திங்கள், 15 ஏப்ரல், 2024

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !


இனிய சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துகள் அனைவருக்கும்..


 புத்தாண்டு வாழ்த்துகள்   ஏப்ரல் 11 ம் தேதி  2010 ல் பேரனை பார்க்க போன போது  புத்தாண்டை மகன் வீட்டில்  கொண்டாடி னேன். இந்த ஆண்டும் மகன் பேரன் மருமகளுடன் புத்தாண்டு மலர்ந்து உள்ளது.


இரு ஆச்சிகளும்  ஊருக்கு வந்த போது பேரன்  அன்புடன் தயார் செய்த   வாழ்த்து அட்டையை அளித்து வரவேற்றான்.


மகன் செய்த புத்தாண்டு  வாழ்த்து 

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மருத்துவரிடம் போய் கொண்டு இருந்தேன், ஊருக்கு வரும் வரை. பல வலிகளுடன் பயணம் செய்து வந்தேன்.   


 இங்கு எல்லோருடனும் இருப்பதால் வலிகள்படி படியாக குறைந்து வருகிறது. 


மகன் வீட்டுத்தோட்டத்தில் பூத்த மலர்களால்  மலர் கோலம்

இனிப்பு அவல் மருமகள் செய்த  பிரசாதம் எடுத்து கொள்ளுங்கள்

இந்த புத்தாண்டில் எல்லோரும்  எல்லா வளத்தோடும் நலத்தோடும்  இருக்க இறைவனை வேண்டிக் கொண்டேன்.


ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் என்ற ராமகிருஷ்ணர் கருத்திலிருந்து-

எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்
எல்லோரும் நோய்களிலிருந்து விடுபடட்டும்
எது நன்மை என்பதை எல்லோரும் உணரட்டும்
யாரும் துன்பத்திற்கு ஆளாகாமல் இருக்கட்டும்.

மீண்டும் புத்தாண்டு நல் வாழ்த்துகளை சொல்லி கொள்கிறேன். அன்னை மீனாட்சியின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!

----------------------------------------------------------------------------------------------------

21 கருத்துகள்:

  1. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் கோமதி அரசு மேடம்.

    இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக நலமாகச் சென்று சேர்ந்தது மகிழ்ச்சி.

    கவினின் வரவேற்பு அட்டை சூப்பர். நல்ல சிந்தனைகளுடன் கூடிய பையன். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக நலமாகச் சென்று சேர்ந்தது மகிழ்ச்சி.//

      ஆமாம், பேச்சு துணையாக ஒருவருக்கு ஒருவர் இருந்தோம். மூன்று பிளைட் மாற்றினோம், எல்லா இடங்களிலும் வீல்ச்சேர், மற்றும் பேட்டரி கார் வசதி செய்து கொடுத்து இருந்தான் மகன் அதனால் நடக்கவில்லை. அதனால் கால்வலி குறைவு மருமகள் வலி மாத்திரைகளை பிளைட்டில் எடுத்து கொண்டு வாங்க என்றாள் அதையும் கடைபிடித்தேன். பக்கத்து சீட்டில் அமர்ந்து இருந்தவர்களும் நல்லவர்கள் உதவியாக இருந்தார்கள். விமான பணிபெண்களும் நட்புடன் என்ன வேண்டும் என்று உபசரித்து கவனித்து கொண்டார்கள் அவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட முடியவில்லை என்னால். அதனால் பிஸ்கட், மற்றும் ஜூஸ், டீ என்று உபசரிப்பு செய்தார்கள்.

      //கவினின் வரவேற்பு அட்டை சூப்பர். நல்ல சிந்தனைகளுடன் கூடிய பையன். வாழ்க வளமுடன்.//

      சிறு வயது முதலே வீட்டுக்கு வரும் உறவுகள், நட்புகளை வரவேற்க வாழ்த்து அட்டைகள், மற்றும் அவர்கள் வீடுகளிலும் நடைபெறும் விழாக்களுக்கு வாழ்த்து அட்டை தயார் செய்வான். அவனுக்கு பிடித்த விஷயம்.

      வீட்டுக்கு வந்த உறவுகள், நட்புகள் போகிறேன் என்றால் தான் வருத்தப்படுவான்.
      இருந்தால் மகிழ்ச்சி. பேரனை வாழ்த்தியதற்கு மிகவும் நன்றி நெல்லை.

      நீக்கு
  2. பேரனுடனான படம் நெகிழ வைத்தது.

    பூக்கோலம் அழகு. இனிப்புடன் ஆரம்பித்த புத்தாண்டு இனிப்பாகச் செல்லட்டும்.

    நீண்ட நேரப் பயணம். நலமாகச் சென்றது நல்லது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பேரனுடனான படம் நெகிழ வைத்தது.

      பூக்கோலம் அழகு.//

      எங்கள் படம் பற்றிய உங்கள் கருத்துக்கும், , நான் போட்ட பூக்கோலத்தை பாராட்டியதற்கு நன்றி.

      //இனிப்புடன் ஆரம்பித்த புத்தாண்டு இனிப்பாகச் செல்லட்டும்.//

      இறைவன் அருளால் அப்படியே நடக்கட்டும், உங்கள் வாக்கு பலிக்கட்டும்.

      //நீண்ட நேரப் பயணம். நலமாகச் சென்றது நல்லது..//

      பயத்தை கொடுத்த நீண்ட நேர பயணம் வரவேற்க வந்த மகன், மருமகள், பேரனை கண்டவுடன் மகிழ்ச்சியாக மாறி விட்டது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நெல்லை.

      நீக்கு
  3. வாழ்த்துகளுக்கு நன்றி.  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய குரோதி வருட புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய குரோதி வருட புத்தாண்டு வாழ்த்துகள்.//

      உங்கள் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த வருடம் மருமகளுடன் புத்தாண்டு இனிதாக இருந்து இருக்கும்.
      மகன், மருமகளுக்கு வாழ்த்துகள்.

      நீக்கு
  4. படங்கள் பிரமாதம்.  கவின் உங்களை விட உயரமாய்...   வாழ்த்துகள்.இந்த நாளைப்போல இனிமையாய் எல்லா நாளும் அமைய வாழ்த்துகள்.  உங்கள் வலிகள் பேரனையும், மகன்-மருமகளையும் கண்டதும் கட்டாயம் குறைந்திருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படங்கள் பிரமாதம். கவின் உங்களை விட உயரமாய்...
      வாழ்த்துகள்.//
      ஆமாம். வாழ்த்துகளுக்கு நன்றி.

      //இந்த நாளைப்போல இனிமையாய் எல்லா நாளும் அமைய வாழ்த்துகள். //
      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

      //உங்கள் வலிகள் பேரனையும், மகன்-மருமகளையும் கண்டதும் கட்டாயம் குறைந்திருக்கும்!//

      ஆமாம், உண்மை. அவர்களுக்கு தொந்திரவு கொடுத்து விடக்கூடாது என்பதுதான் என் பிரார்த்தனை. அவர்களின் அன்பான் கவினிப்பில்
      வலிகள் குறைந்தது.

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  5. இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    பூக்கள் அலங்காரம் மிக அழகாக, நேர்த்தியாக இருக்கிறது!
    உடல் நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள்! வயது ஏற ஏற உடலிலும் ஆயிரம் பிரச்சினைகள் ஏறுகின்றன! மனதை இலகுவாக வைத்துக்கொள்ளும்போது மட்டும் தான் பிரச்சினைகளை சமாளிக்க முடிகிறது. கவனமாக உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
      //இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!
      பூக்கள் அலங்காரம் மிக அழகாக, நேர்த்தியாக இருக்கிறது!//

      நன்றி.

      //உடல் நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள்! வயது ஏற ஏற உடலிலும் ஆயிரம் பிரச்சினைகள் ஏறுகின்றன! மனதை இலகுவாக வைத்துக்கொள்ளும்போது மட்டும் தான் பிரச்சினைகளை சமாளிக்க முடிகிறது. கவனமாக உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள்!!//

      நீங்கள் சொல்வது போலதான், மகன் , மகள், மருமக்ள், பேரன்கள், பேத்திகள் சொல்கிறார்கள். மற்றும் நம் நட்புகளும் சொல்கிறார்கள்.
      உடல் நலத்தைப்பார்த்து கொள்கிறேன்.

      உங்கள் அக்கறையான அன்பான வார்த்தைகளுக்கு நன்றி மனோ.

      உங்கள் கருத்துக்கு நன்றி.



      நீக்கு
  6. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    பூக்கள் அலங்காரம் மிக அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்..

    என்றென்றும் நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்..

      என்றென்றும் நலம் வாழ்க..//

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  8. பெயரனோடு தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடியதில் மகிழ்ச்சி.

    படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது அதிலும் அவல் படம் அருமை.
    காணொளி கண்டேன்.

    வாழ்க வளத்துடன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //பெயரனோடு தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடியதில் மகிழ்ச்சி.

      படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது அதிலும் அவல் படம் அருமை.
      காணொளி கண்டேன்.

      வாழ்க வளத்துடன்....
      //

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஜி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    நலமா? எப்படியிருக்கிறீர்கள? பதிவு அருமை.

    இப்போது மகன் ஊருக்கு நீங்கள் சென்றிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். எபியிலும் தங்கள் வரவை கண்டு அதைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன். இந்த வருடம் நீங்கள் மகன் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடியிருப்பதும் மிக்க மகிழ்ச்சியை தருகிறது.

    எனக்கும் கடந்த ஒரு வாரமாக வீட்டில் ஏதேதோ வேலைகள். விஷேடங்கள் . அதனால் வலைப்பக்கம் அவ்வளவாக வர நேரமில்லாமல் போய் விட்டது. இப்போதுதான் வந்து கொண்டிருக்கிறேன். பதிவு நன்றாக உள்ளது.

    உங்களுக்கும், மகன் வீட்டிலும் அனைவருக்கும் என் தாமதமான தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //நலமா? எப்படியிருக்கிறீர்கள?

      நலமடைந்து வருகிறேன்.

      //பதிவு அருமை.//

      நன்றி.

      //இப்போது மகன் ஊருக்கு நீங்கள் சென்றிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். எபியிலும் தங்கள் வரவை கண்டு அதைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன். இந்த வருடம் நீங்கள் மகன் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடியிருப்பதும் மிக்க மகிழ்ச்சியை தருகிறது.//

      உங்கள் வீட்டிலும் மகன் வந்து இருக்கிறார் போலும் மகனுடன் வெளியே தெரிந்தவர்கள் வீடு போய் கொண்டு இருக்கிறீர்கள் என்று போட்டு இருந்தீர்கள் ஞாயிறு பதிவில்.
      நீங்கள் சொல்வது போல மகன் குடும்பத்தோடு புத்தாண்டை கொண்டாடியது மகிழ்ச்சிதான் எனக்கு.

      //எனக்கும் கடந்த ஒரு வாரமாக வீட்டில் ஏதேதோ வேலைகள். விஷேடங்கள் . அதனால் வலைப்பக்கம் அவ்வளவாக வர நேரமில்லாமல் போய் விட்டது. இப்போதுதான் வந்து கொண்டிருக்கிறேன். பதிவு நன்றாக உள்ளது.//

      நேரம் கிடைக்கும் போது பதிவை படிக்கலாம். விசேடங்கள் நடப்பதும் குடும்பத்தோடு கலந்து கொள்வதும் மகிழ்ச்சிதானே! தொடரட்டும் இந்த மகிழ்ச்சிகள்.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. அடுத்த பதிவு போட்டு விட்டேன். மெதுவா வாங்க.


      நீக்கு
    2. கமலா உடல் நிலையும் சரியில்லை சற்று என்று போட்டு இருந்தீர்கள், உடல் நிலையை பார்த்து கொள்ளுங்கள்.

      நீக்கு
  10. உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பேரனுடைய வரவேற்பு வாழ்த்து அட்டை சூப்பர்.

    குடும்பத்துடன் இருப்பதால் நலமாக மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

    சற்றுதாமதம் ஊர் சென்று வந்தேன். கணவரின் தங்கையின் மாதத் திதிக்காக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

      பேரனுடைய வரவேற்பு வாழ்த்து அட்டை சூப்பர்.//

      நன்றி மாதேவி.

      //குடும்பத்துடன் இருப்பதால் நலமாக மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.//

      ஆமாம் மாதேவி, நலமாக மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

      //சற்றுதாமதம் ஊர் சென்று வந்தேன். கணவரின் தங்கையின் மாதத் திதிக்காக.//

      நினைத்தேன், உங்களை காணவில்லை என்றதும் ஊருக்கு போய் இருப்பீர்கள் என்று.
      உங்கள் நாத்தனாரின் திதி நல்லபடியாக முடிந்து இருக்கும்.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு