வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

லூரே கேவர்னஸ் பகுதி - 2



லுர்சி குகைகள் அல்லது லூரே கேவர்ன்ஸ் , லூரே குகை என்று அழைக்கப்பட்ட இடத்திற்கு மகன் அழைத்து போனான்.

இனிய நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என் சேமிப்பாக  என் தளத்தில் இருக்கும்.

இதற்கு முன்பு போட்ட லூரே குகையின் தொடர்ச்சி இந்த பதிவு

 நிறைய சின்ன சின்ன குகைகள் இருக்கிறது

                                               
நீரில் பிரிதிபலிப்பு   (ஏ.பி .நாகராஜன் படத்தில் வரும் கைலாய காட்சி போல இருக்கிறது ,

பனி உருகி அப்படியே தொங்கி கொண்டு இருக்குமே படத்தில்)

மனிதனின் முகம் போல் இருக்கு இல்லையா?


திரைச் சிலைகள் போல இருக்கிறது

                         பல் இல்லா சிங்கம் போல இருக்கிறது


இந்த குகையை முழுதாக பார்க்க ஆசை பட்டால் இந்த காணொளியில் பார்க்கலாம்.

அங்கேயே  "கார் அருங்காட்சியகம்" இருந்தது இதற்கும் சேர்த்து நம்மிடம் முன்பே டிக்கட் வாங்கி விடுகிறார்கள்.


அந்தக் கால கோச் வண்டி 

கோச் வண்டி  மாடலில் கார்

முன்பு சென்னைக்கு வரும் போது மறைமலர் நகரில் ஃபோர்ட் கார் கம்பெனியை பார்த்து கொண்டே போவோம்.





அந்தக்கால ஃ போர்ட் கார்கள்





காரின் எஞ்சின்
பயணத்திற்கு கொண்டு போகும்  பெட்டி வைக்கும் இடம்  பக்கவாட்டில் உள்ளது



அடுத்து  அங்கு வேறு என்ன பார்த்தோம் என்பது அடுத்த பதிவில்.
பழைய நினைவுகளின் பகிர்வு தொடரும்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
__________________________________________________________________

35 கருத்துகள்:

  1. // ஏ.பி .நாகராஜன் படத்தில் வரும் கைலாய காட்சி போல இருக்கிறது //

    ஹா..  ஹா..  ஹா...  ஆமாம்.  ஆமாம்.  ஒவ்வொன்றும் ஒவ்வொரு தோற்றம் காட்டுகின்றன.  உங்களுக்கு மனிதனின் முகம் போல தெரிவது எனக்கு திமிங்கிலத்தின் அலலது சுறாமீனின் வாய் போல தெரிகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //ஹா.. ஹா.. ஹா... ஆமாம். ஆமாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தோற்றம் காட்டுகின்றன.//

      ரசித்தமைக்கு நன்றி. நம் கற்பனைக்கு ஏற்ற மாதிரி பல வித உருவம் தெரியும் உண்மை.

      //உங்களுக்கு மனிதனின் முகம் போல தெரிவது எனக்கு திமிங்கிலத்தின் அலலது சுறாமீனின் வாய் போல தெரிகிறது!//

      ஓ! நல்லது. நான் வலபக்கம் மட்டும் பார்த்தேன். அதனால் மனிதன் முகம் போல தெரிந்தது. படம் முழுவதும் பார்த்தால் நீங்கள் சொன்ன காட்சி தெரிகிறது.



      நீக்கு
  2. படங்கள் எல்லாம் சிறப்பு.  எனினும் கார் அருங்காட்சியகம் எல்லாம் சுவாரஸ்யம் இருப்பவர்களுக்கு தான் இல்லையா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் எல்லாம் சிறப்பு.//
      நன்றி.

      கார் அருங்காட்சியகம் கோவையில் ஜி.டி நாயுடு அவர்களின் அருகாட்சியகம் நன்றாக இருக்கும். பள்ளியில் படிக்கும் போது போய் வந்தேன். நீங்கள் சொல்வது போல எல்லோருக்கும் எல்லாம் சுவாரஸ்யமாக இருக்காதுதான்.
      உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  3. காணொளி முழுவதும் கண்டேன் பிரமிப்பாக இருக்கிறது.

    படங்களும் அப்படியே... அடுத்து எங்கு சென்றீர்கள் என்பதை காணும் ஆவலோடு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      காணொளி பார்த்தது அறிந்து மகிழ்ச்சி. எத்தனை காட்சிகள் இல்லையா? பிரமிப்புதான்.
      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ஜி.

      நீக்கு
  4. படங்களில் நீங்கள் சொன்ன உவமைகள் போலவே உள்ளன... அருமை அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்களுக்கும் அந்த காட்சிகள் தெரிந்ததா! மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி தன்பாலன்.

      நீக்கு
  5. படங்கள் பார்க்கப் பார்க்க வியப்பைத் தருகின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. இது மாதிரி நம் நாட்டிலும் சில குகைகள் இந்த மாதிரி உள்ளன..

    பாதாளலோகம் போலிருக்கும்..

    சங்கிலிகளை பிடித்துக் கொண்டு தான் நடக்க வேண்டும்.. நீர்க் கசிவு இருக்கும் அங்கே.. நான் அங்கெல்லாம் சென்றதில்லை..

    படித்திருக்கின்றேன்..

    புதிய தகவல்கள்.. அழகான படங்களுடன் பதிவு..

    நேற்றைய பதிவில்
    ஐயா அவர்களைப் பார்த்துக் கொண்டேன்..

    ஒருவகையில் மலரும் நினைவுகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நம் நாட்டிலும் இந்த மாதிரி குகைகள் இருக்கிறது.
      பாதாளலோகம் தான். பூமிக்கு அடியில்தானே இருக்கிறது.
      முன்பு சங்க்கிலிகள். இப்போது கைபிடிகளுடன் படிகள் அமைத்து வசதி செய்து இருக்கிறார்கள்.

      என் நினைவுகளை சேமிக்கத்தான் இந்த பதிவுகள்.
      பழைய பதிவையும் பார்த்தது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  7. இன்றைய பதிவில் காணொளி அற்புதம்.. பழைய வாகனங்கள் அழகு..

    நேர்த்தியான பதிவு..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. லுர்சி குகைகள் ரொம்பப் பெரிதாகத்தான் இருக்கும் இல்லையா கோமதிக்கா...அழகா இருக்கு

    நிறைய சின்ன சின்ன குகைகள்னு ஒரு படம் போட்டிருக்கீங்க இல்லையா? அழகு, அதில் உள்ளே போக முடியுமா இல்லை ஓட்டை மட்டும்தானோ,

    அதைப் பார்த்ததும் ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது. திருவண்ணாமலை கோயில் அருகே உள்ள குகை ஒன்றிற்குச் சென்றவர்களில் உள்ளே ஒரு இடத்தில் நுழைந்து எல்க்லோரும் வெளியில் வர என் உறவினரில் ஒரு பெண் மட்டும் நுழைந்து இடையில் மாட்டிக் கொண்டு வெளியில் வர முடியாமல் அங்கேயே மூச்சு வாங்கி யாராலும் வெளியிலும் இழுக்க முடியாமல் இறந்து விட்டார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
      லுர்சி குகை பெரிதுதான்.
      சின்ன குகை வாயில் வழியே வேறு பக்கம் போக முடியும். பயமில்லை.

      நீங்கள் சொன்ன நிகழ்வு பயங்கரம். உங்கள் உறவினர் மாட்டிக் கொண்டு இறந்து போனது கேட்கவே கஷ்டமாய் இருக்கிறது.
      எல்லோரும் வெளியில் வந்து விட்டார்கள் என்றால் இவருக்கு மட்டும் ஏன் வர முடியவில்லை? என்னவென்று சொல்வது!

      நீக்கு
  9. ஆமாம் கைலாய காட்சி போல இருக்கு, நீரில் பிரதிபலிப்பதும் அழகோ அழகு,,,,திரைச்சீலை வடிவம், மனித முகம் போல இருப்பது பனி உறைந்து தொங்குவது போல....எல்லாமே அழகு ஆமாம் நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான் தோன்றுகிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆமாம் கைலாய காட்சி போல இருக்கு, நீரில் பிரதிபலிப்பதும் அழகோ அழகு,,,,திரைச்சீலை வடிவம், மனித முகம் போல இருப்பது பனி உறைந்து தொங்குவது போல....எல்லாமே அழகு ஆமாம் நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான் தோன்றுகிறது//

      அனைத்தையும் ரசித்தமைக்கு நன்றி கீதா.

      நீக்கு
  10. பல்லில்லா சிங்கம்...ஹாஹாஹ் ஆமாம்...கொக்கி போலவும் இருக்கு...

    அதற்கு அடுத்த படம். கீழே விழுந்தவர்களை இழுப்பது போல அல்லது கீழெ இருக்கும் உருவம் மேலே உள்ளதை வாயால் கவ்வி இழுப்பது போல!!! அதை அருகில் சின்ன உருவம் கவனிப்பது போலவும் இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல்லில்லா சிங்கம்...ஹாஹாஹ் ஆமாம்...கொக்கி போலவும் இருக்கு..//

      ஆமாம், கொக்கி போலவும் இருக்கிறது.

      .

      //அதற்கு அடுத்த படம். கீழே விழுந்தவர்களை இழுப்பது போல அல்லது கீழெ இருக்கும் உருவம் மேலே உள்ளதை வாயால் கவ்வி இழுப்பது போல!!! அதை அருகில் சின்ன உருவம் கவனிப்பது போலவும் இருக்கு//

      நீங்கள் சொல்வது போல பார்த்தால் அப்படி தெரிகிறது.
      ஒவ்வொரு தோற்றமும் பார்வை வேறு படுகிறது. நிறைய தோற்றங்களை கற்பனை செய்து பார்க்கலாம்.

      நீக்கு
  11. காணொளி செம செம....ஹையோ யுட்யூப் போய் பெரிதாக்கிப் பார்த்தேன் பிரமித்துவிட்டேன். போரா குகைகளை விட மிக மிகப் பெரிது மட்டுமல்ல அழகு அடர்த்தி.....என்னவோ மாயாஜாலம் போல....செம ...நல்லாருக்கு காணொளி....ரசித்துப் பார்த்தேன் மீண்டும் பார்க்க திறந்து வைத்திருக்கிறேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி பார்த்தது மகிழ்ச்சி.
      ஆமாம், நன்றாக இருக்கிறது. மாயாஉலகம். தான்.
      இரண்டு மூன்று காணொளிகள் இருக்கிறது.
      நேரம் இருந்தால் பாருங்கள்.
      ரசித்து பார்ப்ப்பீர்கள் என்று தான் தேர்வு செய்து போட்டேன்.

      நீக்கு
  12. கார் அருங்காட்சியகம் செம. ஆர்வமுண்டு. டிசைன் மாடல் எல்லாம் கோச் வண்டி கார் ரொம்பப் பிடித்தது. இப்போது அப்படி வராதோ என்று தோன்றியது..

    அனைத்தும் ரொம்ப ரசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளி நாட்டில் இன்னும் பழைய மாடல் கார்கள் இருக்கிறது.
      ஒரு நாள் பழைய கார்கள் பவனி வரும். அதையும் ஹாலோவின் சமயம் எடுத்தேன் படங்கள்.

      அனைத்தையும் ரசித்து பார்த்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  13. குகைப் படங்கள் மிக அருமையாக இருக்கின்றன. என் மனதில் தோன்றிய 'புராணக் காட்சி'யை நீங்களும் குறிப்பிட்டிருக்கிறீர்கள் (கைலாயக் காட்சி போன்று).

    பழைய கார்களும் ரசிக்கும்படி இருந்தாலும்......... இப்போதைய வசதிகளை ஒப்பிடும்போது... பாவம் அப்போதைய உரிமையாளர்கள்.

    சென்ற பதிவில் சுருட்டை முடியுடன் இருந்த உங்கள் பேரனைப் பார்த்து மனம் சந்தோஷப்பட்டது. நல்ல எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் அவன் இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //குகைப் படங்கள் மிக அருமையாக இருக்கின்றன//

      நன்றி.

      . என் மனதில் தோன்றிய 'புராணக் காட்சி'யை நீங்களும் குறிப்பிட்டிருக்கிறீர்கள் (கைலாயக் காட்சி போன்று).//

      உங்களும் அப்படியே தோன்றியதா! மகிழ்ச்சி.

      //பழைய கார்களும் ரசிக்கும்படி இருந்தாலும்......... இப்போதைய வசதிகளை ஒப்பிடும்போது... பாவம் அப்போதைய உரிமையாளர்கள்.//

      ஆமாம், ஒவ்வொரு கண்டுபிடிப்பும் முதலில் அவர்களுக்கு பிடித்தமானதாக ஆச்சிரியம் கொடுக்க கூடியாதக இருக்கும்.
      இப்போதைய வசதி இல்லையே அப்போது என்று நமக்கு இருக்கிறது.

      //சென்ற பதிவில் சுருட்டை முடியுடன் இருந்த உங்கள் பேரனைப் பார்த்து மனம் சந்தோஷப்பட்டது. நல்ல எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் அவன் இருக்கட்டும்.//

      சென்ற பதிவில் பேரனை பார்த்து மனம் சந்தோஷப்பட்டது அறிந்து மகிழ்ச்சி. மேலும் அவனை வாழ்த்தியதற்கு நன்றி.





      நீக்கு
  14. மனித முகம் என்பது அப்படியே இருக்கிறது. அதில் கண், வாய் என்றெல்லாம் வரைய ஆசை. உங்களுக்கும் கற்பனையில் தோன்றியிருக்கிறதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனித முகம் என்பது அப்படியே இருக்கிறது. அதில் கண், வாய் என்றெல்லாம் வரைய ஆசை. உங்களுக்கும் கற்பனையில் தோன்றியிருக்கிறதே//

      மனித முகம் உங்களுக்கும் தெரிகிறதா? மகிழ்ச்சி.
      மூக்கு நல்ல எடுப்பாக இருக்கிற்டஹு.வாய் கூட சின்னதாக இருக்கிறது. நீங்கள் சொல்வது போல கண் வரைந்தால் நன்றாக இருக்கும்.
      ஓவியர் இல்லையா! அதுதான் வரைய ஆசை வந்து இருக்கிறது.
      உங்கள் மயிலாடுதுறை பயணம் சிறப்பாக இருந்ததா? உறவினர் வீட்டு விழாக்கள் மற்றும் கோவில் உலாவும் உண்டா?

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    2. சென்னையில்தான் விழாக்கள். மன்னார்குடியில் தங்கி அருகில் கிராமத்தில் பிரம்மோத்ஸவம். மூன்று நாட்கள் மன்னார்குடி இராஜகோபாலன் கோவிலில் விஸ்வரூப தரிசனம், வடுவூர் இராமர், ஒப்பிலியப்பன், கும்பகோணம் சார்ங்கபாணி கோவில், நாச்சியார் கோவில், திருச்சேறை கோவில் என அருமையான கோவில் உலா.. மனதிற்கு மிகவும் நிறைவான பயணம். தஞ்சையில் இரயில் ஏறி பெங்களூர் வந்து சேர்ந்தோம். நன்றி

      நீக்கு
    3. விழாக்கள், மற்றும் கோவில்கள் போய் வந்தது மகிழ்ச்சி. மயிலாடுதுறையில் "திரு இந்தளூர் பரிமள ரங்கநாதரை" தரிசனம் செய்து விட்டீர்களா முன்பே? நீங்கள் போன கோவில் எல்லாம் முன்பு போனது மனதில் வந்து போகிறது. மன்னார்குடி ஜனவரி முதல் தேதி இரண்டு மூன்று முறை போய் இருக்கிறோம். மற்ற கோவில்கள் உறவினர்களை அழைத்து சென்று காட்டுவது என்று அடிக்கடி போய் இருக்கிறோம்.
      உங்கள் பயணம் நிறைவாக இருந்தது அறிந்து மகிழ்ச்சி.
      வாழ்க வளமுடன்.

      நீக்கு
  15. குகைகள் பெரிய அளவில் இருக்கும் போலத் தோன்றுகிறது, சுற்றிப் பார்க்கவே நிறைய நேரம் எடுத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    கார் காட்சியகம் சுவாரசியம்.

    படங்கள் அனைத்தும் மிகத் தெளிவு.

    காணொளியும் பார்த்து ரசித்தேன். டைரக்டர் சங்கர் படம் போன்ற இயற்கையின் பிரம்மாண்டம்.

    அனைத்தும் ரசித்தேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  16. படங்களும் பகிர்வும் நன்று. கார் அருங்காட்சியம் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. படங்கள் நன்றாக இருக்கின்றன. காட்சியகம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு