அகாசியா ஸ்டெனோபில்லா மரம். மகன் வீட்டுமதில் பக்கம் உள்ள மரம்.
//அந்த மகன் வீட்டுப் பக்கம் இருக்கும் மரம் ஒரு வித்தியாசமான மரமாக இருக்கே, அதைக் கொஞ்சம் அடுத்த போஸ்டில் எடுத்துப் போடுங்கோ கோமதி அக்கா, அது என்ன காய்களா தொங்குது??//
அரிசோனா காகம் பதிவில் இந்த மரத்தில் காய்களுக்கு இடையில் முகம் காட்டும் காகம் படம் போட்டு இருந்தேன். அதை பார்த்து விட்டு அதிரா கேட்டார் அதனால் இந்த பதிவு.
//அகாசியா ஸ்டெனோபில்லா வேகமாக வளரும் மரமாகும், இது 4-10 மீட்டர் (13-33 அடி) உயரம் வரை வளரும். படிவம் செங்குத்தான கிளைகள் பசுமையாக இருக்கும். இலைகள் சாம்பல்-பச்சை, வண்ணத்தில் குறுகிய மற்றும் நீளமான இலைகள் இருக்கும்.
அகாசியா ஸ்டெனோபில்லா நடுத்தர உப்பு காற்று, உறைபனி சகிப்புத்தன்மை கொண்டது. மரத்திற்குத் தேவையான சராசரி ஆண்டு மழைப்பொழிவு சுமார் 400 மிமீ/வருடமாகும். இது அச்சுறுத்தப்பட்ட இனமாக பட்டியலிடப்படவில்லை.
பொதுவான பெயர்: பல்குரா, பெலாலி, பிளாக் வாட்டில், டால்பி மயால், டால்பி வாட்டில், டன்தி, யூமோங், கூரலி, குர்லி, அயர்ன்வுட், முனுமுலா, நேட்டிவ் வில்லோ, ரிவர் கூபா, ரிவர் கூபா மற்றும் ரிவர் மைல்.
அகாசியா ஸ்டெனோபில்லா ஒரு வறட்சியை தாங்கி வளரக்கூடிய அலங்கார மரமாக பரவலாக நடப்படுகிறது. இது தாவரநாற்றங்கால்களால் பயிரிடப்படுகிறது, மேலும் தென்மேற்கு அமெரிக்கா மற்றும் கலிபோர்னியாவில் நவீன தோட்டங்கள் மற்றும் பொது நிலப்பரப்புகளில் வளர்க்கப்படுகிறது.//
நன்றி - கூகுள்.
மரத்தைப்பற்றிய விவரம் கூகுளில் தேடி தந்து இருக்கிறேன் அதிரா.
வறட்சியை தாங்கும் மரம் என்பதால் அரிசோனா முழுவதும் இந்த மரம் வளர்க்கப்படுகிறது.
வீட்டுக்கு வெளியே மகன் வீட்டு மதில் ஓரத்தில் இருக்கும் மரங்கள். சிறிய மஞ்சள் பூ பூக்கும் அப்புறம் இப்படி சரம் சரமாக காய்க்கும். அனைத்து பறவைகளும் இதன் கிளையில் ஊஞ்சலாடும். பல படங்கள் பதிவில் போட்டு இருக்கிறேன்.
நம் ஊர் கொடுக்காபுளி போல இருக்கா அது வளைந்து இருக்கும் இது நீண்டு தொங்கும்.
மூன்று மரங்கள் மதில் பக்கம் உள்ளது
தோட்டத்து வாசல் பக்கம் நின்று கொண்டு பறவைகள் இதில் நிற்கும் போது படங்கள் எடுப்பேன், காணொளி எடுப்பேன்.
நேற்று மாலை சிறு மஞ்சள் குருவி வந்து அமர்ந்தது
காடை பறவை நின்று சத்தம் கொடுத்து கொண்டு இருந்தது. இப்படி இது அழைக்கும் போது வேறு இடத்திலிருந்து இணை பறவை திரும்ப அழைக்கும். ஆனால் நான் காணொளி எடுத்த போது எதிர்பக்கம் மெளனம். அதிரா ஒலி அளவை அதிகம் வைத்து கேளுங்கள்.
கேட்குதா கேட்குதா?
நாமும் எடுத்து கொள்ளலாம் (காடைகள்)
கொஞ்சம் கழுகு போல தோற்றம் அளிக்கும்.
இந்த மரம் எல்லா பறவைகளுக்கும் பிடித்த மரம். நிறைய பறவைகள் இதில் அமர்ந்து இருக்கும் போது படம் எடுத்து போட்டு இருக்கிறேன்.
இந்த மரங்களுக்கு இடையே வானவில்லும் வந்து போகும்.
நிலா இந்த மரங்களுக்கு இடையில் வரும் போது, சூரியன் இந்த மரங்களுக்கு இடையில் வரும் போது படம் எடுத்துப் போட்டு இருக்கிறேன்.
அதிரா கேட்டுக் கொண்டதால் இந்த பதிவு.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !
---------------------------------------------------------------------------------------------------
டென்னிஸ் வீரர் பெயர் போல இருக்கிறது மரத்தின் பெயர்! வண்ணமயமாக காட்சி அளிக்கிறது!
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//டென்னிஸ் வீரர் பெயர் போல இருக்கிறது மரத்தின் பெயர்! //
ஓ, அப்படியா !
வண்ணமயமாக காட்சி அளிக்கிறது! வானம் மிக அழகாய் இருக்கும் நீல வண்ணத்தில் அதனால் பசுமை அதில் எடுப்பாக இருக்கிறது.
ஆம், கொடுக்காப்புளி போலதான் இருக்கிறது. சிறுவயதில் எல்லோரும் விரும்பிச் சாப்பிட்ட ஒரு காய் கொடுக்காப்புளி! எனக்கு அது பிடிப்பதில்லை! அரளி அவ்வளவு உயரம் வளருமா?
பதிலளிநீக்குஆம், கொடுக்காப்புளி போலதான் இருக்கிறது. சிறுவயதில் எல்லோரும் விரும்பிச் சாப்பிட்ட ஒரு காய் கொடுக்காப்புளி! எனக்கு அது பிடிப்பதில்லை! //
நீக்குஎனக்கு பிடிக்கும், ஆனால் என் தோடைக்கு பிடிக்காது. உப்பு போட்டு பிரட்டி சாப்பிட்டாலும் கொஞ்சம் தொண்டை கர கர என்று இருக்கும். ரோஸ் கலரில் இருக்கும் கொடுக்கபுளி கொஞ்சம் இனிக்கும். வெள்ளை லேசான துவர்ப்பு.
அரளி அவ்வளவு உயரம் வளருமா?
வளரும். எல்லோர் வீடுகளிலும் மதில் பக்கம் வைத்து இருப்பார்கள். இலையே தெரியாமல் இந்த சீஸனில் பூத்து குலுங்கும்.
அழகான படங்கள், விவரங்கள். காணொளியை ரசித்தேன். காடையும் கவுதாரியும் ஒன்றா?
பதிலளிநீக்கு//அழகான படங்கள், விவரங்கள். காணொளியை ரசித்தேன். காடையும் கவுதாரியும் ஒன்றா?//
நீக்குகாடை வேறு, கவுதாரி வேறு. காணொளியில் காடையின் குரல் கேட்க முடிந்ததா?
உங்கள் கருத்துக்களூக்கு நன்றி..
பின்னர் மொபைலில் கேட்கவேண்டும்!
நீக்குபின்னர் மொபைலில் கேட்கவேண்டும்!//
நீக்குஓ சரி, ஸ்ரீராம்.
வறட்சியை தாங்கும் மரம் என்றால் நம்மூர் கருவேல் மரம் மாதிரியா ? முட்கள் இல்லை போல...
பதிலளிநீக்குகாணொளி இயக்கம் இல்லை பிறகு வருகிறேன்.
அதிராவுக்கான பதிவு அதிராவைக் காணவில்லையே... கர்ர்ர்ர்ர்ர்
வணக்கம் சகோ தேவக்கோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//வறட்சியை தாங்கும் மரம் என்றால் நம்மூர் கருவேல் மரம் மாதிரியா ? முட்கள் இல்லை போல...//
ஆமாம் . முட்கள் கிடையாது. காற்றுக்கு ஆடும் ஆனால் விழுந்து விடாது.
//காணொளி இயக்கம் இல்லை பிறகு வருகிறேன்//
காணொளி சுட்டி கொடுத்து இருக்கிறேன் பார்க்க முடியும் இப்போது.
//அதிராவுக்கான பதிவு அதிராவைக் காணவில்லையே... கர்ர்ர்ர்ர்ர்//
நேரம் வித்தியாசம் உங்ககளுக்கு, எனக்கு , அதிராவுக்கு கொஞ்சம் முன்னே பின்னே ஆகும்.
வந்து விட்டார்.
அதிரா கேட்டதால் இந்த போஸ்ட் ஜி, நீங்களும் படித்து கருத்து சொல்லலாம்.
உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.
அடடா மரத்தின் படம் எடுத்துப் போட்டுவிட்டா கோமதி அக்கா, நன்றி நன்றி, ஆனா நான் கண்டு பிடிச்சிட்டேன்ன் இவ பொம்பிளை மரம் ஹா ஹா ஹா, பறவைகளில் பெண், ஆண் கண்டுபிடிக்கிறீங்க, நான் மரத்தில கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்.. எப்பூடின்னுதானே யோசிக்கிறீங்கள்.. பெயரை வச்சுத்தான்
பதிலளிநீக்கு///அகாசியா ஸ்டெனோபில்லா//
ஹா ஹா ஹா
வணக்கம் கம்பவாரிசு, வாழ்க வளமுடன்
நீக்கு//அடடா மரத்தின் படம் எடுத்துப் போட்டுவிட்டா கோமதி அக்கா, நன்றி நன்றி//
தங்கை கேட்டு அக்கா போடாமல் இருக்கலாமா? மதிலுக்கு பக்கம் இருக்கும் பகுதி மட்டும் புதிதாக எடுத்தேன், மற்ற படங்கள் இருந்தது. அதனால் போட்டு விட்டேன்.
//ஆனா நான் கண்டு பிடிச்சிட்டேன்ன் இவ பொம்பிளை மரம் ஹா ஹா ஹா, பறவைகளில் பெண், ஆண் கண்டுபிடிக்கிறீங்க, நான் மரத்தில கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்.. எப்பூடின்னுதானே யோசிக்கிறீங்கள்.. பெயரை வச்சுத்தான் அகாசியா ஸ்டெனோபில்லா//
பெண் மரம் தான் பூக்கும், காய்க்கும் என்பார்கள். நீங்கள் புதிதாக ஆண் மரம் பூக்கும் காய்க்கும் என்று சொல்கிறீர்கள்.
புராண வரலாறு உண்டு ஆண் பனையை தேவாரம் பாடி ஞானசம்பந்தர் பூக்க காய்க்க வைத்தார் என்று, அது போலவா?
பேர் ஆண் பேர் போல் உள்ளதால் அப்படி சொல்லி விட்டீர்கள்.
மரத்தைப் பார்த்தாம் இலங்கையில் இருந்த விக்ஸ் மரம்போலவே இருக்குது, முன்னொரு காலத்தில் வளர்த்தோம், பின்னர் வெட்டி அழிச்சாச்சு ஏனெனில் அது வெளிநாட்டில் இருந்து வந்த மரம், அது நிலச் சத்தை, உரத்தை , நீரை எல்லாம் உறிஞ்சி, ஏனைய மரங்களுக்குச் சத்தில்லாமல் பண்ணிவிடுமாம், அப்படி இருக்கு இதனையும் பார்க்க.. வெள்ளை உடம்புடன் வெள்ளைக்காரிமாதிரியே நிற்கிறா பாருங்கோ ஹா ஹா ஹா..
பதிலளிநீக்குஆனால் காய்கள் வாகைக் காய்கள்போல தொங்குது.. அழகாக இருக்குது..
//மரத்தைப் பார்த்தாம் இலங்கையில் இருந்த விக்ஸ் மரம்போலவே இருக்குது, முன்னொரு காலத்தில் வளர்த்தோம், பின்னர் வெட்டி அழிச்சாச்சு ஏனெனில் அது வெளிநாட்டில் இருந்து வந்த மரம், அது நிலச் சத்தை, உரத்தை , நீரை எல்லாம் உறிஞ்சி, ஏனைய மரங்களுக்குச் சத்தில்லாமல் பண்ணிவிடுமாம், அப்படி இருக்கு இதனையும் பார்க்க.. வெள்ளை உடம்புடன் வெள்ளைக்காரிமாதிரியே நிற்கிறா பாருங்கோ ஹா ஹா ஹா..//
நீக்குஆமாம் , வெல்ளையாக இருக்கும் சட்டை உரிக்கும் பேப்பர் போல உரிக்க வரும் இதன் பட்டைகள். நம் ஊர் கருவேலமரமும் நீரை எடுத்து கொள்ளும். விகஸ் மரம் கேள்வி பட்டது இல்லை.
வெளிநாட்டு கருவேலமரம்தான் இந்தியாவிலும் நீர் வளத்தை எடுத்து கொள்ளும். வறட்சியை தாங்கும் என்று மட்டும் போட்டு இருக்கு இதற்கு நீர் ஊற்ற வேண்டாம் என்பாதால் எல்லா இடங்களிலும் அழகுக்கு நட்டு வைத்து இருக்கிறார்கள். இதுவும் நிலத்தடி நீரை எடுத்து கொண்டு வாழ்கிறதோ என்னவோ! ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
//ஆனால் காய்கள் வாகைக் காய்கள்போல தொங்குது.. அழகாக இருக்குது..//
ஆமாம் அதிரா.
///நம் ஊர் கொடுக்காபுளி போல இருக்கா அது வளைந்து இருக்கும் இது நீண்டு தொங்கும்.///
பதிலளிநீக்குஅதேதான், அப்படியும் இருக்குது, ஏதோ மல்லிகை மொட்டுக்கோர்த்தமாலை போலவும் இருக்குது.
//அதேதான், அப்படியும் இருக்குது, ஏதோ மல்லிகை மொட்டுக்கோர்த்தமாலை போலவும் இருக்குது.//
நீக்குஎனக்கு பச்சை முத்துக்களிய கோர்த்த மாலை போல இருந்தது. உங்கள் கற்பனையும் நன்றாக இருக்கிறது.
வீடியோப் பார்த்தேன் அது அரிசோனாக் காடையோ.. அழகாக இருக்கு நல்ல நீண்ட சொண்டுடன்...
பதிலளிநீக்கு// அதிரா ஒலி அளவை அதிகம் வைத்து கேளுங்கள்.//
ஹா ஹா ஹா சத்தியமாக இந்த வசனம் படிச்சதும் திடுக்கிட்டு விட்டேன், பார்த்தால் வீடியோ சவுண்ட் மியூட்டில் வைத்துப் பார்த்திருக்கிறேன்:)), ஓன் பண்ணிப் பார்த்தேன் காடைப்பிள்ளை கூப்பிடும் சத்தம் அழகாக கேட்குது.. அப்போ இவவும் பொம்பிளைப்பிள்ளை:) ஹா ஹா ஹா..
வீடியோப் பார்த்தேன் அது அரிசோனாக் காடையோ.. அழகாக இருக்கு நல்ல நீண்ட சொண்டுடன்...//
நீக்குஆமாம், இது அரிசோனா காடை நம் ஊர் காடை வேறு மாதிரி இருக்கும்.
//ஹா ஹா ஹா சத்தியமாக இந்த வசனம் படிச்சதும் திடுக்கிட்டு விட்டேன், பார்த்தால் வீடியோ சவுண்ட் மியூட்டில் வைத்துப் பார்த்திருக்கிறேன்:)), ஓன் பண்ணிப் பார்த்தேன் காடைப்பிள்ளை கூப்பிடும் சத்தம் அழகாக கேட்குது.. அப்போ இவவும் பொம்பிளைப்பிள்ளை:) ஹா ஹா ஹா..//
போன காணொளியில் பாடல் இல்லை என்று சொன்னீர்கள் அதில் பாடல் பின்னனியில் இருந்தது. அதுதான் ஒலி அளவை அதிகம் வைத்து கேளுங்கள் என்றேன். குயில் போல ஒரு இடத்தில் இருந்து இந்த பறவை சத்தம் கொடுத்தால் அதற்கு இன்னொரு பக்கம் இருந்து எதிர் குரல் கொடுக்கும். (எசை பாட்டு)
இதிலும் தன் கொண்டையை வைத்து ஆண் , பெண் வித்தியாசம் தெரியும் கீழ் நோக்கிய கொண்டை இருக்கும், மேல் நோக்கிய கொண்டை இருக்கும்.
இதன் கொண்டை கீழ் நோக்கி இருக்கிறது பெண் தான்.
அதிரா , உங்களுக்கு காடை குடும்ப படம் புதிதாக பதிவில் போட்டு இருக்கிறேன் பாருங்கள். ஆண், பெண் பறவைகளின் வித்தியாசம் தெரியும்.
நீக்குஆஆஆஆஆஆ பார்த்தேன் கோமதி அக்கா, பார்த்திட்டேன் இவைதான் காடையோ.. இது எங்கள் இப்போ இருக்கும் புது வீட்டு வோக் போகும் ஏரியாப் பார்க்கில் குட்டிப் பொண்ட் இருக்கு, அதில் இருக்கிறார்கள் இப்படிக் குடும்பமாக, நான் என்ன பறவையோ என யோசித்தேன், ஏதோ தாரா இனம் என நினைச்சேன், ஏனெனில் எப்பவும் தண்ணியிலேயே முத்தெடுப்பதுபோல தேடும் இரையை.
நீக்குகோழி தன் குஞ்சுகளுடன் போவது போல இருக்கும். அவை ரோட்டை கடந்து போகும் போது பார்க்க அழகாய் இருக்கும்.
நீக்கு//நான் என்ன பறவையோ என யோசித்தேன், ஏதோ தாரா இனம் என நினைச்சேன், ஏனெனில் எப்பவும் தண்ணியிலேயே முத்தெடுப்பதுபோல தேடும் இரையை.//
மீண்டும் பார்த்தால் படம் எடுத்து போடுங்க அதிரா.
ஓ மணிப்புறாக்களுக்கும் காடைக்கும் பெரிய வித்தியாசமில்லை, கொண்டையிலும் உடம்பிலும் கொஞ்சம் கலர் வித்தியாசம் தெரியுது சைஸில் ஒன்றாகவே தெரியுது, ஆனாலும் இங்கிருக்கும் புறாக்கள் ஏனோ குண்டு குண்டாக இருக்கும்.
பதிலளிநீக்கு//ஓ மணிப்புறாக்களுக்கும் காடைக்கும் பெரிய வித்தியாசமில்லை, கொண்டையிலும் உடம்பிலும் கொஞ்சம் கலர் வித்தியாசம் தெரியுது சைஸில் ஒன்றாகவே தெரியுது, ஆனாலும் இங்கிருக்கும் புறாக்கள் ஏனோ குண்டு குண்டாக இருக்கும்.//
நீக்குஇயற்கை தந்த கொடை. இதன் வண்ணங்கள். இந்த நாட்டின் மண்ணுக்கு ஏற்ற நிறத்தில் பறவைகள், விலங்குகள் பெரும்பாலும் இருக்கும்.
மணிப்புறா உடலை சிலிர்த்து கொண்டு இருப்பதால் குண்டாக தெரிகிறது. சின்ன புறாக்கள் தான்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா. ஊருக்கு வெள்ளிக்கிழமை கிளம்ப வேன்டும் அதனால் நீங்கள் கேட்டவுடன் பதிவு போட்டு விட்டேன். இன்னும் சில நாட்கள் பதிவு போட முடியாது. பதிவுகளை படிப்பேன்.
அடடா நாளைக்கு ஊருக்குத் திரும்புறீங்களோ, நலமே வந்து சேருங்கோ..
நீக்குநன்றி அதிரா
நீக்குகாணொளி கண்டேன் சிறப்பு.
பதிலளிநீக்குகம்பவாரிசு என்றால் தேனி அருகில் உள்ள கம்பத்தில் இருந்து வந்த வாரிசோ ?
காணொளி கண்டேன் சிறப்பு.//
நீக்குநன்றி.
//கம்பவாரிசு என்றால் தேனி அருகில் உள்ள கம்பத்தில் இருந்து வந்த வாரிசோ ?//
அதிராவிடம் கேட்க வேண்டும். நானும் இப்போதுதான் படித்தேன்.
கம்பருக்கு வாரிசு என்று அல்லவா நினைத்தேன். நீங்கள் இப்படி கம்பம் ஊரிலிருந்து வந்தவர் என்ற அர்த்தம் சொல்லி விட்டீர்களே!
மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
///
நீக்குKILLERGEE Devakottai30 மே, 2023 அன்று பிற்பகல் 8:28
காணொளி கண்டேன் சிறப்பு.
கம்பவாரிசு என்றால் தேனி அருகில் உள்ள கம்பத்தில் இருந்து வந்த வாரிசோ ?///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), எங்கின வந்து என்னா பேச்சுப்பேஸுறார்ர்.... ஊரணி தேம்ஸ்ல தள்ளாமல் விடமாட்டேன், இது அந்தக் காடையின் கொண்டைமீது ஜத்த்தியம்ம்ம்:)
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. ஊஞ்சலாடும் பறவைகள் அனைத்தும் அழகாக இருக்கிறது. சகோதரி அதிராவுக்காக நீங்கள் படங்களை சேகரித்து போட்ட பதிவெனினும், நாங்களும் அவர் தயவில் கண்டு களித்தோம்.
அது கொடுக்காப்புளி மாதிரிதான் உள்ளது. கொடுக்கப்புளி முன்பு அம்மா வீட்டில் இருக்கும் போது சாப்பிட்டுள்ளேன். தொண்டை யை பிடிக்கும் என்பதால் ஒரிரு முறைகள் தவிர அதை சாப்பிட அம்மா விடுவதில்லை.. பொதுவாக பக்கத்தில் வளர்க்கும் ஆடுகளுக்கு பறித்துப் போடுவார்கள்.
அதைப்போலிருக்கும் இந்தமரத்தைப்பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டேன். மரங்கள் படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது.
வானவில் படங்கள், மரத்தில் அமர்ந்திருக்கும் மற்ற பறவைகள் படங்கள், குஞ்சுகளுடன் உலா வரும் பறவைகளின் படம் எல்லாவற்றையும் பார்த்து ரசித்தேன். காணொளியும் பார்க்கிறேன். நீங்கள் எப்போதுமே எல்லாவற்றையும் ரசித்துதான் படங்களை எடுப்பீர்கள். அந்த திறமைக்கு உங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
பதிவுக்கு நான்தான் தாமதமாக வந்திருக்கிறேன். வருந்துகிறேன். வெள்ளியன்று ஊருக்கு கிளம்புவதாக சகோதரி அதிரா அவர்களின் கருத்தில் சொல்லியுள்ளீர்கள். (இந்தியாவுக்கா?) வரவேற்கிறேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை. ஊஞ்சலாடும் பறவைகள் அனைத்தும் அழகாக இருக்கிறது. //
நன்றி கமலா.
//சகோதரி அதிராவுக்காக நீங்கள் படங்களை சேகரித்து போட்ட பதிவெனினும், நாங்களும் அவர் தயவில் கண்டு களித்தோம்.//
அதிரா கேட்டதால் இந்த பதிவு , ஆனால் உங்கள் எல்லோருக்குக்கும் தான்.
//அது கொடுக்காப்புளி மாதிரிதான் உள்ளது. கொடுக்கப்புளி முன்பு அம்மா வீட்டில் இருக்கும் போது சாப்பிட்டுள்ளேன். தொண்டை யை பிடிக்கும் என்பதால் ஒரிரு முறைகள் தவிர அதை சாப்பிட அம்மா விடுவதில்லை.. பொதுவாக பக்கத்தில் வளர்க்கும் ஆடுகளுக்கு பறித்துப் போடுவார்கள்.//
ஆமாம், அம்மாவும் சாப்பிட விட மாட்டார்கள், பள்ளியில்தான் தோழிகள் சாப்பிடும் போது எனக்கும் கொடுப்பார்கள்.
//அதைப்போலிருக்கும் இந்தமரத்தைப்பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டேன். மரங்கள் படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது.//
ஆமாம், அதிராவால் நானும் இந்த மரத்தைப்பற்றி தெரிந்து கொண்டேன்.
//வானவில் படங்கள், மரத்தில் அமர்ந்திருக்கும் மற்ற பறவைகள் படங்கள், குஞ்சுகளுடன் உலா வரும் பறவைகளின் படம் எல்லாவற்றையும் பார்த்து ரசித்தேன். காணொளியும் பார்க்கிறேன். நீங்கள் எப்போதுமே எல்லாவற்றையும் ரசித்துதான் படங்களை எடுப்பீர்கள். அந்த திறமைக்கு உங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.//
வானவில் படங்கள் மற்றும் அனைத்து படங்களியயும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
//பதிவுக்கு நான்தான் தாமதமாக வந்திருக்கிறேன். வருந்துகிறேன். //
வருந்த வேண்டாம். பதிவை எப்போது வேண்டுமென்றாலும் முடிந்த போது படித்து கருத்து சொல்லுங்கள், அதுவே போதும்.
//வெள்ளியன்று ஊருக்கு கிளம்புவதாக சகோதரி அதிரா அவர்களின் கருத்தில் சொல்லியுள்ளீர்கள். (இந்தியாவுக்கா?) வரவேற்கிறேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.//
ஆமாம் இந்தியாவிற்குதான் வர போகிறோம்.
உங்கள் வரவேற்புக்கு நன்றி.
அகாசியா மரங்களைப் பார்த்திருக்கிறேன். இதன் காய்கள் கொடுக்காப்புளியைவிட ரொம்பப் பெரிது, காய்ந்த பிறகு கறுப்பா இருக்கும்.
பதிலளிநீக்குமஞ்சள் நிறப் பூக்களை உதிர்க்கும்.
வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//அகாசியா மரங்களைப் பார்த்திருக்கிறேன். இதன் காய்கள் கொடுக்காப்புளியைவிட ரொம்பப் பெரிது, காய்ந்த பிறகு கறுப்பா இருக்கும்.//
அகாசியா மரங்கள் பலவகை இருக்கிறது. மகன் வீட்டில் இருப்பது பச்சையாக காய்க்கும் காய்ந்தால் மஞ்சள் நிறமாக மாறும்.
கறுப்பு காய்களை பார்த்தது இல்லை.
மஞ்சள் நிற பூக்களை உதிர்க்கும் மரம் நிறைய இருக்கிறது, இந்த பருவத்தில் ஊர் முழுவதும் மஞ்சள் பூக்கள் மரம் தான் இலையே தெரியாமல் பூத்து இருக்கும்.
இளம் பச்சை கலந்த மஞ்சளில் இருக்கும் இதன் பூக்கள் படம் முன்பு போட்டு இருக்கிறேன். கிடைத்தால் போடுகிறேன்.
காடை காணொளி பார்த்தேன். பறவையின் குரல் கேட்கிறது.
பதிலளிநீக்குசில இடங்களில் மரம் போல் வளர்ந்துள்ள ஊமத்தையைப் பார்த்திருக்கிறேன். அரளிச் செடிகள் வியப்பளிக்கவில்லை. பூ நிறம்தான் மாறுபட்டுள்ளது.
காடை காணொளி பார்த்தேன். பறவையின் குரல் கேட்கிறது.//
நீக்குநன்றி, மகிழ்ச்சி.
//சில இடங்களில் மரம் போல் வளர்ந்துள்ள ஊமத்தையைப் பார்த்திருக்கிறேன். அரளிச் செடிகள் வியப்பளிக்கவில்லை. பூ நிறம்தான் மாறுபட்டுள்ளது.//
ஊமத்தையும் உயரமகாவளருமா? வைலட், வெள்ளை கலரில் குத்து செடி போல தான் பார்த்து இருக்கிறேன், டேடியோ பூ என்று ஊமத்தையை சிறு வயதில் பறித்து விளையாடுவோம். பிள்ளையார் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு பறித்து வருவோம். எருக்கம் பூ, ஊமத்தை பூ இரண்டும் முக்கியம் என்பார்கள்.
நேற்று புதிய பதிவுக்கான படங்களைச் சீரமைப்பதில் நிறைய நேரம் எடுத்தது. அதனால் பதிவைப் படிக்க நேரம் கிடைக்கவில்லை.
பதிலளிநீக்குபடங்கள் நன்றாக உள்ளன
//நேற்று புதிய பதிவுக்கான படங்களைச் சீரமைப்பதில் நிறைய நேரம் எடுத்தது. அதனால் பதிவைப் படிக்க நேரம் கிடைக்கவில்லை.//
நீக்குஞாயிறு பதிவுக்கு தயார் செய்து விட்டீர்களா? மகிழ்ச்சி.
அதிராவுக்கு மட்டும் என்று நினைத்து விட்டீர்களோ என்று நினைத்தேன்.
//படங்கள் நன்றாக உள்ளன//
நன்றி.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
ஊர் வந்த பின் உங்கள் ஞாயிறு பதிவை படிக்க வேண்டும்.
படங்கள் தகவல்கள் அனைத்தும் சிறப்பு. காடைப்பறவையின் குரல் கேட்டேன். கொடுக்காப்புளி போல இருக்கும் காய்கள்...... ஆஹா சில ஊர்களில் கொடுக்காப்புளி என்று சொல்லாமல் சீனி புளியங்காய் என்றும் சொல்வதுண்டு. அதிகம் சாப்பிட்டால் நாக்கு வறண்டு போவது உண்டு. எனக்கும் பிடிக்கும். சில வருடங்களுக்கு முன்னர் ஒரு தமிழகப் பயணத்தில் ஆசைப்பட்டு வாங்கி ருசித்தேன்.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்குபடங்கள் தகவல்கள் அனைத்தும் சிறப்பு. காடைப்பறவையின் குரல் கேட்டேன். //
நன்றி.
கொடுக்காப்புளி போல இருக்கும் காய்கள்...... ஆஹா சில ஊர்களில் கொடுக்காப்புளி என்று சொல்லாமல் சீனி புளியங்காய் என்றும் சொல்வதுண்டு. //
சீனி புளியங்காய் நல்ல பேராக இருக்கே!
இப்போதுதான் கேள்வி படுகிறேன்..
//அதிகம் சாப்பிட்டால் நாக்கு வறண்டு போவது உண்டு. எனக்கும் பிடிக்கும். சில வருடங்களுக்கு முன்னர் ஒரு தமிழகப் பயணத்தில் ஆசைப்பட்டு வாங்கி ருசித்தேன்.//
வெள்ளை வாங்னினீர்களா? சிவப்பு , அல்லது ரோஸா?
நல்ல பெரிதாக ரோஸ் கலரில் இருக்கும் கொடுக்காபுளி நன்றாக இருக்கும். சிறு வயதில் பள்ளி வாசலில் கூறு கட்டி விற்பார்கள். மதுரையில் கிலோ கணக்கில் நிறுத்து தருகிறார்கள்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
படங்கள் இயற்கையாக அழகாக இருக்கின்றன. இங்கு திருவனந்தபுரத்தில் ராஜிவ் காந்தியின் சமூக நல காடுகள் திட்டத்தின் கீழ் அகாசியா நடப்பட்டது. அதில் கட்டில் போன்ற பர்னிச்சர் செய்வார்கள். அந்த மரத்தால் செய்யப்பட்ட கட்டில் என்னிடம் உள்ளது.
பதிலளிநீக்குquail எனப்படும் காடைகள் தரையில் கோழி போல் வளர்க்ப்படும் பறவை என்று தான் நினைத்திருந்தேன். நீங்கள் மரத்தில் உள்ள பறவை காடை என்கிறீர்கள். இங்கு கடைகளில் காடை முட்டை கிடைக்கும்.
வானவில்லின் படமும் அழகு. .
Jayakumar
வணக்கம் ஜெயக்குமார் சார், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் இயற்கையாக அழகாக இருக்கின்றன. //
நன்றி.
இங்கு திருவனந்தபுரத்தில் ராஜிவ் காந்தியின் சமூக நல காடுகள் திட்டத்தின் கீழ் அகாசியா நடப்பட்டது. அதில் கட்டில் போன்ற பர்னிச்சர் செய்வார்கள். அந்த மரத்தால் செய்யப்பட்ட கட்டில் என்னிடம் உள்ளது.//
ஓ புதிய விவரம், நன்றி.
//quail எனப்படும் காடைகள் தரையில் கோழி போல் வளர்க்ப்படும் பறவை என்று தான் நினைத்திருந்தேன். நீங்கள் மரத்தில் உள்ள பறவை காடை என்கிறீர்கள். இங்கு கடைகளில் காடை முட்டை கிடைக்கும்.//
இந்தியாவில் உள்ள காடை வேறு மாதிரி இருக்கும். இங்கு உள்ளது இப்படித்தான் இருக்கும். இங்கும் கடைகளில் காடை முட்டை விற்பார்கள். மகன் வீட்டில் முன்பு நிறைய முட்டைகள் இட்டு விட்டு எங்கோ போய் விட்டது தாய் காடை பறவை. அதற்கு ஏதோ நேர்ந்து விட்டது போல் வரவே இல்லை. பல நாள் கழித்து அதை வெளியே கொண்டு வைத்து விட்டான் மகன்.
வானவில் படம் இதை விட தெளிவாக உள்ளது இருந்தது, இந்த படம் மரத்துக்கு பக்கத்தில் என்பதால் இதை போட்டேன்.
உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.
கோம்திக்கா இங்கும் இந்த மரம் அகாசியா உண்டு மஞ்சள் பூக்கள் ...கொடுக்காபுளி போல ஆனால் பெரிதாக இருக்கும். கருவேலமும் அகாசியா பேரினத்தைச் சார்ந்ததுதான். அகாசியா எல்லாமே வறத்சியைத் தாங்கும் போல.
பதிலளிநீக்குகருவேல மர இனம்தான் இதுவும். இந்தச் சீமை கருவேலமும் நம்மூரில் வந்திருக்கு.
யூகாலிப்டஸ் மரமும் நிலத்தடி நீரை நிறைய உறிஞ்சி வறட்சியாக்கிவிடும் என்பதால் இங்கு கர்நாடகாவில் யூலாலிப்டஸ் மற்றும் கருவேலம்/அகாசியா நடுவதற்குத் தடை உள்ளது.
படங்கள் அழகு கோமதிக்கா....
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்குகோம்திக்கா இங்கும் இந்த மரம் அகாசியா உண்டு மஞ்சள் பூக்கள் ...கொடுக்காபுளி போல ஆனால் பெரிதாக இருக்கும்//
ஆமாம் நானும் பார்த்து இருக்கிறேன். ஆனால் அப்போது மரத்தின் பேர் தெரியாது.
//கருவேலமும் அகாசியா பேரினத்தைச் சார்ந்ததுதான். அகாசியா எல்லாமே வறத்சியைத் தாங்கும் போல.//
வறட்சியை தாங்க்கும் தான்.
//சீமை கருவேலமும் நம்மூரில் வந்திருக்கு.//
கண்டிப்பாய் இதை அழிக்க வேண்டும் நிலத்தடி நீரை எடுத்துக் கொள்கிறது என்று அழித்து வருகிறார்கள்.
//யூகாலிப்டஸ் மரமும் நிலத்தடி நீரை நிறைய உறிஞ்சி வறட்சியாக்கிவிடும் என்பதால் இங்கு கர்நாடகாவில் யூலாலிப்டஸ் மற்றும் கருவேலம்/அகாசியா நடுவதற்குத் தடை உள்ளது.//
ஆமாம், தடை செய்ய வேண்டிய மரங்கள் தான் இவைகள்.
//படங்கள் அழகு கோமதிக்கா..//
நன்றி கீதா.
யூகாலிப்டஸ் மரங்களை அழிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றமே சொல்லியிருக்கிறது தமிழ்நாட்டில். அது போல கருவேல மரம்...
பதிலளிநீக்குஎனக்குத் தோன்றுவது, இந்த மரங்களை அழிப்பதை விட - இவையும் இயற்கை கொடுத்தவைதானே. இயற்கை/இறைவனின் படைப்பில் எதுவும் சோடை கிடையாது என்பது என் நம்பிக்கை - எனவே இவற்றை மிக மிக வறண்ட பிரதேசங்களில் அங்கு வேரு வகை எதுவும் வளராது என்ற நிலையில் இவற்றை வளர்க்கலாமே என்று தோன்றும். கூடாதோ?!!!
காடைப் பறவை யுட்யூபிலும் பார்த்தேன் கோமதிக்கா...அதன் குரல் ரொம்பப் பிடித்தது (எந்தப் பறவையின் குரல்தான் கீதாக்குப் பிடிக்காது காக்கை குரல் உட்பட பிடிக்குமே!!)
காடைகளின் கொண்டை அழகு...அது என்னமோ இரவு நேரத்தில் ஹெட்லைட் போட்டுப் போவது போன்று உள்ளது
கீதா
//யூகாலிப்டஸ் மரங்களை அழிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றமே சொல்லியிருக்கிறது தமிழ்நாட்டில். அது போல கருவேல மரம்...//
நீக்குஆமாம்.
//எனக்குத் தோன்றுவது, இந்த மரங்களை அழிப்பதை விட - இவையும் இயற்கை கொடுத்தவைதானே. இயற்கை/இறைவனின் படைப்பில் எதுவும் சோடை கிடையாது என்பது என் நம்பிக்கை - எனவே இவற்றை மிக மிக வறண்ட பிரதேசங்களில் அங்கு வேரு வகை எதுவும் வளராது என்ற நிலையில் இவற்றை வளர்க்கலாமே என்று தோன்றும். கூடாதோ?!!!//
நீர் ஊற்ற தேவையில்லை என்பதால்தான் இங்கு அகாசியா மரத்தை எல்லா இடங்களிலும் வைத்து இருக்கிறார்கள்.
நீங்கள் ஸ்ப்ல்வது போல எங்கு எது தேவையோ அதை நடலாம்.
//காடைப் பறவை யுட்யூபிலும் பார்த்தேன் கோமதிக்கா...அதன் குரல் ரொம்பப் பிடித்தது (எந்தப் பறவையின் குரல்தான் கீதாக்குப் பிடிக்காது காக்கை குரல் உட்பட பிடிக்குமே!!)//
அதுதானே! எல்லா குரல்களையும் பிடிக்கும் கீதாவுக்கு.
//காடைகளின் கொண்டை அழகு...அது என்னமோ இரவு நேரத்தில் ஹெட்லைட் போட்டுப் போவது போன்று உள்ளது//
ஆமாம்.
ஆண் பறவை - முகமூடி அணிந்து - ஹாஹாஹாஹா என்ன அழகு கோமதிக்கா...இல்லையா? அதுவும் குஞ்சுகளோடு பார்க்கவே மனம் மகிழ்கிறது. குடும்பத்தோடு நலமுடன் இருக்கட்டும் எல்லாம்
பதிலளிநீக்குகீதா
//ஆண் பறவை - முகமூடி அணிந்து - ஹாஹாஹாஹா என்ன அழகு கோமதிக்கா...இல்லையா? அதுவும் குஞ்சுகளோடு பார்க்கவே மனம் மகிழ்கிறது. குடும்பத்தோடு நலமுடன் இருக்கட்டும் எல்லாம்//
நீக்குநமக்கு சில ஒன்று போல பார்க்க தோன்றினாலும் சில வித்தியாசங்களை இறைவன் படைத்து இருக்கிறான்.
அவை தினம் பல இடையூரூகளை தாண்டிதான் வாழ்கிறது.
அரளிச் செடிகள் இத்தனை உயரம் வளரும் என்பத ஒரு சின்ன கோயிலில், சுற்றுப் பிராகாரத்தில் பார்த்தேன் அதிசயித்துப் போனேன். அது பல வருடங்களுக்கு முன். ஊர் கோயில் பெயர் மறந்துவிட்டது. சிவன் கோயில்.
பதிலளிநீக்குமணிப்புறாக்கள் அடுக்கடுக்கான இறகுகள் சிலிர்த்திருக்க பார்க்க அழகாக இருக்கின்றன.
மஞ்சள் குருவி அட ! ...தமிழ் சினிமாப்பாடல் டக்கென்று நினைவுக்கு வந்தது என் ஜோடி மஞ்சக் குருவி!!!! ஹாஹாஹா..பொருத்தமாகிவிட்டதோ!
காடைகள், புறாக்கள் (அந்த ஊர் மணிப்புறாக்கள் வித்தியாசமா இருக்கு)
கோமதி பாட்டி இருக்காக.....அப்புறம் ஊருக்குப் போய்டுவாஹளாம்....வா வா சீக்கிரம் ....போதும் போதும் உம் மேக்கப் எல்லாம்...சீக்கிரம் வந்து நில்லு பாரு அவங்க கேமராவும் கையுமா நிக்காஹ...ஃபோட்டோ புடிச்சு போடுவாக எல்லாரும் பாத்து பாத்து நம்மள ரசிப்பாக...அப்புறம் கொஞ்ச மாசம் கழித்துதானே பாட்டி வருவாஹ...சட்டுபுட்டுனு வா...
எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு பாட்டியின் கேமராக்குள்!!!!! இப்ப எங்க கண் முன்ன!
//மதில் மேலிருந்து மரத்துக்கு பறந்து போய் சிறிது நேரம் ஊஞ்சல் ஆடி விட்டுத்தான் பறவைகள் பறந்து போகும்.//
சமத்து செல்லங்கள்....அதுங்கபாட்டிய, எங்க அக்காவை மகிழ்வித்துவிட்டுத்தான் போகுது பாருங்க!!!
கீதா
//அரளிச் செடிகள் இத்தனை உயரம் வளரும் என்பத ஒரு சின்ன கோயிலில், சுற்றுப் பிராகாரத்தில் பார்த்தேன் அதிசயித்துப் போனேன். அது பல வருடங்களுக்கு முன். ஊர் கோயில் பெயர் மறந்துவிட்டது. சிவன் கோயில்.//
நீக்குநிலத்தின் தன்மையை பொறுத்தும் பக்கவாட்டில் வளர இடம் இல்லாமல் நீண்டும் வளரும். பூ பறிக்க வசதியாக நீண்டு போகாமல் வெட்டி அடிமரம் கனத்து போகிற மாதிரியும் வைப்பார்கள் சிலர்.
//மணிப்புறாக்கள் அடுக்கடுக்கான இறகுகள் சிலிர்த்திருக்க பார்க்க அழகாக இருக்கின்றன.//
ஆமாம்.
//மஞ்சள் குருவி அட ! ...தமிழ் சினிமாப்பாடல் டக்கென்று நினைவுக்கு வந்தது என் ஜோடி மஞ்சக் குருவி!!!! ஹாஹாஹா..பொருத்தமாகிவிட்டதோ!//
பாட்டு நினைவுக்கு வந்து விட்டதா?
//காடைகள், புறாக்கள் (அந்த ஊர் மணிப்புறாக்கள் வித்தியாசமா இருக்கு)//
ஆமாம் கீதா.
//கோமதி பாட்டி இருக்காக.....அப்புறம் ஊருக்குப் போய்டுவாஹளாம்....வா வா சீக்கிரம் ....போதும் போதும் உம் மேக்கப் எல்லாம்...சீக்கிரம் வந்து நில்லு பாரு அவங்க கேமராவும் கையுமா நிக்காஹ...ஃபோட்டோ புடிச்சு போடுவாக எல்லாரும் பாத்து பாத்து நம்மள ரசிப்பாக...அப்புறம் கொஞ்ச மாசம் கழித்துதானே பாட்டி வருவாஹ...சட்டுபுட்டுனு வா...
எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு பாட்டியின் கேமராக்குள்!!!!! இப்ப எங்க கண் முன்ன!//
ஆமாம் , பாட்டி நினைத்து நினைத்து மகிழ வேண்டும் . தினம் மகிழ்ச்சியை கொடுத்த கடவுளுக்கும், இந்த பறவைகளுக்கும் நன்றி.
//சமத்து செல்லங்கள்....அதுங்கபாட்டிய, எங்க அக்காவை மகிழ்வித்துவிட்டுத்தான் போகுது பாருங்க!!!//
ஆமாம், ஆறுதலையும், மகிழ்ச்சியை தந்தது உண்மை.
சிட்டுக் குருவி, சிவப்புத் தலைக்குருவி வித்தியாசம்
பதிலளிநீக்குசிவப்புத் தலைக்குருவி நீங்க சொல்லிருப்பது போல் கொஞ்சம் கழுது போன்ற தோற்றம் முன்பகுதி. மரம் பிடித்திருப்பதாலும், அக்கா படம் எடுப்பதாலும் எல்லாம் அங்கு வ்ந்து ஃபோட்டோ ஷூட் முடித்துக் கொண்டு போகின்றன!
வானவில் படங்களும் மிக அழகாக இருக்கின்றன.
அனைத்தும் ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா
கீதா
சிட்டுக் குருவி, சிவப்புத் தலைக்குருவி வித்தியாசம்//
நீக்குசிட்டுக்குருவியை விட சிவப்புத்தலைக்குருவி கொஞ்சம் பெரிது.
//சிவப்புத் தலைக்குருவி நீங்க சொல்லிருப்பது போல் கொஞ்சம் கழுது போன்ற தோற்றம் முன்பகுதி. மரம் பிடித்திருப்பதாலும், அக்கா படம் எடுப்பதாலும் எல்லாம் அங்கு வ்ந்து ஃபோட்டோ ஷூட் முடித்துக் கொண்டு போகின்றன!//
கழுகு போல இருப்பது வேறு பறவை.
ஆமாம் , என் தலை கண்டால் இந்த மரத்தில் அமர்ந்து கொஞ்சம் நேரம் நிற்கும்.
//வானவில் படங்களும் மிக அழகாக இருக்கின்றன.
அனைத்தும் ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா//
அனைத்தையும் ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.
காணொளி சிறப்பு..
பதிலளிநீக்குபடங்களும் அழகு..
இயற்கையின் அழகே அழகு..
மணிப்புறாக்கள் அழகோ அழகு..
வாழ்க நலம்.
வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குகாணொளி சிறப்பு..
படங்களும் அழகு..//
நன்றி.
//இயற்கையின் அழகே அழகு..
மணிப்புறாக்கள் அழகோ அழகு..//
உங்கள் கருத்துக்கு நன்றி.
காடை பறவை சிட்டுக்குருவி என அழகான படங்கள். மரம் பற்றிய விபரங்கள் அருமை.
பதிலளிநீக்குவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.
வெள்ளை அரளி இவ்வளவு உயரமாக வளருமா? அழகாக கொல்லென்று பூத்திருக்கிறதே!
பதிலளிநீக்குமற்றோர் மரத்தை நான் சரக்கொன்றை என்று நினைத்தேன். பறவைகளையும், செடிகளையும் இவ்வளவு நேசிக்கும் நீங்கள் ஒரு பறவைக் காதலர்தான்.
வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
நீக்கு//வெள்ளை அரளி இவ்வளவு உயரமாக வளருமா? அழகாக கொல்லென்று பூத்திருக்கிறதே!//
ஆமாம், நல்ல உயரமாக வளரும்.
நிறைய பூக்கும்.
//மற்றோர் மரத்தை நான் சரக்கொன்றை என்று நினைத்தேன். பறவைகளையும், செடிகளையும் இவ்வளவு நேசிக்கும் நீங்கள் ஒரு பறவைக் காதலர்தான்.//
உங்களின் அன்பான கருத்துக்கு நன்றி.