கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் மகன் குடும்பத்துடன் இரண்டு நாள் படகு வீட்டில் சவாரி செய்தேன். போன பதிவில் படகு வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவில்களை பார்த்து வந்தோம் என்று பதிவு .
இந்த பதிவில் தேவாலயம் இடம்பெறுகிறது. கிறித்துவ அன்பர்கள் ஞாயிறு தேவாலயம் போவதை கடமையாக கொண்டு இருப்பார்கள். அது போல நாங்கள் ஞாயிறு தேவாலயம் போய் பார்த்து வந்ததை இந்த பதிவில் பார்க்கலாம்.
பழைய பதிவுகள் படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.
சம்பக்குளம் கல்லூர் காடு எனும் இடத்தில் உள்ள செயின்ட் மேரிஸ் பசிலிக்கா என்று அழைக்கப்படும் பழைய தேவாலயத்தின் பக்கம் எங்கள் படகு நின்றது இறங்கி போய் சுற்றிப்பார்த்தோம். கோவில் விவரம் கீழே.
//சம்பக்குளம் கல்லூர்காடு செயின்ட் மேரிஸ் பசிலிக்கா (சம்பக்குளம் வலிய பள்ளி என்றும் அழைக்கப்படுகிறது) இந்தியாவின் பழமையான கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றாகும்[1][2][3] மற்றும் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க சிரிய தேவாலயங்களின் தாய் தேவாலயமாகும். கிபி 427 இல் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது,[4] தேவாலயம் பல முறை மீண்டும் கட்டப்பட்டது. சம்பக்குளம் தேவாலயம் ஒரு காலத்தில் நிரணம் தேவாலயத்தின் கீழ் இருந்தது, இது அப்போஸ்தலன் செயிண்ட் தாமஸால் நிறுவப்பட்டது. தேவாலயத்தைச் சுற்றி காணப்படும் பல கல்வெட்டுகள் தேவாலயத்தின் வரலாற்றைப் பற்றி நமக்குச் சொல்கின்றன.//
-நன்றி விக்கிபீடியா
கொடிமரம்
எருசலேமில் ஏசு தம் சீடர்களுடன் இரவு (இறுதி) உணவு அருந்தும் காட்சி
அந்தக்கால தொங்கும் விளக்குகள்
மெழுகுவத்தி ஏற்றி கையில் எடுத்து செல்லுவது
வண்ண கண்ணாடியில் பார்க்க அழகாய் இருக்கிறது.
தேவாலயத்தின் உள்ளே
தாய், தந்தையருடன் குழந்தை ஏசு
மிக உயரமான குத்துவிளக்கு மேல் பகுதியில் சிலுவை சின்னம்
வெகு அழகான தேவாலயம்
மேல் விதானம் அழகு
பால்கனி
அப்பம் வைக்கும் பாத்திரம் என்று நினைக்கிறேன்
பழைய காலத்து உண்டியல்
மேரி மாதா, ஏசு இருக்கிறார்கள்
வெளியே வரும் வழியில்படகு வீடு வைத்து இருந்தார்கள்
தேவாலயத்திற்கு எதிரில் புனித திருக்குளம் போல படகு செல்லும் ஏரி, படித்துறையில் புறாக்கள் நீர் அருந்தும் காட்சி பார்த்தேன், மகிழ்ச்சியாக இருந்தது.
தொடர்ந்து வந்து படித்து கருத்து சொல்லி மேலும் பதிவிட உற்சாகம் தரும் அன்பர்கள் அனைவருக்கும் நன்றி.
படகு பயணத்தில் பார்த்த காட்சிகள், போன இடங்கள் இன்னும் வரும.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
படகுப் பயணத்தில் கண்ட தேவாலயம் அழகு. வடக்கில் இப்படியான தேவாலயங்களுக்கு சென்றுள்ளேன். விதானக் காட்சிகள் வெகு அழகு. மேலும் பயணம் குறித்து தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்கு//படகுப் பயணத்தில் கண்ட தேவாலயம் அழகு. ///
எல்லா தேவாலயங்கள் அழகாய் இருக்கும். இந்த அதேவாலயமும் அழகு.
//வடக்கில் இப்படியான தேவாலயங்களுக்கு சென்றுள்ளேன். விதானக் காட்சிகள் வெகு அழகு.//
கலைநயத்தோடு சில இருக்கும் வட நாட்டில் நானும் சில ஆலயங்கள் பார்த்து இருக்கிறேன்.
//மேலும் பயணம் குறித்து தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.//
உங்கள் தொடர் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.
நல்ல பெரிய தேவாலயம் என்று தெரிகிறது. அழகிய படங்கள். தேவாலயத்தில் குத்துவிளக்கு!! அப்பம் வைக்கும் பாத்திரம் அழகு.நீரோடும் நீர்நிலையும், படகு வீடும் அழகு. அப்படிப்பட்ட வர்றத நீர்நிலைகள் தமிழ்நாட்டில் இருந்தால் நன்றாய்தான் இருக்கும்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//நல்ல பெரிய தேவாலயம் என்று தெரிகிறது. அழகிய படங்கள். //
ஆமாம் , பெரிய தேவாலயம் தான் நன்றி.
//தேவாலயத்தில் குத்துவிளக்கு!! அப்பம் வைக்கும் பாத்திரம் அழகு.//
ஆமாம்.
//நீரோடும் நீர்நிலையும், படகு வீடும் அழகு. அப்படிப்பட்ட வர்றத நீர்நிலைகள் தமிழ்நாட்டில் இருந்தால் நன்றாய்தான் இருக்கும்.//
ஆமாம், நன்றாக இருக்கும்.
உங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. அழகான தேவாலய படங்கள். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து ரசித்து எடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.நானும் பார்த்துப் பார்த்து ரசித்தேன்.
மேல் விதான படங்கள், கொடிமரம், தொங்கும் அலங்கார விளக்குகள், மெழுகுவர்த்தி ஏற்றிச் செல்ல அழகான வண்ணக்கண்ணாடி கலர் அமைப்புகள் ஏசுபிரான் இரவு உணவு உண்ட போட்டோ.. (அதென்ன இறுதி? அந்த வரலாற்றை நான் படித்ததாக நினைவில்லை.)
நீல வானப்பிண்ணனியில் அழகான தேவாலய எல்லா படங்களும் மனதை கவர்கின்றன.நான் இதுவரை தேவாலயங்கள் சென்றதில்லை. செல்லும் சந்தர்ப்பங்கள் அமையவில்லை. இது மிகவும் பெரியதாக நல்லகலை நுணுக்கத்துடன் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடமும் அவ்வளவு அழகாக இருக்கிறது.
உண்டியல்அமைப்பு, அப்பம் வைக்கும் பாத்திரம் பார்க்கவே நன்றாக உள்ளது. பெரிய குத்து விளக்கு அமைப்பும் நன்றாக உள்ளது.
நீர் நிறைந்த பகுதிகளின் படங்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது. அத்தனையும் அழகான படங்கள்.
புறாக்கள் அழகாய் நீருக்குள் முங்கி நீர் அருந்துகிறதே!! அதன் பின் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக நீர் அருந்த காத்திருக்கிறது போலும்.!! அருந்தி விட்டு வரும் அதனிடம் நீரின் சுவை நன்றாக உள்ளதாவென கேட்டு தெரிந்து கொண்டு அடுத்ததாக அதுவும் செல்லும் போலிருக்கிறது. :)) தங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. படகு பயணத்தில் தொடர்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை. அழகான தேவாலய படங்கள். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து ரசித்து எடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.நானும் பார்த்துப் பார்த்து ரசித்தேன்.//
பாராட்டுக்களுக்கு நன்றி.
(அதென்ன இறுதி? அந்த வரலாற்றை நான் படித்ததாக நினைவில்லை.)//
இறுதி இராவுணவு (The Last Supper) என்பது இயேசு கிறிஸ்து துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்ததற்கு முந்திய இரவில் அவர்தம் சீடர்களோடு அருந்திய விருந்தை மையப்பொருளாகக் கொண்டு லியொனார்டோ டா வின்சி என்னும் புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர் வரைந்த தலைசிறந்த சுவரோவியம் ஆகும்.
புகழ்பெற்ற அந்த ஓவியத்தை வைத்து மரவேலைகள் செய்த இந்த காட்சி அமைப்பு எல்லா இடங்களிலும் இருக்கும். இந்த உண்வௌ முடிந்தவுடன் யூதாஸ் என்ற சீடர் அவரை காட்டி கொடுப்பார் 30 வெள்ளி பணத்துக்காக. ஏசு சிலுவையில் அறையப்படுவார்.
//நீல வானப்பிண்ணனியில் அழகான தேவாலய எல்லா படங்களும் மனதை கவர்கின்றன.நான் இதுவரை தேவாலயங்கள் சென்றதில்லை. செல்லும் சந்தர்ப்பங்கள் அமையவில்லை. இது மிகவும் பெரியதாக நல்லகலை நுணுக்கத்துடன் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடமும் அவ்வளவு அழகாக இருக்கிறது.//
ஆமாம். உங்கள் ஊரில் உள்ள தேவாலயம் பள்ளிசுற்றுலாவில் பார்த்து இருக்கிறே நான். முடிந்த போது பார்த்து வாருங்கள்.
//புறாக்கள் அழகாய் நீருக்குள் முங்கி நீர் அருந்துகிறதே!! அதன் பின் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக நீர் அருந்த காத்திருக்கிறது போலும்.!! //
நீர் அருந்தி விட்டு வரும் வரை சேர்ந்து பறக்கும் போல. நாம் நம் தோழி நீர் அருந்தி விட்டு வரும் வரை காத்து இருந்து அழைத்து போவது போல காத்து இருக்கிறது போலும்.
//அருந்தி விட்டு வரும் அதனிடம் நீரின் சுவை நன்றாக உள்ளதாவென கேட்டு தெரிந்து கொண்டு அடுத்ததாக அதுவும் செல்லும் போலிருக்கிறது. :))//
உங்கள் கற்பனையும் நன்றாக இருக்கிறது.
//தங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. படகு பயணத்தில் தொடர்கிறேன்.//
உங்கள் தொடர் வரவுக்கும், விரிவான கருத்துக்கும், தொடர்வதாக சொல்லி உற்சாகம் கொடுத்தற்கும் நன்றி கம்லா.
தேவாலயம் அழகு, பாலம் அடியில் நீர், புறாக்கள் நீர் அருந்துவதை ரசித்தேன்..
பதிலளிநீக்குமீதிக்கு வருகிறேன் கோமதிக்கா
கீதா
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
நீக்கு//தேவாலயம் அழகு, பாலம் அடியில் நீர், புறாக்கள் நீர் அருந்துவதை ரசித்தேன்..//
நன்றி.
மீதிக்கு வருகிறேன் கோமதிக்கா
வாங்க
சம்பக்குளம் , கல்லூர்க்காடு அனைத்து சிரியன் கத்தோலிக்க தேவாலயங்களின் பகுதியாகத் திகழும் பகுதியில் உள்ள வலிய (யா இல்லை) பள்ளி என்றால் பெரிய பள்ளி அதன் விவரங்களை மிக அருமையாகப் படங்களுடன் விளக்கியிருக்கிறீர்கள். நேரில் பார்ப்பது போல் உணர்வு. அங்கு இருக்கும் தொங்கும் விளக்கு, கடைசி இரவு உணவு அருந்தும் காட்சி, சிலுவை தாங்கிய கொடி மரங்களும் மிக அருமை.
பதிலளிநீக்குவெளியில் வைக்கப்பட்டிருக்கும் படகு வீடு மாடல் மிக அருமை.
துளசிதரன்
வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
நீக்கு//சம்பக்குளம் , கல்லூர்க்காடு அனைத்து சிரியன் கத்தோலிக்க தேவாலயங்களின் பகுதியாகத் திகழும் பகுதியில் உள்ள வலிய (யா இல்லை) பள்ளி என்றால் பெரிய பள்ளி அதன் விவரங்களை மிக அருமையாகப் படங்களுடன் விளக்கியிருக்கிறீர்கள்.//
திருத்தி விட்டேன் சகோ நன்றி.
//நேரில் பார்ப்பது போல் உணர்வு. அங்கு இருக்கும் தொங்கும் விளக்கு, கடைசி இரவு உணவு அருந்தும் காட்சி, சிலுவை தாங்கிய கொடி மரங்களும் மிக அருமை.
வெளியில் வைக்கப்பட்டிருக்கும் படகு வீடு மாடல் மிக அருமை.//
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி துளசிதரன்.
இது நிறுவப்பட்டது AD 427 என்று விக்கிபீடியாவில் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படித்தான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் 1500 வருடங்களுக்கு முன்பெல்லாம் நமக்கு கிரிகேரியன் காலண்டர்கள் கிடையாது. பெரும்பாலும் அன்றெல்லாம் நமக்கு கொல்லமாண்டுகள் தான் நாம் கணக்காக்கியிருந்த வருடங்கள். கொல்லமாண்டிற்கும், ஆங்கில காலண்டர் கணக்குப் படியான வருடங்களுக்கும் ஏறத்தாழ 825 வருடங்கள் வித்தியாசம் இருக்கிறது. முகமதியர்களின் வருடக் கணக்கிற்கும் நமக்கும் ஏறத்தாழ 500 வருடங்களுக்கு மேல் வித்தியாசம் இருப்பது போல். அதனால் AD என்று சொல்லப்படுவது வாஸ்தவத்தில் கொல்லமாண்டா என்று ஒரு விவாதத்தில் தொடர்கிறது. ஏனென்றால் மேலே சொன்னது போல் அன்றெல்லாம் நமக்கு கிரிகேரியன் காலண்டர் கிடையாது. அது வந்ததென்னவோ ஆங்கிலேயர்களும், டச்சுக்காரர்களும் வந்த பின்புதானே. அதனால் பல இடங்களிலும் இப்படி சொல்லப்படும் ஆண்டுகள் பெரும்பாலும் 400 என்றால் 1200 ஆக இருக்குமோ என்ற ஐயப்பாடு பலருக்கும் உண்டு. பலரும் அந்த சந்தேகத்தை எழுப்புவதுண்டு. எப்படி இருந்தாலும் 800 என்பது 8 நூற்றாண்டுகள் என்பது குறைந்த கால அளவு அல்ல எனவே அந்த வருடங்களிலேயே கிறித்தவமதம் வந்திருப்பது பற்றி எல்லாம் அந்த சுவர் சித்திரங்கள், தேவாலயத்தின் அழகையும், அதன் ஆழத்தையும் கல்வெட்டுகளையும் பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் மிக அழகு ரசித்துப் பார்த்தேன், சகோதரி.
துளசிதரன்
இந்த கோவிலில் கல்வெட்டு இருக்கிறது என்றார்கள் பார்க்கவில்லை.
நீக்குவிக்கிபீடியாவில் நாம் சரியானதை பகிரலாம். நீங்கள் சொல்வது போல ஆண்டுகள் எதுவாக இருந்தாலும் பழமையான கோவில் என்று மட்டும் நமக்கு தெரிகிறது. நிறைய முறை கட்டிடங்கள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி சகோ.
தேவாலயத்தை இப்பதான் சுற்றிப் பார்க்கிறேன் கோமதிக்கா!!!!
பதிலளிநீக்குஉள்ளே அந்தத் தொங்கும் விளக்குகள் வித்தியாசமாக இருக்கின்றன இல்லையா? அப்போ எல்லாம் மெழுகுவர்த்தி வைச்சிருப்பாங்க போல.
மெழுவர்த்தி ஏற்றி எடுத்துச் செல்லும் கண்ணாடிக் கோப்பைகள் போல இருப்பதும் பார்க்க அழகா இருக்கு. நான் பார்த்திருக்கிறேன் தேவாலயங்களில். சிலுவையுடன் கொடிமரம், குத்துவிளக்கு சிலுவையுடன் அழகு.
கீதா
தேவாலயத்தை இப்பதான் சுற்றிப் பார்க்கிறேன் கோமதிக்கா!!!!//
நீக்குபாருங்கபெரிதான வளாகம் நாங்கள் முழுமையாக பார்க்கவில்லை.
உள்ளே அந்தத் தொங்கும் விளக்குகள் வித்தியாசமாக இருக்கின்றன இல்லையா? அப்போ எல்லாம் மெழுகுவர்த்தி வைச்சிருப்பாங்க போல//
எண்ணெய் விளக்கு , அதன் பின் மெழுவத்தி ஏற்றி இருக்கலாம்.
மெழுவர்த்தி ஏற்றி எடுத்துச் செல்லும் கண்ணாடிக் கோப்பைகள் போல இருப்பதும் பார்க்க அழகா இருக்கு.//
திருவிழா மற்றும் விழாக்களில் அதில் மெழுவர்த்தியை வைத்து நடந்து செல்வார்கள் பார்த்து இருக்கிறேன், காற்றுக்கு அணையாது, கையில் மெழுகு வடியாது. நான் பார்த்திருக்கிறேன்
தேவாலயங்களில். சிலுவையுடன் கொடிமரம், குத்துவிளக்கு சிலுவையுடன் அழகு.//
ஆமாம், அழகு.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.
ஆமாம் மிக அழகான தேவாலயம்.
பதிலளிநீக்குஅப்பம் வைக்கும் பாத்திரம் தான். பழையகால உண்டியல் அழகு. பெரிய வளாகம் என்று தெரிகிறது, நேரம் வேண்டும் பார்க்க.
மேரி மாதா ஏசு அந்த மலை போன்று இருக்கும் படம் செம. அந்தப் படகு வீடு வெளியில் இருப்பது போல இப்பவும் இருக்கு.....மலையாளப் படங்களிலும் பார்க்கலாம். கடல்புறத்தைச் சார்ந்த கதைகள் வரும் படங்களில்.
தேவாலயத்தின் எதிரில் இருப்பது ஏரியா....அது ஒரு வேளை நீங்கள் படகில் சென்ற அந்தக் காயலுடன் கலக்கும் பகுதியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது கோமதிக்கா.
படங்கள் எல்லாத்தையும் ரசித்தேன். விளக்கங்களும்
கீதா
//ஆமாம் மிக அழகான தேவாலயம்.
நீக்குஅழகான கோவில் தான்.
//அப்பம் வைக்கும் பாத்திரம் தான்.//
ஓ சரி.
//பழையகால உண்டியல் அழகு. பெரிய வளாகம் என்று தெரிகிறது, நேரம் வேண்டும் பார்க்க.//
ஆமாம். மகன் பார்த்து வந்தான் மேலும் உள்ளே போய்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
படங்கள் வழக்கம் போல அழகிய கோணத்தில் எடுத்து இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குதந்த தகவல்கள் சிறப்பு தொடர்ந்து வருகிறேன்...
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் வழக்கம் போல அழகிய கோணத்தில் எடுத்து இருக்கிறீர்கள்.
தந்த தகவல்கள் சிறப்பு தொடர்ந்து வருகிறேன்...//
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ஜி.
தேவாலயம் மிக அழகாக இருக்கிறது. பழைய காலத்தையும் அதே சமயம் மிக அழகான ஓவியங்கள் மற்றும் பழங்காலப் பொருட்களோடு மிக அழகாக இருக்கிறது
பதிலளிநீக்குவணக்கம் நெல்லத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//தேவாலயம் மிக அழகாக இருக்கிறது. பழைய காலத்தையும் அதே சமயம் மிக அழகான ஓவியங்கள் மற்றும் பழங்காலப் பொருட்களோடு மிக அழகாக இருக்கிறது//
ஆமாம், மிக அழகான தேவாலயம். பழைய பொருட்கள் பழமையை நினைவூட்டி கொண்டு இருக்கிறது.
5ம் நூற்றாண்டிலேயே அமைக்கப்பட்டதா?
பதிலளிநீக்குவிதானம், பின்புலம் எல்லாம் மிக மிக நுணுக்கமாக அமைந்துள்ளது. அதேசமயத்தில் கேரளாவின் பின்னணியும் இருக்கிறது.
படங்கள் நன்றாக எடுத்திருக்கிறீர்கள்
//5ம் நூற்றாண்டிலேயே அமைக்கப்பட்டதா?//
நீக்குவிக்கிபூடியா சொல்வதுதான் நான் கோவிலில் கட்டிய வரிடம் பார்க்கவில்லை. வேறு பக்கம் போட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன். படகுதுறைக்கு அருகில் உள்ள வாசல் வழியே போனோம்.
//விதானம், பின்புலம் எல்லாம் மிக மிக நுணுக்கமாக அமைந்துள்ளது. அதேசமயத்தில் கேரளாவின் பின்னணியும் இருக்கிறது.//
ஆமாம், அந்த அந்த ஊருக்கு உள்ள கட்டிடகலை இருக்கும் தானே!
//படங்கள் நன்றாக எடுத்திருக்கிறீர்கள்///
நன்றி நெல்லை.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நெல்லை.
அழகிய தேவாலயத்தை வெகு அழகாகப் படமாக்கிப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//அழகிய தேவாலயத்தை வெகு அழகாகப் படமாக்கிப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி//
உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.
தேவாலயம் படங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன.
பதிலளிநீக்குபழைய கால உண்டியலும் கலை நயத்தோடு இருக்கிறது.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கு//தேவாலயம் படங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன.
பழைய கால உண்டியலும் கலை நயத்தோடு இருக்கிறது.//
அனைத்தும் கலைநயத்தோடு இருக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.