ஞாயிறு, 24 மார்ச், 2019

ஏரிக்கரையோரம்

சனிக்கிழமை எங்கள் குலதெய்வக் கோவிலுக்குப் போய் இருந்தோம் . என் கணவரின் தம்பி குடும்பத்தினர் வந்து இருந்தார்கள்.  அவர்களுடன் மடவார் விளாகம் என்ற ஊரில் இருக்கும் எங்கள் களக்கோடி சாஸ்தா கோவில் போய் இருந்தோம்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ளது இந்த ஊர்.

எங்கள் பக்கம் பங்குனி உத்திரம் அன்று குலதெய்வ வழிபாடு செய்வார்கள். 
நாங்கள் பங்குனி உத்திரம் அன்று போக முடியவில்லை.  

இந்தப் பதிவில் எங்கள் கோவில் பக்கத்தில் உள்ள பெரிய ஏரியைப் பார்த்த காட்சிகள் பற்றிய பகிர்வு.


மேய்ச்சல் முடித்து மாடுகளை ஏரியில் நீர் அருந்த வைத்து வீடுகளுக்கு ஓட்டிப் போவார் போலும்

இந்தப் படம் அலைபேசியில் எடுத்த படம்
கோவில் பக்கம் உள்ள  ஏரிக்கரை மேல் பகுதியிலிருந்து  என் சின்ன காமிராவில் ஜூம் செய்து எடுத்த படம்.
அவை நீர் அருந்தும் காட்சி


ஆனந்தக் குளியலுடன் அக்கரையில் இருந்து இக்கரைக்குப் பயணம்

மேய்ப்பவர் விரட்ட எழுந்து   மனம் இல்லாமல் கரை ஏறுதல்

மாடுகள் நீர் அருந்தி ஆனந்த குளியல்
இந்த காணொளியில் எத்தனை பறவை  பறக்குது? பார்த்து சொல்லுங்கள்

அல்லி மொட்டுக்கள்  நிறைந்து இருக்கும் இடத்தில் முக்குளிப்பானும், கொக்குகளும். மீன்களின் வரவுக்கு காத்து இருக்கிறன.

ஏதோ கொத்தி சாப்பிடுது
காத்து இருக்கும் கொக்குகள்
இரவு மலரும் சந்திர ஒளியும் அல்லியின் மலர்வும் நன்றாக இருக்கும்

மேல் பகுதி வரை தண்ணீர்  கரை தொட்டு இருக்கும் இப்போது கொஞ்சம் இருக்கிறது
தீவு போல் காட்சி அளிக்கும் 

என் கணவர் எடுத்த படம்- ஏரியின் கரையும் ஏரியின் அழகிய தோற்றமும்
(பனாரமிக்) 
அடுத்த பதிவு எங்கள் குலதெய்வ கோவில் பதிவு.
வாழ்க வளமுடன்.

47 கருத்துகள்:

 1. அழகிய காட்சிகள் சகோ
  எடுத்த விதமும் அருமை.

  காணொளியில் ஒரேயொரு பறவை மட்டுமே பறக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
   படங்களை, ரசித்து காணொளி கண்டு கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 2. ஆஆஆஆஅVவ்வ்வ் மீயேதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஉ:)...
  ஏரிக்கரைப் பூங்காற்றே... நீ போறவழி ஸ்கொட்லாந்தோஓ?:).....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
   ஏரிக்கரை என்றவுடன் இரண்டு பாடல் நினைவுக்கு வந்தது ,
   நீங்கள் சொன்ன பாடலும், ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே! பாடலும்.
   நினைவுக்கு வந்தது. தென்னைமரச் சோலையும் நிறைந்து காணபடுகிறது.
   இந்த பாட்டு நான் குழந்தையாக இருக்கும் போது பாடபட்டது.
   ஏரிக்கரைப் பூங்காற்றே நீங்கள் குழந்தையாக இருக்கும் போது பாடபட்டதாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

   //ஏரிக்கரைப் பூங்காற்றே... நீ போறவழி ஸ்கொட்லாந்தோஓ?:)..//

   இருக்கும் இருக்கும்.


   நீக்கு
 3. ஏரியின் புகைப்படங்கள் அனைத்தும் அழகு. ஏரியின் பெயர் என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
   களக்கோடி ஏரி, மடவார்விளாக ஏரி என்றே சொல்வார்கள்.
   ஏரியின் பெயரே அதன் ஆழம், அகலம்,போன்ற விவரங்கள் இல்லை.
   அடுத்தமுறை போனால் விசாரித்து சொல்கிறேன்.

   வயல்கள் நிறைய இருக்கும் அதில் அறுவடை ஆகும் கதிர்களை அடிக்கும் களம் உள்ள இடம். களத்து மேடு என்று சொல்லும் இடம். (களங்கள்) ஊர் கோடியில் அமைந்து இருப்பதால் களக்கோடி என்று பேர். அங்கு இருக்கும் சாஸ்தாவிற்கும் களக்கோடி சாஸ்தா.

   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 4. அத்தனை படங்களும் கண்ணுக்கு குளிர்ச்சி. அல்லி கொக்கு... தண்ணி குடிக்கும் உம்பாக்கள் அத்தனையும் அழகு... பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா, நீங்கள் சொல்வது போல் ஏரிக்கரையின் அழகையும் அல்லியும், கொக்கும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். வெளி நாட்டுப் பறவைகளும் வரும்.
   முன்பு போட்டு இருக்கிறேன்.

   கொக்கு நிறைய பறந்து மீண்டும் அமரும் காட்சியும் அழகாய் இருக்கும். கோவிலில் அபிஷேகம், அலங்காரம் முடிந்து ஊருக்கு கிளம்ப என்று நேரம் செலவழிக்க முடியவில்லை ஏரிக்கரையில்.

   வயல்கள் பச்சைபசேல் என்று அழகாய் இருக்கும். இந்த முறை அறுவடை நடந்து முடிந்து விட்டது.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 5. அழகான படங்கள். காணொளி முகநூலில் கண்டேன்.

  குலதெய்வம் கோவில் பற்றிய தகவல்களை படிக்கக் காத்திருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
   நீங்கள் படங்கள், காணொளி முகநூலில் பார்த்தது மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 6. தூரத்தில் படிக்கட்டுகள்... அப்போது தண்ணீர் ஏரியின் நடுவே சிறு பகுதியாக இருக்கிறது என்று தெரிகிறது. கரைதொட்டு நின்றாள் எப்படி இருக்கும் என்கிற கற்பனை வருகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
   எங்களுக்கு கல்யாணம் ஆன புதிதில் போன போது நிறைந்து இருந்தது ஏரி. அப்போதே என் அத்தை முன்பு கடல் போல் அலைகளுடன் நீர் இருக்கும் என்றார்கள்.

   தூரத்தில் செல்லும் படிக்கட்டுக்கள் அதனலேயே உடைந்து இருக்கும்.

   ஏரி நிறைந்து வெளியே ஓடும் தண்ணீரை கடந்து கோவிலுக்கு போய் இருக்கிறோம்.
   முன்பு போட்ட குலதெய்வ பதிவில் போட்டு இருப்பேன் பார்க்க வேண்டும்.
   கரைத் தொட்டு நின்றால் பார்க்க அழகு.

   ஏரியில் குளித்து ஈர ஆடையுடன் பொங்கல் வைப்பார்கள்.

   நீக்கு
 7. ஆனால் ஏதோ அவை குடிக்கவும், ஏன், மூழ்கிக் குளிக்கவும் அளவு தண்ணீர் இருக்கிறதே அதுவே ஆறுதல். காணொளியில் எனக்குத் தெரிவது ஒரே ஒருபறவை மட்டுமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம், அவைகள் குடிக்கவும், குளிக்கவும் தண்ணீர் இருக்கே ! என்று சந்தோஷபட வேண்டியதுதான்.

   முன்பு ஒரு தடவை போன போது பாளம் பாளமாய் வெடித்து காணப்பட்டது ஒரு சொட்டு நீர் இல்லாமல் வறண்டு கிடந்தது.

   காணொளி பார்த்தீர்களா? அதற்குத்தான் இந்த கேள்வி.
   காணொளி கண்டது மகிழ்ச்சி.

   நீக்கு
 8. ஒற்றைக்காலில்
  நின்றால்
  ஒருவேளை
  வந்தாலும் வருவேன்

  என்கின்றதோ மீன்கள்? பசியுடன் சாப்பாட்டுக்காகக் காத்திருக்கும் கொக்குகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்வது போல் ஒற்றைக்காலில் தவம் இருந்தால் வந்தாலும் வரும் மீன்.

   தானே வந்து மாட்டிக் கொள்ளுமோ அப்படி சொல்லி!

   நீக்கு
 9. 'அல்லிமகள் மெல்ல வந்தாள்' முதலில் பாடல் நினைவுக்கு வருகிறது அல்லி மலர்களைக் கண்டதும்.

  ஏரியின் படங்களும் வானமும் அழகு.

  பதிலளிநீக்கு
 10. அல்லிமகள் மெல்ல வந்தாள் பாடல் கேட்டது போலவே இல்லையே!
  அருவி மகள் என்ற சூலமங்கலம் ராஜலட்சுமி பாடிய பாடல் நினைவுக்கு வருது.
  அல்லி தண்டு கால்கள்கள் எடுத்து பாடல் நினைவில் இருக்கு.
  உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யேசுதாஸ் அவர்களும் இணைந்து பாடுவார் சூலமங்கலத்துடன்.
   பொதிகை மலைச்சாரல் வேறு வரும்.நீங்களும் இந்த பாடல் பகிர்ந்து இருந்தீர்கள்.

   நீக்கு
  2. https://www.youtube.com/watch?v=YdUDlJVKXds

   இதுதான் நான் சொன்ன பாடல். இரண்டு மூன்று நாட்களாய் வழக்கமான தலைவலி. இன்று நினைவாய் தேடி எடுத்து விட்டேன்.

   நீக்கு
  3. பாடலை கேட்டேன் ஸ்ரீராம்.
   கேட்ட நினைவு வந்து விட்டது.
   பானுமதியின் இனிமையான பாடல்.
   பெண்மையை போற்றும் பாடல் அருமை.
   தலைவலி சரியாகி விட்டதா?
   பாடலை தேடி தந்தமைக்கு நன்றி.

   நீக்கு
 11. கண்கவரும் படங்கள்...
  இயற்கை அழகு காணக் காணத் திகட்டாதது...

  களக்கோடி சாஸ்தா தரிசனத்திற்குக் காத்திருக்கிறேன்...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
   நீங்கள் சொல்வது சரிதான் இயற்கை அழகு திகட்டாதது.
   களக்கோடி சாஸ்தா முன்பு பகிர்ந்து இருக்கிறேன்.
   இப்போது போன போது உள்ளது வரும்.
   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 12. அழகான படங்கள் அக்கா. எனக்கும் மாலையில் வீடு திரும்பும் பறவைகள், அம்பாக்கள்,ஆட்டுக்குட்டிகள் பார்க்க ரெம்ப விருப்பம். எவ்வளவு ஆனந்தமா குளிர்க்கிறாங்க. வெயிலுக்கு இதமாக இருக்கு போல. எனக்கும் ஒரு பறவையே தெரிந்தது. அழகாக பறந்து செல்கிறது. அழகான பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்.
   வீடு திரும்பும் பறவைகள், ஆடு, மாடு பார்ப்பது ஆனந்தம் தான்.
   நீங்களும் காணொளி பார்த்து விட்டது அறிந்து மகிழ்ச்சி.
   ஒறு பறவைதான் பறக்கிறது அம்மு.
   சரியான விடை தான்.

   சிலர் சின்ன காணொளி என்று தெரியாமல் பெரிதாக இருக்கும் என்று பார்க்காமல் விட்டு விடுவார்கள். அவர்களை கவர அப்படி கேள்வி கேட்டேன்.
   பார்த்தவர்கள் எல்லாம் ஒரு பறவை என்று சொல்லி விட்டார்கள்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 13. பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
   அழகான ஏரிதான் தனபாலன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 14. ஏரி அழகு...உங்கள் படங்களும் செமையா இருக்கு!!!

  ஹையோ அம்பாய் எல்லாம் என்ன அழகா தண்ணீர் குடித்து குளித்து கரைக்குப் போகுது!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
   எனக்கு பிடித்த காட்சிகள் உங்களுக்கும் பிடிக்கும் என்று தான் இங்கு பகிர்ந்தேன் கீதா.

   நீக்கு
 15. கொக்கு, முக்குளித்தான்? அது நீர்க்காகம் இல்லையோ ?
  எல்லாம் அழ்கு பாறையின் மீது என்ன ஒயிலாக நின்று காத்துக் கொண்டிருக்கின்றன!!

  ரொம்ப அழகு! அந்தக் காணொளியில் ஒரே ஒரு கொக்கு/நாரை பறந்து செல்கிறது சரியா அக்கா? எனக்கு ஒன்றுதான் தெரிந்தது..

  ஏரிக்கரைப் பூங்காற்றே பாடல் அப்புறம் ஏரிக்கரையின் மீது போறவளே பொன்மயிலே, ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா பாட்டும் நினைவுக்கு வந்தது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவை முக்குளிப்பான்கள் தான் கீதா, தண்ணீருக்குள் இருக்கும் போது அன்னம் போல் நீந்தி செல்கிறது. தன்ணீருக்கு இடையில் இருக்கும் பாறைகளில் அவை உட்கார்ந்து இருப்பது மிக அழகாய் இருக்கும்.

   சரிதான் கீதா . ஒரு கொக்கு தான் பறக்குது.

   உங்களுக்கு பாட்டுக்கள் நினைவு வந்தது அறிந்து மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 16. அல்லியும் ஆம்பலும் அழகு! விரிந்தால் என்ன அழகா இருக்கும் இல்லையா...சமீபத்தில் இங்கு பங்களூரில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தில் உள்ளே நுழையும் போதே ஒரு செயற்கைக் குளம் அதுல அல்லி ஆம்பல் அழகா இருந்தது ஃப்ட்டோ எடுத்துருக்கிறேன்...

  ஆம்பல் நதும் ரஜனி நடித்த ஒரு படத்தில் ஒரு பாட்டில் ஆம்பல் ஆம்பல் நு வரும் பாட்டு நினைவில்லை...

  கடைசிப் படம் அண்ணா எடுத்திருக்கும் படம் ரொம்ப அழகா இருக்கு. செம வியூ!!! ஆங்கிள்!! கவர்கிறது.

  எல்லாப் படங்களுமே செம அழகு அக்கா...ரசித்தோம்

  கீதா

  பதிலளிநீக்கு
 17. கீதா, ராமகிருஷ்ணா மடத்தில் உள்ள அல்லி படத்தை போடுங்கள் பதிவில்.
  ரஜனி பட பாடல் நானும் கேட்டு இருக்கிறேன்.
  அவர்கள் நோட்டில் எடுத்தார்கள்.

  அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

  பதிலளிநீக்கு
 18. அருமையான பகிர்வு. காணொளியை ஃபேஸ்புக்கிலேயே பார்த்து விட்டேன்:). இங்கே கேள்விக்காக மறுபடியும். ஒரே பறவைதான் சுற்றிச் சுற்றி வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
   பகிர்வை ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கும், காணொளி பார்த்து சரியான விடையை சொன்னத்ற்கும் நன்றி.

   நீக்கு
 19. அமைதியான ஏரி அழகு. படங்கள் அனைத்தும் மிக அழகு. கோடை வெய்யிலில் ஏரி சுருங்கிவிட்டது போலும்.
  வித விதமான பறைவகளும் அவைகளின் போசும் அருமை.
  சில படங்களை முக நூலில் பார்த்தேன் மா. அல்லிப்பூக்கள்
  மதுரையைச் சுற்றியே பார்க்க முடியும்.
  நன்றி கோமதி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
   கோடை வெயிலில் இவ்வளவு தண்ணீர் இருப்பதே அதிசயம் அக்கா.
   இன்னும் நிறைய வரும் வெளி நாட்டு பறவைகள் வரும்.
   அல்லிப்பூக்கள் குளம் குட்டைகளில் பூத்து இருக்கிறது.
   உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

   நீக்கு
 20. //அல்லி மொட்டுக்கள் நிறைந்து இருக்கும் இடத்தில் முக்குளிப்பானும், கொக்குகளும். மீன்களின் வரவுக்கு காத்து இருக்கிறன.//

  கொக்கு தெரியும்...முக்குளிப்பான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்...தகவலுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் சிவா, வாழ்க வளமுடன்.
  முக்குளிப்பான் அடிக்கடி முங்கி முங்கி தன் இறையை தேடும். அவை குளிப்பதை பார்ப்பதே அழகு. கருப்பு கலரில் இருக்கும்.

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 22. கறவைகளும், பறவைகளும், பூக்களுமாக படங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் பானுமதி வெங்கடஷேவரன், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 24. பனோரமா நன்றாக வந்திருக்கிறது. ஏரிக்கரையும், அதில் நீந்தும் மாடுகளும், பறக்கும் நாரை, கொக்கு வகைகளும் ஏதோ கனவுலகில் இருப்பது போன்ற பிரமையைத் தருகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
   பனோரமிக் என் கண்வர் எடுத்த படம் நன்றி.

   //ஏரிக்கரையும், அதில் நீந்தும் மாடுகளும், பறக்கும் நாரை, கொக்கு வகைகளும் ஏதோ கனவுலகில் இருப்பது போன்ற பிரமையைத் தருகின்றன.//

   ஆமாம், இவைகளை நாம் இப்போது பார்க்க முடியவில்லையே! அதுதான் இந்த பகிர்வு.
   உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
   நன்றி.

   நீக்கு
 25. படங்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு ...


  பார்க்க பார்க்க தெவிட்டாத இடங்கள் மா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 26. காணொளி, பனோரோம ... எல்லாமே அழகு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளி, பனோரோம படம் எல்லாம் பார்த்து ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு