ஜன்னலில் குடித்தனம் நடத்தும் புறா பறவைகள்
குடியிருப்பில் புறாக்கள் அதிகமாகி விட்டது அவற்றை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஜன்னல் திறந்தால் அங்கும் இருக்க முடியாது என்று பாத்ரூம் ஜன்னலில் குடித்தனம் செய்ய ஆரம்பித்தன.
இதில் சண்டை வேறு நான் இருக்கும் ஜன்னலில் நீ வரக்கூடாது என்று ஒன்றை ஒன்று விரட்டின. குழாயில் இருக்கும் கம்பியில் ஒண்டி கொண்டு இருக்கிறது.
கூடு வைக்க முயற்சி
என் வீட்டுக்கு பின்னால் இருக்கும் வீட்டு பாத்ரூம் ஜன்னலில் கூடு வைத்து முட்டைகள் உடைந்து போயிற்று . மிகவும் சின்ன இடம் சாய்வாக வேறு இருக்கிறது.
புறாக்களின் தவிப்பு என்று முன்பு பதிவு போட்டேன் அப்போது இருந்ததை விட இப்போது மேலும் புறாக்களுக்கு கஷ்டம் வந்து விட்டது. அவை தரும் தொந்தரவால் எல்லோரும் வலை அடித்தும் கண்ணாடி கதவுகள் போட்டும் அதன் வரவை தடுத்து கொண்டனர்.
நானும் இரண்டு பால்கனியில் வலையும் ஒரு பால்கனியில் கண்ணாடி கதவும் போட்டு விட்டேன்.
துணி காய வைக்கவேண்டும், தினம் பறவைகளுக்கு உணவு வைக்க வேண்டும். அதனால் ஒரு பால்கனி மட்டும் கண்ணாடி தடுப்பு.
ஒருநாள் திறந்து வைத்து விட்டேன் வீட்டுக்குள் வந்து விட்டது. அப்புறம் அதை விரட்டுவதற்குள் கஷ்டபட்டு விட்டேன். அவை குடியிருக்க இடம் தேடி அலைகிறது.
இந்த பின்னால் வீட்டில் வலை அடிக்கவில்லை அதனால் அந்த வீட்டில் சாய்த்து வைத்து இருக்கும் ஏணியில் குடித்தனம் நடத்துகிறது.
குடியிருப்பு நிர்வாகத்தார் மற்ற இடங்களில் வலை போட்டு விட்டார்கள்.
புறாக்கள் பெருக காரணங்களில் ஒன்று AC அவுட் டோர் யூனிட். புறாக்கள் அதன் மேல் கூடு கட்டும்.
எங்கள் பிளாக்கில் நெல்லைத்தமிழன் பகிர்ந்த புறாக்கள் படத்துக்கு ஜெயக்குமார் சார் சொன்னது.
இங்கு எங்கள் வளாகத்திலும் அப்படித்தான்.
//அங்கெல்லாம் மூணு ரோடு சந்திப்புல இந்த மாதிரி இடம் இருக்கும். அங்கு புறாக்களுக்கு உணவிடுவாங்க. நானும் இதற்காக, மாதம் ஒரு தடவை 20 கிலோ தானிய மூட்டை வாங்கிவருவேன். தினமும் ஜிம்முக்கோ இல்லை நடைப்பயிற்சிக்கோ காலையில் செல்லும்போது ஒரு சிறிய பிளாஸ்டிக் பையில் தானியம் கொண்டுபோய் இந்த மாதிரி இடங்களில் போடுவேன். என்னவோ அன்று இருந்த மனது, இன்று எங்கள் வளாகத்தில் வரவில்லை. புறாக்களால் உடலுக்குக் கெடுதி என்றெல்லாம் பல செய்திகளைப் படித்ததனாலேயோ என்னவோ! //
நெல்லைத்தமிழன் சொன்னது போல இப்போது புறாக்கள் உடலுக்கு கெடுதி என்ற செய்திகளை படித்ததால் எல்லோருக்கும் பயம் தடுப்பு செய்து கொண்டார்கள் ஆனால் இந்த ஒருபக்க பாத்ரூம் ஜன்னலை ஒன்றும் செய்யமுடியவில்லை.
மேல் வழியாக வரமுடியாது முன்பே போட்ட கூடாரம், இப்போது மேலே இருந்து வலை தொங்கவிடப் பட்டு இருக்கிறது.
எங்கள் விட்டு ஜன்னலில் முட்டையிட்டு அடை காக்க ஆரம்பித்து விட்டது
நாம் பார்த்து விட்டால் குஞ்சை தன் அலகால் அடியில் தள்ளிக் கொண்டு மேலே அமர்ந்து மறைத்து கொள்கிறது. அப்படி குஞ்சை பொத்தி பாதுகாக்கிறது .
பின்னால் வீட்டு ஜன்னலில் கூடு வைத்து முட்டை உடைந்து விட்டது என்று வருத்தப்பட்டேன். என் வருத்தம் அதற்கு தெரிந்து விட்டது போலும், "அப்போ உன் வீட்டில் கூடு வைக்கிறேன்" என்று எங்கள் வீட்டு ஜன்னலில் வைத்து விட்டது. அதை விரட்டவும் பாவமாக இருந்தது, அந்த பாத்ரூம் பயன்படுத்துவது இல்லை அதனால் பாவம் இருந்து விட்டு போகட்டும் முட்டை உடையாமல் இருக்கவேண்டுமே! என்று பிரார்த்தனை வேறு செய்ய ஆரம்பித்து விட்டேன் பிரார்த்தனை பலித்து விட்டது முட்டையிட்டு குஞ்சு பொரித்து விட்டது.
இனி பத்திரமாக பறந்து போக வேண்டும்.
இரண்டு புறாக்களும் கூடு கட்ட குச்சி கொண்டு வைப்பதும் அவை கீழே விழுவதும் அவை படும் பாட்டை பார்த்து இருக்கிறேன். அவசரமாக் பேறுகால நேரம் வந்தவுடன் கிடைத்த இடத்தில் கொஞ்ச குச்சியில் முட்டையிட்டு அவை விழுந்து உடைவதும் வாடிக்கையாகி விட்டது. அப்படி தப்பி பிழைத்தால் வேறு பறவைகள் அந்த குஞ்சை தூக்கி போவதும் உண்டு. இறைன் அருளால் தப்பி பிழைத்தவை வளாகம் முழுவதும் சுற்றி திரிகிறது.
என் ஜன்னல் வழியே 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போட்ட பதிவு. ஜனவரி , பிப்ரவரிதான் புறாக்களின் பேறுகால பருவம் போலும்.
இந்த பதிவில் குஞ்சுக்கு உணவு ஊட்டும் படங்கள், வீடியோ எல்லாம் காமிராவில் எடுத்தது நன்றாக இருக்கும்.
புறாக்கள் இரண்டு கூடு கட்ட தினம் குச்சிகளை கொண்டு வந்து எதிர்வீட்டு பாத்ரூம் ஜன்னலில் வைத்தது, அவை எல்லாம் கீழே விழுந்து கொண்டே இருந்தது. (கூடு கட்ட இடம் வசதி இல்லை) சரி விழுந்த இடத்திலேயே முட்டையிட்டு அடைகாப்போம் என்று அடைகாத்து வந்தது தாய் பறவை
பழைய பதிவில் உள்ள படங்கள் இந்த இரண்டும்.
இன்று காலை தனியாக குஞ்சு மட்டும் இருக்கிறது தாய் பறவை இரை தேட போய் இருக்கிறது போல நல்லபடியாக குஞ்சு பறந்து போக வேண்டும் இறைவா!ஏன்று வாய் தன்னை யறியாமல் முனுமுனுக்க ஆரம்பித்து விட்டது.
வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------------------











கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக