ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் கோயில்


அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில்

தங்கை மகள் வளைகாப்பு இந்த மாதம் 5 ம் தேதி  அருப்புக்கோட்டையில் நடந்தது. வளைகாப்பு நடந்த மண்டபத்திற்கு அருகில் இந்த சொக்கநாதர் கோவில் இருந்தது.  உறவினர்களுடன்  போய் தரிசனம் செய்தேன்.

இந்த சொக்கநாதர் கோயில் முதலாம் சடையவர்மன் குலசேகரபண்டியன்  காலத்தில் கட்ட ஆரம்பித்து அவரின் சகோதரர்   முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்  காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது. இப்படி பிற்கால பாண்டியர்கள் கல்வெட்டில் இருக்கிறதாம்.
1000 வருடம் கடந்த பழமையான கோயில். மாறவர்மன்   அந்தப்புரத்தில் இருந்த போது ராஜகுரு பரஞ்சோதி முனிவர்  அவசரவேலையாக  காணவந்து இருக்கிறார். காவலர்கள் அவரை  தடுத்து விட்டார்களாம். பிறகு மன்னரிடம் ராஜகுரு தங்களை காணவந்து போய் விட்டார் என்று சொன்னதும் வருத்தப்பட்டு ராஜகுருவிடம் மன்னிப்பு கேட்டு குரு அபச்சாரம் செய்ததற்கு என்ன பரிகாரம் என கேட்டதற்கு

"செங்காட்டிருக்கை இடத்து  வளி" என்று சொல்லபடும் இடத்தில் தற்போது பேர் அருப்புக்கோட்டை. பரஞ்சோதி முனிவர்  சிவன் கோயில் கட்டி வழிபட சொன்னதால்  கடடப்பட்ட   தலம். என்று கோயில் தலவரலாறு சொல்கிறது.

   (மன்னர் ராஜகுரு பரஞ்சோதி முனிவருக்கு தெரியாமல் செய்த  அவமதிப்புக்கே பயந்து போய் கேட்டு இருக்கிறார்) 

  

வில்வ வனத்தில் சுயம்பு மூர்த்தியாக   சொக்க தங்கமாய் கிடைத்த மூலவர்.

குருதோஷம் போக்கும் கோயில் என்று சொல்லப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் திருச்சுழி போகும் பாதையில் அமைந்து இருக்கிறது.

சொக்கநாத  சுவாமி
 படம் எடுக்க வேண்டாம் என்று எங்கும் போடவில்லை  யாரும் சொல்லவும் இல்லை இருந்தாலும் தூரத்திலிருந்து எடுத்தேன்
மீனாட்சி அம்மன்
காசி விஸ்வநாதர், விசாலாட்சி


வேறு எங்கும் விளக்குகள் வைக்க வேண்டாம் என்று பெரிய பெரிய விளக்குகள் வைத்து இருக்கிறார்கள் ஒவ்வொரு சன்னதி முன்பும் .

பிரகாரத்தில் நாகர்  அவருக்கு  பால் அபிஷேகம் ஆகி இருந்தது.
ராஜ கோபுரம் 1984ல் கட்டி இருக்கிறார்கள்.

கோவில் சுத்தமாக இருக்கிறது.

ஸ்ரீ லக்ஷ்மி

எல்லாம் வல்ல சித்தர் மதுரையில் இருப்பது போலவே இருக்கிறார். பூ பந்தல் போட கயிறு கட்டி வைத்து இருக்கிறார்கள் இங்கும். மதுரையில் பக்தர்கள் அடிக்கடி மலர் அலங்காரம், மலர் பந்தல் செய்வார்கள் வேண்டிக் கொண்டு. (நானும் செய்து இருக்கிறேன்) எல்லாம் வல்ல சித்தர் என்று போட்டு இருக்கும் மதுரையில். இங்கு வல்ல சித்தர் என்று போட்டு இருக்கிறது. சந்தனக்காப்பில் இருந்தார்.

துர்கை
அண்ணாமலையார் சந்தனக் காப்பில்
சுவாமி விமானம்
அம்மன் விமானம்

தலவிருட்சம் வில்வ மரம்
இந்த கோயிலில் சங்கர நாராயணரும் இருக்கிறார்
தீர்த்தக் கிணறு
பிரகாரத்தில் இருந்த சிவன்

உற்சவ சிலையில் சோமாஸ் கந்தர்  சிலை பார்த்து இருப்போம், இங்கு கற்சிலை சுவாமி, அம்மன் நடுவில் முருகபெருமான்.
இந்த சோமாஸ் கந்தரை தரிசனம் செய்தால் சகல நன்மைகளும் கிடைக்குமாம்.

.



 


நேரம் கிடைக்கும் போது ஜெயா தொலைக்காட்சியில் வைத்த இந்த சொக்கநாதர் கோயிலை தரிசனம் செய்யலாம், அதன் சிறப்புகளை குருக்கள் சொல்வதை கேட்கலாம். 
சந்திரன், ரோகிணி, கிருத்திகாவுடன் இருக்கிறார், வள்ளி தெய்வானையுடன் முருகன், சரஸ்வதி,  பைரவர் , சப்தகன்னியர்கள், 63 நாயன்மார்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு ஒவ்வொரு மாதப்பிறப்புக்கு புது ஆடைகள் அணிவிக்கப்பட்டு அபிஷேக , அலங்காரம் செய்யப்படுமாம். மாத கடைசியில் வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை உண்டாம்.


ஆண்டு தோறும் மார்ச் 20 முதல் 30 வரை சூரிய ஒளி  சொக்கநாதர் பேல் படுமாம். (சூரியன் வழி பாடு செய்கிறார்)

மீனாட்சி, சொக்கநாதர் அனைவருக்கும் எல்லா நலமும் அருள வேண்டும்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------

44 கருத்துகள்:

  1. படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது.

    விபரங்கள் நன்று சகோ. காணொளியும் கண்டேன்.

    பதிலளிநீக்கு
  2. வனக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
    படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது//

    நன்றி.
    விவரங்களை படித்து, காணொளி பார்த்தது அறிந்து மகிழ்ச்சி. கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. முதல் படமே பளிச்!!! அருமை கோமதிக்கா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
      முதல் படத்தை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      கோயிலின் முன் பக்கம் எடுக்க முடியவில்லை கொட்டகை போட்டு இருந்தார்கள்.
      உள் பக்கம் கோபுரத்தைதான் படம் எடுத்தேன்.
      நன்றி கீதா.

      நீக்கு
  4. அருப்புக்கோட்டை யில் ஸ்ரீ சொக்கநாதர் கோயிலைப் பற்றி கேள்விப் பட்டிருக்கின்றேன்.. மதுரை திருச்செந்தூர் பேருந்து வழித்தடத்தில் பலமுறை கடந்திருக்கின்றேன்..

    அதெல்லாம் இரவுப் பயணங்கள்.. இப்போது ரயில் பயணம் தான்.. அருப்புக்கோட்டையில் இறங்குவதற்கு இதுவரை வாய்க்க வில்லை..

    பதிவில் சிறப்பான தரிசனம்.. அழகான படங்கள்...
    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      எனக்கும் தங்கை மகள் மூலம் கிடைத்தது அருப்புக்கோட்டை பயணம். கண்டிப்பாய் வளைகாப்புக்கு வர வேண்டும் என்றாள். பெரிய தம்பி சென்னையிலிருந்து வந்து இருந்தான் குடும்பத்துடன் அவன் அழைத்து போனான். மண்டபம் அருகில் இருந்ததால் போகும் சந்தர்ப்பம் கிடைத்தது.
      தம்பி மனைவி அக்கா தம்பியும் போய் வாங்க நாங்க மண்டபத்திற்கு போகிறோம் என்று போய் விட்டார்கள். நாங்கள் இருவரும் இளமை காலத்தை நினைத்து கொண்டு உற்சாகமாக கோயிலுக்கு போனோம்.

      நாங்கள் போன நேரம் நடை சாற்றும் நேரம் அவசரம் அவசராமாக கும்பிட்டோம். தம்பி குடும்பத்தினர் பயண அலுப்பு என்று வரவில்லை,
      நானும் என் தம்பியும் போய் பார்த்தோம். சிறு வயதில் தம்பி அம்மாவுடன் கோயில் தரிசனம் செய்த மகிழ்ச்சி கிடைத்தது. அவனும் மகிழ்ந்தான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. அக்காவுக்கும் தம்பிக்கும் பெற்றோர் நினைவுகளுடன் இளமைக்கால நினைவுகள் வந்தது நெகிழ்ச்சி, மகிழ்ச்சி..

      நீக்கு
    3. ஆமாம் ஸ்ரீராம், இளமைக்கால நினைவுகள் வந்தது மகிழ்ச்சிதான்.
      வண்டியூர் தெப்பக்குளத்தை கார் தாண்டும் போது தம்பிடம் சொன்னேன்"படித்துறையில் அம்மா மடியில் நீ இருப்பாய் நான் அம்மாவின் தோளில் சாய்ந்து சிரித்து கொண்டு இருப்பேன்" அந்த புகைப்படத்தை பார்க்கும் போதேல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும் என்று.பழங்கதை பேசினோம்.

      நீக்கு
  5. படங்கள் அனைத்தும் தெளிவாகவும் அழகாகவும் இருக்கின்றன. சிறு வயதில் கிடைத்த மகிழ்ச்சி திரும்பக்கிடைத்ததாக எழுதியிருப்பதைப்படித்த போது நெகிழ்ச்சியாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்

      //படங்கள் அனைத்தும் தெளிவாகவும் அழகாகவும் இருக்கின்றன.//

      நன்றி.

      //சிறு வயதில் கிடைத்த மகிழ்ச்சி திரும்பக்கிடைத்ததாக எழுதியிருப்பதைப்படித்த போது நெகிழ்ச்சியாக இருந்தது.//

      ஆமாம், உடன்பிறப்புகளை பார்க்கும் போதும் அவர்களுடன் மலரும் நினைவுகளை பேசி சிரித்து மகிழ்வதும் மனதுக்கு மகிழ்ச்சியான தருணம். அவனை இப்படி ஏதாவது விழாக்களில் தான் சந்திக்க முடிகிறது.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  6. அழகான அருமையான படங்கள்... நாமே கோவிலை சுற்றிப் பார்த்த உணர்வு வருகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      நீங்களும் சுற்றிப்பார்த்து விட்டீர்களா? மகிழ்ச்சி.
      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. விருது நகர் மாவட்டம் அருப்பு கோட்டை அருள் மிகும் சொக்கநாதர் மீனாட்சியம்மனை தரிசித்துக் கொண்டேன். கோவிலின் வரலாறு பற்றி தெரிந்து கொண்டேன். அந்த கால மன்னர்களின் குருபக்தி சிறந்ததுதான்.அம்மன்னர்கள் வழியே மக்களும் நடந்தார்கள். குருஅபசாரம் வந்து விட கூடாதென்பதற்காக பாண்டிய மன்னர் ஒரு கோவிலையே கட்டியது உண்மையிலேயே போற்றப்பட கூடியது.

    படங்கள் அனைத்தும் அருமையாக வந்திருக்கின்றன. முதல் படத்தில் கோவிலின் கோபுர தரிசனம் பெற்றுக் கொண்டேன். படங்கள் வானத்தில் மேக கூட்டங்களின் அழகுடனும் சேர்ந்து மிக அருமையாக வந்துள்ளன

    புகைப்படம் எடுக்க தடையில்லாததால் கர்ப்பகிரஹத்தில் இருக்கும் சொக்கநாதரையும், அன்னை மீனாட்சி அம்மையையும் நாங்களும் நன்றாகவே தரிசிக்க முடிந்தது.

    ஒவ்வொரு பிராகார சன்னிதிகளின் முன்னால் இருக்கும் பித்தளை விளக்குகள் நன்றாக உள்ளது. நிறைய எண்ணெய் விட்டு தீபங்கள் நீண்ட நேரம் ஒளி விட வசதியான விளக்குளை அமைத்திருப்பது சிறப்பு.

    வில்வ மரம் படம் அருமையாக உள்ளது சங்கர நாராயணனையும், சோமாஸ்கந்தரையும் தரிசித்து கொண்டேன். காணொளியும் கண்டேன். சிவபெருமானுக்கு நடைபெற்ற அபிஷேக ஆராதனைகளை கண்டு கொண்டேன். உங்களுடன் நாங்களும் வந்த உணர்வை தந்த பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் கமலா, ஹரிஹரன், வாழ்க வளமுடன்
    //பதிவு அருமையாக உள்ளது.//

    நன்றி.

    //அந்த கால மன்னர்களின் குருபக்தி சிறந்ததுதான்.அம்மன்னர்கள் வழியே மக்களும் நடந்தார்கள். குருஅபசாரம் வந்து விட கூடாதென்பதற்காக பாண்டிய மன்னர் ஒரு கோவிலையே கட்டியது உண்மையிலேயே போற்றப்பட கூடியது.//

    ஆமாம், போற்றப்பட வேண்டியதுதான். அருமையான கோயில் கிடைத்தது நமக்கு தரிசனம் செய்ய.

    //படங்கள் அனைத்தும் அருமையாக வந்திருக்கின்றன. முதல் படத்தில் கோவிலின் கோபுர தரிசனம் பெற்றுக் கொண்டேன். படங்கள் வானத்தில் மேக கூட்டங்களின் அழகுடனும் சேர்ந்து மிக அருமையாக வந்துள்ளன//

    காலை 11 மணி சமயம் அதனால் வானம் நன்றாக இருக்கிறது.கோபுரத்தை நேரே நின்று எடுக்க முடியவில்லை. கொஞ்சம் ஓரமாக நின்று தான் எடுத்தேன்.

    //புகைப்படம் எடுக்க தடையில்லாததால் கர்ப்பகிரஹத்தில் இருக்கும் சொக்கநாதரையும், அன்னை மீனாட்சி அம்மையையும் நாங்களும் நன்றாகவே தரிசிக்க முடிந்தது.//
    பிகைப்படம் எடுக்க தடை இல்லை என்றாலும் தூரத்திலிருந்து அலைபேசியில் எடுத்தேன். காமிரா என்றால் ஜூம் செய்து எடுத்து இருக்கலாம்.

    //ஒவ்வொரு பிராகார சன்னிதிகளின் முன்னால் இருக்கும் பித்தளை விளக்குகள் நன்றாக உள்ளது. நிறைய எண்ணெய் விட்டு தீபங்கள் நீண்ட நேரம் ஒளி விட வசதியான விளக்குளை அமைத்திருப்பது சிறப்பு.//

    நீங்கள் சொல்வது போல நீண்ட நேரம் ஒளிவிட வசதியான விளக்குளை அமைத்து இருப்பது சிறப்புதான்.

    காணொளியும் பார்த்தது மகிழ்ச்சி கமலா. அனைத்தையும் ஒன்று விடாமல் குறிப்பிட்டு விரிவான உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி







    பதிலளிநீக்கு
  9. உங்களோடு சேர்ந்து நானும் கோவிலைச் சுற்றி வந்த உணர்வு...  எடுக்கக் கோடானது என்று தெரிந்தாலும், சொக்கநாதரை இன்னும் கிட்டக்க எடுத்திருக்கலாமோ என்கிற ஏக்கமும் மனதில்.  தீர்த்தக் கிணற்றுக்கு  பின்னால் இருக்கும் மரம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      என்னுடன் ஸ்ரீராம் தம்பியும் சுற்றி வந்தது மகிழ்ச்சி.
      சொக்கநாதரை இன்னும் பக்கத்தில் எடுத்து இருக்கலாம். எடுக்கலாம், எடுக்க வேண்டாம் என்று மனது சொன்னது, படியை விட்டு கீழே இறங்கிய உடன் கீழே இருந்து இறைவன் தெரிந்தார் எடுத்து விட்டேன். தீர்த்தக்கிணறும் அந்த மரமும் பார்க்க அழ்காய் இருந்தது அதனால் எடுத்தேன், உங்களும் பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
    2. நானும் கோவிலில் படங்கள் எடுக்கும்போது சில நேரங்களில் வேண்டாம் என மனது சொல்லும். விட்டுவிடுவேன். கேரளக் கோவில்களில் வாய்ப்பே கிடையாது.

      நீக்கு
    3. சில கோயில்களில் புகைப்படம் எடுக்கும் போது மூலவரை எடுக்காதீர்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். அதனால் சில நேரங்களில் யாரும் சொல்லவில்லை என்றாலும் எடுக்க மாட்டேன்.
      சில நேரம் மனது எடு எடு என்று சொல்லும். கேரளக் கோவில்களில் எடுக்க முடியாதுதான்.

      நீக்கு
  10. அறியாமல் செய்த பிழைக்கே - அதுவும் அவர் செய்யவில்லை.  காவலனால் செய்யப்பட்டது - மன்னர் மனம் வருந்தி பரிகாரம் செய்கிறார்.  அவர் அந்தஸ்த்துக்கேற்ற பரிகாரம்.  எவ்வளவு கலைச்செல்வங்கள் தமிழக மக்களுக்கு இதுபோல கிடைத்திருக்கின்றன....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னரின் குருபக்தி, அவரை சரியாக வழி நடத்தும் குரு அமைந்ததால் நமக்கு அருமையான கோயில் கிடைத்தது. நீங்கள் சொல்வது போல மன்னர் அந்தஸ்த்க்கேற்ற பரிகாரம்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  11. எளிய கட்டுரை. திகட்டாத அளவு படங்கள். படங்கள் விவரம் சொல்ல, கூடவே கோயிலை சுற்றி வந்த அனுபவம். நல்ல பதிவு.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //எளிய கட்டுரை. திகட்டாத அளவு படங்கள்.//

      நன்றி சார்.

      நீங்களும் கூடவே கோவிலை சுற்றி வந்தது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. படங்களும், ஒவ்வொரு படத்துக்கான தகவலும் நன்று. நடுவில் திரியிடும் விளக்கு, இது போன்று பெரிய அளவில் இப்போதுதான் பார்க்கிறேன். ஆம், கோயில் மிக சுத்தமாகப் பராமரிக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      பழமுதிர் சோலையில் முதன் முதலில் இந்த மாதிரி பெரிய விளக்கு பார்த்தேன், அப்புறம் மதுரை கோயில்களில் பார்த்தேன். காமாட்சி விளக்கு பெரியது இந்த கோவிலில் பார்த்தேன்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  14. இதுவரை இந்தக் கோவிலைப்பற்றிக் கேள்விப்பட்டதில்லை. அழகிய படங்களாகப் பகிர்ந்துள்ளீர்கள்.

    கோவிலும் அழகாகப் பராமரிக்கப்படுவதுபோல் தெரிகிறது.

    அலங்காரங்களும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //இதுவரை இந்தக் கோவிலைப்பற்றிக் கேள்விப்பட்டதில்லை. //

      நானும் தான் கேள்வி பட்டதில்லை.

      தங்கை மகளை அருப்புக்கோட்டையில் மணம் செய்து கொடுத்து இருக்கிறது.அதனால் கிடைத்த வாய்ப்பு.

      அழகிய படங்களாகப் பகிர்ந்துள்ளீர்கள்.//

      நன்றி.

      //கோவிலும் அழகாகப் பராமரிக்கப்படுவதுபோல் தெரிகிறது.//

      ஆமாம், அங்கு திருமணங்கள் நடந்து முடிந்து இருந்தது அதனால் கொஞ்சம் பொருட்கள் சிதறி கிடந்தது. மற்றபடி கோவில் சுத்தமாக இருந்தது.

      அலங்காரங்களும் அருமை

      சுவாமிக்கும், அம்மனுக்கும் அலங்காரம் தெரிந்ததா உங்களுக்கு!
      காணொளியில் பார்த்து இருப்பீர்கள் அலங்காரங்களை என நினைக்கிறேன்.
      உங்களுக்கு இந்த பதிவை காட்டவில்லை போலும் டேஸ்போர்ட் என்று நினைத்தேன். உங்களிடமிருந்து கருத்து வராத போது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.



      நீக்கு
  15. அழகிய படங்களுடன் மீனாட்சி சொக்கனாதர் தரிசனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. மீனாட்சி சொக்கநாதர் என்றாலே என் மனதிற்கு மகிழ்ச்சி வரும், மதுரை. இது உங்கள் பதிவிலிருந்து அறியும் புதிய கோயில். மட்டுமல்ல என் மனதிற்கு இஷ்ட தெய்வம் சிவன்...

    அருமையான கோயில் படங்கள், விவரங்கள் எல்லாம் ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
      ம்துரை மீனாட்சி சொக்கந்தாரை பிடிக்கும் என்று முன்பு சொல்லி இருக்கிறீகள், மதுரையில் கொஞ்ச நாள் இருந்தீர்கள் அல்லவா?
      உங்கள் இஷ்ட தெய்வம் சிவன் என்பது அறிந்து மகிழ்ச்சி.
      பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  17. எவ்வளவு பழமையான கோயில்! வரலாற்றுக் கதையும் தெரிந்துகொண்டேன் கோமதிக்கா. இது கொஞ்சம் புராணக் கதை ஒன்று உண்டே ஒரு முனிவர் விஷ்ணுவை பார்க்க வரப்ப,,,விஷ்ணு கவனிக்காததால் அவர் மார்பில் எட்டி உதைக்க லக்ஷ்மி கோபித்துக் கொண்டு போய்விட இப்படி செல்லுமே கொஞ்சம் அது போல இருக்கிறது ஆனால் இதில் அரசர் பரிகாரம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
      ஆமாம், கல்வெட்டு மூலம் பழமையான கோயில் என்று தெரிகிறது.
      புராணக் கதைகள் நிறைய ஒரே மாதிரி இருக்கும். சாபம், சாபவிமோசனம் நீங்க பரிகாரம் என்று இருக்கும்.

      இறைவனே குருக்கு கால நோகுமே என்று வருந்தும் போது, அரசர் இன்னும் பதறுவார் தானே குருவை காக்க வைத்து விட்டோம் என்று.

      நீக்கு
  18. வில்வ வனத்தில் சுயம்பு மூர்த்தியாக சொக்க தங்கமாய் கிடைத்த மூலவர்.//

    சொக்கத் தங்கம்னு இப்படித்தான் பொருள் வந்திருக்குமோ!! நாம் வழக்கில் பயன்படுத்துவது...

    படம் எடுக்க வேண்டாம் என்று போடாவிட்டாலும் நமக்கே எடுக்கலாமோ கூடாதோன்னு ஒரு தயக்கம் வந்துவிடுகிறது இல்லையா கோமதிக்கா? எனக்கும் வரும்...

    பெரிய விளக்குகள் அழகு. கேரளத்தில் பெரிய விளக்குகள் இருக்கும் கோயில்களில் ...

    கோயில் சுத்தமாக இருக்கிறது அழகாக...

    சுவாமி விமானம் மனதை ஈர்க்கிறது நீங்கள் எடுத்த கோணமும் அழகு

    காணொளி மட்டும் பின்னர் கேட்கிறேன் கோமதிக்கா

    படங்கள் விவரங்கள் எல்லாமே வழக்கம் போல் அருமை

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொக்கத் தங்கம்னு இப்படித்தான் பொருள் வந்திருக்குமோ!! நாம் வழக்கில் பயன்படுத்துவது...//

      ஆமாம், சொக்கத் தங்கம் என்றால் கலப்பு இல்லாத தனி தன்மை வாய்ந்தது, ஒப்பற்றது என்றது. இறைவனை அப்படித்தானே நினைக்கிறோம்.

      //படம் எடுக்க வேண்டாம் என்று போடாவிட்டாலும் நமக்கே எடுக்கலாமோ கூடாதோன்னு ஒரு தயக்கம் வந்துவிடுகிறது இல்லையா கோமதிக்கா? எனக்கும் வரும்...//

      ஆமாம் கீதா, சில நேரம் நாம் சொல்வதை மனமும், பல நேரம் மனம் சொல்வதை நாமும் கேட்கிறோம்.

      கேரளாவில் நானும் பார்த்து இருக்கிறேன். அங்கு சுத்தமாக பள பள என்றும் தினம் துடைத்து வைத்து இருப்பார்கள்.

      காணொளி நேரம் இருக்கும் போது பார்க்கலாம் கீதா.
      உங்கள் வேலைகளுக்கு இடையே வந்து
      பதிவை, படங்களை ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு மிகவும் நன்றி.

      நீக்கு
  19. கோமதி அக்கா நலம்தானே?.. என்னோடு கோபமாக இருப்பீங்கள் என நிட்சயமாகத் தெரியும்:), ஆனாலும் என்னால முடியல்ல... வரோணும் மெயில் போடோணும் என நினைப்பேன் ஆனா ஏனோ அதுக்கெல்லாம் மனம் வருகுதில்லை...

    சொக்கநாதர் என்றதும் , என்பக்கம் நான் போட்ட ஒரு பாடல் நினைவுக்கு வருது.. சொக்கநாதர் இல்லாமல் மீனாட்சி ஏது... என வரும்... அழகிய படங்கள் அதிலும் நாகதம்பிரான் சூப்பராக இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா , வாழ்க வளமுடன்
      உங்கள் வரவு மகிழ்ச்சி தருகிறது. எதற்கு கோபம்! கோபம் இல்லை.
      சொக்கநாதர் உங்களை அழைத்து வந்து விட்டது மகிழ்ச்சி.
      நேற்று ஸாதிகாவின் உப்புமா பதிவை படித்தேன், அப்போது உங்கள் பின்னூட்டத்தை அதில் பார்த்தேன், உங்களை நினைத்து கொண்டேன், என் நினைப்பு உங்களை இங்கு கொண்டு விட்டு இருக்கிறது. சொக்கநாதர் இல்லாத மீனாட்சி ஏது? அவள்தான் அவ்ரில் பாதியே அப்பனை நினைத்தால் அம்மையும் உடன் வருவாள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி அதிரா .
      வலைபக்கம் நேரம் கிடைக்கும் போது எல்லாம் வாங்க.

      நீக்கு
  20. இந்தக் கோயிலைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன். அருப்புக்கோட்டைப் பக்கமெல்லாம் போனதே இல்லை. ஆகையால் பார்த்தது இல்லை. இதே போல் மானாமதுரையிலும் ஓர் மீனாக்ஷி இருப்பதாகச் சொல்லுவார்கள். அங்கும் சித்திரைத்திருவிழா பெரிதாக நடக்கும் என்றனர். பகிர்வுக்கும் பொறுமையாக எடுத்திருக்கும் அனைத்துப் படங்களுக்கும் விளக்கங்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      இந்த் அகோயிலை பற்றி கேள்வி பட்டு இருக்கிறீர்களா?
      ௳துரையில் நிறைய இடங்களில் மீனாட்சி சொக்கநாதர் கோயில் இருக்கிறது மானாமதுரை கோயில் பார்த்தது இல்லை.
      படங்களை பகிர்வை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  21. அன்பின் கோமதிமா,
    வாழ்க வளமுடன்.
    மீனாட்சி சொக்க நாதர் ஆலயம் படங்கள் அனைத்தும் அதிசயிக்க வைக்கிறது.

    எங்கள் திருமங்கலத்திலும் மீனாட்சி சொக்க நாதர் ஆலயம்
    உண்டு.
    இவ்வளவு பெரிது இல்லை.
    பழைய நினைவுகள் வருகின்றன.

    விளக்குகள் பிரம்மாண்டமாய் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      மதுரை பக்கத்தில் மதுரைநகரில் நிறைய மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் உண்டு அக்கா.
      உங்கள் திருமங்கல நினைவுகளை பதிவு கொண்டு வ்னஹ்தது மகிழ்ச்சி.

      நீக்கு
  22. தாமதமாக வந்து கருத்து சொல்கிறேன்.
    மன்னிக்கணும் தங்கச்சி.

    இவ்வளவு கருத்துடன் படங்கள் எடுத்துப் பகிர்ந்திருக்கிறீர்கள்.

    பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது.
    மீனாக்ஷியின் ஆட்சியில் உலகம் செழிக்க வேண்டும்.
    மழை பொழிந்து பயிர்கள் விளைந்து
    நலம் வளரட்டும்.

    ஒவ்வொரு சன்னிதியும் சிறப்பாக இருக்கிறது.
    காணொளி இனிதான் பார்க்க வேண்டும்.
    என்றும் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமதமாக வந்து கருத்து சொன்னாலும் மகிழ்ச்சி தான் அக்கா.
      மன்னிப்பு எல்லாம் வேண்டாம்.

      //மீனாக்ஷியின் ஆட்சியில் உலகம் செழிக்க வேண்டும்.
      மழை பொழிந்து பயிர்கள் விளைந்து
      நலம் வளரட்டும்.//

      ஆமாம் அக்கா, அதுதான் வேண்டும்.
      கோயிலை இன்னும் நிதானமாக பார்த்தால் நன்றாக இருந்து இருக்கும்.

      அதுதான் காணொளி கொடுத்தேன், நேரம் கிடைக்கும் போது கோவிலை வலம் வந்து தரிசனம் செய்யலாம்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.

      நீக்கு