திருக்கடவூர்த் தலச்சிறப்பு:
சிவபெருமானது அஷ்ட வீரட்டானத்தில் ஒன்றாக திகழ்வது திருக்கடவூர். இப்போது திருக்கடையூர் என்கின்றனர். இக் கோவில் தருமபுர ஆதீனத்தை சேர்ந்த்து. திருஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகி மூவரால் தேவாரம் பாடப்பட்ட சிறப்பு உடைய பாடல் பெற்ற ஸ்தலம்.பிஞ்சிலம்,(ஒருவகை முல்லைகொடி) ,வில்வமரம் ஆகியவற்றைத் தல விருட்சமாக கொண்டது. தேவர்களும்அசுரர்களும் பாற்கடல் கடைந்த போது வினாயகரை வழிபடாத காரணத்தால் வினாயகர் இந்த தலத்தில் அமிர்தகுடத்தை மறைத்து வைத்துவிட்டாராம். அந்த அமிர்தகுடமே சிவலிங்கமான காரணத்தால் இங்குள்ள மூலவருக்கு அமிர்தம்+ கடம்= ”அமிர்தகடேஸ்வரர் ‘ என பெயர்.
அமிர்தகுடத்தை மறைத்தவிநாயகர் கள்ளவாரண பிள்ளையார் என்று
அழைக்கப்படுகிறார். இவர் மீது அபிராபி பட்டர் பாடல் பாடி இருக்கிறார்.
மஹாவிஷ்ணுவின் தியானத்தில் உண்டான சக்தியே அபிராமி அம்மை.
சிவபக்திக்காக தனது பக்தன் மார்க்கண்டனுக்கு என்றும் 16 வயது சிரஞ்சீவி வரம் அளித்து தனது இடது பாதத்தினால் எமனை உதைத்து சமஹ்காரம் செய்தார், பின் பூமாதேவிக்காக எமனை அனுக்ரஹம் செய்த சிறப்பு ஸ்தலம்.
காலன் எமனை சம்ஹரித்த சிறப்பால், மிருத்யுஞ்ஜெயமூர்த்தியாக விளங்கும்இந்த சுவாமியை தன் 59 வயது பூர்த்தி 60 வயது ஆரம்பமான “உக்ரரத சாந்திக்கும் “60 வய்து பூர்த்தி 61 வயது ஆரம்பமான “சஷ்டியப்தபூர்த்தி” வைபவத்திற்கும் 69 வயது பூர்த்தி 70 வயது ஆரம்பமான “பீமரதசாந்தி” வைபவத்திற்கும் , 80 வயது ஆரம்பமன “சதாபிஷேகம் “மற்றும் “ஆயிஷ்ய ஹோமம்” ஜாதகரீதியான மிருத்யுஞ்ஜெய ஹோமங்களுக்கு கலசங்களில் பூஜை செய்து ஹோமங்கள் செய்து நலம் பெறுவது சிறப்புடையது.
சரபோஜி அரசர் காலத்தில் தனது பக்தனுக்கு தை அமாவாசை அன்று முழு
பெளர்ணமியாக்கி “அபிராமி அந்தாதி “ அருளச் செய்த சிறப்புடையது.
63 நாயன் மார்களில் குங்கிலிய நாயனார் காரிநாயனார் சிவத்தொண்டு ஆற்றி
அருள் பெற்ற ஸ்தலம்.
கார்த்திகை மாதத்தில் வரும் (திங்கள்கிழமை) சோமவாரத்தில் 1008 சங்குகளால் அபிஷேகம் நடைபெறுவது மிகச்சிறப்புடையது.
சித்திரை மாதம் மகநட்சத்திரத்தில் கால் சம்ஹார பெருவிழாவும், சித்ரா
பெளணமியில் தீர்த்த வைபவமும் இத் தலத்தில் நடைபெறும்.
ஒருமுறை சரபோஜி அரசர் கோவிலுக்கு வந்தாராம், அபிராமி அம்மனை தரிசிக்க. அப்போது அம்மன் கோவிலில் இருந்த அம்மன் மேல் மிக பிரியம் உள்ள அபிராமி பட்டர் என்பவர் இந்த உலகை மறந்து அம்மன் நினைவில் கண்மூடி இருந்தார். அப்போது ராஜா தான் வந்ததுகூட தெரியாமல் இப்படி இருக்கிறாரே என்று கோபப்பட அங்குள்ளவர்கள் அவர் அம்மன் நினைவில் தியானத்தில் இருக்கிறார் என்று சொல்ல, இன்று என்ன திதி என்று அரசர் கேட்க, அதற்கு அவர் மெய் மறந்த நிலையில் பெளர்ணமி என்று சொல்ல, அவர் இன்று அமாவாசை அல்லவா இவர் பெளர்ணமி என்கிறரே இன்று பெளர்ணமியைக் காட்டவில்லை என்றால் தண்டனை என்ற போது அபிராமி பட்டர் தன்னை சொல்லவைத்தது அன்னைதான் அவளே கதி என்று அபிராமி அந்தாதி பாட, தாய் காட்சி கொடுத்து தன் காது தோட்டை எடுத்து வானத்தில் வீசி அமாவாசையை பெளர்ணமி ஆக்கினார் என்பது வரலாறு.
தன் குழந்தைக்கு ஒரு கஷ்டம் என்றால் அன்னை இறங்கி வருவாள்
இல்லையா? வந்தாள் அருளும் தந்தாள். ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை நாளன்று அனனை அற்புதம் செய்த அந்த நாள் இங்கு கொண்டாடப்படுகிறது.
 |
| அன்னையின் நந்தவனம் |
 |
| அன்னையின் நந்தவனம் |
நேற்று. (09/02/2013) தை அமாவாசை ஆனதால் அந்த விழா அங்கு நடைபெற்றது. நேற்று மாலை நாங்கள் அங்கு சென்றிருந்தோம்.
 |
| அபிராமி சந்நிதியில் மலர் விதானம் அமைக்கும் பணி |
அந்த விழாவில் 1000 குடத்திற்கு மேல் மக்கள் பால் குடம் எடுத்து அம்மனுக்கு
அபிஷேகம் செய்தார்கள். விளக்கு பூஜை நடந்தது. நவசக்தி அர்ச்சனை, இரவு
நடைபெறும் என்றார்கள். அம்மன் சன்னதியில் மலர் விதானம் அமைக்க பட்டது.நேற்று அற்புத காட்சியாக அபிராமிஅம்மைக்கு நவரத்தின அங்கி புதிதாக செய்திருந்தார்கள். அம்மன் போன்ற உருவம் செய்து அதற்கு அந்த நவரத்தின அங்கியை அணிவித்திருந்தார்கள். கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
 |
| நவரத்தின அங்கி அலங்காரம்-புறப்படுமுன் |
 |
| நவரத்தின அங்கியுடன் புறப்பாடு |
 |
| கண்கொள்ளாக் காட்சி |
 |
| திருவீதி உலா |
பலகோடி ரூபாய் மதிப்புடையதானதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு. அம்மனுக்குச் சாற்றுமுன் இத்திருவுருவத்தை திருக்கோயிலினுள்ளும் திருவீதிகளிலும் எழுந்தருளி திருஉலா செய்தனர். அதுவும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆதீனகர்த்தர்கள்,பக்தர்கள் முன்னிலையில் அம்மனுக்கு அங்கி சார்த்தும் வைபவம் நடைபெற்றது.
வாழ்க வளமுடன்.