திங்கள், 4 பிப்ரவரி, 2019

அபிராமி அன்னைக்கு ஓர் அழகிய அங்கி





திருக்கடவூர்த் தலச்சிறப்பு:
சிவபெருமானது அஷ்ட வீரட்டானத்தில் ஒன்றாக திகழ்வது திருக்கடவூர். இப்போது திருக்கடையூர் என்கின்றனர். இக் கோவில் தருமபுர ஆதீனத்தை சேர்ந்தது.  திருஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகி மூவரால் தேவாரம் பாடப்பட்ட சிறப்பு உடைய பாடல் பெற்ற ஸ்தலம்.பிஞ்சிலம்,(ஒருவகை முல்லைகொடி) ,வில்வமரம் ஆகியவற்றைத் தல விருட்சமாக கொண்டது. தேவர்களும்அசுரர்களும்  பாற்கடல் கடைந்த போது வினாயகரை வழிபடாத காரணத்தால் வினாயகர் இந்த தலத்தில் அமிர்தகுடத்தை மறைத்து வைத்துவிட்டாராம். அந்த அமிர்தகுடமே சிவலிங்கமான காரணத்தால் இங்குள்ள மூலவருக்கு அமிர்தம்+ கடம்= ”அமிர்தகடேஸ்வரர் ‘ என பெயர்.


அமிர்தகுடத்தை மறைத்தவிநாயகர் கள்ளவாரண பிள்ளையார் என்று
அழைக்கப்படுகிறார். இவர் மீது அபிராபி பட்டர் பாடல் பாடி இருக்கிறார்.

மஹாவிஷ்ணுவின் தியானத்தில் உண்டான சக்தியே அபிராமி அம்மை.

சிவபக்திக்காக தனது பக்தன் மார்க்கண்டனுக்கு என்றும் 16 வயது சிரஞ்சீவி வரம் அளித்து தனது இடது பாதத்தினால் எமனை உதைத்து சமஹ்காரம் செய்தார், பின்   பூமாதேவிக்காக எமனை அனுக்ரஹம் செய்த சிறப்பு ஸ்தலம்.

காலன் எமனை சம்ஹரித்த சிறப்பால், மிருத்யுஞ்ஜெயமூர்த்தியாக விளங்கும்இந்த சுவாமியை தன் 59 வயது பூர்த்தி 60 வயது ஆரம்பமான “உக்ரரத சாந்திக்கும் “60 வய்து பூர்த்தி 61 வயது ஆரம்பமான “சஷ்டியப்தபூர்த்தி” வைபவத்திற்கும் 69 வயது பூர்த்தி 70 வயது ஆரம்பமான “பீமரதசாந்தி” வைபவத்திற்கும் , 80 வயது  ஆரம்பமான
“சதாபிஷேகம் “மற்றும் “ஆயிஷ்ய ஹோமம்”  ஜாதகரீதியான  மிருத்யுஞ்ஜெய ஹோமங்களுக்கு கலசங்களில் பூஜை செய்து ஹோமங்கள் செய்து  நலம் பெறுவது சிறப்புடையது.

சரபோஜி அரசர் காலத்தில் தனது பக்தனுக்கு தை அமாவாசை அன்று முழு
பெளர்ணமியாக்கி “அபிராமி அந்தாதி “ அருளச் செய்த சிறப்புடையது.
63 நாயன் மார்களில் குங்கிலியக் கலய நாயனார், காரிநாயனார் சிவத்தொண்டு ஆற்றி அருள் பெற்ற ஸ்தலம்.

கார்த்திகை மாதத்தில்  வரும் (திங்கள்கிழமை) சோமவாரத்தில் 1008 சங்குகளால்  அபிஷேகம் நடைபெறுவது மிகச்சிறப்புடையது.

சித்திரை மாதம் மகநட்சத்திரத்தில் கால சம்ஹார பெருவிழாவும், சித்ரா
பெளர்ணமியில் தீர்த்த வைபவமும் இத் தலத்தில் நடைபெறும்.


அபிராமி பட்டரின் வாக்கை மெய் ஆக்க அமாவாசையை பெளர்ணமி ஆக்கினார்
அன்னை அபிராமி. (என் கணவர் வரைந்த ஓவியம்)

ஒருமுறை சரபோஜி அரசர் கோவிலுக்கு வந்தாராம், அபிராமி அம்மனை தரிசிக்க. அப்போது அம்மன் கோவிலில் இருந்த அம்மன் மேல் மிக பிரியம் உள்ள அபிராமி பட்டர் என்பவர் இந்த உலகை மறந்து அம்மன் நினைவில் கண்மூடி இருந்தார். அப்போது ராஜா, தான் வந்ததுகூட தெரியாமல் இப்படி இருக்கிறாரே என்று கோபப்பட அங்குள்ளவர்கள் அவர் அம்மன் நினைவில் தியானத்தில் இருக்கிறார் என்று சொல்ல, இன்று என்ன திதி என்று அரசர் கேட்க, அதற்கு அவர் மெய் மறந்த நிலையில் பெளர்ணமி என்று சொல்ல, அவர் இன்று அமாவாசை அல்லவா இவர் பெளர்ணமி என்கிறரே இன்று பெளர்ணமியைக் காட்டவில்லை என்றால்  தண்டனை என்ற போது அபிராமி பட்டர் தன்னை சொல்லவைத்தது  அன்னைதான் அவளே கதி என்று அபிராமி அந்தாதி பாட, தாய்  காட்சி கொடுத்து தன் காதுத் தோட்டை எடுத்து வானத்தில் வீசி அமாவாசையை பெளர்ணமி ஆக்கினார் என்பது வரலாறு.

தன் குழந்தைக்கு ஒரு கஷ்டம் என்றால் அன்னை இறங்கி வருவாள்
இல்லையா? வந்தாள்,  அருளும் தந்தாள். ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை  நாளன்று அனனை  அற்புதம் செய்த அந்த நாள் இங்கு கொண்டாடப்படுகிறது.

அன்னையின் நந்தவனம்

நேற்று. (09/02/2013) தை அமாவாசை ஆனதால் அந்த விழா அங்கு நடைபெற்றது. நேற்று மாலை நாங்கள் அங்கு சென்றிருந்தோம்.


அந்த விழாவில் 1000 குடத்திற்கு மேல் மக்கள் பால் குடம் எடுத்து அம்மனுக்கு
அபிஷேகம் செய்தார்கள். விளக்கு பூஜை நடந்தது. நவசக்தி அர்ச்சனை, இரவு
நடைபெறும் என்றார்கள். அம்மன் சன்னதியில் மலர் விதானம் அமைக்க பட்டது.நேற்று அற்புதக் காட்சியாக  அபிராமிஅம்மைக்கு  நவரத்தின அங்கி புதிதாகச்   செய்திருந்தார்கள். அம்மன் போன்ற உருவம் செய்து அதற்கு அந்த நவரத்தின  அங்கியை அணிவித்திருந்தார்கள். கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.



பலகோடி ரூபாய் மதிப்புடையதானதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு. அம்மனுக்குச் சாற்றுமுன் இத்திருவுருவத்தை திருக்கோயிலினுள்ளும் திருவீதிகளிலும் எழுந்தருளி திருஉலா செய்தனர். அதுவும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆதீனகர்த்தர்கள்,பக்தர்கள் முன்னிலையில் அம்மனுக்கு அங்கி சார்த்தும் வைபவம் நடைபெற்றது.

வாழ்க வளமுடன்.

65 கருத்துகள்:

  1. ஸாரின் ஓவியம் சூப்பர். நிறுத்தி நிதானமாக வரைந்திருக்கிறார். அமாவாசைக்கேற்ற சிறப்பான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      போன முறை போட்ட போதும் சாரின் ஓவியத்தை இப்படித்தான் பாராட்டினீர்கள்.
      சாரிடம் சொன்னேன் மகிழ்ந்தார்கள். இப்போது சொன்னேன் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
      வரலாறை அப்படியே படத்தில் கொண்டு வந்து விட்டார் சார் என்று சொன்னீர்கள்.

      இந்த முறை அதிரா போல் கீழ் இருந்து பதில் கொடுத்துக் கொண்டு வந்தேன்.
      உங்கள் அனைத்து பின்னூட்டங்களுக்கும் நன்றி நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. இரண்டு முறை திருக்கடவூர் சென்று வந்துள்ளேன். மாமா பீமராத சாந்திக்காகவும், சுகுமார் சஷ்டியப்த பூர்த்திக்காகவும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் மாயவரத்தில் இருக்கும் போது அடிக்கடி போகும் கோவில். உறவினர்கள், மாயவரம் அக்கம் பக்கத்து வீட்டினர், நண்பர்கள் 60, 80, 70 என்று போய் கொண்டே இருப்போம்.
      இன்று துரை செல்வாராஜூ அவர்கள் பதிவில் அதை பதிவு செய்தேன். அப்போது தான் நினைவு வந்தது முன்பு போட்ட பதிவின் நினைவு அதை படித்தேன், காணொளி மட்டும் இணைத்து மீள் பதிவாக போட்டு விட்டேன். துரை அவர்களுக்கு நன்றி.

      நீக்கு
  3. சற்றே இளமையான எஸ் வி சுப்பையா ஆர்ப்பாட்டமாக நடிக்கிறார். டி எம் எஸ் குரலில் நீண்ட நாட்களுக்குப் பின் இந்தப்பாடல் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், இளமையான எஸ்.வி. சுப்பையா .

      டி.எம்.எஸ் குரல் கணீர் என்று இருக்கும், வரலெட்சுமி அழகாய் இருப்பார், தெய்வீகமாய்.

      நீக்கு
  4. மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்கக்கூடாது என்பார்கள்! சொல்லடி அபிராமி என்று பாடும்போதும், நில்லடி முன்னாலே என்று பாடும்போதும் வடிவேலு ஜோக் நினைவுக்கு வருகிறது!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த அளவு வடிவேல் கவர்ந்து இருக்கிறார்.

      எனக்கு நினைவுக்கு வரவில்லை.

      நீக்கு
  5. நீங்கள் பகிர்ந்துள்ள இந்த நந்தவனத்தை நானும் படமெடுத்தேன். அதில் போட்டோஷாப் செய்துதான் அப்பாவின் தூறல்கள் புத்தகத்தில் அவர் அங்கு நடப்பது போல் பின் அட்டைப்படம் உருவாக்கப்பட்டது. அவர் எங்கள் வீட்டுக்கருகே நடக்கும் படத்தையும் நான்தான் எடுத்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போன பதிவில் ராமலக்ஷ்மி அதை சொல்லி இருந்தார்கள் திருகடையூரில் எடுத்த படமா என்று கேட்க வேண்டும் என்று.
      நான் கேட்டேன் உங்களை. அதற்கு இதே பதிலை அளித்தீர்கள்.
      இது மீள் பதிவு ஸ்ரீராம்.

      நீக்கு
  6. இனி வந்து கருத்து சொல்பவர்களுக்கு நாளை அல்லது அடுத்த நாள் பதில் சொல்கிறேன்.
    தம்பி பேரனை பார்க்க தென்காசி பயணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா கோமதிக்கா உங்கள் பயணம் இனிமையாக அமைந்திட வாழ்த்துகள்....தம்பி பேரனும் உங்களுக்குப் பேரன் தானே...பேரனோடு எஞ்சாய் செய்யுங்க...தென்காசி ஊரா ஆஹா அருமையான ஊர்....அப்ப பயணக் குறிப்புகள் வரும்னு சொல்லுங்க...படங்களோடு...

      கீதா

      நீக்கு
    2. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      பயணம் இனிமையாக அமைந்தது உங்கள் அருளால்.
      தம்பி பேரன் எனக்கும் பேரன் தான். பேரனுடன் ஐந்து மணி நேரம் மகிழ்ச்சியாக இருந்து விட்டு கிளம்பி இரவு வந்து சேர்ந்தோம்.

      தென்காசி அழகான ஊர், பொதிகை காற்று, வயல்வெளிகள் போகும் வழி எல்லாம் கோபுர தரிசனங்கல் என்று ரயிலில் போகும் போது ரசித்தேன்.
      அவை தான் படங்கள் ஏதாவது சமயம் பகிர்கிறேன்.

      நீக்கு
  7. இன்றைய நாளில் பொருத்தமான பதிவு.
    ஓவியம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      மீள்பதிவு, படிக்காத அன்பர்கள் படிக்கலாம் என்று பகிர்ந்தேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. அன்னைக்கு அழகான் அலங்காரம். வரலாற்றை விவ்ரித்தவிதமும் நன்றாக இருந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
      உங்கள் “சஷ்டியப்தபூர்த்தி திருக்கடையூரில் நடந்த விவரம் குமுதம் பத்திரிக்கையில் கோவில் விவரம் வந்த போது உங்கள் படங்களும் இடம்பெற்றதை சொல்லி இருந்தீர்கள்
      பழைய பதிவில்.

      உங்கள் கருத்துக்கு நன்றி சார்.

      நீக்கு
  9. இனிய காலை வணக்கம் கோமதிக்கா...

    புதிய ஒரு தகவல் அதாவது தை அமாவாசை அன்று திருக்கடவூர் அபிராமி அன்னைக்கு விசேஷம் என்பது.

    வரலாறும் அறிந்தோம் அக்கா..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      தை அமாவாசை திருக்கடவூர் அபிராமிக்கு விசேஷமான நாள்.
      வரலாறு எல்லோருக்கும் தெரியும் என்பாதால் கொஞ்சம் சுருக்கமாய் பகிர்ந்தேன்.

      நீக்கு
  10. கோயில் சென்றதில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது கண்டிப்பாக செல்ல வேண்டும்.

    உங்கள் கணவர் வரைந்த படம் ரொம்ப அழகா இருக்கு. அண்ணாவிடம் சொல்லிவிடுங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவிலுக்கு சென்று வாருங்கள் வாய்ப்பு கிடைக்கும் போது. எப்போதும் கோவிலில் கூட்டம் தான். கல்யாணம் நடந்து கொண்டு இருப்பதால்.

      உங்கள் கருத்தை கணவரிடம் சொல்லி விட்டேன். மகிழ்ந்தார்கள். நன்றி கீதா.

      நீக்கு
  11. படங்கள் எல்லாம் ரொம்ப அழகாக இருக்கு...

    நாளை சென்னை பயணம்...வெள்ளி மதியம் தான் இங்கு வருகிறேன். இன்று வலையில் சுற்றிவிடுவேன்....நாளையிலிருந்து முடியாது...வெள்ளி மாலைதான் தான் வலை வர இயலும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் பயணமா? வாருங்கள் மெதுவாய் . நேரம் கிடைக்கும் போது பேசலாம்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  12. அருமையான பதிவு. முன்னால் படித்த நினைவு இல்லை. உங்கள் கணவர் மிக அழகாக வரைந்திருக்கிறார். தத்ரூபமாக இருக்கிறது. எங்க வீட்டில் எல்லோருடைய சஷ்டிஅப்தபூர்த்தியும் திருக்கடையூரில் தான் நடந்தது. ஆகவே அடிக்கடி போவோம். போகும்போதெல்லாம் காவிரிப்பூம்பட்டினம் போகாமல் வரக்கூடாதுனு நினைத்துப் போவோம். போக முடிந்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
      நீங்கள் போனமுறை போட்ட போது படிக்கவில்லை, உங்கள் கருத்து இல்லை.
      ஏதாவது ஊருக்கு போய் இருப்பீர்கள்.

      உங்கள் குடும்பத்தினர் சஷ்டியப்தபூர்த்தியும் திருக்கடையூரில் நடந்தது மகிழ்ச்சி.
      இப்போது வசதியாக நல்ல ஓட்டல்கள் இருக்கிறது தங்கி, தரங்கம்பாடி கடற்கரை, காவிப்பூம்பட்டினம் எல்லாம் பார்க்கலாம். கேது ஸ்தலம் இருக்கிறது. எல்லாம் பார்க்கலாம்.

      கணவரிடம் உங்கள் பாராட்டை சொல்லி விட்டேன்.

      நீக்கு
  13. நவரத்ன அங்கி சார்த்திய விபரமெல்லாம் இப்போது தான் தெரியும். அழகாகப் படம் பிடித்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களுக்கே தெரியாது நவரத்ன அங்கி சாற்றுவது. கொழுந்தன் அவர்களுக்கு மணிவிழா ஏற்பாடு செய்ய குருக்களைப் பார்க்க் போனோம், அப்போது கிடைத்த இன்ப அதிர்ச்சி.

      மறுநாள் தினமலரில் வந்தது என்று வை.கோ சார் குறிப்பிட்டு இருந்தார் போனமுறை போட்ட பின்னூட்டத்தில்.

      அவசரமாய் பிடித்த் படங்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  14. சகோதரியாரே நலம்தானே
    கடந்த ஒருமாத காலமாக வலைக்குள் வரஇயலா நிலை
    இனி தொடர்வேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ, கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
      வாருங்கள் சகோ. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
      பதிவுகளை தொடர்ந்து படித்து வருவதற்கு நன்றி.

      நீக்கு
  15. பல முறை சென்றுள்ளேன். இன்று உங்கள் பதிவு மூலமாக மறுபடியும் சென்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி .

      நீக்கு
  16. எங்களுக்கு தரிசனம் கிடைத்தது அம்மா... நன்றி...

    ஓவியம் மிகவும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. மிக மகிழ்ச்சி மா..

    அம்பாள் தரிசனமும் , புராணமும் அருமை ..தரிசித்துக் கொண்டேன்..

    பதிலளிநீக்கு
  18. ரொம்ப அருமையான பதிவு. ஓவியமும் நல்லா இருக்கு.

    எனக்கு மிகவும் பிடித்த பாடலும்கூட. இந்தப் படத்தை என் இளவயதில் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
      ஓவியத்தையும், பதிவையும் ரசித்தமைக்கு நன்றி.
      இந்த பாடலில் கதையும், இருப்பதால் அதை பகிர்ந்தேன்.
      பிடித்து இருப்பது மகிழ்ச்சி. 'இளவயது' ரசித்தேன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  19. கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
    கபடு வாராடநட்பும்
    கன்றாத வளமையும் குன்றத இளமையும்
    கழுபிணி இலாத உடலும்

    --------------------------

    அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
    அதிகாவூரின் வாழ்வே
    அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
    அருள்வாய் நீ அபிராமியே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார். வாழ்க வளமுடன்.

      அருமையான அபிராமி பட்டர் பாடல் பகிர்வுக்கு நன்றி.

      நீக்கு
  20. வணக்கம் சகோதரி

    தை அமாவாசையை முன்னிட்டு தாங்கள் தந்த பதிவு அருமை. படங்கள் அழகாக வந்துள்ளது. திருக்கடவூர் என்றதும் அபிராமி பட்டர்தான் நினைவுக்கு வருகிறார். அன்னையின் அருள் பெற்ற அவரை நினைப்பதே புண்ணியந்தான்.ஆதிபராசக்தி பட பாடலும் கேட்டுள்ளேன். பிடித்த பாடலும். தங்களால் நவரத்ன அங்கியுடன் கூடிய அன்னையை தரிசிக்கும் பேறு பெற்றேன்.

    தங்கள் கணவர் வரைந்த ஓவியம் மிகவும் அழகாக உள்ளது. பேரனை மகிழ்வோடு பார்த்து விட்டு வாருங்கள். தங்கள் வரவையும் அன்புடன் எதிர்நோக்குகிறேன்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
      திருக்கடவூர் என்றாலே அபிராமி பட்டர் நினைவுக்கு வருவார்தான் நிங்கள் சொல்வது போல்.

      ஒவியம், பதிவு அனைத்தையும் ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      பேரனை பார்த்து விட்டு வந்து விட்டேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  21. தை அமாவாசைக்கு பொருத்தமான பதிவு. ஒரே ஒரு முறைதான் திருக்கடவூர் சென்றிருக்கிறேன். அந்த படத்தில் சரபோஜி ராஜாவாக நடித்திருப்பது எழுத்தாளர் அனுராதா ரமணனின் தாத்தாதானே?


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்.

      //அந்த படத்தில் சரபோஜி ராஜாவாக நடித்திருப்பது எழுத்தாளர் அனுராதா ரமணனின் தாத்தாதானே?//

      அப்படித்தான் நினைக்கிறேன். மீண்டும் போய் பார்க்க வேண்டும்.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  22. அபிராபி அம்மனின் கதை அறிந்து கொண்டேன், அரசல் புரசலாக தெரியும் அமாவாசையை பவுர்ணமியாக்கியதென.. ஆனா இன்றுதான் விபரமாக தெரிந்தேன்.

    மாமா வரைந்த படம் மிக அழகோஒ அழகு.. இப்போ அவர் வரைவதில்லையோ.. வரையச் சொல்லுங்கோவன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கவிஅமுதம் அதிரா, வாழ்க வளமுடன்.

      அந்த பழைய படம் பாருங்கள் அதிரா, நன்றாக இருக்கும்.
      காணொளி பார்த்தீர்களா?

      //மாமா வரைந்த படம் மிக அழகோஒ அழகு.. இப்போ அவர் வரைவதில்லையோ.. வரையச் சொல்லுங்கோவன்..//

      சொல்கிறேன் அதிரா.

      நீக்கு
  23. //நேற்று. (09/02/2013) தை அமாவாசை ஆனதால் அந்த விழா அங்கு நடைபெற்றது. நேற்று மாலை நாங்கள் அங்கு சென்றிருந்தோம்.//

    திகதியைப் பார்த்துக் குழம்பி.. இன்று ஸ்கூலில் 5ம் திகதி எனத்தானே போட்டு எழுதினேன் இது என்ன புது வம்பு என கஸ்டப்பட்டு.. பின்புதான் ஆண்டைப்பர்த்து கண்டு கொண்டேன் இது மீள் பதிவு என.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அபிராமி பட்டர் போல் தேதியை மாற்றி சொல்லி விட்டேன் என குழம்பி விட்டீர்களா?
      மீள்பதிவு என்று லேபிளில் குறிப்பிட்டு இருக்கிறேன் .
      உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  24. ஆகா.. அருமை.. அருமை.. கண் கவரும் சித்திரம் ஐயா அவர்களுடையது... அபிராமியைப் பற்றிப் பேசுதற்கும் கேட்பதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.... அவள் அருள் கொண்டே வையகம் வாழ்கின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.

      உங்கள் பதிவுதான் என்னை அபிராமி பதிவை போட வைத்தது, நன்றி உங்களுக்கு.
      அபிராமியைப் பற்றி பேச கேட்க புண்ணியம் தான்.
      அன்னையின் அருளால் அனைவரும் நலமாக இருக்க வேண்டும்.
      சாரின் சித்திரத்தை ரசித்து கருத்து சொன்னதை சாரிடம் சொல்லி விட்டேன்.

      நீக்கு
  25. தென்காசிக்குச் சென்று நலமுடன் திரும்பியாயிற்றா!!.

    தென்காசி ஸ்ரீ விஸ்வநாத ஸ்வாமி திருக்கோயிலில் தரிசனம் செய்தீர்களா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தென்காசி சென்று நலமுடன் வந்து விட்டோம்.(காலவலி இருக்கவே இருக்கு)

      காலை செங்கோட்டை ரயிலில் சென்று விட்டு , மாலை புறபட்டு வந்து விட்டோம்.
      வளைகாப்பு சமயத்தில் போன போது விஸ்வநாதரை தரிசனம் செய்தோம்.
      இப்போது போகவில்லை.
      உங்களுக்கு விரலில் என்ன வலி, கட்டைவிரலில் டைப் செய்வதாக போட்டு இருந்தீர்கள் கீதாசாம்பசிவம் அவர்கள் பதிவில்.
      நலமடைய வேண்டுகிறேன்.

      நீக்கு
  26. பகல் முழுதும் அலுவலக வேலை.. ஸ்டோர் கணினியில் இணையல் கிடையாது.. உடனிருக்கும் சாம்சங்கில் பதிவுகளைப் பார்க்கும்போது கட்டைவிரலாலே கருத்துக்களை டைப் செய்கிறேன்.. சற்று சிரமமாக இருக்கிறது..அதைச் சொன்னேன்... மற்ரபடி குறையொன்றும் இல்லை..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டைவிரலில் டைப் செய்யும் விவரம் புரிந்து கொண்டேன்.
      நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
      வாழ்க வளமுடன்.
      வாழ்க நலமுடன்.

      நீக்கு
  27. ஓ இல்லை கோமதி அக்கா, இப்போ நீங்கள் கேட்ட பின்பே வீடியோவைப் பார்த்தேன்.. சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா, வீடியோ பார்த்து விட்டீர்களா? நல்லது.
      நன்றாக இருக்கும். இப்போது உள்ளவர்கள் அதை மிகையான நடிப்பு என்பார்கள், ஆனால் அது அருமையான நடிப்பு. இறைவன் பால் வைத்த நம்பிக்கையை வெளிபடுத்தும் நடிப்பு.
      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  28. அன்பு கோமதி,
    மிக அழகான விவரிப்புடன் கோவில் படங்கள் அருமை. அன்னையைக் கண்டதில் மிக மகிழ்ச்சிமா.

    சாரின் ஓவியங்கள் எப்போழ்தும் உயிருடன் இருக்கும்.
    தாமதமாக வந்ததுக்கு மன்னிக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
      சாரின் ஓவியத்தை பாராட்டியதற்கு நன்றி அக்கா.
      மன்னிப்பு எல்லாம் வேண்டாம், நேரம் கிடைக்கும் போது படித்து கருத்து சொல்லலாம்.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  29. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் கோமதி அக்கா. எங்களுக்கு சுவீட் இருக்கோ? எந்தக் கோயிலுக்குப் போனீங்கள் எனச் சொல்லுங்கோ.

    நாளைக்கு எங்கள் அக்காக்களின் திருமண நாள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
      என்ன சுவீட் வேண்டும் வாங்கி வைக்கிறேன், வாங்க.
      நான் ஒரு சுவீட்டும் செய்யவில்லை.
      இறைவனுக்கு பழங்கள் வைத்து பூஜை.

      காலை என் கணவருக்கு மாப்பிளை அழைப்பு வைத்த கோவில். (எங்கள் கல்யாணத்தின் போது.) பஞ்சமுக பிள்ளையார், பெரியவேல் இருக்கும், நவக்கிரகம், வன்னி மரத்து பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, துர்க்கை எல்லாம் இருக்கும் அந்த கோவிலில். அந்த கோவில் பேர் குமரகம் கோவில், அவர்கள் தான் குமரகம் கல்யாணமண்டபம் வைத்து இருந்தார்கள். இப்போது அது நித்திலம் ஆஸ்பத்திரியாகி இருக்கிறது. திருப்பரங்குன்றம் போகும் வழியில் இருக்கிறது குமரகம் கோவில்.

      உங்கள் அக்காவிற்கு திருமணநாள் வாழ்த்துக்கள்.
      வாழ்க வளமுடன்.

      நீக்கு
    2. எனக்கு சுவீட் பெரிதாக பிடிக்காது ஆனா சமீபத்தில் ஒன்று கண்டு பிடிச்சேன்ன்.. இப்போ பெயர் மறந்திட்டனே... பாதாம் பாலில் உருண்டைகளாகப் போட்டிருகும்.. அது ரொம்பப் பிடிக்குது இப்போ எனக்கு.

      நீக்கு
    3. அது என்ன ஸ்வீட் தெரியவில்லையே!
      கண்டுபிடிச்சி வாங்கி வைக்கிறேன் எப்போது வருகிறீர்கள்.?

      நீக்கு
    4. அது கோமதி அக்கா... ரசமலாய்ய்ய்ய்ய்ய்... எங்கள் வீட்டில் யாருக்கும் விருப்பமில்லை... எனக்கு மட்டுமே பிடிக்கும் ஸ்ச்ச்ச்ச்ச்

      நீக்கு
    5. வாங்க வாங்க ரசமலாய் செய்து விடுவோம். இங்கு இனிப்புக்கு இப்போது தடை. குழந்தைகள் வந்தால், அல்லது விருந்தினர் வந்தால்தான். எல்லோருக்கும் பிடித்தால் செய்ய பிடிக்கும், நமக்கு மட்டும் என்றால் செய்ய கஷ்டம், சோம்பல் வேண்டாம் என்று தோன்றுவது தானே வழக்கம்.

      நீக்கு
  30. படங்களுக்கும் தல வரலாற்றுக்கும் நன்றி.
    நவரத்தின அங்கியுடன் தரிசனம் எங்களுக்கும் கிடைத்தது.

    ஓவியம் மிக அழகு, ஒளிரும் அந்த நிலவைப் போலவே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
      உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.
      ஓவியத்தை ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு