திங்கள், 19 ஜூலை, 2021

இன்று தோட்டத்திற்கு வந்த புதிய பறவை

இன்று காலை தோட்டத்திற்கு வந்த பறவை.
சிவப்பு நிறப்பறவை  அதன் பேர்" red  Cardinal bird "
முழு சிவப்பாக உள்ள பறவையும் இருக்கிறது. இது முகம்   மற்றும்  உடலில்  திட்டு திட்டாக சிவப்பு இருக்கிறது. 

தண்ணீரைப் பார்த்து நிற்கிறது

அரளிச் செடிக்கு பாத்தி மாதிரி கட்டி சொட்டு நீர் பாசன வசதி செய்து இருக்கிறான் மகன்.  பறவைக்கு  அது சாரல் மழை போல இருந்து இருக்கிறது. சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்தது, பிறகு  நீர் அருந்தியது.  அப்புறம் ஆனந்தமாக சிறிது குளியல் போட்டது , பறந்து சென்றது.

கோடைக்கு ஏற்ற குளியல்  செய்யும் பறவை

சிறிய காணொளிதான் ஒரு நிமிடம் கூட இல்லை.  பார்த்து விட்டுச்சொல்லுங்கள், எப்படி இருக்கிறது என்று.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------------------
 

34 கருத்துகள்:

 1. படம் அழகு குளியல் செய்யும் விதமும் அழகு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மதுரை தமிழன், வாழ்க வளமுடன்

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 2. அந்தத் தண்ணீர்தான் அண்டஹ்ப் பறவையை இங்கு இழுத்து வந்தது போலும்.  கொண்டை முடியுடன் வந்த கொஞ்சும் பறவை!  அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   நீங்கள் சொல்வது போல் தண்ணீர் தேடி வந்து இருக்கும்.

   கோடையில் நீர் தேடி தவிக்கும் பறவைகள் இருக்கே!
   உங்கள் கருத்துக்கு நன்றி..

   நீக்கு
 3. அழகான பறவை தலையில் மரங்கொத்தி பறவை போலவே இருக்கிறதே....

  காணொளி கண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   ஆமாம், தலையில் நம் ஊர் மரங்கொத்தி பறவை போல கொண்டை இருக்கிறது.
   இங்கு உள்ள மரங்கொத்திக்கு கொண்டை கிடையாது.
   படங்கள் காணொளி பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 4. வணக்கம் சகோதரி

  பதிவு அருமையாக உள்ளது. பறவை பார்க்கவே நல்ல கலராக அழகாக உள்ளதே..! எவ்வளவு விதமான பறவைகள் இந்த உலகில் இருக்கின்றன. இறைவன் படைப்பில்தான் எத்தனை அதிசயங்களை தந்திருக்கிறார் என வியக்கிறேன்.

  நீங்கள் எடுத்திருக்கும் படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது. அந்தப்பறவை நீரைத்தேடி வந்த பின் குடிக்கலாமா, இல்லை, குளிக்கலாமா என்ற யோசனையுடன் இருக்கும் படங்கள் பார்க்கவே நன்றாக உள்ளது நீங்கள் எடுத்த அத்தனை படங்களுக்கும் பாராட்டுக்கள்.

  காணொளியும் பார்த்தேன். இரண்டு மூன்று முறை அவசர குளியல் குளித்து கரையேறி விட்ட அதன் செயல்கள் அவ்வளவு அழகாக இருக்கிறது. உங்களால்தான் இந்த மாதிரி விதவிதமான பறவைகளைப் பற்றியும் அதன் செயல்களை பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

   //பறவை பார்க்கவே நல்ல கலராக அழகாக உள்ளதே..! எவ்வளவு விதமான பறவைகள் இந்த உலகில் இருக்கின்றன. இறைவன் படைப்பில்தான் எத்தனை அதிசயங்களை தந்திருக்கிறார் என வியக்கிறேன்.//

   ஆமாம், கமலா இறைவன் படைப்பில் அதிசயங்கள் நமக்கு வியப்புதான். அவர் அழகாய் படைத்து இருக்கிறார் அனைத்து உயிரினங்களையும் ஒவ்வொன்று ஒவ்வொரு அழகு.

   //அந்தப்பறவை நீரைத்தேடி வந்த பின் குடிக்கலாமா, இல்லை, குளிக்கலாமா என்ற யோசனையுடன் இருக்கும் படங்கள் பார்க்கவே நன்றாக உள்ளது நீங்கள் எடுத்த அத்தனை படங்களுக்கும் பாராட்டுக்கள்.//

   காலை நேரம் தோட்டத்தில் நடந்து கொண்டு இருந்தேன் இன்று. மழை பெய்து கொண்டு இருக்கிறது இரண்டு மூன்று நாட்களாய் . அதனால் தோட்டத்தில் காலை நேரம் வெப்பம் இல்லாமல் இருப்பதால் நடக்கிறேன். அதிகாலைச் சூரியனை எடுக்க காமிரா கொண்டு வந்தேன். சூரியனை எடுத்து விட்டு வைத்து இருந்தேன் , அதனால்தான் பறவையை உடனே எடுக்க முடிந்தது.

   பறவை பறந்து வந்தது நீரை குடித்தது முதலில். குடித்த காட்சியை எடுக்க முடியவில்லை.
   நான் காமிராவை கையில் எடுத்த போது அதன் நிலை நின்று கொண்டு பார்க்கும் காட்சி கிடைத்தது.

   //மூன்று முறை அவசர குளியல் குளித்து கரையேறி விட்ட அதன் செயல்கள் அவ்வளவு அழகாக இருக்கிறது. //

   எல்லா பறவைகளும் அப்படித்தான் குளிக்கிறது. நாம் காக்கா குளியல் என்று இந்த அவசர குளியலுக்கு பேர் வைத்து இருக்கிறோம். அருகில் இருக்கும் மரத்தில் உட்கார்ந்து உடலை சிலிர்த்து நீர்துளியை படர விட்டது அதை எடுக்கலாம் என்றால் சரியாக எடுக்க முடியாத கோணத்தில் இருந்தது.

   உங்கள் உற்சாக பின்னூட்டங்கள் தான் இப்படி எடுக்கும் ஆவலை அதிகமாக்குகிறது.
   உங்களுக்கு நன்றி.


   நீக்கு
 5. பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 6. புதியதோர் பறவை - காணத் தந்தமைக்கு நன்றிம்மா. படங்களும் காணொளியும் கண்டு ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

   படங்களும் காணொளியும் கண்டு ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 7. பறவை அழகா இருக்கு. வெயிலுக்கு தண்ணீரைத் தேடி வந்திருக்குமோ? தண்ணீர் வைப்பது எவ்வளவு நல்லது...

  இங்க பெங்களூர்ல மழை அடிக்கடி பெய்யுது. எங்க வீட்டு யுடிலிட்டி ஜன்னல்ல பாவம் ஒரு புறா ஒடுங்கி உட்கார்ந்திருக்கும் (அதிகாலையில் பார்ப்பேன்). தொந்தரவு தரக்கூடாது என்று மெதுவாகச் செல்வேன்.

  காணொளி பார்க்க முடியவில்லை. ஐபேடில் வருதான்னு பார்க்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

   //பறவை அழகா இருக்கு. வெயிலுக்கு தண்ணீரைத் தேடி வந்திருக்குமோ? தண்ணீர் வைப்பது எவ்வளவு நல்லது...//

   ஆமாம், தண்ணீரைத் தேடி தான் வந்து இருக்கும் போல! சாப்பாடு இருந்தது அதை அது சாப்பிடவில்லை, தண்ணீர் குடித்து குளித்து போய் விட்டது.
   அலைபேசியில் பார்த்து இருப்பீர்கள் இல்லையா? சிலருக்கு மடி கணினி, ஐபேடில் வரும் அலைபேசியில் வரவில்லை என்பார்கள்.

   //இங்க பெங்களூர்ல மழை அடிக்கடி பெய்யுது. எங்க வீட்டு யுடிலிட்டி ஜன்னல்ல பாவம் ஒரு புறா ஒடுங்கி உட்கார்ந்திருக்கும் (அதிகாலையில் பார்ப்பேன்). தொந்தரவு தரக்கூடாது என்று மெதுவாகச் செல்வேன்.//
   இங்கும் இப்போது மழை பெய்கிறது மான்சூன் காலம். மதுரையில் மழை சமயம் புறாக்கள் ஜன்னலில் ஒதுங்கி நிற்கும்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 8. அந்தக் காலத்தில் கோடியக்கரை காட்டுப் பகுதி நல்ல பராமரிப்பில் இருந்தபோது - அங்கிருந்து 60/70 கி.மீ தொலைவில் இருக்கும் பட்டுக்கோட்டை பகுதி தென்னந் தோப்புகளில் விதவிதமான பறவைகளைப் பார்த்ததுண்டு...

  அவற்றுள் இதைப் போல வால் நீளமான பறவைகளும்...

  ஆனால் அவை கார்டினல் பறவைகளா.. என்பது தெரியாது..

  அழகான படங்களுடன் இனிய பதிவு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

   //பட்டுக்கோட்டை பகுதி தென்னந் தோப்புகளில் விதவிதமான பறவைகளைப் பார்த்ததுண்டு...//

   சிறு வயதில் நிறைய பறவைகள் பார்த்து இருப்போம் நீங்கள் சொல்வது போல் அப்போது நமக்கு யாராவது பெரியவர்கள் அந்த பறவைகளின் பேர் சொன்னால்தான் தெரியும். இப்போது கூகுள் உதவியால் பறவைகளின் பேர் தெரிகிறது.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 9. அன்பின் கோமதிமா,
  வாழ்க வளமுடன்.
  இது பறவைகள் காலம் இங்கேயும்.
  ரெட் கார்டினல்,ரெட் ராபின் இரண்டுமே
  இங்கே வரும்.
  நீங்கள் பதிவிட்டிருக்கும் பறவைகளின் அழகைச் சொல்லி முடியாது. அதுதான்
  எத்தனை அருமையாகக் குளிக்கிறது.

  அந்த ஊர் வெய்யில் கொடுமைக்கு
  இது போல ஏற்பாடுகள் செய்வது எவ்வளவு பெரிய புண்ணியம்.
  அந்தப் பறவை நன்றாக வாழ்த்திச் செல்லும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
   இது பறவைகள் காலம் இங்கேயும்.
   //ரெட் கார்டினல்,ரெட் ராபின் இரண்டுமே
   இங்கே வரும்.//

   ஆமாம், நியூஜெ₹இயில் மகன் இருக்கும் போது ரெட் ராமின் பற்வை வரும் படம் எடுத்து இருக்கிறேன். ரெட் கார்டினல் இப்போது இங்கு வருகிறது. இந்த சீஸ்னில்தான் இவைகள் வரும் போலும்.

   //நீங்கள் பதிவிட்டிருக்கும் பறவைகளின் அழகைச் சொல்லி முடியாது. அதுதான்
   எத்தனை அருமையாகக் குளிக்கிறது.//

   உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

   //இது போல ஏற்பாடுகள் செய்வது எவ்வளவு பெரிய புண்ணியம்.
   அந்தப் பறவை நன்றாக வாழ்த்திச் செல்லும்.//
   பறவைகள் குளிக்க நீர் அருந்த வித விதமாக தோட்டத்தில் வைக்க அலங்கார நீர் தொட்டிகள் வைத்து இருக்கிறார்கள்.

   நீக்கு
 10. எல்லா பறவைகளும் அப்படித்தான் குளிக்கிறது. நாம் காக்கா குளியல் என்று இந்த அவசர குளியலுக்கு பேர் வைத்து இருக்கிறோம். அருகில் இருக்கும் மரத்தில் உட்கார்ந்து உடலை சிலிர்த்து நீர்துளியை படர விட்டது அதை எடுக்கலாம் என்றால் சரியாக எடுக்க முடியாத கோணத்தில் இருந்தது.///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////நீங்கள் எடுத்திருக்கும் காணொளி மிக அழகு.
  இங்கே கண்ணாடி வழியாகத் தான் காண முடியும்.
  கதவைத் திறந்தால் அத்தனையும் ஓடிவிடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பறவைகள் குளியல் பயம் கலந்த குளியல் அதனால் அப்படித்தான் குளிக்கும் போல!
   மழையில் நனைந்தாலும், குளித்தாலும் உடலை சிலிர்த்து நீரை சிதறவிடுவது அழகாய் இருக்கும்.
   போன இடங்களில் பறவைகள் கொஞ்சம் தான் தட்டுப் பட்டது இருந்தாலும் விட வில்லை அவைகளை பிடித்து வந்து இருக்கிறேன்.

   இங்கும் சில பறவைகளை கண்ணாடி வழியாகத்தான் பார்க்க முடியும்.

   நீக்கு
 11. அழகாகப் பார்க்கிறது. அழகான கொண்டை வேறு.
  இங்கு வரும் கார்டினலும் இப்படிக் கொண்டையுடன் இருக்கும்.
  எல்லாப் படங்களும் மிகவும் அருமை மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆண் பெண் கார்டினால் வித்தியாசமாக இருக்கிறது.

   இப்போது பற்வைகளின் பேர்களை கூகுள் மூலம் தேரிந்து கொள்ள முடிகிறது. பிள்ளைகள், பேரன் தெரிந்தால் சொல்கிறார்கள்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 12. பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 13. மரங்கொத்தி வகையோ? அழகோ அழகு! தண்ணீரைத் தேடி வந்திருக்குப் போல! இவைகள் குளிக்கும் அழகும் காணக்கிடைக்காத ஒன்று. எங்க வீட்டில் கல்லுரலில் தேங்கி இருக்கும் மழை நீரில் சிட்டுக்குருவிகள் குளிப்பதைச் சின்ன வயசில் கண்டு வியந்திருக்கேன். அப்போதிலிருந்து தான் பறவைகளைப் பார்க்கும் ஆர்வமும் வர ஆரம்பித்தது. அழகான பறவை. பெயருக்கும் விபரங்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம் வாழ்க வளமுடன்

   //மரங்கொத்தி வகையோ? அழகோ அழகு! தண்ணீரைத் தேடி வந்திருக்குப் போல!//
   தெரியவில்லை. அமெரிக்க வரும் போதேல்லாம் பார்த்து இருக்கிறேன். இந்த முறை வீட்டுக்கு வந்து தண்ணீர் அருந்தியது படம் எடுத்து விட்டேன்.

   //எங்க வீட்டில் கல்லுரலில் தேங்கி இருக்கும் மழை நீரில் சிட்டுக்குருவிகள் குளிப்பதைச் சின்ன வயசில் கண்டு வியந்திருக்கேன். //

   அப்போது வெளியில் கிடக்கும் இல்லையா ஆட்டு உரல்? மழை நீரில் குளிப்பதைப்பார்ப்பது ஆனந்தம், மழையில் நனைவது நமக்கு மகிழ்ச்சியை தந்த காலங்கள். இப்போது ந்னைய ஆசை ஆனால் உடம்புக்கு வந்து மற்றவர்களுக்கு கஷ்டம் கொடுக்க கூடாது என்று ஆவலை அடக்கி வாசிக்கிறோம்.

   உப்கள் கருத்துக்கு நன்றி.   இரண்டு நாட்களாக வெளியில் போய் இருந்தோம். சில இடங்களுக்கு அழைத்து போனான் மகன். அதனால் பதில் தர முடியவில்லை.

   நீக்கு
 14. பறவையின் குளியல் ரொம்பவும் ரிஃப்ரெஷிங் ஆக இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

   //பறவையின் குளியல் ரொம்பவும் ரிஃப்ரெஷிங் ஆக இருக்கு.//

   ஆமாம்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 15. உங்கள் மூலமாக நிறைய புதிய பறவைகளைப் பற்றி அறிந்திட முடிகிறது. நன்றி. குளியல் போடும் காணொளியும் அருமை:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

   //உங்கள் மூலமாக நிறைய புதிய பறவைகளைப் பற்றி அறிந்திட முடிகிறது. நன்றி. குளியல் போடும் காணொளியும் அருமை:).//

   ஆஹா ! ராமலக்ஷ்மி!

   உங்கல் ஊருக்கு வந்தால் அல்லது வேறு எங்காவது இந்த பறவையைப்பார்த்தால் நீங்கள் அந்த பறவையை எடுக்கும் அழகே தனிதான்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 16. வணக்கம் சகோதரி

  நலமா? சில தினங்களாக உங்களை எங்கும் பார்க்க முடியவில்லையே.. நலமாக உள்ளீர்களா? வெளியில் எங்காவது பயணமா? உறவினர் வருகையால் பதிவுலகத்திற்கு வருவதில் சிரமமா? உங்களை காணவில்லையே என உரிமையோடு கேள்விகளாக கேட்டு விட்டேன். அனைவரும் நலமுடன் இருக்க பிரார்த்தித்துக் கொண்டேயுள்ளேன். நன்றி.

  அன்புடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
   உங்கள் ஊகம் சரிதான், மூன்று நாட்கள் வெளியூர் பயணம். தகவல் சொல்லி சென்று இருக்கலாம். நலமாக இருக்கிறேன்.
   உங்கள் அக்கறையான உரிமையான கேள்வியால் மனதுக்கு மகிழ்ச்சிதான்.
   உங்கள் பிரார்த்தனைக்கும் விசாரிப்புக்கும் நன்றி நன்றி.

   நீக்கு
 17. சிகப்புப்பறவை மிகவும் அழகாய் இருக்கிறது! புகைப்படங்களும் காணொளியும் அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு