வியாழன், 25 ஜனவரி, 2024

ஆறுபடை வீடு அழகா போற்றி






மகன் அரிசோனாவில் உள்ள மகா கணபதி கோவில் தைபூசத்திருநாளுக்கு கணினியில் செய்து கொடுத்த  விளம்பர பலகை. ஆறு படை வீடு முருகனும் இருக்கிறார்கள்.
நடுவில் முன்பு தைபூசத்திற்கு  மகன் செய்து கொடுத்த திருவாச்சியுடன் மகா கணபதி கோவில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். 
--------------------------------------------------------------------------------------------------





மகன் செய்து கொடுத்த திருவாச்சி
தைப்பூச விழா முன்பு போட்ட பதிவு படித்து இருப்பீர்கள். படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.



நாங்கள் பால் குடம் எடுத்தோம் மகனும், பேரனும் காவடி எடுத்தான் அந்த நினைவுகள் வந்து போகிறது.


                                               திருப்பரங்ககுன்றம் 


திருச்செந்தூர்

திருவாவினங்குடி

சுவாமிமலை

                                                        திருத்தணி



பழமுதிர்சோலை




அறுபடை வீடு கொண்ட திருமுருகா  பாடல்

சீர்காழி கோவிந்த ராஜன் அவர்கள் பாடல் எல்லோரும் கேட்டு இருப்பீர்கள், இருந்தாலும் இன்று ஆறுபடை வீடுகளையும் பார்க்கலாம்.  என் பதிவுக்கு பொருத்தம் என்பதால் சேர்த்து இருக்கிறேன் கேட்டு பாருங்கள். 

ஆறுபடை வீட்டின் அழகை நக்கீரர் சொல்வது சின்ன காணொளி தான் பாருங்கள், கந்தன் கருணையில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பேசியது.


சண்முகக் கடவுள் போற்றி சரவணத் துதித்தாய் போற்றி
கண்மணி முருகா போற்றி கார்த்திகை பாலா போற்றி
தண்மலர் கடப்ப மாலை தாங்கிய தோளா போற்றி
விண்மதி வதன வள்ளி வேலவா போற்றி போற்றி.


தைபூச நாளில் முருகன்  சிந்தனை . முருகன் அனைவருக்கும் எல்லா நலங்களையும் அருள பிரார்த்திப்போம்.
ஆறுபடை வீடு அழகா போற்றி ! போற்றி!

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------------

28 கருத்துகள்:

  1. உங்கள் மகன் கணினியில் செய்து கொடுத்திருக்கும் விளம்பரம் அழகு. அறுபடை முருகனையும் ஒவ்வொன்றாக தரிசித்தேன்.சில முருகன் படங்கள் வித்தியாசம் தெரியாமல் ஒரே மாதிரி இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //உங்கள் மகன் கணினியில் செய்து கொடுத்திருக்கும் விளம்பரம் அழகு.//

      நன்றி.

      //அறுபடை முருகனையும் ஒவ்வொன்றாக தரிசித்தேன்.சில முருகன் படங்கள் வித்தியாசம் தெரியாமல் ஒரே மாதிரி இருக்கின்றன.//

      திருத்தணியும், பழமுதிர் சோலையும் வள்ளி தெய்வானையுடன் இருக்கும் படம் என்பதால் ஒரே மாதிரி இருக்கிறது.
      அது ஒரே மாதிரி இருப்பதை நானும் நினைத்தேன்.

      நீக்கு
  2. பதிவின் தலைப்பைப் பார்த்ததும் எனக்கு அறுபடை வீறுகொண்ட திருமுருகா பாடல்தான் நினைவுக்கு வந்தது.  நீங்களும் பகிர்ந்திருக்கிறீர்கள்.  முருகனை வணங்கி அருளெல்லாம் பெறுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பதிவின் தலைப்பைப் பார்த்ததும் எனக்கு அறுபடை வீறுகொண்ட திருமுருகா பாடல்தான் நினைவுக்கு வந்தது.நீங்களும் பகிர்ந்திருக்கிறீர்கள் //

      அதனால் தான் அந்த பாடல் பகிர்வு ஸ்ரீராம்.


      . //முருகனை வணங்கி அருளெல்லாம் பெறுவோம்.//

      முருகனை வணங்கி அருளை பெறுவோம். அடுத்த காணொளி பார்க்கவில்லையா சிறிய காணொளிதான்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. பார்த்தேன்.  முருகன் சிவகுமார்.  ஆனால் முருகனின் மாறுவேடத்தில் வேறு யாரோ!  நக்கீரராக சீர்காழி கோவிந்தராஜன்தானே?

      நீக்கு
    3. //பார்த்தேன். முருகன் சிவகுமார். ஆனால் முருகனின் மாறுவேடத்தில் வேறு யாரோ! நக்கீரராக சீர்காழி கோவிந்தராஜன்தானே?//

      ஆமாம், முருகன் மாறுவேடத்தில் வேறு ஒருவர் தான். நக்கீரர் சீர்காழி தான். மறு வரவுக்கு நன்றி.

      நீக்கு
  3. தைப்பூசம் நினைவூட்டல் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன், வாழ்க வளமுடன்
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. விளம்பரப் பலகை மற்றும் காவடி ஆகியவற்றின் வடிவமைப்பு பிரமாதம். படங்களும் பகிர்வும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      //விளம்பரப் பலகை மற்றும் காவடி ஆகியவற்றின் வடிவமைப்பு பிரமாதம். படங்களும் பகிர்வும் நன்று.//

      படங்களை பகிர்வை, மற்றும் மகன் வடிவமைப்பு செய்ததை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  5. சிறப்பான படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    காணொளிகள் மேலும் சிறப்பு.
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //சிறப்பான படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

      காணொளிகள் மேலும் சிறப்பு.
      வாழ்க வையகம்//
      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.


      நீக்கு
  6. முருகப் பெருமானை வணங்கி நல்லருள் பெறுவோம்...

    அனைவருடைய குறைகளும் தீரட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //முருகப் பெருமானை வணங்கி நல்லருள் பெறுவோம்...

      அனைவருடைய குறைகளும் தீரட்டும்...//

      ஆமாம், குறைகளை தீர்ப்பார் குமரன்.

      நீக்கு
  7. /// நாங்கள் பால் குடம் எடுத்தோம் மகனும், பேரனும் காவடி எடுத்தான் அந்த நினைவுகள் வந்து போகின்றன..///

    நினைவுகள் என்றும் பசுமையானவை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. //நினைவுகள் என்றும் பசுமையானவை.//
      ஆமாம், நினைவுகள் பசுமையானவைதான்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தங்கள் மகன் கனிணியில் செய்த திருவாச்சி பலகை மிகவும் அழகாக இருக்கிறது. ஆறுபடை வீடுடைய முருகப் பெருமான் படங்களை கண்டு வணங்கிக் கொண்டேன்.

    சென்ற வருட தைப்பூச பதிவும் நினைவுள்ளது. தாங்கள் பால் குடம் எடுத்ததும், மகன், மற்றும் பேரன் காவடி எடுத்ததை படித்தது நினைவு வந்தது. தங்கள் பேரன் கூட ஒரு நல்ல முருகன் பாடலை ஒரு இரவுக்குள் படித்து மனனம் செய்து பாடினாரே ...! படித்த எங்களுக்கே நினைவிருக்கும் போது, அங்கிருந்து ந்து விழாவில் கலந்து கொண்ட உங்களுக்கு நினைவுகள் வராதா? நல்ல நினைவுகள். உங்கள் மகன் குடும்பத்திற்கும் உங்கள் நினைவு கண்டிப்பாக வந்திருக்கும்.

    உங்கள் மகன், மற்றும் அவர் குடும்பத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிவுக்கு பொருத்தமான பாடலாக தந்துள்ளீர்கள். கேட்டு மகிழ்ந்தேன். பலமுறை கேட்டாலும் கேட்க, கேட்க புதிதாக தோன்றும் பாடல். நக்கீரர் பேசும் காணொளியையும் கேட்டு மகிழ்ந்தேன். முருகா சரணம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. தங்கள் மகன் கனிணியில் செய்த திருவாச்சி பலகை மிகவும் அழகாக இருக்கிறது. ஆறுபடை வீடுடைய முருகப் பெருமான் படங்களை கண்டு வணங்கிக் கொண்டேன்.//

      நன்றி .

      //சென்ற வருட தைப்பூச பதிவும் நினைவுள்ளது. தாங்கள் பால் குடம் எடுத்ததும், மகன், மற்றும் பேரன் காவடி எடுத்ததை படித்தது நினைவு வந்தது. தங்கள் பேரன் கூட ஒரு நல்ல முருகன் பாடலை ஒரு இரவுக்குள் படித்து மனனம் செய்து பாடினாரே ...! படித்த எங்களுக்கே நினைவிருக்கும் போது, அங்கிருந்து ந்து விழாவில் கலந்து கொண்ட உங்களுக்கு நினைவுகள் வராதா? நல்ல நினைவுகள். உங்கள் மகன் குடும்பத்திற்கும் உங்கள் நினைவு கண்டிப்பாக வந்திருக்கும்.//

      போன வருடம் போட்ட பதிவை நினைவாக சொன்னது மகிழ்ச்சி, நன்றி.

      //உங்கள் மகன், மற்றும் அவர் குடும்பத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.//

      வாழ்த்துக்கு மனம் நிறைந்த நன்றி.

      //பதிவுக்கு பொருத்தமான பாடலாக தந்துள்ளீர்கள். கேட்டு மகிழ்ந்தேன். பலமுறை கேட்டாலும் கேட்க, கேட்க புதிதாக தோன்றும் பாடல். நக்கீரர் பேசும் காணொளியையும் கேட்டு மகிழ்ந்தேன். முருகா சரணம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.///

      பாடலை, காணொளியை பார்த்து ரசித்து விரிவாக கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.

      நீக்கு
  9. உங்கள் மகன் செய்து கொடுத்திருக்கும் திருவாச்சி, மற்றும் கணினியில் செய்துகொடுத்திருக்கும் அறுபடை பலகை மிகச் சிறப்பாக இருக்கின்றன. மகனின் திறமை வியக்க வைக்கிறது.
    அருமையான அரிய படங்களும், காட்சியும், பாடலும் பதிவு அருமை. வேலவா போற்றி போற்றி!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

      //உங்கள் மகன் செய்து கொடுத்திருக்கும் திருவாச்சி, மற்றும் கணினியில் செய்துகொடுத்திருக்கும் அறுபடை பலகை மிகச் சிறப்பாக இருக்கின்றன. மகனின் திறமை வியக்க வைக்கிறது.//

      நன்றி.

      //அருமையான அரிய படங்களும், காட்சியும், பாடலும் பதிவு அருமை. வேலவா போற்றி போற்றி!//
      வேலவா போற்றி! போற்றி!

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. அக்கா ரொம்ப அழகா செய்திருக்கார் உங்க மகன் அந்தப் பெரிய பலகை, திருவாச்சி எல்லாமே. அறுபடைகளையும் பார்த்துக் கொண்டேன்

    அக்கா போன வருடம் கவின் காவடி எடுத்தார் இல்லையா? பால்குடம் மகன் எடுத்தார் என்று நினைக்கிறேன். நினைவு.

    அறுபடை தலைப்பு பார்த்ததும் அறுபடை வீடு கொண்ட திருமுருகா ... பாட்டு நினைவு வந்தது கீழே நீங்களும் பகிர்ந்திருக்கீங்க. அருமையான பாடல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //அக்கா ரொம்ப அழகா செய்திருக்கார் உங்க மகன் அந்தப் பெரிய பலகை, திருவாச்சி எல்லாமே. அறுபடைகளையும் பார்த்துக் கொண்டேன்//

      நன்றி கீதா

      //அக்கா போன வருடம் கவின் காவடி எடுத்தார் இல்லையா? பால்குடம் மகன் எடுத்தார் என்று நினைக்கிறேன். நினைவு.

      பேரன் , சந்தன் காவடி, மகன் விபூதி காவடி, நான், மருமகள், அவள் அம்மா தான் பால குடம் எடுத்தோம்.


      //அறுபடை தலைப்பு பார்த்ததும் அறுபடை வீடு கொண்ட திருமுருகா ... பாட்டு நினைவு வந்தது கீழே நீங்களும் பகிர்ந்திருக்கீங்க. அருமையான பாடல்.//

      சீர்காழியின் இந்த பாடலை மறக்கவே முடியாதுதான்.

      நீக்கு
  11. படங்கள் அனைத்தும் அழகா இருக்கு. அழகன் முருகனிடம் ஆசை பாடலும் நினைவுக்கு வருகிறது. நக்கீரர் சொல்லும் காணொளியும் கேட்டேன். எல்லாமே மிகவும் சிறப்பு கோமதிக்கா. தைப்பூசப்பதிவு சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படங்கள் அனைத்தும் அழகா இருக்கு. //

      நன்றி

      அழகன் முருகனிடம் ஆசை பாடலும் நினைவுக்கு வருகிறது//


      ஆமாம், அதுவும் நன்றாக இருக்கும்.

      . //நக்கீரர் சொல்லும் காணொளியும் கேட்டேன். எல்லாமே மிகவும் சிறப்பு கோமதிக்கா. தைப்பூசப்பதிவு சூப்பர்//

      பதிவை படித்து காணொளியை ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  12. பதில்கள்
    1. வணக்கம்சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  13. உங்கள் மகனின் கைவண்ணங்கள் அழகு.

    ஆறுபடை வீடு முருகன் கண்டு வணங்கினோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //உங்கள் மகனின் கைவண்ணங்கள் அழகு.

      ஆறுபடை வீடு முருகன் கண்டு வணங்கினோம்.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு