வெள்ளி, 29 ஜனவரி, 2021

உல்லாசப்பயணம் - பகுதி 8


யானையின் அருகில் நிற்கிறார்கள்
 காசி பிர்லா மந்திர்
                           

                                                      

காசியில்  முக்கியமான இடங்களில்  குளிக்க   மாணவர்கள் படகில் பயணம்
 
உல்லாசப்பயணம்  -7 முந்தைய பதிவு படிக்காதவர்கள் படிக்கலாம்
அலகாபாத் திரிவேணி சங்கமம்

நன்றி - கூகுள்





 

காசி தங்க கோபுரம், காசி விஸ்வநாதர்
நன்றி - கூகுள்





காசி விசாலாட்சியம்மன் கோவில்




  நாங்கள் எடுத்த படங்கள் ஆல்பத்தில் ஊரில் இருக்கிறது. கணவர் எடுத்த படங்கள் மேலே உள்ள இரண்டு மட்டும். மற்ற இடங்களில் எடுத்த படங்கள் இல்லை. அதனால்  கூகுளிலில் இருந்து சில படங்கள் மட்டுமே!

அடுத்த பதிவு புத்தகயாவில் பார்ப்போம்.

                                                                      வாழ்க வளமுடன்
---------------------------------------------------------------------------------------------------------------------------


30 கருத்துகள்:

  1. மிக அருமை. காசியில் நாங்களும் திருக்கேதாரம், திருப்பனந்தாள் மடம் ஆகியவற்றிற்குப் போனோம். அந்தக் காலத்தில் பிரயாகையில் திரிவேணி சங்கமத்தில் அதிகம் கூட்டம் தென்படவில்லை. நாங்க போயிருந்தப்போ (22 வருஷங்கள் முன்னால்) கூட்டம் காணப்பட்டது. இப்போ இன்னும் இருக்கும். படங்கள் தெளிவாக இருக்கின்றன. புத்தகயா போகவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      நாங்கள் இரண்டு தடவை காசிக்கு போய் இருக்கிறோம்.
      ஒரு முறை கூட்டம் இல்லாமல், ஒரு முறை அதிக கூட்டம்.
      ஆடி மாதம் சோமவார நாளில் கூட்டம் அதிகமாக இருக்குமாம்.
      அன்னை தாய்வீட்டுக்கு வருவாளாம் அதனால் ஊரே திருவிழா கொண்டு இருந்தது.
      திருவேணி சங்கமத்தில் கூட்டம் இல்லாத இடத்தில் குளித்தோம்.
      படங்கள் இணையத்திலிருந்து. இரண்டு படங்கள் மட்டுமே சார் எடுத்த படம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. இன்றைய பயணத்தை பற்றிய பதிவும் மிக அழகாக எழுதப்பட்டு உள்ளது. படங்கள அருமை.

    பயணம் முழுவதும் இரவு புகை வண்டியில் படுத்துறங்கியது எவ்வளவு கஸ்டமாக இருந்திருக்கும். அந்த விடுதியில் இரவு தரையில் படுத்த அந்த ஒருநாள் உறக்கத்தில் களைப்பு சற்று குறைந்திருக்கும்..அன்றைய தினம் ஹர்த்தால் மட்டும் இல்லாமலிருந்தால், அந்த நகரையும் அனைவரும் சுற்றிப் பார்த்திருக்கலாம்.

    காசி விஸ்வநாதர், தங்க கோபுர கலசத்தை தரிசித்து கொண்டேன். ஆலயத்தைப்பற்றி விரிவாக தெரிந்து கொண்டேன். இறைவனை அனைவரும் சென்று வழிபட்டு உபாசிப்பதின் மூலம் ஆலயம் அவ்வளவு அழுக்காகி இருக்குமோ? ஆனால், நம் மனதிற்கு இறைவனை தொட்டு வழிபடும் போது உற்சாகமாகத்தான் இருக்கும். பாண்டுரங்கன் ஆலயத்திலும்,மக்கள் இவ்வாறு சுதந்திரமாக சென்று இறைவனுக்கு அவரவர் வழிபாடுகளை செய்து கொள்ளலாம் என நினைக்கிறேன். இங்கெல்லாம் செல்ல ஆசைப்பட்டும், இறைவன் இன்னமும் அழைக்கவில்லை.

    மிக அழகாக அலஹாபாத், காசிக்கு சென்று அனைத்தையும் பார்த்த உணர்வை தந்தது தங்கள் கணவரின் கட்டுரை. இதை நீங்கள் ஒரு மின்னூலாக வெளியிட்டால் படிக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். கட்டுரை அவ்வளவு அம்சமாக உள்ளது. அடுத்த பதிவுக்கும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      குறைந்த நாளில் நிறைய இடங்களுக்கு ஆசிரியர்கள் நல்ல திட்டமிட்டு அழைத்து சென்று இருக்கிறார்கள். இறை அருளால் சில சில தடங்கல் ஏற்பட்டாலும் பயணம் கெடாமல் நடந்து இருக்கிறது.

      இப்போது கோவிலை நன்றாக வைத்து இருப்பதாக சமீபத்தில் போய் வந்த ஸ்ரீராம் சொல்கிறார்.



      பாண்டுரங்கன் கோவிலில் இப்படி வழிபாடு செய்வதை சினிமாவில் பார்த்து இருக்கிறேன் , நேரில் தரிசனம் செய்யவில்லை.


      //இதை நீங்கள் ஒரு மின்னூலாக வெளியிட்டால் படிக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். கட்டுரை அவ்வளவு அம்சமாக உள்ளது. அடுத்த பதிவுக்கும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி./

      உங்கள் விருப்பம் மகிழ்ச்சி அளிக்கிறது.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. 'நேரு பவனத்தைப் பார்த்தோம்.  அங்கு குறிப்பிடத்தக்கன ஒன்றும் இல்லை' என்னும் வரிகள் நிம்மதியித் தருகின்றன!!!!   நாங்கள் சென்றபோது திங்கட்கிழமை.  அன்று ஆனந்தபாவனம் மூடி இருக்குமாறு.  எனவே பார்க்கவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரு பவனம் ஒரு பங்களா மாதிரி. நேருவின் அறை, கமலா நேரு இருந்த இடம், இந்திராவின் அறை, சமையலறை, டைனிங் டேபிள்...போன்றவை, மாடியில் காங்கிரஸ் காரியக்கமிட்டி கூடிய அறை போன்றவைதான். ஆனால் அழகுற இருக்கின்றன. முடிந்தால் சித்திரை மலருக்கு அனுப்பறேன்.

      வெறும் கட்டுடம் என்பதைத் தாண்டி சரித்திர நிகழ்வுகள் நடந்த இடம் என்பதைதான் அதன் முக்கியத்துவம்

      நீக்கு
    2. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      சார் போனபோது பராமரிப்பு இல்லை போலும்!
      நெல்லைத்தமிழன் அழகுற இருப்பதாக சொல்கிறார்.
      சித்திரை மலரில் எல்லோரும் பார்ப்போம் அந்த இடத்தின் படங்களை.

      நீக்கு
  4. ஆம், காசி விஸ்வநாதர் கோவில் புகழ்பெற்றது என்றாலும் அவ்வளவு சிறிதாக எதிர்பார்க்கவில்லைதான்!  இப்போதெல்லாம் கோவில் சுத்தமாகவே பராமரிக்கப்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது காசி கோவில் சுத்தமாக பராமரிக்கப்படுவது அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  5. அம்மாடி..    பத்து நாட்களுக்குப்பின் அன்றுதான் தரையில் படுத்து உறங்கி இருக்கிறார்களா!  தொடர்பயணத்திலேயே இருந்திருக்கிறார்கள்.  திருப்பனந்தாள் மேடம் நாங்கள் பார்க்கவில்லை என தெரிகிறது!  ஸ்தூபியிலிருந்து கற்களை எடுத்தவர்களை மதியீனர்கள் என்று சொல்வதோடு சுயநலமிகள் என்றும் சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்து நாட்கள் ரயிலில் உறக்கம் என்பது வயதானவர்களுக்கு மிகவும் சிரமம்.
      இளம் வயது அதனால் எல்லோரும் எப்படியோ சமாளித்து கொண்டார்கள்.
      நீங்கள் சொல்வதும் சரிதான் சுயநலம் என்றும் சொல்லலாம்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. அன்பு கோமதிமா,
    மிக மிக அற்புதமான பதிவு.
    நான் படிக்கத் தான் தாமதமாகிவிட்டது.

    அலகாபாத், காசி, கயா,சாரனாத்
    இவ்வளவு இடங்கள் சென்றிருக்கிறார்கள். அத்தனையையும்
    கண்டு செய்திகளைச் சேகரித்து
    உடனே எழுதியும் வைத்திருக்கிறார் சார்.

    எழுத்துக்களின் படங்கள் தெளிவாகப் படிக்கும்படி இருப்பது
    மிக மிக.
    நேர்த்தி.உங்கள் உழைப்புக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

    உங்கள், சாரி வழி கோயில்களைத் தரிசிக்கிறேன்.
    பத்து நாட்களுக்குப் பிறகு தரையில் படுத்தது

    பற்றி எழுதும் போது மனம் கொஞ்சம் சங்கடப் பட்டது.
    இள வயதல்லவா. சமாளித்திருப்பார்கள்.

    முறையே இறவனையும் ,அன்னையையும் வணங்கி
    கங்கையில் குளித்து காசிக்கயிறும் கட்டிக் கொண்டிருகிறார்கள்.
    ஒன்றையும் மறக்காமல் பதிந்த விதம் மிக அருமை.

    ஆனந்த பவனம் கவனிப்பாரற்று அந்த நாட்களிலேயே
    இருந்திருக்கிறது.!
    அதிசயமே.
    காசி நகரம் சென்ற புண்ணியம் இன்று கிடைத்திருக்கிறது .
    அன்பு கோமதி மா நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
      தாமதம் எல்லாம் இல்லை அக்கா , நேரம் கிடைக்கும் போது படித்து கருத்து சொன்னால் போதும், குளிரில் இபடி உடகார்ந்து டைப் செயவதே கஷ்டம் .அன்பினால் எல்லாபதிவுகளையும் படித்து உற்சாகமான பின்னூட்டங்கள் கொடுபதற்கு நான் தான் நன்றி சொல்லவேண்டும்.

      மகன் ஸ்கேன் செய்து தருவதாக சொன்னான் இதை விட இன்னும் தெளிவாக இருக்கும்
      நான் அலைபேசியில் போட்டோ எடுத்து பகிர்ந்து வருகிறேன்.

      நாங்கள் போன போது காலபைரவர் கோவிலில்தான் காசி கயிறு கட்டிக் கொண்டோம்.

      //ஆனந்த பவனம் கவனிப்பாரற்று அந்த நாட்களிலேயே
      இருந்திருக்கிறது.!
      அதிசயமே.//

      எனக்கும் வியப்பை அளித்த விஷ்யம்தான்.
      நெல்லைத்தமிழன், வெங்கட் நாகராஜ் இருவரும் இப்போது நன்றாக அழகாக இருப்பதாக சொல்கிறார்கள்.

      காசி காசி என்றாலே புண்ணியம் என்பார்கள்
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.





      நீக்கு
  7. ஸ்தூபி சிதைந்து அதிலிருந்து கற்களும் எடுத்துச் சென்றவரின் மூர்க்கத்தனத்தை என்ன வென்று சொல்வது.

    பதிலளிநீக்கு
  8. அழகான படங்களோடு விளக்கமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. சிவ.. சிவ..
    விடியற்காலை காசி கங்கை தரிசனம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
      தரிசனம் காலையில் செய்து விட்டீர்களா! மகிழ்ச்சி.

      நீக்கு
  10. சுழித்து எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்கள் தனி அழகு.. அருமையாகப் பதிவிடுகின்றீர்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போது உள்ள எழுத்து எழுத இப்போது மறந்து விட்டது. சுழித்து எழுதும் எழுத்து அழகுதான்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  11. காசியில் திருக்கேதாரம் கோவிலுக்குச் செல்லவில்லை. ஹரிச்சந்திரா காட்டுக்கு அடுத்த காட்டில்தான் நாங்கள் குளித்தோம். நாங்கள் சங்கரமடத்தில் தங்கினோம்.(என நினைவு. புகைப்படங்களைப் பார்க்கணும்)

    2008ல் சென்றபோது திங்கட்கிழமை என்பதால் ஆனந்தபவன் பூட்டப்பட்டிருந்தது. இந்தத் தடவை ஆனந்தபவனை நன்றாகச் சுற்றிப்பார்த்தோம். கால 6 1/2 மணிக்கு அலஹாபாத்தை அடைந்துகொண்டிருந்தபோது கங்கைக் கரையில் பி....ங்கள் அடுக்கி எரிப்பதற்காக வைத்திருந்ததைப் பார்த்தோம். எதை எடுத்தாலும் புகைப்படம் எடுக்கும் வழக்கம் உள்ளதால் கேமராவைத் தூக்கினேன்...மனைவி இதெல்லாம் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று சொல்லிட்டா.

    அலஹாபாத்தில் இனிப்பு வகைகள் நிறைய உண்டு.

    பயணக்கட்டுரை எத்தனையோ நினைவுகளை வரவழைக்கிறது. திரும்பவும் செல்லவேண்டும், அதற்கு முன் கொரோனா சுத்தமாக மறையவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      சங்கரமடத்தில்தான் தங்கி இருப்பீர்கள்.
      நாங்கள் நிறைய முக்கிய கட்டங்களில் குளித்தோம் படகில் சென்று.
      அவர்களை நகரத்தார் சத்திரத்தில் தங்க வைத்த திரு. அரு .இலக்குவன் அவர்கள் வீட்டில்தான் திருவெண்காட்டில் மாடியில் வசித்தோம். அடுத்த முறை போகும் போது அங்கேயே தங்கினோம் மூன்று நாள். உணவு வயிர்றை கெடுக்காமல் இருக்கும்.

      போகும் இடங்களுக்கு அவர்களே வண்டிகள் ஏற்பாடு செய்து தருவார்கள், பயமில்லாமல் போய் வரலாம்.

      நாங்களும் எரிப்பதை, தூக்கி செல்வதை எல்லாம் பார்த்தோம்.
      ஹரிசந்திரன் எரிக்கும் இடத்தில் பணிபுரியும் நிலை வந்ததை நினைத்துப் பார்த்தோம்.

      நாங்கள் எடுத்தோம் என்று நினைக்கிறேன்.

      ஆனந்த பவனை நன்றாக சுற்றிப் பார்த்தது மகிழ்ச்சி.

      கொரானா சுத்தமாக மறையும் அப்போது மீண்டும் போய் வாருங்கள்.


      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  12. 2 நாட்கள் தங்குவதற்கு இடம்... ஓய்வு கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்... விவரிப்பு அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      இரண்டு நாட்கள் வீட்டில் இருப்பது போல் உறங்க இடம், சாப்பிட சாப்பாடு கிடைத்தது மகிழ்ச்சி தான் எல்லோருக்கும் என்றார்கள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. பத்து நாட்களுக்குப் பிறகு தரையில் படுக்கை - இரயிலில் படுத்துக் கொள்வது, பிரயாணிப்பது கொஞ்சம் கடினம் தான்.

    காசி - தற்போது பரவாயில்லை - நிறைய இடங்கள் சுத்தமாக இருக்கின்றன. சுத்தமாக வைத்துக் கொள்வது மக்களின் கடமையும் கூட என்பதை மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை என்பதும் வருத்தமே!

    அலஹாபாத் - பழைய அலஹாபாத் பகுதிகள் அசுத்தமாகவே இருக்கும். ஆனந்த பவனம் இப்போது நன்கு பராமரிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் நேரு, இந்திரா போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு காட்சிகளும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் தான் அங்கே. காந்தி அங்கே தங்கியதால் அவர் குறித்த சில காட்சிகளும் உண்டு.

    அடுத்து புத்த கயா! அனுபவங்களை அறியக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      உங்கள் திருவேணி சங்கம பயண கட்டுரை நினைவுக்கு வந்தது.

      எவ்வளவு வசதியாக ரயிலில் இருந்தாலும் இப்போது நமக்கு ரயில் பயணம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.
      அந்தக்காலத்தில் 10 நாட்கள் ரயில் உறக்கம் மிகவும் கஷ்டப்பட்டு இருப்பார்கள்.


      காசி தற்போது சுத்தமாக இருப்பது மகிழ்ச்சி. சுத்தமாக வைத்துக் கொள்வது நம் கடமை உணர்வு வந்து விட்டால் வேறு என்ன வேண்டும்!

      ஆனந்த பவனம் நன்கு பராமருப்புது அறிந்து மகிழ்ச்சி. நேரு வீடுதானே நினைவு இடம் அதனால் அவர்கள் பொருட்கள்தான் இருக்கும்.

      காந்தி அங்கே வந்து தங்கியதால் நினைவை போற்றுவது மகிழ்ச்சிதான்.

      அடுத்து புத்தகயா தான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. நல்லதொரு புனித பயணமாக சாருக்கு அமைந்திருக்கு. சுத்தம் என்பது கோவில்களில் அதுவும் நிறைய மக்கள் வருவதால் கண்டிப்பாக கவனிக்கவேண்டியதொன்று.செல்வந்தர்களே இப்படி கல்லை எடுத்துச்சென்றார்களா..என்ன மாதிரியான ஆட்கள்..
    புது இடங்களை சுற்றி பார்க்கும் ஆர்வம்,மகிழ்ச்சி அவர்களுக்கு இப்படியான இடம் கிடைத்ததில் நன்றாக உறங்கியிருப்பார்கள். எல்லாரும் இளைஞர்களாக இருப்பதால் சமாளித்தும் இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்
      ஆமாம் , நல்லதொரு புனிதபயணம் சாருக்கு அமைந்தது.
      இப்போது சுத்தமாக இருப்பதாய் வெங்கட் சொன்னார்.

      சில மனிதர்கள் சுயநலமாக யோசிப்பது இயல்புதானே!

      ஆமாம், நீங்கள் சொல்வது போல் சிறு வயதில் அடுத்து அடுத்து கண்டு களிப்பதில் மகிழ்ச்சிதான் ஏற்பட்டு இருக்கும், இளமையில் சமாளிக்கும் தன்மையும் நீங்கள் சொன்னது போல் அமைந்து இருக்கும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. கோயில் குளம் மற்றும் நகரில் காணப்பட்ட அசுத்தமான சூழல் பற்றிய வருத்தப் பட்டிருக்கிறார். 10 நாட்களுக்குப் பிறகு தரையில் படுக்க முடிந்தது பெரும் ஆறுதலாக இருந்திருக்கிறது. கட்டுரை நன்று.

    பதிலளிநீக்கு