நிலவை அதுவும் பெளர்ணமி நிலவை எல்லோருக்கும் பிடிக்கும் தானே! அதுதான் நான் எடுத்த படங்களின் பகிர்வு.
சந்திரனிலிருந்து கிடைக்கபெறும் ஒளியின் பெயரே நிலா
நிலவைப் பற்றி ஏதாவது எழுதலாம் என்று கூகுளில் தேடிய போது அருமையான கட்டுரை தினமணியில் கிடைத்தது. "நிலாவே வா" வராது ! என்ற தன் கட்டுரையை படித்தால் நிலாவே வா என்று அழைக்க மாட்டார்கள் என்கிறார். (மதியின் ஒளி தான் நிலா என்றால் அதன் ஒளி வீட்டுக்குள் வர அழைக்கலாம் என்று நான் சொல்கிறேன்.)
சூரியனிலிருந்து வரும் ஒளி வெயில் என்றும், சந்திரனிலிருந்து வரும் ஒளிக்கு நிலா என்றும் பெயரிட்டு அழைக்கிறோம் என்று திரு. முனைவர் சண்முகநாதன் அவர்கள் நிறைய இலக்கிய சான்றுகளுடன் அழகாய் சொல்லி இருக்கிறார் படித்து பாருங்களேன்.
தினமணியில் கட்டுரையை படிக்க கொஞ்சம் கஷ்டமாய் இருக்கிறது விளம்பரங்கள் வந்து தொந்திரவு செய்கிறது. நகல் எடுத்து ஒட்ட முடியாது. அதனால் சிறப்பான செய்திகளை அறிந்து கொள்ள அங்கு போய் படிக்கலாம்.
ஏற்கனவே படித்தவர்கள் இருப்பீர்கள். உங்களுக்கு தெரிந்து இருக்கலாம்.
படங்களுக்கு கீழே அங்கு படித்தவைகளை பகிர்ந்து இருக்கிறேன்.