உலகச்சிட்டுக்குருவிகள் தினம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகச்சிட்டுக்குருவிகள் தினம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 மார்ச், 2019

சின்னஞ் சிறு குருவி


இன்று  உலக சிட்டுக்குருவிகள் தினம். நான் எடுத்த குருவிகள் படங்கள் இந்த பதிவில்.



ஹொரநாடு தங்க அன்னபூரணி கோவிலில் அடைக்கல சிட்டுக்குருவி.


இயற்கை அங்கு மிக அழகாய் இருக்கிறது. 
அங்கு கண்ட வாசகம் மிக அருமையாக இருந்தது.
"இயற்கையை விரும்பு இயற்கை என்றென்றும் உன்னை விரும்பும்”

வியாழன், 20 மார்ச், 2014

சிட்டுக்குருவியைத் தேடித் தேடி

சிட்டுக்குருவிகள் நான் இருக்கும் மயிலாடுதுறையில் இல்லை.   வேறு ஊர்களில் சிட்டுக்குருவிகளை பார்த்துவிட்டால் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளும்.என் மகன் ஊரில், மகள் ஊரில் எல்லாம் இருக்கிறது. அங்கு போகும் போது எல்லாம்சிட்டுக்குருவிகள் உல்லாசமாய் கீச் கீச்  என்று  ஒலி எழுப்பி செல்லும்போது ஒரு சிறுமியின் உற்சாகத்துடன் மகிழ்ந்து பார்ப்பேன்.

                                          
கூட்டின் மீது உட்கார்ந்து இருக்கும் பறவை சிட்டுக்குருவி இல்லை
                                           ஏங்கிரிபேர்டு (சிவப்பு பறவை)

நியூஜெர்சி போனபோது மகன் வீட்டுத்தோட்டத்தில் குருவிகள் வருவதைப்பார்த்து சிட்டுக்குருவிக்கு வீடு (கூடு) வாங்கி வைத்தார்கள் என் கணவர் . குருவி அதன் மேல் வந்து  வந்து உட்கார்ந்து பார்க்கும். ஆனால் உள்ளே போகாது. கூட்டிற்கு வாசல் சரியில்லை என்று நினைக்கிறேன். கூட்டின் வாசலில்  முதலில் வந்து உட்கார்ந்து அங்கும், இங்கும் பார்த்து பின் தான் உள்ளே போகும் குருவி . இவர்கள் வாங்கிய வீட்டில் அப்படி இல்லை   சிறு வட்டம் போல்மட்டும் வாசல் இருக்கிறது. அதில் அது உட்கார்ந்து பார்க்க வசதி இல்லாத காரணத்தால் வரவில்லை போலும்.


சிட்டுக்குருவிகள் தினம் அல்லவா இன்று ! நான் சேமித்து வைத்து இருக்கும் படங்கள் கிடங்கில் தேடித் தேடி சிட்டுக்குருவியை எடுத்துப் பகிர்ந்து இருக்கிறேன். இன்னும் இருக்கு குருவி படங்கள் - அடுத்த முறை.  இன்னும் தேடினால்  சிட்டுக்குருவிகள் தினம் முடிந்துவிடும்.


இரண்டு சிட்டுக்குருவிகள் பேசுவது என்ன?





பேசி முடித்து எங்கு போகிறது?
உறவுகளை அழைத்துவரப்போனதா?
உறவோடு உறவாடி மகிழ்வோம் உணவுகளை பகிர்ந்து உண்போம்.
சிட்டுக்குருவியில் இது ஒரு வகை
இறக்கை விரித்து பறக்க ஆயத்தம்
சிவப்பு கலர்  உள்ள சிட்டுக்குருவி
சாம்பல் நிறக்குருவி


’பின் பக்கம் ஒளிந்து இருக்கிறேன் பாருங்கள்.’
’இதோ வந்து விட்டேனே!’



நான் பகிர்ந்த சிட்டுக்குருவிகளைக் கண்டு மகிழ்ந்தீர்களா!
                                                             வாழ்க வளமுடன்!
                                                  ----------------------------------------------