செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

அன்பு வழி

ஞாயிறு மாலை சீக்கிய குருத்வாரா போய் இருந்தோம். மகன் வீட்டிலிருந்து 10 மைல் தொலைவில் உள்ளது இந்த கோயில். மாலை நாலுமணிக்கு அழைத்து போனான் மகன் , நாங்களும், இன்னொரு குடும்பமும் மட்டும் இருந்தோம்.


மலை அடிவாரத்தில் கட்டப்பட்ட அழகி குருத்துவாரா. தலையில் துணியால் கட்டிக் கொண்டுதான்  உள்ளே போக வேண்டும். அவர்கள் ஒரு பெட்டியில் துணி வைத்து இருக்கிறார்கள். நாங்கள் வீட்டிலிருந்து தலைக்கு கட்டும் துணி கொண்டு வந்து விட்டோம்.

வலது பக்க  நுழைவு வாயிலின் வழியாக உள்ளே செல்ல வேண்டும். எதிரே தெரியும்  அழகிய தோரண வாயில் வழியாக மலையைப் பார்க்கலாம்.  


முன் பக்கம் இப்படி ஒரு சிறிய மரமும் அதை சுற்றி நித்திய கல்யாணி செடிகளும் இருக்கிறது  
கொடி மரம் இருக்கிறது  பின் புறம்
உள்ளே அழகிய சிவப்புக் கம்பளம் விரித்து  இருந்தது 
சுத்தமாக இருந்தது



 இசை வேள்வி செய்யும் இடம். சீக்கிய இசை கேட்க நன்றாக இருக்கிறது,  அமிர்தசரஸ் பொற்கோயிலில் கேட்டு இருக்கிறேன்.
இருபக்கமும் சுவற்றை ஒட்டி கீழே அமர முடியாதவர்கள் அமர்ந்து தியானம் செய்ய ஆசனம் அமைத்து இருக்கிறார்கள்.

  புனித நூலான குரு கிரந்த்  "ஆதி கிருந்தம்" வைக்கப்பட்டுள்ள  இடம்  
வரலாறு பாடத்தில் "ஆதி கிருந்தம்" நூலைப்பற்றி  படித்தது நினைவில் இருக்கும்  இருந்தாலும்   மீண்டும் படிக்க :-
 

// குரு நானக் முதல் குருவாவர். அவருக்குப்பின் ஒன்பது குருக்கள் தோன்றினர். பத்தாவது குருவான கோவிந்த சிங் தனக்குப் முன் இருந்த   சீக்கிய குருக்களின் போதனைகளை எழுத்துவடிவமாக தொகுக்கப்பட்ட நூலினை அறிவித்தார். அதனால் குரு கிரந்த் சாகிப் என்று அழைக்கப்படும் அந்நூலானது பதினோராவது குருவாக சீக்கியர்களால் மதிக்கப்படுகிறது. இந்நூல்  சீக்கியர்களுக்கான ஆன்மீக வழிகாட்டியாக வேதா வாக்காக, தனித்துவமான குருவின் நேரடி உருவகமாக மாறியது//
- நன்றி விக்கிப்பீடியா
வணங்கி வலம்  வந்தோம். மகன் நிற்கிறான்

இருபக்கமும் இப்படி அழகிய பூக்கள் ( புது மலர்கள்.) கண்ணாடி ஜாடியில்  இருந்தது.
அவர்கள் கையில் வைத்துக் கொள்ளும் ஆயுதங்கள்
மேல் பகுதி அறுகோண வடிவத்தில்

எதிர் புறம் உள்ள பகுதியில்  வட்டவடிவில் மேல் பகுதி 

இந்த இடத்திலும் அமர்ந்து தியானம் செய்யலாம்.
குருக்கள் வாழ்ந்த காலங்கள்.
சீக்கிய குருமார்களின் படங்கள், கொள்கைகள்  உள்ளது

10 வது குரு கோபிந்த் சிங்க் சாகிப்


கார் நிறுத்தும் இடம்
மாற்று திறனாளிகளுக்கு  முன்னுரிமை


டாக்டர் ஜஸ்பீர் சிங் சைனி அவர்கள் பெயரில் நினைவு இல்லம் இருக்கிறது. அவரைப்பற்றி தெரிந்து கொண்டேன் கூகுளில் போய்.  மக்களுக்கு உதவும் நல்ல மனிதராம், குடும்பத்தின் மேல்  பாசம் மிகுந்தவராம்,  கடவுளின் பாதையான அன்பு வழியை பின் பற்றி நடந்தவராம். அனைத்து மக்களையும்  தன் இனம் என்று நேசித்தவர் என்று. இந்த இடத்தில் உணவு வழங்குதல்  நடைபெறுமாம். 


கடவுளின் பாதை, அன்பு வழியிலான பாதை சொன்னவர்  - மகா குரு குருநானக்.

நாம் கடவுளின் பாதையை பின் பற்ற வேண்டும். அது மதங்களால் ஆனதல்ல , அன்பு வழியிலான பாதை என்கிறார்.


மனிதர்களிடம் பாகுபாடு இருக்க கூடாது, "இறைவன் முன் அனைவரும் சமம்" என்று சொன்னவர் குரு நானக் அவர்கள்.

//சீக்கிய மதம் 15 ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ குரு நானக் தேவ் ஜியால் நிறுவப்பட்டது. குருநானக், இந்தியா மற்றும் ஆசியாவின் பிற நாடுகளில் பயணம் செய்தார் மற்றும் உண்மையுள்ள வாழ்க்கை, உலகளாவிய சகோதரத்துவம், மனிதநேயத்திற்கான நிபந்தனையற்ற அன்பு மற்றும் நிஷ்காம் சேவை என அழைக்கப்படும் மனிதகுலத்திற்கான நிபந்தனையற்ற சேவை ஆகியவற்றை போதித்தார்.
குரு நானக்கின் மூன்று முக்கிய கொள்கைகள் தற்போதைய உலகில் சீக்கியர்களுக்கு வழிகாட்டும் கற்கள்.

நாம் ஜாப்: ஒவ்வொரு மூச்சிலும் உண்மையான இறைவனின் பெயரை உச்சரிக்கவும்.

கிராத் கர்: நேர்மையான மற்றும் உண்மையான வழிமுறைகளால் உங்கள் வாழ்க்கையை சம்பாதிக்கவும்.

வாந்த் சாக்: நிபந்தனையின்றி, ஏழைகளுடன் உங்கள் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளுங்கள்.//

நன்றி -கூகுள்

கடவுளிடம் பக்தி உள்ளவர்கள் அவர் சொன்ன அன்பு வழியில் நடந்து  அன்பு செய்து வாழ்வோம். எல்லா மதங்களும் சொல்வது இதுதான்.

அவர் வழங்கும் ஆசி :- "நித்திய அமைதி, நல்ல ரோக்கியம்,செல்வம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பெருகட்டும் என்பது."

உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் !  வாழ்க வளமுடன் !

-----------------------------------------------------------------------------------------

39 கருத்துகள்:

  1. அன்பின் கோமதிமா,
    வாழ்க வளமுடன்.
    மிக அருமையான இடம். பார்த்தாலே அமைதி கூடுகிறது.படங்கள் முழுவதுமே அந்த அருள் தெரிகிறது.
    முதல் மருமகள் எந்த ஊரில் இருந்தாலும் குருத்வாரா
    சென்று விடுவாள்.
    படங்களை அவளுக்கு அனுப்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
      ஆமாம், அக்கா, அமைதியான இடம்.
      மூத்த மருமகள் குருத்வாரா போய் வருவார்களா , நல்லது.
      அவர்களுக்கு படத்தை அனுப்பி வைப்பது மகிழ்ச்சி.

      நீக்கு
  2. நாம ஜபமும், நல் வழியும் ,நற் சிந்தனைகளும்
    எல்லா மதத்துக்கும் பொதுவானவை என்று
    நாம் நினைப்பதே சீக்கிய வழியிலும் சொல்லி இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா, இறை நாமத்தை நினைத்தல், நல்ல சிந்தனை, நல்வழி நடத்தல் அனைத்து மதங்களும் சொல்வதுதான். அன்பு வழி பாதை தான் கடவுளின் பாதை என்று சொல்கிறார்கள். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பது போல் எளியவருக்கு உதவுங்கள் என்கிறார்கள்.

      நீக்கு
  3. குரு கோபிந்த் சிங் பற்றிதான் நம் சரித்திரப்
    புத்தகங்களில் படித்திருக்கிறோம்.
    சீக்கிய மதம் தோன்றக் காரணமாக இருந்த குரு நானக் கின்
    முகத்தில் தான் என்ன சாந்தம்.
    நல்ல மதம் நல்லதைத் தான் போதிக்கும்.
    அனைவருமே கேட்டு அமைதியை நாடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரித்திர பாடத்தில் சீக்கிய போர்கள் பற்றி படித்து இருக்கிறோம். குரு கோபிந்த் சிங் சீக்கீயர்கள் எல்லோரும் எப்படி இருக்க வேண்டும், எப்படி ஆடை அணிய வேண்டும். கையில் வைத்துக் கொள்ள வேண்டிய ஆயுதம் பற்றி சொன்னதைப் படித்து இருக்கிறோம்.

      //நல்ல மதம் நல்லதைத் தான் போதிக்கும்.
      அனைவருமே கேட்டு அமைதியை நாடுவோம்.//

      எல்லா மதங்களில் உள்ள நல்லதை எடுத்துக் கொண்டு அமைதியை நாடுவோம் .

      நீக்கு
  4. எல்லாவற்றையும் விட கோயிலின் மேல்
    நாம் காணும் நீல வானம் கண்ணைப்
    பறிக்கிறது
    படங்களின் அழகைச் சொல்லி முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீல வானம் அழகுதான்.
      எல்லா படங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  5. பரந்த அழகிய நுழைவாயில்.  அதன் வழியே தெரியும் மலை கச்சிதம்.  அமைதியான இடம்.  பொற்கோவிலின் வடிவம் இல்லை இல்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //பரந்த அழகிய நுழைவாயில். அதன் வழியே தெரியும் மலை கச்சிதம். //
      ஆமாம், அநத மலைக்காட்சி எனக்கு மிகவும் பிடித்தது.


      //அமைதியான இடம். பொற்கோவிலின் வடிவம் இல்லை இல்லை?//
      அமைதியான இடம்தான். பொற்கோவிலின் வடிவத்தை தேடினால் எப்படி?
      ஓவ்வொரு இடத்திலும் குருத்துவாரா ஒவ்வொரு மாதிரி இருக்கிறது.

      நீக்கு
  6. முஸ்லீம் படையெடுப்பின்போது மற்றும் ஆங்கிலேயர்களுக்கெதிராக சீக்கிய குருமார் ஈடுபட்டதை சமீபத்தில் ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 5 வது குரு காலத்தில் முகலாயர்களும் சீக்கியர்களும் போர் நடந்தது

      இரண்டு முறை ஆங்கிலேயர்களுடன் போர். பஞ்சாப், மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணப் பகுதிகளை கைப்பற்றிக் கொண்டது கிழகந்திய கம்பெனி .

      என்று நானும் படித்தேன்.

      நீக்கு
  7. எவ்வளவு சுத்தமாக இருக்கிறது...  உயர்தர ஐந்து நட்சத்திர விடுதி போல இருக்கிறது...  இவ்வளவு சுத்தமாக இருந்தால் நமக்கு கோவில் என்ற உணர்வே வருவதில்லையே....!!!!  ஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எவ்வளவு சுத்தமாக இருக்கிறது... உயர்தர ஐந்து நட்சத்திர விடுதி போல இருக்கிறது..//

      வெளி நாட்டில் எல்லா கோவில்களும் சுத்தமாகத்தான் இருக்கிறது.


      //இவ்வளவு சுத்தமாக இருந்தால் நமக்கு கோவில் என்ற உணர்வே வருவதில்லையே....!!!! ஹிஹிஹி.//


      இப்படி எல்லாம் நினைப்பா !

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  8. குருத்வாரா படங்கள் அருமை.

    துபாயில், சிவன் கோவிலின் பகுதியாக குருத்வாரா இயங்கிவந்தது. வெள்ளிக் கிழமைகளில் ரொட்டி சப்ஜி தருவார்கள்.

    அங்கு உணவு வழங்குதலைப் பற்றிக் குறிப்பிடவில்லையே நீங்கள்

    எனக்கு சீக்கியக் கோவில்களின் தலைமையான பொற்கோவிலுக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணம் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //துபாயில், சிவன் கோவிலின் பகுதியாக குருத்வாரா இயங்கிவந்தது. வெள்ளிக் கிழமைகளில் ரொட்டி சப்ஜி தருவார்கள்.//

      நாங்கள் டெல்லியில் நிறைய இடங்களில் குருத்வாரா போய் இருக்கிறோம்.
      பொற்கோயிலும் போய் இருக்கிறோம் அங்கு எல்லாம் சூடான சப்ஜி, சப்பாத்தி, பூரி சாப்பிட்டு இருக்கிறோம். இரண்டு கையேந்தி உணவை வாங்க சொல்வார்கள் , உணவை வீணாக்காமல் சாப்பிட சொல்வார்கள்.

      //அங்கு உணவு வழங்குதலைப் பற்றிக் குறிப்பிடவில்லையே நீங்கள்//

      நாங்கள் போனது மாலை நான்கு மணி. அவர்கள் புனித நூல் இருந்த இடத்தில் ஒரு பாத்திரத்தில் இனிப்பு ஏதோ வைத்து இருந்தார்கள் மஞ்சள் கலரில். ஒரு கரண்டியும் வைத்து இருந்தார்கள். யாரும் கொடுப்பதற்கு அங்கு இல்லை.
      எங்களுக்கு முன்னால் சாமி கும்பிட்ட குடும்பம் எடுத்து கொள்ளவில்லை.
      நாங்களும் எடுத்துக் கொள்ளவில்லை.


      //எனக்கு சீக்கியக் கோவில்களின் தலைமையான பொற்கோவிலுக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணம் உண்டு.//

      வாய்ப்பு கிடைக்கும் போது போய் வாருங்கள் மிக அருமையாக இருக்கும். பெரிய பெரிய செல்வந்தர்கள் சேவை செய்வார்கள். செருப்பை வாங்கி வைப்பார்கள். உணவு செய்யும் இடத்தில் உதவி செய்வார்கள் உணவும் வழங்கும் இடத்திலும் உதவி செய்வார்கள். பாத்திரம் கழுவ காய் நறுக்கி கொடுக்க என்று அனைத்தும் செய்வார்கள். நம்மையும் உங்களுக்கு உதவ் முடிந்தால் உதவுங்கள் என்பார்கள். என் பெண் காய் நறுக்கி கொடுத்து உதவினாள்.
      இரவு புனித நூலை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வரும் போது பார்க்க நன்றாக இருக்கும். அங்கு பாடும் பாடல் மிக அருமையாக இருக்கும் கேட்க. இரவு ஓளி வெள்ளத்தில் பொற்கோயில்லைப் பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.





      நீக்கு
  9. சீக்கியர்களது நெறிமுறைகளை ஓரளவுக்கு அறிந்திருந்தாலும் தங்களது பதிவின் வழி மேலும் தெரிந்து கொண்டேன்..

    அன்பும் நேர்மையும்
    அவனியில் வாழ்க.. வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது போல்
      அன்பும் நேர்மையும் அவனியில் வாழட்டும் என்றும்.

      நீக்கு
  10. அன்பைப் போதித்து வாழ்ந்திருந்த
    குரு கோவிந்த் சிங் அவர்களுக்கும் அவரது பிள்ளைகளுக்கும் ஔரங்கசீப் செய்த கொடுமைகள் தான் எத்தனை எத்தனை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குரு கோவிந்த் சிங் அவர்களுக்கும் அவரது பிள்ளைகளுக்கும் ஔரங்கசீப் செய்த கொடுமைகள் தான் எத்தனை எத்தனை..//

      நல்லதை உலகத்திற்கு எடுத்து சொன்ன பல குரு மார்கள், யோகிகள் இப்படி இன்னல்கள் அனுபவித்து இருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் புகழ் காலத்தை கடந்தும் நிலைத்து நிற்கிறது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  11. தோரண வாயில் வழியாக மலை அழகு. அருமையான கோணங்களில் படங்கள் நன்று.

    /குரு நானக்கின் மூன்று முக்கிய கொள்கைகள்/ அருமை.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //தோரண வாயில் வழியாக மலை அழகு. அருமையான கோணங்களில் படங்கள் நன்று.//

      உங்களிடமிருந்து பாராட்டு கிடைப்பது மகிழ்ச்சி.
      நீங்கள் படங்களை மிக அழகாய் எடுப்பீர்கள்.

      குரு நானக்கின் மூன்று கொள்கைகள் எல்லோரும் கடைபிடிக்க எளிதான வழிதான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      அன்பு வழியிலான பாதை அருமைதான்.

      நீக்கு
  13. அழகான படங்கள் மூலம் நாங்களும் சுற்றிப் பார்த்த உணர்வு கிடைத்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது.
      கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  14. படங்கள் ஒவ்வொன்றும் துல்லியம்
    அழகு
    நேரில் பார்த்த உணர்வு

    பதிலளிநீக்கு
  15. படங்கள் அழகு எடுத்த கோணங்கள் மேலும் அழகு.

    அன்பே இறையின் வழி உண்மை.


    //இறைவன் முன் அனைவரும் சமம்" குரு நானக் அவர்கள்//

    ஆம் உலக தத்துவம் இதுவே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      படங்கள் அழகு எடுத்த கோணங்கள் மேலும் அழகு.//

      நன்றி.

      //அன்பே இறையின் வழி உண்மை.//

      அன்புதான் இறை வழிபாடு, இறையின் வழி

      //ஆம் உலக தத்துவம் இதுவே...//
      ஆமாம், இந்த உலக தத்துவத்தைபுரிந்து கொண்டால் போட்டி, பூசல் இருக்காது.
      உயர்வு, தாழ்வு மனபான்மை இருக்காது.

      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.





      நீக்கு
  16. அருமையான புகைப்படங்கள்! நுழைவாயில் மிக அழகாய் இருக்கிறது. மற்ற விபரங்களும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. அங்குள்ள சீக்கிய கோவிலின் படங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன. கோவிலின் உட்புறமும், வெளியிலும் சுத்தம் கண்களை கவர்கிறது.நுழைவு வாயில் படங்களும், இறுதியில் இடம்பெற்றுள்ள நீல நிற வானத்துடன் கூடிய கோவிலின் படங்களும் நன்றாக உள்ளது. தங்கள் மகன் வழிபடும் படமும் நன்றாக உள்ளது. அவர்களின் கொள்கைகள் சிறப்பானவை. அழகாக அதைப்பற்றிய குறிப்புகளுடன் எடுத்து சொல்லியுள்ளீர்கள்.

    ஆம். அனைத்து மதங்களும் அன்பின் வழி இறைவனை காணலாம் என்றுதான் சொல்கின்றன. இறைவனின் நாமாவை எப்போதும் சொல்லுவதால் மனம் தூய்மையடைந்து பக்குவுமடைகிறது. அழகாக அதைப்பற்றியும் பகிர்ந்துள்ளீர்கள்.

    அழகான படங்களைப் பார்த்தும், நீங்கள் கோவிலைப் பற்றியும் சீக்கியர்களின் வழிபாட்டு முறைகளை பற்றியும் விவரித்து கூறியது படித்தும் உங்களுடன் நானும் வந்து இறைவனை தரிசனம் செய்த திருப்தியை அடைந்தேன்.

    இங்கு மூன்று நாட்களாக உறவின் வருகையில் எனக்கு வேலைகள் அதிமாகியதால் வலைப்பக்கம் வர இயலவில்லை. இன்றுதான் கொஞ்சம் வேலைகள் குறைந்து ஒவ்வொருவர் பதிவுகளுக்கும் வந்து கொண்டிருக்கிறேன் நீங்கள் என் தளம் வந்து அன்புடன் விசாரித்தமை இப்போதுதான் கண்டு மகிழ்வடைந்தேன் சகோதரி. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      நீங்கள் இரண்டு பதிவுகளுக்கு வரவில்லையே என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். மற்றவர்கள் பதிவுகளிலும் உங்களைப் பார்க்கவில்லை அதுதான் விசாரித்தேன்.

      நீங்கள் நலமாக இருப்பதும் வீட்டுக்கு உறவினர் வருகையும் தெரிந்து கொண்டேன்.

      பதிவையும் படங்களையும் ரசித்து பார்த்து கருத்து சொன்னது மகிழ்ச்சி.

      //அனைத்து மதங்களும் அன்பின் வழி இறைவனை காணலாம் என்றுதான் சொல்கின்றன. இறைவனின் நாமாவை எப்போதும் சொல்லுவதால் மனம் தூய்மையடைந்து பக்குவுமடைகிறது//

      உண்மை. உண்மை.

      வழிபாட்டு முறைகள் மிகவும் எளிமையானது கடைபிடிக்க முடிந்தவைதான்.


      படங்கள் ஒவ்வொன்றையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  18. அழகிய படங்கள்.

    குருத்வாராவின் அமைதி எனக்கும் பிடிக்கும் டுபாய் சென்றபோது சென்றிருக்கிறேன். சுவையான இனிப்பு பிரசாதங்களும் தந்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      குருத்வாரவின் அமைதி உங்களை போல எனக்கும் பிடிக்கும்.
      சுவையான இனிப்பு பிரசாதங்கள் நானும் சாப்பிட்டு இருக்கிறேன், டெல்லி, அமிர்தசரஸ் குருத்வாராக்களில்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  19. நிதானமாகப் படங்கள் எடுத்திருக்கீங்க! அமிர்த்ஸர் பொற்கோயிலில் படங்கள் எடுக்கவும் முடியலை. நின்று சாவகாசமாய்ப் பார்க்கவும் முடியலை. இசை வேள்வி நடக்கும் இடம் ரொம்ப நேரம் நிற்க விடாமல் துரத்தி விடுகிறார்கள். நான் புடைவைத்தலைப்பையே தலையில் போட்டுக் கொண்டு விட்டேன். அவர் துண்டு கொண்டு வந்திருந்தார். தர்காவிற்குப் போனாலும் தலையில் துணி இல்லாமல் போக முடியாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      அமிர்தசரஸ் போன போது நிறைய படம் எடுத்தோம் அவை ஆல்பத்தில் உள்ளது.
      நாங்கள் இசை வேள்வியை அமர்ந்து ரசித்தோம். பணம் கொடுத்தாள் மகல் அதற்கு காவி கலரில் சாலவை கொடுத்தார்கள். மகனும் அது போல் பணம் கொடுத்த போது காவி கலர் சால்வை கொடுத்தார்கள். புனித நூலை மூடிய சால்வை அது.

      நானும் புடவை தலைப்பை போட்டு கொண்டேன் அமிர்தசரஸில் இங்கு ஸ்கார்ப் கட்டி கொண்டேன்.

      //தர்காவிற்குப் போனாலும் தலையில் துணி இல்லாமல் போக முடியாது!//

      ஆமாம்.


      நீக்கு
  20. அம்பேரிக்காவில் அதிகமாக நாங்கள் குருத்வாரா போனதில்லை. இந்த இடம் மிகச் சுத்தமாயும் அழகாயும் பராமரிக்கப்பட்டு வருவதைப் பார்த்தாலே தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த தடவைதான் குருத்வாரா இங்கு போனோம். வீட்டுக்கு அருகில் இருக்கிறது.
      போன முறை அவசரமாக திரும்ப வேண்டியது ஆகி விட்டது.

      //சுத்தமாயும் அழகாயும் பராமரிக்கப்பட்டு வருவதைப் பார்த்தாலே தெரிகிறது.//

      ஆமாம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு