மகன் வீட்டுக் கொலு பார்க்க வாருங்கள். நவராத்திரி முடிந்து கொலு பார்க்க அழைக்கிறேன் என்று நினைக்காதீர்கள். அய்யனார் கோயில் நவராத்திரிவிழாவை காட்டிக் கொண்டு இருந்தேன்.நவராத்திரி ஆரம்பித்த நாளிலிருந்து மகனும் பொறுமையாக தினம் படங்கள் அனுப்பிகொண்டு இருந்தான்.
நானும் நேரலையில் தினம் பார்த்து கொண்டு இருந்தேன். வந்தவர்களை வரவேற்று அவர்களுடன் உரையாடி அவர்கள் பாடும் பாடல்களை கேட்டு ரசித்து கொண்டு இருந்தேன்.
குட்டி பையன் மித்ரன் பட்டு வேட்டி , பட்டு சட்டை போட்டு வந்து இருந்தார். மகனின் நண்பர் , மதுரை சொந்தஊர்.
எங்கள் குடியிருப்புக்கு பக்கத்தில் இருக்கும் "அருள்மிகு பொய்சொல்லா மூர்த்தி அய்யனார்" கோவில் நவராத்திரி விழா நிகழ்வுகளை பற்றி தொடர் பதிவாக எழுதி கொண்டு இருப்பதில் நிறைவு பகுதி , மற்றும் உறவினர் வீட்டு கொலு வேறு இரண்டு கோவில் கொலு படங்கள் இந்த பதிவில் இடம் பெறுகிறது.
சொல்லரசி. திருமதி. சாவித்திரி பாலசுப்பிரமணியம் அவர்கள்
"சக்தியே யுக்தி" என்ற தலைப்பில் தேவி மாகாத்மியத்தை சுருக்கமாக கதையாக ரசிக்கும்படி சொன்னார்.
சரணமடைந்தவர்களை காக்கும் அன்னையை வணங்கிநம் துன்பங்களை போக்கிக் கொள்வோம்.
இயற்செல்வி.ஞானசண்முகாதேவி குழுவினர் திகழ்த்துபவர் . திரு.மா. இளங்கோ சுவாமி இயலும் இசையும் , சக்தி மகிமை
பெங்களூர் ரமணி அம்மா பாட்டு முதல் பாட்டு
"பொம்ம பொம்மத தைய தையனக்கு தின்னாக்கு நக்குதின பஜன்கரே" பாட்டை சிறுவனும், பெரியவரும் நன்றாக பாடினார்கள். சிறுவன் இந்த ஒரு பாட்டு மட்டும் பாடினான்.
ஞானசண்முகாதேவி மடை திறந்த வெள்ளம் போல நிறைய விஷயங்களை சொன்னார். மூனீஸ்வரன் வரலாறு, ஐயப்பன் வரலாறு மற்றும் கருப்பசாமி வரலாறு சொன்னார்.
அய்யப்பன் வழிபாடு, கருப்பசாமி எப்படி இங்கு வந்தார், ஏன் காவல் தெய்வமாக போற்றப்படுகிறார், ஒவ்வொரு ஊருக்கு ஏற்றார் போல பல பேர்களில் அழைக்கபடுவதைபற்றி சொன்னார். முருகனுக்கு வீரபத்திரர் துணை போல சுவாமி ஐயப்பனுக்கு துணையாக கருப்பசாமி இருந்த கதை சொன்னார். கருப்பசாமி அனுமதி பெற்றே 18 படிகளில் ஏறுவார்கள் என்றார்.
அழகர் கோவிலில் பதினெட்டாம்படியான அழைக்கப்படும் காரணம் சொன்னார். காளி வழிபாடு பற்றி சொன்னார்.
வெக்காளி அம்மன் கதை சொன்னார்.
கதைகள் சொல்லும் போது இடை இடையே பொருத்தமான பாடல்களை பாடினார் பெரியவர். "நம்பினார் கெடுவது இல்லை நான்குமறை தீர்ப்பு கண்ணன் வந்தான் " பாட்டு , "தில்லை அம்பல நடராஜா" "நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி" பாடல், "தாய் இல்லாமல் நான் இல்லை" பாட்டு கடைசியில் "முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக" அண்ணன் தம்பி ஒற்றுமைக்கு.
கருப்பசாமி பாட்டு பாடினார்.
கருப்பசாமிக்கு பொய் சொன்னால் பிடிக்காது என்பதற்கு கதை, கருப்பசாமியை வழிபடுவோரை காக்கும் காவலனாக இருப்பர் என்றும், தர்மத்திற்கு மட்டுமே துணை வருவார் என்றும் சொன்னர்.
குறித்து கொள்ள பேப்பர் பேனா எடுத்து போக வில்லை ஞானசண்முகாதேவி சிரிக்க சிரிக்க அழகான குட்டி கதைகள் பல சொன்னார். தபேலா வாசித்தவருக்கு அரை கண் பார்வைதான் இருக்கிறதாம். அவர் திறமையை சொல்லும் போது கண்பார்வை குறையை சொன்னார்கள். நன்றாக வாசித்தார். குழந்தைகள் எல்லாம் நன்றாக அவர் பாட்டுக்கு வாசிக்கும் போது தாளம் போட்டு ரசித்தார்கள்.
கோவில் டிரஸ்டி அவர்கள் பேச்சாளர் இயற்செல்வி. .ஞானசண்முகாதேவி அவர்களுக்கு மாலை அணிவித்து பொன்னாடை அணிவிக்க என்னை அழைத்தார். வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி அணிவித்தேன், அவர் மகிழ்ந்து நன்றி சொன்னார்.
ஞாயிற்றுக்கிழமை பேசியவர் பேராசிரியர் .திரு. ஜெ.பா.சாம் செல்வக்குமார்
உதவி பேராசிரியர் நா.ம. ச.ச. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, நாகமலை , மதுரை.
"ஆழ்வார்களுள் ஆண்டாள்." என்ற தலைப்பில் பேசினார். 12 ஆழ்வார்கள் பெயர்களை சொல்லி அவர்களை பற்றிய சுருக்கமான வரலாறு சொல்லி அவர்கள் பாடிய பிரபந்த பாடல்களை சொன்னார். பள்ளியில் மனப்பாடமாக பாடிய பாடல்கள்.
வாரணமாயிரம் என்று தொடங்கும் பாடலை திருமணம் ஆகாத பெண்கள் தினம் பாடினால் விரைவில் திருமணம் நடைபெறும் என்றார்.
பின்னர் ஆண்டாள் பிறந்த, வளர்ந்த கதை சொன்னார், பெரியாழவார் மகளுக்கு மணம் முடிக்க வேண்டுமே என்று தவித்த தவிப்பை அழகாய் சொன்னார்.
ரங்கமன்னாரை ஆண்டாள் மணந்த கதையை அழகாய் சொல்லி நிறைவு செய்தார்.
பேச்சின் இடையே பனை ஓலை பயன்களை சொல்லும் போது
பெரிய கார்த்திகைக்கு பனை ஓலையில் கொழுக்கட்டை செய்து சாப்பிடுவது பற்றி சொன்னார்.
ஞாயிற்றுக்கிழமை அலங்காரம் சமயபுரம் மாரியம்மன்
திங்கள் ஊஞ்சல் சேவையில் மூனீஸ்வரன்
காளி அம்மன்
மூனீஸ்வரன் குதிரை மேலே
பேராசிரியர் .முனைவர் மு. முத்துவைரம்
கெளரவ விரிவுரையாளர்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் , மதுரை
"சக்தி வழிபாடு" பற்றி சொன்னார்.
ஊர் பேர்கள் எல்லாம் பெரும்பாலும் மரத்தின் பெயர்களை தாங்கி வருவதாக எடுத்துக்காட்டுகளுடன் கூறினார். மதுரை மருத மரங்கள் நிறைந்த இடம் அதனால் "மருதத் துறை " மதுரையாகி விட்டது என்றும், பழைய கிராமத்து மக்கள் மருதைக்கு போகிறேன் என்று சொல்வார்கள் என்றார்.
மதுரையின் பழைய பெயர்கள் சொன்னார்.
மதுரையின் சிறப்பை அன்னையின் பல பேர்களை, மதுரையின் பல பேர்களை சொன்னார். அன்னையின் சிறப்புகளை சொல்லும் போது மூன்று வயது குழந்தையாக வந்து கலெக்கடர் ரவுஸ் பீட்டரை காப்பாற்றிய கதை சொன்னார். குமரகுருபர் வருகை பருவம் பாடும் போது சிறுமியாக வந்து மன்னரின் முத்துமாலை கழற்றி அவருக்கு அணிவித்த கதை சொன்னார்.
காளியை வணங்கிய ராமகிருஷ்ணர் கதை. மற்றும் இராமன், வாலி, பரதன் , குகன் பற்றி நிறைய செய்திகள் சொன்னார்.
திங்கள் கிழமை அலங்காரம் ஸ்ரீ மஹிஷா சுரமர்த்தினி
ஆறு சமயங்களை சொல்லி சைவம் (பரமசிவன்) வைணவம் (விஷ்ணு) . கெளமாரம் (சுப்பிரமணியன், முருகன்) காணபத்தியம் (விநாயகர்) , செளரம் (சூரியன்) சாக்தம் (சக்தி, துர்க்கை) சாக்தம் எங்கிற சக்தி வழிபாட்டை பற்றி பேசினார்.
காஞ்சி காமாட்சி, மாங்காடு காமாட்சி, மதுரை மீனாட்சி, மாசாணி அம்மன், பச்சை அம்மன், மயிலை கற்பகாம்பாள்,புகழ்பெற்ற சக்தி கோவில்களை எல்லாம் சொன்னார். சக்தி வழி பாடு எப்போது இருந்து ஆரம்பித்தது என்று சொன்னார், சக்தி வழிபாட்டில் காளியை வழிபடுவது நன்மை பல தரும் என்றார்.
காளியை வணங்கினால் கிடைக்கும் நன்மைகளை சொன்னார். நவராத்திரி காலம் முழுவதும் காளியின் சிறப்பை சொல்லி வழிபட்டால் அனைத்து துன்பங்களும், பயங்களும் விலகும். பெண் தெய்வ வழிபாடுகளை பற்றி விரிவாக பேசினார். சிவகாசி அருகில் அண்ணன் , தங்கை காய்ச்சலில் இறைவனடி சேர்ந்து இப்போது வணங்கபடும் தெய்வமாக இருப்பதை பற்றி சொன்னார். காய்ச்சல் வந்தால் அவர்களை வேண்டிக் கொள்வர்களாம். கேரளாவில் கண்ணகிக்கு கோவில் அமைத்து வழிபடுவதை சொன்னார்.
நிறைய சிறப்பான தகவல்கள் சொன்னார் என் நினைவுக்கு வந்ததை இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.
இந்த காணொளியில் சிருங்கேரி சாரதா கோவில் காட்டுகிறார்கள் நன்றாக இருக்கிறது. கோவிலை தரிசனம் செய்து கொண்டே பாட்டை கேட்கலாம்.
சின்ன வயதில் அம்மா சொல்லி கொடுத்த பாடல் சரஸ்வதி பாடல் அன்னவாகன தேவி பாடல். கடைசி வரி மட்டும் மாறி இருக்கிறது. மெய்யாய் விளங்கும் தேவி நாவில் அருள வேண்டும் என்ற வரி மட்டும் சரஸ்வதி என்று முடிகிறது.
அருள்மிகு ஸ்ரீ பொய்சொல்லா மூர்த்தி அய்யனார் கோவிலில்
நவராத்திரி விழா சிறப்பாக நடந்து வருகிறது. மதுரையில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வீட்டுக்கு அருகில் இருக்கும் இந்த கோவிலுக்கு மட்டுமே என்னால் போய் வர முடிகிறது.
கொலு வைத்து ஸ்ரீ பேச்சியம்மனுக்கு தினம் வித விதமாக அலங்காரம் செய்வது அருமையாக இருக்கிறது.
முதல் நாள் ராஜ ராஜேஸ்வரி. அலங்காரமும் அன்று நடந்த சொற்பொழிவு "நலம் தரும் சக்தி" பற்றி இதற்கு முந்திய பதிவில் சொல்லி இருந்தேன்.
இந்த படம் எங்கள் வீட்டு கொலு பொம்மையில் உள்ள மூன்று தேவியரும்.
நேற்று எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் அருள்மிகு ஸ்ரீ பொய்சொல்லா மூர்த்தி அய்யனார் கோவிலுக்கு போய் இருந்தேன். நவராத்திரி விழாவிற்கு கொலு வைத்து இருக்கிறார்கள்.
தங்கை மகள் வளைகாப்பு இந்த மாதம் 5 ம் தேதி அருப்புக்கோட்டையில் நடந்தது. வளைகாப்பு நடந்த மண்டபத்திற்கு அருகில் இந்த சொக்கநாதர் கோவில் இருந்தது. உறவினர்களுடன் போய் தரிசனம் செய்தேன்.
இந்த சொக்கநாதர் கோயில் முதலாம் சடையவர்மன் குலசேகரபண்டியன் காலத்தில் கட்ட ஆரம்பித்து அவரின் சகோதரர் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது. இப்படி பிற்கால பாண்டியர்கள் கல்வெட்டில் இருக்கிறதாம்.
குழந்தைகள் செய்த பிள்ளையார்கள், மற்றும் கோவிலில் செய்த பிள்ளையாரை கரைக்கும் நாளில் மகா கணபதி ஆலயத்தில் தன்னார்வ தொண்டு செய்தவர்களுக்கு பொன்னாடையும் பரிசு பொருளும் கொடுத்து பாராட்டுக்கள் வழங்கி உள்ளார்கள்.
மகனுக்கும் பொன்னாடை, கணபதி படம், பசுவும் கன்றும் உள்ள சிலை எல்லாம் பரிசாக கொடுத்து இருக்கிறார்கள். (10. 9. 2022 ல் நடந்தது.)
வெகு சிறப்பாக 10 நாட்கள் நடந்த விழாவில் நடனம், பாட்டுக் கச்சேரி எல்லாம் நடந்து இருக்கிறது.
மகா கணபதிக்கு பிரசாதங்கள் தயார் ஆகிறது
பருப்பு வடை
மகன் வீட்டு கிருஷ்ண ஜெயந்தி விழா
மருமகள் செய்த இனிப்பு சீடை, முள்ளு தேன்குழல், உப்புச்சீடை மற்றும் வெண்ணை, அவல் வெல்லம்
பேரன் கண்ணன் வேடத்தில் புல்லாங்குழலில் கீதம் இசைக்கிறான்
மகன் சிறு வயதில் வரைந்த கண்ணன் ஓவியம்
எங்கள் வீட்டு பிள்ளையார் புது களிமண் பிள்ளையார் வாங்கவில்லை.
மகன் சிறு வயதில் வைத்து விளையாடிய பிள்ளையாரை வைத்து பூஜை செய்து விட்டேன். கார பிடிகொழுக்கட்டையும், மோதகமும் செய்தேன். சுண்டல் மறுநாள் செய்தேன்.
பொரி உருண்டை, எள்ளு உருண்டை, பொட்டுக்கடலை உருண்டை, கடலை உருண்டை, அவல், அரிசி பொரி என்று கடையில் வாங்கி வைத்து வணங்கி விட்டேன்.
அண்ணன் வீட்டிலிருந்து அப்பம், மோதகம், இனிப்பு பிடி கொழுக்கட்டை, சுண்டல், எள்ளு உருண்டை வந்து விட்டது.
தங்கை வீட்டு பிள்ளையார் கொலு பார்க்க போனபோது மோதகத்திற்கு வைக்கும் பூரணம் கொடுத்தாள் கொஞ்சம் அதை வைத்து 9 மோதகம் செய்து வழி பட்டேன்.
எனக்கும், வீட்டு வேலைகளில் உதவி செய்பவருக்கும் மட்டும் தான். அக்கம் பக்கம் யாரும் கொடுப்பது வாங்குவது இல்லை. தீபாவளிக்கு மட்டும் கொடுக்கிறார்கள்.
கிருஷ்ண ஜெயந்திக்கு காலை இனிப்பு அவல் செய்து வழி பட்டேன், மாலையில் பால் பாயாசம்
ஜோதி தொலைகாட்சியில் கோவை இஷ்கான் கோவில் நெரடி ஒலிபரப்பில் அபிஷேகம், அர்சச்சனையை பார்த்தேன்.
கிருஷ்ணா நீ பேகனே பாரோ பாடல் சில வரி காணொளி
கிருஷ்ணை வேகமாக வர சொல்லும் பாடலுடன் மலர் அபிஷேகம் இருக்கிறது சிறிது நேர காணொளிதான் பாருங்கள்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று மாலை பல் மருத்துவரை பார்க்க போனேன். அப்போது மருத்துவமனைக்கு அருகில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தேன். மாலை நேரம் நிறைய கூட்டம் வருமாம். நான் போன நேரம் மாலை 5 அதனால் கூட்டம் குறைவு. பெற்றோர்கள் குழந்தைகளை ராதையாக , கிருஷ்ணராக அலங்காரம் செய்து தூக்கி கொண்டும், நடத்தியும் அழைத்து வந்து கொண்டு இருந்தார்கள்.
மூலவர் கிருஷ்ணர் இடுப்பு அரைச்சலங்கையுடன் சந்தன காப்பில் சிறு குழந்தையாக நின்று கொண்டு இருந்தார், ஆண்டுக்கு ஒரு முறைதான் இந்த அலங்காரம் என்று பூக்கார அம்மா சொன்னார்கள். உற்சவர் வெளியே ஊர்வலமாக போய் இருந்தார். அவர் பின்னால் மக்கள் கூட்டம் போய் விட்டதால் கோவிலில் கூட்டம் இல்லை, நன்றாக தரிசனம் செய்ய முடிந்தது.
பதிவர் கீதா சாம்பசிவம் அடிக்கடி சொல்லும் வடக்கு மாசி வீதி கிருஷ்ணர் கோவில். இதை அவர் படிக்கும் போது கிருஷ்ணஜெயந்தி விழா நிகழவுகள், மற்றும் கச்சேரிகள் கேட்டது மனதில் வரும்.
பதிவுகள் போட்டு வெகு நாட்கள் ஆகி விட்டதே என்று இந்த பதிவு.