வியாழன், 6 ஜூலை, 2023

சிங்கப்பூரில் தரிசனம் செய்த கோவில்கள்



மகன் குடும்பத்துடன் நான்  ஜூன் 5 ம் தேதி அரிசோனாவிலிருந்து சிங்கப்பூர்  வந்தேன்.  அங்கு உறவினர்களை, நண்பர்களை சந்தித்தோம். மற்றும்  சில இடங்களையும் சுற்றிப்பார்த்தோம்,  முதலில் ஸ்ரீ தண்டாயுதபாணி  கோவில் போனோம். சில தினங்களுக்கு முன் திருக்குட நன்னீராட்டு நடைப்பெற்று  கோவில் புது பொலிவுடன் இருந்தது. கோவில் படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.  


புதுக்கோட்டை, இராமநாதபுரத்தை சேர்ந்த  நாட்டுக் கோட்டை செட்டியார்கள் 1859ல் கட்டி இருக்கிறார்கள். சிங்கப்பூர் டேங்க் ரோட்டில் அமைந்து இருக்கிறது இந்த அழகிய கோவில். 


முன்பு இருந்த கோவில் அமைப்பும் இப்போது உள்ள கோவில் அமைப்பும்  உள்ள படங்கள். 2009ல் தான் இப்போது இருப்பது போல் கோவில் அமைந்து இருக்கிறது.

முதலில் வேல் மட்டும் வைத்து வணங்கி இருக்கிறார்கள்.1820 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் குடியேறிய நகர சமூகத்தினரால் 1859 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோவில். பல மாற்றங்களை பெற்று இப்போது இருக்கும் அழகிய தோற்றத்தில் இருக்கிறது.

கலாச்சாரம், கட்டிடக்கலை, சமுதாய பணிகள் , மற்றும் பலவரலாற்று சான்றுகள்   கொண்டதாக இருப்பதால் இந்த கோவிலை  சிங்கப்பூர் அரசு தேசிய நினைவுச்சின்னமாக அறிவித்து இருக்கிறது.

வெளிப்பக்கம் சுவற்றில் திருக்கல்யாண சிலைகள் இருபக்கமும் அழகாய் இருக்கிறது.
என் கணவரின் தம்பி பெண் இந்த கோவில் போய் வரலாம் என அழைத்து  சென்றாள்.  கும்பாபிஷேகம் நடந்த கோவிலை  48 நாட்களுக்குள் பார்ப்பது சிறப்பு என்பதால் முதலில் முருகன் வழிபாடு.


எதிர்பக்கம் யாகசாலை அமைத்து இருந்து இருக்கிறார்கள்.
தோரண வாயில் அழகாய் இருக்கிறது

நல்ல உயரமான  அழகிய  முன் வாசல் கதவு
உள்ளே மிக அழகாய் வடிவு அமைக்கப்பட்டு இருக்கிறது. மேல் விதானம் அழகு . கோவிலின் விமானத்தைச் சுற்றியுள்ள 48 கண்ணாடி மாடங்களில் தெய்வச்சிற்பங்கள்  பொறிக்கப்பட்டு இருக்கிறது.

கண்ணாடி தடுப்புக்குள் தண்டாயுதபாணி

முருகன் சன்னதியின் வலபக்கம்  விநாயகரும், இடபக்கம் இடும்பனும் இருக்கிறார்கள்.

இடும்பன்

அருள்மிகு சுந்தரேஷ்வரர் சன்னதி தேவாரம் பாடினார் ஓதுவார்


பூஜை ஆகிறது. படங்கள் எடுக்க வேண்டாம என்று எங்கும் போடவில்லை, இருந்தாலும் கொஞ்சம் தூரத்திலிருந்து படங்கள் அலைபேசியில் எடுத்தேன். சுவாமி சன்னதி வெளியில் ஒருபக்கம் விநாயகர் , இன்னொரு பக்கம் முருகன் இருக்கிறார்கள்.


அருள்மிகு மீனாட்சி அம்மன்

அம்மனின் மூக்குத்தி விளக்கு ஒளியில்  பளிச்சென்று மின்னியது . அப்போது மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு பாடல் நினைவுக்கு வநதது. மதுரையில் இப்படி வெகு நேரம் அம்மனை பார்க்கமுடியவில்லையே ! என்ற ஆதங்கமும் மனதில் வந்து போனது.


இதற்கு முன் கும்பாபிஷேகம் நடந்த காட்சிகளை  வைத்து இருந்தார்கள். பணிகள் நடக்கும் படங்கள் இருந்தன.

அங்கு நடக்கும் விழாக்கள் பற்றிய விவரங்கள், நடந்தபோது எடுத்த படங்கள் காட்சிக்கு வைத்து இருந்தார்கள்.
ஆன்மீகம் மற்றும் சமூக சேவைகளும் இங்கு நடைபெறுகிறது.





வெள்ளித்தேர்


நடராஜர், சிவகாமி, நல்வர் உற்வச மூர்த்திகள் அலங்கரிக்க்கப்பட்டு இருந்தது.
திருமுறைக்கோவில் மைத்து இருந்தார்கள்.
உற்சவ முருகனுக்கு அழகான பூபந்தல்
பக்கத்தில் போய் படம் எடுக்க முடியாது தடுப்பு அமைத்து இருந்தார்கள்.

தூரத்திலிருந்து முருகனின் முகம் மட்டும். பக்கம் போனால் தான்  கம்பி தடுப்பு வழியாக முருகனை அழகாய் படம் எடுக்கலாம்.

ஆனந்த தாண்டவ நடராஜரும், சிவகாமி அம்மையும்  மாணிக்கவாசகர் சிற்பங்கள் அழகாய் இருக்கிறது. மண்டபத்தூண்களில் முருகனின் ஆறுபடை வீடுகள் சிலைகள் உள்ளன.


கண்ணாடி  கூண்டுக்குள் அழகான வெள்ளி மயில் வாகனம்
காவடி படங்கள் சுவரில் இருக்கிறது




பைரவர்
நவக்கிரகங்கள்

நாங்கள் போன இரண்டு நாட்களுக்கு முன் தான் திருக்குடநன்னீராட்டு நடந்து இருப்பதால்  மேலே குடங்கள் எடுத்து செல்ல படிகள் அமைத்து இருந்தது.



சுற்றுபிரகாரத்தில்  அன்னதான கூடம் இருந்தது அதன் அருகில்  தண்ணீர் சிந்தி இருப்பதால் அந்த நீரை அருந்தி கொண்டு இருந்த  புறா ஒன்று  நான் பேரனை படம் எடுக்கும் போது  சட்டென்று பறந்தது.

இன்னும் இரண்டு பயப்பட வில்லை.

அன்னதானசேமிப்பு  இடம்

காலை பூஜை முடிந்ததும்  நல்ல சூடாய் வெண்பொங்கல் பிரசாதம் இரண்டு தூக்கு வாளிகளில் கொண்டு வந்து வைத்தார்கள்.  நமக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு மூடி வைத்துவிட சொன்னார்கள்.

பிரசாதம் உண்டு சிறிது நேரம் அமர்ந்து முருகனை தியானம் செய்து வந்தோம். மன நிறைவான வழிபாடு. அடுத்து போன கோவில் அடுத்த பதிவில் பார்ப்போம்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!


----------------------------------------------------------------------------------------------

42 கருத்துகள்:

  1. செல்போன் என்றாலும் போட்டோக்கள் அழகாக வந்திருக்கின்றன.கொடுத்த விவரங்களும் சுருக்கமாக கட்சிதமாக உள்ளன.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெய்க்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //செல்போன் என்றாலும் போட்டோக்கள் அழகாக வந்திருக்கின்றன.//

      நன்றி.

      //கொடுத்த விவரங்களும் சுருக்கமாக கட்சிதமாக உள்ளன.//

      உங்கள் கருத்துக்கு நன்றி சார்.

      நீக்கு
    2. ஆப்பிள் ஐஃ போன் ஸ்ரீராம்.

      நீக்கு
  2. புகைப்படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது.

    சிங்கப்பூர் கோயில் படத்தை இப்போதுதான் பார்க்கிறேன்.

    கோயில் அழகாக இருக்கிறது ஆனால் தரையில் கண்ணாடி போல் ஜொலிப்பதுதான் பயமாக இருக்கிறது.

    அழகுக்காக ஆபத்தை தேடுவது சரியானது இல்லை இதை மக்கள் அனைவரும் உணரவேண்டும்.

    பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //புகைப்படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது.//

      நன்றி.

      //கோயில் அழகாக இருக்கிறது ஆனால் தரையில் கண்ணாடி போல் ஜொலிப்பதுதான் பயமாக இருக்கிறது.//
      ஆமாம், பயம் தான். கண்ணாடி போல ஜொலிக்கிறது தரை.

      //அழகுக்காக ஆபத்தை தேடுவது சரியானது இல்லை இதை மக்கள் அனைவரும் உணரவேண்டும்.//
      ஆமாம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      //அற்புதமான படங்கள்//

      உங்கள் கருத்துக்கு நன்றி தன்பாலன்.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரி

    நலமா? பதிவு அருமையாக உள்ளது. முதலிரண்டு படங்களில் சிங்கப்பூர் ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில் கோபுர படங்களை பார்த்து முருகனை தரிசித்துக் கொண்டேன். கோபுரங்கள் அழகாக இருக்கிறது.கோவிலைப் உருவவான விதம் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டேன்.

    எவ்வளவு பெரிய நிலைப் படிகளுடன் உயரமான வாசல்..அழகாக உள்ளது. .

    கோவிலின் உள் அமைப்பும், ஒவ்வொரு கடவுள்களின் அமைப்பும், மேல் விதான அழகு அமைப்பும் நன்றாக உள்ளது. உங்கள் அழகான படங்களின் மூலம் கோவில் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது என்பதை புரிந்து கொண்டேன். . நீங்களும் மிக அழகாக ஒவ்வொரு இடத்தையும் புகைப்படம் எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    நீங்கள் எடுத்த ஒரு படத்தில் முருகனின் தரிசனமும் நன்றாக தெரிகிறது. முருகனை மனப்பூர்வமாக வணங்கிக் கொண்டேன். அம்மன் மூக்குத்தி என்னமாக ஜொலிக்கிறது. நம் ஊரில் கன்னியாகுமரியம்மன் மூக்குத்தியும் இப்படித்தான் சுடர் விடும் இல்லையா..?

    உற்சவ முருகனின் பூபந்தல், வெள்ளித்தேர் மயில் வாகனம் படம் என அத்தனையும் அழகு. நல்ல விபரமாக படங்களுடன் எங்களையும் அழகு முருகனை தரிசிக்க வைத்து விட்டீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கம்லா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      நான் நலமாக இருக்கிறேன். உடல் நிலை சரியில்லாமல் இருந்தது, மருத்துவரிடம் சென்று வந்தேன்., இப்போது நலமாகி வருகிறேன்.

      //கோபுரங்கள் அழகாக இருக்கிறது.கோவிலைப் உருவவான விதம் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டேன்.//
      நம் நாட்டு மக்களால் உருவான கோவில் நமக்கு பெருமை.

      //உங்கள் அழகான படங்களின் மூலம் கோவில் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது என்பதை புரிந்து கொண்டேன். . நீங்களும் மிக அழகாக ஒவ்வொரு இடத்தையும் புகைப்படம் எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.//

      எல்லா கோவில்களும் மிக சுத்தமாக பராமரிக்க மக்களும் உதவுகிறார்கள்.

      உங்கள் பாராட்டுக்கு நன்றி.


      //நீங்கள் எடுத்த ஒரு படத்தில் முருகனின் தரிசனமும் நன்றாக தெரிகிறது. முருகனை மனப்பூர்வமாக வணங்கிக் கொண்டேன். அம்மன் மூக்குத்தி என்னமாக ஜொலிக்கிறது. நம் ஊரில் கன்னியாகுமரியம்மன் மூக்குத்தியும் இப்படித்தான் சுடர் விடும் இல்லையா..?//

      முருகன் தெரிவது மகிழ்ச்சி, அங்கு நேரே நின்று பக்கத்தில் எடுக்கலாம் ஆனால் பக்கத்தில் போகவில்லை.
      கன்னியா குமரியம்மன் மூக்குத்தி ஜொலிக்கும் தான். பார்த்து பல வருடம் ஆச்சு.

      //உற்சவ முருகனின் பூபந்தல், வெள்ளித்தேர் மயில் வாகனம் படம் என அத்தனையும் அழகு. நல்ல விபரமாக படங்களுடன் எங்களையும் அழகு முருகனை தரிசிக்க வைத்து விட்டீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      அத்தனை படங்களையும் ரசித்துப்பார்த்து விரிவான கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.

      நீக்கு
  5. பலவரலாற்று சான்றுகள் கொண்டதாக இருப்பதால் இந்த கோவிலை சிங்கப்பூர் அரசு தேசிய நினைவுச்சின்னமாக அறிவித்து இருக்கிறது.//

    அட! சிறப்பான விஷயம், கோமதிக்கா

    படங்கள் எல்லாம் அழகு. ஊர் என்ன சுத்தம் பாருங்க...கோயிலில் கூட உட்புறம் எல்லாம் சுத்தம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வலமுடன்

      //பலவரலாற்று சான்றுகள் கொண்டதாக இருப்பதால் இந்த கோவிலை சிங்கப்பூர் அரசு தேசிய நினைவுச்சின்னமாக அறிவித்து இருக்கிறது.//

      அட! சிறப்பான விஷயம், கோமதிக்கா//

      ஆமாம் கீதா.

      //படங்கள் எல்லாம் அழகு.//

      நன்றி.

      //ஊர் என்ன சுத்தம் பாருங்க...கோயிலில் கூட உட்புறம் எல்லாம் சுத்தம்.//

      ஆமாம், நன்றாக பராமரிக்கிறார்கள்.


      நீக்கு
  6. விவரங்களுடன் படங்கள் அழகு

    இலங்கை, சிங்கப்பூர் மலேசியா நாடுகளில் எல்லாம் முருகன் வழிபாடு நிறைய உண்டு.

    பேரனை எடுத்த ஃபோட்டோவில் புறா பறப்பது டக்கென்று கிடைத்தது அழகு....

    அட! பிரசாதம் வைத்துவிட்டு வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னது சூப்பர். அங்கெல்லாம் எல்லோரும் முண்டி அடித்து அள்ளி எடுத்துக்க மாட்டாங்க!!! நம்மூரில் இப்படி வைத்தால் என்ன ஆகும் என்று யோசிக்க வைத்தது.

    படங்கள் அருமை கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //விவரங்களுடன் படங்கள் அழகு

      இலங்கை, சிங்கப்பூர் மலேசியா நாடுகளில் எல்லாம் முருகன் வழிபாடு நிறைய உண்டு.//

      ஆமாம் கீதா முருகன் வழிபாடு நிறைய உண்டு.
      மலேசியா முருகனையும் பார்க்க அழைத்து சென்று விட்டான் மகன்.
      பத்துமலை முருகனையும் தரிசனம் செய்தேன்.

      //பேரனை எடுத்த ஃபோட்டோவில் புறா பறப்பது டக்கென்று கிடைத்தது அழகு..//

      ஆமாம், அதன் இறகுகள் வித்தியசமாக இருந்தது.

      //அட! பிரசாதம் வைத்துவிட்டு வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னது சூப்பர். அங்கெல்லாம் எல்லோரும் முண்டி அடித்து அள்ளி எடுத்துக்க மாட்டாங்க!!! நம்மூரில் இப்படி வைத்தால் என்ன ஆகும் என்று யோசிக்க வைத்தது.//

      பிரசாதம் எவ்வளவு எடுத்து கொள்ள வேண்டும் எல்லோருக்கும் வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்.

      புறாக்கள் கோவிலுக்குள் வருவதால் பிரசாதத்தை மூடி வைக்க சொல்கிறோம் என்று அன்பர் பணிவாக சொன்னார். அந்த பண்பும் மிகவும் பிடித்தது.

      //படங்கள் அருமை கோமதிக்கா//

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.


      நீக்கு
  7. புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் அழகு! வெள்ளி மயில்வாகனமும் தேரும் அத்தனை அழகாக இருக்கின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்

      //புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் அழகு! வெள்ளி மயில்வாகனமும் தேரும் அத்தனை அழகாக இருக்கின்றன!//

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்

      //அருமை
      படங்கள் அழகு//
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. புகைப்படங்கள் அனைத்தும் அழகு. தகவல்களும் சிறப்பு. தொடரட்டும் பயணமும் பதிவுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //புகைப்படங்கள் அனைத்தும் அழகு. தகவல்களும் சிறப்பு. தொடரட்டும் பயணமும் பதிவுகளும்.//

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  10. படங்களும் விளக்கங்களும் அருமை. பயணம் இனிதாக அமைந்திருக்குமென நம்புகிறேன். தொடர்ந்து பயணப்பதிவுகளைக் காணக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //படங்களும் விளக்கங்களும் அருமை. //

      நன்றி.


      //பயணம் இனிதாக அமைந்திருக்குமென நம்புகிறேன். தொடர்ந்து பயணப்பதிவுகளைக் காணக் காத்திருக்கிறேன்.//

      பயணம் இனிதாக அமைந்தது. உற்வுகளை, நட்புகளை, மற்றும் கோவில்கள் தரிசனம் மனதுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. இந்தப் பதிவு எப்படி என் கண்ணில் படாமல் போனது என்று தெரியவில்லை.  நீங்கள் சொன்ன உடன்தான் வந்து பார்க்கிறேன் அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //இந்தப் பதிவு எப்படி என் கண்ணில் படாமல் போனது என்று தெரியவில்லை. நீங்கள் சொன்ன உடன்தான் வந்து பார்க்கிறேன் அக்கா.//

      உங்கள் ப்ளாக்! எங்கள் விருப்பம் !! பகுதியில் என் தளம் காட்டவில்லை. பார்த்தேன்.

      நீக்கு
  12. முதலில் இருந்தது அதாவது 1950 களில் கோவில் போலவே இல்லை.  பத்தோடு பதோன்றாவது கட்டிடம் போல இருக்கிறது.  பின்னர்தான் கோவில் வடிவம் வந்திருக்கிறது போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முதலில் இருந்தது அதாவது 1950 களில் கோவில் போலவே இல்லை. பத்தோடு பதோன்றாவது கட்டிடம் போல இருக்கிறது. பின்னர்தான் கோவில் வடிவம் வந்திருக்கிறது போல...//

      முதலில் வேல் மட்டும் வைத்து வணங்கி இருக்கிறார்கள், சமுதாய கூடமாக இருந்து இருக்கிறது.
      2009ல் தான் இப்போது இருக்கும் கோவில் வடிவம் பெற்று இருக்கிறது.

      நீக்கு
  13. தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்திருப்பது நல்ல விஷயம். அங்கெல்லாம் 'அறநிலையத்துறை' இல்லை போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்திருப்பது நல்ல விஷயம். அங்கெல்லாம் 'அறநிலையத்துறை' இல்லை போல!//


      அடுத்து போன வீரமாகாளியம்மன் கோவிலும் தேசிய நினைவு சின்னமாக அறிவித்து இருக்கிறார்கள்.

      நீக்கு
  14. படங்கள் யாவும் அழகு. எதிர்பாராமல் அமைத்திருக்கும் புறா பறக்கும் படமும், கவின் கீழே நிற்பதும் அழகு. வெண்பொங்கல் புலிப்பான்கள் நிறத்தில் உள்ளது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படங்கள் யாவும் அழகு. எதிர்பாராமல் அமைத்திருக்கும் புறா பறக்கும் படமும், கவின் கீழே நிற்பதும் அழகு. //

      நன்றி.


      //வெண்பொங்கல் புலிப்பான்கள் நிறத்தில் உள்ளது!//

      புரியவில்லை, புலிப்பான்கள் நிறம் விளங்கவில்லை.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. ஓ! சரி சரி.
      நன்றி மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு.

      நீக்கு
  15. 81 டிசம்பர் முதல் 85 செப்டம்பர் வரை சிங்கப்பூரில் இருந்திருக்கின்றேன்.. இங்கே பதிவில் காட்டப்பட்டிருக்கும் கோயில்கள் இன்றைக்கு அநேக மாற்றம் அடைந்திருக்கலாம்..

    மனதில் என்றும் பசுமை மாறாதவை.. ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலும் பெருமாள் கோயிலும் வீரமா காளியம்மன் கோயிலும் இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கின்றன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //81 டிசம்பர் முதல் 85 செப்டம்பர் வரை சிங்கப்பூரில் இருந்திருக்கின்றேன்.. இங்கே பதிவில் காட்டப்பட்டிருக்கும் கோயில்கள் இன்றைக்கு அநேக மாற்றம் அடைந்திருக்கலாம்..//

      ஆமாம், மாற்றங்கள் படங்கள் போட்டு இருக்கிறேன்.

      //மனதில் என்றும் பசுமை மாறாதவை.. ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலும் பெருமாள் கோயிலும் வீரமா காளியம்மன் கோயிலும் இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கின்றன..//

      ஆமாம், அருமையான கோவில்கள். நினைவுகளில் இருப்பது மகிழ்ச்சி.

      நீக்கு
  16. அழகான படங்கள்..

    என் மனம் அலை பாய்கின்றது..

    நலமே வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான படங்கள்..//

      நன்றி.

      என் மனம் அலை பாய்கின்றது.//

      நினைவுகளில் அலைபாய்கிறதா ?

      நலமே வாழ்க..//

      உங்கள் கருத்துக்களூக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  17. கோவில் மிக மிக அழகாக இருக்கின்றன.

    படங்கள் மிகவும் அழகாக எடுத்திருக்கிறீர்கள். இந்தக் கோவிலுக்கு 2003ல் சென்ற நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //கோவில் மிக மிக அழகாக இருக்கின்றன.//

      அழகான கோவில்தான்.

      //படங்கள் மிகவும் அழகாக எடுத்திருக்கிறீர்கள். இந்தக் கோவிலுக்கு 2003ல் சென்ற நினைவு.//

      போய் இருப்பீர்கள். சிங்கப்பூரில் முக்கியமான கோவில்.

      நீக்கு
  18. புறா பறக்கும் படம் ரொம்ப அழகாக அமைந்துள்ளது.

    பிரசாதம் வெண்பொங்கல் போலத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //புறா பறக்கும் படம் ரொம்ப அழகாக அமைந்துள்ளது.//
      நன்றி.

      //பிரசாதம் வெண்பொங்கல் போலத் தெரியவில்லை.//
      வெண்பொங்கல் மிக ருசியாக இருந்தது. நல்ல சூடாய் இருந்தது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  19. தண்டாயுதபாணி கோவில் தரிசன படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு