செவ்வாய், 22 ஜூன், 2021

கோடையிலே இளைப்பாறி


போன மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை இந்த நீர்நிலை பார்க்க  போனோம். அந்த இடம் மிகவும்  அழகாய் இருந்தது. வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் தான் இருந்தது.  அந்த நீர் நிலையில் வாத்துக்களும், பறவைகளும்  நிறைய இருந்தது.

அழகான நீர் நிலையும்,  நிழல் தரும் மரங்களும், பறவைகளும்,விலங்குகளும்,(நாய்கள்) மற்றும் அங்கு பார்த்த  மனிதர்களும் மகிழ்ச்சியாக இருப்பதைப்பார்த்த  போது இந்த பாடல் நினைவுக்கு வந்தது.


திருவருட்பா

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண்ணீரே
உகந்ததண்ணீரிடைமலர்ந்த சுகந்த மண மலரே 
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில் உறும்பயனே ஆடையிலே யெனைமணந்த மணவாளா பொதுவில் 
ஆடுகின்ற  அரசே என் அலங்கல் அணிந்தருளே.

- இராமலிங்க அடிகளார் (வள்ளலார்)

வள்ளலார் பாடல் பள்ளியில் மனப்பாடச் செய்யுள் நமக்கு .
 
இந்த பாட்டில் சொல்வது போல உலக வாழ்க்கையில்   உழலும் போதும்,  கோடை போன்ற துன்பம் ஏற்படும் போதும் நிழல் தரும் மரமாக , கனி தரும் மரமாக  இறைவன் இருக்கிறான்.  நமக்கு மட்டும் அல்ல எல்லா உயிர்களுக்கும்தான்.

கோடையிலே இளைப்பாற்றி கொள்ள சிறந்த இடமாக இருந்தது இந்த இடம். 


மரத்தின் நிழலில்  இளைப்பாற்றிக் கொள்ளும் வாத்துக்கள்












                                கொஞ்சம்  செல்ல சண்டை
இவைகள் நடப்பதைப்பார்த்தவுடன் நினைவுக்கு வந்த பாடல்.

குள்ள குள்ள வாத்து
குவா குவா வாத்து
மெல்ல உடலைச் சாய்த்து
மேலும் கீழும் பார்த்து
செல்லமாக நடக்கும்
சின்ன மணி வாத்து 


ஏன் தலை குனிந்தாயோ!


கொக்கு ஒரு காலில் தவம் இருக்கும், வாத்தும் ஒரு காலில்  தவம் இருக்கிறது

ஒரு கால் மட்டும்தான் தெரிகிறது


கழுத்து நீண்ட வாத்துக்கள் ஆண் வாத்துக்கள் பெண் வாத்துக்களுக்கு கழுத்து குட்டையாக இருக்கிறது
பறவைகளும் வாத்துக்களும் பார்க்கவே  மகிழ்ச்சியாக இருந்தது
 தண்ணீர் ,  பச்சை, நீலவண்ணத்தில்  பார்க்க அழகாய் இருக்கிறது

தண்ணீர் குடிக்கிறது காகம்
குடித்த தண்ணீரை தலையை மேலே தூக்கி விழுங்கும் போல!

குளித்து விளையாடும் காகம், கருஞ்சிட்டு

கம்பீர நடை 
ஒரு காகம் பாடி    நடனம் ஆடுவது போல் இருக்கிறது. மகிழ்ச்சி துள்ளல்
கோடையிலே மர நிழலில் பாறை மேடையில்  இளைப்பாற்றி கொள்கிறது.


காகம் போலவே இந்த கருஞ்சிட்டும் உணவு பொருளை தண்ணீரில் கழுவி சாப்பிடுகிறது. கீழே தண்ணீர் குடிக்கும் காகம், உணவை கழுவி சாப்பிடும் கருஞ்சிட்டு. சிறிய காணொளிதான் பாருங்கள்.



நான் எடுத்த ஒரு நிமிடக் காணொளி





வெயில் நேரத்தில் குளிக்க வசதியாக வித விதமாக தண்ணீர் விழும் அமைப்புக்கள். கள்ளி செடியிலிருந்து தண்ணீர் , மீன் வாய் வழியாக தண்ணீர், வாளியை கவிழ்த்தினால் போல தண்ணீர் கொட்டியது. தூரத்திலிருந்து படம் எடுத்தேன்.

அதில் விளையாடி களிக்கும் குழந்தைகளை பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது.


பறவைகளைப்பார்த்ததும்   பக்கத்தில் ஓட  ஆசை
கடல் அலை போல இருக்கிறது . நீர் நிலையிலே இருந்து குளிர்ந்த    மெல்லியபூங் காற்றின்  சுகத்தை அனுபவித்து நடக்கும் பறவை


நாங்களும் சுகமான காற்றை அனுபவித்து நிழலில் அமர்ந்து கொண்டு போன தயிர் சாதம் மாவடு, நெல்லிக்காய் ஊறுகாயோடு  உண்டு மகிழ்ந்து வந்தோம்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
-------------------------------------------------------------------------------------------

39 கருத்துகள்:

  1. படங்கள் எப்போதும்போல அந்த இடத்துக்கே கூட்டிச் சென்று விட்டது.

    கோடையிலே இளைப்பாறி... சினிமா பாடலாகவோ இல்லை தனிப்பாடலாகவோ நிறையதடவை கேட்டிருக்கிறேன். கிட்டப்பா பாடியிருப்பாரோ...

    இதை எழுதும்போது இன்னும் சாப்பிடலை. தயிர் சாதம் வடு, நெல்லி ஊறுகாய்..யம்மி.. பசி எடுக்குது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //படங்கள் எப்போதும்போல அந்த இடத்துக்கே கூட்டிச் சென்று விட்டது.//

      நன்றி.

      //கோடையிலே இளைப்பாறி... சினிமா பாடலாகவோ இல்லை தனிப்பாடலாகவோ நிறையதடவை கேட்டிருக்கிறேன். கிட்டப்பா பாடியிருப்பாரோ...//

      11 வது படிக்கும் போது எனக்கு திருவருட்பா மனபாடப்பகுதி இந்த பாடல்.

      கிட்டப்பா பாடி இருப்பார் அவர் பாடி கேட்டதில்லை , டி.ஆர். மாகாலிங்கம் நாம் இருவர் படத்தில் பாடி கேட்டு இருக்கிறேன். அந்த படம் அடிக்கடி தொலைக்காட்சியில் வைப்பார்கள்.

      //இதை எழுதும்போது இன்னும் சாப்பிடலை. தயிர் சாதம் வடு, நெல்லி ஊறுகாய்..யம்மி.. பசி எடுக்குது//

      மருமகள் செய்தாள் நெல்லிக்காய் ஊறூகாய் , தயிர் சாதம். மாவடு இங்கு கிடைப்பது இல்லை வாங்கியது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.




      நீக்கு
  2. அருமையான அழகான நிழற்படங்களே மனதிற்கு மகிழ்வை தருகிறது என்றால், நிஜத்தில் எந்தளவு இருந்திருக்கும் என்று நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //அருமையான அழகான நிழற்படங்களே மனதிற்கு மகிழ்வை தருகிறது என்றால், நிஜத்தில் எந்தளவு இருந்திருக்கும் என்று நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்...//

      ஆமாம் தனபாலன். மிக அழகான இடம் தான். மனதை சாந்தப்படுத்துகிறது. கவலையை மறக்க செய்கிறது. பறவைகளை, வாத்துக்களை பார்த்து கொண்டே இருக்க நினைக்கும் மனது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  3. குளுகுளு படங்கள்... வாத்துகளைக் கண்டால் மனம் குழந்தையாகி விடும்.. அழகு.. அழகு..

    வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //குளுகுளு படங்கள்//

      நன்றி.

      //வாத்துகளைக் கண்டால் மனம் குழந்தையாகி விடும்.. அழகு.. அழகு..//

      உண்மைதான் , மனம் குழந்தையாகி விடுகிறது, அதுதான் குழந்தை பாட்டு நினைவுக்கு வருகிறது.

      வாழ்க வளமுடன்

      நீக்கு
  4. வெளியிலிருந்து பதிவின் தலைப்பைப் பார்த்ததும் வள்ளலார் ஸ்வாமிகளின் அருட்பா நினைவுக்கு வந்தது...

    பதிவுக்கு வந்ததும் அதே.. அதே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வெளியிலிருந்து பதிவின் தலைப்பைப் பார்த்ததும் வள்ளலார் ஸ்வாமிகளின் அருட்பா நினைவுக்கு வந்தது...//
      உங்களுக்கு நினைவுக்கு வரவில்லை என்றால் தான் ஆச்சரியம்! பக்தியில் திளைக்கும் உள்ளத்திற்கு இந்த வரிகள் வள்ளலார் பாடல் என்று சட் என்று நினைவுக்கு வருமே!

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. படங்கள், சுற்றுச் சூழல் எல்லாமே அழகு. எல்லாக் குடியிருப்புக்களிலும் அம்பேரிக்காவில் இப்படியானச் சின்னச் சின்ன ஏரிகள், அதை ஒட்டிய பூங்காக்கள், குழந்தைகள் விளையாடும் இடங்கள் என அமைந்திருப்பதைப் பார்த்து வியந்திருக்கேன். மெம்பிஸில் இப்படியான ஒரு ஏரியை ஒட்டி அடர்ந்த ஒரு காடும் இருந்தது. அதிலிருந்து விலங்குகள் வெளிவரும் என்பதால் எங்க பெண் அங்கே செல்வதெனில் கொஞ்சம் யோசிப்பாள். கூட்டம் அதிகம் இருந்தால் போவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //படங்கள், சுற்றுச் சூழல் எல்லாமே அழகு.//

      ஆமாம்.

      //எல்லாக் குடியிருப்புக்களிலும் அம்பேரிக்காவில் இப்படியானச் சின்னச் சின்ன ஏரிகள், அதை ஒட்டிய பூங்காக்கள், குழந்தைகள் விளையாடும் இடங்கள் என அமைந்திருப்பதைப் பார்த்து வியந்திருக்கேன். //

      ஆமாம் கீதா, இந்த நீர் நிலையும் ராணுவவீரர்களின் குடியிருப்புதான்.

      கடைக்கு போக கிளம்பினோம், வழியில் இந்த இடத்தை பார்த்தோம் எதிர்பாராமல் அழகிய இடம் கிடைத்தது பார்க்க.

      பறவைகளுக்கு மட்டுமே நீர் அருந்த குளித்து விளையாட இருக்கிறது. கோடையில் பாலைவனத்தில் தண்ணீர் தெய்வம் என்பது போல இருக்கிறது பறவைகளுக்கு.






      நீக்கு
  6. இந்த வாத்துக்கள் எல்லாம் குட்டிக் குஞ்சுலுவுக்குப் பிடித்தமானவை. வீட்டருகே இருக்கும் ஏரிக்குச் சென்று வாத்துக்களுக்கு உணவு அளிப்பது அதற்கு மிகவும் பிடித்தமான விஷயம். இங்கே நைஜீரியாவில் வெளியே போவதெனில் கஷ்டம்! குழந்தையைப் பள்ளியில் விட்டு விட்டுத் துடைப்பம், துடைக்கும் சாதனம், இன்னும் சில வீட்டுப் பொருட்கள் வாங்க மகனும், மருமகளும் அந்தக் குடியிருப்பு வளாகத்தை விட்டு வெளியே செல்லவேண்டும் எனப் பாதுகாவலரிடம் சொல்ல அவர்களோடு நாலு பாதுகாவலர்கள் கூடவே வந்து கடைக்கு உள்ளே அவங்களோடு இருவரும் கடைக்கு வெளியே இருவருமாக இருக்கச் சாமான்கள் வாங்கி வந்திருக்காங்க. அதுக்கப்புறமாப் போவதே இல்லை. உள்ளேயே இருக்கும் கடைகளில் என்ன கிடைக்கிறதோ அதை வாங்கிக்கறாங்க. :( இப்படியும் ஒரு வாழ்க்கை! நினைக்கவும் கவலையாகவும்/பயமாகவும் தான் இருக்கிறது. என்ன செய்ய முடியும்! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாத்துக்கள் குட்டிக் குஞ்சுலுவுக்கு பிடிக்காமல் இருக்குமா? நமக்கே (நாமும் குழந்தையாகி வருகிறோம்) நைஜரியாவில் குழந்தை வெளியில் போக முடியவில்லை என்று கேட்கும் போது மனதுக்கு வருத்தமாய் இருக்கிறது. பாதுகாப்பு வளையத்தில்தான் கடைக்கு போக வேண்டுமா?

      //:( இப்படியும் ஒரு வாழ்க்கை! நினைக்கவும் கவலையாகவும்/பயமாகவும் தான் இருக்கிறது. என்ன செய்ய முடியும்! :(//

      கேட்கவே கஷ்டமாக இருக்கிறதே !

      இயல்பு வாழ்க்கை இல்லையென்றால் வேதனையாகத்தான் இருக்கும்.
      குழந்தை பள்ளியில் இருக்கும் நேரம் மகிழ்ச்சியாக இருப்பாள் சக தோழிகளுடன்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  7. படங்கள் அருமை சகோ அதிலும் முதல்படம் அட்டகாசம்.

    காணொளி கண்டேன்.

    மனதுக்கு இதம் தரும் இடங்கள் கவலைகளை மறக்க வைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் அருமை சகோ அதிலும் முதல்படம் அட்டகாசம்.//

      நன்றி .

      //காணொளி கண்டேன்.//
      நன்றி.


      //மனதுக்கு இதம் தரும் இடங்கள் கவலைகளை மறக்க வைக்கும்.//

      உண்மைதான் ஜி. அங்கிருந்து வரவே மனம் இல்லை.

      உங்கள் கருத்துக்கு நன்றி.



      நீக்கு
  8. நீர் நிலையையும், அதில் நீந்தும் வாத்துக்களையும் பார்க்கும் பொழுதே குளுமை பரவுகிறது. எங்கள் வீட்டிற்கு அருகில் இப்படிதான் ஒரு அழகான சின்ன ஏஎரியும், அதைச் சுற்றி நடப்பதற்கு பாதையும் அமைக்கப்பட்டு இரண்டு வருடங்கள் முன்பு வரை நன்றாகத்தான் இருந்தது. இப்போது பார்த்தால் அந்த ஏரி முழுவதும் ஆகாயத்தாமரை கொடி படர்ந்து நீரெல்லாம் வற்றி விட்டது. நமக்கு சிவிக் சென்ஸ் குறைச்சல்தான்!
    படங்களுக்கு பொருத்தமாக நீங்கள் பகிர்ந்திருக்கும் வள்ளலாரின் பாடலும் அற்புதம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      //நீர் நிலையையும், அதில் நீந்தும் வாத்துக்களையும் பார்க்கும் பொழுதே குளுமை பரவுகிறது//

      கோடைக்கு இதமான குளுமைதரும் இடம்தான்.

      //அந்த ஏரி முழுவதும் ஆகாயத்தாமரை கொடி படர்ந்து நீரெல்லாம் வற்றி விட்டது. நமக்கு சிவிக் சென்ஸ் குறைச்சல்தான்!//

      தொடர்ந்து பராமரித்து வந்தால் நன்றாக இருக்கும். மக்கள் ஒத்துழைப்பு இல்லையென்றால் ஒன்றும் செய்யமுடியாது.

      பொங்கலுக்கு மறுநாள் சாப்பாடு கட்டிக் கொண்டு நீர் நிலைகள் இருக்கும் இடங்களுக்கு போவோம். அந்த நினைவு வந்து விட்டது அங்கு அமர்ந்து சாப்பிடும் போது.
      //படங்களுக்கு பொருத்தமாக நீங்கள் பகிர்ந்திருக்கும் வள்ளலாரின் பாடலும் அற்புதம்!//

      மகிழ்ச்சி.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. கோடைக்கு நிழல் தேடி இளைப்பாறச் செல்ல அருமையான இடம்.  பறவைகளும் அங்கு வந்து ஓய்வெடுப்பதும் தாகம் தனித்துக் கொள்வதும் அழகு.  யாரும் பார்க்கவில்லை என குளித்த காக்கைகளை வேறு நீங்கள் அவைகளுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து விட்டீர்கள்!!!  படங்கள் யாவும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      //கோடைக்கு நிழல் தேடி இளைப்பாறச் செல்ல அருமையான இடம். //

      ஆமாம், ஸ்ரீராம்.

      //பறவைகளும் அங்கு வந்து ஓய்வெடுப்பதும் தாகம் தனித்துக் கொள்வதும் அழகு//

      ஆமாம், மனதே இல்லை அந்த இடத்தை விட்டு வர.

      //யாரும் பார்க்கவில்லை என குளித்த காக்கைகளை வேறு நீங்கள் அவைகளுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து விட்டீர்கள்!!! படங்கள் யாவும் அழகு.//

      ஆமாம், அவைகளுக்கு தெரியாமல் எடுத்தேன், தெரிந்தால் "எங்களை ஏன் எடுத்தாய் "என்று சண்டைக்கு வந்து விட்டால்!

      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.


      நீக்கு
  10. ஒரு நாலுகால் செல்லம் புருவம் வரைந்தது போல வைத்துக் கொண்டு குறுகுறுவென்று பார்க்கிறது!  

    புளிக்காத தயிர்சாதமும், மாவடுவும், ஊறுகாயும் நாவுக்கு இதமாய் இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  11. //ஒரு நாலுகால் செல்லம் புருவம் வரைந்தது போல வைத்துக் கொண்டு குறுகுறுவென்று பார்க்கிறது! //

    ஆமாம், புருவம் வரைந்தது போல் அழகுதான்.

    //புளிக்காத தயிர்சாதமும், மாவடுவும், ஊறுகாயும் நாவுக்கு இதமாய் இருந்திருக்கும்.//

    ஆஹா !படத்தில் தெரிகிறதா! புளிக்காத தயிர் சாதம் என்று உண்மைதான்.

    நாவுக்கு இப்போது புளிப்பு பிடிப்பது இல்லை என்பதும் உண்மை.

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. நீர்நிலை படங்களும், வாத்துகள் அதில் நீந்திச் செல்லும் படங்களும் கண்ணுக்கு விருந்தாக உள்ளது. வாத்துகள் தண்ணீரில் நீந்தி செல்லும் படங்களை பொறுமையாக அழகாக எடுத்துள்ளீர்கள். வள்ளலார் பாடல் மிக அருமையாக உள்ளது. பாடி மகிழ்ந்தேன்.

    காணொளியும் கண்டேன். பறவைகள் குளிக்கும் காட்சிகள் அருமையாக படம் எடுத்து இருக்கிறீர்கள். இந்தப் பறவைகள் மனிதர்களைப் போலவே என்னமாக முங்கி, முங்கி குளிக்கிறது. காண்பதற்கு பரவசமாக இருக்கிறது. இங்கும் மழை பெய்து குட்டையாக ஓரிடத்தில் நீர் தேங்கி விட்டால் புறாக்கள் பறந்து பறந்து இப்படித்தான் குளித்து பார்த்திருக்கிறேன்.

    அந்த காகம் என்னமோ வாயில் உணவை வைத்துக் கொண்டு உண்ணலாமா என யோசித்தபடி இருக்கிறதே...!

    நீங்கள் பகிர்ந்த வாத்துப்பாடலும் நன்றாக உள்ளது. "நான் என்ன சொல்லி விட்டேன்... ஏன் தலை குனிந்தாயோ" என்ற பாடலை தங்கள் வரிகள் நினைவுபடுத்தியது.

    இறுதியில் குளுமையை அனுபவித்து காலாற நடக்கும் அந்த பறவையின் மன நிலையை நீங்களும் உணர்ந்து சொல்லியிருப்பது அருமை. ரசித்தேன். வெயிலுக்கேற்ற உணவாக கொண்டு சென்றிருக்கிறீர்கள். பதிவும் படங்களும் மனதிற்கு இதமூட்டின. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா, வாழ்க வளமுடன்
      வள்ளலார் பாடல் மிக அருமையாக உள்ளது. பாடி மகிழ்ந்தேன்.//

      பதிவை ரசித்து வள்ளலார் பாடலை பாடி மகிழ்ந்தது மகிழ்ச்சி.

      காணொளி உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி."காக்கா குளி குளித்தாயா" என்று அவசராமக் குளிப்பவர்களை கேட்பார்கள் நம் ஊரில்.

      அவரசம் அவசரமாக குளிக்கும் காகம் அழகுதான் இங்கு.

      //அந்த காகம் என்னமோ வாயில் உணவை வைத்துக் கொண்டு உண்ணலாமா என யோசித்தபடி இருக்கிறதே...!//
      இந்த ஊரில் கருஞ்சிட்டு எங்கிறார்கள் இந்த பறவையை. நல்ல கறுப்பு கலரில் இருக்கும் பறவைதான் காகம். குழந்தைகள் பாப்கார்ன் போல எதோ கொடுத்து இருக்கிறார்கள். அதை கொத்தி போகிறது.
      நானும் அந்த பாடலிலிருந்து தான் வரி எடுத்தேன் , அந்த பாடல் நினைவுக்கு வந்தது.

      //இறுதியில் குளுமையை அனுபவித்து காலாற நடக்கும் அந்த பறவையின் மன நிலையை நீங்களும் உணர்ந்து சொல்லியிருப்பது அருமை.//
      ஆமாம் நான் உணர்ந்தேன் என்னை போல அதுவும் குளுமையை அனுபவிக்க நடக்கிறது என்று.

      வெயிலுக்கேற்ற உணவுதான் கொண்டு போனோம்.
      பதிவில் உள்ள அனைத்தையும் ரசித்து எப்போதும் போல் விரிவாக பின்னூட்டம் கொடுத்தமைக்கு நன்றி கமலா.






      நீக்கு
  13. அன்பின் கோமதிமா,
    வாழ்க வளமுடன்.
    படங்களும், பதிவும், பின்னூட்டங்களும் குளுமை.
    ரசித்து ரசித்து எடுத்தப் படங்கள்
    அத்தனையும் அருமை.

    பசுமையான நீரோடை. நீந்தும் வாத்துகள்.
    கறுப்புக் காகங்கள். வால் நீண்ட காகம். அனைத்தும் நீராடும் அழகு.

    நம்மூரில்யே காகம் குளிப்பது அழகாக இருக்கிறது. இந்த சுத்தமான நீரில்
    கேட்க வேண்டுமா.
    காணொளியில்
    எத்தனை சிறப்பாக சுத்தம் செய்து சாப்பிடுகிறது.!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்

      //படங்களும், பதிவும், பின்னூட்டங்களும் குளுமை.
      ரசித்து ரசித்து எடுத்தப் படங்கள்
      அத்தனையும் அருமை.//

      நன்றி அக்கா.

      //பசுமையான நீரோடை. நீந்தும் வாத்துகள்.
      கறுப்புக் காகங்கள். வால் நீண்ட காகம். அனைத்தும் நீராடும் அழகு.//
      ஆமாம் அக்கா, பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல அழகாய் இருந்தது.

      //நம்மூரில்யே காகம் குளிப்பது அழகாக இருக்கிறது. இந்த சுத்தமான நீரில்
      கேட்க வேண்டுமா.//

      கொஞ்ச தண்ணீரில் அவசரக் குளியல் செய்யும் காகம் . இங்கும் அவசரமாக முங்கி குளித்து உடம்பை உதறவுது அழகாய் இருந்தது.

      //எத்தனை சிறப்பாக சுத்தம் செய்து சாப்பிடுகிறது.!!!//
      ஆமாம் வியப்பாக இருந்தது.





      நீக்கு
  14. கோடைக்கேற்ற உணவு தயிர் சாதம். பார்க்கவே நன்றாக இருக்கிறது. கோடையிலே இளைப்பாறி போலவே,
    காயாத கானகத்தே நின்றுலாவும்
    பாடலும் நன்றாக இருக்கும்.

    வள்ளலரின் பாடலைப் பகிர்ந்தது மிகச் சிறப்பு மா.
    அத்தனை படங்களும் கண்களுக்கு இதம். நிறைவு. மிக மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காயாத கானகத்தே நின்றுலாவும்
      பாடலும் நன்றாக இருக்கும்.//

      ஆமாம் ,ஸ்ரீ வள்ளி படத்தில் பாடும் இந்த பாடலும் நன்றாக இருக்கும்.

      டி.ஆர் பாடல்கள் நிறைய பாட்டு பிடித்த பாடல்கள் இருக்கிறது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  15. கோமதிக்கா நேற்றே பதிவு பார்த்து கருத்தும் போட்டேன் ஆனால் கருத்து போகவே இல்லை ப்ளாகர் படுத்திவிட்டது அதனால் விட்டேன்

    படங்கள் அட்டகாசம் கோமதிக்கா. நீர் நிலை என்றாலே எனக்கு ரொம்பப் பிடிக்கும் அதுவும் சுற்றி பசுமை...

    வாத்துகள், பறவைகள் எல்லாம் அழகு. நானும் எங்கள் வீட்டு அருகில் உள்ள ஏரிக்கரையில் வாக்கிங்க் போகும் போது எடுத்து வைத்திருக்கிறேன் ஆனால் இந்த அளவு க்ளோசப் இல்லை அக்கா. என் கேமரா ஜூம் செய்தாலும் அத்தனை எடுக்காது.

    இந்தக் கருத்து போகுதா பார்க்கிறேன். ஆனால் கருத்துகளை வேர்டில் போட்டு வைத்துவிடுவதால் எப்ப போகுதோ அப்ப காப்பி செய்து போட்டுவிடுகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்
      கணினி மூட் சரியில்லை என்றால் என்ன செய்வது?
      பரவாயில்லை கீதா முடிந்த போது கருத்து போடுங்கள்.

      //படங்கள் அட்டகாசம் கோமதிக்கா. நீர் நிலை என்றாலே எனக்கு ரொம்பப் பிடிக்கும் அதுவும் சுற்றி பசுமை...//

      நன்றி. உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் தெரியுமே!
      நீங்கள் எடுத்த ஏரிக்கரை படங்களையும் போடுங்கள் கீதா.

      கருத்து வந்து விட்டது, நானும் பதில் கொடுத்து விட்டேன்.


      நீக்கு
  16. காகம், கருஞ்சிட்டு எல்லாம் தண்ணீரில் நனைந்து மகிழ்வது கண்கொள்ளாக் காத்கி. காணொளிகள் ரொம்ப நல்லாருக்கு கோமதிக்கா ரொம்ப ரசித்தேன்.

    நாலுகால் ஜீவன் ஆஹா என்ன அழகு!!! ப்யூட்டி பார்லர் போய் வந்தது போல இருக்கு புருவம் ஹாஹாஹாஹா

    தண்ணீர் மற்றொரு பக்கம் விழுவது பார்க்க ரொம்ப அழகாக இருக்கு...ஒரு படத்தில் கொஞ்சம் கடல் கலர் தண்ணீர் மற்றொன்ரில் பச்சை என்று அழகு. வெகு சுத்தம்.

    கீதா


    எல்லாம் ரொம்ப ரொம்ப ராசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிகளை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //நாலுகால் ஜீவன் ஆஹா என்ன அழகு!!! ப்யூட்டி பார்லர் போய் வந்தது போல இருக்கு புருவம் ஹாஹாஹாஹா//

      ஆமாம், இருக்கும் இருக்கும் இங்கு தான் முடி, நகம் வெட்ட, அழகு படுத்த கடை இருக்கே!

      தண்ணீர் விழுவது, அதன் வண்ணம் மனதை கவர்ந்த்டஹு கீதா, உங்களுக்கும் பிடித்து இருப்பது மகிழ்ச்சி. நன்றி.



      நீக்கு
  17. அழகான படங்கள். தகவல்களும் சிறப்பு. இந்த மாதிரி சுற்றுலா செல்ல முடிந்தால் மகிழ்ச்சி தான்.

    இங்கே இன்னும் சூழல் சரியாகவில்லை. குறிப்பாக தலைநகரில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      தலைங்கர் வந்து விட்டீர்களா?

      நிலமை சீராகி உங்கள் பயணங்கள் தொடரவும், பயணக்கடுரைகள் தொடரவும் வாழ்த்துக்கள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  18. எவ்வளவு அழகான இடம். பறவைகள். அதன் அழகான படங்கள். திரும்பத் திரும்ப பார்த்து மகிழ்ந்தேன். அருட்பா மனதிற்கு மிகவும் சாந்தியைக் கொடுத்தது.மனதிற்கு இன்பத்தைக் கொடுத்த வரைவு. சொல்லி மாளாது.நன்றி அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் காமாட்சி அம்மா, வாழ்க வளமுடன்

      //எவ்வளவு அழகான இடம். பறவைகள். அதன் அழகான படங்கள். திரும்பத் திரும்ப பார்த்து மகிழ்ந்தேன்.//

      உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

      //அருட்பா மனதிற்கு மிகவும் சாந்தியைக் கொடுத்தது.மனதிற்கு இன்பத்தைக் கொடுத்த வரைவு. சொல்லி மாளாது//

      அருட்பா மனதிற்கு சாந்தியை கொடுத்தது மகிழ்ச்சி.
      பதிவு இன்பத்தை கொடுத்து இருப்பது உங்கள் அன்பான கருத்து மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி.

      நீக்கு
  19. தங்களால் நானும் நேரில் கண்ட உணர்வு
    படங்களும் பகிர்வும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  20. பறவைகளை நிதானமாக ரசிக்க ஏற்ற சூழல்.

    படங்களும் காணொளிகளும் பகிர்வும் நன்று.

    உணவைக் கழுவி உண்ணும் பழக்கம் ஆச்சரியம் அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      //பறவைகளை நிதானமாக ரசிக்க ஏற்ற சூழல்.//

      ஆமாம், நிதானமாக ரசிக்க முடிந்தது.
      காகம் தண்ணீர் பக்கத்தில் இருந்தால் கழுவிதான் சாப்பிடும்.


      காணொளிகளையும் படங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
    2. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      //பறவைகளை நிதானமாக ரசிக்க ஏற்ற சூழல்.//

      ஆமாம், நிதானமாக ரசிக்க முடிந்தது.
      காகம் தண்ணீர் பக்கத்தில் இருந்தால் கழுவிதான் சாப்பிடும்.


      காணொளிகளையும் படங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு