கறுப்பு மைனா என்று அழைக்கப்படும் இந்த பறவை அட்லாண்டாவில் மகள் வீட்டுத்தோட்டத்திற்கு வந்தது. போன மாதம் மகள் வீட்டில் இருந்த போது எடுத்த இந்த பறவையின் படங்கள் , மற்றும் காணொளி இந்த பதிவில் இடம்பெறுகிறது.
இந்த பறவைகள் ஐரோப்பா, ஆசியா, மற்றும் ஆப்பிரிக்காவில் வாழும் பறவை. சிறிய மற்றும் நடுத்தர அளவில் உள்ள பாஸரின் பறவைகள் இதன் உடலில் மினு மினு என்று வெள்ளையாக புள்ளிகள் தெரிவதால் இதை நட்சத்திர குஞ்சுகள் என்று சொல்கிறார்கள். நம் ஊர் மைனா போல உள்ளதால் இதை கறுப்பு மைனா என்றும் சொல்கிறார்கள்.
ஸ்டார்கிங்க்ஸ் ஸ்டர்னிடே குடும்பத்தை சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர பாஸரின் பறவைகள்.
இதன் கால்கள் நல்ல வலு உள்ளதாம். அதன் இறக்கைகள் வலுவானது. கூட்டமாக வாழும் பறவை இது. இவை பூச்சிகள், மற்றும் பழங்களை உணவாக உண்ணும். மக்கள் வாழும் வாழ்விடங்களில் திறந்த வெளியில் வாழும் பறவை இது.
அடர்ந்த தவரங்களை ஆய்வு செய்து தேடி மற்றவைகள்(மற்ற ஜீவராசிகள்) சேமித்த உணவுகளை தேடி சேமிப்பை உடைத்து உண்ணும் பறவை இது. அதனால் இதற்கு "ஓப்பன் - பில் ஆய்வு" என்று அழைக்கப்படுகிறது. அல்லது "ஜிர்கெல்ன்" என்ற ஜெர்மன் வார்த்தையால் குறிப்பிடப்படுகிறது.
ஆண், பெண் பறவைகளுக்கு அலகில் பழுப்பு, மஞ்சள் வித்தியாசம் தெரிகிறது.
இந்த பறவையின் இறகுகள் உலோகப் பளபளப்புடன் கருமை நிறம் கொண்டது. துளைகளில் கூடு கட்டி நீல, அல்லது வெள்ளை முட்டைகளை இடும். ஆசிய இனங்கள் பொதுவாக கொஞ்சம் பெரிதாக இருக்கும். கறுப்பு மைனா என்று அழைக்கப்படுகிறது.
ஆப்பிரிக்க இனமான லாம்ப்ரோடோர்னிஸின் வகைகள் இது.
நிறைய வகை இருக்கிறது. உடலில் பல நிறங்களில் இருக்கிறது. இளம் பச்சை, இளம் நீலத்தில் வெள்ளை புள்ளிகளுடன் அழகிய தோற்றத்தில் இருக்கிறது.
அட்லாண்டாவில் நான் எடுத்து இருக்கும் கறுப்பு பறவையை மட்டும் தான் பார்த்தேன். ஒரு நாள் கும்பலாக 10 பறவைகள் வந்தன. வீட்டுக்குள் போய் காமிராவை எடுத்து வருவதற்குள் பறந்து விட்டன.
புல்வெளிகள், பண்ணைகள் இவைதான் இவைகளுக்கு பிடித்த இடமாம். அடர்ந்த காடுகள் பிடிக்காதாம்.
படம் எடுப்பது மிகவும் சிரமாக இருந்தது, நடந்து கொண்டே கீழே குனிந்து தேடிக் கொண்டே போகிறது.
நிற்காமல் நடந்து கொண்டே இரை தேடியது அதனால் படங்கள் ஓரளவுதான் எடுக்க முடிந்தது. அதனால் காணொளி எடுத்து இருக்கிறேன், சின்ன காணொளிதான் பாருங்கள்.
கடைசியில் இந்த படம் மட்டும் கூகுள் படம் - கூகுளுக்கு நன்றி.
தலைநிமிர்ந்து இருப்பதால் இந்த படம் கூகுளில் எடுத்துப்போட்டு இருக்கிறேன்.
நான் எடுத்த பறவை படங்கள், காணொளி எல்லாம் இது மாதிரி இருக்கா என்று நீங்கள் சொல்லுங்கள்.
பறவையின் மேல் இருக்கும் நட்சத்திர புள்ளிகள் அழகு, பொருத்தமான பெயர்தான். காணொளி கண்டேன். தகவல்கள் சிறப்பு. புதிய பறவைகளை தொடர்ந்து அறியத் தருவதற்கு நன்றி.
//இவ்வளவு புள்ளி விபரங்கள் கூகுளில் தேடுகிறீர்களோ ?//
ஆமாம். இல்லையென்றால் எனக்கு எப்படித் தெரியும். பறவை ஆராய்ச்சியாளர்கள் அந்த பறவைகளை கஷ்டப்பட்டு அதன் வாழ்க்கை முறைகளை கவனித்து சேகரித்து போட்டவைகள் உதவுகிறது எனக்கு. நானும் அவற்றை கவனித்து உண்மை என்று உணர்ந்து வருகிறேன்.
அழகான பறவை. தகவல்கள் அனைத்துமே சிறப்பு. தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கும் பறவைகள், விலங்குகள் போன்றவற்றை படம் எடுப்பது கடினமான விஷயம் தான். நீங்கள் எடுத்திருக்கும் படங்கள் நன்றாகவே இருக்கின்றன.
புதிதான பறவைகள் குறித்த தகவல்களை தேடித் தேடி எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். தொடரட்டும் உங்கள் தேடல்.
//அழகான பறவை. தகவல்கள் அனைத்துமே சிறப்பு. தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கும் பறவைகள், விலங்குகள் போன்றவற்றை படம் எடுப்பது கடினமான விஷயம் தான். நீங்கள் எடுத்திருக்கும் படங்கள் நன்றாகவே இருக்கின்றன.//
ஆமாம், நிற்கும் பறவையை எடுப்பது எளிதாக இருக்கிறது. நகருவதை எடுப்பது கஷ்டமாக இருக்கிறது. படங்கள் நன்றாக இருப்பதாக சொன்னதற்கு நன்றி.
//புதிதான பறவைகள் குறித்த தகவல்களை தேடித் தேடி எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். தொடரட்டும் உங்கள் தேடல்.//
புதிதாக எடுக்கும் பறவைகள் பேர் தெரிந்து கொள்ள கூகுளில் பார்க்கிறேன். தேடல் நன்றாக இருக்கிறது. உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி வெங்கட்.
பதிவு அருமையாக உள்ளது. கறுப்பு மைனா படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது.மிகவும் பொறுமையாக அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு படங்களையும் எடுத்துள்ளீர்கள். பாட்டுக்கள்.
நீங்கள் எடுத்த படங்களிலும் அதன் உடம்பு முழுக்க நட்சத்திர புள்ளிகள் தெரிகின்றன. மைனாவே வேகவேகமாக நடை போடும் பறவைதான். அதன் செயல்களும் விருட்டென்று பறக்கும் திறனும் ஒரு வித வேகத்தை காட்டும். காணொளியும் பார்த்தேன். உணவை தேடும் போது அதிலும் ஒரு வேகம் தெரிகிறது
பிற பறவைகளின் உணவை திருடி தின்னச் சொல்லி இதற்கு யார் சொல்லித் தந்தாரோ ? இறைவன் படைப்பில் ஒரு பறவையின் அதன் தன்மைகள், உடல்வாகுகள் மாறுவதைப் போன்று உழைக்காமல் சாப்பிடும் பழக்கத்தையும் அது இயல்பாகவே பெற்று விட்டதென நினைக்கிறேன்.
தங்கள் தயவால் விதவிதமான பறவைகளையும், அதன் பெயர்கள், செயல்பாடுகள் என அறிய முடிக்கிறது. உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
இந்த கறுப்பு மைனாவை பற்றி அறியாத தகவல்களை சேகரித்து தந்தமைக்கும் தங்களுக்கு மிக்க நன்றி. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
//பதிவு அருமையாக உள்ளது. கறுப்பு மைனா படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது.மிகவும் பொறுமையாக அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு படங்களையும் எடுத்துள்ளீர்கள். பாட்டுக்கள்.//
உங்கள் பாராட்டுக்கு நன்றி.
//நீங்கள் எடுத்த படங்களிலும் அதன் உடம்பு முழுக்க நட்சத்திர புள்ளிகள் தெரிகின்றன. மைனாவே வேகவேகமாக நடை போடும் பறவைதான். அதன் செயல்களும் விருட்டென்று பறக்கும் திறனும் ஒரு வித வேகத்தை காட்டும். காணொளியும் பார்த்தேன். உணவை தேடும் போது அதிலும் ஒரு வேகம் தெரிகிறது//
ஆமாம். எல்லாம் வேகம் வேகம் தான். கும்பலாக வந்தால் இன்னும் வேகமாய் போய் விடுகிறது. ஒற்றையாக வந்தபோது கொஞ்சம் நின்றது. காணொளி பார்த்தது மகிழ்ச்சி.
//பிற பறவைகளின் உணவை திருடி தின்னச் சொல்லி இதற்கு யார் சொல்லித் தந்தாரோ ? இறைவன் படைப்பில் ஒரு பறவையின் அதன் தன்மைகள், உடல்வாகுகள் மாறுவதைப் போன்று உழைக்காமல் சாப்பிடும் பழக்கத்தையும் அது இயல்பாகவே பெற்று விட்டதென நினைக்கிறேன்.//
ஒவ்வொன்றுக்கும் ஒரு அறிவை இறைவன் தான் கொடுக்கிறான் இதற்கு இந்த அறிவை கடவுள் கொடுத்து இருக்கிறான். அடுத்தவர் சேமித்த உணவை தேடி திரிந்து தானே உண்ணுகிறது.
//தங்கள் தயவால் விதவிதமான பறவைகளையும், அதன் பெயர்கள், செயல்பாடுகள் என அறிய முடிக்கிறது. உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்.//
தோட்டத்திற்கு வருவதை போகும் இடங்களில் பார்க்கும் பறவைகளை எடுக்கிறேன். நமக்கு பறவைகளை ஆராய்பவர்கள் பறவைகளை பலகாலம் கவனித்து சேகரித்து தந்த விஷயங்களை நோகாமல் படித்து எடுத்து கொடுக்கிறேன் அவ்வளவுதான். உங்கள் மனநிறைந்த வாழ்த்துகள், பாராட்டுக்கள் அவர்களுக்கும் போய் சேர வேண்டும்.
//இந்த கறுப்பு மைனாவை பற்றி அறியாத தகவல்களை சேகரித்து தந்தமைக்கும் தங்களுக்கு மிக்க நன்றி. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
கோம்திக்கா என்ன பள பளன்னு இருக்கு. அதன் உடலில் குறிப்பாக இறக்கைகளின் மீது புள்ளிகள் இருப்பது மிக அழகாக இருக்கிறது. கறுப்பு மைனா பற்றிய தகவல்கள் மிகச் சிறப்பு.
//கோம்திக்கா என்ன பள பளன்னு இருக்கு. அதன் உடலில் குறிப்பாக இறக்கைகளின் மீது புள்ளிகள் இருப்பது மிக அழகாக இருக்கிறது. கறுப்பு மைனா பற்றிய தகவல்கள் மிகச் சிறப்பு.//
ஆமாம் கீதா, இணையத்தில் இந்த பறவையை தேடும் போது மிக அழகான படங்கள் கிடைத்தது. பல வண்னங்களில் அதன் முதுகு, இறக்கை எல்லாம் இருக்கிறது. அழகிய பறவை.
//அலகு நம்ம மைனாவை விட கொஞ்சம் நீளமாக இருக்கோ?// இல்லை அதே அளவுதான். கண் தான் மைனா கண் போல இல்லை. கண் இருப்பதே தெரியவில்லை.
காணொளி ரசித்துப் பார்த்தேன்! ;என்ன வேகம்! சுறு சுறுப்பாக நடந்துகொண்டே உண்கிறது. இப்படி நடந்துகொண்டே இருந்தால் எப்படி எடுப்பதாம்!! ஹாஹாஹா எங்க அக்காவுக்கு அது போஸ் கொடுக்கவே மாட்டேங்குது!!! நான் அதனிடம் கொஞ்சம் சொல்லி வைக்கிறேன்!!! அக்காவைக் கஷ்டப்படுத்தாம போஸ் கொடு அடுத்த முறை வரப்பன்னு...!!!
கஷ்டப்பட்டு எடுத்திருக்கீங்க தெரியுது....படங்கள் எல்லாமே நன்றாக வந்திருக்கு கோமதிக்கா.
காணொளி ரசித்துப் பார்த்தேன்! ;என்ன வேகம்! சுறு சுறுப்பாக நடந்துகொண்டே உண்கிறது. இப்படி நடந்துகொண்டே இருந்தால் எப்படி எடுப்பதாம்!!//
ஆமாம், கீதா சுறு சுறுப்பு நடந்து கொண்டே உண்கிறது. நடந்து கொண்டு சாப்பிடதே! என்று அம்மா சொல்வது போல சொல்ல தோன்றும்.
//ஹாஹாஹா எங்க அக்காவுக்கு அது போஸ் கொடுக்கவே மாட்டேங்குது!!! நான் அதனிடம் கொஞ்சம் சொல்லி வைக்கிறேன்!!! அக்காவைக் கஷ்டப்படுத்தாம போஸ் கொடு அடுத்த முறை வரப்பன்னு...!!!//
சொல்லுங்க கீதா, நீங்கள் சொன்னால் கேட்கும்.
//கஷ்டப்பட்டு எடுத்திருக்கீங்க தெரியுது....படங்கள் எல்லாமே நன்றாக வந்திருக்கு கோமதிக்கா.
//ஆவ்வ்வ் இதேதான் கோமதி அக்கா, ஒரு குட்டி அசைவு தெரிஞ்சாலும் பறந்திடுகின்றன கர்ர்ர்ர்ர்ர்:)), நானும் பலதடவை முயற்சித்துத் தோற்றுவிட்டேன், அதிலும் டெய்சி எப்பவும் என்னோடுதான் ஒட்டியபடி சுத்துவா, அதனால அவவின் உருவம் தெரிஞ்சாலே அலறிக்கொண்டு பறந்திடுவார்கள்.//
ஆஹா ! கூட்டமாக வரும் போது பார்க்க அழகாய் இருக்குமே! டெய்சியிடம் சொல்லி வையுங்க . "கோமதி அக்கா கும்பலாக வரும் பறவை கூட்டத்தை போட்டோ எடுத்து போட சொன்னா, அதனால் என்னுடன் வராமல் கொஞ்சம் வீட்டுக்குள் இரு படம் எடுத்தபின் வரலாம்" என்று.
நான் இவை புலுணிகள் எனத்தான் நினைத்தேன், இவைதான் வெளிநாட்டு மைனாக்களோ, எங்களிடமும் கூட்டமாக வரும்... புழுக்கள் பூச்சிகளை மட்டும் பெறுக்கும், அதனால கார்டின் சுத்தமாக்கும் இனம் இவை... உணவு போட்டால் விரும்புகிறார்கள் இல்லை, அசைவம் உண்ணிகளாக இருப்பினமோ என்னமோ...
//நான் இவை புலுணிகள் எனத்தான் நினைத்தேன், இவைதான் வெளிநாட்டு மைனாக்களோ, எங்களிடமும் கூட்டமாக வரும்... புழுக்கள் பூச்சிகளை மட்டும் பெறுக்கும், அதனால கார்டின் சுத்தமாக்கும் இனம் இவை... உணவு போட்டால் விரும்புகிறார்கள் இல்லை, அசைவம் உண்ணிகளாக இருப்பினமோ என்னமோ..//
இவை மற்றவைகள் சேகரித்து வைத்து இருக்கும் உணவை கண்டுபிடித்து உண்ணும் வழக்கம் உள்ளதால் நாம் உணவு கொடுத்தால் பிடிக்காது போலும்.
தோட்டத்தை சுத்தம் செய்யுமோ ! அப்ப நல்லது. புழு, பூச்சிகளை ஒரே இடத்தில் சேகரித்து மண்ணைப்போட்டு மூடும் பழக்கம் சில பறவைகளுக்கு இருக்கிறது, அதை தேடி தின்னும் இந்த பறவை.
இணையத்தில் ஆண், பெண் வித்தியாசம் சொல்கிறார்கள் அதை வைத்துதான் சொல்கிறேன். இந்த ஒரு பறவைக்கு அலகில் மஞ்சள் வண்ணம் இல்லை பாருங்கள். . தொண்டை குழியில் அலகில் வித்தியாசம் இருக்குமாம். ஆண், பெண் பறவைகளுக்கு. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
பாட்டு கேட்கிறதே அதிரா. பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த பாட்ல் கேட்குமே!பின்னனி இசை நானாக சேர்க்கவில்லை, ஊஞ்சலில் அமர்ந்து பறவைகளை பார்த்து படம், காணொளி எடுக்கும் போது வானொலி பாட்டு கேட்ப்பேன். அப்படி நான் கேட்டு கொண்டுஇருக்கும் போது உள்ள பாடல் பின்னனியில் ஓடும். உங்களை போல பாடல் சேர்க்க கற்றுக் கொள்ள வேண்டும். விரைவில் பாடலுடன் காணொளி எதிர்பாருங்கள் அதிரா.
உங்களிடம் கறுப்பு மைனா படம் எடுத்து இருக்கிறேன். அடுத்த பதிவாக வரும் என்று சொல்லி இருந்தேன். போட்டு விட்டேன் பதிவு.
//எப்போதுமே மைனா ஒற்றையாக இருக்காது. சில நேரங்களில் நான் 20-25 மைனாக்களையும் இங்கு பார்ப்பேன்.// ஒற்றை மைனா பார்ப்பதும் நல்லது இல்லை என்பார்கள் பள்ளியில் படிக்கும் போது.
பெரும்பாலும் கூட்டமாய் தான் மைனாக்கள் வரும் . சில நேரம் இரண்டு அல்லது ஒன்றாய் வரும்.
//காணொளியில் அதன் சுறுசுறுப்பு தெரிகிறது.// நம்க்கு அதன் வேக நடை பார்த்து தலைசுற்றும்.
//பறவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தால் (ஏன் அணிலையும்தான்) நேரம் போவதே தெரியாது.//
ஆமாம், மகன், மகள் வீட்டில் வித விதமான பறவைகளை,அ ணில்களை பார்த்து கொண்டு இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பொழுதும் போகிறது.
இனிமேல் வீட்டை விட்டு வெளியே வரும் போதே கேமிராவை ஆன் செய்து கொண்டே வாருங்கள் அதன் பின் உங்கள் கேமொராவின் பார்வையில் இருந்து ஏதும் தப்பாது உங்களுக்கு பறவையிம் மீது இருக்கும் ஆர்வத்தை பார்க்கும் போது நீங்கள் எல்லா பறவைகளையும் பற்றி தமிழில் ஒரு புத்தகம் எழுதி வெளியிடலாம் அது மின்னூலாக கூட இருக்கலாம்
//இனிமேல் வீட்டை விட்டு வெளியே வரும் போதே கேமிராவை ஆன் செய்து கொண்டே வாருங்கள் அதன் பின் உங்கள் கேமொராவின் பார்வையில் இருந்து ஏதும் தப்பாது //
தோட்டத்தில் நானும் பேரனும் நிற்கும் போது ஏதாவது பறவையை பார்த்து விட்டால் நான் காமிரா எடுத்து வந்து இருக்காலம் என்பேன். பேரன் "எப்போதும் காமிராவை கையில் வைத்து கொண்டு வெளியே வாங்க ஆச்சி என்பான்."
//உங்களுக்கு பறவையிம் மீது இருக்கும் ஆர்வத்தை பார்க்கும் போது நீங்கள் எல்லா பறவைகளையும் பற்றி தமிழில் ஒரு புத்தகம் எழுதி வெளியிடலாம் அது மின்னூலாக கூட இருக்கலாம்//
ஆஹா! மின்னூலா! பறவை மேலே ஆசை இருக்கு ஆனால் இன்னும் படம் நன்றாக எடுக்கவும், காணொளி நன்றாக எடுக்கவும் கற்றுக் கொள்ள ஆசை. பறவை ஆராய்ச்சியாளர்கள் மிகவும் கஷ்டபட்டு பறவை வாழ்க்கையை ஆராய்ந்து அவைகளை பற்றி சொன்னதை நான் எடுத்து போடுகிறேன்.
உங்கள் உற்சாகம் தரும் கருத்துக்கு மிகவும் நன்றி மதுரை தமிழன்.
//பார்த்ததும் எப்படி பெயர் தெரிந்து விவரம் சேகரிக்கிறீர்கள்? படத்தை கூகுளிட்டு தேடுவீர்களோ?//
கூகுளில் அதன் பேரை தேடி போடுகிறேன். படத்தை கூகுளில் போட்டு அதன் பேரை கேட்டால் சொல்கிறது கூகுள் . அதன் பேர் தெரிந்தபின் பேரை போட்டு தேடினால் அதன் விவரங்கள் தெரிகிறது. கூகுளில் பதிவு செய்தவர்களுக்கு நன்றி சொல்லி இங்கு பகிர்ந்து விடுகிறேன்.
ஒருநாள் இப்படி ஒரு புதிய பறவையைக் கண்டதும் விரியும் உங்கள் கண்களையும், நீங்கள் சத்தமில்லாமல் நடந்து கேமிராவைக் கைப்பற்றி பறவையின்பின்னே மென்னடையாய் மெல்லோட்டமாய் ஓடுவதையும் படம் பிடிக்க வேண்டும்! வாழ்க உங்கள் ஆர்வம்.
//ஒருநாள் இப்படி ஒரு புதிய பறவையைக் கண்டதும் விரியும் உங்கள் கண்களையும், நீங்கள் சத்தமில்லாமல் நடந்து கேமிராவைக் கைப்பற்றி பறவையின்பின்னே மென்னடையாய் மெல்லோட்டமாய் ஓடுவதையும் படம் பிடிக்க வேண்டும்! வாழ்க உங்கள் ஆர்வம்.//
என் மகனும், மகளும், என் கணவரும் என்னை படம் எடுத்து இருக்கிறார்கள் .
பறவைகள் எத்தனை வகை இறைவன் படைப்பில் அவை எல்லாம் நமக்கு வியப்பை தருவது உண்மை.
காணொளி கண்டு ரசித்து கவிதை இயற்றி விட்டது மகிழ்ச்சி. வட்ட வட்ட நடையில் தான் நிமிர்ந்து நின்று நிதானமாக சாப்பிடுவது இல்லை. உணவு குவிந்து கிடக்கிறது புல்வெளியில். உங்கள் கருத்துக்கும், கவிதைக்கும் நன்றி ஸ்ரீராம்.
பறவையின் மேல் இருக்கும் நட்சத்திர புள்ளிகள் அழகு, பொருத்தமான பெயர்தான். காணொளி கண்டேன். தகவல்கள் சிறப்பு. புதிய பறவைகளை தொடர்ந்து அறியத் தருவதற்கு நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//பறவையின் மேல் இருக்கும் நட்சத்திர புள்ளிகள் அழகு, பொருத்தமான பெயர்தான்.//
ஆமாம். அழகான பறவை.
காணொளி கண்டேன். //
காணொளி பார்த்தற்கு நன்றி.
//தகவல்கள் சிறப்பு. புதிய பறவைகளை தொடர்ந்து அறியத் தருவதற்கு நன்றி.//
உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.
படங்கள் அருமை சகோ.
பதிலளிநீக்குஇவ்வளவு புள்ளி விபரங்கள் கூகுளில் தேடுகிறீர்களோ ?
சிறப்பான தகவல்கள் தந்தமைக்கு நன்றி.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் அருமை சகோ.//
நன்றி.
//இவ்வளவு புள்ளி விபரங்கள் கூகுளில் தேடுகிறீர்களோ ?//
ஆமாம். இல்லையென்றால் எனக்கு எப்படித் தெரியும். பறவை ஆராய்ச்சியாளர்கள் அந்த பறவைகளை கஷ்டப்பட்டு அதன் வாழ்க்கை முறைகளை கவனித்து சேகரித்து போட்டவைகள் உதவுகிறது எனக்கு. நானும் அவற்றை கவனித்து உண்மை என்று உணர்ந்து வருகிறேன்.
//சிறப்பான தகவல்கள் தந்தமைக்கு நன்றி.//
உங்கள் கருத்துக்கு நன்றி.
அழகான பறவை. தகவல்கள் அனைத்துமே சிறப்பு. தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கும் பறவைகள், விலங்குகள் போன்றவற்றை படம் எடுப்பது கடினமான விஷயம் தான். நீங்கள் எடுத்திருக்கும் படங்கள் நன்றாகவே இருக்கின்றன.
பதிலளிநீக்குபுதிதான பறவைகள் குறித்த தகவல்களை தேடித் தேடி எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். தொடரட்டும் உங்கள் தேடல்.
வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்கு//அழகான பறவை. தகவல்கள் அனைத்துமே சிறப்பு. தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கும் பறவைகள், விலங்குகள் போன்றவற்றை படம் எடுப்பது கடினமான விஷயம் தான். நீங்கள் எடுத்திருக்கும் படங்கள் நன்றாகவே இருக்கின்றன.//
ஆமாம், நிற்கும் பறவையை எடுப்பது எளிதாக இருக்கிறது. நகருவதை எடுப்பது கஷ்டமாக இருக்கிறது.
படங்கள் நன்றாக இருப்பதாக சொன்னதற்கு நன்றி.
//புதிதான பறவைகள் குறித்த தகவல்களை தேடித் தேடி எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். தொடரட்டும் உங்கள் தேடல்.//
புதிதாக எடுக்கும் பறவைகள் பேர் தெரிந்து கொள்ள கூகுளில் பார்க்கிறேன். தேடல் நன்றாக இருக்கிறது.
உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி வெங்கட்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. கறுப்பு மைனா படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது.மிகவும் பொறுமையாக அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு படங்களையும் எடுத்துள்ளீர்கள். பாட்டுக்கள்.
நீங்கள் எடுத்த படங்களிலும் அதன் உடம்பு முழுக்க நட்சத்திர புள்ளிகள் தெரிகின்றன. மைனாவே வேகவேகமாக நடை போடும் பறவைதான். அதன் செயல்களும் விருட்டென்று பறக்கும் திறனும் ஒரு வித வேகத்தை காட்டும். காணொளியும் பார்த்தேன். உணவை தேடும் போது அதிலும் ஒரு வேகம் தெரிகிறது
பிற பறவைகளின் உணவை திருடி தின்னச் சொல்லி இதற்கு யார் சொல்லித் தந்தாரோ ? இறைவன் படைப்பில் ஒரு பறவையின் அதன் தன்மைகள், உடல்வாகுகள் மாறுவதைப் போன்று உழைக்காமல் சாப்பிடும் பழக்கத்தையும் அது இயல்பாகவே பெற்று விட்டதென நினைக்கிறேன்.
தங்கள் தயவால் விதவிதமான பறவைகளையும், அதன் பெயர்கள், செயல்பாடுகள் என அறிய முடிக்கிறது. உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
இந்த கறுப்பு மைனாவை பற்றி அறியாத தகவல்களை சேகரித்து தந்தமைக்கும் தங்களுக்கு மிக்க நன்றி. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமையாக உள்ளது. கறுப்பு மைனா படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது.மிகவும் பொறுமையாக அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு படங்களையும் எடுத்துள்ளீர்கள். பாட்டுக்கள்.//
உங்கள் பாராட்டுக்கு நன்றி.
//நீங்கள் எடுத்த படங்களிலும் அதன் உடம்பு முழுக்க நட்சத்திர புள்ளிகள் தெரிகின்றன. மைனாவே வேகவேகமாக நடை போடும் பறவைதான். அதன் செயல்களும் விருட்டென்று பறக்கும் திறனும் ஒரு வித வேகத்தை காட்டும். காணொளியும் பார்த்தேன். உணவை தேடும் போது அதிலும் ஒரு வேகம் தெரிகிறது//
ஆமாம். எல்லாம் வேகம் வேகம் தான். கும்பலாக வந்தால் இன்னும் வேகமாய் போய் விடுகிறது. ஒற்றையாக வந்தபோது கொஞ்சம் நின்றது. காணொளி பார்த்தது மகிழ்ச்சி.
//பிற பறவைகளின் உணவை திருடி தின்னச் சொல்லி இதற்கு யார் சொல்லித் தந்தாரோ ? இறைவன் படைப்பில் ஒரு பறவையின் அதன் தன்மைகள், உடல்வாகுகள் மாறுவதைப் போன்று உழைக்காமல் சாப்பிடும் பழக்கத்தையும் அது இயல்பாகவே பெற்று விட்டதென நினைக்கிறேன்.//
ஒவ்வொன்றுக்கும் ஒரு அறிவை இறைவன் தான் கொடுக்கிறான் இதற்கு இந்த அறிவை கடவுள் கொடுத்து இருக்கிறான்.
அடுத்தவர் சேமித்த உணவை தேடி திரிந்து தானே உண்ணுகிறது.
//தங்கள் தயவால் விதவிதமான பறவைகளையும், அதன் பெயர்கள், செயல்பாடுகள் என அறிய முடிக்கிறது. உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்.//
தோட்டத்திற்கு வருவதை போகும் இடங்களில் பார்க்கும் பறவைகளை எடுக்கிறேன். நமக்கு பறவைகளை ஆராய்பவர்கள் பறவைகளை பலகாலம் கவனித்து சேகரித்து தந்த விஷயங்களை நோகாமல் படித்து எடுத்து கொடுக்கிறேன் அவ்வளவுதான்.
உங்கள் மனநிறைந்த வாழ்த்துகள், பாராட்டுக்கள் அவர்களுக்கும் போய் சேர வேண்டும்.
//இந்த கறுப்பு மைனாவை பற்றி அறியாத தகவல்களை சேகரித்து தந்தமைக்கும் தங்களுக்கு மிக்க நன்றி. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி கமலா ஹரிஹரன்.
கோம்திக்கா என்ன பள பளன்னு இருக்கு. அதன் உடலில் குறிப்பாக இறக்கைகளின் மீது புள்ளிகள் இருப்பது மிக அழகாக இருக்கிறது. கறுப்பு மைனா பற்றிய தகவல்கள் மிகச் சிறப்பு.
பதிலளிநீக்குஅலகு நம்ம மைனாவை விட கொஞ்சம் நீளமாக இருக்கோ?
கீதா
வணக்கம் கீதா ரங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//கோம்திக்கா என்ன பள பளன்னு இருக்கு. அதன் உடலில் குறிப்பாக இறக்கைகளின் மீது புள்ளிகள் இருப்பது மிக அழகாக இருக்கிறது. கறுப்பு மைனா பற்றிய தகவல்கள் மிகச் சிறப்பு.//
ஆமாம் கீதா, இணையத்தில் இந்த பறவையை தேடும் போது மிக அழகான படங்கள் கிடைத்தது. பல வண்னங்களில் அதன் முதுகு, இறக்கை எல்லாம் இருக்கிறது. அழகிய பறவை.
//அலகு நம்ம மைனாவை விட கொஞ்சம் நீளமாக இருக்கோ?//
இல்லை அதே அளவுதான். கண் தான் மைனா கண் போல இல்லை.
கண் இருப்பதே தெரியவில்லை.
காணொளி ரசித்துப் பார்த்தேன்! ;என்ன வேகம்! சுறு சுறுப்பாக நடந்துகொண்டே உண்கிறது. இப்படி நடந்துகொண்டே இருந்தால் எப்படி எடுப்பதாம்!! ஹாஹாஹா எங்க அக்காவுக்கு அது போஸ் கொடுக்கவே மாட்டேங்குது!!! நான் அதனிடம் கொஞ்சம் சொல்லி வைக்கிறேன்!!! அக்காவைக் கஷ்டப்படுத்தாம போஸ் கொடு அடுத்த முறை வரப்பன்னு...!!!
பதிலளிநீக்குகஷ்டப்பட்டு எடுத்திருக்கீங்க தெரியுது....படங்கள் எல்லாமே நன்றாக வந்திருக்கு கோமதிக்கா.
எல்லாம் ரசித்துப் பார்த்தேன்.
கீதா
காணொளி ரசித்துப் பார்த்தேன்! ;என்ன வேகம்! சுறு சுறுப்பாக நடந்துகொண்டே உண்கிறது. இப்படி நடந்துகொண்டே இருந்தால் எப்படி எடுப்பதாம்!!//
நீக்குஆமாம், கீதா சுறு சுறுப்பு நடந்து கொண்டே உண்கிறது. நடந்து கொண்டு சாப்பிடதே! என்று அம்மா சொல்வது போல சொல்ல தோன்றும்.
//ஹாஹாஹா எங்க அக்காவுக்கு அது போஸ் கொடுக்கவே மாட்டேங்குது!!! நான் அதனிடம் கொஞ்சம் சொல்லி வைக்கிறேன்!!! அக்காவைக் கஷ்டப்படுத்தாம போஸ் கொடு அடுத்த முறை வரப்பன்னு...!!!//
சொல்லுங்க கீதா, நீங்கள் சொன்னால் கேட்கும்.
//கஷ்டப்பட்டு எடுத்திருக்கீங்க தெரியுது....படங்கள் எல்லாமே நன்றாக வந்திருக்கு கோமதிக்கா.
எல்லாம் ரசித்துப் பார்த்தேன்.//
ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.
ஆஹா கறுப்புக் காகம் போய், கறுப்பு மைனா வந்தது டும் டும்...டும்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா
பதிலளிநீக்குவணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
நீக்கு//ஆஹா கறுப்புக் காகம் போய், கறுப்பு மைனா வந்தது டும் டும்...டும்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா//
ஆஹா! பாட்டாக பாடி விட்டீர்களா? நல்ல பாட்டு.
///ஒரு நாள் கும்பலாக 10 பறவைகள் வந்தன. வீட்டுக்குள் போய் காமிராவை எடுத்து வருவதற்குள் பறந்து விட்டன.///
பதிலளிநீக்குஆவ்வ்வ் இதேதான் கோமதி அக்கா, ஒரு குட்டி அசைவு தெரிஞ்சாலும் பறந்திடுகின்றன கர்ர்ர்ர்ர்ர்:)), நானும் பலதடவை முயற்சித்துத் தோற்றுவிட்டேன், அதிலும் டெய்சி எப்பவும் என்னோடுதான் ஒட்டியபடி சுத்துவா, அதனால அவவின் உருவம் தெரிஞ்சாலே அலறிக்கொண்டு பறந்திடுவார்கள்.
//ஆவ்வ்வ் இதேதான் கோமதி அக்கா, ஒரு குட்டி அசைவு தெரிஞ்சாலும் பறந்திடுகின்றன கர்ர்ர்ர்ர்ர்:)), நானும் பலதடவை முயற்சித்துத் தோற்றுவிட்டேன், அதிலும் டெய்சி எப்பவும் என்னோடுதான் ஒட்டியபடி சுத்துவா, அதனால அவவின் உருவம் தெரிஞ்சாலே அலறிக்கொண்டு பறந்திடுவார்கள்.//
நீக்குஆஹா ! கூட்டமாக வரும் போது பார்க்க அழகாய் இருக்குமே!
டெய்சியிடம் சொல்லி வையுங்க . "கோமதி அக்கா கும்பலாக வரும் பறவை கூட்டத்தை போட்டோ எடுத்து போட சொன்னா, அதனால் என்னுடன் வராமல் கொஞ்சம் வீட்டுக்குள் இரு படம் எடுத்தபின் வரலாம்" என்று.
நான் இவை புலுணிகள் எனத்தான் நினைத்தேன், இவைதான் வெளிநாட்டு மைனாக்களோ, எங்களிடமும் கூட்டமாக வரும்... புழுக்கள் பூச்சிகளை மட்டும் பெறுக்கும், அதனால கார்டின் சுத்தமாக்கும் இனம் இவை... உணவு போட்டால் விரும்புகிறார்கள் இல்லை, அசைவம் உண்ணிகளாக இருப்பினமோ என்னமோ...
பதிலளிநீக்கு//நான் இவை புலுணிகள் எனத்தான் நினைத்தேன், இவைதான் வெளிநாட்டு மைனாக்களோ, எங்களிடமும் கூட்டமாக வரும்... புழுக்கள் பூச்சிகளை மட்டும் பெறுக்கும், அதனால கார்டின் சுத்தமாக்கும் இனம் இவை... உணவு போட்டால் விரும்புகிறார்கள் இல்லை, அசைவம் உண்ணிகளாக இருப்பினமோ என்னமோ..//
நீக்குஇவை மற்றவைகள் சேகரித்து வைத்து இருக்கும் உணவை கண்டுபிடித்து உண்ணும் வழக்கம் உள்ளதால் நாம் உணவு கொடுத்தால் பிடிக்காது போலும்.
தோட்டத்தை சுத்தம் செய்யுமோ ! அப்ப நல்லது. புழு, பூச்சிகளை ஒரே இடத்தில் சேகரித்து மண்ணைப்போட்டு மூடும் பழக்கம் சில பறவைகளுக்கு இருக்கிறது, அதை தேடி தின்னும் இந்த பறவை.
சொண்டு மஞ்சள், ஆனால் பாதம் சிகப்பாக இருக்கே.. அதெப்படி ஆண் பெண் வித்தியாசம் தெரிகிறதா சொண்டில கோமதி அக்கா? என்னால கண்டு பிடிக்க முடியவில்லையே..
பதிலளிநீக்குஇணையத்தில் ஆண், பெண் வித்தியாசம் சொல்கிறார்கள் அதை வைத்துதான் சொல்கிறேன். இந்த ஒரு பறவைக்கு அலகில் மஞ்சள் வண்ணம் இல்லை பாருங்கள். . தொண்டை குழியில் அலகில் வித்தியாசம் இருக்குமாம். ஆண், பெண் பறவைகளுக்கு.
நீக்குஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
காளொளி கஸ்டப்பட்டு ஒருமாதிரி எடுத்திட்டீங்கள்... ஆனா பின்னால இன்று பாடல் ஏதும் கேட்கவில்லையே...:)
பதிலளிநீக்குபாட்டு கேட்கிறதே அதிரா. பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த பாட்ல் கேட்குமே!பின்னனி இசை நானாக சேர்க்கவில்லை, ஊஞ்சலில் அமர்ந்து பறவைகளை பார்த்து படம், காணொளி எடுக்கும் போது வானொலி பாட்டு கேட்ப்பேன். அப்படி நான் கேட்டு கொண்டுஇருக்கும் போது உள்ள பாடல் பின்னனியில் ஓடும். உங்களை போல பாடல் சேர்க்க கற்றுக் கொள்ள வேண்டும். விரைவில் பாடலுடன் காணொளி எதிர்பாருங்கள் அதிரா.
நீக்குமைனா படங்கள் மிக அழகு.
பதிலளிநீக்குஎப்போதுமே மைனா ஒற்றையாக இருக்காது. சில நேரங்களில் நான் 20-25 மைனாக்களையும் இங்கு பார்ப்பேன்.
காணொளியில் அதன் சுறுசுறுப்பு தெரிகிறது.
பறவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தால் (ஏன் அணிலையும்தான்) நேரம் போவதே தெரியாது.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//மைனா படங்கள் மிக அழகு.//
உங்களிடம் கறுப்பு மைனா படம் எடுத்து இருக்கிறேன். அடுத்த பதிவாக வரும் என்று சொல்லி இருந்தேன். போட்டு விட்டேன் பதிவு.
//எப்போதுமே மைனா ஒற்றையாக இருக்காது. சில நேரங்களில் நான் 20-25 மைனாக்களையும் இங்கு பார்ப்பேன்.//
ஒற்றை மைனா பார்ப்பதும் நல்லது இல்லை என்பார்கள் பள்ளியில் படிக்கும் போது.
பெரும்பாலும் கூட்டமாய் தான் மைனாக்கள் வரும் . சில நேரம் இரண்டு அல்லது ஒன்றாய் வரும்.
//காணொளியில் அதன் சுறுசுறுப்பு தெரிகிறது.//
நம்க்கு அதன் வேக நடை பார்த்து தலைசுற்றும்.
//பறவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தால் (ஏன் அணிலையும்தான்) நேரம் போவதே தெரியாது.//
ஆமாம், மகன், மகள் வீட்டில் வித விதமான பறவைகளை,அ ணில்களை பார்த்து கொண்டு இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பொழுதும் போகிறது.
ஒரு இடத்தில் காக்கை போல மைனா இருக்காது. அதனால் படம் எடுப்பது மிகவும் சிரமமே.
பதிலளிநீக்குஇறகில் உள்ள புள்ளிகளும் அழகாக இருக்கின்றன
//ஒரு இடத்தில் காக்கை போல மைனா இருக்காது. அதனால் படம் எடுப்பது மிகவும் சிரமமே.//
நீக்குஆமாம்.
//இறகில் உள்ள புள்ளிகளும் அழகாக இருக்கின்றன//
இறைவன் நல்ல ரசிகன் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு அழகாய் படைத்து இருக்கிறான்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
நல்ல தகவல்களுடன் பகிர்வு. படங்கள் நன்று.
பதிலளிநீக்குவணக்கம் மாதேவி, நலமா? வாழ்க வளமுடன்
நீக்குவெகு நாட்களாக உங்களை காணவில்லையே! என்று தேடினேன்.
ஊரில் எல்லோரும் நலம் தானே?
//நல்ல தகவல்களுடன் பகிர்வு. படங்கள் நன்று.//
உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.
நிறைய தகவல்களோடு அழகான படங்கள்.
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
இனிமேல் வீட்டை விட்டு வெளியே வரும் போதே கேமிராவை ஆன் செய்து கொண்டே வாருங்கள் அதன் பின் உங்கள் கேமொராவின் பார்வையில் இருந்து ஏதும் தப்பாது உங்களுக்கு பறவையிம் மீது இருக்கும் ஆர்வத்தை பார்க்கும் போது நீங்கள் எல்லா பறவைகளையும் பற்றி தமிழில் ஒரு புத்தகம் எழுதி வெளியிடலாம் அது மின்னூலாக கூட இருக்கலாம்
பதிலளிநீக்குவணக்கம் மதுரை தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//இனிமேல் வீட்டை விட்டு வெளியே வரும் போதே கேமிராவை ஆன் செய்து கொண்டே வாருங்கள் அதன் பின் உங்கள் கேமொராவின் பார்வையில் இருந்து ஏதும் தப்பாது //
தோட்டத்தில் நானும் பேரனும் நிற்கும் போது ஏதாவது பறவையை பார்த்து விட்டால் நான் காமிரா எடுத்து வந்து இருக்காலம் என்பேன். பேரன் "எப்போதும் காமிராவை கையில் வைத்து கொண்டு வெளியே வாங்க ஆச்சி என்பான்."
//உங்களுக்கு பறவையிம் மீது இருக்கும் ஆர்வத்தை பார்க்கும் போது நீங்கள் எல்லா பறவைகளையும் பற்றி தமிழில் ஒரு புத்தகம் எழுதி வெளியிடலாம் அது மின்னூலாக கூட இருக்கலாம்//
ஆஹா! மின்னூலா!
பறவை மேலே ஆசை இருக்கு ஆனால் இன்னும் படம் நன்றாக எடுக்கவும், காணொளி நன்றாக எடுக்கவும் கற்றுக் கொள்ள ஆசை.
பறவை ஆராய்ச்சியாளர்கள் மிகவும் கஷ்டபட்டு பறவை வாழ்க்கையை ஆராய்ந்து அவைகளை பற்றி சொன்னதை நான் எடுத்து போடுகிறேன்.
உங்கள் உற்சாகம் தரும் கருத்துக்கு மிகவும் நன்றி மதுரை தமிழன்.
கவர்ச்சியான பறவை.
பதிலளிநீக்குபார்த்ததும் எப்படி பெயர் தெரிந்து விவரம் சேகரிக்கிறீர்கள்? படத்தை கூகுளிட்டு தேடுவீர்களோ?
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//கவர்ச்சியான பறவை.//
ஆமாம்.
//பார்த்ததும் எப்படி பெயர் தெரிந்து விவரம் சேகரிக்கிறீர்கள்? படத்தை கூகுளிட்டு தேடுவீர்களோ?//
கூகுளில் அதன் பேரை தேடி போடுகிறேன். படத்தை கூகுளில் போட்டு அதன் பேரை கேட்டால் சொல்கிறது கூகுள் .
அதன் பேர் தெரிந்தபின் பேரை போட்டு தேடினால் அதன் விவரங்கள் தெரிகிறது. கூகுளில் பதிவு செய்தவர்களுக்கு நன்றி சொல்லி இங்கு பகிர்ந்து விடுகிறேன்.
ஒருநாள் இப்படி ஒரு புதிய பறவையைக் கண்டதும் விரியும் உங்கள் கண்களையும், நீங்கள் சத்தமில்லாமல் நடந்து கேமிராவைக் கைப்பற்றி பறவையின்பின்னே மென்னடையாய் மெல்லோட்டமாய் ஓடுவதையும் படம் பிடிக்க வேண்டும்! வாழ்க உங்கள் ஆர்வம்.
பதிலளிநீக்கு//ஒருநாள் இப்படி ஒரு புதிய பறவையைக் கண்டதும் விரியும் உங்கள் கண்களையும், நீங்கள் சத்தமில்லாமல் நடந்து கேமிராவைக் கைப்பற்றி பறவையின்பின்னே மென்னடையாய் மெல்லோட்டமாய் ஓடுவதையும் படம் பிடிக்க வேண்டும்! வாழ்க உங்கள் ஆர்வம்.//
நீக்குஎன் மகனும், மகளும், என் கணவரும் என்னை படம் எடுத்து இருக்கிறார்கள் .
பறவைகள் எத்தனை வகை இறைவன் படைப்பில் அவை எல்லாம் நமக்கு வியப்பை தருவது உண்மை.
காணொளி கண்டு ரசித்தேன்.
பதிலளிநீக்குகுவிந்து கிடக்கின்றன போலும்
ஆங்காங்கே
அதற்கான உணவுகள்.
நிமிர்ந்து பார்க்காமல்
குனிந்து கொண்டே
வட்டவட்ட நடையில்
வாகாய் நகர்ந்து
பரபரக்கிறது பறவை!
காணொளி கண்டு ரசித்து கவிதை இயற்றி விட்டது மகிழ்ச்சி. வட்ட வட்ட நடையில் தான் நிமிர்ந்து நின்று நிதானமாக சாப்பிடுவது இல்லை.
நீக்குஉணவு குவிந்து கிடக்கிறது புல்வெளியில்.
உங்கள் கருத்துக்கும், கவிதைக்கும் நன்றி ஸ்ரீராம்.
பறவைகளின் மீது தங்களின் அன்பும் ஆர்வமும், என்றும் என்னை வியக்க வைக்கும் அம்மா... வாழ்க...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்கு//பறவைகளின் மீது தங்களின் அன்பும் ஆர்வமும், என்றும் என்னை வியக்க வைக்கும் அம்மா... வாழ்க...//
பறவைகள்பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சி. மனம் சோர்வு அடைந்தால் பறவைகளை பார்த்தவுடன் மனச்சோர்வு போய் விடுகிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்.