இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம். நான் எடுத்த குருவிகள் படங்கள் இந்த பதிவில்.
ஹொரநாடு தங்க அன்னபூரணி கோவிலில் அடைக்கல சிட்டுக்குருவி.
இயற்கை அங்கு மிக அழகாய் இருக்கிறது.
அங்கு கண்ட வாசகம் மிக அருமையாக இருந்தது.
அங்கு கண்ட வாசகம் மிக அருமையாக இருந்தது.
"இயற்கையை விரும்பு இயற்கை என்றென்றும் உன்னை விரும்பும்”
ஏதாவது இருக்கா?
யாரு ? என்று உற்று பார்க்குது
ஊஞ்சல் ஆடும் குருவி
மேலே உள்ள படங்கள் எல்லாம் அன்னபூரணி கோவிலில் மகிழ்ச்சியாக சுற்றித்திரிந்த குருவிகள் படம்.
புல் புல் பறவையும் சிட்டுக்குருவியும்.
இரண்டும் முதலில் எங்கள் எதிர்வீட்டில் உள்ளவர் வீட்டில், அப்புறம் அதற்கு அடுத்த வீட்டில் என்று சேர்ந்து பறந்து உணவை எடுத்துக் கொண்டன.
நீ முதலில் சாப்பிடு, அப்புறம் நான் என்று ஒன்றுக்கு ஒன்று விட்டுக் கொடுத்து சண்டையிடாமல் உணவு எடுத்துக் கொண்ட காட்சி அற்புதம்.
மூன்று குருவிகள் அமர்ந்து இருந்தது கொடி கம்பியில் , நான் படம் எடுக்க போகும் போது ஒன்று பறந்து விட்டது.
இன்னும் தட்டில் வைக்கவில்லையே!
நான் சாப்பிடுவதை என்ன பார்வை?
தாராபுரத்தில் மரத்தில் இருந்த வித்தியாசமானக் குருவி
சிட்டுக்குருவியின் வரவை எதிர்ப்பார்த்து.
பானை வீடுகளில் கிளிகள் அமைத்துக் கொள்ளும் கூட்டை, கிளி வரும் என்று சொல்லி வந்தேன். அவைகளுக்கு மர பொந்தில் தான் வீடு அமைக்க பிடிக்கும். வீட்டில் காதல் கிளிகளை வளர்ப்பவர்கள் இது போன்ற பானைகளை வைத்து இருப்பார்கள்.
சிட்டுக்குருவிகளுக்கு வீடுகளில் இப்படி கிடைக்கும் இடத்தில் வீடு அமைக்கத்தான் பிடிக்கிறது.
குருவிகள் நம்மை அடைக்கலாமாக நம்பி வாழும் பறவை அதனால் நம் வீடுகளில் தன் கூட்டை அமைக்க விரும்புகிறது.
சின்னஞ் சிறு குருவி போலே- நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப்பறவைகளை கண்டு- நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா
- பாரதியார்
குருவிகள் என்னை மகிழ்ச்சி படுத்திக் கொண்டு இருக்கிறது. வயதானால் சின்னக்குழந்தை தானே! நானும் பறவைகளை கண்டு மகிழ்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறேன்.
கோடை காலம் வந்து விட்டது, நாம் மொட்டை மாடியில், தோட்டத்தில், பால்கனியில் சிறிது தணணீர் , மற்றும் உணவு வைப்போம். தானியம் வைக்க சொல்கிறார்கள், ஆனால் சமைத்த உணவை சாப்பிட்டு பழகி விட்டது, அதனால், கம்பு, கேழ்வரகு , சோளம் போட்டால் சாப்பிட மாட்டேன் என்கிறது. அதனால் கைபிடி சாதம் வைத்தால் கூட போதும்.
வாழ்க வளமுடன்.
அழகான படங்களும், விரிவான விளக்கங்களும் அருமை சகோ.
பதிலளிநீக்குஅனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க!
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
நீக்குநீங்கள் சொல்வது போல அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் எல்லாம் அட்டகாசம் கோமதிக்கா.
பதிலளிநீக்குஊஞ்சலாடும் குருவி, புல் புல் எல்லாமே அழகு
குருவிகள் எல்லாமே அழகுதானே!!
கீதா
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
நீக்குபறவைகள் அனைத்துக்கும் ஊஞ்சல் ஆடுவது பிடித்த விஷயம்.
புல் புல் தென்னைமரக்கிளையில் ஊஞ்சலாடுவது எடுத்து வைத்து இருக்கிறேன்.
குருவிகள் ஊஞ்சல் ஆடும் படங்கள் நிறைய இருக்கிறது, முன்பு பகிர்ந்து விட்டேன் அவைகளை. குருவிகள் எல்லாம் அழகுதான் கீதா.
சிட்டுக் குருவிகள் என்றில்லை நம்மைச் சுற்றியுள்ள எல்லா உயிர்களுமே இன்பமாக வாழ்ந்தால், நாம் இயற்கையை நேசிக்கக் கற்றுக் கொண்டுவிட்டால் கண்டிப்பாக மனித நேயம் இன்னும் செழித்தோங்கும். இவ்வுலகை ரசிக்கக் கற்றுக் கொண்டுவிட்டாலே போதும்...
பதிலளிநீக்குஅண்ணா அவர்களின் தம்பி வீட்டில் குருவிக்கான பானை வீடு அழகாக இருக்கிறது.
என்றாலும் நீங்கள் சொல்லியிருப்பது போல குருவிகள் வீட்டு உத்தரம், சின்னப் பொந்துகள் இதில் எல்லாம் தான் கட்டுகின்றன. பஞ்சு குச்சி என்று கொண்டு வந்து கட்டும். அழகாக இருக்கும்.
கீதா
ஆமாம் கீதா, எல்லா உயிர்களுமே இன்பமாய் வாழ்தல் அவசியம்.
நீக்குஅவைகள் நன்றாக இருந்தால் நாம் நன்றாக இருப்போம். பறவைகள், விதைகள், கொட்டைகள், பழங்கள் என்று சாப்பிட்டு அதன் எச்சங்களை விட்டு செல்கிறது அவற்றிலிருந்து இயற்கையாக மரம், செடி கொடிகள் வளருது. காடுகள் உண்டாக அவை பயன்படுது. நாம் காடுகளை அழிக்கிறோம், அவை வாழும் மரங்கள் அழிந்து போனால் இயற்கை பாதிப்பு அடைகிறது. மனிதன் அனைத்து உயிர்களையும் அன்பால் இணைத்து வாழ்தலே இயற்கை அறிவு பெற்று விட்டான் என்று அர்த்தம் என்று படித்து இருக்கிறோம்.
தேங்காய் நார், பஞ்சுகள், சிறிய நார், வைக்கோல் இவற்றால் கூடு கட்டுது, இப்போது பேப்பர் கட்டிங் கூட கொண்டு வ்னஹ்து வைக்கிறது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.
தாராபுரத்தில் மரத்தின் மீதான வித்தியாசமான குருவி...அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குஇன்னும் சாப்பாடு வைக்கவில்லையெ என்று பார்க்கும் குருவி செம க்யூட். ஒரே ஒரு முறை சிட்டுக் குருவியைக் கைகளில் எடுத்துப் பார்த்திருக்கிறேன். செம மெத்து மெத்துனு இருக்கும். அத்தனை சாஃப்டா இருக்கும்...கால்கள் மட்டும் நல்ல ஷார்ப்பாக இருக்கும். பின்னே உட்காரும் இடத்தில் பிடித்துக்கொள்ள க்ரிப் வேண்டுமே..
அழகான படங்கள் அதற்கு உங்களின் அழகான வாசகங்கள் சூப்பர் கோமதிக்கா..
கீதா
தாராபுரத்தில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வரும் போது சர் சர் என்று வி வடிவில் வேகமாய் பறந்ததை பார்த்தோம், என்ன வென்றே கண்டு பிடிக்க முடியவில்லை ஒரு நிமிடம் மரக்கிளையில் அமர்ந்தது அப்போது எடுத்தது காமிராவில் ஜூம் செய்து.
நீக்குஉடனே பறந்து விடுகிறது கூட்டமாய் பறந்து கொண்டு இருந்தது. சின்னக்குருவிதான்.
பேர் தெரியவில்லை.
நானும் குருவியை கைகளில் எடுத்து இருக்கிறேன். ஒவ்வொன்றுக்கும் அதன் வாழ்க்கை முறைக்கு ஏற்ப உடல் அமைப்பை கொடுத்து இருக்கிறான் இறைவன்.
படங்களை உற்சாகமாய் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
உங்கள் கை வண்ணத்தில் புகைப்படங்கள் அருமை ஹொரநாடுஅன்னபூர்ணேசுவரி கோவிலுக்குச் சென்றிருக்கிறோம்
பதிலளிநீக்குவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் ஊர் பக்கம் உள்ள கோவில். இயற்கை எங்கும் ஆட்சி செய்யும் அழகான ஊர்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அருமையான பதிவு. அழகிய படங்கள். பகையில்லாமல் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து வாழும் அதன் பாங்கு மனிதன் கற்றுக்கொள்ள வேண்டியது.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
நீக்குஆமாம், மனிதன் இவைகளிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
முன்பு புறாவும், குருவியும் ஒன்றாக ஒரே தட்டில் உணவு உண்பதை பகிர்ந்தது நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்.
இன்னும் மொட்டை மாடியில் நான் தண்ணீர் வைக்கவில்லை. அருகாமை மரங்களில் காக்கைகள் மட்டுமே இருக்கின்றன. தண்ணீர் வைக்க வேண்டும். தண்ணீர் வைத்ததும் அணில்களும் வந்து குடித்துச் செல்லும்.
பதிலளிநீக்குநான் தினமும் வைக்கிறேன், எல்லா பறவைகளும், குளித்தும், குடித்தும் செல்கிறது.
நீக்குபடம் எடுக்க வசதி இல்லை. நான் கதவை திறந்தால் பறந்து விடுகிறது.
பழைய வீட்டில் உள்ளது போல் கதவு கிட்ட ஜன்னல் இருந்தால் அவைகளை தொந்திரவு செய்யாமல் உண்ணும் அழகை, குளிக்கும் அழகை காணலாம்.
பறவைகள், அணில்கள், எறும்புகள் எல்லாம் குடிப்பதை பார்க்கலாம். பறவைகள் குளிக்கும் போது சிதறும் தண்ணீரை எறும்புகள் குடிக்கும்.
எறும்பு தண்ணீர் குடிக்கிறதா? குடிக்காமல் இருக்காது என்று தெரிந்தாலும் இதுவரை இந்தக் காட்சி என் கண்ணில் பட்டதே இல்லை!
நீக்குவெயில் காலம் இப்போது நீங்கள் கவனித்துப் பார்த்தால் எறும்பு தண்ணீர் குடிக்கும் காட்சி பார்க்கலாம் ஸ்ரீராம்.
நீக்குபறவைகளுக்கு வைக்கும் உணவு சிதறிகிடப்பதை உண்ண வரும் எறும்புகள் , அப்படியே தண்ணீர் சிதறி கிடப்பதையும் குடிக்கும்.
வெயில் காலத்தில், பானை அடியில், அம்மி அடியில் குளுமைக்கு உடகார்ந்து கொள்ளும்.
ஒரு செம்பில் தண்ணீர் வைத்து இருந்தால் எல்லாம் தண்ணீருக்குள் விழுந்து கிடக்கும்.
சிதறி கிடக்கும் தண்ணீரை குடித்தால் அதற்கு பாதுகாப்பு. செம்புக்குள் போய் குடிக்க போனால் எல்லாம் இறந்து மிதக்கும்.
சிட்டுக்குருவிகள் ஒரு இடத்தில் நிலைத்து இருக்காமல் சட்சட்டென திரும்பி, நகர்ந்து இடம் மாறிக்கொண்டே இருக்கும். படம் எடுப்பதும் சிரமம் இல்லையா?
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம், சட் சட்டெனதான் பறக்கும், நிற்கும் போது உடனே எடுக்க தயாராக இருக்க வேண்டும்.
நீக்குஇயற்கையை விரும்பு ; அது என்றென்றும் உன்னை விரும்பும் (ப்ளஸ்) காக்கும்!
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம் , நீங்கள் சொல்வது உண்மைதான். இயற்கையை விரும்பி அதை காத்தால் அது நம்மை காக்கும்.
நீக்குவீட்டில் தொட்டியில் கீழா நெல்லி அதுவாய் வளர்ந்து கொண்டு இருக்கிறது. அதை ஒவ்வொரு சமயம் இநத பறவைகள் வந்து கொத்தி சாப்பிடுகிறது.
இன்சிலின் செடி என்று என் கணவரின் தம்பி வீட்டிலிருந்து கொண்டு வந்தேன் அதை வளர விட மாட்டேன் என்கிறது குருத்தாக இருக்கும் போதே தூக்கி சென்று விடுகிறது.
புள்ளிசில்லை குருவி, கூடு கட்ட துளிர் கொம்பை கொண்டு சென்று விடுகிறது.
கூடு கட்டவும், வைத்தியத்திற்கும் அவைகளுக்கும் வேண்டி இருக்கிறது.
வேப்பபழம் பறவைகளுக்கு வேண்டி இருக்கு.
நாய்களுக்கு வயிறு பிரச்சனை என்றால் அருகபுல் சாப்பிட்டு வாந்தி எடுத்து சரி செய்து விடுகிறது. அது போல் மனிதனுக்கும், மற்ற ஜீவராசிகளுக்கும் இயற்கை அவசியம். அதை காப்பது அவசியம்.
இயற்கையின் சுழற்சி முறை கெடுக்காமல் இருக்கவேண்டும்
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
சிட்டுக்குருவி படங்கள் அருமை.
பதிலளிநீக்குஇப்படி பானை வைத்தால் அது நம்பி வருமா?
சிறிய வயதில், வீட்டுக்குள்ளெல்லாம் ஓடி வரும் சிட்டுக்குருவி ஞாபகம் வந்தது. வீடு நெடுக இருக்கும். உள்ளெல்லாம் பறந்துபோகும்.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
நீக்கு// இப்படி பானை வைத்தால் அது நம்பி வருமா?//
வருவது கஷ்டம்தான். இங்கு நிறைய வீட்டில் தூக்காணாங்குருவி கூடு செய்ற்கையாக விற்பது வாங்கி தொங்க விட்டு இருக்கிறார்கள் அவர்கள் வீட்டுக்கு வரவில்லை குருவிகள்.
அட்டைபெட்டி வைத்தோம் வைக்கோல் எல்லாம் போட்டு கூடு வைத்தோம் வரவில்லை.
குருவிகள் அவைகளே கட்டி தான் குடி இருக்கும் எனக்கு தெரியுது.
என் சிறு வயதில் நடு வீட்டில் எங்கள் வீட்டில் டியூப் லைட் இடுக்கில் வைக்கோல், பஞ்சு கொண்டு வந்து வைத்து கூடு அமைத்து இருந்தது. மின் விசிறியை போட அப்பா அனுமதிக்க மாட்டார்கள் குருவி குறுக்கே பறந்து போவதால் அடி பட்டு விடுமோ என்று.
மர அலமாரி கண்ணாடியில் வந்து தன் முகத்தைப்பார்த்தே கொத்திக் கொண்டு இருக்கிறதே! அதன் அலகு வலிக்குமே ! என்று என் அம்மா மர அலமாரிக்கு திரைசிலை தைத்துப் போட்டார்கள்.
நெல்லையில் நிறைய ஊர்க்குருவி இருக்கும். எட்டையபுரத்தில் குருவிகள் நிறைய இருந்ததால் தான் நம் பாரதியார் தனக்கு கூட இல்லாமல் அத்தனை அரிசியை அதற்கு போட்டு அதன் உண்ணும் அழகைப் பார்த்தார்.
இப்போதும் எங்கள் வீட்டில் ஜன்னலில் வந்து உட்கார்ந்து கொள்கிறது, வீட்டுக்குள் ஒரு முறை வந்து விட்டு போக வழி தெரியாமல் முட்டி மோதி எப்படியோ வழி கண்டு பிடித்து போனது.
உங்கள் கருத்துக்கும், மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.
சிட்டுக்குருவிகள் தினத்தில் சிறப்பான படங்களுடன் பகிர்வு. அனைத்தும் ரசித்தேன்.
பதிலளிநீக்குஇன்றைக்கு இங்கே ஒரு பூங்காவில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அலுவலகம் உண்டென்பதால் போக முடியவில்லை.
வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
நீக்குசிட்டுக்குருவியை காப்பாற்ற சொல்லி பூங்காவில் நிகழ்ச்சியா?
போன வருட பதிவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குருவிக்கு வெயில் காலத்தில் எப்படி, உணவு, தண்ணீர் கொடுக்கலாம் என்று பேசியதையும் அவர்கள் கொடுத்த மண் பானைகளையும் பற்றி போட்டு இருந்தேன்.
எப்படியோ சிட்டுக்குருவி தினத்தில் அவற்றைப்பற்றி சிந்திக்கிறார்கள் அதுவே மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.
நீக்குசிட்டுக்குருவிகளை பார்த்துக்கிட்டே இருக்கலாம் கள்ளம் கபடற்ற குழந்தைங்க .அவற்றின் கண்கள் பேசுறாபோலிருக்கும் .இங்கே தோட்டத்துக்கு நிறையபேர் வராங்க அவற்றுக்கான உணவு வாங்கி வச்சிருக்கேன் அணிலும் அவற்றுடன் சாப்பிடும் சேர்ந்து .
பதிலளிநீக்குநீங்க எடுத்த படங்கள் எல்லாம் அழகு .எனக்கு கிட்ட போய் எடுக்க வாய்ப்பு அமையலை .
அந்த பானை செட்டிங் மரத்தில் இருந்தா வரும் .ஆனா குருவிகள் நீங்க சொன்ன மாதிரி நம்மை அண்டி கூரை ஓரத்தையே தேடி கூடு கட்டும் .
வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
நீக்குதினம் குருவிகளை பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.
நீங்கள் சொல்வது போல் கள்ளம் கபடமற்ற குழந்தைகள் தான்.
அங்கு நிறைய வருவார்களே! குருவிகள். எங்கள் வீட்டு பால்கனியிலிருந்து எதிர் வீட்டு பால்கனி அதனால் எடுக்க முடிகிறது.
பானை கூடு மரத்திலும் வைத்து பார்த்தார்கள் குருவி வரவில்லை.
மகன் வீட்டிலும் கூறை இடுக்கில் கூடு கட்டி முட்டையிட்டது.
உங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஇன்று சிட்டுக்குருவிகள் தினத்தன்று சிறப்பான பதிவாக தந்துள்ளீர்கள். பிற உயிர்களிடத்தில் அன்பு கண்டிப்பாக வேண்டும்.பறவைகள் தம் விருப்பபடி பாடிப் பறந்து வாழ்ந்து கொண்டிருப்பதை ரசிக்கும் ஒரு மனநிலை அனைவருக்கும் எளிதில் வந்து விடாது. அத்தகைய ரசிப்பு நிலை தங்களிடத்தில் உள்ளது. எறும்பையும் விடாது ரசித்துள்ளீர்கள். வாழ்த்துகளுடன் பாராட்டுக்கள். தங்கள் பதிவையும் படங்களையும் மிகவும் ரசித்தேன். படங்கள் ஒவ்வொன்றும் மிக அழகாய் இருக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
நீக்குபிற உயிர்களிடத்தில் அன்பு கண்டிப்பாக வேண்டும் நீங்கள் சொல்வது போல்.
நம்மால் முடிந்தவரை அன்பு செய்து வாழ்வோம்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் , பாராட்டுக்களுக்கும் நன்றி கமலா.
குருவி விளக்கில் அமர்ந்திருக்கும் படம் தான் அழகோ அழகு....
பதிலளிநீக்குஅப்போதெல்லாம் குருவிகள் வீட்டுக்குள் புகுந்தால் விரட்டமாட்டார்கள்...
அதிலும் பிள்ளையில்லா வீட்டில் குருவிகள் நுழைந்தால் நல்ல சகுனம் என்பார்கள்...
அதைத்தான் இந்தப் படம் உணர்த்துவதாக நினைக்கிறேன்...
என் கூட்டில் நீ விளக்கேற்று..
உன் வீட்டில் நான் ஒளியேற்றுகின்றேன்...
என்று சொல்லாமல் சொல்கிறது குருவி...
குருவி வடிவாக எந்த மகான் இருக்கிறாரோ?..
மான் வடிவாக எந்த யோகி இருக்கிறாரோ!...
வாழ்க நலம்...
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.
நீக்குஅப்போது உள்ள வீடு தாழ்வாரம், முற்றம், வானவெளி தெரிவது போல் வீடு குருவிகளுக்கு வசதியாக அடையா வாசல். இப்போது மாதிரியா? எப்போதும் மூடிய கதவு!
வீட்டில் எல்லா இடங்களுக்கும் கீச் கீச் ஒலி எழுப்பி பறந்து திரியும்.
குருவி சொல்லாமல் சொல்லும் மொழி அழகு.
மகான், யோகியை தேடும் அன்பு நெஞ்சம் வாழ்க!
வாழ்த்துக்கள்.
எல்லாப்படங்களுமே அழகா எடுத்திருக்கிறீங்க.நான் வழமையாக உணவு வைப்பேன். நேற்று இவர்கள் அதிகமா வந்திருந்தார்கள். இப்ப ஸ்பிரிங் ஆரம்பமெல்லோ.அவர்களுக்கு குதூகலம். வீட்டில் ஓரே ஆரவாரம். குச்சிகள்,தும்பு, பொறுக்குவது என.. அதை பார்த்துக்கொண்டிருக்கவே மனதுக்கு மகிழ்ச்சியா இருக்கும். இதில் போட்டோ எடுக்க வருவதில்லை. அவைகளுக்கு சின்ன அசைவும் தெரியும். அருமையான வசனம்.
பதிலளிநீக்குவணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்.
நீக்கு//ஸ்பிரிங் ஆரம்பமெல்லோ.அவர்களுக்கு குதூகலம். வீட்டில் ஓரே ஆரவாரம்.//
இப்போது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்க கூடிய காலம். பார்த்து மகிழுங்கள் அம்மு.
முடிந்த போது படம் எடுத்து போடுங்கள் பதிவு.
நாங்களும் மகிழ்வோம்.
உங்கள் உற்சாகமான பின்னூட்டத்திற்கு நன்றி.
பார்த்துக் கொண்டே இருந்தேன்... மனதில் அவ்வளவு உற்சாகம் பிறக்கிறது அம்மா...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
நீக்குஅவர்களை பார்த்தால் மனதில் உற்சாகம் கிடைக்கும் .
உற்சாகமான் பின்னூட்டத்திற்கு நன்றி.
வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
ஓ கோமதி அக்கா.. மார்ச் 20 ஆ சி.கு.தினம்.. நான் 18 என நினைச்சு, போனதடவை கோமதி அக்காவும் துரை அண்ணனும் போஸ்ட் போட்டார்கள் இம்முறை மறந்துவிட்டார்களே என நினைச்சேன்ன்.. பார்த்தால் இன்று போட்டிருக்கிறீங்க.
பதிலளிநீக்குஅது என்னமோ தெரியல்ல கொஞ்ச நாட்களாக புளொக் பக்கம் வரவே அலுப்பாக இருந்துது.. தவிர்க்க முடியாமல் போஸ் பண்ணியே வந்து போனேன்.. அதனால உங்கள் போஸ்ட்டும் விடுபட்டு விட்டது லேட்டானமைக்கு மன்னிக்கவும்.
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
நீக்குநிறைய படங்கள் இருக்கிறது, தேட நேரமில்லை கிடைத்தை வைத்து போஸ்ட் போட்டேன்.
கதை புத்தகங்கள் மனதை ஆக்கிரமித்துள்ளது உங்களை.
சில நேரங்கள் அப்படித்தான் அலுப்பு ஏற்படும்.
மன்னிப்பு எல்லாம் வேண்டாம் நேரம் கிடைக்கும் போது படிக்கத்தான் பதிவுகள்.
கோயிலும் அங்கு சிட்டுகளின் உலாவுதலும் மிக அழகு. புல்புல் தான் சாதம் சாப்பிடுகிறார்ர் சிட்டார்ர்.. முதுகைக் காட்டுறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.
பதிலளிநீக்குபுளியமரமோ வாகைமரமோ தெரியல்ல.. இவ்ளோ உயரத்தில் கிளிகள்தான் இருப்பார்கள்.. இப்போ சிட்டுக்கள் இருக்கிறார்களே.
அதிரா, புல் புல் சாதம் சாப்பிடுது முதல் படத்தில், அடுத்த படத்தில் குருவி சாப்பிடுது பார்க்கவில்லையா?
நீக்குபுளியமரம் சிட்டுக்கள் இருக்கும் மரம்.
குருவிப்பானை அழகு. இங்கு குருவிகளுக்கு என விதம் வித மான டிசைன்களின் வாங்கி வைக்கலாம். முன்பு வச்சிருந்தோம்.. இங்கு அதிகம் மழை என்பதால்.. மரங்களில்தான் அவர்கள் தங்குவார்கள் போலும்.. கூட்டில் வர பயப்படுவார்கள். இப்போ டெய்சிப்பிள்ளையும் விடமாட்டா.
பதிலளிநீக்குநாங்கள் மகன் வீட்டுக்கு போன போது மரத்தில் அழகான பறவை கூடு வாங்கி கொடுத்தோம். நாங்கள் அங்கு இருக்கும் வரை மேலே வந்து உட்காருவார் குருவியார். கூட்டுக்குள் போகவில்லை. அப்புறம் கூட்டுக்குள் முட்டையிட்டு மகிழ்ச்சியாக பறந்து போனார். என்று மகன் சொன்னான்.
நீக்கு//ருவிகள் என்னை மகிழ்ச்சி படுத்திக் கொண்டு இருக்கிறது. வயதானால் சின்னக்குழந்தை தானே! நானும் பறவைகளை கண்டு மகிழ்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறேன்.//
பதிலளிநீக்குஎன்னாதூஊஊ கோமதி அக்காவுக்கு வயசாகிட்டுதோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. பார்த்தால் அப்படித்தெரியவில்லை, நீங்களே வயசாகிவிட்டது என எண்ணக்கூடாது.. இன்னும் அஞ்சுவுக்கே வயசாகல்ல:)) ஹா ஹா ஹா ஹையோ.. மீ ரன்னிங்:))
அதிரா, அக்காவிற்கு வயதானதை ஒத்துக் கொள்ள மாட்டீர்களே!
நீக்குஅஞ்சு தேவதை அவருக்கு என்றும் வயதாகாது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.
எல்லாக்குருவிகளும் அழகு தான்! சிட்டுக்குருவி மனிதனோடு இணைந்து வாழவே விரும்பும். நம் வீடுகள் எல்லாம் மாற்றிக் கட்டப்பட்டதும் குருவிகள் குடியிருப்புக் குறையக் காரணம். இன்னமும் பழமையான வீடுகளில் சிட்டுக்குருவிகள் குடி இருக்கின்றன.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஆமாம், நீங்கள் சொல்வது சரிதான்.
குருவிகள் மனிதனோடு இணைந்து வாழ விரும்பும் பறவைதான்.
அதற்கு அடைக்கலகுருவி என்ற பெயர் உண்டு.
உங்கள் கருத்துக்கு நன்றி.
மிக அழகிய படங்கள் மா...
பதிலளிநீக்குவணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.