செவ்வாய், 13 செப்டம்பர், 2022

எங்கள் வீட்டு விழாக்கள்
மகன் வீட்டு விநாயகர் சதுர்த்தி விழா படம்

விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி முடிந்து பல நாள் ஆகி விட்டது. இப்போதுதான் எங்கள் வீட்டு விழா படங்கள் வருகிறது.

இந்த முறை சாய் கணபதி செய்து இருக்கிறான் மகன்.
சாய் கணபதிக்கு வண்ணம் தீட்டியது மருமகள்.
அவன் அப்பா செய்த பிள்ளையார், மற்றும் மகன் , மருமகள், பேரன் செய்த பிள்ளையார்கள் இடம் பெற்று இருக்கிறது.
(வாங்கிய, மற்றும்  பரிசாக வந்த பிள்ளையார்களும் இருக்கிறார்கள்)
இந்த ஆண்டு பேரன் செய்த பிள்ளையார் வெள்ளையாக இருப்பது.

இந்த ஆண்டு  பேரன் பள்ளி செல்லும் விநாயகர் வரைந்து இருக்கிறான். அரிசோனா கோவிலில்  செய்து வைத்து இருந்த பிள்ளையார்
மகன் செய்து கொடுத்த செல்ஃபி பிள்ளையார் பிரேம்

குழந்தைகள் அச்சில் செய்த பிள்ளையார்கள்
குழந்தைகள் செய்த பிள்ளையார், வீட்டில் வாங்கி வைத்து வழிபட்ட பிள்ளையார்கள் என்று  கரைப்பதற்கு எடுத்து வைக்கப்பட்டு இருக்கிறது.

பிள்ளையார்கள் கரைக்கப்படுகிறது

மகா கணபதி கோவிலில் விநாயகரை  வழி அனுப்பும் நாளில் தன்னார்வ தொண்டர்களுக்கு பாராட்டுகள் .

  குழந்தைகள் செய்த பிள்ளையார் இந்த பதிவு படித்து இருப்பீர்கள்.

 குழந்தைகள் செய்த பிள்ளையார்கள், மற்றும் கோவிலில் செய்த பிள்ளையாரை    கரைக்கும் நாளில்  மகா கணபதி ஆலயத்தில் தன்னார்வ தொண்டு செய்தவர்களுக்கு பொன்னாடையும் பரிசு பொருளும் கொடுத்து  பாராட்டுக்கள் வழங்கி உள்ளார்கள். மகனுக்கும் பொன்னாடை, கணபதி படம், பசுவும் கன்றும் உள்ள சிலை எல்லாம் பரிசாக கொடுத்து இருக்கிறார்கள். (10. 9. 2022 ல் நடந்தது.)

வெகு சிறப்பாக 10 நாட்கள் நடந்த விழாவில்  நடனம், பாட்டுக் கச்சேரி எல்லாம் நடந்து இருக்கிறது.

மகா கணபதிக்கு பிரசாதங்கள் தயார் ஆகிறது
பருப்பு வடை

மகன் வீட்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மருமகள் செய்த இனிப்பு சீடை, முள்ளு தேன்குழல், உப்புச்சீடை மற்றும் வெண்ணை, அவல் வெல்லம்

பேரன் கண்ணன் வேடத்தில் புல்லாங்குழலில் கீதம் இசைக்கிறான்


மகன் சிறு வயதில் வரைந்த கண்ணன் ஓவியம்
எங்கள் வீட்டு பிள்ளையார் புது களிமண் பிள்ளையார் வாங்கவில்லை.

 மகன் சிறு வயதில் வைத்து விளையாடிய பிள்ளையாரை  வைத்து பூஜை செய்து விட்டேன். கார பிடிகொழுக்கட்டையும், மோதகமும் செய்தேன்.  சுண்டல் மறுநாள் செய்தேன். 

பொரி உருண்டை, எள்ளு உருண்டை, பொட்டுக்கடலை உருண்டை, கடலை உருண்டை, அவல், அரிசி பொரி   என்று கடையில் வாங்கி வைத்து வணங்கி விட்டேன். 

அண்ணன் வீட்டிலிருந்து அப்பம், மோதகம், இனிப்பு பிடி கொழுக்கட்டை, சுண்டல், எள்ளு உருண்டை வந்து விட்டது.

தங்கை வீட்டு பிள்ளையார் கொலு பார்க்க போனபோது மோதகத்திற்கு வைக்கும் பூரணம் கொடுத்தாள் கொஞ்சம் அதை வைத்து 9 மோதகம் செய்து வழி பட்டேன்.

எனக்கும், வீட்டு வேலைகளில் உதவி செய்பவருக்கும் மட்டும் தான். அக்கம் பக்கம் யாரும் கொடுப்பது வாங்குவது இல்லை. தீபாவளிக்கு மட்டும் கொடுக்கிறார்கள்.

கிருஷ்ண ஜெயந்திக்கு காலை இனிப்பு அவல் செய்து வழி பட்டேன், மாலையில் பால் பாயாசம்

ஜோதி தொலைகாட்சியில் கோவை இஷ்கான் கோவில்  நெரடி ஒலிபரப்பில் அபிஷேகம், அர்சச்சனையை பார்த்தேன். 


கிருஷ்ணா நீ பேகனே பாரோ பாடல் சில வரி காணொளி

கிருஷ்ணை வேகமாக  வர சொல்லும் பாடலுடன் மலர் அபிஷேகம் இருக்கிறது சிறிது நேர காணொளிதான் பாருங்கள்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று மாலை பல் மருத்துவரை பார்க்க போனேன். அப்போது  மருத்துவமனைக்கு அருகில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தேன். மாலை நேரம் நிறைய கூட்டம் வருமாம். நான் போன நேரம் மாலை 5 அதனால் கூட்டம் குறைவு. பெற்றோர்கள் குழந்தைகளை ராதையாக , கிருஷ்ணராக அலங்காரம் செய்து தூக்கி கொண்டும், நடத்தியும் அழைத்து வந்து கொண்டு இருந்தார்கள்.

 மூலவர் கிருஷ்ணர் இடுப்பு அரைச்சலங்கையுடன்  சந்தன காப்பில் சிறு குழந்தையாக நின்று கொண்டு இருந்தார், ஆண்டுக்கு ஒரு முறைதான் இந்த  அலங்காரம் என்று பூக்கார அம்மா சொன்னார்கள். உற்சவர் வெளியே ஊர்வலமாக  போய் இருந்தார். அவர் பின்னால் மக்கள் கூட்டம் போய் விட்டதால் கோவிலில் கூட்டம் இல்லை, நன்றாக தரிசனம் செய்ய முடிந்தது.

பதிவர் கீதா சாம்பசிவம் அடிக்கடி சொல்லும் வடக்கு மாசி வீதி கிருஷ்ணர் கோவில். இதை அவர் படிக்கும் போது கிருஷ்ணஜெயந்தி விழா நிகழவுகள்,  மற்றும் கச்சேரிகள்  கேட்டது மனதில் வரும்.

பதிவுகள் போட்டு வெகு நாட்கள் ஆகி விட்டதே என்று இந்த பதிவு.வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------

34 கருத்துகள்:

 1. படங்களையும் ரசித்தேன்.  காணொளியையும் ரசித்தேன்.  பள்ளி செல்லும் பிள்ளையார் அழகு.  கிருஷ்ணன் வேடத்தில் புல்லாங்குழலுடன் பேரன் அசத்துகிறார்.  மஹாகணபதி ப்ரசாதங்கள் கைக்கு கிடைக்காதா என்று ஏங்க வைக்கின்றன!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   படங்களை, காணொளியை ரசித்தது அறிந்து மகிழ்ச்சி.
   பள்ளி செல்லும் பிள்ளையாரை, கிருஷ்ணர் வேடம் பேரனை ரசித்ததை பேரனிடம் சொல்கிறேன்.
   மகா கணபதி பிரசாதங்கள் நன்றாக இருந்தது என்று பையன் சொன்னான்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 2. நான் கூட பல் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.  லாங் டியூ!  அவஸ்தை.   ஒத்திப்போட்டுக் கொண்டே வருகிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல் மருத்துவரை பார்த்து விடுங்கள், அவஸ்தையோடு ஏன் இருக்க வேண்டும்? நேரம் இல்லையா மருத்துவரிடம் போக?

   நீக்கு
 3. படங்கள் மிக அழகு.... அப்பா போல மகனும் நன்றாக வரைவாரா? அதுதான் பேரனுக்கும் போய்ச் சேர்ந்திருக்கிறதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
   படங்கள் மிக அழகு//
   நன்றி.
   என் கணவரின் அப்பா, அம்மா, சகோதர்கள் அனைவரும் நன்றாக வரைவார்கள்., அது போல என் மகனும், மருமகளும் நன்றாக வரைவார்கள். நீங்கள் சொல்வது போல வழி வழியாக வருகிறது.
   ஒரு கொலுவில் மகன் வரைந்த ஓவியங்கள் கொலுப்படியில் வைத்து இருந்தேன். அவன் வரைந்த படங்களை பத்திரபடுத்தி வைத்து இருந்தேன், இப்போது அவனிடம் கொடுத்து விட்டேன்.

   நீக்கு
 4. அச்சில் வார்த்த பிள்ளையார்கள், செல்ஃபி பிள்ளையார் ஃப்ரேம் என அனைத்துமே அழகு.

  பிரசாதங்கள் தயார் செய்வதைக்கூட படம் எடுத்துவிட்டீர்களா?

  க்ருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களையும் ரசித்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைத்து பிள்ளையார்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
   மகேஸ்வர பூஜைக்கு தயார் ஆகிறது. (பக்தர்களுக்கு அன்னதானம்)
   அதனால் மகன் எடுத்து விட்டான்.
   கிருஷ்ணஜெயந்தி கொண்டாட்டங்களை ரசித்தது மகிழ்ச்சி.உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 5. படங்களும், காணொளிகளும் கண்டேன் சிறப்பாக இருக்கிறது.

  முதல் படம் பிரமாதம்.
  வாழ்க வளமுடன் ‌

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

  படங்களும், காணொளிகளும் கண்டேன் சிறப்பாக இருக்கிறது.//

  படங்களையும், காணொளிகளையும் கண்டு கருத்து சொன்னதற்கு நன்றி.

  முதல் படம் பிரமாதம்.//

  நன்றி.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. தாமதம் ஆனாலும் தரமான பதிவு. அழகான படங்கள். பிள்ளையார் சேகரிப்பு அசத்தல். என்னுடைய இஷ்ட தெய்வம் பிள்ளையார் தான். அதுவும் பழவங்காடி பிள்ளையார்.
  Jayakumar

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் ஜெயக்குமார் சார், வாழ்க வளமுடன்

  //தாமதம் ஆனாலும் தரமான பதிவு. அழகான படங்கள். பிள்ளையார் சேகரிப்பு அசத்தல்.//

  நன்றி.

  //என்னுடைய இஷ்ட தெய்வம் பிள்ளையார் தான். அதுவும் பழவங்காடி பிள்ளையார்.//

  இஷ்ட தெய்வம் பிள்ளையார் என்று கேட்டு மகிழ்ச்சி.
  பழவங்காடி பிள்ளையார் எங்கு இருக்கிறார்? திருவனந்தபுரத்திலா?

  எங்கள் வீட்டிலும் வித விதமான பிள்ளையார் சேகரிப்பு இருக்கிறது.
  கண்ணாடி அலமாரியில் வித விதமான பிள்ளையார்கள் இருக்கிறார்கள்.
  இப்போதுதான் வாங்குவதை விட்டு இருக்கிறேன். தங்கை வீட்டு கொலுவுக்கு குட்டியாக பிள்ளையார் வாங்கி கொடுத்தேன்.

  உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.


  பதிலளிநீக்கு
 9. கலைக் கூடத்துக்குள புகுந்து வந்த மாதிரி இருக்கின்றது..

  ஐயா அவர்களது கை வண்ணம் வாழையடி வாழை எனத் தொடரும்.. அதில் ஐயம் இல்லை..

  சிறப்பான பதிவு..
  நலமே வாழ்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

   //கலைக் கூடத்துக்குள புகுந்து வந்த மாதிரி இருக்கின்றது..//

   நன்றி.

   //ஐயா அவர்களது கை வண்ணம் வாழையடி வாழை எனத் தொடரும்.. அதில் ஐயம் இல்லை..//

   உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
   உங்கள் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

   நீக்கு
 10. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. உங்கள் வீட்டு விநாயகர் சதுர்த்தி , கிருஷ்ண ஜெயந்தி புகைப்படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. சிறப்பாக விழாக்களை உங்கள் மகன் வீட்டிலும், இங்கு நீங்களும் கொண்டாடியுள்ளீர்கள். படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது.

  உங்கள் மகன், மற்றும் பேரன் வரைந்திருக்கும், கிருஷ்ணன், பள்ளிக்குச் செல்லும் பிள்ளையார் படங்கள் அழகாக உள்ளது. அழகாக வரைந்தி ருக்கும் அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்களை கூறுங்கள்.

  பட்சணங்களை வெகு நேர்த்தியாக செய்து, நம் பாராம்பரியத்துடன் பூஜைகள் செய்து வழிபட்டிருக்கும் உங்கள் மருமகளுக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

  அங்கு உங்கள் மகன் வீட்டுக்கருகில் இருக்கும் பிள்ளையார் கோவில் படங்களும், அங்கு செய்யப்பட்ட பிரசாத படங்களும் நன்றாக உள்ளது.

  உங்கள் வீட்டு பிள்ளையார் பூஜையும் மிக அழகாக இருக்கிறது. அத்தனை பிள்ளையார், கிருஷ்ணன் படங்களையும், அவர்களுக்கு நடைபெற்ற பூஜைகளையும் கண்டு மகிழ்ந்து தரிசித்துக் கொண்டேன்.

  வீட்டில் இப்படி வருடந்தோறும் விழாக்கள் கொண்டாடுவது ஒரு மன மகிழ்ச்சியை தருவது உண்மைதான். தினமும் ஒரே மாதிரி செல்லும் வாழ்வின் நடுவில் இப்படி நமக்கு நாமே புத்துணர்ச்சியை உண்டாக்கி கொள்வதற்காகத்தான் இந்த இறை வழிபாடுகளும்,
  பூஜைகளும் என நான் நினைக்கிறேன். உங்களிடமிருந்து பதிவுகள் வரவில்லையே என நினைத்தேன். இப்படி பதிவிடு தும் இப்போது நமக்கு ஒரு புத்துணர்வை தருகிறது. பதிவு நன்றாக உள்ளது சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

   //படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது.//
   நன்றி.

   //அழகாக வரைந்தி ருக்கும் அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்களை கூறுங்கள்.//
   கண்டிப்பாக உங்கள் வாழ்த்தை சொல்கிறேன்.

   //பட்சணங்களை வெகு நேர்த்தியாக செய்து, நம் பாராம்பரியத்துடன் பூஜைகள் செய்து வழிபட்டிருக்கும் உங்கள் மருமகளுக்கும் என் அன்பான வாழ்த்துகள்.//
   பண்டிகை பலகாரங்களை மகன் பிரியமாக எதிர்ப்பார்ப்பான். அதற்கு ஏற்றார்போல மருமகளும் செய்து விடுவாள் பண்டிகை சமயம்.விரும்பி சாப்பிட வேண்டும், பாராட்ட வேண்டும் அப்போதுதான் செய்பவர்களுக்கு ஆசையாக இருக்கும். அதை மகன் செய்வான்.மருமகளை வாழ்த்தியதற்கு நன்றி.

   //உங்கள் வீட்டு பிள்ளையார் பூஜையும் மிக அழகாக இருக்கிறது//
   நன்றி.

   அவர்கள் பண்டிகை காலங்களில் மாவிலை கட்டுவது, இறைவனுக்கு பூ அலங்காரம் செய்வது, எல்லா படங்களும் பொட்டு வைப்பது என்று அவர்கள்தான் விருப்பமாக எனக்கு உதவியகாவும் செய்வார்கள்.
   பண்டிகை காலங்களில் முந்தின நாள் லிஸ்ட் எழுதி வைத்துக் கொண்டு பொருட்களை வாங்கி வருவார்கள்.

   நான் பண்டிகைகளை செய்யாமல் விடக்கூடாது என்பதால் அவர்களை நினைத்து கொண்டு முடிந்தவரை செய்கிறேன்.
   நீங்கள் சொல்வது போல பண்டிகைகள் மனதுக்கு மகிழ்ச்சி, புத்துணர்ச்சி தருவது உண்மை. குழந்தைகளுக்கு என்று நாம் செய்யும் போது மனதில் இன்னும் மகிழ்ச்சி.

   //உங்களிடமிருந்து பதிவுகள் வரவில்லையே என நினைத்தேன். இப்படி பதிவிடு தும் இப்போது நமக்கு ஒரு புத்துணர்வை தருகிறது. பதிவு நன்றாக உள்ளது சகோதரி.//

   நீங்கள் நினைத்தது என் மனதுக்கு தெரிந்து விட்டது அதனால்தான் இந்த பதிவு போல!
   இப்படி பதிவுகள் எழுதுவது மனதுக்கு புத்துண்ர்ச்சி தருவது உண்மை.

   உங்கள் விரிவான கருத்துக்கும், வாழ்த்துகளூக்கும் நன்றி.

   நீக்கு
 11. படங்களும், காணொலிகளும் பகிர்வும் அருமை. அழகு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 12. பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   விழாக்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 13. கோமதிக்கா அழகான பிள்ளையார் வடிவங்கள் !! மாமாவின் கை வண்ணம் அப்படியே மகனுக்கும் பேரனுக்கும் வந்திருக்கிறது!
  மகன் செய்திருக்கும் செல்ஃபி பிள்ளையார் ஃப்ரேம் அழகு மீண்டும் ரசித்தேன். அதே போன்று பிள்ளையார்கள். பேரன் செய்தது உட்பட.

  மருமகளும் அழகாக வர்ணம் பூசியிருக்கிறார். அனைத்துப் பிள்ளையார்களும் அருமை. மாமா செய்ததும் உட்பட

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
   மாமா ,மகன், மருமகள், பேரன் செய்தவைகளை ரசித்துப் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 14. குழந்தைகள் செய்திருக்கும் அச்சுப் பிள்ளையார் அனைத்தும் அழகு.

  கிருஷ்ண ஜயந்தி பக்ஷணங்கள் செம...உங்கள் மருமகள் செய்திருப்பவை. இப்ப எல்லாம் வீட்டில் முறுக்கு தட்டை சீடை எதுவும் செய்ய முடியவில்லை வீட்டில் பல்லு கடிக்க முடியாதவர் பல்லு பிரச்சனை. இப்பத்தான் ஏதோ சரி செய்துகொண்டிருக்கிறார். இன்னும் 3 மாதங்களுக்கு கடுக் முருக் எதுவும் வேண்டாம்னு சொன்னதால் என்னாலும் சாப்பிட முடியவில்லை!!!

  மோதகம், காரக் கொழுக்கட்டை சூப்பர் கோமதிக்கா.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், குழந்தைகள் செய்து இருக்கும் பிள்ளையார்கள் அனைத்தும் அழகாய் இருக்கிறது பார்க்க.

   உங்கள் வீட்டிலும் முன்பு போல முறுக்கு தட்டை, சீடை சாப்பிட முடிவது இல்லையா! பல் சரி செய்யும் காலம் போல! பல் சரி செய்தாலும் கவனமாக இருக்க வேண்டும்.

   மோதகம், காரக் கொழுக்கட்டை சூப்பர் கோமதிக்கா.//

   நன்றி.
   மருமகள் செய்த பக்ஷணங்களை பாராட்டியதற்கு நன்றி.

   தாளித்த கொழுக்கட்டையில் கூட தேங்காய் பல் பல்லாக கீறி போடவில்லை. துறுவிய தேங்காய் பூதான் போட்டேன்.

   நீக்கு
 15. பேரன் கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிப்பது போல இருப்பது அருமை. அவரின் ஸ்கூல் போகும் பிள்ளையார் செம. சிங்க் பிள்ளையார் போல இருக்கிறார்.

  மகனின் சாய் பிள்ளையார் அதற்கு மருமகள் வர்ணம் பூசியிருப்பது எல்லாம் அருமை. மகன் சிறு வயதில் வரைந்திருக்கும் ஓவியம் ஆஹா...குடும்பமே கலைக்குடும்பம்!

  அனைத்தும் ரசித்தேன் கோமதிக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பேரன் கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிப்பது போல இருப்பது அருமை. அவரின் ஸ்கூல் போகும் பிள்ளையார் செம. சிங்க் பிள்ளையார் போல இருக்கிறார்.//

   பேரனிடம் சொல்கிறேன்.
   மகன், மருமகளை பாராட்டியதற்கு நன்றி. மருமகள் ஏதாவது கைவேலை செய்து கொண்டுதான் இருப்பாள்.
   அனைத்தையும் ரசித்துபார்த்து கருத்துக்கள் வழங்கியதற்கு நன்றி கீதா.

   நீக்கு
 16. அன்பின் கோமதிமா,
  என்றும் நலமுடன் இருங்கள்.

  மீண்டும் மீண்டும் படங்களைப் பார்த்துக் ஒண்டிருக்கிறேன் மனம் நிறைய சந்தோஷம். கவின் அழகாக வளர்ந்து விட்டான். மொத்த கலைக் குடும்பத்துக்கு

  நெஞ்சம் நிறை ஆசிகள்.
  நீங்கள் செய்த வழிபாடும் எளிமையாக மிக இனிமையாக இருக்கிறது. கொண்டாடும் எல்லா இடங்களிலும் கண்ணனும் கணேசனும் நண்டனம் செய்வார்கள்.
  நம் மனத்தில் அவர்கள் புகுந்து விட்டால்
  நிம்மதியும் ஆரோக்கியமும் கூடும். கூட வேண்டும்.

  தங்கள் பல் வலி போய் ஆரோக்கியம் மிக வேண்டும்.

  எனக்கு அடுத்த வாரம் இன்னோரு பல் சோதனை
  இருக்கிறது. ஹாஹா.

  சிரித்தே கடப்போம்.

  வாழ்க வளமுடன் அன்புத் தங்கச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

   //மீண்டும் மீண்டும் படங்களைப் பார்த்துக் ஒண்டிருக்கிறேன் மனம் நிறைய சந்தோஷம். கவின் அழகாக வளர்ந்து விட்டான். மொத்த கலைக் குடும்பத்துக்கு//

   நன்றி அக்கா.

   //நம் மனத்தில் அவர்கள் புகுந்து விட்டால்
   நிம்மதியும் ஆரோக்கியமும் கூடும். கூட வேண்டும்.//

   ஆமாம் அக்கா அது போதும்.

   //தங்கள் பல் வலி போய் ஆரோக்கியம் மிக வேண்டும்.//
   நன்றி அக்கா.

   //எனக்கு அடுத்த வாரம் இன்னோரு பல் சோதனை
   இருக்கிறது. ஹாஹா.//

   பல் சோதனைகளை கடந்து வாங்க , சிரித்தே கடப்போம்.

   உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
   நீக்கு
 17. வீட்டு விழாக்கள் காணொளி படங்கள் அனைத்தும் அருமை. விழாக்கள் சிறப்பாக அமைந்துள்ளது.

  பேரன் கிருஷ்ணர் வேடத்தில் மிகவும் அழகாக இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
   பேரனின் கிருஷ்ணர் வேடம், விழா படங்கள், காணொளி எல்லாம் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி மாதேவி.

   நீக்கு
 18. அடடா? வடக்குக் கிருஷ்ணன் கோயிலுக்குப் போனீர்களா? எங்களுக்கு மிகவும் நெருக்கமான கோயில். ஆனால் அந்தப் பழைய பட்டாசாரியார்கள் யாருமே இப்போ இருக்கமாட்டாங்க. அங்கே உள்ள உற்சவரைக் கடைசியில் அருகிலுள்ள ராமாயணச் சாவடியில் தான் வைத்திருப்பார்கள். அங்கேயும் போய்ப் பார்க்கலாமே! மாடக் கோயில் இதுவும். தினம் தினம் போவேன். அதிலும் கோஷ்டி நடக்கையில் காலை/மாலை இருவேளையும் போயிடுவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
   ஆமாம் வடக்கு மாசி வீதி கிருஷ்ணன் கோவில் போய் வந்த போது உங்கள் நினைவுதான்.

   உங்களுக்கு மனதுக்கு நெருக்கமான கோவில், வீட்டுக்கு பக்கத்தில் இருப்பதால் அடிக்கடி போகும் கோவில் என்றும் முன்பு சொல்லி இருக்கிறீர்கள்.

   போய் வந்த பின் தங்கையிடம் சொன்னேன், அவளும் இராமாயணச்சாவடியில் இருக்கும் வீதி உலா போய் வந்த பின் என்றாள்.

   நானும் இந்த கோயிலுக்கு நிறைய் தடவை போய் இருக்கிறேன், ஆனால் உற்சவம் நடக்கும் போது போனது இல்லை.
   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 19. உங்கள் கணவர், மகன், பேரன் அனைவருமே போட்டி போட்டுக் கொண்டு வரைவது மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லாமும் அழகாய்ப் படங்கள் எடுத்திருப்பதோடு நல்லபடியாக வைத்துப் பாதுகாத்தும் வருகிறீர்கள். பேரனின் கிருஷ்ணன் வேஷம் மிக அழகு. சின்ன வயசில் உங்கள் ஜாடையாக இருந்தான். இப்போ மாறிவிட்டது. விநாயகர் சதுர்த்திப் படங்கள், கிருஷ்ண ஜயந்திப் படங்கள் எல்லாவற்றிற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கணவர், மகன், பேரன் அனைவருமே போட்டி போட்டுக் கொண்டு வரைவது மகிழ்ச்சியாக இருக்கிறது//

   நன்றி.

   //எல்லாமும் அழகாய்ப் படங்கள் எடுத்திருப்பதோடு நல்லபடியாக வைத்துப் பாதுகாத்தும் வருகிறீர்கள்.//

   பாதுகாத்து அவனிடம் கொடுத்து விட்டேன் மகன் வரைந்த படங்களை.

   இப்போது மகனை போல இருக்கிறான் பேரன்.

   எல்லா படங்களையும் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு