புதன், 26 ஜூலை, 2023

அருள்மிகு வரசித்தி விநாயகர் கோவில்



இன்று எங்கள் குடியிருப்பு வளாகத்தில் சின்னதாக    கட்டப்பட்ட அருள்மிகு வரசித்தி விநாயகர் கோவிலின்  மண்டலபூஜை  இனிதாக நிறைவு பெற்றது. விநாயகருக்கு செய்யப்பட்ட  சந்தனக்காப்பு அலங்கார படங்களும், 46 வது நாள் சிறப்பாக நடந்த அபிஷேக, அலங்கார பூஜை படங்களும்  இந்த பதிவில் இடம்பெறுகிறது.

மீனாட்சி அம்மன் கோவிலில் வன்னிமரத்து பிள்ளையாருக்கு பூஜை செய்யும் குருக்கள் வந்து மிக அழகாய் அலங்காரம் செய்தார். இன்னொரு குருக்கள் அவரும் மீனாட்சி அம்மன் கோவிலில் பணிபுரிபவர்  அவர் பூஜை செய்தார்.



ஊருக்கு போய் வந்த பின் மகனுடன் மீனாட்சி அம்மன் கோவில் போய் வந்தேன் அப்புறம் எங்கும் போகவில்லை. கால்வலி அதிகமாக இருந்தது.  கோவிலுக்கு போக முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்படவில்லை  குடியிருப்பு விநாயகரை வணங்கி வருவதால்.




சங்கடஹர சதுர்த்திக்கு பக்கத்தில் இருக்கும் அய்யனார் கோவிலில் உள்ள விநாயகரை வணங்கி வருவேன். இப்போது எங்கள் வளாகத்தில் வந்து விட்டார். இங்கேயே வணங்கி கொண்டேன். சங்கடஹர சதுர்த்தி அன்று எல்லோரும் சேர்ந்து பாடினார்கள் மகிழ்ச்சியாக இருந்தது.




அருகபுல் அர்ச்சனை அதன் பின் தாமரை பூவால் அர்ச்சனை, அடுத்து பவளமல்லி பூக்களால் அர்ச்சனை






இன்று காலை கொடுத்த பிரசாதம். வளாக பொறுப்பில் இருக்கும் அன்பருக்கு இன்று பிறந்த நாள் அவர் அம்மா செய்து கொடுத்த தேங்காய் லட்டு,. குருக்கள் செய்து வந்த பிரசாதம் வெல்ல கொழுக்கட்டைகள்.


46 ஆம் நாள் கொடுக்கப்பட்ட பிரசாதம். அப்பம், வடை, புளியோதரை, சர்க்கரை பொங்கல்.



46 ஆம் நாள் காலை ஹோமம் நடைபெற்றது, அதன்பின்  விநாயகர் போற்றி பாராயணம், மற்றும் தேவார பாடல்களை ஓதுவார் பாடினார்.  அதன் பின்   சிறப்பு  அபிஷேகங்கள் நடந்து அலங்காரம் செய்யப்பட்டு பூஜை சிறப்பாக நடைபெற்றது.








 மதியம் சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெற்றது.





மாலையில் எல்லோரும் சேர்ந்து பாடல்கள் பாடி கூட்டு பிரார்த்தனை செய்தோம்.  மனதுக்கு நிறைவாக அந்த நாள் இருந்தது.

அக்கம் பக்கத்து மக்களிடம் பேச நேரம் இல்லாமல்  ஓடி கொண்டு இருந்தவர்கள்  மாலையில் ஒன்றாக  அமர்ந்து   கூட்டு பிரார்த்தனை செய்து ஒருவருடன் ஒருவர் பேசி கொண்டது மகிழ்ச்சி அளித்தது.

48 நாட்களும் உலக நன்மைக்காகவும் வளாக குடியிருப்போர் நன்மைக்காகவும்  வேண்டுதல் செய்தார்கள்.

நான் மகன் ஊரில் இருக்கும் போது கும்பாபிஷேகம் நடந்து இருக்கிறது.  மண்டலாபிஷேகம் பார்த்து விட்டேன்.  கும்பாபிஷேகம் நடந்த கோவிலை மண்டலாபிஷேகம்  முடிவதற்குள் பார்த்தால் நல்லது என்பார்கள் பார்த்து விட்டேன். (கும்பாபிஷேக பார்த்த  பலன் என்றார்கள்.)

அனைவரும் நலமாக இருக்க வரசித்தி விநாயகர் அருளவேண்டும். 

படங்கள் நான் எடுத்த படங்களும் , வரசித்தி விநாயகர்  வாட்சப்குழுவில் அனுப்பியதும் இடம்பெற்று இருக்கிறது.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------

24 கருத்துகள்:

  1. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    கோயில் தகவல்கள் சிறப்பு
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.//

      நன்றி.

      //கோயில் தகவல்கள் சிறப்பு
      வாழ்க வையகம்//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. சிறப்பான நிகழ்வை சிறந்த முறையில் படம் பிடித்திருக்கிறீர்கள்.  விநாயகர் அலங்காரம் மிக அருமை.  மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து குருக்கள் வந்து பூஜை புனஸ்காரங்கள் செய்து வைத்தது சிறப்பு.  பாரம்பரியமான கொழுக்கட்டை படைக்கவில்லையா?  போட்டோவில் காணோமே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //சிறப்பான நிகழ்வை சிறந்த முறையில் படம் பிடித்திருக்கிறீர்கள். விநாயகர் அலங்காரம் மிக அருமை. மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து குருக்கள் வந்து பூஜை புனஸ்காரங்கள் செய்து வைத்தது சிறப்பு.//

      ஆமாம், அனைத்தும் சிறப்பான முறையில் செய்து தந்தார்கள், மீனாட்சி அம்மன் கோவில் குருக்கள்கள் சேர்ந்து செய்தார்கள்.

      //பாரம்பரியமான கொழுக்கட்டை படைக்கவில்லையா? போட்டோவில் காணோமே...!//

      இந்த கொழுக்கட்டையும் பாரம்பரிய முறையில் செய்வதுதான் வெல்லத்தை பாகு காய்ச்சி பாசிபருப்பு, தேங்காய் வறுத்துப்போட்டு செய்யும் பிடி கொழுகட்டை. நீங்கள் மோதகம் இல்லை என்று சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. உங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. சிறிய கோவில், ஆனால் சிறப்பாக இருக்கிறது.

    படங்கள் அருமை. பளிச் என்று இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //சிறிய கோவில், ஆனால் சிறப்பாக இருக்கிறது.

      படங்கள் அருமை. பளிச் என்று இருக்கின்றன//

      இருக்கும் இடத்திற்கு ஏற்றார் போல சின்னதாக கட்டி விட்டார்கள். சிறப்பாக ஒவ்வொன்றும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

      நீக்கு
  4. நிறையபேர் வந்து மண்டலாபிஷேகம் செய்கிறார்களே.

    அன்னதானத்துக்குத் தனி இடமா இல்லை அசோசியேஷன் அறையா?

    வளாகத்தில் நிறையபேர் கலந்துகொண்டிருப்பது மகிழ்ச்சி. பிரசாத படங்களும் கண்ணைக் கவர்ந்தன. கொழுக்கட்டை..... பார்க்கவே யம்மி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நிறையபேர் வந்து மண்டலாபிஷேகம் செய்கிறார்களே.//

      ஆமாம், நிறைய பேர் வேத பாராயணம் செய்தார்கள்.

      //அன்னதானத்துக்குத் தனி இடமா இல்லை அசோசியேஷன் அறையா?//

      இது போல விழாக்கள் மற்றும் சந்திப்புகள் நடத்த அசோசியேஷ்ன் பொறுப்பில் இருக்கும் அறை. எங்கள் வீட்டு விழாக்களுக்கு எல்லம் சாப்பாடு அங்கு தான் வைத்து பரிமாறினோம்.

      //வளாகத்தில் நிறையபேர் கலந்துகொண்டிருப்பது மகிழ்ச்சி. பிரசாத படங்களும் கண்ணைக் கவர்ந்தன. கொழுக்கட்டை..... பார்க்கவே யம்மி//

      இன்னும் நிறைய பேர் கலந்து கொண்டார்கள் கீழே சமுக்காளாம் விரித்து அதில் அமர்ந்தார்கள் , அவர்களை படம் எடுக்கவில்லை.

      பிரசாதங்கள் நன்றாக இருந்தன. சங்கடஹரசதுர்த்திக்கு நிறைய பேர் அவர்கள் வீட்டில் பிரசாதங்கள் செய்து கொண்டு வந்தார்கள்.

      எல்லோருக்கும் பிள்ளையார் வளாகத்தில் வந்தது மகிழ்ச்சி.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. படங்கள் அழகு...

    தகவல்கள் அருமை அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //படங்கள் அழகு...

      தகவல்கள் அருமை அம்மா//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. முதல் படம் பிள்ளையார் மிக அழகு!!! மனதைக் கவர்கிறது அலங்காரம்!

    சின்ன கோயில்தான் இல்லையா..ஆனாலும் அழகு, கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  7. அர்ச்சனைப் பூக்களால் கணபதி பாதங்கள் நிறைந்து இருக்கிறார்!!!! ஆஹா அடுத்து பிரசாதம்.....ஸ்ஸ்ஸ்ஸ் என்று சொல்ல வைத்து ஈர்க்கிறது. எனக்கு எப்பவுமே கோயில் பிரசாதங்கள் மீது விருப்பம் உண்டு. கொஞ்சம்தான் ஆனால் அது தனி ருசியுடன் இருப்பது போலத் தோன்றும். இங்கு கொழுக்கட்டை கவர்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //அர்ச்சனைப் பூக்களால் கணபதி பாதங்கள் நிறைந்து இருக்கிறார்!!!!//

      பூக்கள் பக்தர்கள் வாங்கி குவிக்கிறார்கள். குருக்கள் இறைவனின் பாதத்தை நிறைக்கிறார்.

      //ஆஹா அடுத்து பிரசாதம்.....ஸ்ஸ்ஸ்ஸ் என்று சொல்ல வைத்து ஈர்க்கிறது. எனக்கு எப்பவுமே கோயில் பிரசாதங்கள் மீது விருப்பம் உண்டு. கொஞ்சம்தான் ஆனால் அது தனி ருசியுடன் இருப்பது போலத் தோன்றும். இங்கு கொழுக்கட்டை கவர்கிறது.//

      இறைவனுக்கு படைக்கப்பட்டு விட்டால் பிரசாதங்கள் தனி ருசி பெற்றுவிடும். சிறிது உண்டாலும் வயிறும், மனமும் நிறைந்து விடும்.

      நீக்கு
  8. ஓ தேங்காய் லட்டு!! அட! அடுத்த வரியை இப்பதான் வாசித்தேன் பிறந்த நாள் பிரசாதம்!!! என்று.

    ஆ அடுத்தபடம் புளியோதரை வடை, அப்பம், சர்க்கரைப் பொங்கல்!!!!

    சின்ன மண்டபம் போல அதில் பிள்ளையார் வீற்றிருப்பது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு.

    உங்க குடியிருப்பு வளாகத்துலயே இப்படி பொது அறை இருக்கிறதோ அன்னதானம் எல்லாம் பரிமாற?

    கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வுகள் எல்லாமே மகிழ்வான நிறைவான விஷயங்கள்,

    படங்கள் எல்லாம் ரொம்ப சூப்பர். தெளிவாக இருக்கின்றன கோமதிக்கா. விநாயகர் எல்லாரையும் மகிழ்வுடன் வைத்திருக்க பிரார்த்திப்போம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ தேங்காய் லட்டு!! அட! அடுத்த வரியை இப்பதான் வாசித்தேன் பிறந்த நாள் பிரசாதம்!!! என்று.//

      ஆமாம் அன்பரின் அம்மா செய்து கொடுத்த லட்டு, பிறந்தநாள் பிரசாதம்.'

      //ஆ அடுத்தபடம் புளியோதரை வடை, அப்பம், சர்க்கரைப் பொங்கல்!!!!//

      நன்றாக செய்து இருந்தார் குருக்கள்.

      //சின்ன மண்டபம் போல அதில் பிள்ளையார் வீற்றிருப்பது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு.//

      ஆமாம்.

      //உங்க குடியிருப்பு வளாகத்துலயே இப்படி பொது அறை இருக்கிறதோ அன்னதானம் எல்லாம் பரிமாற?//

      ஆமாம்.

      பாட்டு வகுப்பு, யோகா வகுப்பு மற்றும் நலசங்க மீட்டிங்க் எல்லாம் நடக்கும் இடம்.

      //கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வுகள் எல்லாமே மகிழ்வான நிறைவான விஷயங்கள்,//

      நிறைய பேரின் பாடும் திறமைகள் தெரிந்து கொள்ள முடிந்தது.

      //படங்கள் எல்லாம் ரொம்ப சூப்பர். தெளிவாக இருக்கின்றன கோமதிக்கா. விநாயகர் எல்லாரையும் மகிழ்வுடன் வைத்திருக்க பிரார்த்திப்போம்//

      ஆமாம். அதுதான் எல்லோர் பிரார்த்தனைகளும்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.


      நீக்கு
  9. தங்களது பதிவும் பதிவின் படங்களும் அழகு.. அருமை..

    அனைவரும் நலமாக வாழ வரசித்தி விநாயகர் அருள் பாலிக்க வேண்டும். 

    நலம் வாழ்க!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தங்களது பதிவும் பதிவின் படங்களும் அழகு.. அருமை..//

      நன்றி.



      //அனைவரும் நலமாக வாழ வரசித்தி விநாயகர் அருள் பாலிக்க வேண்டும்.

      நலம் வாழ்க!..//

      உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. பிள்ளையார் சந்தன காப்பு அலங்காரம் கண்களையும் மனதையும் கவர்கிறது. அனைவரும் நலமாக இருக்க வேண்டுமென என் இஷ்ட தெய்வமான பிள்ளையாரை பணிந்து வணங்கி பிரார்த்தித்துக் கொண்டேன்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து வந்த அர்ச்சகர் அலங்காரங்கள் செய்ததும் மண்டலாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி வைத்ததும் சிறப்பு. சந்தன காப்பு அலங்காரத்தை நன்றாக செய்துள்ளார்.

    கூட்டாக இணைந்து இந்த மாதிரி வளாகத்திற்குள்ளேயே கோவில் அமைப்பதும், விழாக்கள் எடுப்பதும் குடியிருப்போருக்கு நல்ல பலன்களை தரும். அதைப்பார்த்து ஒரு தெய்வீகமான பக்தி ஒவ்வொரு வீட்டிலுள்ள சிறுவர், சிறுமிகளுக்குள்ளும் பரவும். நல்ல செயல்.

    விழாவில் இடம் பெற்ற பிரசாதங்கள் அருமை. நானும் சிறிதளவு கண்களால் பிரசாதத்தை எடுத்துக் கொண்டேன். கோவில் கட்டியதும், விழாவை தொடர்ந்து செய்வதும் நல்ல முயற்சி. விழாவை சிறப்பித்து எடுத்து நடத்திய அனைவருக்கும் பாராட்டுக்கள். படங்கள் எடுத்து எங்களுக்கும் பகிர்ந்து பிள்ளையாரின் அருட்பார்வையை எங்கள் மேல் படர விட்ட தங்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. பகிர்வுக்கு என் அன்பான நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், , வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. பிள்ளையார் சந்தன காப்பு அலங்காரம் கண்களையும் மனதையும் கவர்கிறது. அனைவரும் நலமாக இருக்க வேண்டுமென என் இஷ்ட தெய்வமான பிள்ளையாரை பணிந்து வணங்கி பிரார்த்தித்துக் கொண்டேன்.//

      உங்கள் இஷ்ட தெயவத்திடம் பிரார்த்தித்து கொண்டது மகிழ்ச்சி.

      //மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து வந்த அர்ச்சகர் அலங்காரங்கள் செய்ததும் மண்டலாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி வைத்ததும் சிறப்பு. சந்தன காப்பு அலங்காரத்தை நன்றாக செய்துள்ளார்.//

      ஆமாம்.


      //கூட்டாக இணைந்து இந்த மாதிரி வளாகத்திற்குள்ளேயே கோவில் அமைப்பதும், விழாக்கள் எடுப்பதும் குடியிருப்போருக்கு நல்ல பலன்களை தரும். அதைப்பார்த்து ஒரு தெய்வீகமான பக்தி ஒவ்வொரு வீட்டிலுள்ள சிறுவர், சிறுமிகளுக்குள்ளும் பரவும். நல்ல செயல்.//

      ஆமாம். வளரும் குழந்தைகளுக்கு பக்தி அவசியம் தான். பள்ளி செல்லும் பிள்ளைகள் பிள்ளையாரை வணங்கி செல்கிறார்கள்.
      பெரியவர்கள் ஒருத்தருடன் பேச நேரம் கிடைக்கிறது.

      //விழாவில் இடம் பெற்ற பிரசாதங்கள் அருமை. நானும் சிறிதளவு கண்களால் பிரசாதத்தை எடுத்துக் கொண்டேன்.//

      நல்லது.

      //
      கோவில் கட்டியதும், விழாவை தொடர்ந்து செய்வதும் நல்ல முயற்சி. விழாவை சிறப்பித்து எடுத்து நடத்திய அனைவருக்கும் பாராட்டுக்கள். //

      கோவில் கட்டியவர்களுக்கும் , விழாவை சிறப்பாக நடத்துபவர்களுக்கு பாராட்டுக்கள் சொன்னது மகிழ்ச்சி. நானும் உங்களுடன் சேர்ந்து சொல்கிறேன், அவர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும்.

      //படங்கள் எடுத்து எங்களுக்கும் பகிர்ந்து பிள்ளையாரின் அருட்பார்வையை எங்கள் மேல் படர விட்ட தங்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. பகிர்வுக்கு என் அன்பான நன்றி சகோதரி.//

      பிள்ளையாரின் அருட்பார்வை நம் அனைவருக்கும் உண்டு.
      உங்கள் அன்பான விரிவான கருத்துக்கு நன்றி.



      நீக்கு
  11. // பாரம்பரியமான கொழுக்கட்டை?.. //

    பிள்ளையாருக்கு வெஜ் பிஸ்ஸா வைத்துக் கும்பிடும் காலமும் வரத்தான் போகின்றது..

    டப்பா நெய்யில் அக்கார அடிசில் செய்கின்ற காலம் இது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பிள்ளையாருக்கு வெஜ் பிஸ்ஸா வைத்துக் கும்பிடும் காலமும் வரத்தான் போகின்றது..

      டப்பா நெய்யில் அக்கார அடிசில் செய்கின்ற காலம் இது..//

      இறைவன் உள் அன்போடு எதை வைத்து அவருக்கு கும்பிட்டாலும்
      ஏற்றுக் கொள்வார், நம் அன்பைதான் பார்ப்பார்.
      கண்ணப்பர் அன்பை ஏற்று கொண்டவரின் பிள்ளை .
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. சந்தனக் காப்பு அலங்காரத்தில் விநாயகர் மிகுந்த அழகு.

    வளாகத்தில் கோவில் வைத்து சிறப்பாக வணக்கம் செய்வது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      வளாகத்தில் கோவில் இருப்பது சிறப்பாக இருக்கிறது. வயதானவ்ரகளுக்கு மிகவும் மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு