ஞாயிறு, 31 மார்ச், 2019

இரயில் பயணம்

ரயில் பயணத்தில் கண்ட காட்சிகளை இங்கு பதிவாக. என் சேமிப்பிலிருந்து. போகிற போக்கில் எடுத்தாலும் கிடைத்த காட்சி பிடித்து இருக்கிறது எனக்கு, உங்களுக்கும் பிடிக்கும்.

ரயிலில் எனக்கு  ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டு  கடந்து போகும் காட்சிகளை காண்பது மிகவும் பிடித்தமானது, தூரத்தில் தெரியும் கோபுரம், மலைகள், ஏரிகள், வயல்கள், மாடுகள், ஆடுகள், பறவைகள், காலைச் சூரியன், மாலைச் சூரியன் கூடு செல்லும் பறவைகள், மரங்கள், செடி, கொடிகள் என்று இயற்கையை ரசித்துக் கொண்டே பயணம் செய்ய பிடிக்கும். முன்பு கண்களுக்குள் சிறை பிடித்தேன் 
 இப்போது அலை பேசி, காமிரா என்று  சிறைபிடித்து பார்த்து மகிழ்ந்து கொள்கிறேன்.


இந்த ஜைனர் ஆலயம்  பாதியில் நின்று போன காரணம் தெரியாது மாயவரத்திலிருந்து ரயிலில்  கும்பகோணம் போகும் பாதையில்  வயல்கள்  உள்ள பகுதியில்   அமைந்து இருக்கும்  ஆலயம்.

  ஆலயம் அமைந்து இருக்கும் இடத்தை கடந்து போகும் போதெல்லாம்  மனம்  இறங்கி பார்க்க துடிக்கும்.

மதுரை பசுமை நடை குழுவினர் மாதிரி மாயவரத்தில் இருந்து இருந்தால் இந்த இடத்திற்கு அழைத்து சென்று அதன் வரலாறு சொல்லி இருப்பார்கள்.
                                                                           
அந்தக்கால வீடுகள்  மரங்களுக்கு இடையே சிவப்பு ஓடு தெரிவதும் ஒழுகும் ஓட்டுகூறையை மஞ்சள் தார்பாய் போட்டு மூடி இருப்பதும் அழகு.

இன்னொரு வீட்டில் ஓட்டில் சுண்ணம்பு அடித்து இருக்கிறது.ரயில் ஓடு, மங்களூர் ஓடு இரண்டுமே அழகுதான்.

 தூரத்தில் தெரியும் மாடி வீடு  அலங்கார வேலைப்பாடுடன் இருக்கிறது.

இரண்டு வேப்பமரங்களுக்கு இடையே  அறுவடை செய்யப்பட்ட வயலும், தூரத்தில் குளமோ, ஆறோ தெரிவது அழகுதானே? வேப்பமரத்தை பற்றி படர்ந்து இருக்கிறது  கொடிகள் 
இளம் பச்சை, கரும் பச்சை, துளிர் பச்சை என்று இயற்கை கண்ணுக்கு அளிக்கும் விருந்து, காற்றில் மரங்களின் கிளைகள்  ஆடுகிறது. 
கூந்தல் பனைமரம் தென்னை மரத்தைவிட  உயரமாய், காற்றில் பறக்கும் தென்னை மரக் கிளைகளும் , பச்சை பசேல் மரங்களுக்கு இடையே வீடு அழகு. பாரதியின் பாடல் போல் 

//காணி நிலத்திடையே ஓர் மாளிகை

                                                           கட்டித் தர வேண்டும் - அங்கு
                                                     கேணி அருகினிலே தென்னைமரம்
                                                         கீற்றும் இளநீரும்

                                              பத்துப் பனிரெண்டு தென்னைமரம்
                                                             பக்கத்திலே வேணும் //


பசுமை மரம் மட்டும் அழகு இல்லை, இலைகளை உதிர்த்து மொட்டைமரமானபின்னும் அழகு தருகிறது கண்ணுக்கு
அசோக மரம், நெட்டிலிங்க மரம் எப்படி வேண்டுமென்றாலும் அழைக்கலாம். வானமும்  மரங்களும் பார்க்க அழகுதான் ரயில் நிலையத்தில்
ஆலம் விழுதுகள் சேர்ந்து    வழி போக்கர்கள்  இளைப்பாறி செல்ல மண்டபம் அமைத்து இருக்கிறது.

வெயிலின்  கொடுமை தெரியாமல்  நிழல் தரும் மரம் கண்ணுக்கும் விருந்தளிக்கிறது பூத்து குலுங்கி.
Image may contain: sky
திருநெல்வேலியிலிருந்து ரயிலில் வரும் போது எடுத்த அந்திவானம் அதில் தெரியும் தோற்றங்கள் (கற்பனை உருவங்கள் ) ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாறி தெரியும். உங்களுக்கு என்ன தோன்றுகிறது  சொல்லுங்களேன்.
Image may contain: sky, outdoor and nature
இந்த படத்தில் இடது  ஓரத்தில் அதிராவின் பூஸார் தெரிகிறார்.
Image may contain: sky and outdoor

No photo description available.
11 பிப்., 2019 அன்று வெளியிடப்பட்டது 

இரயில் பாட்டு தேடிய போது கிடைத்த பாடல் -கேட்டுப் பாருங்கள்; நன்றாக இருக்கிறது. செல்போனின் நன்மை, தீமையைச் சொல்கிறது 

--------

இரயில் சிநேகிதம் என்பார்கள். பயணம் செய்து கொண்டு வரும் போது ஒருத்தருக்கு ஒருத்தர் உரையாடி மகிழ்வார்கள். இப்போது எல்லோரும் செல்போனை வைத்துக் கொண்டு விளையாட்டு, பாட்டு,  சினிமா பார்த்து கொண்டு இருக்கிறார்கள். அல்லது அலுவலக உரையாடல், இப்படிப் போகும் யாரும் யாருடனும் பேச விஷயம் இல்லை.  

கீழே கொடுக்கப்பட்ட செய்தியில் உள்ள புறநகர் இரயிலில் எடுத்த படம் தான் போல் இருக்கிறது. 

இரயிலில் பாடிச்செல்வதைப் படித்தேன் எனக்குப் பிடித்து இருந்தது. அதை உங்களுடன்:-

//புறநகர் ரயிலில் களைகட்டிய கச்சேரி: வாய்விட்டு பாடினால் நோய்விட்டு போகும்?

பாட்டு பாடியவர் சக பயணி, அவரது பாட்டிற்கு ரயிலின் சுவர் பகுதியில் தட்டி தாளம் வர வைத்துக் கொண்டிருந்தவரும் சக பயணி.
வழக்கமான கச்சேரி போன்றே சுவாமி பாடலில் துவங்கி, சினிமா பாடல் என களைகட்டியது.
நேரம் செல்ல செல்ல பலரும் அந்த கச்சேரி குழுவினருடன் இணைந்து கொள்ள தனி பாடலில் துவங்கி, குழு பாடல் என கச்சேரி முழு வீச்சில் நடந்தது. அவர்களது பாடலுக்கு மொத்த கூட்டம் தலையாட்டி கை தட்டி வரவேற்றது. பாட்டு பாடிய பலரும், நாற்பது வயதைக் கடந்தவர்கள்.
பலரும் அலுவலகங்களில் பணி செய்பவர்கள். அலுவலக நாட்களில் ஒன்றாக பயணம் செய்வதுடன், வித்தியாசமான முறையில் தங்கள் பயண நேரத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
செய்தித்தாள் படிப்பது, அரட்டை அடிப்பது, அரசியல் விவாதங்களில் ஈடுபடுவது என புறநகர் ரயில்களில் முன்பு பார்த்த காட்சிகள் இப்போது இல்லை. செல்போன் வந்த பின்பு பயண நேரத்தில் அதை பார்ப்பதை மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ள ரயில் பயணிகள் ஏராளம்.
சக மனிதர்களுடன் மனம் விட்டு பேசுவது கூட குறைந்து விட்டது. இதுபோன்ற மனிதர்கள் மத்தியில், இவர்கள் சற்று வித்தியாசமானவர்கள். மனம் விட்டு பேசுவது மட்டுமின்றி மனம் விட்டு பாடியபடி செல்கின்றனர். தங்கள் கல்லூரி நாட்களில், தங்களை ஈர்த்த சினிமா பாடல்களையும் மனம் விட்டு பாடி, மீண்டும் கல்லூரி வாழ்க்கையை நினைவு படுத்திக் கொள்கின்றனர். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும், தினந்தோறும் வாய்விட்டு பாட வாய்ப்பு கிடைத்தால், அதை கேட்டு ரசிக்க ரசிகர்கள் கூட்டமும் இருந்து விட்டால் மகிழ்ச்சிக்கு குறைவு ஏது?//
நன்றி - இந்து தமிழ் திசை பத்திரிக்கை..
இப்படிப் பாடி, கேட்டு கை தட்டி ரசித்தால் மன அழுத்தம் இருந்த இடம் தெரியாமல் ஓடாதா?
அன்றைய நாள் நல்ல நாளாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
கோடை விடுமுறை ஆரம்பம் ஆகப் போகிறது. விடுமுறைக் கொண்டாட்டம் ஆரம்பித்து விடும். குழந்தைகளை அந்த வகுப்பு, இந்த வகுப்பு என்று சேர்த்து விடாமல், தாத்தா, பாட்டி வீடு, உறவினர் வீடு , குழந்தைகளுக்குப் பிடித்தமான சுற்றுலா இடங்கள், என்று இரயிலில் அழைத்துச் செல்லலாம்.
பெரியவர்களுக்குப் பிடித்த கோவில், குளங்கள் பார்த்து மகிழ நல்ல நேரம் ,.
இனிது இனிது ரயில் பயணம்!
வாழ்க வளமுடன்
===========================================

68 கருத்துகள்:

 1. மீதான்ன்ன்ன்ன்ன்ன் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ:)) பூசோ கொக்கோ?:)

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
  நீங்கதான் முதல் என்று சொல்லமுடியாது
  உங்கள் பூஸார் வந்து விட்டார் முன்பே!

  பதிலளிநீக்கு
 3. படங்களும் அதைச் சார்ந்த தங்கள் எண்ணங்களும் அருமை.

  உண்மைதான், முன்போல யாரும் யாருடனும் பேச விரும்புவதில்லை. பயணம் முழுவதும்
  அறியாதவரிடம் பேசியபடியே சென்றதெல்லாம் ஒரு காலம்.

  மேகங்களில் உருவங்கள் பார்ப்பது சுவாரஸ்யமான விளையாட்டு. ஒரு படத்தில் கரடி வாயைத் திறந்து கொண்டிருப்பது போல் தெரிகிறது :).

  தி இந்து செய்தியும், ரயில் பாட்டும் அனைவரையும் சிந்திக்க வைக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

   ரயிலை விட்டு இறங்கும் வரை ரயில் சிநேகம் இருக்கும் என்பார்கள்
   இப்போது சிரிக்க மாட்டேன் என்கிறார்கள்.

   மாயவரத்திலிருந்து கோவை போகும் போது ரயிலில் ஒரு குழந்தையுடன் பேசிக் கொண்டே போனேன் அவள் எனக்கு பள்ளி பாடல்களை பாடி காட்டினாள். அதை பதிவு செய்து பதிவில் போட்டேன் பல வருடங்களுக்கு முன்பு. இப்போது குழந்தைகள் அம்மாவின் செல்லில் விளையாட்டு விளையாட்டு தான்.

   மேகங்களில் கரடியை பார்த்து விட்டீர்களா?
   ரயில் பாட்டும் தி இந்து செய்தியும் எனக்கு பிடித்தது உங்களுக்கும் பிடிக்கும் என்று போட்டேன். அதே போல் பிடித்தது அறிந்து மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 4. ஒவ்வொரு படமும் அழகோ அழகு...

  ரயில் பயணமே என்றும் சுகம் தான்...

  காணொளி பாட்டு கலக்கல்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
   ரயில் பயணம் சுகம் தான்.
   காணொளி பாட்டு கேட்டது மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்கு நன்றி .

   நீக்கு
 5. பதில்கள்
  1. வணக்கம் சகோ ஜெயக்குமார். வாழ்க வளமுடன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 6. பயணங்களில்பெரும்பாலும் நான் புதிய நபர்களுடன் பேசா ரகம்தான்! வேடிக்கை பார்த்துக்கொண்டு வருவேன். படிக்கப் புத்தகம் கையில் வைத்திருந்தாலும் மனமும் கண்களும் அதில் ஓடாது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
   நான் குழந்தைகளுடன் பேசுவேன். பெரியவர்கள் பேசினால் பேசுவேன்.
   ஆனால் புன்னகை உண்டு அவர்களைப் பார்த்து.பகல் முழுவதும்
   வேடிக்கை பார்ப்பேன். இரவு தூங்கும் வரை புத்தகம் படிப்பேன்.

   நீக்கு
 7. பயணத்தின்போது இருக்கை வண்டி ஓடும் திசையில் அமைந்தால் நல்லது. பின்பக்கமாய் வண்டி ஓடுவது போல இருக்கை அமைந்தால் கஷ்டப்படுவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது எல்லோருக்கும் உள்ளது தான்.
   ஓடும் திசையில் இருந்தால்தான் காற்றும் நன்றாக வரும்.

   நீக்கு
 8. பாதியில் நின்றுபோன ஜைன ஆலயம் என்னையும் இழுக்கிறது. இருப்புப்பாதை ஓரத்தில் வீடுகள் அமையப்பெற்றிருக்கும் மக்கள் அதை ரசிப்பார்களா? ஒரு கட்டத்தில் ஒரு சலிப்பு வந்துவிடும் என்று தோன்றும் எனக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜைன ஆலயம் உங்களையும் அழைக்கிறதா?
   சாரின் அத்தை ரயிலடியில் இருந்தார்கள் பல வருடம் இருந்தாலும் சத்தம், மணியை வைத்து இந்த ரயில் போறான் . இன்று என்ன இவன் லேட்டு? என்று குழந்தையின் ஆர்வத்தோடு பார்ப்பார்கள்.
   ரயிலடியில் இருக்கும் குழந்தைகள் நமக்கு கையசைத்து வழி அனுப்பும் அழகு இருக்கே! பார்த்து கொண்டே இருக்கலாம்.

   நீக்கு
 9. மரங்களும், ஓடைகளும்... இதெல்லாம்தான் காணக்கிடைக்காத காட்சிகள். வானத்தின் மனக்கண் கற்பனை எப்பவுமே சுவாரஸ்யம். அவரவர் காட்சிக்கேற்ற கற்பனை விரியும். (கற்பனைக்கேற்ப காட்சி விரியும் என்றும் சொல்லலாம்!)

  பதிலளிநீக்கு
 10. ஆமாம், மரங்களும், ஓடைகளும் காணக்கிடைக்காத காட்சிகள்தான் அரிதாகி வருகிறது.
  உங்கள் கற்பனை என்ன என்று சொல்லவில்லையே!
  அதிராவின் பூஸாரை பார்த்தீர்களா?
  ராமலக்ஷ்மி கரடி தெரிகிறது என்றார்.
  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கரடிஎன் கண்ணிலும் பட்டது. இன்னொரு படத்தில் ஓநாய் போன்ற உருவமும் கண்ணில் பட்டது!

   நீக்கு
 11. இரயில் பயணங்களில் எடுத்த படங்கள் ரொம்ப அழகு. அதற்கான உங்கள் கருத்துகளும்....

  அலைபேசி பற்றிய பாடல் முன்பே கேட்டிருந்தாலும் மீண்டும் கேட்டு ரசித்தேன். உணமையை உரைக்கும் பாடல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
   ரயில் ஓடும் போது எடுத்த படங்கள். நீங்கள் எடுத்த மாதிரி இருக்காது .
   இருந்தாலும் படங்களை ரசித்தமைக்கு நன்றி.
   பாடல் நன்றாக இருந்தது இல்லையா? முன்பே கேட்டு இருந்தாலும் மீண்டும் கேட்டு ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 12. கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன - படங்கள்...

  அழகினில் ஆழ்ந்து
  அழகினை ஆழ்ந்து
  ரசிப்பவர்களுக்கே
  இதெல்லாம் கைகூடும்....


  வாழ்க நலம்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ , வாழ்க வளமுடன்.
   குட்டி கவிதையில் கருத்து அருமை.
   கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 13. ரயிலில் எனக்கு ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டு கடந்து போகும் காட்சிகளை காண்பது மிகவும் பிடித்தமானது, தூரத்தில் தெரியும் கோபுரம், மலைகள், ஏரிகள், வயல்கள், மாடுகள், ஆடுகள், பறவைகள், காலைச் சூரியன், மாலைச் சூரியன் கூடு செல்லும் பறவைகள், மரங்கள், செடி, கொடிகள் என்று இயற்கையை ரசித்துக் கொண்டே பயணம் செய்ய பிடிக்கும். முன்பு கண்களுக்குள் சிறை பிடித்தேன்
  இப்போது அலை பேசி, காமிரா என்று சிறைபிடித்து பார்த்து மகிழ்ந்து கொள்கிறேந்//

  அக்கா எனக்கும் அதேதான். வண்டி ஓடும் திசையில் அமைந்தால்தான் ரொம்ப வசதியா இருக்கும் இல்லையா கோமதிக்கா.

  நானும் இப்படித்தான் ஓடும் ரயிலில் கூட எடுப்பேன். ஆனால் ரொம்ப ஃபாஸ்டா போனா படனள் சிலசமயம் ஷேக் ஆகும்...என்றாலும் விடுவதில்லை.

  அந்த ஜைன கோயில் படம் அட்டகாசம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
   உங்களுக்கும் இயற்கையை ரசிக்கும் விருப்பம் இருப்பது எனக்கு தெரியுமே!
   ஓடும் வண்டியில் எடுப்பதற்கு வசதிகள் இருக்கு காமிரவில் அந்த வசதியை வைக்க மறந்து விடுவேன். தானாக எடுக்கும் வசதியில் தான் எப்போதும் இருக்கும் .
   எடுத்த படங்கள் நன்றாக அமைந்து விடும் சில நேரம்.
   ஜைன கோவில் பக்கத்தில் எடுக்காது குறைதான்.
   உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

   நீக்கு
 14. எல்லாப் பாடங்களும் அழகா இருக்கு..

  அந்திவானம் படத்தில் பூஸார் தெரிகிறார். இடப்பக்கம்!!

  முதல் அந்திவானம் படம் டக்கென்று வரைபடம் போல இருக்கு. அதுவும் இந்தியா போலவும்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூஸாரை பார்த்து விட்டோர்களா?
   மாலை நேரத்தில் தங்க ஒளிக்கதிர் இப்படி வரைபடம் போடும்.
   ஆமாம், மேப் போல இருக்கும்.

   நீக்கு
 15. இரண்டாவது அ வா படம் ஒரு மிருகம் குழந்தியயை இழுப்பது போல இருக்கு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிருகம் குழந்தையை இழுப்பது போலவா!
   மனித மிருகங்கள் குழந்தையை இழுப்பது போல மிருகங்களுமா?

   நீக்கு
 16. மூன்றாவது அ வா படத்தில் அந்தக் குழந்தை அந்த மிருகத்தின் மடியில் படுத்து என்னை விட்டுவிடு என்று சொல்லுவது போல இருக்கு..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அந்தக் குழந்தை அந்த மிருகத்தின் மடியில் படுத்து என்னை விட்டுவிடு என்று சொல்லுவது போல இருக்கு.//

   தொடர்ந்து வரும் செய்திகளால் நாம் பாதிக்கப் பட்டு இருப்பதையே இந்த கருத்து சொல்வதாக நினைக்கிறேன் கீதா.

   நீக்கு
 17. ஆலமரம் செம அழகு!

  எலலப் படங்களுமே அழகு. நானும் எடுத்து வைத்திருக்கேன் அக்கா போடவே இல்லை.

  அந்தப் பூ மரம் படமும் ரொம்ப அழகா இருக்குக்கா.

  ரயில் பயணம் என்றாலே சுகம் தான்...மிகவும் பிடிக்கும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆலமரம், பூமரம் எல்லாவற்றையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
   நீங்கள் எடுத்த படங்களையும் பதிவில் போடுங்கள்.
   ரயில் பயணங்களை ரசிக்க பிடிக்கும் தான்.

   நீக்கு
 18. காணொளிப் பாட்டு கேட்டேன் சூப்பர்.

  எல்லாம் ரசித்தேன் அக்கா..

  சரி சரி இன்னும் கொஞ்ச நேரத்துல பூஸார் பிசுக்கு தோசை (பீர்க்கங்காய் தோசை) போட்டுருவாங்க அதான் இங்க ஃபர்ஸ்டூஉனு சொல்லிட்டு ஓடிப் போய்ட்டாங்க...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளி பார்த்து, கேட்டது மகிழ்ச்சி.
   அதிராவின் பிர்க்கங்காய் தோசை பார்க்க போக வேண்டும்.
   நானும் வரேன் கீதா.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி, நன்றி.

   நீக்கு
 19. வணக்கம் சகோதரி

  இரயில் பயணம் சுகமானதுதான். அதிலும் ஜன்னலோர இருக்கை கிடைத்து விட்டால் வெளியுலகை ரசித்தபடி பயணம் செய்வதில் ஒரு தனி சுகம் கிடைக்கும். பொதுவாக இது அனைவருக்குமே பிடித்தமான விஷயந்தான். உங்களுக்கும் அது மிகவும் பிடித்த செய்கை என்பதறிந்து மிக்க மகிழ்ச்சி. இயற்கை காட்சிகள், கால்நடைகள், பசுமை நிறைந்த வயல்வரப்புக்கள், ஆறு, குளங்கள் என அனைத்தையும் பார்த்து வருவது மகிழ்ச்சிதான். அது பற்றி தாங்களும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

  படங்கள் அனைத்தும் நன்றாக எடுத்திருக்கிறார்கள். ரயில்கள், பாதியில் நிற்கும் ஜைனர் ஆலயம், பசுமை நிறைந்த மரங்கள், அழகாய் பூத்துக்குலுங்கும் இரயிலடி மேடை படங்கள் என அனைத்துப்படங்களும் மிக நன்றாக உள்ளது.

  இரண்டு மரங்களுகிடையில் நீங்கள் பசுமை வயல், ஆறு, குளம் என்று ரசித்து எழுதியிருப்பது வெகு அழகு. அத்துடன் இயற்கை அழகான காட்சிகளை ரசிக்கும் போது, எனக்கு யசோதை சின்னஞ்சிறு கண்ணனை, அவனின் பொறுக்கமுடியாத குறும்புக்காக உரலில் கட்டி விடும் சமயம், உரலுடன் இழுத்து வந்து சாபத்தினால் மரங்களாக மாறியிருக்கும் தேவர்களுக்கு சாபவிமோசனம் தருவதற்காக மரங்களிடையே தவழ்ந்து வந்து உரலினாலேயே மரங்களை இருபக்கமும் சாய்க்கும் கண்ணனின் அந்த நினைவும் வந்தது. அழகான காட்சிகள்... பாரதியின் பாடல்.. பாடல் என்பதை விட அவரின் கனவு மிக அற்புதம்.

  நிழல் தரும் ஆலம் விழுதுகள் என்ன ஒரு அழகான உணர்வே தருகிறது.! மிகவும் ரசிக்கும்படியாக அந்தப்படம் நன்றாக உள்ளது.

  அந்திச்சூரியன் படங்களும் மிக அழகு. நம் கற்பனைக்கேற்றபடி உருவங்களும், மாறி மாறி வந்து போகும். எனக்கும் கரடி, காட்டுநாய் என பல விலங்குகள் தெரிந்தன.

  இரயில் பாடல் நன்றாக இருக்கிறது. கொஞ்ச நாட்கள் நீடித்து இருக்கும் நட்பை இரயில் சினேகிதம் என்பார்கள். ஆனால் இந்த இரயில் நட்பு நாம் உள்ளவரை நம் நினைவில் என்றும் நிலைத்து நிற்கும். நானும் இரயில் பிராயாணத்தில் அவ்வளவாக யாரிடமும் நிறைய பேசியதில்லை. யாரேனும் வலுக்கட்டாயமாக பேசினால் நானும் பதிலுக்கு பேசுவேன். அவ்வளவுதான்.! அனைத்தும் மிக அழகாக இருக்கின்றன. இரயிலை விட நீளமாக கருத்துரை எழுதி விட்டேன் என நினைக்கறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா, ஹரிஹரன், வாழ்க வளமுடன்.

   //எனக்கு யசோதை சின்னஞ்சிறு கண்ணனை, அவனின் பொறுக்கமுடியாத குறும்புக்காக உரலில் கட்டி விடும் சமயம், உரலுடன் இழுத்து வந்து சாபத்தினால் மரங்களாக மாறியிருக்கும் தேவர்களுக்கு சாபவிமோசனம் தருவதற்காக மரங்களிடையே தவழ்ந்து வந்து உரலினாலேயே மரங்களை இருபக்கமும் சாய்க்கும் கண்ணனின் அந்த நினைவும் வந்தது.//

   என்ன ஓற்றுமை நம்மிடையே! நானும் நினைத்தேன் கமலா, அந்த நேரம் மனகண்ணில் தெரிந்த காட்சி அந்த கண்ணனுக்கு தெரியும். சிலிர்த்து விட்டது கேட்டு.
   நான் சொல்ல நினைத்து விட்டதை கண்ணன் உங்கள் மூலமாக சொல்ல வைத்து விட்டான்.

   இரயிலில் சில நேரம் ஆன்மீக சுற்றுலா போகும் போது அவர்கள் பார்த்த கோவில் விவரங்கள் , பார்த்த இயற்கை காட்சி நிறைந்த இடங்கள் போன்றவை பற்றி பேசுவார்கள் அது நமக்கு உபயோகமாய் இருக்கும்.

   இந்த முறை ஒரு 30 வயது இளைஞர் எஸ். ராமகிருஷ்ணன் கதை படித்துக் கொண்டு வந்தார் 'துயில்' அதைப் பற்றியும் எஸ். ரா நினைத்தால் எங்கு வேண்டுமென்றாலும் கிளம்பி விடுகிறார் நம்மால் குடும்பம் இதை விட்டு நகர முடியவில்லை என்று பேசினார். அவர் அண்ணன், இவர் எல்லாம் காசு கிடைக்கும் போது புத்தகங்கள் வாங்கி படிப்பதாய் சொன்னார்.இது போன்ற அனுபவங்கள் கிடைக்கிறதே!

   இரயிலை விட விரிவாக கருத்து கொடுத்து ஊக்கபடுத்தியதற்கு நன்றி கமலா.   நீக்கு
 20. ஆவ்வ்வ்வ் ரெயினைப் பார்க்க ஏதேதோ நினைவுகள் மலருதே...

  ரெயின் பயணம் உண்மையில் மிக மகிழ்ச்சியானதே. ஆனா வெளிநாட்டு ரெயின்களில் ஜன்னல் திறக்க முடியாது. எங்கட ஊர்களில் எனில் ஜன்னலால் எட்டிப் பார்த்தபடி இருப்பதும் ஒரு சுகம்தான்.

  ஓ ஐயனார் ஆலயம் என்ன அநியாயம். பார்க்க கவலையாக இருக்கு, மரங்கள் பசுமையாக வளர்ந்து அவரை குளிர்வாக்கி வச்சிருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா, இங்கும் ஏசி ரயிலில் போவது வசதி இருக்கும் ஆனால் எட்டி பார்க்க முடியாதது .
   பகலில் வழியில் வரும் காட்சிகளை ரசிக்கலாம், இருட்ட ஆரம்பித்து விட்டால் முடியாது.

   அது ஐயனார் கோவில் இல்லை அதிரா சமணர் கோவில். ஏன் கைவிட பட்டது என்று தெரியவில்லை. வயல்களுக்கு நடுவில் . இப்போது கொடிகளுக்கு படர இறைவனின் விருப்பம் போலும். மரங்கள், கொடிகள் அந்த மண்டபத்தை குளிர்வாக்கி வச்சிருக்கு.

   நீக்கு
 21. ஆஆஆஆஆஆ மொட்டைமாடி இல்லாத ஒட்டு வீடுகள் தெரிகிறதே.

  அது வேப்பமரம்போல இல்லைக் கோமதி அக்கா.. வேப்பமரத்தின் கிளைகள் இப்படி குட்டியாக இருக்காது.. நீண்டு வளர்ந்திருக்குமெல்லோ. இது குட்டி வட்ட மரமாக இருக்கே.

  ஓ கூந்தல் பனைமரம்- அழகிய பெயர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா, அது குட்டி வேப்பமரம் இப்போது தான் வளர்ந்து கொண்டு இருக்கிறது.
   கொடிகள் அதை வட்ட மரமாக ஆக்கி வைத்து இருக்கிறது.
   இது காய்க்காது தலை முடியை விரித்து போட்டு இருப்பது போல் இருப்பதால் கூந்தல் பனைமரம் என்று பெயர்.

   நீக்கு
 22. அது அசோக மரம்தான்.. வீட்டிலே வளர்க்கக்கூடாது என்பினம், ஏனெனில் சீதை சிறையிருந்தது அசோக மரங்களுக்கிடையேதானே.. அதனால அம்மரம் வீட்டில் நின்றால், வீட்டில் இருக்கும் பெண்களுகு திருமணத்தடை வரும் என்றொரு நம்பிக்கை ஊரில்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் வீட்டு வாசலில் முன்பு இருந்தது, நீங்கள் சொல்வது போல் யாராவது அம்மாவிடம் சொல்லி விட்டார்களோ என்னவோ! அம்மா வெட்டி விடார்கள்.
   இலங்கை சென்ற போது அசோகவனம் சென்று வணங்கி வந்தோம்.

   நீக்கு
 23. ஆலமரம் அழகு. அது மயில்க்கொண்/ன்றை அல்லது ஒருவித வாகை என நினைக்கிறேன் ஊரில் எங்கள் வீட்டிலும் இருந்தது இப்போ பெயர் வாயில் வருகுதில்லை.

  //திருநெல்வேலியிலிருந்து ரயிலில் வரும் போது//
  ஆவ்வ் திருநெல்வேலி ஆரம்பிச்சதும் பசுமை மறைஞ்சு சூனியப் பிளம்பு தெரியுதே:)) அப்பொ அங்குள்ளோரும் சூடானவர்களாகத்தான் இருப்பினமோ என்னமோ.. நான் நெல்லைத்தமிழனைச் சொல்லவில்லையாக்கும்:)).

  //இந்த படத்தில் இடது ஓரத்தில் அதிராவின் பூஸார் தெரிகிறார்.//

  ஹா ஹா ஹா அப்படியே முன்னங்காலை நீட்டி, செவிகளை விரிச்சபடி இருப்பது தெரியுதே.. கீழே ஒரு பபி இருப்பதுபோலவும், பூஸார் பப்பியுடன் அலட்டுவது:) போலவும் தெரியுது:)) அநேகமாக அதிரா இன்று சுட்ட பிசுக்கங்காய்த்தோசை பற்றித்தான் பேசுகினம் என நினைக்கிறேன் ஹா ஹா ஹா:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மயில் கொன்றை இல்லை, வாதநாராயண மரம் இதன் பேர். நிறைய இடங்களில் காணபடும்.எங்கள் குடியிருப்பில் நிழல் தந்து கொண்டு இருக்கிறது.

   திருநெல்வேலியிலிருந்து மதுரை வரும் போது எடுத்த படம் அதிரா.
   திருநெல்வேலி தமிரபரணி ஆற்று பாசனத்தால் மூன்று போகம் விளையும் பூமி.
   எங்கும் செழுமையாக காணப்படும் அங்கு எடுத்த வயல் காட்சிகள் இன்னொரு பதிவில் வரும்.

   காரம் அதிகம் சாப்பிடுவார்கள் திருநெல்வேலி மக்கள் அதனால் கோபம் வரும் என்பார்கள்.
   நெல்லைத்தமிழன் கோபபடமாட்டாரே!

   ஆதிரா பூஸாரை பார்த்து விட்டீர்களா? மகிழ்ச்சி.ஏஞ்சலிடம் சொல்லுங்கள் பூஸாரைப்பற்றி.ஈஸ்டர் விடுப்பில் ஊருக்கு போய் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
   பூஸாருக்கு அல்ட்டல் இல்லையென்றால் தான் ஆச்சிரியம்.

   //அநேகமாக அதிரா இன்று சுட்ட பிசுக்கங்காய்த்தோசை பற்றித்தான் பேசுகினம் என நினைக்கிறேன் ஹா ஹா ஹா:).//

   வரேன் வரேன் தோசையை சுவைக்க.

   நீக்கு
  2. ஆவ்வ்வ்வ்வ் ஓம் கோமதி அக்கா வாதநாராயணி மரம்.... அதுதான் பெயர் வருகுதில்லை என்றேன். இதன் இலைகளை எடுத்து சுண்டல்/வறை செய்வொம்ம்.. வாதக் குணங்களைப்போக்குமாம்.. சுவையும் முருங்கை இலையை விட இனிமை.

   நீக்கு
 24. நல்ல அழகாகப் பாடுகிறார். உண்மைதான் இப்போ எங்குமே யாரும் யாருடனும் பேசுவதில்லை, உடனேயே ஃபோனை உற்றுப்பார்க்கத் தொடங்கி விடுகின்றனர். அது ஒரு விதத்தில் நன்மை.. ஊர் விடுப்ஸ் பேசுவது கிடையாது.

  அழகிய பதிவு கண்ணைக் கவரும் படங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா, ஊர் வம்பு பேசாமல் உபயோகமான பேச்சு பேசுபவர்கள் இருக்கிறார்கள் தானே!
   நானும் அரசியல், அடுத்தவரை குற்றம் சொல்பவரிடம் பேச மாட்டேன்.
   குழந்தைகளிடம் பேசுவேன். நல்ல முறையில் பேசுபவர்களிடம் பேசுவேன்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.

   நீக்கு
 25. படங்கள் அனைத்தும் கவிதை.

  இரயில் பயனங்களில் இன்று யாரும், யாருடன் மட்டுமில்லை குடும்பத்தினரே போனாலும் எல்லோரும் செல்போனை நோண்டிக்கொண்டே செல்கின்றார்கள்.

  கணவனுடன் பைக்கிள் செல்லும் பெண் இரண்டு புறமும் கால்களை போட்டுக்கொண்டு எதையும் பிடிக்காமல் இரண்டு கைகளாலும் செல்போனை நோண்டிக்கொண்டு செல்கிறாள். பறக்கும் கணவனோ சிக்னலில் கிடைத்த இடைவெளியில் செல்போனை நோண்டுகிறான்.

  ஆக இப்போது யாரும், யாருடனும் பேசுவது குறைந்து விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
   படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
   குடும்பத்தினருடன் போகும் போது விளையாட்டு, (சீட்டு) பேச்சு என்று போன காலங்கள் மிகவும் இனிமையானது. இப்போது நீங்கள் சொல்வது போல் ஆளுக்கு ஒரு செல்லை வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டு இருப்பது மனதுக்கு கஷ்டமாய் தான் இருக்கிறது.
   அன்று ஒரு செய்தி வந்தது பாட்டியை பார்க்க வந்த அனைவரும் ஆளுக்கு ஒரு செல்லை வைத்துக் கொண்டு இருப்பார்கள் பாட்டி தலையில் கை வைத்துக் கொண்டு இருப்பார்.
   இன்றைய நிலையை காட்டியது அதனால் தான் பாட்டியும் இப்போது செல் உபயோகசெய்ய தெரிந்து கொள்கிறார்.

   பயணம் செய்யும் போதும், சிக்னலில் கிடைத்த காட்சியிம் வருத்தமாய் இருக்கிறது.
   உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 26. அழகிய காட்சிகள் நிரம்பிய பதிவு. ரயில் பயணங்களே சுகமானவை தான். எனக்கு முதல் இரண்டு மேகப்படங்களிலும் இந்திய வரைபடம் போல் தெரிந்தது. அடுத்த படத்தில் பூசாரும் அவர் அணைத்திருக்கும் குட்டியும் தெரிந்தன. மாயவரத்திலிருந்து கும்பகோணம் ரயிலில் வரும்போது இந்தக் கோயிலைப் பார்த்ததாய் நினைவில் வரலை. அடுத்த முறை போனால் நினைவாய்ப் பார்க்கணும். ஓடும் ரயிலில் இந்தப் படத்தை இத்தனை அழகாய் எடுத்திருப்பதற்குப் பாராட்டுகள். மற்றப் படங்களும் அழகாக இருக்கின்றன. அநேகமாய் அந்தப் பக்கங்களிலேயே விழுதுகள் விட்ட ஆலமரங்கள் நிறையக் காணலாம். மனிதன் இன்னமும் அதை அழிக்க முற்படவில்லையே என சந்தோஷப்படணும். :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
   ரயில் பயணங்கள் சுமனானது தான் .
   மேக படங்களில் காட்சிகளை கண்டு சொன்னது மகிழ்ச்சி.
   அடுத்த முறை சென்றால் ஜைன கோவிலை பார்க்க ஆவல் என்று சொன்னது மகிழ்ச்சி.
   ஆலமரங்கள் நிறைய காணபடும், ஆலமரம், அரசமரம் இரண்டையும் வெட்ட பயப்படும் மனிதர்கள் இருக்கிறார்கள். காலத்தின் கட்டாயம் எற்படும் போது வெட்டுகிறார்கள்(பாதை அமைக்க)

   படங்களை ரசித்து பாராட்டி கருத்து சொன்னது மகிழ்ச்சி அளிக்கிறது.பாராட்டுக்கு நன்றி.

   நீக்கு
 27. பாட்டை மதியம் வந்து கேட்கிறேன். நானெல்லாம் அம்பத்தூரில் இருந்து வேலைக்காக பேசின் பிரிட்ஜ் வரை செல்லும்போது கூடப் பயணிக்கும் பயணிகள் பஜனைப்பாட்டெல்லாம் பாடி சுண்டல் விநியோகம் எல்லாம் செய்வார்கள். இப்போதெல்லாம் காண முடியுமா தெரியலை! சேலை வியாபாரம் முதற்கொண்டு நடக்கும்.

  பதிலளிநீக்கு
 28. பஜனை பாடலை கேட்டு பயணம் மிக அருமையானது இல்லையா? அந்தக் காலங்கள்.
  சேலை வியாபாரம், மற்றும் நிறைய சாமான்கள் விற்பார்கள், காய்கறிகள், பூக்கள் எல்லாம் விற்பார்கள் ரயிலில்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.
  நேரம் கிடைக்கும் போது பாட்டு கேளுங்கள் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 29. ரயில் பாட்டு என்றதும் எனக்கு என் எஸ்கிருஷ்ணனின் கிந்தன் சரித்திரத்தில் வரும் கரகர வெனசக்கரம் சுழல கன வேகத்தில் வரும் ரயிலே என்னும் பாட்டு நினைவுக்கு வந்தது கேட்டிருக்கிறீர்களா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
   என்.எஸ் கிருஷ்ணன் அவர்களின் பாடல் கேட்டு இருக்கிறேன் சார்.
   நந்தனார் சிதம்பரம் பார்க்க போவது போல் கிந்தன் ரயில் பார்க்க போவார்.
   நன்றாக இருக்கும் .
   உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி.

   நீக்கு
 30. ரயில் பாட்டு கேட்டுக் கொண்டே எழுதுகிறேன். பல திறமைசாலிகள் இப்படித் தான் குடத்து விளக்காக இருக்கின்றனர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், கீதா.
   பல திறமைசாலிகள் இப்படித்தான் குடத்து விளக்காக் இருக்கின்றனர்.
   இப்போது இவர் பாட்டை எடுத்து போட்டவர் மூலம் பலரும் கேட்டு மகிழ்ந்து அவருக்கு நல்லது நடந்தாலும் நடக்கலாம்.
   இறைவன் நினைத்தால் அவர் திறமை உலகுக்கு தெரிய வரும்.
   மீண்டும் வ்னஹ்து காணொளியை கட்டு கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 31. மிகவும் அழகும், அர்த்தமும் நிறைந்த பதிவு. பேருந்து, விமானம் இவற்றைவிட ரயில் பயணம் சுவையானதுதான்.
  கீதா அக்காவிற்கு போலவே எனக்கும் இந்திய வரைபடம் தெரிந்தது. இன்னொன்றில் கரடியும், வாலி சுக்ரீவ யுத்தமும் தெரிந்தது.
  எல்லா ரயில் நிலையங்களுக்கும் தோற்றத்தில் ஒரு ஒற்றுமை இருக்கிறது இல்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்.
   பேருந்து,விமானம் இவற்றைவிட ரயில் பயணம் சுவையானதுதான்.
   இந்திய வரைபடம், கரடியும், வாலி சுக்ரீவ யுத்தமும் தெரிந்தது மகிழ்ச்சி. எத்தனைவிதமான தோற்றங்களை கொடுக்கிறது!

   ஆமாம், ரயில் நிலையங்கள் எல்லாம் தோற்றத்தில் ஒற்றுமை இருக்கிறதுதான்.
   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 32. ஆஹா எனக்கு மிகவும் பிடித்தமான பயணம் ரயில்பயணம்தான். ரயிலின் ஜன்னல் இருக்கை யாருக்குதான் பிடிக்காது. இம்முறை கொழும்பிலிருந்து பஸ்ஸில்தான் சென்றேன் அதுவும் பரவாயில்லை. ஆனா ரயில்பயணம் மாதிரி வராது. நான் யாருடனும் பேசவோ,புக் படிக்கவோ மாட்டேன். இயற்கை காட்சிகள்,யதார்த்த வாழ்வியலை பார்க்க பிடிக்கும். காலையில் பயணம் செய்வது சூப்பரா இருக்கும்.
  நீங்க போட்டிருக்கும் எல்லா படமும் மனதை கொள்ளை கொள்கிறது அக்கா. சூப்பரா இருக்கு. எதையும் குறிப்பிட்டு சொல்லமுடியாத வாறு எல்லாமே அழகு.காணொளிபாட்டு அருமை. அழகான பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பிரியசகி , வாழ்க வளமுடன்.
   உங்களுக்கும் ரயில் பயணம் பிடிக்குமா? ஜன்னல் பக்கம் இருக்கை அனைவருக்கும் பிடித்தது தான் இல்லையா?

   உங்கள் ஊரில் ரயிலில் வந்தால் இயற்கை காட்சி கொட்டி கிடக்கிறது பார்க்க கண்ணுக்கு குளுமை.

   யதார்த்த வாழ்வியலை பார்க்கலாம் தான் ரயில் ஜன்னல் வழியே! இயற்கை காட்சிகள் போனஸ் இல்லையா? எல்லா படங்களும் உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
   காணொளி பாட்டு கேட்டதும் மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்கு நன்றி அம்மு.

   நீக்கு
 33. மிக அருமை மா ...

  எல்லா படங்களும் ...

  மொட்டை மரமும் ...பூக்கள் நிறைந்த மரமும் கொள்ளை அழகு ...


  அது என்னமோ பசங்க கூட தேர்வுக்கு படித்து படித்து அந்த அந்தி மாலை படம் எல்லாம் map போல தான் தெரியுது மா...

  phone ல் படம் எடுக்க ஆரம்பித்த உடன் எல்லா பயணத்திலும் படம் எடுப்பது உண்டு...ஒவ்வொருமுறை யும் வித்தியாசமாக அமையும் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. anu rainy drop Premkumar, வாழ்க வளமுடன்.
   படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
   பசங்களுடன் படித்து படித்து மேப் போல்தான் தெரிகிறதா !
   அலைபேசியில் எடுக்க ஆரம்பித்தவுடன் உடனுக்கு உடன் இப்படித்தான் எடுக்க தோன்றுகிறது.அந்திவானம் அலைபேசியில் எடுத்த படம் தான்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 34. வந்துட்டேன்க்கா :) தோசை வாலி பூனை அழைத்து வந்தது ஹஹ்ஹா :)
  பயணத்தில் எடுத்த படங்களெல்லாம் அழகு .அந்த மரம் ஒட்டு வீடு இனிய சூழல் ..ரயிலில் டஹ்டக் தடக்னு செல்லும்போது இயற்கையை ரசித்திக்கொண்டு செல்வது ஆனந்தமே .அந்த ஜைனர் கோவிலை எதுக்கு பாதியிலே முடிக்காம விட்டாங்க ?
  அழகா இருக்கு முழுதும் முடித்திருந்தா இன்னமும் நல்ல இருந்திருக்கும் .அசோகா மரமும் அந்த ஆரஞ்சு மலர்கள் பூத்துக்குலுங்கும் மரமும் எங்கள் ஸ்கூலில் இருந்தன நிறைய .
  அந்த மேகப்படங்கள் எனக்கு POODLE வகை நாய்க்குட்டி வானை நோக்கி பார்க்கிறது போலிருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
   நீங்கள் வந்தது மகிழ்ச்சி.

   //ரயிலில் டஹ்டக் தடக்னு செல்லும்போது இயற்கையை ரசித்திக்கொண்டு செல்வது ஆனந்தமே//

   ஆமாம் ஏஞ்சல்.

   //அந்த ஜைனர் கோவிலை எதுக்கு பாதியிலே முடிக்காம விட்டாங்க ?//
   அதுதான் தெரியவில்லை ஏஞ்சல்.
   வயல் பகுதியில் கட்டியதற்கு ஏதாவது ஆட்சேபனை கிளம்பியதோ என்னவோ!

   முழுவ்டஹும் வேறு எங்காவது கட்டி இருக்கிறார்களா என்று விசாரிக்க வேண்டும்.கட்டிட அமைப்பு கலைநயத்தோடு இருக்கிறது.

   //அசோகா மரமும் அந்த ஆரஞ்சு மலர்கள் பூத்துக்குலுங்கும் மரமும் எங்கள் ஸ்கூலில் இருந்தன நிறைய .//

   முன்பு பள்ளி, கல்லூரி, அலுவலகம் வாசலில் இந்த மரங்களை அழகுக்கு வளர்ப்பார்கள் தான் ஏஞ்சல்.

   //மேகப்படங்கள் எனக்கு POODLE வகை நாய்க்குட்டி வானை நோக்கி பார்க்கிறது போலிருக்கு//

   நானும் நினைத்தேன், ஆனால் வாய் மட்டும் பற்வை வாய் போல் உள்ளது உடம்பு நாய்க்குட்டி போலதான் இருக்கிறது.
   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.


   நீக்கு
 35. படங்கள் எல்லாம் மிக அழகாக வந்திருக்கின்றன. ரயில் பயணம் எப்போதுமே சுகமான பயணம் தான்.

  மேகங்கள் பல டிசைன்கள்.

  உங்கள் பழைய பதிவுகளையும் வாசித்தேன். குல தெய்வக் கோயில், உலக தண்ணீர் தினம் எல்லாம்.

  துளசிதரன்

  (கோமதிக்கா நான் கொஞ்சம் பணிச்சுமையில் இருந்ததால் துளசியின் கருத்துகளை இடையில் நான் பதிய முடியாமல் போனது. இருவரிடமும் மன்னிப்புகேட்டுக் கொள்கிறேன். அவர் தங்கிலிஷில் அனுப்புவதை நான் இங்கு கருத்தாகப் பதிவதால்...இடையில் முடியாமல் போனது அதான். - கீதா)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.
   பழைய பதிவுகளையும் இந்த பதிவையும் படித்தமைக்கு நன்றி.
   உங்கள் வர்வௌக்கும் கருத்துக்கும் நன்றி.
   கீதா அதனால் பரவாயில்லை. மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம்.

   நீக்கு
 36. இரயில் பயணத்தில் சன்னல் அருகில் உட்கார்ந்து பயணம் செய்யும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. காசே கொடுக்காமல், அலட்டாமல், ஏகப்பட்ட ஊர்களைப் பார்ப்பதும், வயல் போன்ற செழுமையுள்ள பகுதிகளைப் பார்ப்பதும் சுலபமாகக் கிடைக்குமா?

  பதிலளிநீக்கு
 37. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
  இரயில் பயணத்தில் ஜன்னல் அருகில் உட்கார்ந்து இயற்கையை ரசிக்கும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லைதான்.
  தினதந்தி தொலைக்காட்சியில் கோடை பயணம் என்று ஞாயிறு அயல் நாடுகளை காட்டினார்கள். வீட்டில் இருந்த படி பல நாடுகளை கண்டு மகிழ நல்ல வாய்ப்புதான்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு