புதன், 27 ஜூலை, 2022

ஜன்னல் வழியே!



இந்த பறவையை நிறைய முறை "ஜன்னல்வழியே"
என்ற பதிவுகளில் பார்த்து இருப்பீர்கள்.  தனியாக நிறைய படம் போட்டு இருக்கிறேன். இந்த முறை ஜோடியாக வந்தது எங்கள் குடியிருப்புக்கு.

இந்த பறவையை முதலில் செண்பக பறவை என்றே பகிர்ந்து வந்தேன். மாயவரத்தில் பக்கத்து வீட்டு செண்பக மரத்தில் அடிக்கடி வந்து சத்தம் கொடுக்கும். இதன் சத்தம் வித்தியாசமாக இருக்கும்.

நம் ராமலக்ஷ்மி இந்த பறவையின் பெயர் வால் காக்கை என்றார்கள்.   (அவர்களும் அவர்கள் தோட்டத்திற்கு வந்த வால் காக்கை படம் பகிர்ந்து இருக்கிறார்கள் அவர்கள் தளத்தில்.) அதன் பின் அதனை பற்றி படித்தேன்.

"ஜன்னல் வழியே"  பறவைகள்படங்கள் போட்டு வெகு நாட்கள்  ஆகி விட்டது. அதுதான் இன்று பதிவு போட்டு விட்டேன்.


ஒரு பாட்டு பாடேன்

இதோ பாடுகிறேன்


உடனே வெட்கம் வந்து பறந்து விட்டாயா?

"நில்லு நில்லு நானும் வாரேன்"


பாட்டு கொஞ்சம்தான் பாடியது. நான் எடுத்த காணொளி

காக்கை இனத்தை சேர்ந்த இந்த  பறவையின் சத்தம்  வித விதமாக இருக்கும். இனிமையாக இருக்கும், சில நேரம் கத்தலாகவும் இருக்கும். இதன் வித்தியாசமான சத்தம் தான் வீட்டுக்குள் இருக்கும் என்னை வெளியே வந்து பார்க்க வைத்தது. "கோ. கீ .லா , கோ.கீ. லா, ர. ர.  ர " என்று கர கரப்பாக கத்தும் என்று சொல்கிறார்கள். நான் எடுத்த காணொளியை கேட்டுப் பாருங்கள். இன்னும் கொஞ்ச நேரம் இருந்து சத்தம் கொடுத்து இருக்கலாம். அதற்குள் பறந்து விட்டது.

பிப்ரவரி முதல் ஜூலை வரை முட்டையிடும் காலமாம்.
காக்கை கூடு கட்டுவது போலவே மரங்களில் கூடு கட்டி முட்டையிடுமாம். சிறு குச்சிகளை வைத்து கூடு கட்டுமாம்.

இதன் ஆங்கில பெயர் :- Rufous treepie
இதன் அறிவியல் பெயர் :- Dentrocitta Vagabunda 
 மரங்கள் இடையே அலைபவன் என்ற பொருளாம். 

முன்பு எடுத்த படம் :- எதிர் வீட்டில்  உணவு உண்ணும் காட்சி.
 ரொட்டி தூண்டை வாயில் வைத்து இருக்கிறது.


முக நூலில் போட்ட படம்.
போன மாதம் வந்த போது 


 காகம் போல  அனைத்தும் உண்ணுமாம், பறவைகளின் முட்டைகளை  பல்லி, தவளை இதற்கு பிடித்த உணவாம்.
பழங்களில் பப்பாளி, வேப்பம் பழம், மாம்பழம் விரும்பி சாப்பிடுமாம். மாம்பழம் தோட்டத்தில் இவை அதிகம் காணப்படுவதால் இந்த பறவையை மாம்பழத்தான் குருவி என்று அழைப்பார்களாம். இதற்கு பல பேர்கள் இருக்கிறது.
கொய்யாபழத்தான், அரிகாடை, வால்குருவி, அவரைக்கண்ணி.

இந்த காணொளியில் இந்த பறவையின் சத்தம் இருக்கிறது. வாழைப்பழத்தை சாப்பிடும் காட்சியும் இருக்கிறது. காணொளி பதிவு  போட்ட Shankar G  அவர்களுக்கு  நன்றிகள்.



இந்த காணொளி  பதிவு போட்ட SENTHIL TALKS  அவர்களுக்கு நன்றி.

ஆண், பெண் ஒரே மாதிரி இருந்தாலும் கழுத்து பகுதி மட்டும் கொஞ்சம் அடர் கருப்பு, வெளிர் கருப்பு இருக்கிறது.
காணொளியும் நன்றாக இருக்கிறது. கூகுளில் படித்து தெரிந்து கொண்ட செய்திகளை இந்த காணொளி போட்டவரும் அழகாய் சொல்கிறார். சின்ன காணொளிதான் பார்க்கலாம்.
அரிய வகை பறவை அழிந்து கொண்டு இருக்கிறது என்கிறார்.
காக்கை போல ஊரை சுத்தம் செய்யும் பணியை இந்த பறவையும் செய்கிறது. மீண்டும் இந்த பறவைகள் இனம் பெருகட்டும்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
----------------------------------------------------------------------------------------------

33 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. ஜன்னல் வழியே கண்ட பறவைகள் அருமை. அது பேசிக் கொள்வது போன்ற படங்கள் எடுத்ததுடன் அவை என்னப் பேசியிருக்கும் என்பதையும் அழகாக சொல்லியுள்ளீர்கள். பார்க்க அழகாக உள்ளது. நன்றாக படம் எடுத்துள்ளீர்கள்.

    நீங்கள் பகிர்ந்த பழைய படமொன்றில் தலை சாய்த்து தட்டில் என்ன இருக்கிறது என்பதாக பார்க்கும் அதன் படம் மிகவும் அழகாக உள்ளது.

    வால் காக்கை பற்றிய பிற காணொளிகளும் கண்டேன். இதன் பெயரே புதுமையாக உள்ளது. இதுபோல் வாலில்லா குருவி என்ற பெயருள்ள பறவைகளும் உண்டல்லவா? மாலை நேரத்தில் கூட்டமாக வானில் பறக்கும்.

    தாங்கள் எடுத்த காணொலியிலும் அந்த வால் காக்கை சப்தம் கேட்டு ரசித்தேன்.. அதைப்பற்றிய அனைத்து விபரங்களுக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      ஜன்னல் வழியே பறவைகளை ரசித்து அவைகள் பேசியதை ரசித்தமைக்கு நன்றி.


      பழைய படம் நிறைய இருக்கிறது. ஒன்று இரண்டு மட்டும் போட்டேன்.
      மரத்தில் அமர்ந்து இருப்பது, ஜன்னலில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது என்று இந்த பறவை படம் நிறைய இருக்கிறது.
      இந்த முறை ஜோடியாக வந்து விட்டதால் இந்த பதிவு.

      வாலில்லா குருவி உண்மையில் உண்டா என்று தெரியாது.,
      வாலில்லா குருவி என்று நாணயத்தை சொல்வார்கள் விடுகதையில். வட்ட வட்ட குருவி, வாலில்லா குருவி, ஊரை சுத்தும் குருவி என்று சொல்லுவார்கள்.

      நான் எடுத்த காணொளி பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.

      மற்ற காணொளிகளும் நன்றாக இருக்கும் பார்த்து இருப்பீர்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. அரிய செய்திகளுடன் பதிவு..

    காணொளிகளைப் பார்த்து விட்டு வருகின்றேன்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //அரிய செய்திகளுடன் பதிவு..

      காணொளிகளைப் பார்த்து விட்டு வருகின்றேன்..//

      வாங்க வாங்க.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //இனிமை இனிமை அம்மா...//

      நன்றி நன்றி.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. கீதா தேடிக்கொண்டிருக்கும் பறவை இதுதானா என்று கீதா வந்துதான் சொல்லவேண்டும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      கீதா ரெங்கன் தேடி கொண்டு இருக்கிறார்களா ?
      கீதா ஊரிலிருந்து வந்து விட்டார் போல, உங்கள் தளத்தில் பார்த்தேன்.

      நீக்கு
    2. இது இல்லை ஸ்ரீராம். என் நினைவுக்கு எட்டியது வரை செம்போத்துப் பறவைதான்....உங்கள் பதிவுகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்

      கீதா

      நீக்கு
  5. 'பாட்டுப் பாடேன்..' என்று சொல்வது போலவும் அது பாடுவது போலவும் இருக்கும் பாடம் தத்ரூபம்!  அழகான கற்பனை.காணொளிகள் பார்த்தேன்.  கவனிக்கவும்.  பார்த்தேன்!  கேட்க முடியவில்லை   என் கணினி ஸ்பீக்கர் ஆன் செய்தாலே பாம் என்று அலறுகிறது!  பின்னர் அலைபேசியில் கேட்கவேண்டும்!

    பதிலளிநீக்கு
  6. 'பாட்டுப் பாடேன்..' என்று சொல்வது போலவும் அது பாடுவது போலவும் இருக்கும் பாடம் தத்ரூபம்! அழகான கற்பனை.//

    நன்றி ஸ்ரீராம்.


    //காணொளிகள் பார்த்தேன். கவனிக்கவும். பார்த்தேன்! கேட்க முடியவில்லை என் கணினி ஸ்பீக்கர் ஆன் செய்தாலே பாம் என்று அலறுகிறது! பின்னர் அலைபேசியில் கேட்கவேண்டும்//

    நான் பாருங்கள் என்று போட்டதால் பார்த்தேன் என்று போட்டு இருக்கிறீர்கள் என்று முதலில் நினைத்தேன், அடுத்த வரியை படித்தவுடந்தான் ஸ்பீக்கர் சரியில்லை என்பதை புரிந்து கொண்டேன்.

    அலைபேசியில் கேட்டு பாருங்கள்.
    உங்கள் கருத்துக்க்ளுக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  7. கோமதிக்கா வால்காக்கை செம அழகு. வால் நீளமாக இருப்பதால்தான் வால் காக்கை. படங்கள் எல்லாமே அழகு கோமதிக்கா..ஜோடியாக இருப்பதும் ரொம்ப ரசித்தேன்

    பாட்டு பாடேன் இதோ பாடுகிறேன் ...அக்கா படத்துக்கு ஏத்த அழகான வரி. அதுவும் பாருங்க பாடுகிறேன்னு தலையை உயர்த்தி கழுத்தை தூக்கிக் கொண்டு நித்யஸ்‌ரீ போலவே பாடுகிறாள் போலும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
      வால் நீள்மாக இருப்பதாலும், கொஞ்சம் காக்கை போல குணமும் , தலையும் இருப்பதால் வால் காக்கை.
      ஜோடியாக வந்தது அழகுதான் கீதா.

      நித்யஸ்ரீ போல பாடுகிறாரா ! ஆமாம் கழௌத்தை தூக்கி தான் அவர் பாடுவார்.
      ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  8. பறந்து போய்விட்டது. ஒரு வேளை அடுத்த சபாலயும் பாடனும் போல...டைம் ஆகிருக்கும் அதான் பறந்துவிட்டது போல

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பறந்து போய்விட்டது. ஒரு வேளை அடுத்த சபாலயும் பாடனும் போல...டைம் ஆகிருக்கும் அதான் பறந்துவிட்டது போல//

      இருக்கும் இருக்கும்.

      நீக்கு
  9. அக்கா நீங்கள் எடுத்த காணொளியில் அதன் சத்தம் கேட்கிறது. இதில் சின்னதாகத்தான் குரல் கொடுக்கிறது. இரு முறை கொடுக்கிறது.

    செந்தில் அவர்களின் காணொளியும் பார்த்தேன் நன்றாக இருக்கிறது,

    அழகான பதிவு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி பார்த்தது அறிந்து மகிழ்ச்சி. ஆமாம், இருமுறை சத்தம் கொடுத்து பறந்து விட்டது.
      மற்ற காணொளிகளும் பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  10. படங்களும் விவரங்களும் நன்றாக இருக்கின்றன. காணொளியும் கண்டேன். இதே சத்தத்தில் இதே பறவை எங்கள் பக்கங்களில் மரங்கள் மலைகள் அதிகம் இருப்பதால் பார்த்திருக்கிறேன்.

    தகவல்களும் பதிவும் அருமை. படங்கள் தெளிவாக அழகாக இருக்கின்றன

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
      உங்கள் பக்கம் பசுமையாக இருக்கும் இல்லையா? இந்த பறவைகள்தான் மரங்களுக்கு இடையே அலையுமே!
      ஆதனால் பார்த்து இருப்பீர்கள்.
      தகவலையும், படங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  11. கட்டுரையும் படங்களும் சரியாக பொருந்தி உள்ளன. படங்கள் அழகு. பாராட்டுகள். 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திர சேகரன் சார், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  12. நேற்று போட்ட பதிவு எனக்கு இப்போதுதான் எனது டேஸ் போர்டுக்கு வந்தது.

    காணொளிகள் சிறப்பாக சொல்லி இருக்கிறார்.

    படங்கள் அருமை தகவல்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //நேற்று போட்ட பதிவு எனக்கு இப்போதுதான் எனது டேஸ் போர்டுக்கு வந்தது.//

      ஓ அப்படியா! ஏன் என்று தெரியவில்லையே!
      படங்களை காணொளிகளை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  13. அரைமணி நேரம் போராட்டம் கருத்து வந்ததா ? சந்தேகம்தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் இப்படி போராட்டம்? என்ன ஆச்சு?
      கருத்துக்கள் வந்து விட்டது.

      நீக்கு
  14. காணொளிகள் அருமை.. பறவைகளைப் பார்த்துக் கொண்டிருப்பதும் அவற்றின் சத்தங்களைக் கேட்டுக் கொண்டிருப்பதும் சந்தோஷந்தான்..

    இயற்கை உலகே உலகு..

    வாழ்க வையகம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      காணொளிகள் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      பறவைகள் ஒலியை காலை முதல் மாலை வரை கேட்டு கொண்டே இருப்பேன். அதுதான் மனதுக்கு மகிழ்ச்சியை தருகிறது.

      இயற்கை உலகே உலகு//

      ஆமாம் ,
      இயற்கை அன்னை தந்தது நாம் மகிழதான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.
      வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.

      நீக்கு
  15. படங்களும் அதற்கான வாசகங்களும் காணொளிகளும் அருமை. இங்கே குறிப்பிட்ட சீசனில் எப்போதேனும் காணக் கிடைக்கும். வருகையில் ஜோடியாகவே வருகின்றன. என் பதிவு பற்றியும் குறிபிட்டிருப்பதற்கு நன்றி:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      படங்களை, வாசகங்களை , காணொளியை ரசித்துப் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி .

      சத்தம் கொடுக்கும் இரண்டும். ஆனால் ஜோடியாக இப்போதுதான் கண்ணில் பட்டது. தனியாக வந்த படங்கள் நிறைய இருக்கிறது.

      நீக்கு
  16. ஜன்னல் வழியே படங்கள் அனைத்தும் அருமை தகவல்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  17. இதை முகநூலிலும் பார்த்திருந்தேன் என்றாலும் காணொளிகளுடன் கூடிய விரிவான பதிவைப் படிக்கலை. இது "கோகி! கோகி!" என்று கத்துவதாய் எனக்குத் தோணும். மறைந்த திரு கல்பட்டு நடராஜன் அவர்கள் ஒரு பறவைக்காதலர். இவர் இந்தப் பறவையைப் பற்றி விரிவாக எழுதி இருக்கார். அதை மரபு விக்கியில் படங்களுடன் சேர்த்திருக்கேன். ஆனால் மரபு விக்கியில் இருந்து இப்போது எந்தப் பதிவையும் பார்க்கவோ/படிக்கவோ முடியலை. நிறையத்தரம் அந்த நிர்வாகத்தினரிடம் கேட்டாச்சு! :( பலன் இல்லை. நான் எழுதினதே நிறைய இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      கோகி, கோகி என்று கத்தும் பற்வையும் இருக்கிறது.
      கல்பட்டு நடராஜன் அவர்கள் எழுதிய பதிவுகள் படித்து இருக்கிறேன். ராமலக்ஷ்மி அவரை பேட்டி எடுத்து அவர் தளத்தில் போட்ட பதிவும் படித்து இருக்கிறேன்.
      ராமலக்ஷ்மியிடம் கேட்டு பார்க்கலாம்.
      நீங்கள் எழுதியதையும் பார்க்க முடியவில்லையா?
      ஏன் நிர்வாகம் பதில் சொல்ல மறுக்கிறது!
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு