ஞாயிறு, 10 மார்ச், 2019

கீழக்குயில்குடி அய்யனார் கோவில்

புத்தகவெளியீடு   இதற்கு முன்பு போட்ட கீழ்க்குயில்குடி  பதிவுகள் படிக்க வில்லை என்றால் படிக்கலாம்.

அடுத்த பதிவில்  இந்த சமணர் மலை என்று அழைக்கப்படும்  கீழ்க் குயில்குடியில்  உள்ள அய்யனார் கோவில் . என்று சொல்லி இருந்தேன்.

கீழக்குயில்குடி அய்யனார் கோவில்- கோவில் பின்புறம் சமணர் மலை, முன்புறம் தாமரைத் தடாகம்


கோவிலுக்கு இரண்டு வாசல் - இது முதல் வாசல்
பூதகணம் போல் துவாரபாலகர்கள்
இரண்டாவது வாசல் - வீரபத்திரர் போல் துவாரபாலகர்கள் - உள் புறம் விளக்குத்தூண்  , அதைத் தாண்டி அழகிய விமானத்துடன் சிறு மண்டபம்.
அப்புறம் இருபுறமும் படிகள் உள்ள மண்டபத்தை அடுத்து கருவறையில் பூர்ணா, புஷ்கலையுடன் அய்யனார்

வெளிப்பக்கம் இருந்து எடுத்த  குதிரைகள் மேல் வரும்கருப்பசாமிகள்

முதல் வாசல் பக்கம்   பொட்டுக் கழுவத்தேவருக்குக் கோவில்






சைவ, வைணவக்  கதைகளைக் கூறும் சிற்பங்கள் அழகாய் உள்ள கோபுரம்
முதல் கோபுரத்தில் தச அவதாரக் காட்சிகள்

வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல் வண்ணன் பண்டொரு நாள் கடல் வயிறு கலக்கினையே!
- சிலப்பதிகாரப் பாடல்

இந்த இனிமையான பாடலைக் கேட்டு இருப்பீர்கள்.  இருந்தாலும் மீண்டும் கேட்கலாம் தானே . இந்தக் கோவில்  சிற்பங்களைப் பாடலைக் கேட்டுக் கொண்டே ரசிக்கலாம். 
பாற்கடல் கடைந்த காட்சி
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல் வண்ணன் பண்டொரு நாள் கடல் வயிறு கலக்கினையே!

மோகினி வந்தாள் அமுத கலசத்துடன்

நரசிம்மர்,உலகளந்த பெருமாள்., பூவராகமூர்த்தி

அமரர் தொழும் திருமால் உன் செங்கமல பாதத்தின்
இரண்டடியால் இருள் முடிய இப்பூவுலகை அளந்தாயே1

பட்டாபிராமன்

ஸ்ரீராமர் முடிசூட்டலை விவரிக்கும் கம்பராமாயணப்  பாடல்:-

அரியனை அனுமன் தாங்க,அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க,வெண்ணையூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மெளலி
- கம்பர்

லட்சுமி நரசிம்மர், ராமபட்டாபிஷேகக் காட்சி. -மதிலுக்கு வெளியே இருந்து எடுத்த படம். உள் புறம் உள்ள குதிரையின் காது (பச்சைக்கலரில் தெரிவது)

கருப்பண்ணசாமி கோபுரத்தில் மேல் புறம் கருப்பண்ணசாமி,  இருபுறமும் கருடாழ்வார்கள் இருபுறமும், இருபுறமும் கருப்பர்கள், அனுமன், நடுவில் பள்ளி கொண்ட பெருமாள்


தசாவதாரக்காட்சி

கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தவர்
கோவர்த்தனகிரிதாரி
கரியவனை கண்ணனைக் காணாத கண்ணும் கண்ணோ?
மெய்மறந்து காணாத கண்ணும் கண்ணோ?
அய்யனார்  இருக்கும் மண்டப சுவரில் கஜேந்திர மோட்ச காட்சி ஓவியம்




இன்னும் வரும் ,அய்யனார் கோவில் சிற்பங்கள்.

வாழ்க வளமுடன்!
===================================================

51 கருத்துகள்:

  1. அன்பு கோமதி, மனம் நிறைந்தது. MS AMMA வின் பாடலோடு
    அத்தனை படங்களைப் பார்க்கும் போது தேவலோகமே
    சென்ற ஆனந்தம்.
    எத்தனை விவரமான படங்கள். நீங்கள் எழுதி இருக்கும் விவரங்கள்.
    அப்பப்பா. அற்புதமான பதிவு. அம்மா நாரயணா என்னும் போது கண்ணில் நீர்.
    நீங்கள் இன்னும் நிறைய தமிழ்க் கோவில்களுக்குப் போய் எழுதவேண்டும் . இது சரித்திரம் அம்மா.
    மனம் நிறை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
      உங்களுக்கு பிடிக்கும் இந்த பாடல் என்று தெரியும் அக்கா.
      உங்கள் உற்சாகமான பின்னூட்டம் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
      நிறைய கோவில் போனது எழுதவே இல்லை அக்கா.
      எழுதுகிறேன் முடிந்த போது எல்லாம்.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  2. ஐயனாரு நெறைஞ்ச வாழ்வு கொடுக்கணும்..
    ஆயுசுக்கும் நெனச்சதெல்லாம் நடக்கணும்..

    - என்ற பாடல் நினைவுக்கு வருகின்றது...

    கண்கொள்ளாக் காட்சியாக ஐயனார் திருக்கோயில்...
    அருமையான படங்களுடன் அருமையான பதிவு...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வாராஜூ , வாழ்க வளமுடன்.
      எனக்கும் நீங்கள் சொன்னபாட்டு பிடிக்கும்.
      வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
    2. எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.

      நீக்கு
    3. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      முன்பு நாம் இருவரும் இந்த பாட்டை பற்றி பேசி இருக்கிறோம்,இன்னொரு அய்யனார் பகிர்வில்

      நீக்கு
  3. அருமையான படங்கள் சகோ
    விளக்கங்களும் வழக்கம் போல் நன்றி.
    அய்யனார் கோவில் படங்களும் வரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      அடுத்த பதிவு விரைவில் போடுகிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. முஸ்லீம் படையெடுப்பை எதிர்த்து தன்னுயிரைத் துறந்தோர் ஆயிரக் கணக்கானோர்... அவர்களுள் வீரத்தேவன் பட்டவர் சாமியைப் போன்றோர் ஐயனார் கோயில்களில் சிறப்பிக்கப்படுவது நினைவில் கொள்ளத்தக்கது...

    முத்துக் கருப்பன் என்ற மாவீரன் - முஸ்லீம் வருகையை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோபுரத்திலிருந்து குதித்து உயிர்த் தியாகம் செய்ததாக வரலாறு உண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், படையெடுப்பை எதிர்த்து தன்னுயிரை துறந்தோர் ஆயிரக்கணக்கானோர்.
      தியாகம் , வீரம் நிறைந்த முத்துக் கருப்பன் போல் நிறைய வரலாற்றில் இடம் பெற்றும், இடபெறாமலும் தங்கள் இன்னுயிரை இழந்து இருக்கிறார்கள்.
      மீண்டும் வந்து கருத்து சொன்னத்ற்கு நன்றி.

      நீக்கு
  5. சமணர் மலையுடன் கூடிய படம் மிகச் சிறப்பா வந்திருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. இடுகையைப் படித்ததும் மிகவும் நெகிழ்ந்தேன்.

    எத்தனை எத்தனை வீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து நம் சமயத்தைக் காப்பதற்காக, கலாச்சாரத்தைக் காப்பாற்றப் போராடியிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எத்தனை எத்தனை வீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து நம் சமயத்தைக் காப்பதற்காக, கலாச்சாரத்தைக் காப்பாற்றப் போராடியிருக்கிறார்கள்.//

      ஆமாம் , போராட்டங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
      இப்போதும் எதிர்மறையான செயலுக்கு உடன்படாத நல்ல அதிகாரிகள் தங்கள் இன்னுயிரை இழந்து கொண்டு, மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள்.

      தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. ஆஆ ஓம் கோமதி அக்கா, பின்னர் படம் போடுவேன் எனச் சொன்னீங்க சமணர் கோயில்... என்ன சூப்பராக இருக்கு... ஆனா அதிலிருக்கும் சிலைகளெல்லாம் கருப்பன் சாமியோ?
    சமணர்களின் மெயின் தெய்வம் அவரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.

      சமணர்களுக்கு பாத வழிபாடுதான்.
      அவர்கள் நல்லபாதையில் தங்களை வழி நடத்திய சமணம் போற்றும் தீர்த்தங்கரர்களை தான் வழிபட்டார்கள்.

      ஊருக்கு வெளியேதான் காவல்தெய்வம் அய்யனார் இருப்பார்.
      சமணர்களும் காடு மலைகளில் தான் வாழ்ந்தார்கள்.

      நீக்கு
  8. கோபுரம் மிக அழகு...
    எம் எஸ் சுப்புலக்ஸ்மி அம்மா பாடல் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அதிரா கோவில் சிற்பங்கள் எல்லாம் மிக அழகாய் வடிக்கபட்டது.
      எனக்கு பிடித்த பாட்டு, கோவில் சிற்பங்களுக்கு பொருத்தமாய் இருந்ததால் இந்த பாட்டு.

      நீக்கு
  9. வாசுகிப் பாம்பைக் கயிறாக்கிய கதையைக் கேள்விப்பட்டிருக்கிறேன் இப்போ சிற்பமாகப் பார்க்க நன்றாக இருக்கு. எந்தாப் பெரிய பாம்பூஊஊஊ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருககடையூரில் கோபுரத்தில் இது போன்ற அழகிய சிற்பங்கள் இருக்கும்.
      கதை சொல்லும் கோபுரங்கள் நிறைய இருக்கிறது அதிரா.

      நீக்கு
  10. மிக மிக அழகு சிற்பங்கள்... கண்ணைக் கவருது....
    ஏன் கோமதி அக்கா தாமரைக் குளத்தை இன்னும் நிறையப் படமெடுக்கவில்லையோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமரை குளத்தில் உள்ள மீன்களை படம் எடுத்து இருக்கிறேன் வரும் இந்த கோவிலுக்கு நிறைய படங்கள் போடலாம் அதிரா.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  11. அய்யனார் கோவில், தாமரைத்தடாகம், பின்னணியில் மலை... அழகிய காட்சி.

    பதிலளிநீக்கு
  12. கோவில் வாசல் நாடக அரங்கு போல இருக்கிறது! தவறாகச் சொல்லவில்லை. பார்க்க அப்படி இருக்கிறது என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலத்தில் இப்படி பட்ட தோரணவாயில் இல்லாத கோவில் கிடையாது.
      இதில் தவறு என்ன?
      இந்த தோரண வாயில்களைப் பார்த்து தான் நாடக அரங்குகள் உருவாகின.
      கோபுரங்களில் இருக்கும் தெய்வ சிலைகளில் உள்ள ஆடை, ஆபரணங்கள், ஜடை அலங்காரம், உடை அலங்காரம் உருவாகின நாடங்களில், பினனாளில் சினிமாவில்.
      காலத்தின் கண்ணாடிகள் அல்லவா? பழைய கட்டிட கலைகள்.

      நீக்கு
  13. வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி... மிகவும் பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் ஸ்ரீராம் எனக்கும்.

      நீக்கு
  14. படங்களில் கோவிலின் முக்கிய, அழகிய தோற்றம் அனைத்தையும் கொண்டுவந்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் வரும் ஸ்ரீராம் கோவிலின் அழகிய தோற்றங்கள்.

      நீக்கு
    2. உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  15. இனிய காலை வணக்கம் கோமதிம்மா...

    அழகான படங்கள்.... கோபுரச் சிற்பங்கள் சிறப்பு.

    காலையில் எம்.எஸ். அம்மாவின் ஒரு சிறப்பான பாடல் கேட்க இனிமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
      எம்.எஸ் அம்மா பாட்டு காலை உங்களை அழைத்து வந்து விட்டது.
      இனிய காலை வணக்கம் உங்களுக்கும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.

      நீக்கு
  16. படங்கள் எல்லாம் அட்டகாசம் அதுவும் முதல் படங்கள் செமையா இருக்கு! கோபுரப் படம் ரொம்ப அழகா இருக்கு

    காலை வணக்கம் கோமதிக்கா...வரேன் பதிவு முழுவதும் பார்த்துட்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      காலை வணக்கம் கீதா.
      வாங்க வாங்க .

      நீக்கு
  17. கோமதிக்கா வணக்கம்!!!
    தாமரைத் தடாகம் இந்த ஆங்கிள் ரொம்ப அழகாக இருக்கிறது கோம்திக்கா…
    கோயிலின் முதல் வாசல் ஹப்பா அட்டகாசமா இருக்கு இரண்டாவது வாசலும்…மிகப் பெரியதாக அழகாக இருக்கிறது…
    ஓ அது விளக்குத் தோஓன் ஆமாம் புரிந்தது. முதலில் கொடிக்கம்பம் என்று தினைத்தேன்…இது போன்ற கோவில்களில் கொடிக்கம்பம் இல்லாமல் விளக்குத் தூண் காண்பது ஒரு அர்த்தத்தைத் தருகிறது. முன்பெல்லாம் இப்படி ஊரின் கடைசியில் எல்லையில் தான் ஊரைக்காக்கும் தெய்வம் என்று ஐயனார், மாடன் எல்லோர்க்கும் கோயில் இருக்கும் அங்கு முன்பெல்லாம் இப்படி வளைவுகள் இருந்திருக்காது. ஆனால் விளக்குத் தூண் இருந்திருக்கும். அதில் தினமும் விளக்கு ஏற்றி வைத்திருப்பார்களாக இருக்கலாம். கிராம மக்களுக்குப் பல அகையிலும் உதவியாக இருந்திருக்கும் அது. என்று தோன்றுகிறது கோமதிக்கா..
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா, வாழ்க வளமுடன்.
      முன்பு பழைய கோவில்களில் எல்லாம் விள்க்குத்தூண் உண்டு. தீபந்தம் போல் சுற்று வட்டாரத்திற்கு ஓளி தரும். நீங்கள் சொல்வது போல் கிராம மக்களுக்கு பலவகையிலும் உதவி இருக்கும்.
      தோரணவாயில் பின்னால் வந்து இருக்கலாம்.

      நீக்கு
  18. வெளிப்பக்கம் இருந்து எடுத்த குதிரைகள் கருப்பசாமி வாவ் செமையா இருக்கு அக்கா.,…
    பொட்டுக் கழுவத்தேவர் பற்றியும் அறிய முடிந்தது..

    கோபுரம் ரொம்ப அழகா இருக்கு.. எனக்குக் கோபுரம் மட்டும் எடுப்பதிலும் ஆர்வம் உண்டு. நான் பல கோயில்களின் கோபுரங்கள் எடுத்து வைத்துள்ளேன்…

    எம் எஸ் அம்மாவின் பாடல் மிகவும் பிடுக்கும் இப்பவும் கேட்டுரசித்தேன் கோமதிக்கா..

    பாற்கடல் கடைந்த காட்சி ஹையோ என்ன அழ்கா இருக்கு…செமையா இருக்கு உங்க படமும் அழகு!!!! உலகளந்த பெருமாள், தசாவதாரக் காட்சி, கோவர்த்தன கிரி என்று ஒவ்வொன்றும் பார்த்துப்பொறுமையாக எடுத்துருக்கீங்க அக்கா… செமையா இருக்கு படங்கள். வாவ் போட வைத்தது கோமதிக்கா அருமை எல்லாம் ரொம்பவே ரசித்தோம்…

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளிப்பக்கம் இருந்து எடுத்த படங்கள் போல் உள் பக்கம் இருந்தும் எடுத்தேன் கீதா, அடுத்த பதிவில் வரும். கோபுரங்கள் நீலநிற வானத்துடன் எடுக்க பிடிக்கும் எனக்கு.
      விண்முட்டும் கோபுரங்களை எடுக்க எனக்கும் பிடிக்கும்.

      எம் எஸ் அம்மா பாடல் கேட்டு மகிழ்வீர்கள் என்று தெரியும் அதுதான் இங்கு போட்டேன் கீதா.

      எல்லா படங்களையும் ரசிப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  19. இந்தப் பதிவில் அந்தத் தாமரைக் குளம் முந்தைய படங்களைவிட இன்னும் அழகாக வந்திருக்கு இந்த ஆங்கிளில். இந்தக் கருத்தை சொல்ல நினைத்து சொன்னேனா என்று தெரியவில்லை கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமரை குளம் போன பதிவில் நிறைய போட்டாச்சு, அதில் பொங்கல் வைக்க பொங்கல் பானையில் தண்ணீர் எடுப்பது, மீன்களுக்கு போடும் பொரியை அவை வந்து சாப்பிடுவது என்று எடுத்தவை அடுத்த பதிவில்.

      உங்கள் பின்னூடங்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  20. படங்கள் அனைத்தும் நேரில் கண்டது போல் ஓர் உணர்வு... நன்றி அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி .

      நீக்கு
  21. சிற்பங்களை ரசித்து ரசித்துப் படமாக்கியிருக்கிறீர்கள். பாற்கடலைக் கடையும் காட்சி அழகு.

    பாடல் பகிர்வு அருமை.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
      நீங்கள் வந்து இருந்தால் உங்கள் காமிரா நிறைய படங்களை எடுத்து தள்ளி இருக்கும் பேசும் சித்திரமாக அனைத்தையும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  22. படங்கள் எல்லாம் கதை பேசுகின்றன ...அற்புதம் மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுராதா, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி அனு.

      நீக்கு
  23. வணக்கம் சகோதரி

    படங்கள் அத்தனையும் மிக அழகாக வந்திருக்கின்றன. ஒவ்வொரு படமும் ஒரு கதையை தருகிறது. முதல் படம் தடாகமும்,கோவிலும், பின் புறத்தில் சமணர் மலையுமாக பார்க்கவே அழகாக சிறப்பாக உள்ளது. கோவிலும், மிகப் பெரிய கோவிலாக இருக்கிறது. இந்த மாதிரி பெரிய அய்யனார் கோவிலை பார்த்ததில்லை. ஆனால் எல்லாவிதத்திலும் கலையம்சம் நிரம்பிய வேலைப்பாடுகள் அருமையாக உள்ளது. கோபுரங்களும், இரு பக்க வாயில்களும், வண்ண சிலைகளினால் கவர்கின்றன.

    தாங்களும் பொறுமையாக ஒவ்வொன்றையும் கலைக்கண்களோடு பார்த்து ரசித்து, படமெடுத்து புராணங்களோடு இணைத்து எங்கள் பார்வைக்கு விருந்தாக தந்திருக்கிறீர்கள். அழகாக போட்டோ எடுக்கும் தங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்.

    ஒவ்வொரு கதைக்கும் பாடல்கள் தேர்வு பொருத்தமாக உள்ளது. இனி அடுத்த பதிவுக்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த பதிவுக்கு கொஞ்சம் தாமத வருகை தந்ததற்கும் வருந்துகிறேன். நேரம் சரியாக உள்ளது. கிடைக்கும் பொழுதில் சில அசெளகரியங்கள் வந்து விடவே வலைப்பக்கம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வர இயலவில்லை. அதனால் இன்று வந்துள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலாஹரிஹரன், வாழ்க வளமுடன்.
      கோவில் சிற்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதையை கூறுகிறது.
      ரசித்து பார்க்க நிறைய இருக்கிறது இந்த கோவிலில் கமலா.

      உங்கள் பாராட்டுக்கு நன்றி கமலா.

      அந்த சிற்பங்கள் சொன்ன கதைக்கு சிலப்பதிகார பாடலும் பாடலை எம்.எஸ் அம்மா இனிமையான குரலில் பாடியதையும் கேட்க ஆசை வந்து விட்டது அதுதான் இந்த பகிர்வு.

      நேரம் கிடைக்கும் போது வாருங்கள் கமலா. உங்கள் அருமையான விரிவான பின்னூட்டத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி.
      நன்றி.


      நீக்கு
  24. I went to this place last year, very good, felt peaceful when seeing Samana theeranthakarar statues.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சரவணன், வாழ்க வளமுடன்.
      நீங்கள் சொல்வது உண்மை.
      அமைதியான இடம், அமைதியை மன சாந்தியை தரும் சமணமலை.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு