அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்
ஆசை இருக்கு ஆனால் உடல் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது. காவி போட மறந்து விட்டு பின் வெகு நேரம் கழித்து காவி கொடுத்தேன்.
காவி கொடுத்தபின்
முற்றத்தில் சூரியன் வரும் நேரம் பொங்கலிடுவோம் முன்பு இப்போது சூரியனை வீட்டுக்குள் வரவழைத்து பொங்கல்.
நன்றி சொல்லியாச்சு.
பொங்கலோ பொங்கல் என்று மகன், மருமகள், பேரன் மகனின் நண்பர் குடும்பம் வந்து இருந்தார்கள் அவர்களும் சொன்னார்கள் பால் பொங்கும் போது. நாளை நாலு குடும்பம் சேர்ந்து மகன் வீட்டில் பொங்கல் கொண்டாட போகிறார்கள்.
ஊரில் உறவுகளுடன் கொண்டாடும் மகிழ்ச்சி ஏற்படும் அவர்களுக்கு. பேரன் நண்பரின் பெண் எல்லாம் சேர்ந்து கோலம் போட்டுக் கொண்டு இருந்தார்கள்.
எல்லா சாமி படங்களுக்கு பூ வைப்பது , மாவிலை கட்டுவது எல்லாம் கணவர் செய்வார்
பொங்கலுக்கு மாவிலை , மற்றும் பூளை பூ காப்பு கட்டுதல் அவர்கள் தான் செய்வார்கள்.
இந்த ஆண்டு இறைவன் அருளால் , கணவரின் ஆசியோடும், குழந்தைகள் தரும் உறசாகத்தால் பொங்கல் பண்டிகை செய்து விட்டேன் .
கிராமத்து பொங்கல்
எனக்கு வந்த வாழ்த்துகளில் பிடித்ததை இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.
நகரத்து பொங்கல்
போன வருடம் மகனுடன் பொங்கல் கொண்டாடியதை நினைத்து கொள்கிறேன்
எல்லோரும் பொங்கல் சாப்பிட்டு ஓய்வாக இருப்பீர்கள், ஓய்வு எடுங்கள் அப்புறம் வந்து மெதுவா பாருங்க.
சூரியனை வணங்கி பொங்கல் சிறப்புகளை சொல்லும் பொங்கல் பாட்டு கேட்டேன், நன்றாக இருக்கிறது. கேட்டு பாருங்கள். போகி ஆரம்பித்து காணும் பொங்கல் வரை இருக்கிறது. கேட்டு பாருங்கள்.
பழைய சினிமாவில் பொங்கல் பாடல்களை கேட்போம் நாங்கள், நீங்களும் கேட்டு இருப்பீர்கள் இன்று, இந்த தனி பாடல் கேட்டு இருக்க மாட்டீர்கள் அதனால் இந்த பகிர்வு. பொங்கலின் அத்தனை சிறப்புகளையும் சொல்கிறது. வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! நிறைவில் சொல்கிறது அதுவரை கேளுங்கள் அதன் பின் கேட்க வேண்டாம். மீண்டும் மீண்டும் பாடல் வருகிறது.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------
பொங்கலுக்கு நீங்கள் போட்டிருக்கும் பொங்கல் கோலம் மிக அழகாக இருக்கிறது!
பதிலளிநீக்குஉங்களுக்கும் என் மனமார்ந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!
வணக்கம் மனோ சாமிநாதன் வாழ்க வளமுடன்
நீக்கு//பொங்கலுக்கு நீங்கள் போட்டிருக்கும் பொங்கல் கோலம் மிக அழகாக இருக்கிறது!
உங்களுக்கும் என் மனமார்ந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!//
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துகள்
பதிலளிநீக்குவணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்களுக்கும் உங்கள் உறவினர்கள் எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துகள்//
நன்றி நெல்லை.
பதிவர்களுக்கு வயதாவதுபோன்ற உணர்வு வருவதில்லை. ஆனால் உண்மை நிலை அப்படி இல்லையே... இருந்தாலும் இந்தப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்கு//பதிவர்களுக்கு வயதாவதுபோன்ற உணர்வு வருவதில்லை. ஆனால் உண்மை நிலை அப்படி இல்லையே... இருந்தாலும் இந்தப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறீர்கள்.//
நீக்குநீங்கள் சொல்வது உண்மைதான். இவ்வளவு நேரம் படுத்து இருந்தேன், ஏதோ உற்சாகத்தை வரவழைத்து கொண்டு செய்து விட்டேன். உடல் நிலை சரியில்லை. என் அத்தை அவர்கள் இந்த வருடம் கொண்டாடி விட்டேன், அடுத்த வருடம் எப்படியோ என்பார்கள் அப்படி மனநிலையில் தான் இருக்கிறேன்.
இந்தத் தடவை நெல்லையிலிருந்து நான்கு பனங்கிழங்கு வாங்கிவந்திருந்தேன். நேற்று வேகவைத்து சிறிது சாப்பிட்டேன். பரவாயில்லை.
பதிலளிநீக்கு//இந்தத் தடவை நெல்லையிலிருந்து நான்கு பனங்கிழங்கு வாங்கிவந்திருந்தேன். நேற்று வேகவைத்து சிறிது சாப்பிட்டேன். பரவாயில்லை.//
நீக்குஎனக்கும் கிழங்கு வகைகள் ஒத்துக் கொள்வது இல்லை, பூஜைக்கு வைக்கவேண்டுமே என்று வாங்கினேன். யாருக்காவது கொடுத்து விடுவேன்.
படுத்துக் கொள் என்கிறது உடல்நிலை, மாலை நேரம் படுக்க கூடாது என்று உட்கார்ந்து கொண்டு மகரஜோதி நேரலை பார்த்து கொண்டு இருக்கிறேன். இன்று எந்த கோவிலுக்கும் போகவில்லை. தொலைக்காட்சியில் தரிசனம் செய்யலாம் என்று அமர்ந்து பார்த்து கொண்டு இருக்கிறேன்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
பொங்கல் கோலம் அருமை. இனிய பொங்கல் நினைவுகள். இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். ஒவ்வொரு பருவத்தில் ஒவ்வொரு விதமாக பொங்கல் கொண்டாடுகிறோம். எல்லாம் அனுபவங்கள்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குபொங்கல் கோலம் அருமை.//
நன்றி
//இனிய பொங்கல் நினைவுகள். இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.//
ஆமாம், உங்கள் பொங்கல் நினைவுகளும் நன்றாக இருந்தது. முகநூலில் படித்தேன்.
//ஒவ்வொரு பருவத்தில் ஒவ்வொரு விதமாக பொங்கல் கொண்டாடுகிறோம். எல்லாம் அனுபவங்கள்.//
ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதம் தான் பண்டிகைகள்.
இன்றைய அனுபவங்கள் வயதாகி விட்டது, பழைய மாதிரி நினைத்து கொள்ளாதே உன்னை என்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஸார் அவர்கள் முன்பு மாவிலை கட்டி பொங்கலை கொண்டாடிய இனிய நினைவுகளுடன், மகன் மருமகள் பேரன் எல்லோரையும் பார்த்த மகிழ்வுடன், அழகான கோலத்துடன் பொங்கலையும் இனிமையாகக் கொண்டாடியிருப்பீர்கள்.
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
துளசிதரன்
வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
நீக்கு//ஸார் அவர்கள் முன்பு மாவிலை கட்டி பொங்கலை கொண்டாடிய இனிய நினைவுகளுடன், மகன் மருமகள் பேரன் எல்லோரையும் பார்த்த மகிழ்வுடன், அழகான கோலத்துடன் பொங்கலையும் இனிமையாகக் கொண்டாடியிருப்பீர்கள்.//
ஆமாம் சகோ, இனிய நினைவுகளுடன், பேரன் மகள், மகன், மருமகளை பார்த்த மகிழ்வுடன் பொங்கல் பண்டிகை இனிதாக போனது. தொழில் நுடபம் கொடுத்த வரபிரசாதம்.
//இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!//
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
பாருங்க சூரியோதயம் டைம் ல பொங்கல் கொண்டாடி வாழ்த்துகள் சொல்வதற்குப் பதிலா சூரியன் மறைந்த பிறகு வந்து பொங்கல் வாழ்த்துகள் சொல்றேன். பரவால்ல உலகின் மற்றொரு புறம் உண்டே...உங்க மகன் பேரன் மருமகள் எல்லாரும் அமெரிக்காவில் கொண்டாடுவாங்க இப்ப....நானும் அப்படி உங்களுக்கு வாழ்த்து சொல்லிவிடுகிறேன்!!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குகீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்குபாருங்க சூரியோதயம் டைம் ல பொங்கல் கொண்டாடி வாழ்த்துகள் சொல்வதற்குப் பதிலா சூரியன் மறைந்த பிறகு வந்து பொங்கல் வாழ்த்துகள் சொல்றேன். //
இன்னும் இரண்டு நாள் வாழ்த்து சொல்லிக்கலாம் கீதா. பொங்கல் வேலைகள் செய்து களைத்து போய் இருப்பார்கள் எல்லோரும் அதனால் மெதுவா வாங்க என்று சொல்லி இருந்தேன். நான் மிகவும் களைத்து போய் விட்டேன்.
//பரவால்ல உலகின் மற்றொரு புறம் உண்டே...உங்க மகன் பேரன் மருமகள் எல்லாரும் அமெரிக்காவில் கொண்டாடுவாங்க இப்ப....நானும் அப்படி உங்களுக்கு வாழ்த்து சொல்லிவிடுகிறேன்!!!!!!!!!!!!!!!//
10 மணிக்கு மேல் தான் மகன் வீட்டில் பொங்கல். ஓய்வு எடுங்க தூங்க போங்கள் படங்கள் காணொளி அனுப்புகிறேன் என்றான். சிறிது நேரம் அவர்களிடம் பேசி விட்டு தூங்க போக வேண்டும்.
உங்கள் வாழ்த்துகளுகு நன்றி.
மாமா இருந்தப்ப மாவிலை கட்டுவது இனிய நினைவுகள். பேரன் போட்ட கோலம் வரும்தானே..
பதிலளிநீக்குபடங்களுடன் பொங்கல் பதிவு மிக நன்று, கோமதிக்கா
கீதா
//மாமா இருந்தப்ப மாவிலை கட்டுவது இனிய நினைவுகள்.//
நீக்குஆமாம்.
//பேரன் போட்ட கோலம் வரும்தானே..//
மகனின் நண்பர் மனைவி போட்ட கோலத்திற்கு நண்பர் மகளும், கவினும் கலர் கொடுத்தனர்.
//படங்களுடன் பொங்கல் பதிவு மிக நன்று, கோமதிக்கா//
நன்றி கீதா
கோமதிக்கா அதுதான்....கலர் போடுவது என்பதுதான் அதில் பொறுமையான விஷ்யம். பதிவில் பார்த்தேன் அந்தக் கோலம் முடிஞ்சா பகிருங்க கோமதிக்கா
நீக்குகீதா
பேரன் படம் இன்னும் அனுப்பவில்லை , அனுப்பியபின் போடுகிறேன்.
நீக்குஅங்கு கலர் பொடி கிடைக்கவில்லை கலர் சாக்பீஸ் கொண்டு வண்ணம் அடித்தார்கள்.
உங்க பொங்கல் கோலம் அழகா இருக்கு.
பதிலளிநீக்குகீதா
//உங்க பொங்கல் கோலம் அழகா இருக்கு.//
நீக்குநன்றி கீதா.
உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி.
அருமை.. சிறப்பான பதிவு..
பதிலளிநீக்குநலம் வாழ்க..
வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//அருமை.. சிறப்பான பதிவு..
நலம் வாழ்க..//
நன்றி.
/// பதிவர்களுக்கு வயதாவது போன்ற உணர்வு வருவதில்லை. ஆனால் உண்மை நிலை அப்படி இல்லையே...///
பதிலளிநீக்குஎன்று சொல்கின்றார் நெல்லை..
அற்புதம்..
தாங்கள் தங்களது உடல் நிலையைக் கவனித்துக் கொள்ளவும்.. ஒரு வாரமாக எனக்கும் உடல்நலம் சரியில்லை.. அதனாலாயே தங்களது வருகைக்கு எல்லாம் ஒரு கருத்தும் சொல்லாமல் இருக்கின்றேன்.. மன்னிக்கவும்..
// பதிவர்களுக்கு வயதாவது போன்ற உணர்வு வருவதில்லை. ஆனால் உண்மை நிலை அப்படி இல்லையே...///
நீக்குஎல்லா வற்றையும் பகிர்ந்துவிட வேண்டும் ஆவல் உள்ளவர்களூக்கு வயதாவது தெரிவதுஇல்லை. ஆனால் உடல் காட்டிக் கொடுக்கிறது உனக்கு வயதாகி விட்டது என்று.
அற்புதம்..
//தாங்கள் தங்களது உடல் நிலையைக் கவனித்துக் கொள்ளவும்.//
கவனித்து கொள்கிறேன், நன்றி.
. ஒரு வாரமாக எனக்கும் உடல்நலம் சரியில்லை.. அதனாலாயே தங்களது வருகைக்கு எல்லாம் ஒரு கருத்தும் சொல்லாமல் இருக்கின்றேன்.. மன்னிக்கவும்..//
பரவாயில்லை உடல் நிலையை பார்த்து கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. பொங்கல் பண்டிகை பற்றிய பதிவு சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். பழைய நினைவுகள் நம்மை விட்டு என்றுமே போகாதது.. தங்கள் கணவர் இருக்கும் போது எப்படி பண்டிகைகளை சிறப்பாக, பார்த்துப் பார்த்து செய்வார் என நினைவு கூர்ந்து எழுதி இருப்பது நன்றாக உள்ளது. தங்களின் பல பதிவுகளில் அதைப் பற்றி தாங்கள் எழுதியதை படித்துள்ளேன். இந்த வருடமும் நீங்களும், கவனமாக எல்லோரையும் நினைத்தபடி பண்டிகையை நன்றாக கொண்டாடியிருக்கிறீல்கள்.
தாங்கள் போட்ட பொங்கல் கோலம் மிகவும் அழகாக இருக்கிறது. பூஜையறை அலங்கரிப்பும், பொங்கல் பானைகள் வைத்த விதமும், இறைவனுக்கு அதனை நைவேத்தியம் செய்த முறைகளையும் ரசித்தேன்.
மனதில் எப்படியாவது செய்து முடித்து விட வேண்டுமென்ற உறுதி வந்த பின் நம் உடல்நலனைப்பற்றி கூட கவலையுறாது, செய்து முடித்த பின் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்ற எண்ணம் வரும். நீங்களும் தங்கள் கணவர் தந்த மன பலத்தால் அவ்விதமே இந்த வருட பொங்கல் விழாவை வீட்டில், சிறப்பாக செய்து விட்டீர்கள்.மனமார்ந்த பாராட்டுக்கள்.
தங்கள் மகன் வீட்டு பொங்கல் விழாக்களையும், பேரன் அவற்றில் ஈடுபாடுடன் கலந்து கொண்டதையும் காண ஆவலாக உள்ளேன். அங்கு அவர்கள் அனைவருக்கும் என் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களையும் கூறுங்கள்.
எனக்கு நேற்று முழுவதும் குழந்தைகளுடன் நேரம் சரியாக இருந்தபடியால், நேற்றே பதிவுக்கு வர இயலவில்லை. இதன் முந்தைய பதிவையும் (மார்கழி கோலங்கள்) பிறகு விரிவாக படித்து ரசித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை. பொங்கல் பண்டிகை பற்றிய பதிவு சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். பழைய நினைவுகள் நம்மை விட்டு என்றுமே போகாதது.. தங்கள் கணவர் இருக்கும் போது எப்படி பண்டிகைகளை சிறப்பாக, பார்த்துப் பார்த்து செய்வார் என நினைவு கூர்ந்து எழுதி இருப்பது நன்றாக உள்ளது. ..
நன்றி.
என்றும் நினைவுகளில் தான் நான் நடமாடி கொண்டு இருக்கிறேன்.
//தாங்கள் போட்ட பொங்கல் கோலம் மிகவும் அழகாக இருக்கிறது. பூஜையறை அலங்கரிப்பும், பொங்கல் பானைகள் வைத்த விதமும், இறைவனுக்கு அதனை நைவேத்தியம் செய்த முறைகளையும் ரசித்தேன்.//
நீங்கள் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
//மனதில் எப்படியாவது செய்து முடித்து விட வேண்டுமென்ற உறுதி வந்த பின் நம் உடல்நலனைப்பற்றி கூட கவலையுறாது, செய்து முடித்த பின் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்ற எண்ணம் வரும்.//
ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான்.
//நீங்களும் தங்கள் கணவர் தந்த மன பலத்தால் அவ்விதமே இந்த வருட பொங்கல் விழாவை வீட்டில், சிறப்பாக செய்து விட்டீர்கள்.மனமார்ந்த பாராட்டுக்கள்.///
உங்கள் பாராட்டுக்கு நன்றி கமலா
//தங்கள் மகன் வீட்டு பொங்கல் விழாக்களையும், பேரன் அவற்றில் ஈடுபாடுடன் கலந்து கொண்டதையும் காண ஆவலாக உள்ளேன். அங்கு அவர்கள் அனைவருக்கும் என் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களையும் கூறுங்கள்.//
அவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களை சொல்கிறேன்.
//எனக்கு நேற்று முழுவதும் குழந்தைகளுடன் நேரம் சரியாக இருந்தபடியால், நேற்றே பதிவுக்கு வர இயலவில்லை. இதன் முந்தைய பதிவையும் (மார்கழி கோலங்கள்) பிறகு விரிவாக படித்து ரசித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
பதிவுகள் முடிந்த போது படித்து கருத்து சொல்லலாம். வேலைகளுக்கு இடையே நினைவு வைத்து பதிவை படித்து விரிவான கருத்து சொல்வது மிகவும் மகிழ்ச்சி. நன்றி.
மிக நேர்த்தியான அழகான கோலம். தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்! சாரின் நினைவுகள் ஆசிகளாக குடும்பத்தினருக்கு எப்போதும் இருக்கும். மகனது குடும்பம் நண்பர்களுடன் சேர்ந்து பொங்கல் திருவிழாவைக் கொண்டாடுவது சிறப்பு. அந்தப் படங்களையும் பகிர்ந்திடுங்கள்.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//மிக நேர்த்தியான அழகான கோலம். தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்! //
நன்றி ராமலக்ஷ்மி.
//சாரின் நினைவுகள் ஆசிகளாக குடும்பத்தினருக்கு எப்போதும் இருக்கும்.//
அது போதும் எனக்கு.
//மகனது குடும்பம் நண்பர்களுடன் சேர்ந்து பொங்கல் திருவிழாவைக் கொண்டாடுவது சிறப்பு. அந்தப் படங்களையும் பகிர்ந்திடுங்கள்.//
பகிர்கிறேன்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி ராமலக்ஷ்மி.
தங்களுக்கு தாமதமான பொங்கல் நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகாணொளி பாடல் சிறப்பாக இருக்கிறது.
கோலம் போட்ட படங்கள் அழகாக இருக்கிறது.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//தங்களுக்கு தாமதமான பொங்கல் நல்வாழ்த்துகள்.//
பரவாயில்லை ஜி
//காணொளி பாடல் சிறப்பாக இருக்கிறது.//
காணொளி பாடல் கேட்டது மகிழ்ச்சி.
//கோலம் போட்ட படங்கள் அழகாக இருக்கிறது.//
அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ஜி.
பொங்கல் கொண்டாட்டம் சிறப்புற நடைபெற்றது அறிந்து மகிழ்ச்சி. இங்கேயும் சிறப்பாக கொண்டாட்டங்கள் நடந்து முடிந்தன.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும், தங்களது தளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள். எல்லா நாளும் இனிதாக அமைந்திடட்டும்.
வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்கு//பொங்கல் கொண்டாட்டம் சிறப்புற நடைபெற்றது அறிந்து மகிழ்ச்சி. இங்கேயும் சிறப்பாக கொண்டாட்டங்கள் நடந்து முடிந்தன.//
ஆதியின் பதிவு மூலம் சிறப்பாக நடைபெற்றது அறிந்து கொண்டேன், நீங்களும் பொங்கலுக்கு இருந்தது மகிழ்ச்சி.
ஆதியின் அன்பான கவனிப்பில் உடல் நன்கு தேறி விட்டது அடுத்த பயணத்திற்கு தயார் ஆகி விட்டீர்கள் என்று அறிந்தேன்.
காசி தரிசனம் முகநூலில் மட்டும் இருக்கிறது, இங்கு உங்கள் வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
//தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும், தங்களது தளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள். எல்லா நாளும் இனிதாக அமைந்திடட்டும்//
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி வெங்கட்.
பால் பாங்கும் படம், முற்றத்தில் கோலம் எல்லாம் அழகாக இருக்கின்றன.
பதிலளிநீக்குஇனிய பொங்கல் வாழ்த்துகள்.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கு//பால் பாங்கும் படம், முற்றத்தில் கோலம் எல்லாம் அழகாக இருக்கின்றன.
இனிய பொங்கல் வாழ்த்துகள்.//
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி மாதேவி.