ஞாயிறு, 22 மார்ச், 2020

தண்ணீர் தண்ணீர்!


உலக தண்ணீர் தினம் இன்று.

நீர் பாதுகாப்பு பற்றி  படித்த வாசகங்கள் எல்லோருக்கும் தெரிந்து இருக்கும் என்றாலும் மீண்டும் படிக்கலாம் ஒரு முறை.

 யூ-டியூப்பில் பகிர்ந்தவர்கள்;-

TNDTA PRIMARY SCHOOL PANDARAMPATTI THOOTHUKUDI -2

//நீரின்றி அமையாது உலகு
துளி துளி மழைத்துளி அது நம் உயிர்த்துளி
வான் தரும் மழை -அதை வீணாக்குவது நம்பிழை
மழை நீர்த் தொட்டி நம் வாழ்வுக்கு வட்டி
மழையால் ஆவது உலகு ஆகையால் மரம் வளர்த்து பழகு
நீரின்றி பசுமை இல்லை பசுமையின்றி நீர் இல்லை
நீர் வளம் பெருக்குவோம் நீர் வளம் காப்போம்
மனிதனுக்கு அழகு மனம் புவிக்கு அழகு மரம்
மரம் வளர்ப்போம் மனம் குளிர்வோம்
உயிர்களைக் காக்க தண்ணீரைக் காப்போம்
இன்று சேமிக்கப்படும் தண்ணீர் நாளை துடைக்கப்படும் கண்ணீர்
அவசியம் அவசியம் நீர் பாதுகாப்பு அவசியம்
சேகரிப்போம் சேகரிப்போம் மழை நீரை சேகரிப்போம்//

இப்போது உள்ள குழந்தைகளுக்கு இதைச் சொல்லித் தருவது பாராட்ட வேண்டிய விஷயம். பாராட்டுவோம். வாழ்த்துவோம்.தமிழன் செந்தில் என்பவர் இதைப் பகிர்ந்து இருக்கிறார் யூ-டியூப்பில்.
மனதை வருத்தும் காட்சிகளும் பாடல் வரிகளும் வருகிறது பாருங்கள்.
சின்ன காணொளிதான்.

இதில் வருவதுபோல் மக்கள் படும் கஷ்டங்களைத் தொலைக்காட்சியில் கோடை வரும்போது ஓவ்வொரு ஆண்டும் காட்டுவார்கள். ஆனால் அதனால் ஏதாவது நன்மை கிடைத்து வருகிறதா மக்களுக்கு ? கிடைத்தால் நல்லது.

இன்னொரு  விழிப்புணர்வுப் பதிவு  யூ-டியூப்பில்.https://www.youtube.com/watch?v=hR-zbmrliVs நான் இங்கு சுட்டி மட்டும் கொடுத்து இருக்கிறேன். 
  இயற்கை அள்ளிக் கொடுத்து இருக்கும்  அழகை அந்த காணொளியில் காணலாம். அத்தனை அழகாய் இயற்கைக் காட்சிகள், பறவைகள், நீர் நிலைகள் அணைக்கட்டுகள் அனைத்தும் வருகிறது. 

இந்த காணொளியில் உள்ள வாசகங்களைத் தொகுத்துக் கொடுத்து அதுக்குப் பொருத்தமாய் என்னிடம் நான் எடுத்த படங்களைக் கொடுத்து இருக்கிறேன்.

அதில் வரும் வாசகங்கள்  :-

நீர் இன்று அமையாது உலகெனின் யார் யாருக்கும் 
வான் இன்று அமையாது  ஒழுக்கு
-திருக்குறள்.

நீர் இன்றி அமையாது  உலகு என்று நீதிதேவன் வாக்காக வள்ளுவர் சொன்னார்.

நீயின்றி அமையாது  அந்த நீரும் நிலைமைக்குத் தகுந்தாற் போல் நானும் சொன்னேன்.


             படித்த வாக்கியத்திற்குப் பொருத்தமாய் நான் எடுத்த  ஏரிப் படம்.

அடி நூறு, அடி ஆயிரம் துளைகள் போட்டு அடிப்பாவி நிலத்தடி நீரைக் காணோம்

ஆழமாக வெட்டிய கிணறு-    
மேல் இருக்கும் வாக்கியத்திற்குப் பொருத்தமாக   நான் எடுத்த கிணறு படம்.

மழை நீரைச் சேமித்தால் நிலத்தடி நீர் மட்டம் பெருகும்
மனிதன் வாழ இறைவன் தந்த கொடைதானன்றோ!


நேற்று 1 மணி நேரம் மழை பெய்தது மதுரையில்.  இறைவன் தந்த கொடைக்கு நான் எடுத்த காணொளி, சின்ன காணொளி தான். பார்க்கலாம்.


தண்ணீரைச் சேமிக்க  கள்ளி கூட முள்ளாக்கி வாழுது பாரு !

இந்த வாக்கியத்திற்குப் பொருத்தமாய் நான் எடுத்த கள்ளிப் படங்கள்//தப்பாகச் சொட்டு சொட்டாக வீணாக்கும் நீரு 
இப்போ நாம் தடுக்கலன்னா தடுப்பது யாரு?//
நான் எடுத்த படம் இல்லை- தண்ணீர் தினத்திற்கு வாட்ஸ் அப்பில் வந்த படம் 
இந்த வாக்கியத்திற்கு பொருத்தமாய் நான்  எடுத்த கள்ளி படம்.அனைத்து ஜீவராசிகளுக்கும் தண்ணீர் அவசியம்.
என் கணவர் வரைந்து வைத்து இருந்த ஓவியம்.தண்ணீரும் உணவும்  இல்லாமல் குடியிருப்பை நாடி வரும் யானைகள்.

நம்மைத் தேடி வரும் பறவைகளுக்கு  அரிசியும் , தண்ணீரும்  தருவது நமது கடமை.

எங்கள் பக்கத்து குடியிருப்பு வளாகத்தில் இப்படி மரத்தடியில் வைத்து இருக்கிறார்கள்.

தண்ணீர் கிடைக்க வில்லை என்று பாதையில் செல்வோர் கவலைப் படாமல் தண்ணீர்ப் பழம் வாங்கிச் சாப்பிட்டுத் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம். கடை திறந்து இருக்கும்போது  எடுத்து இருந்தால் பழத்தையும் சேர்த்து எடுத்து இருக்கலாம். பயணம் செய்யும் போது எடுத்த படம்.


 மழை நீரைச்சேமித்து, சேமித்த தண்ணீரைச் சிக்கனமாய்ச் செலவு செய்து வாழ்வோம்.
                                                                    வாழ்க வளமுடன்.

66 கருத்துகள்:

 1. அழகான படங்கள் சகோ தண்ணீரின் தேவையை, அவசியத்தை நாம் இன்னும் சரியாக உணரவேயில்லை.

  ஏனோ தெரியவில்லை இன்று அதிகாலை தேவகோட்டை வீட்டின் பின்புற காலி இடத்தில் நான் மட்டும் தனியாக அமர்ந்து இருந்தேன் (நான் மட்டும்தானே உறுப்பினர்) மயில்கள் அடிக்கடி வரும் இவைகள் தண்ணீருக்கு எங்கே போகும் என்ற சிந்தனை வரவும் சட்டென அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தேன் ஒரு மயில் சப்தம் கொடுத்ததுதான் தாமதம் எங்கிருந்துதான் வந்ததோ ஆறு மயில்கள் வந்து தண்ணீர் குடித்தன...

  பிறகு காகங்களும் வந்தன இனி தினமும் ஊற்றி வைக்க முடி செய்துள்ளேன்.

  அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி வாழ்க வளமுடன்

   இன்று உங்களின் உள் உணர்வு மயில்களுக்கு தண்ணீர் தேவை படுகிறது வை என்று சொல்லி இருக்கிறது.

   ஆறு மயில்கள் ! போட்டோ எடுத்தீர்களா மயில்களை? உங்க ஊர் பக்கம் எல்லாம் மயில்கள் காய வைத்த உணவு பொருட்களை தின்று தீர்த்துவிடும் என்பார்கள்.
   நீங்கள் தண்ணீர் வைத்தது மகிழ்ச்சி. ஒன்றாய் ஆறு மயில்கள் பார்க்கவே அழகாய் இருந்து இருக்கும். உங்கள் தனிமை போன இடம் தெரியாதே!
   காகம் வந்து விட்டதா? இனி உங்களை அவை விடாது கூப்பிடும் .

   தினம் வைக்க முடிவு செய்து இருப்பது மகிழ்ச்சி.

   அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் தான்.
   உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 2. மழை நீரைச்சேமித்து, சேமித்த தண்ணீரைச் சிக்கனமாய்ச் செலவு செய்து வாழ்வோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 3. படங்கள் அனைத்தும் அருமை...

  'கள்ளி' படம் ஏனோ கொரோனாவை ஞாபகப்படுத்துகிறது...

  உங்களின் மழை காணொளி அருமை...

  தமிழன் செந்தில் அவர்களின் காணொளி வரவில்லை...

  YouTube இணைப்பு : → தாய்ப்பாலும் தண்ணீரும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   கள்ளி படம் கொரோனாவை நினைவு படுத்துகிறதா ஏன் என்ன காரணம்?
   மழை காணொளியை ரசித்தமைக்கு நன்றி .
   தமிழன் செந்தில் காணொளி https://www.youtube.com/watch?v=Uq52fiZ8CqA
   நீங்கள் அனுப்பிய காணொளி பார்த்தேன் அது குழந்தைகளை நடிக்க வைத்தது. இந்த பாடல் உண்மையாக தண்ணீருக்கு கஷ்டபடுவதை எடுத்த படங்கள் தொகுப்பு.
   இது நன்றாக இருக்கும் பாருங்கள் நேரம் இருந்தால்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
  2. அந்த காணொளியில், ஒவ்வொரு படத்தைப் பார்க்கும் போது மனம் பதறுகிறது அம்மா...

   நீக்கு
  3. ஆமாம் தனபாலன் , தண்ணீருக்கு மக்கள் படும் துன்பங்களை காட்டவே அந்த காணொளி பகிர்ந்தேன்.
   அதைப் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி தனபாலன்.

   நீக்கு
 4. மிக மிக ஆர்வமுடன் இருந்தால் ஒழிய இத்தனை அருமையான படங்களுடனும் பதிவை படைப்பது முடியாது..சிறப்புப்பதிவு வெகு வெகுச் சிறப்பு..வாழ்த்துகளுடன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.

   உங்கள் உற்சாகமான கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

   நீக்கு
 5. வணக்கம் சகோதரி

  இன்று உலக தண்ணீர் தினம். அதற்கேற்ற பதிவு மிகவும் அருமையாக உள்ளது. பொருத்தமான வாசகங்களும், அதற்கேற்ற படங்களும் நன்றாக உள்ளது.மழை நீரை வீணடிக்காமல் சேமிக்க வேண்டும். அப்படி அவசியமாக செலவு செய்யும் நீரை செடி கொடி, மரங்கள் என்பனவற்றிக்கு பயனுள்ளதாக ஆக்க வேண்டும். இங்கும் நேற்றைக்கு முதல் நாள் மாலை தீடிரென நல்ல மழை பெய்தது. தண்ணீரின் தேவையை உணர்த்தும் நல்ல பதிவு. படித்து மிகவும் ரசித்தேன்.

  இப்போதுள்ள சூழல் தண்ணீரை அதிகம் செலவழிக்கும்படியாகவும் ஆகி வருகிறது. அதை நினைத்து ஒரு பக்கம் கவலையாகவும் உள்ளது.

  ஆம்.. அனைத்து ஜீவராசிகளுக்கும் தண்ணீர் அவசியமென உணர்த்திய படமாக உங்கள் கணவர் வரைந்த தண்ணீர் படம் மிகவும் அழகாக உள்ளது. அவருக்கு என் பாராட்டுகள்.

  உங்களின் முந்திய பதிவுகளுக்கு என்னால் வர இயலவில்லை. பிறகு வருகிறேன். இங்கு குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை, என் குழந்தைகளுக்கும் வீட்டிலிருந்தே வேலை என்பதால் அவர்களுக்கு சமையல் டிபன், என செய்வதற்கும், சின்ன குழந்தைகளை கவனிக்கவும், காலை, மாலை என ஒவ்வொரு நேரமும் பறக்கிறது. அவர்களை வெளியே எங்காவது அழைத்துச் செல்லவும் முடியாமல் வீட்டுச்சிறையில் அவர்களும் பொழுது போகாமல், தவிக்கிறார்கள். எல்லாம் கொரோனா படுத்தும் பாடு. விரைவில் உலக மக்கள் அனைவரும் இதன் பிடியிலிருந்து விடுபட ஆண்டவனை பிரார்தித்தபடி இருக்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலாஹரிஹரன், வாழ்க வளமுடன்.
   உங்களுக்கு நேரமில்லாத காரணத்தால் வரவில்லை என்று தெரியும்.

   நேரம் கிடைக்கும் போது படிக்கலாம் பதிவுகளை .முன்பு மழை நீரை சேமிப்பது போல் இப்போது அடுக்குமாடி குடியிருப்புகளில் மழை நீரை வீட்டுக்குள் பிடிக்க முடியவில்லை.
   வெளியே போகும் நீரை தான் சேமிக்க வேண்டும்.

   அரிசி, உளுந்து களையும் நீர் செடிகளுக்கு ஊற்றலாம்.

   நேற்று திடீர் என்று தான் பெய்தது. காய்ந்து கிடக்கும் மரம் செடி, கொடிகளுக்கு ஆனந்தம்.
   இப்போதுள்ள சூழல் தண்ணீரை அதிகம் செலவழிக்கும்படியாகவும் ஆகி வருகிறது. அதை நினைத்து ஒரு பக்கம் கவலையாகவும் உள்ளது.


   //இப்போதுள்ள சூழல் தண்ணீரை அதிகம் செலவழிக்கும்படியாகவும் ஆகி வருகிறது. அதை நினைத்து ஒரு பக்கம் கவலையாகவும் உள்ளது.//


   ஆமாம், இப்போது கை கழுவ வேண்டும் என்பதால் பைப்பை திறந்து விட்டு கை கழுவி கொண்டே இருக்கிறார்கள் ஒன்றும் செய்ய முடியாது.

   என் கணவர் கணினியில் முன்பு வரைந்து பார்க்க வரைந்து இருந்தது. படங்களை தேடும் போது கிடைத்தது பொருத்தமாய் இருக்கிறது என்று சேர்த்தேன், உங்கள் பாராட்டுக்களை சொல்கிறேன்.

   உங்களுக்கு பொறுப்புகள் கடமைகள் நிறைய இருக்கிறது கமலா முடிந்த போது மெல்ல படிக்கலாம்.

   //விரைவில் உலக மக்கள் அனைவரும் இதன் பிடியிலிருந்து விடுபட ஆண்டவனை பிரார்தித்தபடி இருக்கிறோம்//

   உலக நலனுக்கு இன்று காலையும், மாலையும்(காலை ஏழு மணிக்கும், மாலை 6 மணிக்கும்) மக்கள் மனதில் இருக்கும் கொரோனா வைரஸ் பயம் போக கூட்டுதவம் அவர் அவர் வீடுகளிலிருந்தே தவம் இயற்றப்பட்டது.உலக நலனுக்கு வாழ்த்தினோம். உலகசமுதாய சேவா சங்கத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் செய்யப்பட்டது.
   விரைவில் இந்த துன்பம் விலகும் என்று நம்புவோம்.


   உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி கமலா.
   நீக்கு
 6. மிக அருமையான பதிவு! உங்கள் கணவரின் ஓவியம் மிக அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.
   கணவரின் ஓவியத்தை ரசித்தமைக்கு நன்றி.

   நீக்கு
 7. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

  தற்போது, தங்களது தண்ணீர் தண்ணீர்! பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

  உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

  எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சிகரம் பாரதி, வாழ்க வளமுடன்
   தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
   என் பதிவை நீங்களே இணைத்து விட்டீர்கள் நன்றி.

   நீக்கு
 8. நீரின்றி அமையாது உலகு...

  வள்ளுவப்பெருமானின் திருவாக்கிற்கு இணங்க நீரின் பெருமையைக் கூறும் சிறப்பான பதிவு..

  நீரின் அருமையை உணர்ந்து அனைவரும் ஆக்க பூர்வமாக செயல்படுவதே நீராதாரம் மேம்படுவதற்கு சிறந்த வழி..

  வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
   நீரின் பெருமையை அனைவரும் உணர்ந்து ஆக்க பூர்வாமக செயல்பட வேண்டும் என்று அருமையாக சொன்னீர்கள்.
   உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
   வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

   நீக்கு
 9. அழகான படங்கள்.  பொருத்தமான வாசகங்கள்.  பூமியைக் குடைந்து குடைந்து நீரை எடுத்து செலவு செய்து கொண்டிருக்கிறோம்.  எதிர்காலத் தலைமுறைக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறோம்.  எதிர்காலம் என்ன ஆகுமோ?  இயற்கை மனம் வைத்தால் மட்டுமே மனிதனைக் காக்க முடியும். அந்த இயற்கையையே சீரழித்துக் கொண்டிருக்கிறான் மனிதன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   நிறைய இடங்களில் (சென்னையில்) அதிகமாக குடைந்து விட்டதால் கடல் நீர் போல உப்பு கரிக்கிறது என்கிறார்கள்.
   நீங்களும் சொல்லி இருந்தீர்கள் உப்பு படிவதாக.
   எதிர்காலம் கேள்விகுறி ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீர் மேலாண்மையை எல்லோருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

   //இயற்கை மனம் வைத்தால் மட்டுமே மனிதனைக் காக்க முடியும்.//
   இயற்கை நம்மை காக்க வேண்டும்.
   இயற்கையை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 10. தண்ணீர்ப்பழம் என்றால் என்ன?  நான் பார்த்ததில்லை.  ஸார் வரைந்திருக்கும் படத்தை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம், தர்பூசணியின் ஆங்கில பெயரை இப்படி தண்ணீர்ப் பழம் என்று சொல்கிறார்கள். வித்தியாசமாக இருந்ததால் தான் போகிற போக்கில் எடுத்த படம்.

   நீக்கு
  2. ஓ.....   நினைத்தேன்.   தர்பூஸ்தானா அது?

   நீக்கு
 11. இனிய காலை வணக்கம். உணர்வு பூர்வமான பதிவு. தண்ணீர் இல்லாமல் என்ன தான் செய்ய முடியும். படங்களும் அதற்குக் ஒடுத்த தலைப்புகளும் அற்புதம்.

  காணொளி மனதைக் கலக்குகிறது.
  வீடுகள் கட்டும்போதே மழை நீர் சேகரிக்கும்படி செய்யக் கூடாதோ.
  அப்படியும் நீங்கள் மழைத்தண்ணீரை உபயோகப்
  படுத்துவது மிக மகிழ்ச்சி. சாரின் ஓவியம் அழகு வண்ணத்தோடு மிளிர்கிறது.

  மிக மிக நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
   இனிய காலை வணக்கம் அக்கா
   படித்த கருத்துக்களை தொகுத்து அதற்கு என் படங்களை போட்டு இருக்கிறேன்.
   இப்போது கட்டும் வீடுகளில் அப்படித்தான் செய்கிறார்கள் அப்படி கட்டவில்லை என்றால் அனுமதி இல்லை என்று நினைக்கிறேன்.
   இங்கு மழைநீரை பிடிக்க முடியாது அக்கா. எங்கள் வீட்டில்தான் மழைநீரை சேமித்தேன், அதன் படங்கள் முகநூலில் பழைய தண்ணீர் பதிவுகளில் போட்டு இருக்கிறேன்.

   முதன் முதலில் கணினியில் வரைந்து பார்த்த ஓவியம்.
   உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

   நீக்கு
 12. தண்ணீரின் அத்தியாவசத்தினை நம் மக்கள் இன்னும் உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்ற மமதையில் வாழும் மனிதர்கள். இயற்கை சீறி எழுந்தால் என்ன நடக்கும் என்பதை இன்னமும் நாம் புரிந்து கொள்ளவில்லை.

  காணொளி மனதைக் கலக்கியது. ஐயா வரைந்த ஓவியம் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
   எல்லோருக்கும் இப்போது பயன் படுத்த தண்ணீர் வேண்டும் அவ்வளவுதான், வேறு நினைப்பு இருப்பது போல் இல்லை. அரசு மீண்டும் மழைநீர் சேகரிப்பை கடுமையாக கடைபிடிக்க சொல்ல வேண்டும்.
   அவர்களே ஏரி, குளங்கள் காணாமல் போவதை கவனிக்காமல் இருக்கிறார்கள்.
   அரசு அலுவலகங்கள் ஏரிகளில் கட்டப்பட்டு இருக்கிறது .

   //இயற்கை சீறி எழுந்தால் என்ன நடக்கும் என்பதை இன்னமும் நாம் புரிந்து கொள்ளவில்லை.//

   ஒவ்வொரு முறையும் வந்து பாடம் நடத்தி போகிறது இயற்கை, ஆனாலும் கற்றுக் கொள்ள மனம் இல்லை நமக்கு.

   நாம் பிரார்த்தனை செய்வோம் வருங்காலம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று.

   சாரின் படத்தை ரசித்தமைக்கும் , கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 13. நீர் பற்றிய விளக்கம் அருமை

  கொரோனா தொற்றாது - மக்கள்
  தம்மைப் பாதுகாக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் Yarlpavanan, வாழ்க வளமுடன்
   நீங்கள் சொல்வது சரி. மக்கள் தம்மை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 14. ஆஹா “தண்ணீர் தண்ணீர்” சரிதா வின் படம் பார்த்திட்டேனே நான்:)).

  உண்மைதான் தண்ணி இல்லை எனில் எதுவுமே பண்ண முடியாதே.. காற்றுக்கு அடுத்து இருப்பது தண்ணீர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
   முதலில் தண்ணீற் தண்ணீர் சரிதா பாடும் பாட்டு போட்டு இருந்தேன், ஆதனால் இந்த தலைப்பு கொடுத்தேன், அப்புறம் தண்ணீர் பற்றிய காணொளி கொடுத்ததால் அதை எடுத்து விட்டேன். நிறைய பேர் காணொளி பார்ப்பது இல்லை.
   காற்று மாசு அடியந்து வருகிறது, தண்ணீர் தட்டுபாடு . தண்ணி இல்லை என்றால் ஒன்றும் செய்யமுடியாதுதான்.

   நீக்கு
 15. ஏரியும் பசுக்களும் அழகு, மகிழ்ச்சியாக நீர் அருந்துகின்றன....

  ஆஆ கிணறு மிக ஆழம்.. எங்களூர்க் கிணறுபோல, ஆனா எங்களூர்க் கிணறுகள் எல்லாம் பென்னாம் பெரிய வட்டமாகவும் ஆழமாகவும் இருக்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா இங்கும் பெரிய வட்டகிணறுகள் உண்டு. நீங்கள் சொல்வது போல் தங்கையின் கணவரின் தாத்தா திருப்பரங்குன்றத்தில் பென்னாம் பெரிசாக கிணறு வெட்டி இருக்கிறார்கள். பாதையில் செல்வோருக்கு பயன் படும் என்று அந்தக்காலத்தில்.
   இப்போது மக்கள் அதில் குப்பைகளை போட்டு வைத்து இருக்கிறார்கள் தண்ணி இல்லை என்று.
   எங்கள் அம்மா வீட்டு கிணறு வட்டம் தான்.

   இது கோயில் கிணறு.

   நீக்கு
 16. மழை வீடியோ அழகு.. கள்ளி அழகு.. அது தண்ணீரைச் சேகரிக்கிறதோ?.. வீட்டில் சப்பாத்திக் கள்ளி என நினைக்கிறேன்.. வளர்க்கிறேன் நான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மழை வீடியோ பார்த்தீர்களா? நன்றி. கள்ளி தண்ணீரைச் சேகரிக்கிறது.
   மகன் ஊரில் எடுத்த படம். அந்த ஊரில் அழகாய் வித விதமாய் கள்ளி இருக்கிறது.
   கள்ளி வளர்க்கிறாள் என் தங்ககையும் மஞ்சள் பூ பூக்கும் பார்க்க அழகு.

   நீக்கு
 17. இனி வருங்காலத்தில் கொரொனா நினைவுதினமும் வரலாம்:))..

  கள்ளிப்படங்கள் அழகு..

  அதென்ன தண்ணீர்ப்பழம் கோமதி அக்கா? வோட்டமிலனோ?:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொரானா நினைவு தினம் கேடகவே கவலையாக இருக்கிறது.
   விரைவில் உலகத்தை விட்டு இந்த கொரானா ஓட வேண்டும்.
   எத்தனை உயிர்களை பலி கொண்டு இருக்கு.
   இறைவன் அருளால் எல்லோரும் நலமாக இருக்கட்டும்.
   வோட்டமிலன் பழம் தான்.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.

   நீக்கு
 18. திரு ரமணியின் கருத்தோடு உடன்படுகிறேன்

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்
  ரமணி சார் கருத்தோடு உடன்படுவது மகிழ்ச்சி.

  நீங்கள் எல்லாம் கொடுக்கும் ஊக்கம் தான் இந்த ஆர்வம்.
  நீங்கள் அழகான படங்களுடன் பதிவுகள் போட்டு அசத்துகிறீர்கள்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 20. தண்ணீரின் அருமை பலருக்கும் தெரிவதில்லை.

  எனக்கு தண்ணீர் வீணாக்குவது, மின்சாரம் வீணாக்குவது (ஃபேனைப் போட்டுவிட்டு அடுத்த ரூமுக்குப் போய்விடுவது என்பது போல) போன்றவை அறவே பிடிக்காது. (ஆனா எல்லோரும் இதனை அப்ரிஷியேட் செய்வதில்லை. கொஞ்சம் தண்ணீர் வீணானா என்ன ஆயிடப்போகுது..அப்பா ஏன் இவ்வளவு சீரியசா எடுத்துக்கறார் என்றே சொல்வார்கள்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
   நானும் உங்களை போல் தான் நினைப்பேன். ஆள் இல்லா அறையில் ஃபேன் லைட் எரிவது பிடிக்காது. தண்ணீரை கொட்டுவது பிடிக்காது.
   சிலர் இதை சட்டை செய்ய மாட்டார்கள்தான்.

   நீக்கு
 21. இதோ... ஏப்ரல், மே நெருங்குகிறது. தண்ணீரின் அருமையைப் பற்றி அவசியமான பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தண்ணீர் தேவைகள் அதிகமாகும் காலம், தண்ணீர் லாரியின் எண்ணிக்கை அதிகமாகிறது.

   எல்லோரும் சிக்கனமாய் தண்ணீரை பயன்படுத்தினால் நல்லது .
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 22. அவசியமான பகிர்வு. சிந்திக்கத் தூண்டும் படங்களும் விளக்கங்களும். சார் வரைந்திருக்கும் ஓவியம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
   பதிவை பற்றிய கருத்துக்கும், சாரின் ஓவியத்தை ரசித்து கருத்து சொன்னதற்கும் நன்றி.

   நீக்கு
 23. காணொளி பார்க்க மனம் பதறுகிறது. மழை வீடியோ அழகா இருக்கு அக்கா. இங்கு தண்ணீர் அவ்வளவு பிரச்சனை இல்லை. அடிக்கடி மழை தான் அதிகம். ஆனால் இங்கு சிக்கனம் தேவை. பணம் கட்டவேண்டும். மழைநீர் நாங்க சேமிக்கின்றோம். ஊரிலும் வீட்டுக்கு 2 கிணறு இருக்கும். கள்ளி படம் அழகு. பொருத்தமான வாக்கியம் அருமையாய் இருக்கு. சாரின் ஓவியம் அழகா இருக்கு.
  தண்ணீரின் சிக்கனத்தை அவசியம் வலியுத்தும் விழிப்புண்ர்வு பதிவு அக்கா. எல்லோரும் சிந்தித்து, செயல்பட்டால் நல்லது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்
   ஆமாம், காணொளி பார்க்க மிகவும் நம் பதறும் அவர்களை நிலைமை மாற வேண்டும்.
   மோட்டார் போட்டு தண்ணீரை இருப்பவன் எடுத்து கொண்டால் அடுத்தவர்களுக்கு தண்ணீர் இல்லாமல் போகும்.
   மழை நீர் சேமிப்பு அருமை. தண்ணீருக்கு காசு எங்களுக்கும் உண்டு மீட்டர் பார்த்து காசுகொடுக்க வேண்டும் கார்ப்பரேஷன் தண்ணீருக்கு.
   பதிவையும் சாரின் ஒவியத்தையும் பற்றி கருத்து சொன்னதற்கு நன்றி அம்மு.

   நீக்கு
 24. படங்களுடன் பகிர்வு சிறப்பு.
  மரம்நடுவோம் ,மழைபெறுவோம், நீரை சேகரிப்போம், சிக்கனமாக பயன்படுத்துவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
   நீங்கள் சொல்வது சரி.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 25. உடல் நலம் சரியில்லை என்று சொல்லி இருந்தீர்களே..

  இப்பொழுது நலமா... சாதாரண காய்ச்சல் என்றாலும் கவனமாக இருங்கள்...

  எல்லாவற்றுக்கும் இறைவன் துணை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
   இறைவன் அருளால் உடல் நலமாக இருக்கிறேன். இறைவன் தான் துணை எல்லோருக்கும்.
   பல்வலி இருந்தது வலி கொடுத்த பல்லை எடுத்து விட்டேன். இப்போது நலம்.
   கவனமாய் இருக்கிறேன்.
   அக்கறையான விசாரிப்பு நன்றி.

   நீக்கு
 26. தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது வலை ஓலை வலைத் திரட்டி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.

  எமது வலைத் திரட்டிக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

  எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

  இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சிகரம் பாரதி, வாழ்க வளமுடன்
   உங்கள் உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

   நீக்கு
 27. வணக்கம், தங்களின் முந்தைய பதிவு ஒன்றில் கி.ரா. கோபாலன் அவர்கள் எழுதிய ராஜாளி மடம் பற்றிய குறிப்பினை படித்தேன். அந்நூல் குறித்த மேலாதிக்க தகவல்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். தயவு செய்து தொடர்பு கொள்ளவும் நன்றி. கோ.சந்திரசேகரன், www.chennailibrary.com 9444086888

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கோ. சந்திரசேகரன், வாழ்க வளமுடன்
   உங்களுக்கு அந்நூல் பற்றி என்ன மேலாதிக்க தகவல்கள் வேண்டும்?

   நீக்கு
 28. சென்று ஆண்டு கூட தண்ணீர் தினத்தன்று நீங்கள் ஒரு பதிவு போட்டதாக நினைவு. படங்கள் நன்றாக இருக்கின்றன. ஆழ் துளைகிணறு படம் வயிற்றை கலக்குகிறது. நிலத்தடி நீரை சேமிக்காமல் பூமியை துளைத்துக் கொண்டே செல்கிறோம். உங்கள் கணவர் வரைந்த படம் அருமை. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
   சில ஆண்டுகளாய் தண்ணீர் தினத்திற்கு பதிவுகள் போட்டு வருகிறேன்.
   நிலத்தடி நீரை சேமிக்காமல் பூமியை துளைத்துக் கொண்டே செல்வது வருத்தமடைய செய்கிறது.
   கணவர் வரைந்த படத்திற்கு கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 29. காணொளி,அதன்பாடல், நீர் தினம் என்று பெயரிடப்பட்ட படம் எல்லாம் சிறப்பு. 

  பதிலளிநீக்கு
 30. காணொளி , பாடல், படங்களை எல்லாம் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 31. கோமதிக்கா வணக்கம்.

  எல்லாப் படங்களும் வரவில்லை. பார்த்த படங்கள் அழகு வாசகங்களும். வீடியோவும் வரவில்லை.

  தண்ணீர் பதிவு வாசித்துவிட்டேன். எதிர்காலச் சந்ததியினருக்குக் கண்டிப்பாகத் தண்ணீரின் முக்கியத்துவம் சேமிப்பது பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். நாம் பூமியைத் துளைத்து துளைத்துதான் தண்ணீர் எடுத்துக் கொண்டு பூமியை நம் உடல் டிஹைட்ரேட் ஆவது போல பூமியைச் செய்து கொண்டிருக்கிறோம் அதனால்தான் பாளம் பாளமாக வெடித்துப் போகிறது பல இடங்களில்...

  அதுவும் பல இடங்களில் குறிப்பாக ராஜஸ்தான் பகுதிகளிலலும், தில்லிக்கு ரயிலில் செல்லும் போது மக்கள் பல தூரம் தலையில் தண்ணீர் எடுத்துச் செல்லுவதைப் பார்க்கும் போதும் மனது வேதனையாக இருக்கும். கிராமங்களில்.

  பாடல் கொஞ்சம் வந்தது அப்புறம் நின்றுவிட்டது. நாளை மீண்டும் பார்த்துவிட்டு வருகிறேன் கோமதிக்கா. நல்ல பதிவு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
   எல்லா படங்களும் திறக்கவில்லையா? எல்லோரும் வீட்டில் இருக்கிறார்கள், இணைய பயன்பாடு அதிகமாக இருப்பதால் நெட் கொஞ்சம் மெதுவாக வரும். வரும் போது பாருங்கள்.

   தண்ணீர் இல்லா பூமியை குடைந்து குடைந்து போய் என்ன செய்வது?
   நிறைய இடங்களில் மக்கள் தண்ணீருக்கு குடங்களுடன் அலைவது வருத்தம் கொடுக்கும் விஷயம்தான்.

   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி கீதா.

   நீக்கு
 32. கோமதிக்கா என் நேற்றைய கருத்துகள் வந்தனவோ? ராத்திரி போட்டேன்..நெட் பிரச்சனை என்பதால் இந்தக் கேள்வி...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
   இரவு பார்க்கவில்லை, இப்போது இரண்டு பின்னூட்டங்களும் வந்து விட்டது.
   நன்றி. நேரம் கிடைக்கும் போது வந்து(நெட் கிடைக்கும் போது) கருத்து சொல்வது மகிழ்ச்சி அளிக்கிறது கீதா.

   நீக்கு
 33. கோமதிக்கா என் கருத்துகள் எதுவுமே வரவில்லையா? நேற்று ராத்திரி இட்ட கருத்துகள், இன்று காலை கேட்டு அனுப்பியக் கருத்து எதுவுமே வரவில்லையா?

  இன்று காலை அந்தப் பாடல் காணொளியைப் பார்த்தேன். பாடலும் காட்சியும் மனதை என்னவோ செய்யுது.

  மாடுகள் நீர் அருந்தும் படமும் மாமா வரைந்த ஓவியம் எல்லாம் அழகு. கள்ளிச் செடிகள் வாவ்!. அந்தத் அத்தனை அடி தோண்டப்பட்ட கிணறு படம் அழகு ஆனால் இப்படித் துளைப்பது? பாவம் பூமி அன்னை.

  மழை வீடியோ மனதிற்கு இதம்...

  கீதா

  பதிலளிநீக்கு
 34. இரவு போட்டது, காலையில் போட்டது எல்லாம் வந்து இருக்கே! அதற்கு பதில் கொடுத்து இருக்கிறேன் தெரியவில்லையா?
  பாடலை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
  படங்களையும், கணவர் வரைந்த ஓவியத்தையும் ரசித்தமைக்கு நன்றி
  அனைத்தையும் பார்த்து ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு