மகன் செய்த செல்ஃபி பிள்ளையார் போட்டோ பிரேம்
செல்ஃபி காலமாக இருப்பதால் காலத்துக்கு ஏற்றார்போல செல்ஃபி பிள்ளையார் போட்டோ பிரேம் செய்து இருக்கிறான் மகன் . அந்த யோசனையை பிள்ளையார் கொடுத்து இருக்கிறார் இந்த ஆண்டு. தன்னை செய்து மகிழும் குழந்தைகளுடன் செல்ஃபி எடுத்து கொள்கிறார் மகிழ்வாய்.
பேரன் கவின் அவன் செய்த களிமண் பிள்ளையாருடன் எடுத்து கொண்ட படத்தை அனுப்பி பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்து சொல்கிறான் அனைவருக்கும்.
அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்!
ஸ்ரீ மகா கணபதி ஆலயம் அரிசோனாவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு மகன் அழைத்து சென்றதை போன வருடம் பதிவு செய்து இருக்கிறேன். அந்த ஆலயத்தின் சார்பாக பிள்ளையார் சதுர்த்தி விழாவுக்கு மகன் செய்த செல்ஃபி பிள்ளையார் போட்டோ பிரேம். குழந்தைகள் தாங்கள் செய்த பிள்ளையாருடன் பிரேம் பக்கம் நின்று போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் செய்வார்கள் குழந்தைகள். அது அரிசோனாவில் 16 இடங்களில் நடக்கிறதாம். அந்த அந்த இடத்தில் உள்ள மக்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பிள்ளையார் அச்சில் களிமண்ணை நிறைத்து அவர்கள் வீட்டு பிள்ளையார் சதுர்த்திக்கு அவர்களே பிள்ளையார் செய்து கொள்கிறார்கள்.
மகன் அதற்கு போட்டோ பிரேம் தயார் செய்த போது எடுத்த படங்கள்
16 இடங்களில் செல்ஃபி வைக்க நாலு பிரேம்கள் செய்து கொடுத்து இருக்கிறான். அது சுழற்சி முறையில் ஒவ்வொரு இடத்திற்கும் போனதாம்.
பிள்ளையார் செய்ய சொல்லி கொடுக்கிறார் சிற்பி தண்டபாணி அவர்கள். அவர் மகாகணபதி கோயிலில் சிலைகளை செய்து கொண்டு இருக்கிறார். பல ஆண்டுகளாக அங்கே இருப்பதாக சொன்னான் மகன்.
குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடன் அமர்ந்து பார்க்கிறார்கள்.
எல்லோரும் ஆர்வமாக மகிழ்ச்சியாக பிள்ளையார் செய்கிறார்கள்
ஒவ்வொரு இடத்திலும் பிள்ளையார் செய்த குழந்தைகள் தாங்கள் செய்த பிள்ளையாருடன் எடுத்து கொண்ட படம்.
மகா கணபதி கோவில் தளத்தில் பகிரப்பட்ட படம்.(முக நூலில்)
நிறைய இருக்கிறது இது போன்ற படங்கள். https://www.facebook.com/MahaGanapati/ பார்க்கலாம்.
//குழந்தைகள் செய்த பிள்ளையார்களுக்கு பூஜை நடக்குமாம்.
ஆகஸ்ட் 29-செப்டம்பர் 10 செப்டம்பர் 3 ம் தேதி மாபெரும் கொண்டாட்டங்கள் மற்றும் செப்டம்பர் 10 ம் தேதி விசர்ஜன்.//
கோவில் நிர்வாகம் சொல்கிறது.
மகன் செய்த பிரேமில் அனைவரும் வித விதமாக பிள்ளையாருடன் செல்ஃபி எடுத்து கொள்வது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
பெரியவர்கள், சின்னவர்கள் என்று அனைவரும் செல்ஃபி பிள்ளையாருடன் படம் எடுத்து கொள்கிறார்கள்.
என் தங்கை வீட்டில் ஆண்டு தோறும் பிள்ளையார் கொலு 10 நாட்கள் வைப்பாள் . அவள் எடுத்து அனுப்பிய படம்.நான் இன்றுதான் அவள் வீட்டு கொலுவை பார்க்கப் போகிறேன்.
பேரன் இரண்டு வருடங்களுக்கு முன் கொலுவிற்கு பாடிய பிள்ளையார் பாடல்
அனைவருக்கும் மீண்டும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.
ஸ்ரீ மகா கணபதி அரசமரத்து பிள்ளையார்
அரசமர நிழலிலே வீற்றிருக்கும் பிள்ளையார்
வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
மூலவர் மகா கணபதி அருகம்புல் மாலை அணிந்து இருக்கிறார்.
வணங்கும் அடியாருக்கு அனைத்து மங்களத்தையும் தருவார்.
ஐந்து கரத்தினை, யானை முகத்தனை
இந்தினிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
மகா கணபதி கோவிலில் வைத்து விட்டார்கள்
செல்ஃபி பிரேமை.
விநாயகனை வணங்கி நலம் பெறுவோம்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
---------------------------------------------------------------------------------------------------
பிள்ளையாருக்குக் கொலு .... இப்போதான் கேள்விப்படறேன்.
பதிலளிநீக்குசெல்ஃபி பிள்ளையார் அழகு. கவினின் முயற்சிக்கும் அதில் ஆர்வத்துடன் ஈடுபடவைத்திருக்கும் பெற்றோருக்கும் பாராட்டுகள்.
ஸ்தபதி செய்த பிள்ளையார் அழகு. அதற்கான பிரேம்கள் செய்த கவின், மனதைக் கொள்ளைகொண்டான். வாழ்க பல்லாண்டு
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குசெல்ஃபி பிள்ளையார் பிரேம் செய்தது என் மகன். பிள்ளையார் கவின் செய்தான்.
தங்கை வீட்டுப் பிள்ளையார் கொலு முன்பு போட்டு இருக்கிறேன் என் பதிவில்.
பிள்ளையார் செய்யும் காணொளி பாருங்கள் நெல்லைத் தமிழன் பேரன் தான் செய்கிறான் பிள்ளையாரை, அதை சரிபார்க்கிறார் சொல்லி கொடுத்த ஸ்தபதி. நிறைய பிள்ளைகள் செய்வது அதில் இருக்கும்.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
காணொளியை அப்போதே பார்த்தேன். ஃப்ரேம் மாத்திரம் பசங்க செய்யறாங்க, பிள்ளையாரை ஸ்தபதி சரிபண்ணிக் கொடுக்கிறார் என்று நினைத்தேன்.
நீக்குகவின் பாடியதும் நன்றாக இருக்கிறது
குழந்தைகள் பிள்ளையார் செய்யும் காணொளி பார்த்தீர்களா மகிழ்ச்சி. மகன் செய்த செல்ஃபி பிரேம். குழந்தைகள் தாங்கள் செய்த பிள்ளையாருடன் செல்ஃபி எடுத்து கொள்கிறார்கள்.
நீக்குகவின் பாடியதை கேட்டது மகிழ்ச்சி.
மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
செல்ஃபி பிள்ளையார் படங்கள் அருமை.
பதிலளிநீக்குகாணொளிகள் கண்டேன் தங்களது பெயரின் கவின் அழகாக பாடுகிறார் வாழ்த்துகள்.
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குகாணொளிகள் பார்த்து கேட்டு கருத்து சொன்னதற்கு நன்றி.
கவினுக்கு வாழ்த்துகள் சொன்னதற்கு நன்றி.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களுக்கு நன்றி.
செல்ஃபி பிள்ளையார் சிறப்பு... படங்களும் காணொளிகளும் அருமை...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்கு//செல்ஃபி பிள்ளையார் சிறப்பு... படங்களும் காணொளிகளும் அருமை...//
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்களும் காணொலியும் அருமை
பதிலளிநீக்குவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
மகன் நல்ல யோசனையுடன் செய்திருக்கிறார் செல்ஃபி பிள்ளையாரை! குழந்தைகள் உற்சாகத்துடன் பிள்ளையார் செய்திருக்கிறார்கள். படங்களும் பகிர்வும் நன்று.
பதிலளிநீக்குதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்குமகனின் யொசனையை, குழந்தைகள் உற்சாகத்துடன் பிள்ளையார் செய்தவைகளை ரசித்து கருத்து சொன்னதற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ராமலக்ஷ்மி.
கோமதிக்கா மிக அருமையாகச் செய்திருக்கிறார் கவின் அப்புறம் உங்கள் மகன். ஃப்ரேம் மும் செல்ஃபி பிள்ளையார் எல்லாம் அழகோ அழகு. காலத்திற்கு ஏற்ற பிள்ளையார்.
பதிலளிநீக்குஅங்கு சிற்பி தண்டபாணி அவர்கள் சொல்லிக் கொடுப்பதும் பிள்ளைகள் அனைவரும் ஆர்வமாகக் கற்றுக் கொள்வதும் மகிழ்ச்சியாக இருக்கிறது கோமதிக்கா.
உங்கள் மகன் செய்த ஃப்ரேமில் செல்ஃபி பிள்ளையாரோடு அனைவரும் ஃபொட்டோ எடுத்துக்கறதும் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு
மகன், பேரன் கவின் திறமைகள் ரொம்ப வியக்க வைக்கிறது. எல்லாம் மாமாவின் ஜீன் மற்றும் அவர் காலடிகள்!
இப்படிக் கேட்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு
படங்கள் மிக நன்று
கீதா
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
நீக்கு//கோமதிக்கா மிக அருமையாகச் செய்திருக்கிறார் கவின் அப்புறம் உங்கள் மகன். ஃப்ரேம் மும் செல்ஃபி பிள்ளையார் எல்லாம் அழகோ அழகு. காலத்திற்கு ஏற்ற பிள்ளையார்.//
நன்றி.
//உங்கள் மகன் செய்த ஃப்ரேமில் செல்ஃபி பிள்ளையாரோடு அனைவரும் ஃபொட்டோ எடுத்துக்கறதும் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு//
ஆமாம், எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
//மகன், பேரன் கவின் திறமைகள் ரொம்ப வியக்க வைக்கிறது. எல்லாம் மாமாவின் ஜீன் மற்றும் அவர் காலடிகள்!
இப்படிக் கேட்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு//
நல்லது கீதா.
படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
பேரன் பாடுவது நன்றாக இருக்கு. ராகம் வருகிறது நன்றாகப் பயிற்சி செய்தால் வந்துவிடும்.
பதிலளிநீக்குவெட்கப்பட்டு ஒதுங்காமல் எல்லாம் முன்னே நின்று செய்வதும் மிக நல்ல விஷயம்.
பிள்ளைகள் எல்லோரும் செய்து ஃபொட்டோ அதுவும் அழகாக இருக்கிறது
உங்கள் தங்கை பிள்ளையார் கொலு வைப்பது மிகவும் சிறப்பு. என் தோழி வீட்டிலும் இப்படி வைப்பதுண்டு. அதற்காகவே நிறைய பிள்ளையார் பொம்மைகள் விதம் விதமாக வாங்கிச் சேர்த்திருப்பாள் கூடவே தானும் செய்வதுண்டு. போய்ட்டு வந்து ஃபோட்டோ எடுத்து வாங்க வித்தியாசமான பிள்ளையார் வந்திருப்பார். போன வருஷமே கொரோனா பிள்ளையார் வந்திட்டார். இந்த வருஷம் ஒமைக்ரான் வந்திருப்பாரொ என்னவோ!!!!
அனைத்தும் ரசித்தேன் கோமதிக்கா...
கீதா
//பேரன் பாடுவது நன்றாக இருக்கு. ராகம் வருகிறது நன்றாகப் பயிற்சி செய்தால் வந்துவிடும்.//
நீக்குஆமாம்.
//வெட்கப்பட்டு ஒதுங்காமல் எல்லாம் முன்னே நின்று செய்வதும் மிக நல்ல விஷயம்.
பிள்ளைகள் எல்லோரும் செய்து ஃபொட்டோ அதுவும் அழகாக இருக்கிறது//
ஆமாம், குழந்தைகள் எல்லாம் பங்குபெற வைக்கிறார்கள் பெற்றோர்கள். குழந்தைகளும் குதுகலமாக செய்கிறார்கள்.
அனைத்தையும் ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.
செல்பி பிள்ளையார் வடிவம் நல்ல யோசனை.மகனும் பேரனும் அசத்துகிறார்கள். பிள்ளையாரின் கையிலிருந்து செல்பி ஸ்டிக் இணைப்பு தந்து, அதில் செல்போன் வைத்து நாம் எடுத்தால் பிள்ளையாரே எடுத்தது போல படம் வருமோ...! 1/4
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குநாம் அந்த பிரேமில் நின்று கொண்டால் பிள்ளையார் நம்மை எட்ப்பது போல வரும்.
மகன், பேரனை பாராட்டியதற்கு நன்றி
பேரன் செய்த பிரேம் சுழற்சி முறையில் இடம் மாறுவது பெருமை.
பதிலளிநீக்குதோட்டத்தில் கவின் எடுத்துக் கொள்ளும் முறைதான் அந்த செல்பி பிரேமுக்கு சரியான முறை.. பிள்ளையாருடன் சேர்ந்து எடுத்துக் கொள்ளுதல். மற்றவர்கள் ப்ரேமுக்குள் நின்று போஸ் கொடுக்கிறார்கள்! 2/4
பேரன் செய்த பிரேம் சுழற்சி முறையில் இடம் மாறுவது பெருமை. //
நீக்குஆமாம், மகிழ்ச்சியாக இருக்கிறது. (மகன் செய்த பிரேம்)
//தோட்டத்தில் கவின் எடுத்துக் கொள்ளும் முறைதான் அந்த செல்பி பிரேமுக்கு சரியான முறை.. பிள்ளையாருடன் சேர்ந்து எடுத்துக் கொள்ளுதல்//
ஓ ! மகிழ்ச்சி. கவினிடம் சொன்னேன் நன்றி சொன்னான்.
சிற்பியிடம் பயிற்சி பெறும் வீடியோ பார்த்து மகிழ்ந்தேன். நம்மூரிலாவது எதிர்ப்பு இருக்கும். வெளிநாட்டில் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். 3/4
பதிலளிநீக்குவீடியோ பார்த்தது மகிழ்ச்சி. நம்மூரில் என் மகன் பிள்ளியயார் வாங்க அவன் அப்பாவுடன் போகும் போது பிள்ளையார் செய்பவரிடம் பிள்ளையார் செய்ய வேண்டும் என்று களிமண் வாங்கி வருவான். ஒவ்வொரு ஆண்டும் அவன் ஒரு பிள்ளையார் செய்து விடுவான். அதை கரைக்கும் போது என் பிள்லையாரை கரைத்து விட்டீர்களே என்று வருத்தப்படுவான். இப்போது அவன் செய்யும் பிள்ளையார்களை அப்படியே வைத்து கொள்கிறான்.
நீக்குஇந்த முறை அவன் ஆசை பட்டு வாங்கி வந்த கொலு பொம்மை பிள்ளையாரைதான் பூஜைக்கு எடுத்து கொண்டேன்.
புது பிள்ளையார் வாங்க வில்லை. மஞ்சள் பிள்ளையாரை கரைத்துக் கொள்வோம். சார் தான் வாங்கி வருவார்கள்பிள்ளையார், அலங்காரம் அபிசேஷகம் செய்வார்கள்.
பேரனின் பாடலும் சூப்பர். வேஷ்டி சட்டை கெட்டப்பும் சூப்பர். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதத்துவ நிலையைத் தந்தெனையாண்ட வித்தக விநாயகா விரைகழல் சரணே! 4/4
மூன்று வருடங்களுக்கு முன் பாடிய பாடல்.
நீக்குஅவன் பாடலை ரசித்து வாழ்த்தியது மகிழ்ச்சி.அனைத்து கருத்துகளுக்கும் நன்றி.
உங்கள் பேரன் இங்கு இருப்பது போல் வேஷ்டி எல்லாம் அணிந்து இருப்பது நல்ல விஷயம்.
பதிலளிநீக்குமகனும், பேரனும் செய்த விநாயகர் பொம்மைகள், செல்ஃபி பிள்ளையார் வித்தியாசமான கற்பனை அழகாகவும் செய்திருக்கிறார் உங்கள் மகன்...எல்லாமே அருமை. இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நல்ல திறமை.
ஃப்ரேமில் செல்ஃபி பிள்ளையார் இருப்பது அழகாக இருக்கிறது. கடைசிப் படம் ரொம்ப அழகாக இருக்கிறது பின்பக்கம் சீன் முன்பக்கம் ஃப்ரேம் என்று அது அருமையான ஷாட்,
உங்களின் தங்கையின் வீட்டு கொலு, குழந்தைகள் பிள்ளையார் பொம்மை செய்யக் கற்றுக் கொள்வது அதுவும் அந்தக் காணொளி எல்லாமே மகிழ்ச்சியான விஷயங்கள்.
பிள்ளையார் படங்கள் அலங்காரத்துடன் அழகாக இருக்கிறார். அரசமரத்தடிப் பிள்ளையார் முதல் எல்லாமே சிறப்பு. அமெரிக்காவிலும் விநாயகர் சதுர்த்தியைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள் என்பது மகிழ்வான விஷயம்.
எல்லாமே ரசித்தேன்
துளசிதரன்
வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
நீக்குபேரன் நம் பண்டிகைகள் சமயம் வேஷ்டி அணிந்து கொள்வான்.
மகன், பேரன் செய்தவைகளை பாராட்டி
மகனை, பேரனை வாழ்த்தியதற்கு நன்றி.
ஃப்ரேமில் செல்ஃபி பிள்ளையார் மகன் செய்தது. கோவிலில் அழகாய் வைத்து இருக்கிறார்கள் கடைசி படம்.
பின் பக்கம் சீன் விழா காலங்களில் தெய்வங்களை அத முன் வைப்பார்கள்.
மகா கணபதி கோவிலில் உள்ள பிள்ளையார்கள் எல்லாம் மிக அழகாய் இருக்கும். இரண்டு அரச மரம் இருக்கிறது அந்த கோவிலில்.
எல்லா பண்டிகைகளையும் சிறப்பாக செய்து ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளும் வாய்ப்பாக பயன்படுத்தி மகிழ்கிறார்கள்.
அவர்களுக்கு நம் ஊரில் இருக்கும் உணர்வு ஏற்படுகிறது.
உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.
அருமையான வேலைப்பாடுகள். செல்ஃபி பிள்ளையார் ஃப்ரேமும் அழகு. உங்கள் பேரன் செய்திருக்கும் பிள்ளையாரும் அழகு. குழந்தைகள் ஆர்வமுடன் இவற்றில் கலந்து கொள்வது மகிழ்வாகவும் இருக்கிறது. எல்லாப் பண்டிகைகளும் மேலை நாடுகளில் விமரிசையாகக் கொண்டாடப்படுவதும் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. எல்லாப் படங்களும் நன்றாக வந்திருக்கின்றன. உங்கள் தங்கை ஆரவமுடன் அழகாய்ப் பிள்ளையார் கொலு வைத்திருக்கிறார். பாராட்டுகளைச் சொல்லிவிடுங்கள். ஆந்திராவில் கிருஷ்ண ஜயந்தி பிள்ளையார் சதுர்த்திக்குக் கொலு வைத்துப் பார்த்திருக்கேன். ராஜஸ்தானிலும் சில ஊர்களில் கிருஷ்ண ஜயந்தியில் கொலு மாதிரி வைப்பார்கள்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்கு//அருமையான வேலைப்பாடுகள். செல்ஃபி பிள்ளையார் ஃப்ரேமும் அழகு.//
நன்றி.
//குழந்தைகள் ஆர்வமுடன் இவற்றில் கலந்து கொள்வது மகிழ்வாகவும் இருக்கிறது. எல்லாப் பண்டிகைகளும் மேலை நாடுகளில் விமரிசையாகக் கொண்டாடப்படுவதும் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. //
அவர்கள் குழந்தைகளுக்கு நம் நாட்டில் இப்படித்தான் விழாக்கள் இருக்கும். பிள்ளையார் சதுர்த்தி சமயம் பலகையை எடுத்துக் கொண்டு அப்பாவுடன் பிள்ளையார் வாங்க போவேன் என்று தங்கள் குழந்தைகளிடம் தங்கள் மலரும் நினைவுகளிய பகிர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு பண்டிகை நினைவுகளை சொல்லி அவர்களையும் உற்சாகமாக பண்டிகையை கொண்டாட வைக்கிறார்கள்.
//உங்கள் தங்கை ஆரவமுடன் அழகாய்ப் பிள்ளையார் கொலு வைத்திருக்கிறார். பாராட்டுகளைச் சொல்லிவிடுங்கள்.//
சொல்லி விடுகிறேன்.அவள் சார்பாக உங்களுக்கு என் நன்றியை சொல்கிறேன்.
//ஆந்திராவில் கிருஷ்ண ஜயந்தி பிள்ளையார் சதுர்த்திக்குக் கொலு வைத்துப் பார்த்திருக்கேன். ராஜஸ்தானிலும் சில ஊர்களில் கிருஷ்ண ஜயந்தியில் கொலு மாதிரி வைப்பார்கள்.//
டெல்லியில் பார்த்து இருக்கிறேன். குழந்தைகள் அவர்கள் வீட்டுமுன் வைப்பார்கள். கிருஷ்ணன் கொலு. சிறந்த கொலுவுக்கு பரிசு கிடைக்கும்.
பேரன் ஒரு முறை பரிசு வாங்கி இருக்கிறான்.
துர்கா ஊருக்கு போய் தாத்தா, பாட்டியிடம் பேசிவிட்டாளா?
குழந்தை ஊருக்கு போனவுடன் வீடு வெறிச் என்று இருக்கும் , பேத்தியின் நினைவாகவே இருக்கும் இல்லையா?
உங்கள் கருத்துக்கு நன்றி.
பார்க்க வருபவர்கள் எல்லாம் காசு போடுவார்கள், குழந்தைகள் வந்து பார்ப்பவர்களுக்கு இனிப்புகள் வழங்குவார்கள்.
ஞாயிறன்று புறப்பட்ட நாங்கள் நேற்று தான் தஞ்சைக்குத் திரும்பினோம்.. இடையில் மழையின் காரணமாக அடிக்கடி மின்தடை.. எங்கும் தொலைபேசியைப் புதுப்பிக்கவும் வலைத்தளங்கள் வருவதற்கும் இயலவில்லை..
பதிலளிநீக்குகண் நிறைந்த பதிவு.. காலத்திற்கு ஏற்ற செல்ஃபி பிள்ளையார் அருமை.. பரிபூரண அருள் தங்கள் அனைவரோடும் தங்கும்..
நல்வாழ்த்துகள்..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் ஆன்மீக பயணம் மன நிறைவாக இருந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
இங்கும் நல்ல மழைதான்.
//கண் நிறைந்த பதிவு.. காலத்திற்கு ஏற்ற செல்ஃபி பிள்ளையார் அருமை..//
நன்றி.
//பரிபூரண அருள் தங்கள் அனைவரோடும் தங்கும்..
நல்வாழ்த்துகள்..//
உங்கள் கருத்துக்கும், நல்வாழ்த்துகளுக்கும் நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. பிள்ளையார் படங்கள் அனைத்தும் கண் கொள்ள காட்சியாக உள்ளது. குழந்தைகள் அனைவரும் சிரத்தையுடன் பிள்ளையார்கள் செய்வதும், தங்கள் பேரன் பாடும் காணொளியும் கண்டு களித்தேன் .
தங்கள் மகன் செய்த செல்ஃபி பிள்ளையார் பிரேம் அழகாக உள்ளது. அதில் பேரன் கவின் தான் செய்த பிள்ளையாருடன் போஸ் தருவதுமான படம் மிகவும் நன்றாக உள்ளது.
தங்கள் மகனும், பேரனும் இவ்விதமான கலைகளில் ஆர்வம் காட்டி சிறந்து விளங்குவது மிகவும் அரிய செயல். இருவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவியுங்கள்.
உங்கள் தங்கை வீட்டு பிள்ளையார் கொலு அற்புதம். நான் இப்போதுத்தான் இந்த மாதிரி பிள்ளையாருக்கென கொலு வைப்பதை பார்க்கிறேன். பிள்ளையார் பூஜையன்று எட்டு பிள்ளையார்கள் வைத்தால் நல்லதென்று சொல்வார்கள். அதன்படி நானும் வருடந்தோறும் எட்டு பிள்ளையார் வைப்பேன். ஆனால் கொலு இப்போதுதான் பார்க்கிறேன். மிகவும் அழகாக உள்ளது தங்கை வீட்டு கொலு. அவர்களுக்கு என் பாராட்டுக்களை தெரிவியுங்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள். தாமதமானாலும் இன்னமும் சதுர்த்தி விழாவை கொண்டாடுகிறார்களே.. பதிவு நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா, ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குகாணொளி கண்டு களித்தது மகிழ்ச்சி.
//இருவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவியுங்கள்.//
சொல்லி விடுகிறேன், நன்றி.
//பிள்ளையார் பூஜையன்று எட்டு பிள்ளையார்கள் வைத்தால் நல்லதென்று சொல்வார்கள். அதன்படி நானும் வருடந்தோறும் எட்டு பிள்ளையார் வைப்பேன். //
எனக்கு இது புது செய்தி. நிறைய பிள்ளையார்கள் பார்ப்பது நல்லது என்பார்கள் கேள்வி பட்டு இருக்கிறேன்.எங்கள் வீட்டில் நிறைய பிள்ளையார் இருக்கிறார்கள். கண்ணாடி அலமாரியில் இருக்கிறார்கள்.
தங்கை பிள்ளையார் கொலு பல வருடமாய் வைக்கிறாள்.
//உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள். தாமதமானாலும் இன்னமும் சதுர்த்தி விழாவை கொண்டாடுகிறார்களே.. பதிவு நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.//
மகா கணபதி கோவிலில் 10 தேதி வரை விழா இருக்கிறது. இன்று 1000 பேருக்கு சாப்பாடு போடுகிறார்கள். பாட்டு கச்சேரி, நடனம், சொற்பொழிவு என்று நடக்கைறது. அதனால் தாமதம் இல்லை,
உங்கள் வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் நன்றி.
வித்தியாசமாக பிள்ளையார் கொலு! சிறப்பாகத்தான் இருக்கிறது! சிற்பி தண்டபாணி அவர்களின் கை வண்ணம் அருமை! பேரனுடைய ' பிள்ளையார் வணக்கப்பாடலும் அருமை!
பதிலளிநீக்குவணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
நீக்குஅனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
உங்கள் மகனுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்கையின் கொல்லும் நன்றாக இருக்கிறது அவர்களுக்கு வாழ்த்துகள்.
கவினின் பாடல் சிறப்பு . பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குமகனுக்கு வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி.
தங்கை வீட்டு கொலுவிற்கு வாழ்த்து சொன்னதற்கும், மற்றும் பேரனின் பாடலை பாராட்டி வாழ்த்துக்கள் சொன்னதற்கும் நன்றிகள்.