செவ்வாய், 6 மே, 2014

அம்மா என்றால் அன்பு

                    

அம்மா என்றால் அன்பு.   அன்பு என்றால் அம்மா. சொல்லச் சொல்ல இனிக்கும், அம்மா என்னும் அழைப்பு. அவரவர்களின் அம்மா அவரவர்களுக்கு என்றுமே சிறப்புதான்.(உயர்த்திதான்)

மே 8 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

 முன்பு எல்லாம் அன்னையர் தினம் என்று கொண்டாடி அம்மாவுக்கு வாழ்த்து சொன்னது இல்லை. என் அம்மாவுக்கு இப்போது வாழ்த்து சொல்கிறேன்:-

 ”அம்மா! அன்னையர் தின வாழ்த்துக்கள்  அம்மா!. உங்கள் அன்புக் குழந்தைகளுக்கும், ஆசைப் பேரக்குழந்தைகளுக்கும் வாழ்த்துச் சொல்லுங்க அம்மா! அவர்களை எப்போதும் ஆசீர்வாதம் செய்துகொண்டுதான் இருப்பீர்கள் என்றாலும் இப்போது உள்ள குழந்தைகள் அந்த அந்த நாள் வாழ்த்துக்களை விரும்புகிறார்களே! ”

சிறு குழந்தையாக இருக்கும்போது குழந்தையிடம் கேட்டுப்பாருங்கள். உனக்கு இதை யார் சொல்லிக் கொடுத்தா?  என்றால் - அம்மா. இவ்வளவு அழகாய் யார் தலைவாரி விட்டா? என்று கேட்டால் முகத்தில் மகிழ்ச்சியும் பெருமிதமும் பொங்க ’அம்மா’ எனும் குழந்தை. யார் இந்த டிரஸ் வாங்கித் தந்தா? அழகாய்  இருக்கே! என்றால் ,’அம்மா’ என்று எதைக் கேட்டாலும் ’அம்மா’ என்று  குழந்தை   சொல்லும். திருமணத்திற்குப் பின்னும்,  ’எங்க அம்மாவீட்டில்’ என்று சொல்வதை விட முடியாது.  இப்படி அம்மா பெருமை பாடுவது காலம் முழுவதும் தொடரும்!

இப்போது விளம்பரங்கள் எல்லாம்  அம்மாவுக்குத்  தான் தெரியும்  குழந்தைகளைப் பற்றி என்று சொல்கிறது.

”எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
 மண்ணில் பிறக்கையிலே  
அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் 
அன்னை வளர்ப்பதிலே”

என்று அதிலும் அன்னைக்குத்தான் பெருமையும், சிறுமையும். குழந்தைகள் குற்றம் செய்தாலும் பெற்றோர்களை - குறிப்பாய் அம்மா வளர்ப்பைத் தான் குற்றம் சொல்லும் உலகம். ”மக்கள் குற்றம் பெற்றோர் தலைமேல் ”என்று. எவ்வளவு பெரிய விஷயத்தை ஒருசின்ன கருத்துப்படத்தின்  மூலம் விளக்கி விட்டார்கள் விகடன் பத்திரிக்கையில்.
அந்த கருத்துப்படத்தைப் பாருங்கள் கீழே . கருத்தின் மூலம்  பாடமும் சொல்லித் தருகிறது அன்றைய விகடன்  :--
(கீழே பகிர்ந்த படங்கள் எல்லாம் விகடன் பவழ விழா மலரில் இருந்து எடுத்த படங்கள்.  1926 - 2002)

                                           

தாய் எந்த எதிர்பார்ப்புகளுமின்றி குழந்தைகளுக்கு தரும் அன்பு என்பது பொக்கிஷத்தில் சேமித்தவை போல வாழ்நாள் முழுமைக்கும் கிடைக்கும். அள்ள அள்ளக் குறையாதபொக்கிஷம் அது!

என் தாயின் நினைவுகள் சில:--

அதிகாலையில்  எழவேண்டும், கடவுளை வணங்க வேண்டும்
அந்த அந்த நேரத்தில் அந்த அந்த வேலையை முடிக்க வேண்டும். அதில் முக்கியமானது நேரத்திற்கு சாப்பிடுவது.  நேரத்திற்குச் சாப்பிட்டாலே உடலுக்கு ஆரோக்கியம். வீட்டுவேலைகளும் நேரத்திற்கு நடக்கும் என்பது அவர்களின் கருத்து. நேரம் தவறி உண்பவர்களைப் பார்த்தால் இந்த வயிற்றுக்கு தானே சம்பாதிக்கிறீர்கள் வயிற்றை காயப்போடலாமா இவ்வளவு நேரம் என்று கடிந்து கொள்வார்கள்.

 துணி காயப்போட்டால் காய்ந்தவுடன் மடித்து விட வேண்டும். கொடியிலிருந்து எடுத்தவுடன் மடித்தால் ஒரு அழகு, அதை அங்கே போட்டு இங்கே போட்டு மடித்தால் நன்றாக இருக்காது என்பார்கள்.
பீரோவில் அழகாய் துணிமணிகள் மடித்து இருக்க வேண்டும். இல்லையென்றால் பானையில் சுருட்டி வைத்த மாதிரி இருக்கு  என்பார்கள்.
மதியம் தூங்கக் கூடாது. பொழுதை வீணாய்க் கழிக்காமல் ஏதாவது கைவேலை செய்தல், நல்ல புத்தகம் படித்தல், சுவாமி புத்தகங்கள் படித்தல் என்று செய்து கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் படிக்கும் தோத்திர புத்தகங்களுக்கு அட்டை போட்டு சுத்தமாக வைத்து இருப்பார்கள் கொஞ்சம் கிழிந்து விட்டால்  கனமான அட்டை வைத்து   தைத்து  அட்டை போட்டு விடுவார்கள். எனக்கு பள்ளி நோட்டுக்கள், புத்தகங்கள் எல்லாவற்றுக்கும் அம்மா தான் அட்டை போட்டுத் தருவார்கள், நான் செய்ததே இல்லை. (என் குழந்தைகளுக்கு என் கணவர் போட்டு கொடுப்பார்,அப்புறம் அவர்களே போட்டுக் கொண்டார்கள்.)

அம்மா வித விதமாய் ஜடை பின்னுவார்கள். என் மகள் , மற்றும் அண்ணன், தங்கை தம்பி  மகள்கள் எல்லாம்  ஆச்சியிடம் ஆசையாக பின்னிக் கொள்வார்கள்.

கண்கண்டால் கை செய்ய வேண்டும் என்பார்கள். பின்னல் கைவேலை எல்லாம் அந்த அந்த சீஸனுக்கு எது புதுசோ அதை செய்து விடுவார்கள் அவை ஒவ்வொரு கொலுவுக்கு வந்து விடும் எனக்கு.

கொலுவில்அம்மாவின் கைவேலைப்பாடுகள்  இடம்பெற்று அம்மாவின் நினைவுகளை தந்து கொண்டே இருக்கிறது.
புத்தகங்களில் தனக்குப் பிடித்தவற்றை பைண்ட் செய்தோ அல்லது கைப்பட எழுதியோ  வைத்துக் கொள்வார்கள். அவற்றை அம்மாவின் பொக்கிஷ பகிர்வுகள் என்று  முன்பு பகிர்ந்து இருக்கிறேன்.

ஆண்களுக்கு வேலையிலிருந்து ஓய்வு கிடைக்கும்.  பெண்களுக்கு ஓய்வே கிடைப்பது இல்லை (அவர்களே விருப்ப ஓய்வு பெற்றால்தான் உண்டு). அவர்கள் தன் குழந்தைகளுக்கு, தன் குழந்தைகளின் குழந்தைகளுக்கு, , மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கும் உழைக்கத் தயாராக இருக்கிறார்கள், அன்பு தரும் பலத்தால்.  அதை விகடனில்  பகிர்ந்து இருப்பார்கள்.
அவற்றைக் கீழே பார்த்து மகிழுங்கள்.:---



இப்படிப் பட்ட நினைப்பும் அன்பும் அரவணைப்பும் தான் அவர்களை நீண்ட நாள் வாழ வைக்கிறது. ”அணைத்து வளர்ப்பவளும் தாய் அல்லவா! அணைப்பில் அடங்குபவளும் அவள் அல்லவா!

அன்புக்கு ஏங்கும் பெற்றோர் நிறைய இருப்பார்கள். அவர்களுக்கு உங்கள் அன்பைத் தாருங்கள், அன்பாக அணைத்து அம்மா சாப்பிட்டாயா என கேட்டுப்பாருங்கள்  மகிழ்ந்து போவார்கள் வேறு ஒன்றும் அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது இல்லை.

முன்பு நாலு நாளுக்கு ஒருமுறை நாலுவரி  கடிதம் எழுது என்று கேட்டார்கள் பெற்றோர்கள்.  -அப்புறம் தொலைபேசி வந்தபின் - அடிக்கடி போன் செய் என்றார்கள்.  இன்னும் தகவல் நுட்பம் வளர்ந்தபின் இணையத்தில்  இன்று என்ன சாப்பிட்டாய்?என்று நேரில் பார்த்துக் கொண்டே பேசும் வளர்ச்சி பெற்றபின் எதிர்பார்ப்புகள் அதிகம் ஆகிவிட்டது.

இப்போது அடிக்கடி ஸ்கைப்பில் வா உங்களைப் பார்க்க வேண்டும்  என்று தூரத்தில் இருக்கும் பிள்ளைகளிடம் பெற்றோர் கேட்கும் காலம் ஆகிவிட்டது.

ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்  அவர்கள் எழுதிய  தினசரி தியானத்திலிருந்து ஒரு சிறு பகிர்வு:-

தாயின் உள்ளம்:-
தன் குழந்தையிடத்துக் குற்றம் ஒன்றும் காணாது குணமே காணும் பாங்குடையவள் தாய். என் தாயே, உனதருளாலன்றி உய்யும் ஆறு நான் அறிகிலேன்.

கடவுளை நோக்கி நாம் ஒரு அடி சென்றால் அவர் நம்மை நோக்கிப் பத்து அடி வருகிறார்.. பெற்ற தாய் படைத்துள்ள  உள்ளக் கசிவு கடவுளின்கருணையேயாம். தாயின் உள்ளத்தை அறிபவன் கடவுளின்கருணையை அறிபவன் ஆகிறான்.

எத்தன்மைக் குற்றம்
இயற்றிடினுந் தாய்பொறுக்கும்
அத்தனமை நின்னருளும்
அன்றோ பராபரமே.
===================தாயுமானவர்

அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்! தாய்மை உணர்வு  உடைய அனைத்து  தாயுமானவர்களுக்கும்  வாழ்த்துக்கள்!


அன்னையர்தினம் , அன்பின் வழி , அம்மாவின் பொக்கிஷங்கள்,
-இவை நான் முன்பு எழுதிய பதிவுகள்.

வாழ்க வளமுடன்!
-------------

58 கருத்துகள்:

  1. அழகான நினைவலைகள். சிறப்பான பகிர்வு. தங்களுக்கும் அனைத்து அன்னையருக்கும், தாயுமானவர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. அனைத்தும் சிறப்பு அம்மா...

    அன்னையர் தின வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. முற்றும், துறந்த முனிவர்களாயினும் - பட்டினத்தார் ,ஆதிசங்கரர் போன்ற ஞானிகளாலும் துறக்க முடியாததாயிற்றே..தாய்ப்பாசம் ..

    அருமையான அன்னையர் தின பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    அன்னையர் தின வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  4. அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. //அன்புக்கு ஏங்கும் பெற்றோர்களுக்கு அன்பைத் தாருங்கள். அன்பாக அம்மா சாப்பிட்டாயா என கேட்டால் மகிழ்ந்து போவார்கள் வேறு ஒன்றும் அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது இல்லை.//

    நிதர்சனமான வரிகள்..
    இனிய பதிவினுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  6. மிகவும் அருமையான அன்னையர் தின பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    அன்னையர் தின வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  7. அன்னையர் தின வாழ்த்துக்கள் கோமதி.
    அம்மாவைப்பற்றிய அருமையான நினைவலைகள்.
    பகிர்விற்கு நன்றி.
    வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  8. அற்புதமான தொகுப்பு...
    நினைவலைகளில் மிதந்தேன்

    அன்னையர் தின வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  9. அருமையான அன்னையர் தின நினைவலைகள் ..அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  10. அன்னையர் தின பகிர்வு சிறப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. எதைக் கேட்டாலும் 'அம்மா' என்றே சொல்லும் குழந்தை! ஆம். உண்மைதான். எல்லாக் கணவர்களும் மனைவி சமையல் சாப்பிட்டு விட்டு 'எங்க அம்மா சமையல் இதை விட நல்லா இருக்கும்' என்பார்கள்! இந்த வகையில் பெண்கள் கூட அம்மாவை அந்த அளவு நினைக்க மாட்டார்கள்! :))))))))

    எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...

    //கொடியிலிருந்து எடுத்தவுடன் மடித்தால் ஒரு அழகு//

    உண்மை. உங்கள் அம்மா சொல்லியிருப்பது அனைத்தும் அருமை.

    1. தாயிற் சிறந்த கோவிலுமில்லை..
    2. அன்னையைப் போலொரு தெய்வமில்லை..
    3. அம்மா என்றழைக்காத உயிரில்லையே.. அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ....புரிந்தது! ஆனாலும் உங்களுக்கும் அபார ஞாபக சக்தி.

      நீக்கு
  12. அருமையான பகிர்வு! படித்து மகிழ்ந்தோம்...

    பதிலளிநீக்கு
  13. அன்னையர் தினத்திற்கு அருமையான நினைவலைகள் ரசிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
  14. முன்கூட்டியே மனம் மகிழும் வண்ணம் அன்னையர் தின வாழ்த்து மலரினைச்
    சொரிந்துள்ளீர்கள் தோழி உங்களுக்கும் உங்கள் அம்மா மற்றும் உலகத்தில்
    வாழும் அனைத்து அம்மாக்களுக்கும் உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துச்
    சொல்லுவதில் பெருமையடைகின்றேன் வாழ்த்துக்கள் தோழி .

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் ந்ன்றி.

    பதிலளிநீக்கு
  16. வ்ணக்கம் திண்டுக்கல்தனபாலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழத்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழகவளமுடன்.நீங்கள் சொல்வது உண்மை.ஞானிகளும் தாய்பாசத்தை துறக்க முடியாதுதான்.

    உங்கள் கருத்துக்கும், பராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்திக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.என் கணவர் வரைந்த படத்தைப் பார்க்கவில்லையா?

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம், கவிதைவீதீ செளந்தர், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வண்ணத்தில் அரசு சாரின் ஓவியம் மிக அழகு. அவருக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்து விடுங்கள்.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது சரிதான்.

    எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...//

    பாடல் வரியை அழகாய் சொல்லிவிட்டீர்கள்.நீங்கள் பகிர்ந்த பாடல்களும் மிக அருமை.
    அம்மாவின் நினைவுகளை ரசித்தமைக்கு நன்றி.

    சார் ஓவியம் பார்க்கவில்லையா?

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் கே.பி . ஜனா சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் ஸாதிகா, வாழ்க வளமுடன்.
    நினைவலைகளை ரசித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் அம்பாளடியாள், வாழ்கவளமுடன்.

    எட்டாம் தேதி சில கடமைகள் உள்ளதால் முன்பே பகிர்ந்து விட்டேன் வாழ்த்துக்களை.

    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு
  31. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன். மறுபடியும் சார் படத்தை பார்த்த பின் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி. போன அன்னையர் தின பகிர்வில் நீங்களும், ஸ்ரீராம், அமைதிச்சாரல் மூவரும் சாரின் ஓவியத்தை கேட்டு இருந்தீர்கள் அதனால் இந்த முறை சாரிடம் ஓவியம் கேட்டேன். வரைந்து தந்தார்கள்.
    உங்கள் பாராட்டுக்களை சொல்லிவிட்டேன் சாரிடம்.

    பதிலளிநீக்கு
  32. Sorry Madam!

    Sir வரைந்துள்ள அந்த முதல் படம் வெகு அருமை. வரைந்தபடம் போலவே இல்லாமல் இயற்கையாக அது அமைந்துள்ளதால் நான் கவனிக்கவில்லை போலும். இப்போதுதான் கீழே சாரின் பெயரைப் பார்த்தேன்.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் வை, கோபாலகிருஷ்ணன் சார், எதற்கு சாரி எல்லாம்?
    நீங்கள் சார் வரைந்த ஓவியத்தை ரசித்து பாராட்டுவீர்களே! என்று பார்க்கவில்லையா என்று கேட்டேன்.
    நீங்கள் ஓவியத்தைப் பார்த்து உங்கள் மனம் நிறைந்த பாராட்டுக்களையும் அன்பான இனிய நல் வாழ்த்துக்களையும் சொன்னதற்கு மிகவும் நன்றி சார்.
    சாரும் உங்களுக்கு தன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  34. அம்மாவையும் அவர் அன்பையும் அன்றாடம் நினைவுகூர்ந்தாலும் அன்னையர் தினத்தன்று அதை வெளிப்படுத்தி மகிழ்வது ஒரு ஆனந்தம்தான். ஆனந்தவிகடனின் பழைய பொக்கிஷங்களைக் கண்டுகளிக்க வாய்ப்பு வழங்கியமைக்கு நன்றி. சார் வரைந்துள்ள ஓவியத்தில் தாயும் சேயும் பால்சோறும் பால்நிலாவும் அற்புதம். அந்த மாதிரியெல்லாம் இப்போதிருக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு வாய்ப்பதில்லை என்பது வருத்தம் தரும் உண்மை. தொலைக்காட்சி பார்த்தபடிதான் உணவூட்டல் நடைபெறுகிறது. தாய்க்கும் ஊட்டுவதில் கவனமிருப்பதில்லை, குழந்தைக்கும் உண்பதில் கவனமிருப்பதில்லை.

    இனிய அன்னையர்தின நல்வாழ்த்துக்கள் மேடம். மனத்தில் தாய்மை சுமக்கும் யாவர்க்கும் இனிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது உண்மைதான். அன்றாடம் நினைவுகூர்ந்தாலும் அன்று அன்னையர் தினத்தன்று நினைப்பது மகிழ்ச்சிதான். இப்போது பிள்ளைகள் அன்னையர் தினத்தில் நினைவு பரிசு வழங்கி மகிழ்விக்கிறார்கள்.

    பாராட்டை, மகிழ்ச்சியை உடனுக்கு உடன் தெரிவிக்க வேண்டும் என்கிறார்கள் அது நல்லது தான்.
    ஆனந்த விகடன் பழைய பொக்கிஷபகிர்வு உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

    என் மகளை(முதல் குழந்தை) தூக்கி வைத்துக் கொண்டு வெளியில் சுற்றி திரிந்து தான் ஊட்ட வேண்டும். நிலாவைக் காட்டி, காக்கா,மற்றும் பறவைகள், ஆடு, கோழி, மாடு என்று எல்லாவற்றையும் காட்ட வேண்டும்.

    எல்லோரும் உட்காரவைத்து தட்டில் போட்டு பழக்கு அவர்களே எடுத்து சாப்பிட பழக வேண்டும் என்று சொன்னதால் மகனுக்கு அப்படி பழக்கினேன் இருந்தாலும் இடை இடையே ஊட்டுதல் உண்டு.
    எவ்வளவு கதைகள், எவ்வளவு குழந்தை பாடல்கள் இப்போது பேரன் எல்லாவற்றையும் ஐபேடில் பார்த்துக் கொண்டு சாப்பிடுகிறான் அம்மாவிடம்.

    காலம் மாறிவிட்டது உண்மைதான்.

    சாரின் ஓவியத்தை ரசித்தமைக்கு நன்றி.

    உங்கள் அருமையான பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கீதமஞ்சரி.

    பதிலளிநீக்கு
  36. மிகவும் உணர்வுபூர்வமான பதிவு கோமதி அம்மா. நமக்கு எத்தனை வயதானாலும் நம் அம்மா என்று வரும்போது அவர்களிடம் நாம்
    குழந்தையாகித்தான் போகிறோம். அதுதான் அம்மா என்னும் உறவின் சிறப்பு. இது போல எப்போதும் நல்ல விஷங்களைப் பற்றி மட்டுமே
    பகிர்ந்துகொள்ளும், சொல்லிக் கொடுக்கும் தங்களையும் என் தாய் போலத்தான் உணர்கிறேன். ஒரு மகள் ஸ்தானத்தில் உங்களுக்கு எனது அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா. உங்கள் ஆசி வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் புவனேஸ்வரி ராமநாதன், வாழ்க வளமுடன்.
    உண்மைதான் புவனா நீங்கள் சொல்வது எத்தனை வயதானலும் அம்மாவுக்கு நாம் குழந்தைதான்.

    அன்பு மகளுக்கு என்றும் அன்னையின் ஆசிகளும் , வாழ்த்துக்களும் உண்டு புவனா. வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்.

    உங்கள் அன்பான பின்னூட்டத்திற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி புவனா.

    பதிலளிநீக்கு
  38. அம்மாவின் தாயுள்ளத்தை ரசித்த நான் அப்பாவின் ஓவிய அழகை கவனிக்க மறந்து விட்டேன். இப்போது கண்டு ரசித்தேன். உண்மையிலேயே வண்ணக் கலவையில், ஓவியம் என்று தெரியாத வண்ணம் வரையப்பட்ட ஒரு இயல்பான ஓவியம். அருமை கோமதி அம்மா. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  39. அருமையான அன்னையர் தின பகிர்வு. அன்னையர் தின வாழ்த்துக்கள்.

    கடமைகளால் பதிவுபக்கங்கள் வரமுடியவில்லை. மன்னியுங்கள். படிக்காமல்விடுபட்டவற்றை தொடர்வேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  40. சிறப்பான பகிர்வு. தங்களுக்கும் அனைத்து அன்னையருக்கும், அன்னையர் தின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  41. சிறப்பான பகிர்வு. தங்களுக்கும் அனைத்து அன்னையருக்கும், அன்னையர் தின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  42. வாங்க புவனேஸ்வரி ராமநாதன், வாழ்க வளமுடன்.
    அப்பாவின் ஓவியத்தை கண்டு ரசித்தமைக்கு நன்றி புவனா.உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  43. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கடமைகள் முடிந்தவுடன் வாருங்கள் மாதேவி.நானும் சில கடமைகளால் பதிவு எழுதவோ மற்றவர்கள் பதிவை படிக்கவோ முடிவதில்லை அப்புறம் வந்து எல்லாவற்றையும் படித்துக் கொண்டு இருக்கிறேன்.
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  44. வணக்கம் கஞ்சனா ராதாகிருஷ்ணன்,வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  45. அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா....

    நினைவலைகள் சுவையாக இருந்தது. குறிப்பாக பொக்கிஷங்கள்....

    பதிலளிநீக்கு

  46. அன்னையர் தின வாழ்த்துக்கள்.என் மனைவி, என் மருமகள்கள் இவர்களின் தாய்ப்பாசத்தைக் கண்டிருக்கிறேன் மற்றபடி அன்னையின் பாசம் அறியாதது.

    பதிலளிநீக்கு
  47. வணக்கம் வெங்கட்,வாழ்க வளமுடன்் உங்கள் கருத்துக்கு நன்றி்

    பதிலளிநீக்கு
  48. உங்கள் அன்னையைப் பற்றிய மலரும் நினைவுகள் அருமை.
    தாமதமான அன்னையர் தின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  49. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. ஊருக்கு போய் விட்டதால் தாமதமாய் நன்றி.

    இப்போது உங்கள் மனைவி அருமையான தாய் அல்லவா! உங்களுக்கு .

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  50. வணக்கம் ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் தாமதமான நன்றி.

    பதிலளிநீக்கு
  51. வணக்கம் ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் தாமதமான நன்றி.

    பதிலளிநீக்கு
  52. பெயரில்லா19 மே, 2014 அன்று 10:50 PM

    மிக அருமையான பகிர்வு.
    அம்மாவிற்கு நிகர் அம்மாவே தான்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  53. வணக்கம்
    அம்மா

    அம்மாவைப்பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  54. உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன். நேரம் இருக்கும் போது வந்து பார்த்து விட்டு கருத்திடுங்கள் சகோ

    http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_3.html

    பதிலளிநீக்கு
  55. வணக்கம் உமையாள், வாழ்க வளமுடன்.
    உங்கள் அறிமுகத்திற்கு நன்றி படிக்கிறேன். வெளியூரில் இருப்பதால் உடன் படிக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  56. அன்பு கோமதி,மிகச் சிறப்பான பதிவு. அம்மாக்கள் வாழ்க மா.

    பதிலளிநீக்கு
  57. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு