவிதமான சீதோஷ்ண எச்சரிக்கைகளும்
    அலைபேசியில் வந்து கொண்டே இருக்கும்.
    அது பெரிய நன்மை தான்//

    ஆமாம், வரும் முன் காக்கும் செய்திகள் நல்லதுதான் அக்கா.

    இப்போது மழை இல்லை அக்கா, நாங்கள் போன இடங்களில், மற்றும் போன மாதம் இங்கும் மழை இருந்தது.
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. சிரமமான சூழலில் பதிவின் - படங்களும் காணொளிகளும் அருமை என்று செல்வதற்கு மனம் இல்லை..

    எல்லாவற்றிலும் கவனமாக இருந்து கொள்ளவும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      இயற்கை பார்ப்பதற்கு நன்றாகவும் இருக்கும், நம்மை பயமுறுத்தவும் செய்யும்.

      எல்லா வற்றிலும் கவனமாக இருக்க அரசாங்ககம் எச்சரிக்கை கொடுக்கிறது.

      //எல்லாவற்றிலும் கவனமாக இருந்து கொள்ளவும்..//

      நன்றி. கவனமாக இருக்கிறோம்.

      நீக்கு
  12. இங்கே புழுதிப் புயல்கள் எல்லாம் சர்வ சாதாரணம்... இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு புழுதி கொட்டிக் கொண்டிருந்தது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஊரில் இருப்பது போல் இங்கும் புழுதி புயல் அடிக்கடி வருகிறது .

      டெல்லியிலும் அடிக்கடி வரும்.

      நீக்கு
  13. மரங்கொத்தியின் சூழலை நினைத்தால் மனம் வருந்துகின்றது..

    மரங்கொத்திப் பறவைக்கும்
    நிழலிடம் தான்..
    மண்ணில் இல்லாமல் போவது
    வினோதம் தான்..
    மனிதம் இழைத்திட்ட
    செயல்களினால்
    வனம் அழிவது மாபெரும்
    துரோகம் தான்..
    விரோதம் தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரங்கொத்தி பறவைக்கு இங்கு வாழ்விடம் கள்ளிச்செடிதான்.

      உங்கள் கவிதை அருமை.

      வனத்தை அழிப்பது பிற உயிர்களுக்கு கஷ்டம் தான்.

      மனிதனின் தேவைகள் அதிகமாகிறது., அவனின் வாழ்விடம் அதிகமாகி கொண்டு வருகிறது. வனங்கள் குறைந்து வருகிறது, பிற உயிர்களுக்கு வசிக்கும் இடம் குறைந்து வருகிறது.

      உங்கள் கவிதைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  14. மரங்கொத்தி பறவை படமும் மற்ற சில படங்களும் அழகு. காணொளிகளும் கண்டேன். இயற்கையின் சீற்றத்திற்கு முன் நாம் எங்கே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      இயற்கையின் சீற்றத்தின் நுன் நாம் எல்லாம் ஒன்றுமில்லைதான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. அழகிய மரக்கொத்தி பறவை. மரம் ஆடுவதையும் சத்தத்தையும் பார்க்கவே பயமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
    மணிப்புறா கூடு கட்டி இருந்தது , அந்த மரம் காற்றில் ஆடி முட்டைகள் கீழே விழுந்து உடைந்து விட்டது. மணிப்புறா சரியாக கூடு கட்டாது அதுவேறு.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. புழுதிப்புயலை வடக்கே இருக்கையில் நிறையப் பார்த்ததால் அவ்வளவு பயம் இல்லை. மரங்கொத்திக்குக் கொண்டை இல்லாமல் பார்க்க என்னவோ போல் இருக்கே! முகநூலில் இந்தப் படங்களைப் பார்த்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      வடக்கு பக்கம் புழுதி புயல் அடிக்கடி வருமே! அதுவும் கோடை காலம் அதிகமாய் இருக்கும்.

      இங்கு உள்ள மரங்கொத்திக்கு கொண்டை கிடையாது, முகநூலில் போட்டு இருந்தேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு