
பேரனுக்கு சிறு வயது முதல் கிருஷ்ணா பொம்மை கதை பிடிக்கும், இப்போதும் பார்க்கிறான்.
நான் அங்கு இருந்த போதும் இந்த கதையை காட்டி மகிழ்ந்தான். இப்போதும் எனக்கு காட்டி மகிழ்கிறான். தினம் ஒரு கதை காட்டி கதை சொல்வான். எத்தனை முறை பார்த்தாலும் புதிதாக பார்ப்பது போல பார்த்து மகிழ்வான். நானும் புதிதாக கேட்பது போல அடுத்து என்ன என்று ஆவலுடன் கேட்பேன்,கதை சொல்வதில் அவனுக்கு மகிழ்ச்சி.
கேட்பதில் எனக்கு மகிழ்ச்சி.
கண்ணன் கோவர்த்தன கிரியை குடையாகப் பிடித்த கதை.
இந்த மலைதான் நமக்கு எல்லா வளங்களும் தருகிறது. மாடுகளுக்கு மேய்ச்சலுக்கு உதவுகிறது. மலையில் உள்ள அருவி நம் தாகத்தை தீர்க்கிறது. கனிகளை, காய்களை தருகிறது, மழை மேகங்களை தடுத்து மழையை தருகிறது. அதனால் இந்த மலையை வணங்குங்கள் .
//குன்று குடையா எடுத்தாய் கழல் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி.//
இந்த நாடகத்தில் பகைவர்களுக்கு போர் வீரர் போல காட்சி அளிப்பார். அதை பேரன் "அவர்கள் கண்ணுக்கு மட்டும் தான் அப்படி தெரியும் ஆச்சி என்று சொல்வான்"
2020ல் போட்ட பதிவிலும் கிருஷ்ணஜெயந்தி கதைகேட்க அழைப்பதை போட்டு இருக்கிறேன். படித்து பாருங்கள். நேரம் இருந்தால் பாருங்கள் பழைய பதிவை.
கிருஷ்ணா காளிங்கனை அடக்கிய கதையை சொல்கிறான் அவன் விளையாடும் பொருட்களை வைத்து சிறு வயதில்.
அவன் கதை சொல்வதை காணொளி எடுத்தேன். தேடினேன் கிடைக்கவில்லை., கிடைத்தால் போடுகிறேன்.
இந்த காளிங்க நர்த்தனம் பிடிக்கும் அவனுக்கு.
கதை ஆரம்பிக்கும் போது மயக்கும் புல்லாங்குழல் ஓசை வரும் அப்புறம் கண்ணன் திரும்பி பார்க்கும் காட்சி அருமையாக இருக்கும். "திரும்ப போகிறார் பாருங்க பாருங்க" என்பான்.
ஹே! மாதவா பாடல். எனக்கு பிடித்த பாடல் எப்போதும் கேட்பேன். மாதவா பாடல் பாடு என்றால் பாடுவான்.
நண்பர் வீட்டு கொலுவுக்கு பாடுகிறான்.
"சின்ன சின்ன பதம் வைத்து கண்ணா நீ வா வா "பாடல் பாடுவான்.
பேரன் சின்ன வயதில் போட்ட கிருஷ்ணர் வேஷம்
சின்ன சின்ன பதம் வைத்து இப்போது பாடிய பாடலை சேர்த்து கிருஷ்ணர் ஜெயந்தி வாழ்த்துகள் மகன் அனுப்பினான். குழந்தை கண்ணன் விளையாடும் விளையாட்டு இருக்கிறது பாருங்கள். அவன் பாடும் பாடலை கேட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.
மாயவரத்தில் இருக்கும் போது பேரன் கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணர் வேடமிட்டு இருந்தான்.
மாயவரத்தில் பேரன் வந்து இருந்த போது எடுத்த கிருஷ்ண ஜெயந்தி படம்
நடுவில் இருக்கும் கண்ணன் மருமகள் வரைந்த படம்
நாளை கிருஷ்ண ஜெயந்திக்கு மருமகள் செய்த சீடை, முறுக்கு
வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் "ஆனந்தா பல்பொருள் அங்காடியில்" கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து அலங்காரம்.
பூஜைக்கு வேண்டிய அனைத்து பொருட்களும் வைத்து இருக்கிறார்கள்.
அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------