வெள்ளி, 19 ஏப்ரல், 2024

பச்சை வண்ண தேன் சிட்டு



பெண் தேன் சிட்டு


ஞாயிறு மாலை வீட்டுக்கு அருகில்   பேரனுடன் சிறு நடைபயிற்சி சென்று வந்தேன். பேரனும் நானும் சேர்ந்து சில படங்கள் காமிராவில் எடுத்தோம். வெகு தூரத்தில் இருந்த ஒரு  மரத்தின்  உச்சிக்கிளையில்  ஒரு தேன் சிட்டு  அமர்ந்து கொண்டு  தலையை அங்கும் இங்கும் திருப்பி  பார்த்து  கொண்டு இருந்தது. மேலே இருக்கும் தேன் சிட்டு படம் பேரன் எடுத்தான்.
இரண்டு மூன்று பறவைகள் படம் எடுத்தோம் . அவை இன்னொரு பதிவில். இந்த பதிவில் தேன் சிட்டு மட்டும் இடம்பெறுகிறது.


 இடது பக்கத்தில்  தூரத்தில் தெரியும் இந்த மரத்தின் உச்சி கிளையில் தான் அமர்ந்து இருந்தது. மொட்டு மாதிரி இருக்கும்  மஞ்சள் மலர்கள் தரை முழுவதும்  பரவி இருந்தது பார்க்க அழகாய் இருந்தது.

தேன் சிட்டு பற்றி  புதிதாக படித்த செய்திகள்  இடம் பெறுகிறது படத்தின் கீழ். இணையத்தில் பகிர்ந்த அன்பருக்கு நன்றி.


தேன் சிட்டு தன் கூட்டை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ளுமாம்.குஞ்சுகளுக்கு உணவு கொடுத்த பின் குஞ்சுகளை சரியான நேரத்தில்  மலம்  கழிக்க சொல்லுமாம். குஞ்சுகள் கழித்த மலத்தை வெகு தூரம்  எடுத்து சென்று வீசி வருமாம்.  


மலம் கூட்டிலோ அல்லது தாயின் அலகிலோ ஒட்டிக் கொள்ளாத வகையில் ஒரு மெல்லிய தோல் போன்ற  மூடி இருக்குமாம். கூடு மிகவும் சுத்தமாக இருக்குமாம்.

பெண் பறவை மிகவும் கஷ்டப்பட்டு பொருட்களை சேகரித்து கூடு கட்டுமாம், ஆண் பறவை உடன் பறந்து தானும் கூடு கட்டுவது போல பாவனை செய்யுமாம். தானும் வேலை செய்த மாதிரி காட்டிக் கொள்ளுமாம்.

குஞ்சுகளுக்கு சிறு வயதில் புழு , பூச்சிகளை உணவாக கொடுக்குமாம். குஞ்சுகள் வளர புரத சத்து அவசியம் என்று.

பிறகு மலர்களில் உள்ள தேன்களை பருகுமாம்.

நம் ஊரில் இருக்கும் தேன் சிட்டுகள் மிகவும் அழகாய் இருக்கும். அரிசோனா தேன் சிட்டு பார்க்க அவ்வளவு அழகாய் இருக்காது, ஆண் தேன் சிட்டை விட பெண் தேன் சிட்டு அழகுதான். அழகான பொன்வண்டு கலர். அலகு குச்சி போல இருக்கிறது இரண்டு பறவைகளுக்கும்.

படம் எடுத்தது போதும் போதும் போ என்று அப்புறம் திரும்பவே இல்லை. மேலே உள்ள தேன் சிட்டுகள் படம் எல்லாம் பேரன் எடுத்த படங்கள்.


இந்த காணொளி  மகன் வீட்டுத்தோட்டத்தில் உள்ள மரத்தில் மாலை நேரம் அமர்ந்து உடல் தளர்த்தல்  செய்த போது எடுத்தேன். தன் உடலை எத்தனை விதமாக  சிலிர்த்து கொள்கிறது  என்று பாருங்கள். இந்த தேன் சிட்டு ஆண் தேன் சிட்டு.

தேன் சிட்டு 2021 ல் போட்ட பதிவில் உள்ள தேன் சிட்டு ஆண் தேன் சிட்டு.   திருவெண்காடு நினைவுகளை தந்த அரிசோனா  தேன் சிட்டு பற்றிய பதிவு.


மெக்சிகோவில் அழிந்து வரும் தேன் சிட்டை  பாதுகாக்க அற்புதமான தோட்டத்தை அமைத்த இளம்பெண் . மிக சிறிய காணொளிதான் பாருங்கள். நன்றாக இருக்கிறது. ஜெயா தொலைக்காட்சியில் வந்த செய்திதான்.


நடைபயிற்சியின் போது பார்த்த மலர்கள், மற்றும் பறவைகள் இன்னொரு பதிவில்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

----------------------------------------------------------------------------------------------------

25 கருத்துகள்:

  1. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    காணொளிகள் கண்டேன் சிறப்பு.

    பெயரனுடன் மகிழ்ச்சியாக பொழுதை களியுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

      காணொளிகள் கண்டேன் சிறப்பு.

      பெயரனுடன் மகிழ்ச்சியாக பொழுதை களியுங்கள்.//

      உங்கள் கருத்துக்கு நன்றி சகோ.

      நீக்கு
  2. பேரனின் திறமை வளரட்டும். படங்கள் நன்றாக உள்ளன.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சார், வாழ்க வளமுடன்

      //பேரனின் திறமை வளரட்டும். படங்கள் நன்றாக உள்ளன.//

      உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. முதல் படத்தில் தேன் சிட்டின் பச்சை வண்ண கலர் மனதை கவர்கிறது.படத்தைப் பெரிதாக்கிப் பார்த்தேன். அதற்கு நம் விழிகளைப் போல கண்கள் உருண்டையாக அழகாக இருக்கிறது.

    தேன்சிட்டு பறவைகளின் படங்களை மிக அழகாக எடுத்திருக்கிறீர்கள் . தங்கள் பேரன் கவினும் மிக அழகாகவும், நேர்த்தியாகவும் எடுத்துள்ளார். என் மனமார்ந்த வாழ்த்துகளை அவருக்கு தெரிவியுங்கள்.

    /தேன் சிட்டு தன் கூட்டை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ளுமாம்.குஞ்சுகளுக்கு உணவு கொடுத்த பின் குஞ்சுகளை சரியான நேரத்தில் மலம் கழிக்க சொல்லுமாம். குஞ்சுகள் கழித்த மலத்தை வெகு தூரம் எடுத்து சென்று வீசி வருமாம். /

    இந்தப் பறவையைப் பற்றிய தகவல்கள் வியக்க வைக்கிறது. இறைவன்தான் எத்தனை விநோத குணங்களை இவற்றுக்கான அளித்துள்ளார். இதனைப் பற்றிய தகவல்கள் படிக்க மிக சுவாரஸியமாக இருக்கிறது.

    காணொளிகளையும் கண்டேன். அது இறக்கையை அடித்துக் கொள்ளும் அழகே நன்றாக உள்ளது. அது பொன்நிற கலரில் இருப்பதால் அது பெண்பறவை போலும்..!

    அதற்கென பூந்தோட்டம் அமைத்து அந்த இனம் அழிந்து போகாமல் காக்கும் பெண்மணியும் பாராட்டுவோம். இப்படி பறவைகளைப் பற்றி நிறைய தகவல்களை தரும் உங்களுக்கும் மனம் நிறைந்த நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமையாக உள்ளது. //

      நன்றி.

      //முதல் படத்தில் தேன் சிட்டின் பச்சை வண்ண கலர் மனதை கவர்கிறது.படத்தைப் பெரிதாக்கிப் பார்த்தேன். அதற்கு நம் விழிகளைப் போல கண்கள் உருண்டையாக அழகாக இருக்கிறது.//

      ஆமாம், நானும் அந்த கண்ணைப்பார்த்து "நன்றாக எடுத்து இருக்கிறாய்" என்று பேரனை பாராட்டினேன்.

      //தேன்சிட்டு பறவைகளின் படங்களை மிக அழகாக எடுத்திருக்கிறீர்கள் . தங்கள் பேரன் கவினும் மிக அழகாகவும், நேர்த்தியாகவும் எடுத்துள்ளார். என் மனமார்ந்த வாழ்த்துகளை அவருக்கு தெரிவியுங்கள்.//

      உங்கள் வாழ்த்துகளை , பாராட்டுக்களை சொல்லி விட்டேன், நன்றி சொன்னான் உங்களுக்கு.

      //இந்தப் பறவையைப் பற்றிய தகவல்கள் வியக்க வைக்கிறது. இறைவன்தான் எத்தனை விநோத குணங்களை இவற்றுக்கான அளித்துள்ளார். இதனைப் பற்றிய தகவல்கள் படிக்க மிக சுவாரஸியமாக இருக்கிறது.//

      ஆமாம். இறைவனின் படைப்பில் நிறைய வியக்க வைக்கும் விஷயங்கள் இருக்கிறது. ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ளும் போது நமக்கு வியப்பு ஏற்படுவது உண்மை.

      //காணொளிகளையும் கண்டேன். அது இறக்கையை அடித்துக் கொள்ளும் அழகே நன்றாக உள்ளது. அது பொன்நிற கலரில் இருப்பதால் அது பெண்பறவை போலும்..!//
      ஆமாம். பெண்பறவை போலதான் உள்ளது. பொன்வண்டு கலர் பெண் பறவை என்று போட்டு இருக்கு.

      //அதற்கென பூந்தோட்டம் அமைத்து அந்த இனம் அழிந்து போகாமல் காக்கும் பெண்மணியும் பாராட்டுவோம். இப்படி பறவைகளைப் பற்றி நிறைய தகவல்களை தரும் உங்களுக்கும் மனம் நிறைந்த நன்றி சகோதரி.//
      தேன் சிட்டு மலருக்கு மலர் தேன் எடுக்கும் போது மகரந்த சேர்க்கையால் பூவனம் ஏற்படுகிறது. இயற்கை ஒவ்வொன்றையும் அழகாய் படைத்து உள்ளது. அழிவில் இருந்து காப்பாற்றிய அந்த பெண்ணை மிகவும் பாராட்ட வேண்டும்.

      உங்கள் உடல் நலம் எப்படி இருக்கிறது?
      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி கமலா.

      நீக்கு
  4. படங்களும், தேன்சிட்டு பற்றிய தகவல்களும் சிறப்பு! //பெண் பறவை மிகவும் கஷ்டப்பட்டு பொருட்களை சேகரித்து கூடு கட்டுமாம், ஆண் பறவை உடன் பறந்து தானும் கூடு கட்டுவது போல பாவனை செய்யுமாம். தானும் வேலை செய்த மாதிரி காட்டிக் கொள்ளுமாம்.// :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      //படங்களும், தேன்சிட்டு பற்றிய தகவல்களும் சிறப்பு! //
      நன்றி.

      //பெண் பறவை மிகவும் கஷ்டப்பட்டு பொருட்களை சேகரித்து கூடு கட்டுமாம், ஆண் பறவை உடன் பறந்து தானும் கூடு கட்டுவது போல பாவனை செய்யுமாம். தானும் வேலை செய்த மாதிரி காட்டிக் கொள்ளுமாம்.// :))

      தகவலை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி பானுமதி.

      நீக்கு
  5. உங்கள் விருப்பம் அறிந்து கவின் எடுத்துள்ள புகைப்படங்கள் சிறப்பு.  தலைசீவாத ரௌடிப்பையன் போல இருக்கிறது அந்தத் தேன்சிட்டு!  காணொளிகளும் கண்டேன்.  தகவல்கள் சுவாரஸ்யம்.  ஏமாற்றும் ஆண்பறவை புன்னகைக்க வைக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //உங்கள் விருப்பம் அறிந்து கவின் எடுத்துள்ள புகைப்படங்கள் சிறப்பு.//

      ஆமாம், காமிராவை தூக்கி கொண்டு நடக்க வேண்டாம். என்ன எடுக்க வேண்டும் என்று சொல்லுங்கள் எடுக்கிறேன், என்று எடுத்து கொடுத்தான். அவன் விருப்பபடி சில படங்கள் எடுத்தான்.
      காணொளிகள், தேன் சிட்டு தகவல்கள் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.


      //தலைசீவாத ரௌடிப்பையன் போல இருக்கிறது அந்தத் தேன்சிட்டு!//

      அப்படி யென்றால் பெண் தேன் சிட்டு ரவுடி பேபி .

      //காணொளிகளும் கண்டேன். தகவல்கள் சுவாரஸ்யம். ஏமாற்றும் ஆண்பறவை புன்னகைக்க வைக்கிறது!//

      "அது ஏமாற்று வேலை இல்லை மாறல் சப்போர்ட்" என்று சொல்லும் கேட்டால்.

      நீக்கு
    2. // "அது ஏமாற்று வேலை இல்லை மாறல் சப்போர்ட்" என்று சொல்லும் கேட்டால். //

      ஹா.. ஹா.. ஹா...

      நீக்கு
  6. தேன்சிட்டு குருவிகளா என்று சந்திரபோஸ் ஒரு பாடல் பாடுவார், கேட்டிருக்கிறீர்களா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், பூஞ்சிட்டுக்குருவிகளா என்று ஆரம்பிக்கிறது. பாடல் கேட்டேன்,
      https://www.youtube.com/watch?v=po6s62vUzxk
      தேன் சிட்டு என்று ஆரம்பிக்கவில்லைஅந்த பாடல்,
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. அடடா...  ஆமாம்...  மனதில் ரைமிங்காய் வரி வந்து ஏமாற்றி விட்டது போல!  ஹிஹிஹி..  எப்படியோ..  சிட்டுக்குருவின்னு வந்திருக்கு இல்லே?!!

      நீக்கு
    3. ஆமாம், சிட்டுக்குருவி என்று வந்து இருக்கிறது ஸ்ரீராம். பாடல் கேட்டு நாள் ஆச்சு. நீங்கள் சொன்னவுடன் கேட்டேன். அப்போது தான் தெரிந்தது. தேன் சிட்டு குருவிகளா என்று பாடி பார்த்தால் பொருந்துகிறது.

      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. தேன்சிட்டு பற்றிய செய்தி அருமை

    சிறிய தேன்சிட்டைப் படமெடுத்தது சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //தேன்சிட்டு பற்றிய செய்தி அருமை

      சிறிய தேன்சிட்டைப் படமெடுத்தது சிறப்பு//

      நன்றி நெல்லை.

      நீக்கு
  8. தேன்சிட்டு காணொளி அழகு

    பயங்கர வேகமாக சிறகை அசைத்து அந்த வேகத்திலேயே தேனைக்குடிப்பது ஆச்சர்யம்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தேன்சிட்டு காணொளி அழகு

      பயங்கர வேகமாக சிறகை அசைத்து அந்த வேகத்திலேயே தேனைக்குடிப்பது ஆச்சர்யம்தான்//

      ஆமாம், அது பாட்டும் பாடி கொண்டு சிறகையும் அசைத்து கொண்டு தேனை பருகுவது வியப்புதான்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
      உங்கள் அத்தனை வேலைகளுக்கு இடையில் பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  9. ஆம், இங்கு நாம் பார்க்கும் தேன்சிட்டுகள் போலன்றி தோற்றத்தில் வித்தியாசம் உள்ளது. குறிப்பாக ஹேர் ஸ்டைல் :). பேரன் நேர்த்தியாகப் படங்கள் எடுத்துத் தந்துள்ளார். காணொளி அருமை. இச்சிட்டுகளுக்காகவே தோட்டம் அமைத்து வெற்றியும் கண்ட பெண்மணியின் நோக்கம் பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      //ஆம், இங்கு நாம் பார்க்கும் தேன்சிட்டுகள் போலன்றி தோற்றத்தில் வித்தியாசம் உள்ளது. குறிப்பாக ஹேர் ஸ்டைல் :).//

      ஆமாம், ராமலக்ஷ்மி.

      பேரன் நேர்த்தியாகப் படங்கள் எடுத்துத் தந்துள்ளார்.//

      ஆமாம் , எடுக்கவா என்று கேட்டு போதும் என்று சொல்லும் வரை படங்களை எடுத்து தந்தான். அதில் தேர்வு செய்து படங்கள் பதிவில் ஏற்றினேன்.


      //காணொளி அருமை.//

      நன்றி.



      இச்சிட்டுகளுக்காகவே தோட்டம் அமைத்து வெற்றியும் கண்ட பெண்மணியின் நோக்கம் பாராட்டுக்குரியது.//

      ஆமாம். அதனால் ஏற்படும் நன்மையை அறிந்து அவர் தோட்டம் அமைத்து இருக்கிறார்.

      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  10. பச்சை வண்ணதேன்சிட்டு அழகாக உள்ளது பேரனுக்கு பாராட்டுகள்.

    தேன்சிட்டு விபரங்கள் அருமை.

    சிட்டுக்களுக்காக தோட்டம் அமைத்த பெண்மணி வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //பச்சை வண்ணதேன்சிட்டு அழகாக உள்ளது பேரனுக்கு பாராட்டுகள்//

      பேரனை பாராட்டியது மகிழ்ச்சி, நன்றி..

      //தேன்சிட்டு விபரங்கள் அருமை.

      சிட்டுக்களுக்காக தோட்டம் அமைத்த பெண்மணி வாழ்க.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. பச்சை வண்ண தேன் சிட்டு மிக அழகு கோமதிக்கா. தகவல்கள் தெரிந்து கொண்டேன். பல பறவைகளும், உயிரினங்களும் அழிந்து வருகின்றன என்பதுதான் வேதனையான விஷயம் நாம் தான் அதில் முன்னணியில் இருக்கிறோமே அழித்திட கட்டிடங்கள் கட்டி, நீர்நிலைகளை வற்றச் செய்து....

    பாருங்க பறவைகளிலும் ஆண் பெண்....மனிதர்களில் போல. சுவாரசியம்

    கவின் எடுத்த படங்களும் மிக அழகு.

    இப்ப விட்டா இந்த மனுஷன் அழிச்சிடுவான்னு தனக்குத் தேன் கிடைக்குமோ கிடைக்காதோன்னு வேக வேகமா சாப்பிடுகிறதோ!!!

    மெதுவாக ஒவ்வொன்றாக வாசிக்கிறேன் கோமதிக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      பச்சை வண்ண தேன் சிட்டு மிக அழகு கோமதிக்கா. தகவல்கள் தெரிந்து கொண்டேன்.

      பாருங்க பறவைகளிலும் ஆண் பெண்....மனிதர்களில் போல. சுவாரசியம்//


      ஆமாம் கீதா. தேன் சிட்டு பற்றி படிக்க படிக்க வியப்புதான்.

      // பல பறவைகளும், உயிரினங்களும் அழிந்து வருகின்றன என்பதுதான் வேதனையான விஷயம் நாம் தான் அதில் முன்னணியில் இருக்கிறோமே அழித்திட கட்டிடங்கள் கட்டி, நீர்நிலைகளை வற்றச் செய்து...//

      என்ன செய்வது, சுற்றுபுற மாற்றங்களை நிகழ்த்தி கொண்டே இருக்கிறோம். வீடு தொழிற்சாலைகள், சாலை விரிவாக்கம், மற்றும்
      போக்குவரத்துக்கு மெட்ரோ என்று பல் விதங்களில்.

      //கவின் எடுத்த படங்களும் மிக அழகு.//

      நன்றி.

      //இப்ப விட்டா இந்த மனுஷன் அழிச்சிடுவான்னு தனக்குத் தேன் கிடைக்குமோ கிடைக்காதோன்னு வேக வேகமா சாப்பிடுகிறதோ!!!//

      தேன் சிட்டின் இயல்பு அப்படித்தான்.

      //மெதுவாக ஒவ்வொன்றாக வாசிக்கிறேன் கோமதிக்கா.//

      வாங்க வாங்க மெதுவா.
      உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.



      நீக்கு