
இதற்கு முன்பு போட்ட கீழ்க்குயில்குடி பதிவுகள் படிக்க வில்லை என்றால் படிக்கலாம்.
சைவ, வைணவக் கதைகளைக் கூறும் சிற்பங்கள் அழகாய் உள்ள கோபுரம் என்று முதல் பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். போன பதிவில் வைணவ கதைகள் கோபுரங்களில் இருந்ததைப் பார்த்தோம்.
இந்த பதிவில் சைவகதைகள் உள்ள கோபுரக்காட்சிகள்.
இன்னும் வரும் ,அய்யனார் கோவில் சிற்பங்கள் என்று போன பதிவில் சொல்லி இருந்தேன். கீழே வருவது அய்யனார் கோவில் பிரகாரத்தில் உள்ள சிலைகள், கோபுரத்தில் உள்ள கதை சொல்லும் சிற்பங்கள் , கோபுரம் தாங்கும் பொம்மைகள் காலத்தைச் சொல்கிறது. கேரளத்தினர், வட மாநிலத்தவர், நாடோடிகள் (குறவர்கள்) ஆகியோர் கோபுரத்தில் இருக்கிறார்கள்.
ஆலமர் கடவுள், கோபுரம் தாங்கும் பொம்மைகள் - கேரள ஆண், பெண்




