வியாழன், 15 பிப்ரவரி, 2018

துள்ளித் திரிந்த முயலொன்று


மகன் ஊரில் (பீனிக்ஸ்) தினம் காலை  மகன் வீட்டைச் சுற்றி உள்ள நடைபாதையில்   நடைப்பயிற்சி மேற் கோள்வோம் நாங்கள் இருவரும். பறவைகள், முயல்கள் இவற்றைப் பார்ப்போம் நாள் தோறும் அவற்றின்  ஒலியும் காலைச்சூரியனின் வருகையும் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் நாள் தோறும்.

பாலைவனப் பகுதியில் பறவைகள், முயல்கள் எல்லாம் மண் கலரில் தான் இருக்கும். நம் ஊரில் வீடுகளில் வளர்க்கும் வெள்ளை, கறுப்பு முயல்களைப் பார்க்கவே  இல்லை அங்கு. இயற்கை அமைப்புக்கு ஏற்றாற் போல் இறைவன் 
  அவற்றின் பாதுகாப்புக்கு கருதி  அந்த நிறத்தில் படைத்திருக்கிறார்.

தினம் படம் எடுக்க நிற்காது. நாம் வரும் சத்தம் கேட்டதும் புதரிலிருந்து துள்ளி ஓடும்.

தள்ளி போய் ஒரு பார்வை பார்க்கும் மீண்டும் ஓடி புதரில் மறைந்து விடும்.

தினம் ரோட்டை  கடந்து ஓடும்
அந்த பக்கம் போய் பார்வை பார்க்கும்
ஒரு நாள் காலை நடைப்பயிற்சிக்கு போனபோது   ரோட்டில் அடிபட்டு இறந்து போய் முயல் கிடந்தது. காலை போன ஏதோ காரில் அடி பட்டு இருக்கிறது.
பார்த்து மிகவும் மனது கஷ்டப்பட்டது. நேற்று வரை  துள்ளிக் குதித்து ஓடி எங்களுக்கு மகிழ்ச்சி அளித்த முயல் இப்படிக் கிடப்பதைப் பார்த்து மிகவும்   வேதனை ஆகி விட்டது.  அதை அடித்து சென்ற முக தெரியாத ஆளின் மேல் கோபம் வந்தது, கவனமாய் போய் இருக்கலாம் என்று.

முயலும் அவர் எதிர்பார்க்காத நேரத்தில் பாதையை கடந்து இருக்கலாம்.


தினம் பார்த்து கொண்டு இருந்த நண்பனைப் பிரிந்த சோகம் மனதில் குடி கொண்டது.  மறு நாள்  நடைப்பயிற்சி போகும்போது இறைவா! அந்த முயலுக்கு ஏற்பட்டது போல் மற்ற முயலகளுக்கு ஏற்படக் கூடாது என்று பிரார்த்தனை செய்து கொண்டு போனேன்.

41 கருத்துகள்:

  1. பாவம்க்கா இந்த வாயில்லா ஜீவன்க .அதுங்களுக்கு ரோட் க்ராஸ் பண்ணத்தான் தெரியுமா இல்லை வேகமா வெறியோடு வரும் வாகனம்தான் தெரியுமா :( மக்கள் அவற்றின் வசிப்பிடங்களை கொள்ளையடிப்பதால் அதுங்களுக்கு இடம் தெரியலை :(
    சிலகாலம்முன் ஒரு பெரிய பங்களா வீடு எங்க ஏரியா அருகில் இருக்கு அதில் கூரை மேல் கூட்டமாக புறாக்களை இருக்கும் பார்க்க அழகு .போன வாரம் பார்க்கிறேன் ஒன்றையும் காணொம் சற்று உற்று கவனிச்சா கூரை முழுதும் ஊசி போன்ற அமைப்பை செய்திருக்காங்க :( என்ன சொல்ல மனுஷங்களை

    இங்கே நான் கணவர் கிட்ட ஸ்ட்ரிக்ட்டா சொல்லியிருக்கேன் இரவு வரும்போது கவனமா வரணும்னு .இங்கே மான்கள் மெதுவா நடந்துசெல்லுமாம் .இங்கே பகல் வேளையிலேயே அணில்களும் குட்டி பறவைகளும் ரோட்டில் ஓடுறாங்க

    பதிலளிநீக்கு
  2. விலங்குகளை அதனதன் சூழல்ல வச்சுப் பார்க்கிறதுதான் அதற்குக் கொடுக்கும் மரியாதை, அன்பு. முயல்கள் பார்க்க அழகாக இருக்கு. அடிபட்ட முயல் படத்தைப் போட்டிருக்கவேண்டாம்.

    பதிலளிநீக்கு
  3. துள்ளி ஓடும் முயலை அப்படி சாலையில் பார்த்தல் நிச்சயம் சோகமாக இருக்கும். சாலையின் மறுபக்கத்திலிருந்து அது பார்ப்பதும் அழகு.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.

    //அதுங்களுக்கு ரோட் க்ராஸ் பண்ணத்தான் தெரியுமா இல்லை வேகமா வெறியோடு வரும் வாகனம்தான் தெரியுமா :( மக்கள் அவற்றின் வசிப்பிடங்களை கொள்ளையடிப்பதால் அதுங்களுக்கு இடம் தெரியலை :(//

    நீங்கள் சொல்வது உண்மை.

    புதர்களும் அடிக்கடி டிரிம் செய்து விடுகிறார்கள் அதனால் அதற்கு ஓதுங்ககூட இடம் இல்லைதான்.

    //சிலகாலம்முன் ஒரு பெரிய பங்களா வீடு எங்க ஏரியா அருகில் இருக்கு அதில் கூரை மேல் கூட்டமாக புறாக்களை இருக்கும் பார்க்க அழகு .போன வாரம் பார்க்கிறேன் ஒன்றையும் காணொம் சற்று உற்று கவனிச்சா கூரை முழுதும் ஊசி போன்ற அமைப்பை செய்திருக்காங்க :( என்ன சொல்ல மனுஷங்களை //

    அவர்களின் கூரை வீணாகி விடும் என்ற பாதுகாப்பு போல!

    //இங்கே நான் கணவர் கிட்ட ஸ்ட்ரிக்ட்டா சொல்லியிருக்கேன் இரவு வரும்போது கவனமா வரணும்னு .இங்கே மான்கள் மெதுவா நடந்துசெல்லுமாம் .இங்கே பகல் வேளையிலேயே அணில்களும் குட்டி பறவைகளும் ரோட்டில் ஓடுறாங்க//

    கவனமாய் தான் வர வேண்டி உள்ளது. நிறைய இடங்களில் மான் வரும் பாதை கவனம்
    என்று போட்டு இருக்கும். கார் போகும் நெடுஞ்சாலையில் குள்ளநரி, மான் எல்லாம் அடிபட்டு இருப்பதை பார்த்து இருக்கிறேன் ஏஞ்ச்லின்.
    ரோட் ரன்னர் பற்வைகள் குழுவாய் ரோட்டை கடந்து போகும்.
    அணிலும் ஓடும் மகன் ஊரில் அணில் சிறு எலி போல் இருக்கும்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.



    பதிலளிநீக்கு
  5. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.


    //விலங்குகளை அதனதன் சூழல்ல வச்சுப் பார்க்கிறதுதான் அதற்குக் கொடுக்கும் மரியாதை, அன்பு. முயல்கள் பார்க்க அழகாக இருக்கு. அடிபட்ட முயல் படத்தைப் போட்டிருக்கவேண்டாம்.//

    நீங்கள் சொல்வது சரிதான். அதனதன் சூழல்ல வச்சு பார்க்கிறதுதான் அதற்குக் கொடுக்கும் மரியாதை அன்பு.

    படத்தை பார்த்தால் கஷ்டம் தான் .அதன் நினைவை போற்ற எடுத்த படம்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.



    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.


    தினம் துள்ளிதிரிந்த முயலை அப்படி பார்த்தது கஷ்டமாய் இருந்தது .

    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. முயலை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது இருப்பினும் இது தவிர்க்க இயலாத சூழல்தான் என்ன செய்வது ?

    அவரும் வேண்டுமென்றே ஏற்றி இருக்க மாட்டார்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது சரிதான், அவரும் வேண்டுமென்றே ஏற்றி இருக்க மாட்டார்.
    திடீர் என்று முயலும் ரோட்டை கடந்து இருக்கலாம் இல்லையா?
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. இறந்த முயலை பார்த்தவுடன் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கு,

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் காஞ்சனா வாழ்க வளமுடன்.
    இறந்த முயலின் படத்தை போட்டு எல்லொரையும் கஷ்டபடுத்தி விட்டேன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. அருமையான புகைப்படங்கள்! அது சரி, பெங்களூரில் காகம் இருக்கிறதா? என் கண்ணில் படவே இல்லை. இன்று அம்மாவாசை, காக்காவுக்கு சாதம் வைக்க வேண்டும் என்று தேடினால்..ஊஹூம்! ஒன்று கூட கண்ணில் படவில்லையே??. புறாக்கள்தான் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் பானுமதி, வாழ்க வளமுடன்.
    இந்த பின்னூட்டம் ராமலக்ஷ்மிக்கு போக வேண்டியது தவறாக எனக்கு அனுப்பி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  13. துள்ளித் திரிகின்ற முயலும் ஒரு கணம் நின்று தங்களைக் கவனிக்கின்றது - என்றால்,
    அது தங்களைப் புரிந்து கொண்டிருக்கின்றது போலும்!..

    அழகான முயல்களைப் பார்த்துக் கொண்டே வந்தால் -
    விபத்தில் சிக்கிக் கொண்ட சின்னஞ்சிறு ஜீவன்..

    சட்டென மனம் துவண்டு போயிற்று...

    கால சூழ்நிலை அதுவாக மாறியதா!..
    அல்லது சுயநலம் பிடித்த மனிதன் மாற்றினானா?...

    விடை காண்பது கடினம்...

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோ துரைசெலவராஜூ, வாழ்க வளமுடன்.

    //துள்ளித் திரிகின்ற முயலும் ஒரு கணம் நின்று தங்களைக் கவனிக்கின்றது - என்றால்,
    அது தங்களைப் புரிந்து கொண்டிருக்கின்றது போலும்!.//

    நாம் பிடிக்க மாட்டோம் என்பதால் சற்று நின்று ஒரு பார்வை.

    //கால சூழ்நிலை அதுவாக மாறியதா!..
    அல்லது சுயநலம் பிடித்த மனிதன் மாற்றினானா?//


    மனிதன் மாற்றி விட்டான் . வேறு என்ன சொல்வது!

    ஒரு காலத்தில் (புறநானூறு) எறும்பு சேகரித்து வைத்த அரிசியைகூட சாப்பிடுவான்.

    எல்லா காலத்திலும் சுயநல மனிதர்கள் இருந்து இருக்கிறார்கள்.

    //விடை காண்பது கடினம்...//


    நீங்கள் சொல்வது போல் விடை காண்பது கடினம் தான்.
    காட்டை அழித்து, நிலத்தை திருத்தி வீடு கட்டும் போது இது போன்ற உயிரினங்களுக்கு துன்பம் விளைந்து கொண்டுதான் இருக்கிறது. எல்லா காலத்திலும்.
    இப்போது இன்னும் அதிகமாகி விட்டது.ஜனத்தொகை பெரிது, மனிதன் ஆசையும் பெரிதாகி வருகிறது.

    உங்கள் கருத்துக்கு நன்றி.





    பதிலளிநீக்கு
  15. ஆஹா முயல் என்றாலே அழகுதானே.. இங்கும் சில ஏரியாக்களில் முயல்கள் காணலாம், எங்கள் வீட்டுப் பக்கம் மான், மரைகள்கூட வந்து போவினம், அருகில்தான் கொல்ஃப் கிளப் இருக்கு.. அங்கிருந்து வருவார்கள். ரோட்டில் போர்ட் இருக்கும்.. மான் வரும் பார்த்து ஓடவும் என.

    இதே கலர் முயல்கள்தான் இங்கும் , குளிர்ப்பிரதேசத்து முயல்கள் என நினைக்கிறேன். ஆனா இவை மிக விரைவாக ஓடக்கூடியவை.. எப்படி அகப்பட்டதோ ... இதற்காகத்தான் சில ரோட்டுக்களுக்கு நெட் வேலி போட்டிருப்பார்கள் ரோட்டுக்கு வராமல் தடுக்க...

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.

    //எங்கள் வீட்டுப் பக்கம் மான், மரைகள்கூட வந்து போவினம், அருகில்தான் கொல்ஃப் கிளப் இருக்கு.. அங்கிருந்து வருவார்கள். ரோட்டில் போர்ட் இருக்கும்.. மான் வரும் பார்த்து ஓடவும் என.//

    ஆமாம், நானும் சில இடங்களில் மகன் ஊரில் பார்த்து இருக்கிறேன்.


    //இதே கலர் முயல்கள்தான் இங்கும் , குளிர்ப்பிரதேசத்து முயல்கள் என நினைக்கிறேன். ஆனா இவை மிக விரைவாக ஓடக்கூடியவை.. எப்படி அகப்பட்டதோ ... இதற்காகத்தான் சில ரோட்டுக்களுக்கு நெட் வேலி போட்டிருப்பார்கள் ரோட்டுக்கு வராமல் தடுக்க...//

    பாலைவன முயல் அதிரா, அரிசோனா மகன் ஊர். வேகமாய் தான் ஓடும் படம் எடுப்பதற்கு மிகவும் கஷ்டபட வேண்டி இருந்தது. சில நேரம் முகம் காட்டும் அப்போது எடுத்த படம்.

    கல் வைத்து நெட் வேலிகள் சில இடங்களில் இருக்கிறது.

    உங்கள் கருத்துக்கு நன்றி.






    பதிலளிநீக்கு
  17. //முயலை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது இருப்பினும் இது தவிர்க்க இயலாத சூழல்தான் என்ன செய்வது ?

    அவரும் வேண்டுமென்றே ஏற்றி இருக்க மாட்டார். //

    இவ்வளவு இளகிய மனம் கொண்டவருக்குப் பெயரோ?..

    பெயரை மாற்றுங்கள், ...... ஜி!

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.

    இவ்வளவு இளகிய மனம் கொண்டவருக்குப் பெயரோ?..//

    அந்த பெயரை வைத்து நான் அவரை அழைக்க மாட்டேன் சார்.
    நான் அழைப்பது தேவகோட்டை ஜி தான் என்றும்.

    அவர் மனது பூ போன்ற மென்மை . அதுதான் பூபறிக்க கோடலி என்று தன் தளத்தில் தலைப்பில் வைத்து இருப்பார்.

    அவர் இயற்பெயர் என்ன என்று தெரியாது.
    தெரிந்தால் அந்த பெயர் வைத்து அழைத்து இருப்பேன் நான்.

    உங்கள் கருத்துக்கு நன்றி. உங்கள் வேண்டுகோள் படி அவர் பெயரை மாற்றினால் மகிழ்ச்சி அடைவேன்.

    பதிலளிநீக்கு
  19. ஜீவி ஸார் எனது தாத்தா கொலைதெய்வத்துக்கு வேண்டிக்கொண்டு வைத்த பெயர் நான் இடையில் மாற்றுவது முறையாகாது.

    பதிலளிநீக்கு
  20. வாங்க தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    தாத்தா வைத்த பேரா?

    தாத்தா மேல்தான் எவ்வளவு மரியாதை!

    பதிலளிநீக்கு
  21. //அந்த பெயரை வைத்து நான் அவரை அழைக்க மாட்டேன் சார்.
    நான் அழைப்பது தேவகோட்டை ஜி தான் என்றும். //

    அவருக்கும் தேவகோட்டை மேலே பிரியமான பிரியம். நல்ல பெயரைத் தேர்ந்தெடுத்தீர்கள்.

    இனி, எனக்கும் அவர் தேவகோட்டைஜி தான்.

    பதிலளிநீக்கு
  22. அழகிய முயல்களின் கண்கள், அதன் அழகு கண்முன் நிற்கிறது. சிலஸமயம் பரிதாபங்களும். என்ன செய்வது? அன்புடன்

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    அவர் பிறந்த ஊரின் மீது பற்றும், பாசமும் இருக்கும் தானே!
    நீங்களும் தேவகோட்டை ஜி என்று அழைப்பேன் என்றது மகிழ்ச்சி சார்.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் காமாட்சி அம்மா, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது உண்மைதான், சில நேரங்களில் இது போன்ற
    பரிதாப காட்சிகளை காண நேரிடுகிறது.
    உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. எல்லா பதிவுகளுக்கும் ஒரே சமயத்தில் பதில் போட்டால் இப்படித்தான்.
    :((( உங்கள் பதிவுக்கு நான் போட்ட பதில் எங்கே போனது? ராம லட்சுமி பதிவில் சென்று பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்.

    உங்கள் பதில் ராமலட்சுமி பதிவில் இல்லை
    உங்கள் வரவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  27. பாவம் அந்த முயல். நம் ஊர் சாலைகளில் நாய்களுக்கு இப்படி நேர்வதுண்டு.

    துள்ளித் திரிந்து நிற்கும் முயல்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் ராமலக்ஷ்மி , வாழ்க வளமுடன்.
    ஆமாம், ராமலக்ஷமுழு
    நம் ஊரில் நாய்கள் அடிபடும்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. கோமதி அக்கா தவறவிட்ட பதிவு...நெட் தொல்லையினால்....சரியாக நான் பார்ப்பதே இல்லை...எங்கள் பெட்டிக்குள், வாட்ஸப் க்ரூப்பில் வரும் பதிவுகளைப் பார்ப்பதே இப்போது கடினமாகிவிட்டது அக்கா...

    அக்கா ஒரு சின்ன வேண்டுகோள்...நீங்களும் எபி வாட்ஸப் க்ரூப்பில் இருக்கிறீர்கள் இல்லையா? அதில் பதிவின் லிங்க் கொடுக்காட்டாலும் பரவால்ல...பதிவு வெளியாகி இருக்கிறது என்று சொன்னாலே போதும்...இதையே கீதாக்காவுக்கும் சொல்லணும்னு நினைச்சிருக்கேன்...வல்லிம்மா எல்லாருக்கும்...மிக்க நன்றி

    படங்கள் எல்லாம் ரொம்ப அழ்கா இருக்கு அக்கா. முயல் ரொம்ப மென்மையானது. பாவம் அந்த முயல் இப்படி அடிபட்டு இறந்துவிட்டதே.
    அக்கா அங்கு ஸ்கங்க் விலங்கு கூட இப்படி அடிபட்டு இறந்து போகும்...ரோட்டில் குறுக்கே வந்துவிடும்...வேகமாகப் போகும் காரோட்டுநர்களுக்குக் கண்ணில் பட்டாலும் நிறுத்துவது சில சமயம் கடினமாக இருக்கும். இருந்தாலும் எந்த இடங்களில் இப்படி விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்குமோ அங்கு ஒரு அறிவிப்புப் பலகை வைக்கலாம்..

    இங்கு கூட ராஜ்பவன் இருக்கும் இடத்தில் மெயின் கேட் தாண்டி ஒரு சிறிய கேட் வரும் வேளச்செரிக்குத் திரும்பும் முன். அங்கு ஒரு அறிவிப்பு இருக்கும் இங்கு மான்கள் ரோட்டைக் கடக்கலாம். மெதுவாகச் செல்லவும் என்று... சிக்னலும் உண்டு...ஆனால் அங்குதான் ஹெவி ட்ராஃபிக் இருக்கும்...என்ன செய்ய அக்கா நாம் சுயநலவாதிகளாக நம் டெவெலெப்மெண்டை மட்டும் நினைத்து அடையும் வ்ளர்ச்சியில் சுற்றுப்புறத்தை புறம்தள்ளிவிடுகிறோம்...அடுத்தவ்ர் ஷூக்களையும் தான்...

    //பாலைவனப் பகுதியில் பறவைகள், முயல்கள் எல்லாம் மண் கலரில் தான் இருக்கும். நம் ஊரில் வீடுகளில் வளர்க்கும் வெள்ளை, கறுப்பு முயல்களைப் பார்க்கவே இல்லை அங்கு. இயற்கை அமைப்புக்கு ஏற்றாற் போல் இறைவன்
    அவற்றின் பாதுகாப்புக்கு கருதி அந்த நிறத்தில் படைத்திருக்கிறார்.//

    இது மிக மிக உண்மை அக்கா..ஒவ்வொரு நிலத்திற்கு, அங்கிருக்கும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றாற்போல் விலங்குகள் மனிதர்கள் எல்லோருமே.....அவர்கள் வாழ்வியலும் தான்...

    படங்கள் எல்லாமே ரொம்ப அழகு அக்கா..மிகவும் ரசித்துப் பார்த்தோம்..

    தாமதத்திற்கு வருந்துகிறோம்...கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  30. இங்கு பைரவர்கள், பூனைகள் கூட அடிபடும்...சில சமயம் மான்கள் எங்கள் ஏரியாவில்...ஆனால் பைரவர்கள்தான் ரொம்ப அடிபடும்...மாடு கூட சில சமயம் அடிபடுகிறது கோமதிக்கா...பாவம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.

    //.பதிவு வெளியாகி இருக்கிறது என்று சொன்னாலே போதும்...இதையே கீதாக்காவுக்கும் சொல்லணும்னு நினைச்சிருக்கேன்...வல்லிம்மா எல்லாருக்கும்...மிக்க நன்றி//

    சொல்கிறேன் கீதா.

    .//வேகமாகப் போகும் காரோட்டுநர்களுக்குக் கண்ணில் பட்டாலும் நிறுத்துவது சில சமயம் கடினமாக இருக்கும்.//

    தஞ்சாவூர் அருகில் (நாங்க்கள் மாயவரத்திற்கு ஒரு கல்யாணத்திற்கு போய் வந்தோம்)
    டிராபிக் ஜாம், என்ன விஷ்யம் என்று கேட்டால் தனியார் பஸ் ஒன்று இரு சக்கர வாகனத்தில் போன இரு சிறுவர்கள் மேல் மோதி விட்டு அவர்கள் ஓடி தப்பி விட்டார்கள்.
    அடிப்பட்டவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு போலீஸ் சாலையை ஓழுங்க்கு படுத்தி கொண்டு இருக்கிறார்கள். நேற்று இரவுதான் வந்தோம் மதுரைக்கு.
    அடிபட்டபசங்களை கடவுள்தான் காப்பற்ற வேண்டும்.

    பாதையில் போய் விட்டு நல்லபடியாக வருவதும் இறைவன் விருப்பம் தான்.

    //தாமதத்திற்கு வருந்துகிறோம்...கோமதிக்கா//

    தாமதத்திற்கு வருத்த பட வேண்டாம் கீதா, நேரம் கிடைக்கும் போது வாருங்கள், கணினி வேறு பிரச்சனையாக இருக்கிறது உங்களுக்கு.

    சகோ துளசிதரன் பதிவு படித்தேன், பின்னூட்டம் போட வேண்டும். செல்லில் படித்தேன் ஊரில் இருக்கும் போது.

    உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.




    பதிலளிநீக்கு
  32. நானும் தாமதம் தான். சில சமயம் உடனே வர முடிந்தாலும் பல சமயங்களிலும் முடிவதில்லை! அதோடு உங்க பதிவுகள் அப்டேட் ஆகி இருப்பதை எ.பி. மூலம் இன்று தான் கண்டு கொண்டேன். காலை அவசரமாக வந்துட்டுப் போவதால் என்ன என்ன பதிவுகள் புதுசா வந்திருக்குனு பார்க்கிறதில்லை. சில நாட்கள் பார்த்தால் அப்போ உடனே வருவேன். :)

    முயல் இறந்தது வருத்தமாத் தான் இருக்கு. ஆனால் எனக்குத் தெரிந்து அங்கெல்லாம் பறவைகள் முக்கியமா வாத்துகள், பூனை, நாய் போன்றவை சாலையைக் கடந்தால் வண்டியை நிறுத்திடுவாங்க! வாத்துக்கூட்டம் போச்சுன்னா கடைசி வாத்து போற வரைக்கும் நின்னுட்டு அப்புறமா வண்டியை எடுப்பாங்க! இது என்னமோ தெரியாமல் நடந்திருக்கும் போல! :(

    பதிலளிநீக்கு
  33. வணக்கம், கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.

    தாமதமாக வந்தால் என்ன ? எப்போது வசதி படுமோ அப்போது கருத்து சொல்லுங்கள்.

    அங்கு நடப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்தான். இது ரோடு இல்லை.
    குடியிருப்பு வாளாகத்துக்குள். ஏற்பட்டது. உங்கள் தொடர் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  34. பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      முயல் பார்க்க கஷ்டமாய் இருந்தது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  35. பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      பழைய பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  36. இப்படி அகி விட்டதே...

    கருத்துரைகளை வாசித்தேன்... அன்புடன் நட்பு மனம் கொண்டவர் நம்ம கில்லர்ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      இப்படி ஆனது வருத்தம்.

      //அன்புடன் நட்பு மனம் கொண்டவர்//
      ஆமாம் .
      தேவகோட்டை ஜி பற்றிய கருத்துரைகளை வாசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  37. வணக்கம் சகோதரி

    பழைய முயல் பதிவு படித்ததும் இங்கு வந்து விட்டேன். பாவம் அந்த முயல்... அதன் நாட்களையும் கடவுள் எண்ணி வைத்து விட்டார் போலும்..! அது நம் கண்ணெதிரில் நடக்கும் போது மனதுக்குள் எப்போதும் வருத்தம் இருந்து கொண்டேயிருக்கும். இதில் யார் மேல் குற்றம் சொல்வது? என்ன செய்வது?

    சகோதரர் கில்லர்ஜி நீங்கள் கூறுவது போல் புனைப் பெயர் ஒன்று மாற்றிக் கொள்ளலாம். ஆனால், நம் வலையுலக நட்புகளுக்கு இந்தப் பெயர் பழகி விட்டது. நாட்டிலும், தன்னைச் சுற்றிய சமூகத்திலும் நடக்கும் அராஜகங்களை கண்டு மனம் பொறுக்காமல், அவற்றை எழுத்தெனும் ஆயுதத்தால் அவர் துவம்சம் செய்யும் நோக்கத்திற்காக அவருக்கு அவர் குடும்பத்தில் அப்பெயர் வைத்தது சரிதானென்றும் தோன்றுகிறது. வாழ்க. அவர் நல்ல எண்ணங்கள் என வாழ்த்துவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      ஆமாம்,படைக்கும் போதே வாழும் நாட்களும் குறிக்கப்படு விடுகிற்தே!

      யாரையும் குற்றம் சொல்லமுடியாது, ஒரு புலம்பல் மட்டும் தான் செய்ய முடியும்.


      //நம் வலையுலக நட்புகளுக்கு இந்தப் பெயர் பழகி விட்டது. நாட்டிலும், தன்னைச் சுற்றிய சமூகத்திலும் நடக்கும் அராஜகங்களை கண்டு மனம் பொறுக்காமல், அவற்றை எழுத்தெனும் ஆயுதத்தால் அவர் துவம்சம் செய்யும் நோக்கத்திற்காக அவருக்கு அவர் குடும்பத்தில் அப்பெயர் வைத்தது சரிதானென்றும் தோன்றுகிறது. வாழ்க.//

      ஆமாம். அவர் வேடிக்கையாக தாத்தா கொலைதெய்வத்துக்கு வேண்டிக்கொண்டு வைத்த பெயர் என்று சொல்கிறார். அவர் இயற்பெயர் வேறுதான். அவராக வைத்துக் கொண்டது. இப்போது வைத்து கொண்ட பேரில் நிறைய புத்தகங்கள் வெளியிட்டு விட்டார் மாற்ற முடியாது என்று ஒரு முறை சொன்னார். நீங்கள் சொல்வது போல் கொடுமையை எதிர்க்க நல்ல பேருதான்.

      பழைய பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.



      நீக்கு