ஞாயிறு, 21 மே, 2023

சிவப்பு குருவிசிவப்பு தலை ஆண் குருவி (பேரன் எடுத்த படம்)


ஹவுஸ் ஃபின்ச் ஸ்பாரோ  முதலில் மேற்கு அமெரிக்கா மற்றும் மெக்சிகோவின் பறவை.  இப்போது மகன் வீட்டுத்தோட்டத்திற்கு வருகை . 
நான் கேதார்நாத் கோவிலில் இந்த சிவப்பு குருவிகளை படம் எடுத்து இருக்கிறேன். கேதார்நாத் கோவில் பதிவில் போட்டு இருக்கிறேன்.

சிவப்பு குருவிக்கு  தலை, மற்றும் மார்பு பகுதி மட்டும் சிவப்பாக இருக்கும். அந்த   பறவைகளின் படங்கள், காணொளி இந்த பதிவில் இடம்  பெறுகிறது.


தோட்டத்து செடிகளில், மரங்களில் அமர்ந்து சத்தம் கொடுக்கும்


சேர்ந்து பாடும்

ஆண் , பெண் பறவைகள் , ஆண் பறவை தலையில் சிவப்பாக இருப்பது. பெண் பறவை கூட்டில் இருக்கும் போது வெகு விரைவாக உணவு சேகரித்து கொண்டு வந்து கொடுக்குமாம் இந்த சிவப்புத் தலை ஆண் குருவி. அதனால் பெண் குருவிகள் இந்த ஆண் சிவப்பு குருவியை அதிகமாக விரும்புமாம்.

குடும்பத்தை நன்கு பார்த்து கொள்வதில் கெட்டிக்கார பறவை என்று தெரிகிறது.

மிகவும் சுறு சுறுப்பாக இருக்கிறதுஎப்போதும் பாடி கொண்டே இருக்குமாம்

\\\

காலை நேரம் அலைபேசியில் தமிழ் வானொலியில் பாடல், நேர்கானல் கேட்டுக் கொண்டு இருப்பது பின்னனியில் கேட்கும்

நான்கு பறவைகள் அமர்ந்து நான் எப்போது வீட்டுக்குள் போவேன் என்று பேசிக் கொள்கிறது. நான் உள்ளே வந்ததும்  உணவை எடுக்கும் காட்சி அடுத்த காணொளி.

இந்த காணொளியிலும் குருவிகளின் உரையாடலும், வானெலி ஒலிபரப்பும் கேட்கும். ஆண் சிவப்பு குருவிக்கு நிறம் அதன் உணவில் உள்ள நிறமிகளிலிருந்து  கிடைக்கிறதாம்.  ஆரஞ்சு, மஞ்சள் நிற குருவிகளுக்கும் அப்படித்தான் நிறம் வருகிறதாம்.
இந்த ஹவுஸ்ஃ பிஞ்ச்கள் தங்கள் குஞ்சுகளுக்கு தாவர உணவுகளையே கொடுக்குமாம். இது பறவை உலகில் மிகவும் அரிதான நிகழ்வு என்கிறார்கள்.

இந்த ஹவுஸ்ஃ பிஞ்ச் ஸ்பாரோ சிவப்பு தலை, மார்பில் சிவப்பு உள்ள பறவைகள் இசைகுழு வைத்து இருக்கிறதாம் இவை பாடும் நீண்ட இனிய  பாடல்  பெண் குருவிகளுக்கு பிடிக்குமாம். 

இந்த குருவிகளைப்பற்றி இணையத்தில் படித்த செய்தி குறிப்புகள் இவை.காலியாகும் வரை தொடர்ந்து தினம் அமர்ந்து தின்றது இந்த புறா

மற்ற புறாக்களை விரட்டும் குருவிகளை விரட்டாது

தீர்ந்து விட்டது இருந்தாலும் உணவுக்கு காத்து இருக்கிறது. ஜாடியை உணவை நிறைத்து வைத்தால் இரண்டு நாளில் காலி செய்து விடுகிறது.


தேன் சிட்டு நீர் அருந்த  கண்ணாடி ஜாடி பலூன் வடிவில்
அரிசோனா புகழ் பறக்கும் பலூனில் உள்ள கூடை போல  பாத்திரத்தின் மேல் பகுதியில் இரண்டு மூன்று பூக்கள் உள்ளது.

தேன்ச்சிட்டு இதில் இருக்கும் பூவில் தன் நீண்ட அலகை வைத்து  உறிஞ்சி குடிக்கும். என் கையில் காமிரா, செல் இல்லாத போது வந்து குடிக்கிறது,  எடுத்து வர உள்ளே வந்தால் போய் விடுகிறது. காத்து இருந்து சலித்து விட்டேன். பார்த்தால் பதிவு செய்து விடுகிறேன்.

மகன் எனக்காக பறவைகள் உணவு எடுக்கும் ஜாடியை  நான் பார்க்கும் வகையில் தொங்க விட்டு இருக்கிறான்.

மதுரையிலும் இது போல ஜாடி தொங்கவிட்டதை காட்டி இருக்கிறேன் முன்பு. அது இரவு ஒளிராது. இது இரவு நேரம் ஒளிரும். பகலில் சூரிய ஒளியைஎடுத்து கொண்டு இரவு வெளிச்சம் தரும். 


பறவைகளுக்கு மூட்டை மூட்டையாக வாங்க வேண்டும் போல உள்ளது. புறாவும், குருவிகளும் வெகு விரைவில் உண்டு விடுகிறது("அம்மா கண் வைக்காதே" என்று பறவைகள் சொல்வது கேட்குது) "மகன் கேட்பது எவ்வளவு சாப்பிட்டாலும் குருவிகள் குண்டாகாமல்  அப்படியே இருக்கே!"


எவ்வளவு சின்னதாக கடுகு போல இருக்கு. இதில் உள் இருப்பதை மட்டும் உண்ணும் குருவி  , அதன் தோல் பகுதி தரை எல்லாம் சிதறி இருப்பதை,  காடை பறவை உண்ணும்.


இப்படி தானிய விதைகள் இந்த பறவைக்கு மிகவும் பிடிக்கும், சூரியகாந்தி விதைகள் மிக மிக பிடிக்கும்.இந்த உணவுகளை வைத்தால் இந்த பறவைகளின் வருகை அதிகமாகும் என்கிறார்கள். அதை பார்த்து கொண்டு இருக்கிறேன். அவைகளின் இனிமையான பாடலும் கேட்டுக் கொண்டு இருக்கிறேன். சமைத்த உணவுகள் வைப்பதுதான் தடை இது போன்ற உணவுகள் வைக்கலாம்.

கோடை காலம் என்பதால் குளிக்கவும், குடிக்கவும்  தண்ணீர் வைத்து இருக்கிறோம்.


கண்ணாடிகதவு வழியாக (நான் உணவு மேஜை முன் உட்கார்ந்து) இது உணவு உண்ணும் காட்சியை  கவனித்து கொண்டே இருக்கிறேன். 

சாப்பிடும் போதுதான் இந்த சிவப்புக்குருவியை பார்த்தேன், பேரனை எடுக்க சொன்னேன். முதல் படமும், இந்த கடைசி படமும் பேரன் எடுத்தான்.  மதிலை ஒட்டி இந்த காட்டுச்செடிஇருக்கிறது இதில் சிறிய கொத்த்வரைங்காய் போல காய் தொங்கும் அதை கொத்தி சாப்பிடும் இந்த பறவை. அதனால் அதை பிடிங்கி எறியாமல் இருக்கிறோம்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!

50 கருத்துகள்:

 1. புதிது புதிதாக குருவிகள்..  எத்தனை வகை... அவை இசைக்குழு வைத்து  பாடும் என்பது மிகவும் ஆச்சர்யமான செய்தி.  அதேபோல தாவரங்களைதான் உண்ணும் என்பதும் ஆச்சர்யமான செய்தி.  மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டுக்கு மறுபடி வந்து விட்டீர்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

   புதிது புதிதாக குருவிகள்.. எத்தனை வகை.//

   ஆமாம், ஸ்ரீராம். மஞ்சள் குருவியை பார்க்க வேண்டும். பச்சை வண்ணக்குருவியை கொடைக்கானலில் பார்த்தேன். இங்கு நிறைய குருவிகளை பார்க்க முடிந்தது. மிகவும் குட்டியாக இருக்கும் ஒரு வகை குருவி அது போடும் சத்தம் பெரிது.

   ..// அவை இசைக்குழு வைத்து பாடும் என்பது மிகவும் ஆச்சர்யமான செய்தி. அதேபோல தாவரங்களைதான் உண்ணும் என்பதும் ஆச்சர்யமான செய்தி.//
   பறவைகளின் வாழ்க்கை முறை நிறைய வியப்பை தரும் .

   //மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டுக்கு மறுபடி வந்து விட்டீர்களா?//

   மே 2 ம் தேதி வந்து விட்டேன். ஒரு மாதம் தான் அவள் வீட்டில். கவின் ஒரு நாடகத்தில் நடித்தான்,அந்த நாடகம் பார்க்கவும், தமிழ் பள்ளி அவன் பள்ளி விழாக்களில் கலந்து கொள்ளவும் வந்து விட்டேன்.


   நீக்கு
 2. மிகவும் பொறுமையாக பறவைகளுக்கு உணவுண்ண அழகான ஏற்பாடு செய்து, தண்ணீர் அருந்த ஏற்பாடு செய்து என்று நீங்கள் எல்லோருமே அசத்துகிறீர்கள்.  எனக்கு அந்தப் பொறுமை எல்லாம் இல்லையே என்றிருக்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மிகவும் பொறுமையாக பறவைகளுக்கு உணவுண்ண அழகான ஏற்பாடு செய்து, தண்ணீர் அருந்த ஏற்பாடு செய்து என்று நீங்கள் எல்லோருமே அசத்துகிறீர்கள். //

   நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஜீவன்கள், அவற்றுக்கு நம்மால் முடிந்தது.
   காலை முதல், மாலை வரை அவைகளை எட்டி பார்த்து வருவேன்.

   //எனக்கு அந்தப் பொறுமை எல்லாம் இல்லையே என்றிருக்கு!//

   நீங்களும் மொட்டை மாடியில் வைப்பீர்கள் தானே1

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.   எனக்கு அந்தப் பொறுமை எல்லாம் இல்லையே என்றிருக்கு!

   நீக்கு
 3. ஆஹா..... பறவைகள், அவற்றின் இசை என அனைத்தும் அழகு. பறவைக்கான உணவு, குடிநீர் போன்றவற்றை வைப்பது நல்லது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

   //ஆஹா..... பறவைகள், அவற்றின் இசை என அனைத்தும் அழகு. பறவைக்கான உணவு, குடிநீர் போன்றவற்றை வைப்பது நல்லது.//

   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்.

   நீக்கு
 4. சிவப்புத் தலை குருவி மிக அழகு. படங்களும் அருமை

  உணவின் நிறமியால் தலை நிறமா? நமக்கும் அப்படி ஆக ஆரம்பித்தால் என்னாவது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

   //சிவப்புத் தலை குருவி மிக அழகு. படங்களும் அருமை//

   நன்றி.

   //உணவின் நிறமியால் தலை நிறமா? நமக்கும் அப்படி ஆக ஆரம்பித்தால் என்னாவது?//

   அதுவும் ஆண் குருவிக்கு மட்டும்தான் அப்படி ஆகிறது என்று போட்டு இருக்கு. நமக்கும் சில உணவுகள் ஒத்துக் கொள்ளாமல் தோலில் ஒவ்வாமை தான் ஏற்படும். தலை முடியை இப்போது நிறமாற்றிக் கொள்கிறார்களே! இங்கு பள்ளி பிள்ளைகள் கூட மாற்றிக் கொள்கிறார்கள்.

   நீக்கு
 5. பறவைக்கான உணவு, குடிநீர் ஏற்பாடு அருமையாக உள்ளது.

  மகனுக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பறவைக்கான உணவு, குடிநீர் ஏற்பாடு அருமையாக உள்ளது.

   மகனுக்குப் பாராட்டுகள்.//

   மகனுக்குப் பாராட்டுக்கள் சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 6. தேன் சிட்டைப் படமெடுப்பது கடினமல்லவா. அதிலும் தண்ணீர் குடிக்கும்போது கேமரா ஆங்கிள் கிடைக்குமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேன் சிட்டு பறக்கும் போது படம் எடுப்பது கொஞ்சம் கஷ்டம், தேன்சிட்டு பறக்கும் போது, மரத்தில் அமர்ந்து மூக்கை தேய்க்கும் போது காணொளி எடுத்து போட்டு இருக்கிறேன் பதிவு. நீர் அருந்துவதுதான் எடுக்க முடியவில்லை. ஊருக்கு திரும்பி வருவதற்குள் எடுக்க வேண்டும்.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நெல்லை.

   நீக்கு
 7. செங்குருவி செங்குருவி
  காரமடை செங்குருவி..

  பாட்டு நினைவுக்கு வந்தது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

   //செங்குருவி செங்குருவி
   காரமடை செங்குருவி.

   பாட்டு நினைவுக்கு வந்தது..//

   காரமடையிலும் இந்த செங்குருவி இருக்கும் போலவே!
   பாடல் கேட்ட நினைவு இருக்கிறது.

   நீக்கு
 8. பறவைகளுக்கான உணவு நீருக்கு வசதி செய்துள்ளது சிறப்பு..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பறவைகளுக்கான உணவு நீருக்கு வசதி செய்துள்ளது சிறப்பு..

   வாழ்க நலம்..//

   நன்றி.

   நீக்கு
 9. இசைக்குழு வைத்து  பாடுகின்றன என்பது மிகவும் ஆச்சர்யம். 

  நான் குவைத்தில் இருந்த போது கவனித்து இருக்கின்றேன்.. விடியற்காலையில் ஈச்சை மட்டைகளில் புல் புல் குருவிகள் சேர்ந்திசை செய்வதை!..

  எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இசைக்குழு வைத்து பாடுகின்றன என்பது மிகவும் ஆச்சர்யம்.

   நான் குவைத்தில் இருந்த போது கவனித்து இருக்கின்றேன்.. விடியற்காலையில் ஈச்சை மட்டைகளில் புல் புல் குருவிகள் சேர்ந்திசை செய்வதை!..//

   உங்கள் காலை பொழுதை இனிமையாக்கி இருக்கும் புல் புல் குருவிகள்.

   ஆமாம், காலை நேரம் மரக்கிளை ஊஞ்சலில் அமர்ந்து பாடும்

   இங்கும்.

   எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!..//

   இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் நாளும்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 10. படங்கள் அழகாக உள்ளன. இத்தனை படங்கள் எடுக்க எத்தனை நாட்கள் செலவிட்டீர்களோ? அதே போல் பதிவு சீராகவும் நாட்கள் எடுத்திருக்கும். பறவைகளை வசந்தம் மற்றும் கோடையில் மட்டுமே எளிதாக காணமுடியும். பேரனுக்கு பாராட்டுக்கள்

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஜெய்குமார் சார், வாழ்க வளமுடன்

   //படங்கள் அழகாக உள்ளன. இத்தனை படங்கள் எடுக்க எத்தனை நாட்கள் செலவிட்டீர்களோ? அதே போல் பதிவு சீராகவும் நாட்கள் எடுத்திருக்கும்//

   படங்கள் தினம் தினம் எடுத்துக் கொண்டு இருக்கிறேன்.
   பதிவுக்கு சேமித்து வைப்பேன் கொஞ்சம் கொஞ்சமாக.
   விவரங்கள் தேடி எடுத்தபின் போடுவேன் பதிவு.

   //பறவைகளை வசந்தம் மற்றும் கோடையில் மட்டுமே எளிதாக காணமுடியும். //

   ஆமாம்.


   பேரனுக்கு பாராட்டுக்கள்//

   பேரனை பாராட்டியதற்கு நன்றி.
   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.   நீக்கு
 11. // தாவர உணவுகளைத் தான் உண்ணும் //

  சிவ நெறிப் பறவைகள் போலிருக்கின்றது..

  எல்லா பறவை இனங்களும் சர்வ பட்சிணியாக இருக்க -
  இங்கே நம்மிடையேயும் ஒரு பறவை இருக்கின்றது..

  கிளி!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // தாவர உணவுகளைத் தான் உண்ணும் //

   சிவ நெறிப் பறவைகள் போலிருக்கின்றது..//

   நம் ஊர் குருவிகள், தானியங்கள், கொசுவின் முட்டை, பூக்களில் உள்ள புழு, பூச்சிகளை உண்ணும். இங்கும் இந்த குருவி மட்டும் தாவர உண்ணி.

   எல்லா பறவை இனங்களும் சர்வ பட்சிணியாக இருக்க -
   இங்கே நம்மிடையேயும் ஒரு பறவை இருக்கின்றது..
   கிளி//

   நம் நாட்டு கிளிதான் பழங்கள், கொட்டைகள், பூவின் மொட்டுகளை உண்ணுகிறது.
   ஆஸ்திரேலியாவில் கியா எனும் கிளி அழுகிய பொருட்கள், மற்றும் மாமிசங்களை உண்ணுமாம்.

   மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 12. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. சிகப்பு நிற குருவி அழகாக உள்ளது. படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. தங்கள் பேரன் எடுத்த படங்களும் மிகத் தெளிவாக அழகாக இருக்கிறது. தங்கள் பேரனுக்கு என் வாழ்த்துகளைச் சொல்லவும்.

  தாங்கள் மகன் வீட்டுக்கு வந்து விட்ட விபரம் அறிந்து கொண்டேன். அனைவரையும் கேட்டதாகக் கூறுங்கள். தங்கள் மகன் தாங்கள் பறவைகளுக்கு உணவு, நீர் தர அமைத்துத் தந்த ஜாடி போன்ற பாத்திரம் நன்றாக உள்ளது. அது இரவில் ஒளி தருவதும் நன்மைக்கே..! தங்கள் விருப்பம் அறிந்து அவர் தங்களுக்கு உதவியாக இவ்வாறு செய்வது பாராட்டப்படவேண்டியது.

  சிகப்பு குருவியின் சிறப்பை பற்றி அறிந்து கொண்டேன். அது குழுவாக இசையமைத்து பாடுவதும் வியப்புதான். இறைவனின் படைப்பில் இப்படி எத்தனை விதமான செயல்கள் உள்ளன என்பதை நினைக்கும் போது ஆச்சரியம் வருகிறது. அழகான படங்களும், செய்திகளுமாக பதிவு நன்றாக உள்ளது. காணொளிகள் பிறகு கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

   //பதிவு அருமை. சிகப்பு நிற குருவி அழகாக உள்ளது. படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது.//

   நன்றி.

   //தங்கள் பேரன் எடுத்த படங்களும் மிகத் தெளிவாக அழகாக இருக்கிறது. தங்கள் பேரனுக்கு என் வாழ்த்துகளைச் சொல்லவும்.//

   பேரனிடம் சொல்கிறேன் உங்கள் வாழ்த்துக்களை.

   //தாங்கள் மகன் வீட்டுக்கு வந்து விட்ட விபரம் அறிந்து கொண்டேன். அனைவரையும் கேட்டதாகக் கூறுங்கள்.//

   கண்டிப்பாய் சொல்கிறேன்.

   //தங்கள் மகன் தாங்கள் பறவைகளுக்கு உணவு, நீர் தர அமைத்துத் தந்த ஜாடி போன்ற பாத்திரம் நன்றாக உள்ளது. அது இரவில் ஒளி தருவதும் நன்மைக்கே..! தங்கள் விருப்பம் அறிந்து அவர் தங்களுக்கு உதவியாக இவ்வாறு செய்வது பாராட்டப்படவேண்டியது.//

   பறவைகள் நீர் அருந்த மண்பாத்திரம் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி அனுப்பினாள் மருமகள். மதுரையில் வைத்து இருந்தேன்.
   அங்கு இப்போது அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பதால் தண்ணீர் வைக்க சரியான இடம் இல்லை, ஜன்னலில் வைத்து இருக்கிறேன், ஜன்னல் பக்கம் நிழலுக்கு ஒதுங்க வந்தால் குடிக்கும்.

   மகனை பாராட்டியதற்கு நன்றி.

   //சிகப்பு குருவியின் சிறப்பை பற்றி அறிந்து கொண்டேன். அது குழுவாக இசையமைத்து பாடுவதும் வியப்புதான். இறைவனின் படைப்பில் இப்படி எத்தனை விதமான செயல்கள் உள்ளன என்பதை நினைக்கும் போது ஆச்சரியம் வருகிறது. அழகான படங்களும், செய்திகளுமாக பதிவு நன்றாக உள்ளது. காணொளிகள் பிறகு கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

   ஆமாம், சிவப்பு குருவிகள் இசைகுழு வைத்து பாடுவதுதான் வியப்பு.
   பல வித மலர்களும், பலவித பறவைகளும் , இறைவன் படைப்பால்
   இயற்கையை அழகு படுத்தி கொண்டு இருக்கிறது. மன அமைதியும், ஆனந்தமும் நமக்கு கிடைக்கிறது.

   youtube சேனலில் போட்டு இருக்கிறேன் பறவைகளை பற்றி எப்போது வேண்டுமென்றாலும் நேரம் கிடைக்கும் போது பார்க்கலாம்.
   உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.   நீக்கு
 13. அழகாக உள்ளது அம்மா...

  உங்களின் அன்பான சேவை சிறப்பு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

   //அழகாக உள்ளது அம்மா...

   உங்களின் அன்பான சேவை சிறப்பு..//

   உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்.

   நீக்கு
 14. கோமதி அக்கா நலம்தானே?? இன்றுதான் நல்ல நாள் பார்த்து களம் இறங்கியிருக்கிறேன். இப்போ குளிர்காலம் முடிஞ்சுவிட்டதால எங்கும் பார்க்க ஆசையாக இருக்குது, வெய்யிலும் பூக்களுமாக, பறவைகளுக்கும் கொண்டாட்டம்தான்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
   அம்பாணியாகிட்ட அதிராவுக்கு நேரம் கிடைப்பது நல்ல விஷயம்.
   வாங்க வாங்க நீங்கள் வலைத்தளம் வரும் நாள் எல்லாம் நல்ல நாள்தான்.

   //இப்போ குளிர்காலம் முடிஞ்சுவிட்டதால எங்கும் பார்க்க ஆசையாக இருக்குது, வெய்யிலும் பூக்களுமாக, பறவைகளுக்கும் கொண்டாட்டம்தான்..//

   ஆமாம், மலர்கள் மலர்ந்து நமக்கும் மகிழ்ச்சியை தருகிறது, பறவைகளுக்கும் கொண்டாட்டம், நமக்கும் மகிழ்ச்சி.

   நீக்கு
 15. ரெட் ஸ்பரோ அழகாக இருக்கிறது, எனக்கும் பறவைகளுக்கு இப்படி வாங்கி உணவு கொடுக்க ஆசை ஆனா டெய்சிப்பிள்ளை இருபதால அந்த ஆசையை அடக்கி விட்டேன், எப்பவாவது கூட்டமாக வந்தால், டெய்சியை உள்ளே ஒளிச்சுப்போட்டு, தானியங்கள் போட்டு விடுவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரெட் ஸ்பரோ அழகாக இருக்கிறது, எனக்கும் பறவைகளுக்கு இப்படி வாங்கி உணவு கொடுக்க ஆசை ஆனா டெய்சிப்பிள்ளை இருபதால அந்த ஆசையை அடக்கி விட்டேன், எப்பவாவது கூட்டமாக வந்தால், டெய்சியை உள்ளே ஒளிச்சுப்போட்டு, தானியங்கள் போட்டு விடுவேன்.//

   முன்பு சொல்லி இருக்கிறீர்கள். சின்ன சின்ன குருவி கூட்டம் வரும் என்று. டெய்சிக்கு பிடிக்கும் இல்லையா? பிடித்துவிடும்.

   YouTube channel ஆரம்பித்து இருக்கிறேன், நீங்கள் சொன்னது போல பறவைகளின் காணொளி போட்டுக் கொண்டு இருக்கிறேன்.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.

   நீக்கு
 16. புதிது புதிதாகப் பறவைகள் பற்றியும் அவற்றின் பழக்கவழக்கங்கள் குறித்தும் உங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. அந்த பலூனில் இருந்து எப்படித் தண்ணீர் குடிக்கும்? புரியலை. மற்றபடி உங்கள் மகனும் இதில் ஆர்வமாக உங்களுக்காக உழைத்து எல்லா வசதிகளும் பண்ணிக் கொடுக்கிறார். பேரன் எடுத்த படங்கல் நன்றாக வந்திருக்கின்றன. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

   //புதிது புதிதாகப் பறவைகள் பற்றியும் அவற்றின் பழக்கவழக்கங்கள் குறித்தும் உங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது//

   புதிய பறவைகளை பார்க்கிறேன், அவைகளை பற்றி இணையத்தில் சேகரித்த விவரங்களை இங்கு பகிர்கிறேன்.
   நீங்கள் எல்லாம் ஊக்கபடுத்துவதால் மேலும் ஆர்வம் ஏற்படுகிறது.
   உங்கள் அனைவருக்கும் நன்றி.

   //அந்த பலூனில் இருந்து எப்படித் தண்ணீர் குடிக்கும்? புரியலை.//
   அந்த பலூனில் கீழே கூடையில் பூக்கள் இருக்கிறது பாருங்கள், அந்த பூவில் வாய் வைத்து நீரை அருந்தும். அதன் அலகு ஊசி போல குச்சியாக இருக்கும் அதை பூவின் துளையில் விட்டு ஸ்டா போல உறிஞ்சும்.

   மகனை, பேரனை பாராட்டியதற்கு நன்றி.   நீக்கு
 17. சிவப்புக் குருவி ஹோலி கலர் அடித்துக் கொண்டாடுவது போல இருக்கு!!! மிக அழகு!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

   //சிவப்புக் குருவி ஹோலி கலர் அடித்துக் கொண்டாடுவது போல இருக்கு!!! மிக அழகு!!//

   ஆமாம் கீதா.

   நீக்கு
 18. கவின் எடுத்திருக்கும் படமும் அழகு! திறமைசாலி.

  ஓ ஆண் பறவைக்குத்தான் இப்படி நிறம் மாறுகிறதா...அட குடும்பத்தை நன்றாகப் பார்த்துக் கொள்கிறதே..பல பறவைகள், விலகுங்களில் பெண்கள் வீட்டிலிருக்க ஆண்கள் ஏதேனும் ஒரு பொறுப்பை எடுத்துக் கொள்வதைப் பார்க்க முடிகிறது.

  எப்போதும் பாடிக் கொண்டே வேறு இருக்குமா...ஆஹா அப்ப குடும்பமே மகிழ்வான குடும்பம்தான்,.பார்க்கவும் மிக அழகாக இருக்கிறது.

  கீதா  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கவின் எடுத்திருக்கும் படமும் அழகு! திறமைசாலி.//
   ஆமாம், அவனுக்கும் படங்கள் எடுக்க ஆர்வம் அதிகம்.

   //ஓ ஆண் பறவைக்குத்தான் இப்படி நிறம் மாறுகிறதா...அட குடும்பத்தை நன்றாகப் பார்த்துக் கொள்கிறதே..பல பறவைகள், விலகுங்களில் பெண்கள் வீட்டிலிருக்க ஆண்கள் ஏதேனும் ஒரு பொறுப்பை எடுத்துக் கொள்வதைப் பார்க்க முடிகிறது.//

   கூடு கட்ட உதவும், கூட்டில் பெண் பறவை அடை காக்கும் போது தாய் பறவைக்கு உணவு கொடுக்கும் அப்புறம் குஞ்சுகளுக்கு கொண்டு வந்து கொடுக்கும் காணொளிகளை பார்க்கும் போது வியப்பாக இருக்கும். பொறுப்புள்ள, பொறுப்பி இல்லாதவைகள் எல்லா பிறப்புகளிலும்(எல்லா ஜீவராசிகளிலும்)இருக்கிறது போல!   //எப்போதும் பாடிக் கொண்டே வேறு இருக்குமா...ஆஹா அப்ப குடும்பமே மகிழ்வான குடும்பம்தான்,.பார்க்கவும் மிக அழகாக இருக்கிறது.//

   ஆமாம், மகிழ்வான குடும்பம்தான்.

   நீக்கு
 19. முதல் காணொளியில் என்னடா இது பின் புலம் சத்தம் என்று அதுவும் தமிழ்க்குரல்கள்...என்று பார்த்தால் கீழே உங்கள் கருத்து வாசித்துப் புரிந்து கொண்டேன். பேச்சுக் குரல் கேட்டதே தவிர என்ன என்று எனக்குப் புரியவில்லை காதுப் பிரச்சனையால்

  //ஆண் சிவப்பு குருவிக்கு நிறம் அதன் உணவில் உள்ள நிறமிகளிலிருந்து கிடைக்கிறதாம். ஆரஞ்சு, மஞ்சள் நிற குருவிகளுக்கும் அப்படித்தான் நிறம் வருகிறதாம்.
  இந்த ஹவுஸ்ஃ பிஞ்ச்கள் தங்கள் குஞ்சுகளுக்கு தாவர உணவுகளையே கொடுக்குமாம். இது பறவை உலகில் மிகவும் அரிதான நிகழ்வு என்கிறார்கள்.//

  //இந்த ஹவுஸ்ஃ பிஞ்ச் ஸ்பாரோ சிவப்பு தலை, மார்பில் சிவப்பு உள்ள பறவைகள் இசைகுழு வைத்து இருக்கிறதாம் இவை பாடும் நீண்ட இனிய பாடல் பெண் குருவிகளுக்கு பிடிக்குமாம். //

  ஆஹா!

  ஆச்சரியமான தகவல்கள், நம்மைச் சுற்றி இருக்கும் உயிரினங்களில் என்னென்ன ஆச்சரியங்களை இந்த இயற்கை தந்திருக்கிறது! நாம் தான் இயற்கையைக் கூர்ந்து நோக்கி ரசிக்காமல் எதை எதையே தேடி அலைந்துகொண்டிருக்கிறோம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //முதல் காணொளியில் என்னடா இது பின் புலம் சத்தம் என்று அதுவும் தமிழ்க்குரல்கள்...என்று பார்த்தால் கீழே உங்கள் கருத்து வாசித்துப் புரிந்து கொண்டேன். பேச்சுக் குரல் கேட்டதே தவிர என்ன என்று எனக்குப் புரியவில்லை காதுப் பிரச்சனையால்//

   ஒரு நேர்காணல் நிகழ்ச்சி. ரஜினிபற்றி ஏதோ பேசுவது இருக்கும்.
   அடுத்த காணொளியில் பாட்டு இருக்கும்.


   //ஆச்சரியமான தகவல்கள், நம்மைச் சுற்றி இருக்கும் உயிரினங்களில் என்னென்ன ஆச்சரியங்களை இந்த இயற்கை தந்திருக்கிறது! நாம் தான் இயற்கையைக் கூர்ந்து நோக்கி ரசிக்காமல் எதை எதையே தேடி அலைந்துகொண்டிருக்கிறோம்.//

   ஆமாம், நம் கவலைகளை மறக்க நல்ல மருந்து இயற்கையை ரசிப்பது. அதுவும் இறைவழிபாடு போலதான்.
   நீங்கள் சொல்வது போல ஆச்சரியங்களை, இயற்கை தந்து கொண்டு இருக்கிறது. பறவைகள் கஷ்டங்களை பார்க்கும் போது நம் கஷ்டங்கள் ஒன்று இல்லை என்பதை உணரலாம்.

   இங்கு வீட்டுமுன் இருக்கும் குட்டை மரத்தில் மணிப்புறா கூடு கட்டி இருக்கிறது, அன்று காற்று பயங்கரமாக அடித்தது. ஓடி சென்று பார்த்தேன், மணிபுறா கூட்டில் அப்படியே உட்கார்ந்து இருந்தது.
   தன் குஞ்சை பாதுகாக்க அவை படும் பாடு! இறைவன் குஞ்சுகள் பொரிந்து பறந்து போக பாதுகாத்து அருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.

   நீக்கு
 20. பறவைகள் உணவு உண்ண வைத்திருக்கும் ஜாடிகள் மிக அழகு, நல்ல விஷயமும் கூட. அதுவும் மகன் உங்களுக்காக நீங்கள் பார்க்கும் வகையில் தொங்க வைத்திருப்பது மிக மிக மகிழ்வான விஷயம்.

  //தேன்ச்சிட்டு இதில் இருக்கும் பூவில் தன் நீண்ட அலகை வைத்து உறிஞ்சி குடிக்கும். என் கையில் காமிரா, செல் இல்லாத போது வந்து குடிக்கிறது, எடுத்து வர உள்ளே வந்தால் போய் விடுகிறது. காத்து இருந்து சலித்து விட்டேன். //

  அக்கா ஆஹா எனக்கும் இந்த தேன் சிட்டைப் படம் பிடிக்க முயன்று சலித்து...அதுவும் குட்டிப் பறவை இல்லையா? என் கேமராவில் கொஞ்சம் அருகில் போனால்தான் சரியா வரும்....ஆனால அதுவோ பறந்து கொண்டே இருக்கும். ஒரு இடத்தில் சில மணித் துளிகள் கூட இருக்காது டக் டக்கென்று பறந்துவிடும்.

  பார்த்தால் பதிவு செய்து விடுகிறேன்.//

  செய்ங்க அக்கா வாழ்த்துகள்! கழுத்தில் கேமராவையோ மொபைலையோ தொங்கவிட்டுக் கொண்டே இருந்தால் எடுக்க முடியுமோ!! ஹாஹாஹாஹா

  ஆமாம் நீங்கள் மதுரையில் வைத்திருப்பதை முன்பு காட்டியிருக்கீங்க, இங்கிருந்து இரவில் ஒளிரும் ஒன்றை வாங்கிச் செல்லுங்கள் அக்கா.

  கீதா

  பதிலளிநீக்கு
 21. பறவைகளுக்கு மூட்டை மூட்டையாக வாங்க வேண்டும் போல உள்ளது. புறாவும், குருவிகளும் வெகு விரைவில் உண்டு விடுகிறது("அம்மா கண் வைக்காதே" என்று பறவைகள் சொல்வது கேட்குது)//

  ஹாஹாஹா...ஆமாம் அவை வைக்க வைக்கத் தின்றுவிடும். இங்கு நான் சிறு தானியம், அரிசி எல்லாம் போட போட காலியாகிவிடும். ஆனால் எப்போது வருகின்றன என்று தெரியவில்லை. இங்கும் இனி தொங்க விட்டுப் பார்க்க வேண்டும். ஆனால் வீடு மாறிக் கொண்டே இருப்பதால், மகன் சொன்னான், பாவம் பறவைகள் அவை இங்கு வந்து தேடும் சாப்பாடு இல்லைன்னு ஏமாந்துவிடும் என்று. அது போல்தான் பூனைக்கும் நாய்க்கும் வைப்பதையும் சொன்னான். ஆனால் என்ன செய்ய முடியும் போகும் இடங்களில் வைக்க வேண்டியதுதான் என்று சொன்னேன்.

  "மகன் கேட்பது எவ்வளவு சாப்பிட்டாலும் குருவிகள் குண்டாகாமல் அப்படியே இருக்கே!"//

  ஹாஹாஹா அதென்னவோ உண்மைதான். அவை பறந்து கொண்டே இருப்பதாலோ?

  //எவ்வளவு சின்னதாக கடுகு போல இருக்கு. இதில் உள் இருப்பதை மட்டும் உண்ணும் குருவி , அதன் தோல் பகுதி தரை எல்லாம் சிதறி இருப்பதை, காடை பறவை உண்ணும்//

  அட! தோல் பகுதி கூட வீணாவதில்லையே நல்லது அதுவும் காடைக்கு உணவாகிறதே!

  //இப்படி தானிய விதைகள் இந்த பறவைக்கு மிகவும் பிடிக்கும், சூரியகாந்தி விதைகள் மிக மிக பிடிக்கும்.இந்த உணவுகளை வைத்தால் இந்த பறவைகளின் வருகை அதிகமாகும் என்கிறார்கள்.//

  ஆமாம் அக்கா. கண்டிப்பாக வரும்.....நீங்களும் பார்ப்பீங்க.

  சூரியகாந்தி விதைகள் இங்கு நானும் பார்த்தேன் விலை அதிகமாக இருக்கு. அதனால் நான், நாம் வாங்கும் வெள்ளரி, பூஷணி, சுரைக்காய் என்று பல விதைகளைக் குப்பையில் போடாமல் சேர்த்து வைத்து வெளியில் வைத்துவிடுகிறேன், அணிலோ பறவைகளோ சாப்பிடட்டும் என்று

  //அதை பார்த்து கொண்டு இருக்கிறேன். அவைகளின் இனிமையான பாடலும் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.//

  அருமை...

  சமைத்த உணவுகள் வைப்பதுதான் தடை இது போன்ற உணவுகள் வைக்கலாம்.//

  ஆமாம். ஆனால் இங்கெல்லாம் அப்படி இல்லையே.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா...ஆமாம் அவை வைக்க வைக்கத் தின்றுவிடும். இங்கு நான் சிறு தானியம், அரிசி எல்லாம் போட போட காலியாகிவிடும். ஆனால் எப்போது வருகின்றன என்று தெரியவில்லை. இங்கும் இனி தொங்க விட்டுப் பார்க்க வேண்டும். ஆனால் வீடு மாறிக் கொண்டே இருப்பதால், மகன் சொன்னான், பாவம் பறவைகள் அவை இங்கு வந்து தேடும் சாப்பாடு இல்லைன்னு ஏமாந்துவிடும் என்று. அது போல்தான் பூனைக்கும் நாய்க்கும் வைப்பதையும் சொன்னான். ஆனால் என்ன செய்ய முடியும் போகும் இடங்களில் வைக்க வேண்டியதுதான் என்று சொன்னேன்.//

   நானும் உண்களை போல ஊர் மாறி, வீடுமாறி வந்த போது நினைத்தேன், ஆனால் எல்லா இடங்களிலும் அவை தேடி வந்து விட்டன. அது போல உங்களை தேடியும் வந்து கொண்டுதானே இருக்கிறது.

   //ஹாஹாஹா அதென்னவோ உண்மைதான். அவை பறந்து கொண்டே இருப்பதாலோ?//

   காலை முதல்மாலை வரை பறந்து கொண்டே இருக்கே! உணவுக்கு ஏற்ற உழைப்பு அவசியம் இல்லையா?


   //சூரியகாந்தி விதைகள் இங்கு நானும் பார்த்தேன் விலை அதிகமாக இருக்கு. அதனால் நான், நாம் வாங்கும் வெள்ளரி, பூஷணி, சுரைக்காய் என்று பல விதைகளைக் குப்பையில் போடாமல் சேர்த்து வைத்து வெளியில் வைத்துவிடுகிறேன், அணிலோ பறவைகளோ சாப்பிடட்டும் என்று//

   நல்ல காரியம். நான் கம்பு,வெள்ளை சோளம் வாங்கி போடுவேன்.
   நான் அளவு முறைதான். தினம் கொஞ்சம் போடுவேன். சாதம் வேறு வைக்கிறேன் தினம்.

   நீக்கு
  2. ஹாஹாஹா...ஆமாம் அவை வைக்க வைக்கத் தின்றுவிடும். இங்கு நான் சிறு தானியம், அரிசி எல்லாம் போட போட காலியாகிவிடும். ஆனால் எப்போது வருகின்றன என்று தெரியவில்லை. இங்கும் இனி தொங்க விட்டுப் பார்க்க வேண்டும். ஆனால் வீடு மாறிக் கொண்டே இருப்பதால், மகன் சொன்னான், பாவம் பறவைகள் அவை இங்கு வந்து தேடும் சாப்பாடு இல்லைன்னு ஏமாந்துவிடும் என்று. அது போல்தான் பூனைக்கும் நாய்க்கும் வைப்பதையும் சொன்னான். ஆனால் என்ன செய்ய முடியும் போகும் இடங்களில் வைக்க வேண்டியதுதான் என்று சொன்னேன்.//

   நானும் உண்களை போல ஊர் மாறி, வீடுமாறி வந்த போது நினைத்தேன், ஆனால் எல்லா இடங்களிலும் அவை தேடி வந்து விட்டன. அது போல உங்களை தேடியும் வந்து கொண்டுதானே இருக்கிறது.

   //ஹாஹாஹா அதென்னவோ உண்மைதான். அவை பறந்து கொண்டே இருப்பதாலோ?//

   காலை முதல்மாலை வரை பறந்து கொண்டே இருக்கே! உணவுக்கு ஏற்ற உழைப்பு அவசியம் இல்லையா?


   //சூரியகாந்தி விதைகள் இங்கு நானும் பார்த்தேன் விலை அதிகமாக இருக்கு. அதனால் நான், நாம் வாங்கும் வெள்ளரி, பூஷணி, சுரைக்காய் என்று பல விதைகளைக் குப்பையில் போடாமல் சேர்த்து வைத்து வெளியில் வைத்துவிடுகிறேன், அணிலோ பறவைகளோ சாப்பிடட்டும் என்று//

   நல்ல காரியம். நான் கம்பு,வெள்ளை சோளம் வாங்கி போடுவேன்.
   நான் அளவு முறைதான். தினம் கொஞ்சம் போடுவேன். சாதம் வேறு வைக்கிறேன் தினம்.

   நீக்கு
 22. கடைசிப் படமும் அழகு, நீங்களும் அதைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுவது எல்லாமே என்ன சொல்ல? நம்மூரில் இப்படி எல்லாம் பறவைகளைப் பார்க்க முடிவதில்லையே...அதாவது நாம் வீட்டிலேயே இருந்து கொண்டு...அதைத் தேடி தேடி அல்லவா செல்ல வேண்டியிருக்கிறது.

  இங்கு அடுத்தடுத்து வீடுகள்.....மூன்று புறமும் கை நீட்டினால் அவர்கள் வீட்டு அறைகள் என்று இடுக்காக வீடுகள். இதில் எப்படி வரும் பறவைகள்? நாம் ஊரை விட்டுத் தள்ளிப் போக வழியில்லை. அங்கு சென்றாலும் அங்கும் வீடுகள் முளைத்துவிடுகின்றன!!!!

  பதிவை ரசித்தேன் கோமதிக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கடைசிப் படமும் அழகு, நீங்களும் அதைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுவது எல்லாமே என்ன சொல்ல? நம்மூரில் இப்படி எல்லாம் பறவைகளைப் பார்க்க முடிவதில்லையே...அதாவது நாம் வீட்டிலேயே இருந்து கொண்டு...அதைத் தேடி தேடி அல்லவா செல்ல வேண்டியிருக்கிறது.//

   அங்கு ஊரில் பால்கனி வழியாக பார்ப்பேன்.
   மாயவரத்தில் மொட்டை மாடி போய் பார்ப்பேன், ஜன்னல் வழியாக பார்ப்பேன்.

   //இங்கு அடுத்தடுத்து வீடுகள்.....மூன்று புறமும் கை நீட்டினால் அவர்கள் வீட்டு அறைகள் என்று இடுக்காக வீடுகள். இதில் எப்படி வரும் பறவைகள்? நாம் ஊரை விட்டுத் தள்ளிப் போக வழியில்லை. அங்கு சென்றாலும் அங்கும் வீடுகள் முளைத்துவிடுகின்றன!!!!//

   நீங்கள் நடைபயிற்சியின் போது பார்க்கலாம் தானே பறவைகளை.
   இனி எல்லா இடமும் மனிதன் வசிக்க வீடுகள்தான். பாதையோர மரங்களையும் பறவைகள் வசிக்க விட்டு வைக்கவில்லை.

   பதிவை ரசித்து கருத்துக்களை சொன்னதற்கு நன்றி கீதா.

   நீக்கு
 23. செங்குருவிகளின் புகைப்படங்கள் மிக அழகு! விபரங்கள் அனைத்தும் வியக்க வைக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்

   //செங்குருவிகளின் புகைப்படங்கள் மிக அழகு! விபரங்கள் அனைத்தும் வியக்க வைக்கிறது!//

   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 24. படங்களை பொறுமையாக எடுத்து இருக்கிறீர்கள்.

  காணொளிகள் கண்டேன்.

  தகவல்கள் சிறப்பு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   படங்களை பொறுமையாக எடுத்து இருக்கிறீர்கள்.

   காணொளிகள் கண்டேன்.

   தகவல்கள் சிறப்பு//

   உங்கள் கருத்துக்கு நன்றி சகோ.

   நீக்கு
 25. சிகப்புத் தலை குருவி அழகு. தகவல்களுக்கும் நன்றி. தாவர உணவுகளை மட்டுமே குஞ்சுகளுக்குக் கொடுக்கும் எனும் செய்தி வியப்பு. வளர்ந்த பிறகு புழுப்பூச்சிகளை உண்ணக் கூடுமோ?

  வீட்டில் பறவைகளுக்கு தானியம் வைப்பதோடு அவற்றின் விருப்பப் பட்டியல், எந்தப் பறவை எப்படி உண்ணும் போன்ற தகவல்களை அவதானித்துப் பகிர்ந்திருப்பது சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

   //சிகப்புத் தலை குருவி அழகு. தகவல்களுக்கும் நன்றி. தாவர உணவுகளை மட்டுமே குஞ்சுகளுக்குக் கொடுக்கும் எனும் செய்தி வியப்பு. வளர்ந்த பிறகு புழுப்பூச்சிகளை உண்ணக் கூடுமோ?//

   சில பெரிய குருவிகள் சத்து உண்வாக புழு , பூச்சிகளை உண்ணும் என்று போட்டு இருக்கு. மற்றபடி தாவர உணவுதான்.

   //வீட்டில் பறவைகளுக்கு தானியம் வைப்பதோடு அவற்றின் விருப்பப் பட்டியல், எந்தப் பறவை எப்படி உண்ணும் போன்ற தகவல்களை அவதானித்துப் பகிர்ந்திருப்பது சுவாரஸ்யம்//

   இங்கு அவைகளை உண்ணுவதை பார்த்து தெரிந்து கொண்டேன்.
   இந்த தானியங்களை தின்று தீர்க்கும் வரை வேறு உணவும் எடுக்காது. ஒரு நாள் பிரட் துண்டுகள் போட்டுப் பார்த்தேன் அதை தொடவே இல்லை.

   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.


   நீக்கு