புதிரை போடுவதும் அதற்கு விடை சொல்வதும் மகிழ்ச்சியான பொழுது போக்கு . நாளிதழில் வரும் புதிர் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதை நிறைய பேர் விரும்புவார்கள்.
என் கணவர் ஆங்கில நாளிதழில் செய்திகளை படித்தவுடன் கடைசி பக்கத்தில் வரும் சுடோகு விளையாடுவார்கள். சுடோகு எண் புதிர் விடுவிக்கும் விளையாட்டு விளையாடுவார்கள். அதில் அவர்களுக்கு மகிழ்ச்சி.