புதன், 6 ஜூலை, 2022

வில்லாயுதமுடைய அய்யனார் கோவில்

 

வில்லாயுதமுடைய அய்யனார் கோயில் இப்போது "முத்தையா சுவாமி கோயில் "என்றே அழைக்கப்படுகிறது.

அய்யனார்

மதுரை  கோச்சடையில் இந்த கோயில் இருக்கிறது.   மதுரை தேனி சாலையில் போய் வர வசதியாக   உள்ளது. மதுரை ரயில்நிலையத்திலிருந்தும் சிம்மக்கல் பேருந்து நிலையத்திலிருந்தும் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.  

இந்த கோயிலுக்கு பிப்ரவரி மாதம் 19ம் தேதி மகள் குடும்பத்தோடு சென்று வந்தோம். அய்யனார் கோயில் பார்க்க வேண்டும் என்று பேத்தி, பேரன் ஆசை பட்டதால் போய் வந்தோம்.

      கோவில் உள் நுழைந்தவுடன் வலப்பக்கம் அனுமன் சன்னதி சஞ்சீவி மலையை கையில் ஏந்தி நிற்கிறார்.

                          இடபக்கம்  நவக்கிரக சன்னதி.

நவக்கிரக சன்னதி   பெரிதாக இருக்கிறது வலம் வந்து வணங்க வசதியாக.




முத்தையா சுவாமிகள்  குதிரையில் அமர்ந்து இருக்கிறார். குதிரையின் கால்கள் பூதங்களின் தலை மேல் இருக்கிறது.  இரண்டு பூதங்களுக்கு நடுவில் நிறைய கைகளுடன் பத்ரகாளி இருக்கிறார்.

திருமலை நாயக்கர் இந்த குதிரைகளை  செய்து கொடுத்து இருக்கிறார். ஒரு குதிரையின் தலையில் கிளியும், இன்னொரு குதிரை தலையில் புறாவும் இருக்கிறது.

.

அய்யனார் அமர்ந்து இருக்கிறார்

அய்யனாரின் அழகிய தோற்றம்
அய்யனாரின் பின்புறத்தோற்றம்.


இரு குதிரைகளுக்கும் நடுவில் வில்லாயுதமுடைய அய்யனார் பூர்ண புஷ்கலை அம்மன்களுடன் அமர்ந்து இருக்கும் சன்னதி உள்ளது. . அவரை படம் எடுக்கவில்லை.  அவரின் முன்புறம் வெள்ளையானை , குதிரை, நந்தி  உள்ளது.
பிள்ளையாரின் இருபக்கமும் நாகங்கள்  இருக்கிறது



சுதை வடிவில் அமர்ந்த நிலையில் செட்டிச்சி, பாப்பாத்தி உடனுறை நாகப்ப சுவாமி   தனி சன்னதி உள்ளது. இரண்டு பக்கமும் கல் நாகங்கள் உள்ளது.  


சப்தகன்னியர்கள் கொண்டை கேரள பாணியில் இருக்கிறது.

இந்த கோவிலுக்கு சேர, சோழ , பாண்டிய மன்னர்கள் ,  திருப்பணிகள் நிறைய செய்து இருக்கிறார்களாம். அவர்கள் சிலைகளும்  இருக்கிறது. பக்தர்களும் நிறைய நன்கொடைகள் செய்து இருக்கிறார்கள் .



முத்தைய்யா சுவாமி, கருப்பையா சுவாமி. மூலவர் சுதை சிற்பம்.முன்புறத்தில் உற்சவர்கள்.  

முத்தையா சுவாமி அடைக்கலமாக அய்யனார் கோவில் வந்தவர் , அவர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு நிறைய நன்மைகள் செய்து இருக்கிறார். அதனால் அவர் இப்போது தெய்வமாக வணங்க படுகிறார்


ராக்காயி அம்மன்,  பத்ரகாளி ,இருளாயி அம்மன்,
லாட சன்னாசி, ஆதி பூசாரி,  பேச்சி அம்மன்
துர்கை அம்மன்

அழகர் கோயில்  சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இருக்கிறார் 

பெருமாளின் இருபக்கமும் தசாவதாரங்களும், லட்சுமி, கருடன் ஆகியோரும் இருக்கிறார்கள்.



 

இரண்டாயிரம்  ஆண்டுகளை  கடந்த புளியமரமாம் ,  அதன் அடியில் பெரிய புற்றும்,  நிறைய நாகர் சிலைகளும் இருக்கிறது .


மூலவர் விமானம்
வித்தியாசமான தட்சிணாமூர்த்தி


 முருகன்,வள்ளி, தெய்வானை
ஐயப்பன் 

நீதி போதனை சொல்லும் குரங்குகள் சிலை

பொங்கல் வைத்து கொண்டு இருந்தார்கள்.

 இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுவதை  வேண்டியவாறு பெறுவார்களாம், கோவில் வரலாறு சொல்கிறது.

வில்லாயுதமுடைய அய்யனார், முத்தையா சுவாமியை வணங்கி   எல்லோரும் நலமாக இருக்க வேண்டி வந்தோம்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!

---------------------------------------------------------------------------------------------------

49 கருத்துகள்:

  1. அழகிய கோவில்.... அழகர் கோவில் சுந்தர்ராஜப்பெருமாளுக்கு சன்னிதியும் வைத்திருப்பது அழகு.

    குதிரை, திருமலைநாயக்கர் காலத்ததா?

    மதுரையில் படித்தபோது கோச்சடை சென்றிருக்கிறேன். இப்போது கோச்சடை எங்கு இருக்கு என்றே மறந்துவிட்டது. மதுரையில் மிகப் பழைய தியேட்டருக்கும் சென்று படம் பார்த்திருக்கிறேன். அந்த தியேட்டர் பெயரும் மறந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

    //அழகிய கோவில்.... அழகர் கோவில் சுந்தர்ராஜப்பெருமாளுக்கு சன்னிதியும் வைத்திருப்பது அழகு.//

    ஆமாம் அழகான கோவில். அழகர் கோவில் சென்றால் வெகு நேரம் நின்று பார்க்க முடியாது. உடனே பார்த்து விட்டு திரும்பவேண்டும். இங்கு நின்று ஆற அமர அவரை தரிசனம் செய்யலாம்.


    ஞாயிறு காலை அழகர் கோவிலுக்கு சாரின் தம்பி மகன் , மருமகளுடன் சென்று இருந்தேன், சுந்தர்ராஜப்பெருமாளை பார்க்கமுடியவில்லை அமாவாசை அன்றுதான் திரையை நீக்குவோம் என்றார்கள்.

    பழைய தியேட்டர் என்றால் தங்கம், குரு, சிந்தாமணி , மாப்பிள்ளை விநாயகர் என்று உண்டு அதில் எந்த தியேட்டர் போனீர்களோ!
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குதிரை, திருமலைநாயக்கர் காலத்ததா?

      ஆமாம் , நெல்லை அப்படித்தான் வரலாறு சொல்கிறது.
      மிக பழமையான கோவிலாம்.
      நாங்கள் போன போது புதுபித்து கொண்டு இருந்தார்கள்.
      மீண்டும் 10 நாட்களுக்கு முன் போக சந்தர்ப்பம் கிடைத்தது.
      அப்போது ஒரு பெரியவர் இந்த கோவிலின் பெருமைகளை கூறும் போது திருமலை நாயக்கர் செய்து வைத்த குதிரை என்று சொன்னார்.
      புளிய மரத்தின் பெருமையை சொன்னார்.
      புயலில் சாய்ந்தாலும் மீண்டும் துளிர்த்து விட்டதாம். மரம்.

      நீக்கு
    2. சிந்தாமணி தியேட்டராகத்தான் இருக்கும். பழையகால நாடகக் கொட்டகை போல இருந்த நினைவு. ஆசியாவின் பெரிய 'தங்கம்' தியேட்டரில் நடனமங்கை ஒருவர் (ஒரு கால் மட்டும் உள்ளவர்) நடித்த ஒரு படம் பார்த்தேன். அது தவிர சலங்கை ஒலி பார்த்தேன். மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரிலும் படம் பார்த்திருக்கிறேன், அதைவிட 'மாப்பிள்ளை விநாயகர்' கூல்டிரிங்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும், அந்த ஊரில் 85-87ல் இருந்தபோது

      நீக்கு
    3. சிந்தாமணி தியேட்டர் வெளியே இருந்து பார்க்கும் போது நாடக கொட்டகை போல இருக்கும். நானும் 70ல் பார்த்தது மறந்து விட்டது.
      நடனமங்கை நடித்த படம் "மயூரி" தொலைக்காட்சி தொடர்களில் நடித்து கொண்டு இருந்தார்.
      மாப்பிள்ளை விநாயகர் கூல்டிரிங்ஸ் நானும் குடித்து இருக்கிறேன். கோலி சோடா நிறைய கடைகளில் பார்த்து இருக்கிறேன்.

      உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நெல்லை.

      நீக்கு
  3. ஒரு சந்நிதி விடாமல் படம் எடுத்திருக்கீங்க. எல்லாப் படங்களும் தெளிவாகவும் வந்திருக்கின்றன. அழகர் கோயில் சுந்தரராஜப் பெருமாள் இங்கே இருப்பதும் ஆச்சரியமாக இருக்கு. கோச்சடைக்கு எப்போவோ போனது. இப்போல்லாம் நெல்லை சொல்றாப்போல் மறந்தும் போச்சு. உங்க பதிவுக்கு வந்தே பல நாட்கள் ஆகின்றன. இன்னிக்கு இப்போத் தான் எழுந்து உட்கார்ந்தேன். விளக்கேற்றணும் என்பதால். அப்படியே பார்க்காத பதிவுகளையும் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      உடல் நலம் தேவலையா?

      மூலவர் அய்யனாரை எடுக்கவில்லை. மற்றவைகளை எடுக்க கூடாது என்று யாரும் சொல்லவில்லை அதனால் எடுக்க முடிந்தது.
      நானும் கோச்சடைக்கு இப்போது பேரன் பேத்திகளூடன் போனது தான் . முன்பு கேள்வி பட்டு இருக்கிறேன், ஆனால் போனது இல்லை.

      பதிவுகளை மெதுவாக பார்க்கலாம். உடல் நலத்தை கவனித்து கொள்ளுங்கள்.

      எனக்கும் உடல் நிலை சரியில்லை, இருந்தாலும் வலுவில் உற்சாகத்தை வரவழைத்து கொண்டு பதிவு போட்டு இருக்கிறேன், பதிவு போட்டு ரொம்ப நாள் ஆச்சு என்று.

      ஏதாவது செய்து கொண்டு இருங்கள், சும்மா இருக்காதீர்கள் என்று மகன் சொன்னதால். படங்களை தினம் தினம் கொஞ்சம் வலையேற்றினேன். இன்று கொஞ்சம் எழுதி போட்டு விட்டேன் பதிவை.

      நீக்கு
    2. இரண்டு பேருக்குமே உடல்நலம் சரியில்லையா?  என்ன ஆயிற்று?  இப்போது தேவலாமா?

      நீக்கு
    3. இரண்டு பேரும் ஒரே ராசி , அதுதான் இரண்டு பேருக்கும் உடம்பு படுத்துகிறது.
      சாரின் தம்பி மகன், மருமகள் வந்து இருந்தார்கள் அவர்களுடன்கோவில் குளம் போய் வந்தது உடல்வலி, மேல்,கால் வலி. குழந்தைகளை கண்டால் உற்சாகம் அவர்களுடன் இரண்டு நாள் வெளியே போய் வந்தேன் .
      ஓய்வு எடுத்தால் சரியாகும்.

      நீக்கு
  4. நியூ சினிமா, கல்பனா, மீனாக்ஷி திரைஅரங்கு ஆகியவையும் பழைய திரை அரங்குகள் தாம். இன்னும் சிலவும் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், இவைகள் பேர் மறந்து விட்டது. தியேட்டர் போயே பல வருடம் ஆச்சு.
      நிறைய திரைஅரங்குகள் இப்போது இல்லை.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. தியேட்டர் பெயர்கள் ஏன் இங்கு சொல்லி இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.  எனினும் எனக்கும் நினைவிருக்கும் மதுரை சினிமா தியேட்டர்கள் பெயர்களை சொல்லுதல் கடமையாகிறது!!!  அம்பிகா, சுந்தரம், சினிப்ரியா, மினிப்ரியா, சுகப்ரியா, நடனா, நாட்டியா, மஹாராணி, இளையராணி (இப்போது பெயர் மாற்றி விட்டார்கள்) ராம், அலங்கார, அபிராமி, தினமணி, ஷா, தங்கம், ரீகல், 

      நீக்கு
    3. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      நெல்லை தமிழன் அவர் முன்பு மதுரையில் இருந்தது பற்றி சொல்லி இருந்தார் .

      //மதுரையில் படித்தபோது கோச்சடை சென்றிருக்கிறேன். இப்போது கோச்சடை எங்கு இருக்கு என்றே மறந்துவிட்டது. மதுரையில் மிகப் பழைய தியேட்டருக்கும் சென்று படம் பார்த்திருக்கிறேன். அந்த தியேட்டர் பெயரும் மறந்துவிட்டது//

      இப்படி சொல்லி இருந்தார், அதனால் எனக்கு நினைவில் உள்ள தியேட்டர் பேர் சொன்னேன்.

      நீங்கள் சொன்னதில் சில தியேட்டர் போய் இருக்கிறேன்.

      நீக்கு
  5. குதிரையில் அமர்ந்திருக்கும் அய்யனார் கம்பீரம் ப்ளஸ் அழகு.  மதுரையில் இருந்தபோது ஓரிருமுறை கோச்சடை பக்கம் சென்றிருக்கிறேன்.  தாண்டிச் சென்றதுண்டே தவிர கோவிலுக்கு எல்லாம் சென்றதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குதிரையில் அமர்ந்திருக்கும் அய்யனார் கம்பீரம் ப்ளஸ் அழகு.//
      ஆமாம். அந்த கம்பீரமும், அழகும் எல்லோரையும் கவர்ந்து விடும்.

      அந்த பக்கம் எல்லாம் போய் இருக்கிறீர்களா?
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. இதுவல்லவோ படங்கள்... ஆகா...! அருமை அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்
      ஆகா! உங்கள் கருத்து மகிழ்ச்சி தருகிறது,
      நன்றி.

      நீக்கு
  7. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    திருமலை நாயக்கர் காலத்தில் செய்த குதிரை சிலைகள் இன்றைய நிலையிலும் சிறப்பாக இருக்கிறது.

    தலபுராணம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      //படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.//

      நன்றி.

      //திருமலை நாயக்கர் காலத்தில் செய்த குதிரை சிலைகள் இன்றைய நிலையிலும் சிறப்பாக இருக்கிறது.//

      ஆமாம், அன்றைய மன்னர்கள் காலம் கடந்தும் தன் பேர் சொல்லும் கோயில்களை , சிலைகளை வடித்தார்கள் இறைவனுக்கு.
      அவர்கள் அரண்மனைகள் அழிந்தாலும் அவர்கள் கட்டிய கோவில்கள் இன்றும் நிலைத்து நிற்கிறது காலத்தை வென்று.

      தலபுராணம் நிறைய இருக்கிறது. நான் கொஞ்சம் தான் பகிர்ந்தேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. வில்லாயுதமுடைய ஐயனார், முத்தையா சுவாமிகளை வணங்கி எல்லோரும் நலமாக இருக்க வேண்டிக் கொள்வோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      நீங்கள் இந்த கோவில் போய் வந்து பதிவு போட்டு இருக்கிறீர்கள்.

      //வில்லாயுதமுடைய ஐயனார், முத்தையா சுவாமிகளை வணங்கி எல்லோரும் நலமாக இருக்க வேண்டிக் கொள்வோம்..//

      அப்படியே வேண்டிக் கொள்வோம்.

      நீக்கு
    2. இத்திருக்கோயிலுக்கு செல்லும் பாக்கியம் இனிமேல் தான் கிடைக்க வேண்டும்..

      எல்லாம் வில்லாயுதமுடைய ஐயனார் அருள்..

      நீக்கு
    3. நீங்கள் பதிவு போட்டது போலவே நினைவு.

      எல்லாம் வில்லாயுதமுடைய ஐயனார் அருள்.//

      ஆமாம் . அவன் அருள் இருந்தால் தரிசனம் செய்ய வாய்ப்பு அருளுவார்.

      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  9. கோச்சடை அமர்ந்த
    கோவே போற்றி
    வீச்சரி வாளுடன்
    முத்தையா போற்றி
    வார்சடை யோன் தந்த
    சுதனே போற்றி
    பேர்உடை யாய்சிவ
    பாலா போற்றி..

    வில்லா யுதமுடை
    வீரா போற்றி
    பொற்சடைப் பூரணி
    துணைவா போற்றி
    நல்லா யுதமுடை
    நாயக போற்றி
    பூச்சடை புஷ்கலை
    கணவா போற்றி!..

    எழுதிக் கொண்டிருக்கும் ஐயனார் மாலையில் வில்லாயுதம் உடைய ஐயனையும் இணைத்து விட்டேன்..

    தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! பாடல் அற்புதம்.
      பாடலை பாடி வேண்டிக் கொண்டேன்.
      ஐயனார் மாலையில் அழகான மலரை சேர்த்து விட்டீர்கள்.

      ஐயனார் உங்களை நலமுடன் வைக்கட்டும். நூறு, ஆயிரம் என்று கவி பாடுங்கள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி .

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது படங்கள் வழக்கம் போல அழகாக உள்ளது.

    ஒவ்வொரு படத்தையும், தெளிவாக எடுத்து, அதன் விபரங்களையும் மிக அருமையாக சொல்லி உள்ளீர்கள். இரண்டாவது படமும், குதிரை மேல் அமர்ந்த ஐய்யனார் படங்களும் அழகாக உள்ளது. விமான தரிசனம் பெற்று கொண்டேன். இரண்டாயிரம் வருடங்களை கடந்த புளிய மரம் என்பது ஆச்சரியத்தை தருகிறது. ஒரே கோவிலுக்குள் அனைத்து தெய்வங்களும் இருக்கின்றன. இந்த ஊருக்கெல்லாம் நாங்கள் இதுவரை போனதில்லை. அவன் அழைக்கும் போது வரும் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறேன். நான் திருமங்கலத்தை தாண்டி மதுரை செல்வதே அரிதாகத்தான் இருந்தது. குழந்தைகள் மதுரா காலேஜ்ஜில் படிப்பதற்காகவும் என் கணவர் அலுவலகத்திற்கும் மதுரை சென்று வந்தார்கள். உங்கள் அழகான பதிவின் மூலம் அனைத்து கோவில்களை தரிசனம் செய்தாகி விட்டது எனக்கு மிகுந்த மகிழ்வை தருகிறது. இப்படி அங்குள்ள எல்லா கோவில்களின் பதிவை தாங்கள் விபரமாக பகிர்வதற்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //ஒவ்வொரு படத்தையும், தெளிவாக எடுத்து, அதன் விபரங்களையும் மிக அருமையாக சொல்லி உள்ளீர்கள். இரண்டாவது படமும், குதிரை மேல் அமர்ந்த ஐய்யனார் படங்களும் அழகாக உள்ளது//

      நன்றி .

      //இரண்டாயிரம் வருடங்களை கடந்த புளிய மரம் என்பது ஆச்சரியத்தை தருகிறது//

      புளியமரத்தின் அடியில் இருக்கும் நாகங்களுக்கு முட்டியும் பாலும் வைப்பார்களாம். அதை நிறைய இருக்கே என்று ஒருவர் வீட்டுக்கு எடுத்து போய் விட்டாராம். அன்று அவர் வீட்டுக்கு அத்தனை பாம்புகள் வந்து விட்டதாம். அதிலிருந்து யாரும் முட்டையை தொட மாட்டார்களாம்.
      புளிய மரமும் புயல் காற்றில் விழுந்து மீண்டும் துளிர்த்து வந்து விட்டதாம்.

      இந்த ஊருக்கெல்லாம் நாங்கள் இதுவரை போனதில்லை. அவன் அழைக்கும் போது வரும் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறேன். //

      நானும் இத்தனை வருடமாக போனது இல்லையே! நீங்கள் சொன்னது போல அவர் நினைத்தால் முடியும்.

      நிறைய இருக்கிறது கோவில்கள் . முடிந்தவரை,
      தேகபலமும், மன பலமும் அவன் தர வேண்டும். அவன் அழைக்கும் வரை பார்ப்போம்.

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. வில் ஆயுதம் உடய ஐய்யனார் படங்களும் பகிர்வும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. அய்யனார் கோவில் அழகாக இருக்கிறது. படங்களும் விளக்கங்களும் நன்று.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
    உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  14. கருத்தை இங்கே போடுவதற்குப் பதிலாக மாற்றிப் போட்டிருக்கேன். :( பதிவை நீக்கியது மன வருத்தத்தை அளிக்கிறது. யாராக இருந்தாலும் அவரும் பெருமாள் தானே! ஆனால் நிச்சயமாக ஆதிகேசவர் இல்லை. உங்கள் உற்சாகத்தைக் கெடுத்துவிட்டேனோ எனக் கவலையாகவும் இருக்கு. மீண்டும் மீண்டும் மன்னிக்கவும். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      பதிவை நீக்கியதற்கு வருத்தபட வேண்டாம்.
      அவரும் பெருமாள்தான். ஆனால் அந்த ஊர் பெருமாள் இல்லை. வேறு யாராவது வந்து ஏதாவது சொன்னால் என்ன செய்வது?

      எங்களுக்கு வந்த பெருமாள் வேறு கோயில் பெருமாள் என்று தெரிந்த பின் எப்படி நீக்காமல் இருக்க முடியும்.?

      எப்போதும் நான் போய் வந்த கோயில், மற்றும் நான் எடுத்த படங்கள் மட்டுமே பகிர்வது வழக்கம். ஒரு பதிவு போடு முன் நிறைய படித்து பின் தான் செய்திகள் சேகரித்து போடுவது வழக்கம். இந்த முறை
      மச்சினர் போட்டு இருந்தாரே என்று போட்டு விட்டேன்.
      எனக்கு இதுவும் ஒரு அனுபவம் தான்.
      வாட்ஸ் அப் செய்திகளை எப்போதும் பகிர மாட்டேன்.
      சகோ துரை செல்வராஜூ கேட்டதால் ஒரு ஆர்வத்தில் போட்டு விட்டேன்.


      கவலை வேண்டாம். இனி வேறு பதிவுகள் போடும் போது மிக எச்சரிக்கையாக இருப்பேன் அல்லவா? நல்லதுதான்.

      மன்னிப்பு எல்லாம் வேண்டாம். சைப்பார்க்க சொன்னது நல்லதுதான்.

      நீக்கு
    2. நீங்கள் பகிர்ந்தவர் அடையாறு அனந்தபத்மநாப சுவாமி தான் என்பதைப் பின்னர் தெரிந்து கொண்டேன். திருவனந்தபுரம் அனந்தபத்மநாபர் வலக்கையை நீட்டிய வண்ணம் படுத்திருப்பார். ஆகவே அவர் இல்லை. நீங்க போட்ட காணொளியில் வலக்கையை நீட்டியவண்ணம் பெருமாள் படுத்திருக்கவில்லை. அதோடு பட்டாசாரியாரும் மிகவும் புதியவர்.

      நீக்கு
    3. ஆமாம், அடையாறு அனந்தபத்மநாப சுவாமி தான்.

      நன்றி உங்கள் கருத்துக்கு.

      நீக்கு
  15. அனைத்துப் படங்களும் பகிர்வும் அருமை. சிலைகளைப் பற்றிய வர்ணனை மேலும் அவற்றைக் கூர்ந்து கவனித்து இரசிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      படங்களை, பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  16. கோமதிக்கா சாரி பதிவு விடுபட்டிருந்திருக்கிறது. போனவாரம் கொஞ்சம் வேலைப்பளுவில் விடுபட்டிருக்கிறது.

    படங்கள் வழக்கம் போல அட்டகாசம் அதுவும் வெள்ளைக் குதிரை மேல் ஐயனார்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
      நீங்கள் முன்பே சொல்லி இருந்தீர்கள் வேலை ஒன்று வந்து இருக்கிறது என்று அதனால் நேரம் கிடைக்கும் போது வருவீர்கள் என்று நினைத்தேன். அது போல வந்து விட்டீர்கள்.
      படங்களை, பதிவை ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  17. பட்ங்களும் உங்கள் விவரணமும் வெகு சிறப்பு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  18. வெள்ளைக் குதிரை ஐயனார் சிலைக்குக் கீழ் அந்தப் படமும் செமையா இருக்கு

    ஒவ்வொன்றையும் கூர்ந்து பார்த்து விளக்கியிருக்கீங்க கோமதிக்கா...எனக்கெல்லாம் இப்படி சொல்லவே வராது!!! ஒரு தலையில் கிளி, ஒரு தலையில் புறா என்று..

    கீதா

    பதிலளிநீக்கு
  19. நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்ததும் பார்த்தேன்...

    திருமலை நாயக்கர் செய்துகொடுத்ததை நன்றாகப் பராமரிக்கிறார்கள் இல்லையா?

    சேர சோழ பாண்டியர் சப்தகன்னியர் கேரள கொண்டையுடன் - நிஜமாகவே நீங்கள் அழகா சொல்றீங்க கோமதிக்கா.

    ஆமாம் சிறு தெய்வங்கள் எல்லோருமே அப்படித்தானே முன்பு நன்மை செய்தவர்கள், அடைக்கலம் கொடுத்தவர்கள் ஊரைக் காத்தவர்கள் என்று இல்லையா..

    இரண்டாயிரம் ஆண்டு கடந்த புளியமரமா ஆஹா!! ஆச்சரியம் இல்லையா?
    மரப்பட்டைகள் அப்படியே இருக்கிறதே...

    கோயில் அழகாக இருக்கிறது. எல்லா தெய்வங்களுக்கும் சன்னதிகளுடன்...

    படங்கள் மிகத் தெளிவு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமலை நாயக்கர் செய்துகொடுத்ததை நன்றாகப் பராமரிக்கிறார்கள் இல்லையா?//

      ஆமாம்.

      //சேர சோழ பாண்டியர் சப்தகன்னியர் கேரள கொண்டையுடன் - நிஜமாகவே நீங்கள் அழகா சொல்றீங்க கோமதிக்கா.//

      நன்றி.

      சிறு தெய்வங்கள் எல்லோருமே அப்படித்தானே முன்பு நன்மை செய்தவர்கள், அடைக்கலம் கொடுத்தவர்கள் ஊரைக் காத்தவர்கள் என்று இல்லையா..//

      ஆமாம்.


      இரண்டாயிரம் ஆண்டு கடந்த புளியமரமா ஆஹா!! ஆச்சரியம் இல்லையா?
      மரப்பட்டைகள் அப்படியே இருக்கிறதே...//

      புயலில் சாய்ந்து மீண்டும் துள்ர்த்து இருக்கிறது.

      கோயிலை ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.






      நீக்கு
  20. கோச்சடை - மதுரையில் தான் படித்தேன் அப்போது சென்றிருக்கிறேன். இப்போது இடங்கள் எல்லாம் மாறிவிட்டன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், இப்[போது நிறைய மாற்றங்கள் ஊரில் ஏற்பட்டு இருக்கிறது.

      நீக்கு
  21. அக்கா கோச்சடை என்றால் கோச்சடையான் ரஜனி படம் நினைவுக்கு வருது...ஆனால் அந்தப் படத்தின் கதை தெரியாது..
    .கோச்சடையான்ன்னு அரசர் யாரேனும் இங்கு இருந்திருப்பார்களோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் கோச்சடையான் படக்கதை தெரியாது.

      புட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான் பிரம்படி பட்டு கோபித்து கொண்டு வந்த இடம் . கோபம்+ சடையான் கோச்சாடையான். சடை முடி தரித்த சிவன் கோபம் கொண்டு இந்த இடத்தில் படுத்து இருந்தராம்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு