வெள்ளி, 26 மே, 2023

அரிசோனா காகம்(கிரேட்-டெயில் கிராக்கிள்)GREAT-TAILED GRACKLE


"பிளாக்பேர்ட்" என்றும், "காகம்" அல்லது "ஜாக்டா"  என்று அழைக்கப்படும் பறவை அரிசோனாவில் மகன் வீட்டுத்தோட்டத்திற்கு வந்தது. அந்த பறவையின் படங்களும், காணொளியும் இந்த பதிவில் இடம் பெறுகிறது. வேறு இடங்களில் காகத்த படம் எடுத்தேன், அவைகளும் இடம்பெறுகிறது.







தந்திர பார்வை

அழகான கம்பீர நடை

கவின் பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி போய் இருந்தோம். அவன் பள்ளிக்கு எதிரில் உள்ள வீட்டின் உயர்ந்த மரத்தில் நின்றது இந்த பறவை.. காற்று வேகமாய் வீசியது அதில்  ஊஞ்சல் ஆடுவது போல நின்றது.

நமக்கு பயமாக இருந்தது மரம் கீழே சாய்வதும் மேலே போவதுமாக இருக்கும் போது  பயமில்லாமல் நின்றது.
வீட்டுத்தோட்டப்பகுதி , விவாசய பண்ணைகள், நகர பூங்காக்கள் இதற்கு பிடித்த இடமாம்.


இப்போது எடுத்த காணொளி

கிரேட்-டெயில் கிராக்கிள் (கிஸ்காலஸ் மெக்சிகனஸ்) என்பது ஒரு பெரிய ஐக்டெரிட் பிளாக்பேர்ட் ஆகும், இது வெறுமனே "பிளாக்பேர்ட்" என்றும், எப்போதாவது "காகம்" அல்லது "ஜாக்டா" என்றும் குறிப்பிடப்படுகிறது.  இதேபோல், மெக்ஸிகோவின் உண்மையான காகங்கள் இல்லாத பகுதிகளில் இது பெரும்பாலும் "குர்வோ" என்று அழைக்கப்படுகிறது.


 தென் பிராந்தியங்களில் டெக்சாஸ் மற்றும் அரிசோனாவில் இது பொதுவானது. இது பொதுவாக விவசாயப் பகுதிகள் மற்றும் புறநகர் சூழல்களில் காணப்படுகிறது, பழங்கள், விதைகள் மற்றும் முதுகெலும்பில்லாத விலங்குகளுக்கு உணவளிக்கிறது. இது பாம்புக்கு உணவு  அளிக்கும் படம் கூகுளில் பார்த்தேன்.


ஆண்கள் 43 செ.மீ (18 அங்குலங்கள்) வரை அடையும், வால் உட்பட கிட்டத்தட்ட உடலின் நீளம், 230 கிராம் எடையும், இறகுகளுக்கு ஊதா-நீல நிறப் பளபளப்புடன் ஜெட்-கருப்பு நிறமும் இருக்கும். பெண்கள் 33 செமீ (13 அங்குலங்கள்), 125 கிராம் எடையில் குறிப்பிடத்தக்க அளவு சிறியவர்கள், மற்றும் முக்கியமாக பழுப்பு-கருப்பு, வெளிர் பழுப்பு தொண்டை மற்றும் தொப்பையுடன் இருக்கும்.

இணையத்தில் இந்த பறவையை பற்றி படித்த செய்தி தொகுப்பு.  இணைய செய்திக்கு நன்றி.


கள்ளப்பார்வை பார்க்கிரது

மகன் வீட்டுமதிலுக்கு பக்கம் இருக்கும் மரத்தில் அமர்ந்து இருக்கும் போது எடுத்த படம்.

பெண் பறவை.


இந்த பறவைகள் நீரோடையை சுற்றி தான் இருக்குமாம். அது உண்மை என்று சொல்ல நான் முன்பு போட்ட பதிவிலிருந்து சில படங்கள் பழைய பதிவின் சுட்டியும் கொடுத்து இருக்கிறேன், போன முறை  வந்த போது மகன் அழைத்து சென்ற இடம்.  பூங்காவில் உள்ள  நீரோடையில் இந்த பறவைகளை பார்த்தேன். அப்போது எடுத்த படங்கள். பழைய பதிவை பார்க்க நேரமில்லாதவர்களுக்கு அந்த பதிவில் இருந்து  சில படங்களை  இதில் போட்டு இருக்கிறேன்.


ஆண் பறவை இதற்கு அழகிய பெரிய நீண்ட வால் பகுதி.



செவ்வாய், 22 ஜூன், 2021 ல் போட்ட பதிவில் உள்ள படம்.



கோடையிலே இளைப்பாறி என்ற பதிவில் ஒரு பூங்காவில் உள்ள  நீர் நிலையில்  இந்த பறவைகள் குளிப்பதையும்,   பாறை, மர நிழலில் அழகாய் நிற்பதையும் போட்டு இருந்தேன். நினைவு இல்லையென்றால் பார்க்கலாம், நினைவு இருந்தாலும் மீண்டும் பார்த்து ரசிக்கலாம். அழகான வாத்துக்களும் நீரில் இருக்கிறது.

//கோடையிலே இளைப்பாறி என்ற  வள்ளலார் திருவருட்பா  பாடல் பள்ளியில் மனப்பாடச் செய்யுள் நமக்கு .
 
இந்த பாட்டில் சொல்வது போல உலக வாழ்க்கையில்   உழலும் போதும்,  கோடை போன்ற துன்பம் ஏற்படும் போதும் நிழல் தரும் மரமாக , கனி தரும் மரமாக  இறைவன் இருக்கிறான்.  நமக்கு மட்டும் அல்ல எல்லா உயிர்களுக்கும்தான்.

கோடையிலே இளைப்பாற்றி கொள்ள சிறந்த இடமாக இருந்தது இந்த இடம். //

பழைய பதிவிலிருந்து  சிறிய பகிர்வு.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-----------------------------------------------------------------------------------------------

38 கருத்துகள்:

  1. காகங்கள் பற்றி ஒரு கவிதை எழுதி இருந்தேன்..  என் வீட்டு மொட்டை மாடியில் ஒருமுறை அமர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது பெருங்கூட்டமாய் காக்கைகள் வட்டமடித்து என்னை மிரட்டி உள்ளே அனுப்பின...  காக்கைகள் ராஜ்ஜியத்தில் கலவரம் என்று தொடங்கி ஒரு கவிதை எழுத உதவியது அது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //காகங்கள் பற்றி ஒரு கவிதை எழுதி இருந்தேன்.. என் வீட்டு மொட்டை மாடியில் ஒருமுறை அமர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது பெருங்கூட்டமாய் காக்கைகள் வட்டமடித்து என்னை மிரட்டி உள்ளே அனுப்பின... காக்கைகள் ராஜ்ஜியத்தில் கலவரம் என்று தொடங்கி ஒரு கவிதை எழுத உதவியது அது!//

      நீங்கள் போடும் பிஸ்கட் மற்ற்வைகளை தண்ணீரில் அலசி சாப்பிடும் என்று சொன்னதும் கவிதை எழுதியதும் சொன்னது நினைவு இருக்கிறது. காக்கை ராஜ்ஜியத்தில் முக்கிய முடிவு எடுக்கும் கூட்டம் போலும் அதனால் உங்களை விரட்டி விட்டது போலும்!.

      நீக்கு
  2. அசோகா மரம்தானே அது?  

    எந்த நொடியிலும்
    படபடத்து
    அடித்துப் பறக்க 
    சிறகுகள் இருக்கும்போது 
    ஆடும் மரத்தின்  
    உச்சியில் அமர 
    அதற்கென்ன பயம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அசோகா மரம்தானே அது?//

      இல்லை ஸ்ரீராம், கிறித்துமஸ் மரம்

      எந்த நொடியிலும்
      படபடத்து
      அடித்துப் பறக்க
      சிறகுகள் இருக்கும்போது
      ஆடும் மரத்தின்
      உச்சியில் அமர
      அதற்கென்ன பயம்!!//

      கிளை கீழே வரும் போது பற்றிக் கொண்ட கால் வழுக்கும் மீண்டும் மீண்டும் பற்றிக் கொள்ளும். அதுதான் நமக்கு பயம்.

      அதுதானே! அதற்கென்ன பயம்? சிறகுகள் இருக்கும் போது.
      கவிதை அருமை.

      நீக்கு
  3. காணொளி பார்த்தேன்.  ரசித்தேன். கூட்டுப்பார்வை என்ற வகையில் அதன் கண்கள் எந்தத் திக்கிலும் பார்க்கக் கூடியவை என்றாலும், சமயங்களில் கழுத்தைச் சாய்த்து பார்க்கும் கோணல் பார்வை அதன் ஸ்பெஷல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி பார்த்தேன். ரசித்தேன்//

      நன்றி.

      . //கூட்டுப்பார்வை என்ற வகையில் அதன் கண்கள் எந்தத் திக்கிலும் பார்க்கக் கூடியவை//

      ஆமாம்.

      //என்றாலும், சமயங்களில் கழுத்தைச் சாய்த்து பார்க்கும் கோணல் பார்வை அதன் ஸ்பெஷல்!//

      ஆமாம்.

      உங்கள் கருத்துக்களூக்கு நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      நல்ல பதிவு.. சிறப்பு..///
      நன்றி.

      நீக்கு
  5. // காக்கை சமயங்களில் கழுத்தைச் சாய்த்து பார்க்கும் கோணல் பார்வை.. //

    காகம் தலை சாய்த்துப் பார்ப்பதற்கு காரணம் - இந்திரனின் மகன் ஜெயந்தன் மோகம் கொண்டு காக வடிவாகி அன்னை சீதையின் - திரு மார்பில் தீண்டியதால் ராமபாணம் மாயக் காகத்தின் ஒரு கண்ணை சிதைத்தது..

    சுவாமிமலைத் திருப்புகழில் இதனை அருணகிரி நாதர் குறிப்பிட்டுள்ளார்..

    சுவாமிமலைக்குப் பக்கத்தில் தான் தற்போது இருக்கின்றேன்..

    காலையில் அந்தத் திருப்புகழைப் படித்துக் கொண்டிருந்தேன்..இப்போது கருத்துரையில்..

    முருகா.. முருகா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் கருத்துக்கு உங்களுக்கு இதிகாச நினைவும், திருப்புகழ் பாடலும் நினைவுக்கு வந்து விட்டதே நல்லது.

      சுவாமிமலைக்குப் பக்கத்தில் தான் தற்போது இருக்கின்றேன்..

      காலையில் அந்தத் திருப்புகழைப் படித்துக் கொண்டிருந்தேன்..இப்போது கருத்துரையில்..

      முருகா.. முருகா..//

      சுவாமிமலை தரிசனமும் செய்து வாருங்கள்.
      திருப்புகழ் படித்தது மகிழ்ச்சி.
      எல்லாம் முருகன் அருள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. பறவையைப் பற்றிய செய்திகள் ரொம்ப சுவாரசியம் அதுவும் பெண் பறவைக்குத் தொப்பை வேறு இருக்கும்னு !!!! அக்கா நீங்க போட்டிருக்கற பெண் பறவை நிறைய உடற்பயிற்சி செய்யும் போல!!! தொப்பையே இல்லையே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      /பறவையைப் பற்றிய செய்திகள் ரொம்ப சுவாரசியம் அதுவும் பெண் பறவைக்குத் தொப்பை வேறு இருக்கும்னு !!!! அக்கா நீங்க போட்டிருக்கற பெண் பறவை நிறைய உடற்பயிற்சி செய்யும் போல!!! தொப்பையே இல்லையே!!!//

      பெண் பறவையை பற்றிய செய்தி மிகவும் பழசு போல!
      இப்போது எல்லோரும் உடலின் மீது தனி கவனம் செலுத்தி வருவது தெரியாது போலூம்.

      கீதா மாதிரி உடற்பயிற்சி எல்லாம் செய்து தன் அழகை வனப்புடன் வைத்து இருக்கிறது. டைட் உணவு தான் எடுத்துக் கொள்கிறது.

      நீக்கு
  7. உங்கள் பழைய பதிவு நினைவு வந்துவிட்டது படங்களைப் பார்த்ததும். அதில் நீரில் நீந்தும் லிட்டில் க்ரெப்ஸ் எனப்படும் வாத்துகளும் இருந்த நினைவு அப்புறம் பெரிய கறுப்பு அன்னங்களும் என்று நினைவு...பெரிய ஓடை சுற்றி பூங்கா....

    காகத்தின் விரிந்த இறகு என்ன அழகு இல்லையா அக்கா...விரிச்சு பாருங்க என்னை பாருங்க என் அழகைப் பாருங்கன்னு....நீங்க என்னதான் புடவை விளம்பரத்தில் தலைப்பை அல்லதுகொசுவத்தை விரிச்சு காட்டினாலும் என் இறகு போல இப்படி அழகா விரியுமா!! என்று கேட்குது பாருங்க!!!

    இந்தக் காகம் பயிற்சி செய்யலை பாருங்க தொப்பை இருக்கு!

    அது சரி அந்த ஆண் பறவை வானத்தைப் பாத்து சொல்லுது....."இறைவா சுத்தி உள்ளதுங்க தண்ணில நீந்தி ஜாலியா அலப்பறை தாங்கல...வெயில் தாங்கலையே...நீஞ்ச முடியாட்டாலும் குளியல் போட்டுருவோம்"

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பழைய பதிவு நினைவு வந்துவிட்டது படங்களைப் பார்த்ததும். அதில் நீரில் நீந்தும் லிட்டில் க்ரெப்ஸ் எனப்படும் வாத்துகளும் இருந்த நினைவு அப்புறம் பெரிய கறுப்பு அன்னங்களும் என்று நினைவு...பெரிய ஓடை சுற்றி பூங்கா...//

      பழைய பதிவு நினைவுக்கு வந்து விட்டது அறிந்து மகிழ்ச்சி கீதா.
      .

      காகத்தின் விரிந்த இறகு என்ன அழகு இல்லையா அக்கா...விரிச்சு பாருங்க என்னை பாருங்க என் அழகைப் பாருங்கன்னு....நீங்க என்னதான் புடவை விளம்பரத்தில் தலைப்பை அல்லதுகொசுவத்தை விரிச்சு காட்டினாலும் என் இறகு போல இப்படி அழகா விரியுமா!! என்று கேட்குது பாருங்க!!!

      //காகத்தின் விரிந்த இறகு என்ன அழகு இல்லையா அக்கா...விரிச்சு பாருங்க என்னை பாருங்க என் அழகைப் பாருங்கன்னு....நீங்க என்னதான் புடவை விளம்பரத்தில் தலைப்பை அல்லதுகொசுவத்தை விரிச்சு காட்டினாலும் என் இறகு போல இப்படி அழகா விரியுமா!! என்று கேட்குது பாருங்க!!!//

      இந்த பறவை பற்றிய விவரங்கள் தேட பறவையின் படங்கள் பார்த்தால் நான் எடுத்த இந்த போஸ் போல நிறைய பேர் பகிர்ந்து இருக்கிறார்கள். இப்படி ஆடும் அழகு தோகையை விரித்து நிமிர்ந்து இருக்கும் படங்கள் போல நிறைய இருக்கும்.

      //இந்தக் காகம் பயிற்சி செய்யலை பாருங்க தொப்பை இருக்கு!//

      அதுதானே! ஆமாம்.

      //அது சரி அந்த ஆண் பறவை வானத்தைப் பாத்து சொல்லுது....."இறைவா சுத்தி உள்ளதுங்க தண்ணில நீந்தி ஜாலியா அலப்பறை தாங்கல...வெயில் தாங்கலையே...நீஞ்ச முடியாட்டாலும் குளியல் போட்டுருவோம்"//

      ஆமாம், குளியல் போடும் காட்சியும் பழைய பதிவில் இருக்கும் கீதா.
      காக்கா குளியல் இல்லை , ஆனந்த குளியல் செய்யும் பறவை இது.


      நீக்கு
  8. குளியல் காணொளியை மீண்டும் ரசித்தேன் கோமதிக்கா.

    பறவைகள் பார்க்க எப்பவுமே மகிழ்ச்சிதான். மனம் மிகவும் இலகுவாகும்!

    அனைத்தும் ரசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குளியல் காணொளியை மீண்டும் ரசித்தேன் கோமதிக்கா.

      பறவைகள் பார்க்க எப்பவுமே மகிழ்ச்சிதான். மனம் மிகவும் இலகுவாகும்!

      அனைத்தும் ரசித்தேன் கோமதிக்கா//

      குளியல் காட்சியை ரசித்தீர்களா? மகிழ்ச்சி.
      பறவைகள் மனதை இலகுவாக்குவது உண்மை.
      அனைத்தையும் ரசித்து கருத்துக்கள் வழங்கியதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. காக்கையின் படங்கள் அனைத்தும் மற்றைய தகவல்களும் நன்றாக உள்ளது. நம்மூர் காகங்களை விட இதன் வால் சற்று நீண்டுள்ளது பார்க்க அழகாக இருக்கிறது. காணொளியும் நன்றாக உள்ளது. அது தலை சாய்த்து ஒருபக்க பார்வையாக பார்ப்பதும் அழகுதான். சாபத்தினால் பெற்ற விளைவு என்பது புராணக்கதை. ஆனால் புத்திசாலிக்கு உதாரணமாகவும் இதை குறிப்பிடுகிறோம் அல்லவா?

    இங்கு இப்போது நாங்கள் உள்ள எங்கள் ஏரியாவில், காக்கைகள் குறைவு. கழுகுகளும் புறாக்ககளும் அதிகம். காகங்கள் நம் முன்னோர்கள் அம்சம் என்போம். அது சமயத்தில் எலிகள், முதலிய அசைவ பிராணிகளை உண்ணும் போது கொஞ்சம் அருவெறுப்பாக இருக்கும். என்ன செய்வது? இறைவன் படைப்பு அப்படி.. அததற்கு இத்தகைய உணவு என்பதை காட்டி நிர்ணயித்து விடுகிறான். பதிவு நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை.//

      நன்றி.

      //காக்கையின் படங்கள் அனைத்தும் மற்றைய தகவல்களும் நன்றாக உள்ளது. நம்மூர் காகங்களை விட இதன் வால் சற்று நீண்டுள்ளது பார்க்க அழகாக இருக்கிறது.//

      நம்மூர் காகம் உல்லை இது. அண்டம் காக்ககை உண்டு .
      உடல் பள பள என்று நல்ல குண்டாக இருக்கும்.

      //நன்றாக உள்ளது. அது தலை சாய்த்து ஒருபக்க பார்வையாக பார்ப்பதும் அழகுதான். சாபத்தினால் பெற்ற விளைவு என்பது புராணக்கதை. ஆனால் புத்திசாலிக்கு உதாரணமாகவும் இதை குறிப்பிடுகிறோம் அல்லவா?//
      ஆமாம், புராணகதௌ உண்டு.

      //இங்கு இப்போது நாங்கள் உள்ள எங்கள் ஏரியாவில், காக்கைகள் குறைவு. கழுகுகளும் புறாக்ககளும் அதிகம். //


      நெல்லைத்தமிழன் அவர்களும் சொன்னார்கள்.

      //காகங்கள் நம் முன்னோர்கள் அம்சம் என்போம்.//

      ஆமாம்.

      //அது சமயத்தில் எலிகள், முதலிய அசைவ பிராணிகளை உண்ணும் போது கொஞ்சம் அருவெறுப்பாக இருக்கும். என்ன செய்வது? இறைவன் படைப்பு அப்படி.. அததற்கு இத்தகைய உணவு என்பதை காட்டி நிர்ணயித்து விடுகிறான்.//

      ஆமாம், துப்புரவு தொழிலாளி அல்லவா? அது இல்லை என்றால் ஊர் ஊர் அசுத்தங்கள் நிறைந்து இருக்கும் சுத்தமாக இருக்காது.

      பதிவு நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. இது காகம் மாதிரியே தெரியலையே.... கருப்பு கலர் பெயிண்ட் அடிச்ச செம்போத்து, மைனாவுக்குப் பிறந்த குழந்தை மாதிரினா இருக்கு.

    காகம் கரையும் குரல் காணொளியில் கேட்டதுபோல் இல்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //இது காகம் மாதிரியே தெரியலையே.... கருப்பு கலர் பெயிண்ட் அடிச்ச செம்போத்து, மைனாவுக்குப் பிறந்த குழந்தை மாதிரினா இருக்கு.//

      செம்போத்துடன் உடன்படும், மைனாவுடன் ஒப்பிடுவது சரியில்லை.
      மைனா மாதிரி ஆனால் கறுப்பு வண்ண பறவை பின்னர் வரும்.

      //காகம் கரையும் குரல் காணொளியில் கேட்டதுபோல் இல்லையே//

      காகம் கரையவில்லையே! காணொளியில் வேறு பறவை சத்தம் கொடுக்கிறது. சுவாமி பாடல்தான் ஒலிக்கிறது.

      நீக்கு
  11. காகம் என்று சொன்னதும் காகாசுரன் நினைவும், சித்ரகூடத்தில் பாறையைப் பார்த்த நினைவும் வந்தது.

    இருந்தாலும் இது காகம் என்ற எண்ணம் எனக்குத் தோன்றவில்லை. லண்டன் டவரில் நான் பார்த்த அண்டங்காக்கை ரொம்பவே குண்டா இருந்தது. படம் ஒரு முறை பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காகம் என்று சொன்னதும் காகாசுரன் நினைவும், சித்ரகூடத்தில் பாறையைப் பார்த்த நினைவும் வந்தது.//
      சித்திரகூடம் நினைவுக்கு வந்து விட்டதே! உங்களுக்கும்.

      //இருந்தாலும் இது காகம் என்ற எண்ணம் எனக்குத் தோன்றவில்லை. லண்டன் டவரில் நான் பார்த்த அண்டங்காக்கை ரொம்பவே குண்டா இருந்தது. படம் ஒரு முறை பகிர்கிறேன்.//

      காகம் மாதிரி என்றுதான் சொல்கிரார்கள். காகம் இல்லை.
      இங்கும் குண்டு காக்கை உண்டு. அதன் படமும் போடுகிறேன்.

      அண்டங்காக்கை இங்கும் குண்டாக பள பள என்று நல்ல கறுப்பாக இருக்கும் அதன் சத்தம் நம் ஊர் காகம் தொண்டை கட்டி கொண்டு சத்தம் போடுவது போல இருக்கும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.



      நீக்கு
  12. ஆஹா அரிசோனாக் காகப்பிள்ளையோ இவர், தனி ஆளாக இருந்து இந்த லுக்கு விடுறார், பார்த்தால் கொத்திவிடும் போல இருக்கே...

    ஆனா எனக்கும் பார்த்தவுடன் நினைவுக்கு வந்த பறவை எங்கட ஊர்ச் செண்பகம் தான், சொண்டு வால் உடம்பு எல்லாமே இப்படித்தான் இருக்கும் கலர்தான் பிரவுண் கலந்தது, இதைத்தான் செம்போத்து எனச் சொல்லியிருக்கிறாரோ நெ தமிழன்??.

    மைனா குட்டிப்பறவை எல்லோ கோமதி அக்கா, இது பெரிய அண்டங்காகம் சைஸ்ல இருக்குது... ஏதோ உங்களுக்கு நல்ல சேதி கொண்டு வந்திருக்கிறது, செய்தியை எதிர்நோக்க மகிழ்ச்சியாக இருங்கோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்

      //ஆஹா அரிசோனாக் காகப்பிள்ளையோ இவர், தனி ஆளாக இருந்து இந்த லுக்கு விடுறார், பார்த்தால் கொத்திவிடும் போல இருக்கே...//

      தினம் தனியாக வருகிறார். சில சமயம் பெண் காகம் தனியாக வருகிறது.

      //ஆனா எனக்கும் பார்த்தவுடன் நினைவுக்கு வந்த பறவை எங்கட ஊர்ச் செண்பகம் தான், சொண்டு வால் உடம்பு எல்லாமே இப்படித்தான் இருக்கும் கலர்தான் பிரவுண் கலந்தது, இதைத்தான் செம்போத்து எனச் சொல்லியிருக்கிறாரோ நெ தமிழன்??//

      ஆமாம் அதிரா அதை தான் சொல்கிறார்.நானும் செம்போந்து என்கிற செண்பக பறவை பதிவு போட்டு இருக்கிறேன் .

      //இது காகம் மாதிரியே தெரியலையே.... கருப்பு கலர் பெயிண்ட் அடிச்ச செம்போத்து, மைனாவுக்குப் பிறந்த குழந்தை மாதிரினா இருக்கு.//

      மைனாவுக்கு பிறந்த குழந்தை போல இருக்கிறது என்று சொன்னது நெல்லைத்தமிழன். நான் இல்லை என்று சொல்லி இருக்கிறேன்.

      செம்போத்துடன் உடன்படும், மைனாவுடன் ஒப்பிடுவது சரியில்லை.
      மைனா மாதிரி ஆனால் கறுப்பு வண்ண பறவை பின்னர் வரும்.

      மைனா மாதிரி சிறு பறவை ஆனால் கறுப்பு வண்ணத்தில் இருக்கும் அதன் பதிவு பின்னர் வரும் என்று போட்டு இருக்கிறேன்.அ ட்லாண்டாவில் பார்த்தேன் மகள் வீட்டுத்தோட்டத்திற்கு வந்தது.அதை கறுப்பு மைனா என்கிறார்கள்.

      //பெரிய அண்டங்காகம் சைஸ்ல இருக்குது... ஏதோ உங்களுக்கு நல்ல சேதி கொண்டு வந்திருக்கிறது, செய்தியை எதிர்நோக்க மகிழ்ச்சியாக இருங்கோ...//

      உங்கள் வாய் சொல் பலிக்கட்டும். நல்ல செய்தி வரட்டும். இறைவன் அருளால் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.

      https://mathysblog.blogspot.com/2017/03/blog-post_58.html
      செம்போந்து (செண்பக பறவை) பதிவு. நேரம் இருந்தால் பாருங்கள்.





      நீக்கு
  13. //விவாசய பண்ணைகள், நகர பூங்காக்கள் இதற்கு பிடித்த இடமாம்.//

    ஓ அவருக்கு சின்ன இடங்களெல்லாம் பிடிக்காதாமோ? ஹா ஹா ஹா.. அழகாக ஊஞ்சலாடுறார்ர்..

    கார்டின் பூச்சிகளைப் பெறுக்கிச் சாப்பிடுறார் வீடியோவில், அப்போ இவரைத்தத்தெடுத்து வளர்த்திடுங்கோ கோமதி அக்கா, கார்டினுக்கு நல்லது:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அவருக்கு சின்ன இடங்களெல்லாம் பிடிக்காதாமோ? ஹா ஹா ஹா.. அழகாக ஊஞ்சலாடுறார்ர்..//

      ஆமாம், அந்த மரம் பறவைகளுக்கு பிடித்த மரம். சரமாக சரமாக காய் போல தொங்கும். இந்த சீஸனில் தான் வரும். எல்லா பறவைகளும் ஊஞ்சல் ஆடும்.

      //கார்டின் பூச்சிகளைப் பெறுக்கிச் சாப்பிடுறார் வீடியோவில், அப்போ இவரைத்தத்தெடுத்து வளர்த்திடுங்கோ கோமதி அக்கா, கார்டினுக்கு நல்லது:))//

      வளர்க்கலாம்தான்.

      நீக்கு
  14. //மற்றும் தொப்பையுடன் இருக்கும்.//

    ஹா ஹா ஹா இது ஆராக இருக்கும்??:).

    அந்த மகன் வீட்டுப் பக்கம் இருக்கும் மரம் ஒரு வித்தியாசமான மரமாக இருக்கே, அதைக் கொஞ்சம் அடுத்த போஸ்டில் எடுத்துப் போடுங்கோ கோமதி அக்கா, அது என்ன காய்களா தொங்குது??

    ஓ வாலை வச்சோ ஆண், பெண் அடையாளம் காணுறீங்க?.. யோசித்தேன் எப்படி என..

    பதிலளிநீக்கு
  15. ஹா ஹா ஹா இது ஆராக இருக்கும்??:).//

    அது யார் என்று தெரியவில்லையோ!

    //அந்த மகன் வீட்டுப் பக்கம் இருக்கும் மரம் ஒரு வித்தியாசமான மரமாக இருக்கே, அதைக் கொஞ்சம் அடுத்த போஸ்டில் எடுத்துப் போடுங்கோ கோமதி அக்கா, அது என்ன காய்களா தொங்குது??//

    நிறைய பறவைகள் அதில் நிற்கும் போது படம் போட்டு இருக்கிறேன்.
    இதை வீட்டுமதில் சுவர் வெளிபக்கம் இருக்கிறது.
    நம் ஊர் கருவேலம் மரம் மாதிரி ஆனால் முள் இருக்காது.
    அடுத்த பதிவில் போடுகிறேன்.

    //ஓ வாலை வச்சோ ஆண், பெண் அடையாளம் காணுறீங்க?.. யோசித்தேன் எப்படி என..//

    வால் மட்டும் உடலின் கலர் மாறுபடுகிறது. கூகுளில் தேடிதான் விவரம் போட்டு இருக்கிறேன் அதிரா.
    நீங்கள் இந்த பறவையை வளர்க்க விரும்பினால் விவரங்கள் கூகுளில் கொட்டி கிடக்கிறது படங்களுடன் செய்திகள் பாருங்கள். டெய்சிக்கு பிடிக்காது, தனக்கு போட்டியாக இன்னொரு ஜீவன் வருவது அதற்கு பிடிக்காது அல்லவா?

    உங்கள் கருத்துக்களூக்கு நன்றி.





    ஓ வாலை வச்சோ ஆண், பெண் அடையாளம் காணுறீங்க?.. யோசித்தேன் எப்படி என..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆ இவரை எல்லாம் வளர்க்க மாட்டேன், கிளிதான் விருப்பம் அது பேசுமெல்லோ, ஆனா நீங்க சொன்னதுபோல டெய்சிப்பிள்ளைக்கு ஜெலஸ் வந்திடும் ஹா ஹா ஹா

      நீக்கு
    2. உங்கள் தோட்டத்து செடிகளை பூச்சிகள் தின்பாதக சொன்னதால் இதை வளர்க்க சொன்னேன். அப்புறம் டெய்சிப்பிள்ளைக்கு ஜெலஸ் வந்துடும் அதனால் வேண்டாம்.
      உங்கள் மீள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  16. படங்கள் மிகவும் அருமை
    பறவைகளை அதிகம் நேசிக்கின்றீர்கள்.

    காணொளியில் பின்னணி பாடலிசை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் மிகவும் அருமை//

      நன்றி.
      //பறவைகளை அதிகம் நேசிக்கின்றீர்கள்.//

      சிறு வயது முதலே பறவைகளை பார்க்க பிடிக்கும். அவைகளை நேசிக்கவும் ஆரம்பித்து விட்டேன், அவைகள் எப்போதும் மனமகிழ்ச்சியை தருகிறது.

      //காணொளியில் பின்னணி பாடலிசை அருமை.//

      காலை பக்தி பாடல் தமிழ் வானொலி பாடலை கேட்டு கொண்டே காணொளி எடுத்தேன் காமிராவில்.
      நல்ல பாடலாக அமைந்து விட்டது.
      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.



      நீக்கு
  17. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //காணொளி, படங்கள் அருமை அம்மா..//.

      உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  18. பதில்கள்
    1. செய்தி தொகுப்பும் அருமை...//

      செய்தி தொகுப்பை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  19. பறவையை நேசிக்கும் உங்களின் பதிவு அருமை கடந்த வாரத்தில் பல ஆண்டுகளுக்கு அப்புறம் ஒரு காலை நேரத்தில் ஒரு காக்கையை கண்டேன் அதை போட்டோ எடுக்க நினைக்கும் நேரத்தில் பறந்து சென்றுவிட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மதுரைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //பறவையை நேசிக்கும் உங்களின் பதிவு அருமை//

      நன்றி.

      // கடந்த வாரத்தில் பல ஆண்டுகளுக்கு அப்புறம் ஒரு காலை நேரத்தில் ஒரு காக்கையை கண்டேன் அதை போட்டோ எடுக்க நினைக்கும் நேரத்தில் பறந்து சென்றுவிட்டது//

      அண்டங்காக்கை தானே! அதுதான் இந்த பக்கங்களில் இருக்கிறது. கழுகுக்கு இணையாக நல்ல உயரத்தில் பறக்கிறது.
      மகள் ஊரில், இங்கு சில இடங்களில் பார்க்கிறேன்.
      இந்த பறவை நம்மை பார்த்து பயப்படுவது இல்லை. அதனால் படம் எடுக்க முடிந்தது.

      உங்கள் கருத்துக்கு நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு