செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

தைப்பூச விழா

தைப்பூச  சிறப்பு அலங்காரத்தில் முருகன், வள்ளி, தெய்வானை

வெண்ணை அலங்காரத்தில் பிள்ளையார்

ஞாயிற்றுக்கிழமை  அரிசோனாவில் இருக்கும்  "ஸ்ரீ மகா கணபதி' ஆலயத்தில் நடந்த தைப்பூசவிழாவில் கலந்து கொண்டோம். உற்சவ முருகனுக்கு திருவாச்சி செய்யும் பாக்கியம்  முருகன் அருளால்  மகன் , மருமகளுக்கு  கிடைத்தது. ஆலயகுருக்களும், மகனின் நண்பர் சீனிவாச குப்தா அவர்கள்  கேட்டு கொண்டதால் மகன் மகிழ்ச்சியாக செய்து கொடுத்தான். 

மகனுடன் மருமகளும் சேர்ந்து இந்த திருவாச்சியை உருவாக்கிகொண்டு இருக்கிறார்கள்.

அலுவலக வேலை முடிந்தவுடன் மாலை நேரம் இதை செய்வார்கள் ஒரு வாரம் ஆனது .  


வீட்டில் நிறைவு பெற்ற பின் எடுத்த படம்


கோவிலில் உற்சவ முருகன் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். சிறிய காணொளிதான்

 கோவிலுக்கு எடுத்து செல்லும் முன்

 வீட்டில்  எடுத்த காணொளி 


மூலவர் பிள்ளையாருக்கு முன் உற்சவர் முருகன் 


நானும் மருமகளும் ,மருமகளின் அம்மாவும் பால்குடம் எடுத்தோம்.
அமேசான் மூலம் மஞ்சள் புதுபுடவை வாங்கினாள் மருமகள்.


எங்களுக்கு காப்பு கட்டி, பாலை எங்களை குடத்தில் ஊற்ற வைத்து மேலே தேங்காய் வைத்து மஞ்சள் துணி கொண்டு கட்டி பூ , பொட்டு வைத்து நம்மிடம் கொடுத்தார்கள். "வயதானவர்கள் தலைக்கு மேல் தூக்க முடிந்தால் தூக்கி செல்லுங்கள் இல்லையென்றால் வேண்டாம்" என்று சொன்னார், கோவிலை விட்டு வெளியே வரும் போது மட்டும் தலையில் வைத்து கொண்டோம், அப்புறம் கோவிலை வலம் வந்து கோவிலுக்குள் நுழையும் போது தலையில் வைத்து கொண்டோம். பால் குடம் எடுப்பது இது இராண்டாவது தடவை. எதிர்பார்க்காமல் முருகன் அருளால் கிடைத்த வாய்ப்பு. இரண்டு கொரியன் , ஒரு அமெரிக்கர் பால் குடம் எடுத்தார்கள்.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா! கடம்பனுக்கு அரோகரா!  என்று சொல்லி கொண்டு கோவிலை வெளிபக்கமாக வலம் வந்து பின் யாகசாலையில் ஆறுபடை வீடு முருகனின் புகைப்படங்கள் வைத்து  இருந்தார்கள் அவரை வலம் வந்து   கோவிலுகுள் போனோம்.

மகனும் பேரனும் விபூதி காவடி எடுத்தார்கள்.
காவடி எடுக்கும் முன் காப்பு கட்டிக் கொள்வது, காவடியில் ஒரு பக்கம் விபூதி, ஒருபக்கம் சந்தனம் அவர்களை செம்பில் நிரப்ப சொன்னார்கள்.

காவடி தயார் செய்து கொண்டு இருக்கும் போது நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பிள்ளையார் பாடல் இரண்டு, காவடி சிந்து பாடல் ஒன்று ஆடி நிறைவு செய்தார். நன்றாக ஆடினார்.
இன்னொருவர் முருகன் பாடல்கள் பாடினார். ஒரு அம்மா சரவண பொய்கையில் நீராடி பாடினார்கள்.

முருகனை வலம் வந்து கோவிலுக்கு வெளியே போனார்கள்

காவடி எடுத்து போனவர்கள் மூன்று கிலோ மீட்டர் நடந்து போய் வந்தார்கள்.

முதலில் காவடி அப்புறம் பால்குடம். பால்குடம் வரும் வரை காத்து இருந்து எல்லோரும் சேர்ந்து கோவிலுக்குள் போனோம்அபிஷேகம் செய்யும் சமயத்தில் முருகன் பாடல் பாடினான் பேரன்.
அதுவும் முருகனே கேட்டது போல தான் இருந்தது.

சனிக்கிழமை ஒரு விழாவில் பாடினான், அதை கேட்ட மகனின் நண்பர் தைப்பூசத்திற்கு பேரனை முருகன் பாடல் பாட கேட்டு கொண்டார். உடனே பேரனின் பாட்டு டீச்சரிடம் முருகன் பாடல் கேட்டோம். அவன் பாட்டு டீச்சர் முருகன் பாடல் சொல்லி தர வில்லை இதுநாள் வரை. கேட்டவுடன் அவர் அருமையான பாட்டு பாடி அனுப்பினார். அதை இரவு பயிற்சி செய்து மறுநாள் பாடி விட்டான் முருகன் அருளால். மனப்பாடம் செய்ய நேரம் இல்லை, அதனால் பார்த்து பாடுகிறான். மருமகள் பதிவு எடுத்து கொடுத்து இரவு 12 மணி வரை பயிற்சி செய்ய வைத்து பாட வைத்து விட்டாள்.


"வேலோடு வந்தெங்கள் வினை தீரப்பா" என்ற வரி எனக்கு மிகவும் பிடித்தது. திருச்செந்தூர் முருகன் அனைவரின் வினை துன்பத்தை களைய வேண்டும்.

தைப்பூசத்து அன்று எடுத்த படங்கள்

2021 ல் போட்ட ஸ்ரீ மகா கணபதி ஆலயம் பார்த்து இருப்பீர்கள்.


அபிஷேக காட்சிகளை படம் எடுக்க முடியவில்லை, என் செல்போன் மருமகளின் தோழியிடமிருந்தது. நாங்கள் பால்காவடி எடுத்து வரும் படங்கள் அவர் எடுத்தார். அபிஷேகத்தை கணினி நாற்காலியில் அமர்ந்து நல்ல வசதியாக தூரத்தில் இருந்து பார்த்தேன். அவர்கள் முன் பக்கம் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தார்கள். நான் கொஞ்சம் அமர்ந்தும், நின்றும் பார்ப்பதால் யாருக்கும் மறைக்காமல் கடைசியாக அமர்ந்து கொண்டேன்.
தீபாரதனையை அனைவரும் எடுத்து கொள்ள காட்டுகிறார்.மகனுக்கு  பின்னால் நிற்பவர் தான் மகனை இந்த கோவிலுக்கு திருவாச்சி செய்ய வைத்த நண்பர். கோவில் காரியங்களை விருப்பமுடன் ஏற்று சுறு சுறுப்பாக எல்லாம் செய்கிறார்.  பேரனை பாட ஊக்க படுத்தியவரும் அவர்தான். கோவில் பொறுப்புகளை எல்லோரையும் செய்ய வைத்து மகிழ்வார்.

நிறைவாக பிரதாசம் கொடுத்து கோவில் விழாக்களில் எல்லாம்  உற்சவருக்கு அலங்காரம்  செய்து தர வேண்டும் என்று வாழ்த்தினார்கள். "பேரனை எங்கே என்றார் குருக்கள்" காலை முதல் குழந்தைகள்  கோவிலில் அமர்ந்து இருந்தார்கள் நிறைவு பெற்றதும் கோவிலுக்கு முன்புறம் நாய் குட்டிகள் நிறைய இருந்தது அந்த குட்டிகள் விளையாடும் அழகை பார்க்க போய் விட்டார்கள். சில குழந்தைகள் குட்டி செல்லத்தோடு விளையாடினார்கள்.  பேரன் தூரத்திலிருந்து பார்த்து ரசித்தான். 


பிள்ளைகள் பாரதி சொன்னது போல இருந்தது மகிழ்ச்சி 

 "உயிர்களிடத்தில் அன்பு வேணும்- 
தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்"

தைப்பூசவிழா மிக சிறப்பாக நடந்தது.  அனைவருக்கும் பாயசம், வடையுடன் ருசியான  சாப்பாடு. தேங்காய் பழத்தோடு   பஞ்சாமிர்த பிரதாசம்  கொடுத்தார்கள். 

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------------

48 கருத்துகள்:

 1. மிகவும் மனநிறைவைத் தந்த பதிவு

  உங்களுக்கு தெய்வ சங்கல்பத்தால் கிடைத்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

   ///மிகவும் மனநிறைவைத் தந்த பதிவு//

   நன்றி. எனக்கும் மனநிறைவாக இருந்தது தைப்பூசம் விழாவில் கலந்து கொண்டது.

   //உங்களுக்கு தெய்வ சங்கல்பத்தால் கிடைத்தது//
   ஆமாம் , அப்படித்தான் நினைக்கிறேன்.
   மகன் இந்த கோவில் வெகு தூரம் இருக்கிறது என்று அடிக்கடி போக மாட்டான். அவர் நண்பர் அவனை அங்கு அழைத்து விடுகிறார்.மகனின் நண்பர் மூலம் முருகன் அழைக்கிறார் என்று நினைத்து கொண்டேன். மாயவரத்திலிருந்து கும்பகோணத்தையும் தாண்டி போகும் தூரம் கோவில்.


   நீக்கு
 2. முருக பக்தி கண்டு உள்ளம் நெகிழ்கிறது. திருவாச்சி அருமை. இதற்கெல்லாம் பொறுமை, பக்தி, ஆசை, வாய்ப்பு வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //முருக பக்தி கண்டு உள்ளம் நெகிழ்கிறது. திருவாச்சி அருமை. இதற்கெல்லாம் பொறுமை, பக்தி, ஆசை, வாய்ப்பு வேண்டும்.//

   எந்த வேலை எடுத்துக் கொண்டாலும் நீங்கள் சொல்வது போல பொறுமை மிக அவசியம் தான்.

   என் கணவருக்கு முருகன் தான் இஷ்ட தெய்வம், மகனுக்கும் பழனி மலை முருகன் பிடிக்கும். மருமகளுக்கும் எந்த வேலை செய்தாலும் விருப்பமாக செய்வாள். வாய்ப்பை இறைவன் கொடுத்து இருக்கிறார். அதை நல்லபடியாக செய்து கொடுத்து கோவிலுக்கு வந்தவர்கள் பாராட்டி வாழ்த்திய போது எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

   நீக்கு
 3. உங்கள் குடும்பம் மட்டுமல்லாது பலருக்கும் பக்தி வளர்க்கும் இடமாக அமைந்திருப்பது சிறப்பு, வியப்பு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //உங்கள் குடும்பம் மட்டுமல்லாது பலருக்கும் பக்தி வளர்க்கும் இடமாக அமைந்திருப்பது சிறப்பு, வியப்பு//

   நீங்கள் சொல்வது போல நிறைய குடும்பம் கோவிலில் ஒவ்வொரு வேலையை எடுத்து செய்வதை பார்த்தால் வியப்பாக இருக்கும். சின்னவர்கள், பெரியவர்கள் எல்லாம் அர்ப்பணிப்பு உணர்வுடன் பக்தியாக செய்கிறார்கள்.
   உணவு கூடத்தில் உணவு தயார் செய்கிறார்கள் முன்பே அதை பதிவு செய்து இருக்கிறேன்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
  2. படங்களையும், அதில் உங்கள் குடும்பத்தினரையும் கண்டு மகிழ்ந்தேன். வியப்புற்றுப் பெருமிதப்பட அரசு சார் இல்லையே என்றும் தோன்றியது

   நீக்கு
  3. //படங்களையும், அதில் உங்கள் குடும்பத்தினரையும் கண்டு மகிழ்ந்தேன். வியப்புற்றுப் பெருமிதப்பட அரசு சார் இல்லையே என்றும் தோன்றியது//

   எங்களுக்கும் அப்படிதான். மகன் ஒவ்வொரு செயல் செய்யும் போதும் அவன் அப்பாவை நினைவுகூர்ந்து சொல்லாமல் இருக்க முடியவில்லை. சரஸ்வதி பூஜைக்கு சுழலும் வட்டம் செய்வார்கள். திருவாச்சி அழகாய் செய்வார்கள். இப்போது மகன் இப்படி பெரிய அளவில் செய்யும் போது பெருமிதமாக இருக்கிறது. அவர்களும் இருந்து இருந்தால் மகிழ்ந்து போவார்கள், என்ற எண்ணம் வந்து கொண்டு இருக்கிறது. நண்பர்களும், உறவினர்களும் சொல்லி கொண்டுதான் இருக்கிறார்கள்.

   அனைத்தையும் பார்த்து மகிழ்ந்து வாழ்த்தி கொண்டு இருப்பார்கள் என்று நினைத்து கொள்கிறேன். அவர்களுக்கும் கோவில் தொடர்பு, மாலை மரியாதை பொன்னாடைகள் கிடைத்த போது கடவுளுக்கு நன்றி சொல்லி பெருமித பட்டது போல இப்போதும் மகனுக்கு கிடைக்கும் போது இறைவனுக்கு நன்றி சொல்லி பெருமித படுகிறேன்.
   இன்று எங்கள் திருமண நாள் நினைவுகள் வந்து கொண்டே இருக்கிறது. உயிர் உள்ள வரை மறக்க முடியாத பந்தம்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 4. உற்சவ விவரிப்பு அருமை.
  முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

  இணையம் பிரச்சனை படங்கள் திறக்கவில்லை பிறகு வந்து காணொளி, படங்கள் காண்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   //உற்சவ விவரிப்பு அருமை.//

   நன்றி.

   //முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.//
   ஆமாம், அனைவருக்கும் கிடைக்க பிரார்த்தனைகள்.

   //இணையம் பிரச்சனை படங்கள் திறக்கவில்லை பிறகு வந்து காணொளி, படங்கள் காண்கிறேன்.//

   சரி அப்புறம் வந்து பாருங்கள்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
   //படங்களும் மிகவும் அருமை!//
   நன்றி.

   நீக்கு
 6. சிறப்பாக நடந்திருக்கிறது என்பது உங்கள் விவரணம் படங்கள் மூலம் தெரிகிறது கோமதிக்கா..

  மீண்டும் வருகிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
   //சிறப்பாக நடந்திருக்கிறது என்பது உங்கள் விவரணம் படங்கள் மூலம் தெரிகிறது கோமதிக்கா..//
   ஆமாம், சிறப்பாக நடந்தது.

   //மீண்டும் வருகிறேன்.//

   வாங்க , வாங்க.

   நீக்கு
 7. கண்ணைக் கவரும் அழகிய படங்கள்... அற்புதம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

   //கண்ணைக் கவரும் அழகிய படங்கள்... அற்புதம்..//
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 8. படங்கள், காணொளி கண்டேன் அருமையான தரிசனம் நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //படங்கள், காணொளி கண்டேன் அருமையான தரிசனம் நன்றி//

   மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி சகோ.

   நீக்கு
 9. நீங்கள் எல்லோரும் கலந்து கொள்ள முடிந்தது மிகவும் மகிழ்வான விஷயம். அலுவலக நேரம் முடிந்து வந்து மகனும் மருமகளும் திருவாச்சி செய்தது எவ்வளவு நல்ல விஷயம். மகனும் மருமகளும் ரொம்ப அழகா செஞ்சிருக்காங்க.

  எனக்கும் சிறு வயது நினைவுகள் வந்தன. உதவியதுண்டு. பெரிய கோயில்களில் உலோகத்தில் இருக்கும்... சிறு கோயில்களில் சாமி வீதி உலாக்கு வாகனத்தில் இருக்கும் திருவாச்சி கார்ட் போர்டில் டிசைனுடன் வடிவமைச்சிருப்பாங்க...அதில் தங்க வர்ணம் பூசுவது இடையில் கண்ணாடிக் கற்கள் ஒட்டுவது...பூக்கள் ஒட்டுவது என்று....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
   //நீங்கள் எல்லோரும் கலந்து கொள்ள முடிந்தது மிகவும் மகிழ்வான விஷயம்.//
   மகனின் நண்பர் மூலமாக கலந்து கொள்ள முடிந்தது. இல்லையென்றால் வெகு தூரம் என்று அந்த கோவிலுக்கு போய் இருக்க மாட்டோம்.
   எல்லாம் அமுருகன் அருள்.
   //அலுவலக நேரம் முடிந்து வந்து மகனும் மருமகளும் திருவாச்சி செய்தது எவ்வளவு நல்ல விஷயம். மகனும் மருமகளும் ரொம்ப அழகா செஞ்சிருக்காங்க.//
   பொறுப்பை நம்மை நம்பி ஒருவர் ஒப்படைத்து இருக்கும் போது அதை சிறப்பாக செய்து கொடுக்க வேண்டும் என்ற கடமை உணர்ச்சி.
   பெயிண்ட் செய்யும் போது வீட்டுக்குள் இருந்து செய்தால் எங்களுக்கு சங்கடம் என்று குளிரில் வெளிபக்கம் தோட்டத்தில் செய்தான் மகன் அதனால் தொண்டை கட்டி ஜலதோஷ்ம பிடித்து கொண்டு ஒரு வாரம் மருந்துகள் எடுத்து கொண்டான். தைப்பூசம் அன்று குளிர் காற்று இல்லை, வெயில் அடித்து எல்லோரும் ஸ்வெட்டர் அணிந்து கொள்ளாமல் காவடி, பால் குடம் எடுக்க முருகன் அருள்புரிந்தார்.

   //எனக்கும் சிறு வயது நினைவுகள் வந்தன.//

   மகிழ்ச்சி.

   //உதவியதுண்டு. பெரிய கோயில்களில் உலோகத்தில் இருக்கும்...//
   பெரிய சின்ன கோவில்களில் பித்தளையில் , வெள்ளியில், தங்கத்தில் இருக்கும். வீதி உலா காலங்களில் அழகான வேலைபாடுகளுடன் நீங்கள் சொல்வது போல திருவாச்சி பின்னனியில் ஸ்வாமி உலா வரும்.

   உயர்தர கார்ட் போர்டில், தர்மகோல் வேலைப்பாடுகள் செய்து இருக்கிறான் மகன். கரும்பு வாங்க போன இடத்தில் வெள்லை மயில் தோகை வாங்கினான். அமேசானில் பச்சை மயில் தோகை வாங்கினான். எப்படியோ தனக்கு வேண்டியதை வாங்கி கொண்டார் முருகன்.
   நீக்கு
 10. நீங்கள் பெண்கள் பால்குடம், மகனும் பேரனும் காவடி தூக்கியது சிறப்பானது. அந்த ஊரிலும் எப்படி அழகா இதெல்லாம் கொண்டாடுறாங்க இல்லையா...அருமை கோமதிக்கா...அதுவும் உங்கள் மகன் மருமகள் பேரன் எல்லாம் கோயில் செயல்பாடுகளில் கலந்துகொண்டு என்று....அருமை கோமதிக்கா.

  படங்கள் அழகு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெண் குழந்தைகள், சிறியவர், பெரியவர்கள் என்று எல்லோரும் பால் குடம் எடுத்தார்கள் பெண் குழந்தைகளின் அம்மா குழந்தைகளிடமிருந்து இடை இடையே வாங்கி சுமந்து வந்தார்கள்.
   காவடி ஆடினார் கோவில் வாசல் முன்பு அதை முகநூலில் பகிர்ந்து இருக்கிறார்கள் சிலர். நானும் கலந்து கொண்டதால் நான் படங்கள் எடுக்க முடியவில்லை. நடனம், சுவாமிகளை படம் எடுத்தேன்.

   நீக்கு
 11. குட்டிச் செல்லங்கள் செம அழகு. அங்கு எப்படி வெளியில் குட்டிகள்? யாரேனும் வளர்க்கறாங்களா?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரிய நாய் கோவிலில் சுற்றி கொண்டு இருந்தது, யாரும் வளர்க்கிற மாதிரி தெரியவில்லை. பால் குடம் தூக்கி கொண்டு போகும் போது பார்த்தேன் தன் குட்டிகள் இரண்டை வாயால் கவ்வி கொண்டு போவதை. 4 குட்டிகள் இருந்தன. ஒரு குட்டியை எங்கோ கொண்டு வைத்து விட்டது.
   மற்ற மூன்று குட்டிகளும் பிள்ளைகளுடன் விளையாடி கொண்டு இருந்தன.

   நீக்கு
 12. பேரன் முருகன் பாடல் ஒரே இரவில் கற்றுக் கொண்டு பாடியது ஆஹா போட வைக்கிறது. பேரனுக்கு வாழ்த்துகள் கோமதிக்கா. உங்கள் ஜாடை இப்போதும் இன்னும் நன்றாகத் தெரிகிறது. கொஞ்சம் மாமா ஜாடையும். உங்கள் மகன் உங்கள் ஜாடை...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பேரன் முருகன் பாடல் ஒரே இரவில் கற்றுக் கொண்டு பாடியது ஆஹா போட வைக்கிறது.சின்ன பாடலாக நாங்கள் ஏதாவது முருகன் பாடல் சொல்லி தரலாம் என்றால் மறுத்து விட்டான்,ஜானகி அத்தை தான் சொல்லனும் எந்த பாடல் பாடுவது என்று சொல்லி விட்டான்.

   பாட்டு டீச்சரை அத்தை என்று தான் அழைப்பான். பெரிய பாட்டாக இருக்கே !ஓர் இரவுகுள் பயிற்சி செய்து விட முடியுமா என்று நினைத்த போது டீச்சர் நம்பிக்கையோடு கவின் பாடி விடுவான் என்றார்கள். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றி விட்டான்.

   //உங்கள் ஜாடை இப்போதும் இன்னும் நன்றாகத் தெரிகிறது. கொஞ்சம் மாமா ஜாடையும். உங்கள் மகன் உங்கள் ஜாடை...//
   ஓ! அப்படியா?மகன் சிறு வயது படம் பேரன் மாதிரிதான் இருக்கும்.
   உங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கு நன்றி கீதா.

   நீக்கு
 13. சிறப்பான கட்டுரை அழகான படங்கள். உண்மையில் வெளிநாடுகளில் இருக்கும் நம்மவர்கள் கோயில் காரியங்களை ஈடுபாட்டுடன் செய்கிறார்கள்.
   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார். வாழ்க வளமுடன்

   //சிறப்பான கட்டுரை அழகான படங்கள்.//

   நன்றி.


   //உண்மையில் வெளிநாடுகளில் இருக்கும் நம்மவர்கள் கோயில் காரியங்களை ஈடுபாட்டுடன் செய்கிறார்கள்.//

   ஆமாம். எல்லா கோவில்களிலும் அப்படி பார்க்க முடிகிறது.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 14. குமரன் திருவருள் துணையுடன்
  கோலாகலமான பதிவு...

  படங்கள் எல்லாம் அருமை..
  குன்றிருக்கும் இடத்தில் எல்லாம் குமரன் இருப்பான் என்பது போல நல்ல குணமிருக்கும் மனங்களிலும் குமரன் குடியிருக்கின்றான்..

  குகனுண்டு குறைவில்லை மனமே!..
  குகனுண்டு குறைவில்லை மனமே!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ , வாழ்க வளமுடன்

   //குமரன் திருவருள் துணையுடன்
   கோலாகலமான பதிவு...//
   நீங்கள் சொல்வது சரிதான். எல்லாம் குமரன் திருவருள்.

   //படங்கள் எல்லாம் அருமை..//
   நன்றி


   //குன்றிருக்கும் இடத்தில் எல்லாம் குமரன் இருப்பான் என்பது போல நல்ல குணமிருக்கும் மனங்களிலும் குமரன் குடியிருக்கின்றான்.//
   உண்மைதான்.
   //மயில் ஆடும் அழகை கண்டு மனம் ஆடி வருகுதப்பா, மனம் ஆடும் அழகை கண்டு மக்கள் கூட்டம் ஆடுதையா//

   //குகனுண்டு குறைவில்லை மனமே!..
   குகனுண்டு குறைவில்லை மனமே!//..

   குகனுண்டு . குறைவில்லைதான். அவன் பார்த்துக்குவான்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.   நீக்கு
 15. உங்கள் மகனின் திறமையும், பக்தியும், செய்நேர்த்தியும் முன்னரே அறிந்தது.  அதை அறிந்த அவர்களும் மகனிடம் அந்தப் பொறுப்பை தந்திருக்கிறார்கள்.  பேரனும் அதே வழியில் வருவது சிறப்பானது.  பாராட்டவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   //உங்கள் மகனின் திறமையும், பக்தியும், செய்நேர்த்தியும் முன்னரே அறிந்தது. அதை அறிந்த அவர்களும் மகனிடம் அந்தப் பொறுப்பை தந்திருக்கிறார்கள். //

   பொறுப்பை கொடுத்தால் அதை நன்றாக செய்ய வேண்டும் என்று நினைப்பான். நேரம் ஒதுக்க வேண்டும், வேலைகள் அதிகமாகிறது. சரியாக செய்ய வேண்டும் என்பதால் கவனம் அதில் தான் இருக்கும். உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

   நீக்கு
 16. திருவாச்சி மிக அழகாய் இருக்கிறது. காணொளியில் பார்க்கும்போது சக்கரம் சுழல்வது மிக அழகாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //திருவாச்சி மிக அழகாய் இருக்கிறது. காணொளியில் பார்க்கும்போது சக்கரம் சுழல்வது மிக அழகாக இருக்கிறது.//

   நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 17. எல்லோரும் இது மாதிரி கோவில் காரியங்களில் கலந்துகொள்ளவேண்டும் என்று நினைக்கும் அந்த காசாவில் குழு அங்கத்தினரையும் பாராட்ட வேண்டும்.  வெளிநாட்டில் இது மாதிரி ஒரு விழா அமைத்து இவ்வளவு பேர்களைக் கூட்டி சிறப்பான ஒரு விழா நடத்தியதற்கு பாராட்ட வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //எல்லோரும் இது மாதிரி கோவில் காரியங்களில் கலந்துகொள்ளவேண்டும் என்று நினைக்கும் அந்த காசாவில் குழு அங்கத்தினரையும் பாராட்ட வேண்டும். //

   ஆமாம், நிறைய பேர் இருக்கிறார்கள் இது போல கோவிலுக்கு தொண்டு செய்பவர்கள். ஒரு அரிசோனன் என்ற பேரில் பதிவுகளை முகநூலில் எழுதி வருகிறார் படித்து இருப்பீர்கள். அவரும் அவர் மனைவியும் அங்கு கோவில் காரியங்களில் கலந்து கொள்கிறார். அவரும் மகனின் நண்பர் குப்தாவும் கோவில் காரியங்களில் தொடர்ந்து ஈடுபட சொல்கிறார்கள். பாரட்ட வேண்டும் தான். தன்னார்வலர்களை.

   //வெளிநாட்டில் இது மாதிரி ஒரு விழா அமைத்து இவ்வளவு பேர்களைக் கூட்டி சிறப்பான ஒரு விழா நடத்தியதற்கு பாராட்ட வேண்டும்.//

   பாராட்டி வந்தேன். பாராட்டுவோம்.

   நீக்கு
 18. பேரனுக்கு எல்லா கலைகளும் கற்றுத் தருகிறீர்கள்.  ஒரே இரவில் முருகன் பாடலைப் பயின்று பாடி அசத்தியதற்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பேரனுக்கு எல்லா கலைகளும் கற்றுத் தருகிறீர்கள். ஒரே இரவில் முருகன் பாடலைப் பயின்று பாடி அசத்தியதற்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.//

   உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 19. வருவான் வடிவேலன் என்று ஒரு திரைப்படம்.. 1980 களில் வந்தது.. அதில் மலேஷியாவின் பத்துமலை, சிங்கப்பூர் நாடுகளின் தைப்பூச விழாக்களைக் காட்டுவார்கள்.. அந்தப் படத்தின் பாடல் ஒன்றின் வரிகளை கவியரசர் இப்படி எழுதியிருப்பார்..

  வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா - நல்ல
  வடிவேலன் துணை இல்லாமல்
  சிறக்கவில்லை முருகா!..
  - என்று..

  அருணகிரி நாதர் சொல்கின்றாரே..

  கந்தனை மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே!.. - என்று..

  இப்படியான தங்களுடன் நட்பில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது..

  முருகா போற்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா - நல்ல
   வடிவேலன் துணை இல்லாமல்
   சிறக்கவில்லை முருகா!..
   - என்று..//

   ஆமாம், வாழும் இடத்தில் இறைவனை நினைந்து அவர் பண்டிகைகளை எல்லாம் விடாமல் செய்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நகரத்தார் மக்கள் உடகார்ந்து சஷ்டி கவசம் பாடினார்கள். அன்னதான கமிட்டியில் சிறப்பாக தொண்டு செய்கிறார்கள் . மகனின் நண்பர் அன்னதான கமிட்டியில் உறுப்பினராக இருக்கிறார். சமையல் செய்வதில் உதவிகள் செய்வார்.

   //அருணகிரி நாதர் சொல்கின்றாரே..

   கந்தனை மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே!.. - என்று..//

   ஆமாம், நீங்கள் சொல்வது போல கந்தன் கருணைபுரியட்டும்.

   //இப்படியான தங்களுடன் நட்பில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது..

   முருகா போற்றி..//

   உங்களின் நட்பு எனக்கும் மகிழ்ச்சிதான். நல்லோர் நட்பு நாளும் வளரட்டும்.

   நீக்கு
 20. //வியப்புற்றுப் பெருமிதப்பட அரசு சார் இல்லையே என்றும் தோன்றியது//

  ஐயா அவர்கள் அறுமுகனின் அருகிருந்து அனைத்தையும் பார்த்து மகிழ்ந்திருப்பார்..

  சந்தேகமே வேண்டாம்.. சகுனம் இங்கே சொல்கின்றது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஐயா அவர்கள் அறுமுகனின் அருகிருந்து அனைத்தையும் பார்த்து மகிழ்ந்திருப்பார்..

   சந்தேகமே வேண்டாம்.. சகுனம் இங்கே சொல்கின்றது..//

   நீங்கள் சொல்வதை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
   இறைபக்தி உள்ள உங்களுக்கு மற்றவர்கள் நலனில் அக்கறை உள்ள உங்களுக்கு சகுனம் காட்டுவது மகிழ்ச்சிதான்.
   மீண்டும் வந்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 21. தைப்பூச விழாவை அருமையாகத் தொகுத்தளித்து இருக்கிறீர்கள். காணொளிகளும் கண்டேன். முருகரின் தலைக்குப் பின்னே ஒளிவட்டம் போல் சுழலும் திருவாச்சி சிறப்பு. மகனுக்கும் பாடலை ஒரே நாளில் கற்றுப் பாடி அசத்திய பேரனுக்கும் பாராட்டுகள். முருகன் அருளால் பால்குடம் எடுத்தத் தங்களுக்கும் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
   நலமா?

   //தைப்பூச விழாவை அருமையாகத் தொகுத்தளித்து இருக்கிறீர்கள். காணொளிகளும் கண்டேன். //

   நன்றி ராமலக்ஷ்மி.

   //முருகரின் தலைக்குப் பின்னே ஒளிவட்டம் போல் சுழலும் திருவாச்சி சிறப்பு. மகனுக்கும் பாடலை ஒரே நாளில் கற்றுப் பாடி அசத்திய பேரனுக்கும் பாராட்டுகள். முருகன் அருளால் பால்குடம் எடுத்தத் தங்களுக்கும் வாழ்த்துகள்!//

   அனைத்தையும் ரசித்து பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 22. மகன்செய்த அலங்காரம் மிகவும் அழகாக இருக்கிறது.

  காவடி, பால்குடம் என குடும்ப அங்கத்தினர்கள் அனைவரையும் முருகன் பங்குபெற வைத்துவிட்டான் அவனருளே எல்லாம்.
  படங்கள் அனைத்தும் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

   மகன்செய்த அலங்காரம் மிகவும் அழகாக இருக்கிறது.
   //
   நன்றி.

   //காவடி, பால்குடம் என குடும்ப அங்கத்தினர்கள் அனைவரையும் முருகன் பங்குபெற வைத்துவிட்டான் அவனருளே எல்லாம்.
   படங்கள் அனைத்தும் அழகு.//

   நீங்கள் சொல்வது போல அவன் அருள்தான். நாங்கள் கலந்து கொண்டது. குளிர் இல்லாமல் வெயில் அடித்தது மேலும் மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.   நீக்கு
 23. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை.படங்கள் அனைத்தும் எப்போதும் போல் அழகாக எடுத்துள்ளீர்கள். இந்தப்பதிவுக்கு நான் ஏதோ முடியாமையால், இல்லை வேலைகளின் குறுக்கீடால் வரவில்லை போலும் என நினைக்கிறேன்.

  தங்கள் மகனும், மருமகளும் முருகனுக்கு செய்த திருவாச்சி அலங்காரம் மிக நன்றாக உள்ளது. உங்கள் குடும்பத்தில் அனைவருமே இறைவனிடம் பக்தியோடு இருந்து இறைவனுக்கு சேவைகள் செய்வது. நல்ல கொடுப்பினை. காணும் போதே மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. இப்படி தெய்வ அருள் உள்ளவர்களோடு என்னையும் பழக வைத்த அந்த இறைவனுக்கு இந்த சமயத்தில் என் மனம் நிறைந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  தங்கள் பேரன் கவின் ஒரே இரவில் முருகன் மேல் அந்த பக்திப்பாடலை கற்றுக் கொண்டு பாடியது பாராட்டுக்குரியது. எல்லாமே இறைவனின் அருள்தான்.

  பால் குடங்கள் எடுத்து வரும் தங்கள, மற்றும் மருமகள், அவரின் அம்மா, வீபூதி காவடி எடுத்து வரும் தங்கள் மகன், பேரன் ஆகியோரை கண்டு நமஸ்கரித்து கொண்டேன்.
  காணொளிகளை பிறகு பார்க்கிறேன். நீங்கள் இன்று போட்டிருக்கும் பதிவின் வழியாக இங்கு முதலில் வந்து விட்டேன். எல்லோருக்கும் என் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவியுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா, ஹரிஹரன், வாழ்க வளமுடன்
   //பதிவு அருமை.படங்கள் அனைத்தும் எப்போதும் போல் அழகாக எடுத்துள்ளீர்கள். //

   நன்றி.

   //இந்தப்பதிவுக்கு நான் ஏதோ முடியாமையால், இல்லை வேலைகளின் குறுக்கீடால் வரவில்லை போலும் என நினைக்கிறேன்.//

   ஆமாம், அப்படித்தான் இருக்கும் இல்லையென்றால் வந்து விரிவான பின்னூட்டம் கொடுத்துவிடுவீர்கள்.

   தங்கள் மகனும், மருமகளும் முருகனுக்கு செய்த திருவாச்சி அலங்காரம் மிக நன்றாக உள்ளது.//
   நன்றி.

   //உங்கள் குடும்பத்தில் அனைவருமே இறைவனிடம் பக்தியோடு இருந்து இறைவனுக்கு சேவைகள் செய்வது. நல்ல கொடுப்பினை. //
   இறைபணி செய்ய வாய்ப்பு கொடுத்த இறைவனுக்கு நன்றி.   //காணும் போதே மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. இப்படி தெய்வ அருள் உள்ளவர்களோடு என்னையும் பழக வைத்த அந்த இறைவனுக்கு இந்த சமயத்தில் என் மனம் நிறைந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்//

   ஒத்த கருத்து உள்ள்வர்கள் தான் இணைந்து இருக்கிறோம், இறைபக்தி, அன்பு நிறைந்தவர் நீங்கள். நல்ல நட்பை கொடுத்தற்கு நன்றி சொல்வோம் இறைவனுக்கு.

   //எல்லோருக்கும் என் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவியுங்கள்.//

   உங்கள் வாழ்த்துக்களை, பாராட்டுக்களை தெரிவித்து விடுகிறேன்.

   பழைய பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.


   நீக்கு