செவ்வாய், 13 செப்டம்பர், 2022

எங்கள் வீட்டு விழாக்கள்




மகன் வீட்டு விநாயகர் சதுர்த்தி விழா படம்

விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி முடிந்து பல நாள் ஆகி விட்டது. இப்போதுதான் எங்கள் வீட்டு விழா படங்கள் வருகிறது.

இந்த முறை சாய் கணபதி செய்து இருக்கிறான் மகன்.
சாய் கணபதிக்கு வண்ணம் தீட்டியது மருமகள்.
அவன் அப்பா செய்த பிள்ளையார், மற்றும் மகன் , மருமகள், பேரன் செய்த பிள்ளையார்கள் இடம் பெற்று இருக்கிறது.
(வாங்கிய, மற்றும்  பரிசாக வந்த பிள்ளையார்களும் இருக்கிறார்கள்)
இந்த ஆண்டு பேரன் செய்த பிள்ளையார் வெள்ளையாக இருப்பது.

இந்த ஆண்டு  பேரன் பள்ளி செல்லும் விநாயகர் வரைந்து இருக்கிறான். 



அரிசோனா கோவிலில்  செய்து வைத்து இருந்த பிள்ளையார்
மகன் செய்து கொடுத்த செல்ஃபி பிள்ளையார் பிரேம்

குழந்தைகள் அச்சில் செய்த பிள்ளையார்கள்
குழந்தைகள் செய்த பிள்ளையார், வீட்டில் வாங்கி வைத்து வழிபட்ட பிள்ளையார்கள் என்று  கரைப்பதற்கு எடுத்து வைக்கப்பட்டு இருக்கிறது.

பிள்ளையார்கள் கரைக்கப்படுகிறது

மகா கணபதி கோவிலில் விநாயகரை  வழி அனுப்பும் நாளில் தன்னார்வ தொண்டர்களுக்கு பாராட்டுகள் .

  குழந்தைகள் செய்த பிள்ளையார் இந்த பதிவு படித்து இருப்பீர்கள்.

 குழந்தைகள் செய்த பிள்ளையார்கள், மற்றும் கோவிலில் செய்த பிள்ளையாரை    கரைக்கும் நாளில்  மகா கணபதி ஆலயத்தில் தன்னார்வ தொண்டு செய்தவர்களுக்கு பொன்னாடையும் பரிசு பொருளும் கொடுத்து  பாராட்டுக்கள் வழங்கி உள்ளார்கள்.



 மகனுக்கும் பொன்னாடை, கணபதி படம், பசுவும் கன்றும் உள்ள சிலை எல்லாம் பரிசாக கொடுத்து இருக்கிறார்கள். (10. 9. 2022 ல் நடந்தது.)

வெகு சிறப்பாக 10 நாட்கள் நடந்த விழாவில்  நடனம், பாட்டுக் கச்சேரி எல்லாம் நடந்து இருக்கிறது.

மகா கணபதிக்கு பிரசாதங்கள் தயார் ஆகிறது
பருப்பு வடை

மகன் வீட்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மருமகள் செய்த இனிப்பு சீடை, முள்ளு தேன்குழல், உப்புச்சீடை மற்றும் வெண்ணை, அவல் வெல்லம்

பேரன் கண்ணன் வேடத்தில் புல்லாங்குழலில் கீதம் இசைக்கிறான்


மகன் சிறு வயதில் வரைந்த கண்ணன் ஓவியம்
எங்கள் வீட்டு பிள்ளையார் புது களிமண் பிள்ளையார் வாங்கவில்லை.

 மகன் சிறு வயதில் வைத்து விளையாடிய பிள்ளையாரை  வைத்து பூஜை செய்து விட்டேன். கார பிடிகொழுக்கட்டையும், மோதகமும் செய்தேன்.  சுண்டல் மறுநாள் செய்தேன். 

பொரி உருண்டை, எள்ளு உருண்டை, பொட்டுக்கடலை உருண்டை, கடலை உருண்டை, அவல், அரிசி பொரி   என்று கடையில் வாங்கி வைத்து வணங்கி விட்டேன். 

அண்ணன் வீட்டிலிருந்து அப்பம், மோதகம், இனிப்பு பிடி கொழுக்கட்டை, சுண்டல், எள்ளு உருண்டை வந்து விட்டது.

தங்கை வீட்டு பிள்ளையார் கொலு பார்க்க போனபோது மோதகத்திற்கு வைக்கும் பூரணம் கொடுத்தாள் கொஞ்சம் அதை வைத்து 9 மோதகம் செய்து வழி பட்டேன்.

எனக்கும், வீட்டு வேலைகளில் உதவி செய்பவருக்கும் மட்டும் தான். அக்கம் பக்கம் யாரும் கொடுப்பது வாங்குவது இல்லை. தீபாவளிக்கு மட்டும் கொடுக்கிறார்கள்.

கிருஷ்ண ஜெயந்திக்கு காலை இனிப்பு அவல் செய்து வழி பட்டேன், மாலையில் பால் பாயாசம்

ஜோதி தொலைகாட்சியில் கோவை இஷ்கான் கோவில்  நெரடி ஒலிபரப்பில் அபிஷேகம், அர்சச்சனையை பார்த்தேன். 


கிருஷ்ணா நீ பேகனே பாரோ பாடல் சில வரி காணொளி

கிருஷ்ணை வேகமாக  வர சொல்லும் பாடலுடன் மலர் அபிஷேகம் இருக்கிறது சிறிது நேர காணொளிதான் பாருங்கள்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று மாலை பல் மருத்துவரை பார்க்க போனேன். அப்போது  மருத்துவமனைக்கு அருகில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தேன். மாலை நேரம் நிறைய கூட்டம் வருமாம். நான் போன நேரம் மாலை 5 அதனால் கூட்டம் குறைவு. பெற்றோர்கள் குழந்தைகளை ராதையாக , கிருஷ்ணராக அலங்காரம் செய்து தூக்கி கொண்டும், நடத்தியும் அழைத்து வந்து கொண்டு இருந்தார்கள்.

 மூலவர் கிருஷ்ணர் இடுப்பு அரைச்சலங்கையுடன்  சந்தன காப்பில் சிறு குழந்தையாக நின்று கொண்டு இருந்தார், ஆண்டுக்கு ஒரு முறைதான் இந்த  அலங்காரம் என்று பூக்கார அம்மா சொன்னார்கள். உற்சவர் வெளியே ஊர்வலமாக  போய் இருந்தார். அவர் பின்னால் மக்கள் கூட்டம் போய் விட்டதால் கோவிலில் கூட்டம் இல்லை, நன்றாக தரிசனம் செய்ய முடிந்தது.

பதிவர் கீதா சாம்பசிவம் அடிக்கடி சொல்லும் வடக்கு மாசி வீதி கிருஷ்ணர் கோவில். இதை அவர் படிக்கும் போது கிருஷ்ணஜெயந்தி விழா நிகழவுகள்,  மற்றும் கச்சேரிகள்  கேட்டது மனதில் வரும்.

பதிவுகள் போட்டு வெகு நாட்கள் ஆகி விட்டதே என்று இந்த பதிவு.



வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

குழந்தைகளின் கைகளில் பிள்ளையார்




 மகன் செய்த செல்ஃபி பிள்ளையார் போட்டோ பிரேம்

செல்ஃபி காலமாக இருப்பதால் காலத்துக்கு  ஏற்றார்போல செல்ஃபி பிள்ளையார் போட்டோ பிரேம்  செய்து இருக்கிறான் மகன் . அந்த யோசனையை பிள்ளையார் கொடுத்து இருக்கிறார் இந்த ஆண்டு. தன்னை செய்து மகிழும் குழந்தைகளுடன் செல்ஃபி   எடுத்து கொள்கிறார்  மகிழ்வாய்.

பேரன் கவின் அவன் செய்த களிமண் பிள்ளையாருடன்  எடுத்து கொண்ட படத்தை அனுப்பி  பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்து சொல்கிறான்  அனைவருக்கும்.

அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்!


ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

புதிர் வழி (Garden Maze)

புதிர் தோட்டத்தில்


லூரே கேவர்னஸ் பகுதி - 2 முன்பு போட்ட பதிவுகள்.


புதிரை போடுவதும்  அதற்கு விடை சொல்வதும் மகிழ்ச்சியான  பொழுது போக்கு  .  நாளிதழில் வரும் புதிர் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதை நிறைய பேர் விரும்புவார்கள்.

என் கணவர்  ஆங்கில நாளிதழில் செய்திகளை படித்தவுடன் கடைசி பக்கத்தில் வரும் சுடோகு  விளையாடுவார்கள்.  சுடோகு எண் புதிர் விடுவிக்கும் விளையாட்டு விளையாடுவார்கள். அதில் அவர்களுக்கு மகிழ்ச்சி.


வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

லூரே கேவர்னஸ் பகுதி - 2



லுர்சி குகைகள் அல்லது லூரே கேவர்ன்ஸ் , லூரே குகை என்று அழைக்கப்பட்ட இடத்திற்கு மகன் அழைத்து போனான்.

இனிய நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என் சேமிப்பாக  என் தளத்தில் இருக்கும்.

இதற்கு முன்பு போட்ட லூரே குகையின் தொடர்ச்சி இந்த பதிவு

 நிறைய சின்ன சின்ன குகைகள் இருக்கிறது

                                               
நீரில் பிரிதிபலிப்பு   (ஏ.பி .நாகராஜன் படத்தில் வரும் கைலாய காட்சி போல இருக்கிறது ,

பனி உருகி அப்படியே தொங்கி கொண்டு இருக்குமே படத்தில்)

மனிதனின் முகம் போல் இருக்கு இல்லையா?


திரைச் சிலைகள் போல இருக்கிறது

                         பல் இல்லா சிங்கம் போல இருக்கிறது


இந்த குகையை முழுதாக பார்க்க ஆசை பட்டால் இந்த காணொளியில் பார்க்கலாம்.

அங்கேயே  "கார் அருங்காட்சியகம்" இருந்தது இதற்கும் சேர்த்து நம்மிடம் முன்பே டிக்கட் வாங்கி விடுகிறார்கள்.


அந்தக் கால கோச் வண்டி 

கோச் வண்டி  மாடலில் கார்

முன்பு சென்னைக்கு வரும் போது மறைமலர் நகரில் ஃபோர்ட் கார் கம்பெனியை பார்த்து கொண்டே போவோம்.





அந்தக்கால ஃ போர்ட் கார்கள்





காரின் எஞ்சின்
பயணத்திற்கு கொண்டு போகும்  பெட்டி வைக்கும் இடம்  பக்கவாட்டில் உள்ளது



அடுத்து  அங்கு வேறு என்ன பார்த்தோம் என்பது அடுத்த பதிவில்.
பழைய நினைவுகளின் பகிர்வு தொடரும்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
__________________________________________________________________

வியாழன், 25 ஆகஸ்ட், 2022

லூரே கேவர்னஸ்





லுர்சி குகைகள் அல்லது லூரே கேவர்ன்ஸ் , லூரே குகை என்று அழைக்கப்பட்ட இடத்திற்கு மகன் அழைத்து போனான்.
அமெரிக்காவில் வர்ஜீனியாவில் உள்ள லூரேக்கு மேற்கே அமைந்து உள்ள  இயற்கையாக அமைந்த குகை. 1878 ஆம் ஆண்டில்   பூமிக்கு அடியில் அமைந்து இருக்கும் இந்த குகை கண்டுபிடிக்கப்பட்டது.

1893 ல், பால்டிமோர் ஜே. கெம்ப் பார்ட்லெட்டிற்குச் சொந்தமான இடம் லூரே கேவர்ன்ஸ் நிறுவனத்தால்  வாங்கப்பட்டது.
500 வருடங்களுக்கு முற்பட்டது என்று நம்பபடும் குகை.

மகன் நியூஜெர்சியில் இருந்த போது பார்த்த இடம். முதன் முதலில் பேரனை பார்க்க போன போது   சில இடங்கள் போனோம்.   8 மாத  குழந்தையை தூக்கி கொண்டு எங்களுடன் மருமகளும் வந்து  எல்லா இடங்களையும் சுற்றி காட்டினாள். போகும் இடங்களில் தங்கும் ஓட்டலில் அறைகளை முன் பதிவு செய்வது  என்று அனைத்தையும் உற்சாகமாக செய்தாள்.

பழைய நினைவுகளை மீட்ட  படங்களை பார்த்து கொண்டு இருந்தேன்.  இனிய நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என் சேமிப்பாக  என் தளத்தில் இருக்கும்.

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

கூடு கட்ட இடம் தேடும் குருவிகள்


புள்ளிச்சில்லை குருவி எங்கள் குடியிருப்புக்கு ஆகஸ்ட் 15ம் தேதி கூடு கட்ட இடம் தேடிய போது எடுத்த படங்கள்,  மற்றும் திணைக்குருவிகள் (19ம் தேதி ) கூடு கட்ட இடம் தேடிய காட்சிகளும்  இந்த பதிவில் இடம்பெறுகிறது.

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

சின்ன சின்ன பதம் வைத்து கண்ணா நீ வா வா வா !




பேரனுக்கு சிறு வயது முதல்  கிருஷ்ணா பொம்மை கதை பிடிக்கும், இப்போதும் பார்க்கிறான்.

நான் அங்கு இருந்த போதும் இந்த கதையை காட்டி மகிழ்ந்தான்.  இப்போதும் எனக்கு காட்டி   மகிழ்கிறான். தினம் ஒரு  கதை காட்டி கதை சொல்வான்.  எத்தனை  முறை பார்த்தாலும் புதிதாக பார்ப்பது போல பார்த்து மகிழ்வான். நானும் புதிதாக கேட்பது போல  அடுத்து என்ன என்று ஆவலுடன் கேட்பேன்,கதை சொல்வதில் அவனுக்கு மகிழ்ச்சி.
கேட்பதில் எனக்கு மகிழ்ச்சி.



கண்ணன் கோவர்த்தன கிரியை குடையாகப் பிடித்த கதை.

இந்த மலைதான் நமக்கு எல்லா வளங்களும்  தருகிறது. மாடுகளுக்கு மேய்ச்சலுக்கு உதவுகிறது. மலையில் உள்ள அருவி நம் தாகத்தை தீர்க்கிறது. கனிகளை, காய்களை தருகிறது, மழை மேகங்களை தடுத்து மழையை தருகிறது. அதனால் இந்த மலையை வணங்குங்கள் . 

//குன்று குடையா எடுத்தாய் கழல் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில்  வேல்போற்றி.//



இந்த நாடகத்தில் பகைவர்களுக்கு போர் வீரர் போல காட்சி அளிப்பார். அதை பேரன் "அவர்கள் கண்ணுக்கு மட்டும் தான் அப்படி தெரியும் ஆச்சி என்று சொல்வான்"


2020ல் போட்ட பதிவிலும் கிருஷ்ணஜெயந்தி  கதைகேட்க அழைப்பதை போட்டு இருக்கிறேன். படித்து பாருங்கள்.   நேரம் இருந்தால் பாருங்கள் பழைய பதிவை.


 கிருஷ்ணா காளிங்கனை அடக்கிய கதையை சொல்கிறான் அவன் விளையாடும் பொருட்களை வைத்து சிறு வயதில்.
அவன் கதை சொல்வதை காணொளி எடுத்தேன். தேடினேன் கிடைக்கவில்லை., கிடைத்தால் போடுகிறேன்.

இந்த காளிங்க நர்த்தனம் பிடிக்கும் அவனுக்கு.


கதை ஆரம்பிக்கும் போது மயக்கும் புல்லாங்குழல் ஓசை வரும் அப்புறம் கண்ணன் திரும்பி பார்க்கும் காட்சி அருமையாக இருக்கும். "திரும்ப போகிறார் பாருங்க பாருங்க" என்பான்.


ஹே! மாதவா  பாடல். எனக்கு பிடித்த பாடல் எப்போதும் கேட்பேன். மாதவா பாடல் பாடு என்றால் பாடுவான்.
நண்பர் வீட்டு கொலுவுக்கு பாடுகிறான்.

"சின்ன சின்ன பதம் வைத்து கண்ணா நீ வா வா "பாடல் பாடுவான்.

பேரன் சின்ன வயதில்  போட்ட கிருஷ்ணர் வேஷம் 

சின்ன சின்ன பதம் வைத்து இப்போது பாடிய பாடலை சேர்த்து கிருஷ்ணர் ஜெயந்தி வாழ்த்துகள் மகன் அனுப்பினான். குழந்தை கண்ணன் விளையாடும் விளையாட்டு இருக்கிறது பாருங்கள். அவன் பாடும் பாடலை கேட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். 


மாயவரத்தில் இருக்கும் போது பேரன் கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணர் வேடமிட்டு இருந்தான்.


மாயவரத்தில் பேரன் வந்து இருந்த போது எடுத்த  கிருஷ்ண ஜெயந்தி படம்
 நடுவில் இருக்கும் கண்ணன் மருமகள் வரைந்த படம்


நாளை கிருஷ்ண ஜெயந்திக்கு மருமகள் செய்த சீடை, முறுக்கு


மகன் செய்த பூஜை பலகையில் கிருஷ்ணர்  

மகன் செய்த பூஜை பலகையில் மருமகள் வரைந்த  வண்ணக்கோலங்களுக்கு நடுவே கிருஷ்ணர்

தம்பி பேத்தி

வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் "ஆனந்தா பல்பொருள் அங்காடியில்"  கிருஷ்ண ஜெயந்தி  வாழ்த்து அலங்காரம்.
பூஜைக்கு வேண்டிய அனைத்து பொருட்களும் வைத்து இருக்கிறார்கள்.

அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !
 வாழ்க  வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

---------------------------------------------------------------------------------------------