சனி, 13 நவம்பர், 2021

சதயத் திருநாள்

 

மகன் கட்டிய கோயில்













ஐப்பசி சதய நட்சத்திரத்தில் சோழச்சக்கரவர்த்தி ராஜராஜ சோழன் பிறந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால் என் மகன் அதே நட்சத்திரத்தில் பிறந்தான். அது தெரியாது அல்லவா உங்களுக்கு?

ராஜராஜ சோழன் சிவனுக்கு பெரிய கோவில் கட்டினார். அது போல் என் மகனும் சிவனுக்கு ஆலயம் கட்டினான். எப்படி என்று கேட்கிறீர்களா சாக்பீஸில் மெஷின் ஊசி என்னும் உளியால் செதுக்கி செதுக்கி கட்டினான்.

 அவன் பாடம் படிக்கும் சோபா சேரில் உட்கார்ந்து எழுதும் அட்டையில் சாக்பீஸை வைத்துக் கொண்டும் பிளைடாலும் ஊசியாலும் செதுக்கி செதுக்கி செய்தான்.ஒரு மாதகாலத்திற்கும் மேலாக அதைச் செய்தான்.
அப்போது பள்ளியில் அவன் பத்தாவது படித்துக் கொண்டிருந்தான். 

அவன் கட்டிய கோவிலில் தேவாரக் கல் வெட்டு இருக்கிறது. துவாரபாலகர் , லிங்கோத்பவர் இருக்கிறார்கள். கோவிலுக்கு முன்பு சுவாமி எழுந்தருளும் மண்டபம் கட்டி உள்ளான். ராஜ கோபுரம் கட்ட ஆரம்பித்து, படிக்க வேண்டியது நிறைய இருந்ததால் பாதியில் விட்டு விட்டான். பின் நேரம் இல்லை.

புடவைகட்டி, கோட்டுப் போட்ட முதல்வர் ஜெயலலிதா, தபால் பெட்டி, கீரைக்காரம்மா, பலிபீடம், டிராபிக் போலீஸ், பள்ளி செல்லும் சிறுமி, சிறுவன் ஆண், பெண் என்று நிறைய கொலுவில் ஆங்காங்கு வைக்க செய்து தந்தான். இவை எல்லாம் கொலு பெட்டியில் இருக்கிறது.

 உங்களுடன் இன்னொரு முறை பகிர்ந்து கொள்ள்கிறேன். இந்த கோவிலை தூசுதட்டக் கூட பயம் எனக்கு. மிக கவனமாய் மெதுவாய் துடைப்பேன் எங்கு உடைந்து விடுமோ என்று.இப்போது இரண்டு வயதாகும் அவனுடைய மகனிடம் நாளை வளர்ந்தபின் காட்ட பத்திரப்படுத்தி வருகிறேன்.

நாளைதான் சதயத்திருநாள். தஞ்சையில் கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள்.என் மகனும் தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறான். அவனுக்கு எங்களது வாழ்த்துக்கள்.

நீங்கள் எல்லோரும் வாழ்த்துக்கள் .

                                                        வாழ்க வளமுடன்.

21 கருத்துகள்:

  1. ஸ்ரீராம்.13 நவம்பர், 2021 ’அன்று’ முற்பகல் 6:30
    அந்தக் கோவிலை நான் நேரில் பார்த்திருக்கிறேன். ஒரு ராஜா, கோவில் கட்டியபோது கும்பாபிஷேகத்துக்கு அவன் குறித்த நாளில் வரமுடியாது என்று ராஜாவின் கனவில் கடவுள் சொன்ன கதை நினைவுக்கு வருகிறது. பிரமிக்க வைக்கும் திறமை. உங்கள் மகனுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      பழைய பதிவை படித்து கொண்டு இருந்தேன், அது இன்றைய தினத்தில் பதிவாகி விட்டது.
      அதனால் அதை எடுத்து விட்டு மீண்டும் போட்டேன்.
      உங்கள் பின்னூட்டம் பழைய பதிவில் இருந்தது.

      நீங்கள் நேரில் பார்த்த போது கோயிலுக்கு போகஸ் லைட் போட்டு உள்ளே உள்ள சிவலிங்கத்தை காட்டினார்கள் சார்.
      இது முன்பு மயிலாடுதுறையில் இருக்கும் போது படம் எடுத்து போட்ட பதிவு அப்போது லைட் எல்லாம் போடவில்லை.
      அதற்கு அப்புறம் எடுக்கவே இல்லை படம்.
      //ஒரு ராஜா, கோவில் கட்டியபோது கும்பாபிஷேகத்துக்கு அவன் குறித்த நாளில் வரமுடியாது என்று ராஜாவின் கனவில் கடவுள் சொன்ன கதை நினைவுக்கு வருகிறது.//

      ஆமாம்.
      பூசாலார் மனதில் கட்டிய கோவிலுக்கு போக வேண்டி இருப்பதால் ராஜா கட்டிய கோவிலுக்கு வரவில்லை ராஜா.
      உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

      நீக்கு
    2. ஸ்ரீராம்.13 நவம்பர், 2021 ’அன்று’ முற்பகல் 6:30
      பதிவு பழைய பின்னூட்டங்களோடு வந்திருந்தது. கமெண்ட் இடும்போது காணாமல் போய்விட்டது!

      பதிலளிநீக்கு

      நீக்கு
    3. ஆமாம், பழைய பின்னூட்டங்களுடன் வந்து விட்டதை எடுத்து விட்டு வேறு போட்டேன்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  2. KILLERGEE Devakottai13 நவம்பர், 2021 ’அன்று’ முற்பகல் 7:50
    பழைய பதிவு எப்படியோ வெளியாகி விட்டது. நவம்பர் மாதம்தான் இருப்பினும் தேதி தெரியவில்லை பிறந்தநாள் வாழ்த்துகள்.

    அசாத்தியமான நுண்ணறிவு உள்ளவர்களுக்கே இது சாத்தியமாகும்.

    பதிலளிநீக்கு
  3. KILLERGEE Devakottai13 நவம்பர், 2021 ’அன்று’ முற்பகல் 7:50
    பழைய பதிவு எப்படியோ வெளியாகி விட்டது. நவம்பர் மாதம்தான் இருப்பினும் தேதி தெரியவில்லை பிறந்தநாள் வாழ்த்துகள்.

    அசாத்தியமான நுண்ணறிவு உள்ளவர்களுக்கே இது சாத்தியமாகும்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

    2011 சனிக்கிழமை, 5ம் தேதி போட்ட பதிவு வெளியாகி விட்டது.

    இன்று மகனுக்கு பிறந்தநாள்தான். இங்கு நாளை சதய நட்சத்திரம். தஞ்சையில் இன்று மன்னர் ராஜராஜசோழனின் பிறந்தநாள் விழா நடைபெறும்.
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    //அசாத்தியமான நுண்ணறிவு உள்ளவர்களுக்கே இது சாத்தியமாகும்.//
    உங்கள் பாராட்டுக்கு நன்றி.


    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. திறமை மென்மேலும் பெருக வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. தங்களது ழ்ன்பு மகனுக்கு அன்பின் நல்வாழ்த்துகள்..

    இரண்டு நாட்களாக உடல் நலம் சரியில்லை.. காய்ச்சல்.. மிகவும் அயர்ச்சியாக இருக்கின்றது..

    பிறகு வருகின்றேன்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //இரண்டு நாட்களாக உடல் நலம் சரியில்லை.. காய்ச்சல்.. மிகவும் அயர்ச்சியாக இருக்கின்றது..//

      உடல் நலத்தைப்பார்த்து கொள்ளுங்கள். மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டு ஓய்வு எடுங்கள் சரியாகி விடும்.
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. சத்ய திருநாள் கொண்டாட்டங்களுடன் தங்கள் மகனின் பிறந்த நாள் விழாவும் சேர்ந்திருப்பது மகிழ்ச்சி. உங்கள் மகனுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். இப்போதுதான் சகோதரி வல்லி சிம்ஹன் பதிவுக்கு சென்று ஏழுமலையானை தரிசித்து வந்தேன். அங்கு அவர் மகனின் பிறந்த நாளும், உங்கள் மகனின் பிறந்த நாளும் இணைந்து வந்திருப்பதை கண்டு மகிழ்ச்சி தெரிவித்து வந்தேன். (நேற்று என்னால் வலைபதிவுகளுக்கு வர இயலவில்லை. அதனால் இருவருக்கும் தாமதமான நல்வாழ்த்துகள்.)

    தங்கள் மகனின் கைவேலைப்பாடு பிரமிக்க வைக்கிறது. பொறுமையாக சாக்பீஸில் அழகான வேலைப்பாடுடன் கோவில் செய்துள்ளார். அவருக்கு என் பாராட்டுகளை தெரிவியுங்கள். அவரின் மற்ற கலைச் சிற்பங்களையும் காண ஆவலாக உள்ளேன். வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. சத்ய திருநாள் கொண்டாட்டங்களுடன் தங்கள் மகனின் பிறந்த நாள் விழாவும் சேர்ந்திருப்பது மகிழ்ச்சி. உங்கள் மகனுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.//

      நன்றி நன்றி.

      நானும் வல்லி அக்கா மகனுக்கு வாழ்த்து சொன்னேன்.

      அவனுக்கு ஏதாவது செய்து கொண்டு இருக்க வேண்டும். முன்பு அவன் வரைந்த ஓவியங்களை பகிர்ந்து இருக்கிறேன். கைவேலைகள் நிறைய செய்வான்.
      உங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் சொல்லி விட்டேன்.நன்றி தெரிவித்தான் எல்லோருக்கும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. தங்கள் மகனின் கைவண்ணம் அருமை
    பிறந்தநாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  9. ரொம்ப அழகான கலைப் படைப்பு... மிகவும் ஆச்சர்யப்பட்டு பாராட்டுகிறேன்.

    அதைப் பத்திரப்படுத்தி வைத்த உங்களுக்கும் பாராட்டுகள்.

    கலைவண்ணம் என்பது ஜீன்ஸ்ஸில் கடத்தப்படுகிறது என நினைக்கிறேன். கல்லில் சிலைபோலச் செய்துள்ளது, முன்மண்டபம், அதில் வாழைப்பூ வடிவம்... மனதை மிகவும் கவர்ந்தது

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

    //ரொம்ப அழகான கலைப் படைப்பு... மிகவும் ஆச்சர்யப்பட்டு பாராட்டுகிறேன்.

    அதைப் பத்திரப்படுத்தி வைத்த உங்களுக்கும் பாராட்டுகள்.//

    உங்கள் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி.

    //கலைவண்ணம் என்பது ஜீன்ஸ்ஸில் கடத்தப்படுகிறது என நினைக்கிறேன். கல்லில் சிலைபோலச் செய்துள்ளது, முன்மண்டபம், அதில் வாழைப்பூ வடிவம்... மனதை மிகவும் கவர்ந்தது//

    லென்ஸ் வைத்து படிக்கலாம் கல்வெட்டை, தேவாரத்தை.

    மகன் கோவிலை ரசித்துப்பார்த்து மனம் கவர்ந்தை சொல்லி பாராட்டி கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி.

    மகனிடம் சொல்கிறேன்.


    பதிலளிநீக்கு
  11. உங்கள் மகனின் கைத்திறன் ஓரளவுக்கு அறிந்திருந்தாலும் இம்மாதிரிப் பள்ளி நாட்களிலேயே செய்தார் என்பது மிகவும் ஆச்சரியம் அளிக்கும் ஒன்றாகும். உங்கள் மகனுக்கு எங்கள் வாழ்த்துகள். அவர் பிறந்த நாளுக்கும் எங்கள் தாமதமான வாழ்த்துகள். உண்மையிலேயே மிக அருமையாகக் கட்டி இருக்கிறார் கோயிலை. ஈசன் அருள் என்றென்றும் நிலைத்து இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      ம்கனின் கைதிறனை பாராட்டி வாழ்த்தியதற்கு மகிழ்ச்சி.
      பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களும், ஆசியும் வழங்கியது மிக மகிழ்ச்சி.
      இப்போதும் கைவேலைகள் செய்து கொண்டு இருக்கிறான்.
      அவன் பொழுது போக்கு அதுதான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. வணக்கம் சதீஸ் முத்து கோபால்
      உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு