வெள்ளி, 16 ஜூலை, 2021

தொன்மா மிருகம் (Dinosaur)
வண்ணத்துப்பூச்சி பூங்கா இருக்கும் வளாகத்தில் "டைனோசர் உலகம்" இருந்தது அதையும் பார்த்தோம். அது அடுத்த பதிவில், என்று வண்ணத்துப்பூச்சி பதிவில் சொல்லி இருந்தேன்.  அந்த  டைனோசர் உலகத்தைப் பார்க்கலாம் இந்த பதிவில்.


டைனோசர் முட்டைக்குள்  குழந்தைகள் தமிழ் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது கவின் தொல்மா மிருகங்களின் பேர், மற்றும் அதன் சத்தங்களும்  கொடுத்து இருப்பான்  கேட்டு பாருங்கள். டைனோசர் பூங்காவை சுற்றிப்பார்க்கும் போது அவனிடம் இந்த  பழைய நினைவுகளை பேசி மகிழ்ந்து கொண்டு வந்தோம். 
இந்த காணொளியில் நிறைவு பகுதியில் பெரியவனாகி நிறைய தொன்மாபற்றி படிக்க போகிறேன் என்பான். சிறிய காணொளிதான் கேட்டு விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

JURASSIC WORLD    போன்ற நிறைய  டைனோசர் படங்கள், பார்த்து இருக்கிறோம், வால்ட் டிஸ்னியின்  "நல்ல டைனோசர்" படம் எல்லாம் கவினுடன் பார்ப்பேன். அவன் சொல்லும் டைனோசர் பேர்களை என்னால் திருப்பி சொல்ல முடியவில்லை என்றால் சிரிப்பான். அவனுக்கு மிகவும் பிடித்த மிருகம் டைனோசர்.இந்த சதுக்கத்தை சுற்றி அழகிய  "வாட்டர் ஃபவுண்டன்" இருந்தது.
பனி கரடி அவசரத்தில் எடுத்தது , தூணின் நிழல் விழுந்து விட்டது கரடி மேல். வெயில் வருவதால் எந்த பக்கம் இருந்து எடுத்து இருந்தாலும் நிழல் விழும் என்று நினைக்கிறேன்.
 பெரிய  டையர் படிகளில் நின்று  குழந்தைகள் படம் எடுத்து கொண்டார்கள்

அடுத்து டைனோசர் உலகத்துக்குள் போகிறோம்.எல்லோருக்கும் கையில் அடையாள  கை பட்டை ஒட்டி அனுப்பினார்கள். எல்லா படங்களும், காணொளியும் அலைபேசியில் எடுத்தது.
டைனோசர் முட்டைகளுடன்ஒவ்வொரு டைனோசர் பேரும் எழுதி வைத்து இருந்தார்கள், உள் நுழையும் போது குழந்தைகளுக்கு அதன் பேர் பட்டியல் அடங்கிய கையேடு கொடுத்தார்கள். அதை குழந்தைகள் படித்து அந்த டைனோசரை கண்டு பிடித்து   டிக் செய்ய வேண்டும்.  டிக் செய்த கையேட்டை   வெளியே போகும் போது கொடுத்தால் ஒரு சிறிய டைனோசர் பொம்மை பரிசாக கொடுத்தார்கள். 

பெரிய தேள்
டைனோசர் பற்றி வரலாறு சொல்கிறார்
குழந்தைகளுக்கு ரசித்துப்பார்க்க நிறைய இருந்தது இந்த உலகத்தில்
நிறைய டைனோசர்கள்  சத்தம் கொடுத்துக் கொண்டு ஆடி கொண்டு இருந்தது

 பறக்கும் தொன்மா  மிருகம் (Dinosaur)


ஈரமான வண்ண களிமண் கொடுத்தார்கள், சின்ன டைனோஸர் கொடுத்தார்கள் . அதை  அச்சு எடுத்து டைனோசர் செய்ய  சொன்னார்கள், செய்த பின் பாராட்டி அதையும் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டார்கள்.


பேரன் செய்த டைனோசர்


மெழுகு பென்சில் வைத்து நகல் எடுக்கச் சொல்லி அதையும் குழந்தைகளுக்கு நினைவு பரிசாக கொடுத்தார்கள்.


சீனா களிமண்ணுக்குள் ஒளிந்து இருக்கும் குட்டி டைன்சோரை உடைத்து எடுக்க வேண்டும். உடைத்து எடுத்தால் அவர்களே  வைத்துக் கொள்ளலாம்.

                        அங்கு இருந்த பறவைகள்
அங்கு இருந்த மீன்கள்

                                     அங்கிருந்த பாம்புகள்
அங்கிருந்த நிறம் மாறும்   பச்சோந்தி (ஓணான்)

145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அல்லது 200 மில்லியனுக்கு முன்பு வாழ்ந்த  ஒரு விலங்கைப்பற்றி அறிந்து கொண்டோம். விண்கல் புவியை தாக்கியதில் டைனோசர் இனமே அழிந்து போனதை  அறிந்தோம். ஒரு காலத்தில் இவை எல்லாம் இருந்து இருக்கிறது என்று எல்லா வற்றையும் ரசித்துப்பார்த்து வெளியில் வந்தால் சூரியன் மறையும் நேரம் மாலைச் சூரியன் அழகாய் காட்சி அளித்தார்.

                    வண்ணபலூன் விளக்கும் அழகாய் இருந்தது
கள்ளிச் செடியில் கள்ளிப்பழம் பழுத்து இருந்தது, அதன் தோற்றம் சர்க்கஸ் பபூன் போல  காட்சி அளித்தது.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

வாழ்க வையகம்  ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
----------------------------------------------------------------------------------------------------

31 கருத்துகள்:

 1. தொன்மா மிருகம்....   நீங்கள் அப்படி பெயர் சூட்டி உள்ளீர்களா, இல்லை அப்படி ஏற்கெனவே சொல்வழக்கு இருக்கிறதா?  நல்லாயிருக்கே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   இல்லை நான் பெயர் சூட்டவில்லை முன்பே சொல்லப்பட்டதுதான்.
   தொன்மாக்கள் பலவகை படும் இரண்டு காலில் நடப்பது, நாங்கு காலில் நடப்பது என்று எல்லாம் இருக்கிறது.

   முதலில் அவன் டைனோசரைப்பற்றி பேச போகும் போது அதற்கு தமிழில் பேர் சொல்லுங்கள் தாத்தா என்று தாத்தாவிடம் கேட்டான். அவன் தாத்தாதான் அந்த பேரை அவனுக்கு சொன்னார்கள். அவன் தொன்மாக்களைப்பற்றி பேசியதை கேட்டு கேட்டு மகிழ்வார்கள்.

   நீக்கு
 2. காணொளி பார்த்துவிட்டேன்.  கேட்கமுடியாது.  கணினியில் ஸ்பீக்கர் அவுட்!  கணினி மருத்துவரை அழைத்திருக்கிறேன்.  கவினின் சுவாரஸ்யங்கள் வியப்பூட்டுகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கணினி மருத்துவரை அழைத்து இருக்கிறீர்களா? சரி சரி விரைவில் அவர் மருந்து தரட்டும்,குரல்வளம் நலம் பெறட்டும்.

   சிறு வயதில் டைனோசர் படம் வரைந்து கொண்டே இருப்பான்.

   நீக்கு
 3. கரடி படத்தில் நிழல் விழுந்திருப்பது அது ஏதோ போர்வை போர்த்திக்கொண்டிருப்பது போலவும், அலலது ஏதோ டிசைனில் சட்டை அணிந்திருப்பது போலவும் இருக்கிறது!  படங்களும், தகவல்களும் சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கரடி படத்தை ரசித்து அருமையாக கருத்து சொல்லி இருக்கிறீர்கள் நன்றி.

   உங்கள் கருத்துக்களூக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. டைனசோரின் தமிழ்ப்பெயர் தலைப்பு... மிகவும் ரசித்தேன்.

  பல டைனோசர் படங்களையும் பார்த்திருக்கிறேன். ஓமானில் இதுபோன்ற கண்காட்சி பார்த்தேன்.

  படங்கள் மிக அழகு. கவின் மிகவும் ரசித்திருப்பான். உங்களிடமும் நிறைய விளக்கி மகிழ்ந்திருப்பான்

  கள்ளிச் செடி (மரம்) அழகு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

   //டைனசோரின் தமிழ்ப்பெயர் தலைப்பு... மிகவும் ரசித்தேன்.//
   தலைப்பை ரசித்தமைக்கு நன்றி.

   //பல டைனோசர் படங்களையும் பார்த்திருக்கிறேன். ஓமானில் இதுபோன்ற கண்காட்சி பார்த்தேன்.//

   ஓ ,சரி.

   நாங்கள் போன தடவை வந்த போது மிருககாட்சி சாலையில் "ஓளி திருவிழா" பார்க்க போய் இருந்தோம், அப்போது டைனோசர்கள் நிஜமாக இருப்பது போல் ஒரு பகுதியில் அமைத்து இருந்தார்கள். அந்த டைனோசர்கள் அப்படியே உண்மையாக இருப்பது போலவே இருந்தது. அந்த படங்களை இன்னொரு பதிவில் போட வேண்டும்.

   //கவின் மிகவும் ரசித்திருப்பான். உங்களிடமும் நிறைய விளக்கி மகிழ்ந்திருப்பான்//

   ஆமாம், மிகவும்ரசித்துப்பார்த்தான். அந்த தொன்மா மிருகங்கள் பொம்மைகள் நிறைய வைத்து இருக்கிறான். ஒவ்வொன்றின் பேரும் சொல்வான். அவன் பார்த்த மூவிகளை அந்த பொம்மைகளை வைத்து கதை சொல்வான்.

   கள்ளிச்செடி மரமாக உயர்ந்து நிற்பது உண்மை.

   உங்கள் கருத்துக்கு நன்றி நெல்லைத் தமிழன்.


   நீக்கு
 5. தொன்மா (டைனோசர்) முதன்முறையாக இப்பெயரை கேள்விப்படுகிறேன்.

  படங்கள் எல்லாமே அழகாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சகோ தேவ்கோட்டை ஜி, வாழ்க வளமுடன்

  //தொன்மா (டைனோசர்) முதன்முறையாக இப்பெயரை கேள்விப்படுகிறேன்.//
  கவின் இந்த தொன்மா மிருகத்தைப்பற்றி காணொளியில் சொல்லி இருக்கிறான்.
  பாருங்கள் அதன் வகைகள், அதன் சத்தம் தொன்மா மிருகம் என்றால் என்ன என்று சொல்வான்.

  //படங்கள் எல்லாமே அழகாக இருக்கிறது.//
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. சிறப்பான தகவல்கள் மற்றும் படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.

  தொன்மா - புதியதொரு பெயர்/தகவல். நன்றிம்மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

   உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 8. தொன்மா மிருகம் .
  அருமையான பெயர். நம் தமிழர்களின் அறிவுக்கு
  ஆராய்ச்சிக்கும் அளவே இல்லை.
  அதுவும் சாரின் விரிவான கூர்மையான
  விளக்கங்களுக்கு மதிப்பு கூடுகிறது.
  கவினின் தமிழார்வமும்
  உங்கள் இருவரிடமிருந்துதான் வடிந்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
   தொன்மா மிருகம் பிடித்து இருக்க?

   நம் கோவில் சிற்பங்களில் இடம் பெற்று இருக்கும் யாளியும் தொன்ம இனத்தை சேர்ந்த உயிரினம்தான். அவையும் இப்போது இல்லை.

   கவினின் தமிழ் ஆர்வம், அப்பா , தாத்தா, பெரிய தாத்தா எல்லோரிடமும் இருந்து வந்து இருக்கிறது. மாமியாரின் அப்பாவும் தமிழ் வாத்தியார். என்னை சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை.
   நீக்கு
 9. இந்த ஊர்க் குழந்தைகள் டைனசாரோடு தான்
  வளர்கிறார்கள்.
  மூன்று பேரங்களும் வித விதமான ஸாரஸ்
  பொம்மைகள் வைத்திருக்கிறார்கள். அதுவும் ஸ்விஸ் பேரனின் உலகமே அதுதான்.

  கவின் மழலைக் குரலில் டைனசார் உலகம் விரிகிறது.
  காணொளி அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அக்கா, டைனோசர்கள் அவர்களின் விளையாட்டில் முக்கிய இடத்தில் இருக்கிறது காணொளிகள் எல்லாம் டைனோசர்கள்தான் பார்க்கிறார்கள்.
   கொரோனா வைரஸை அழிக்கும் டைனோசர், கிங்கிடோரா எல்லாம் உண்டு.


   //கவின் மழலைக் குரலில் டைனசார் உலகம் விரிகிறது.
   காணொளி அருமை.//

   நன்றி அக்கா.

   நீக்கு
 10. அமர்க்களமாக இருக்கிறது. கண்காணும் யாவும் அதிசயம்.
  நல்ல ஒளி அமைப்பு.
  பறவைகளும் ,பாம்புகளும்.

  மிக நன்றி கோமதி மா.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குழந்தைகள் மட்டும் அல்ல, என்னைப்போன்ற வயது முதிர்ந்த குழந்தைகளும் ரசித்தார்கள்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.

   நீக்கு
 11. // முதலில் அவன் டைனோசரைப்பற்றி பேச போகும் போது அதற்கு தமிழில் பேர் சொல்லுங்கல் தாத்தா என்று தாத்தாவிடம் கேட்டான் அவன் தாத்தாதான் அந்த பேரை அவனுக்கு சொன்னார்கள். அவன் தொன்மாக்களைப்பற்றி பேசியதை கேட்டு கேட்டு மகிழ்வார்கள்..//

  பெரும் பேறு.. மனங்குளிர ஐயா கேட்டு மகிழ்ந்திருக்கின்றார்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
   //பெரும் பேறு.. மனங்குளிர ஐயா கேட்டு மகிழ்ந்திருக்கின்றார்கள்..//
   நீங்கள் சொல்வது உண்மை.

   போன முறை வந்த போது நிறைய விளையாடினார்கள் அவனுடன்.
   நிறைய தாத்தாவும் பேரனும் பேசுவார்கள்.
   ஊரிலும் தாத்தாவுடன் தினம் பேசும் போது பாடச்சொல்லி கேட்பார்கள். அவன் பேச்சை கேட்டு வியப்பும், மகிழ்வும் அடைவார்கள்.

   நீக்கு
 12. மிகவும் சிறப்பான பதிவு... வழங்கியுள்ள செய்திகளும் அருமை..

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.
   வாழ்க வையகம்!
   வாழ்க வளமுடன்!

   நீக்கு
 13. வணக்கம் சகோதரி

  நல்ல பதிவு. தொன்மா மிருகம் என்பது டைனோசருக்கு நல்ல தமிழ் பெயர். படங்கள் எல்லாம் அருமையாக உள்ளது. நீங்கள் சொல்லியபடி குழந்தைகள் ரசித்துப் பார்க்கும் உலகம். கவினும் நன்றாக ரசித்து பார்த்திருப்பார். நாமும் அவர்களோடு எல்லாவற்றையும் பார்த்து ரசிக்க ஒரு சான்ஸ் இல்லையா? குழந்தைகளுக்கும் இறுதியில் டைனோசர் பொம்மை கிடைத்ததும் மகிழ்ந்திருப்பார்கள்.

  பேரனின் காணொளியும் பார்த்தேன். டைனோசர் பற்றிய விளக்கங்களை நன்றாக எடுத்துச் சொல்கிறார்.எதையும் தெரிந்து கற்று கொள்ளும் அந்த ஆர்வத்திற்கு பாராட்டுகள். நீங்கள் எடுத்த பறவை, பாம்பு, படங்களும் நன்றாக இருந்தன. கரடி பொம்மையும் அழகாக உள்ளது. உங்களுக்கு பாராட்டுக்கள்.

  வெளியில் வந்ததும் எடுக்கப்பட்ட மாலைச் சூரியன் படம் மிக அழகு. கள்ளிச் செடி நீங்கள் சொல்வது போல்தான் இருக்கிறது. எவ்வளவு உயரம்.. அந்த பழத்தினால் ஏதேனும் நன்மை உண்டா? இல்லை பறவைகளுக்கு உணவா? எல்லா படங்களும் கண்களுக்கு விருந்தாக இருந்தது.

  நேற்று என்னால் வலைத்தளம் வர இயலவில்லை. அதனால் தாமதமாக வந்துள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

   //நல்ல பதிவு. தொன்மா மிருகம் என்பது டைனோசருக்கு நல்ல தமிழ் பெயர். படங்கள் எல்லாம் அருமையாக உள்ளது.//

   நன்றி.


   //நீங்கள் சொல்லியபடி குழந்தைகள் ரசித்துப் பார்க்கும் உலகம். கவினும் நன்றாக ரசித்து பார்த்திருப்பார். நாமும் அவர்களோடு எல்லாவற்றையும் பார்த்து ரசிக்க ஒரு சான்ஸ் இல்லையா? குழந்தைகளுக்கும் இறுதியில் டைனோசர் பொம்மை கிடைத்ததும் மகிழ்ந்திருப்பார்கள்//

   ஆமாம், அவர்களும், நாங்களும் மகிழ்ந்தோம். அவன் நிறைய டைனோசர் பொம்மைகள் வைத்து இருக்கிறான் விதவிதமாக பெரியது, சின்னது என்று. இருந்தாலும் அவர்கள் சாதனை செய்து கிடைத்து இருக்கும் போது அவர்களுக்கு மகிழ்ச்சி.

   //பேரனின் காணொளியும் பார்த்தேன். டைனோசர் பற்றிய விளக்கங்களை நன்றாக எடுத்துச் சொல்கிறார்.எதையும் தெரிந்து கற்று கொள்ளும் அந்த ஆர்வத்திற்கு பாராட்டுகள்//

   பேரனை பாராட்டியதற்கு நன்றி.

   //நீங்கள் எடுத்த பறவை, பாம்பு, படங்களும் நன்றாக இருந்தன. கரடி பொம்மையும் அழகாக உள்ளது. உங்களுக்கு பாராட்டுக்கள்.//

   பாராட்டுக்களுக்கு நன்றி.


   //அந்த பழத்தினால் ஏதேனும் நன்மை உண்டா? இல்லை பறவைகளுக்கு உணவா? எல்லா படங்களும் கண்களுக்கு விருந்தாக இருந்தது.//

   கள்ளிப்பழம் மருத்துவகுணம் மிகுந்து இருக்கிறது. நிறைய விலை கொடுத்து வாங்கி மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
   கள்ளில் மது பானம், வாசனை திரவியங்கள் , மருத்துக்கள் தயார் செய்கிறார்கள்.


   பறவைகள் எல்லாம் கள்ளிப்பூக்கள், பழங்கள் எல்லாவற்றையும் உண்ணும் .நான் கள்ளி பழத்தை உண்ணுவதை எடுத்து இருக்கிறேன்.

   உங்களையும், கீதா சாம்பசிவம் அவர்களையும் நேற்று எங்கள் ப்ளாக்கில் பார்க்கவில்லை.ஏன் வரவில்லை என்று நினைத்தேன்.

   உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.
   நீக்கு
 14. பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 15. தொன்மா மிருகம் என்னும் பெயரை இப்போத் தான் கேள்விப் படறேன். நல்ல பெயர் தான். கவினின் பேச்சு அருமை. குழந்தையாக இருந்தான் அல்லவா? இனிமையான மழலைக்குரல். டைனோசர் பற்றிய பல விபரங்களையும் இந்தத் தொகுப்பின் மூலம் அறிந்தேன். குழந்தைகளுக்குக் கற்கவும் பல விளையாட்டுக்கள் இருந்திருக்கின்றன. இதன் மூலம் அவர்கள் அறிவு விரிவடையும். போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் பனிக்கரடியும் மாலைச் சூரியனும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்கவளமுடன்
   இப்போது உடல் நலம் தேவலையா?

   //குழந்தைகளுக்குக் கற்கவும் பல விளையாட்டுக்கள் இருந்திருக்கின்றன. இதன் மூலம் அவர்கள் அறிவு விரிவடையும்.//


   ஆமாம், நீங்கள் சொல்வது போல குழந்தைகளுக்கு நிறைய கற்க விஷ்யம் இருந்தன.


   //கவினின் பேச்சு அருமை. குழந்தையாக இருந்தான் அல்லவா? இனிமையான மழலைக்குரல்//

   நன்றி . மழலையில் பேசுவது கேட்க நன்றாக இருந்தது. அடிக்கடி கேட்டு மகிழ்வோம்.


   //போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் பனிக்கரடியும் மாலைச் சூரியனும் அருமை.//

   படங்களை பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 16. படங்கள் ஒவ்வொன்றும் அட்டகாசம்... மிகவும் ரசித்தேன்...

  காணொளியில் கவின் அசத்துகிறார்... பாராட்டுகள்... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
   கவின் காணொளி பார்த்து அவனை பாராட்டி, வாழ்த்தியதற்கு நன்றி நன்றி.
   உங்களை காணவில்லையே என்று நினைத்தேன்.
   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி நன்றி.

   நீக்கு
 17. அழகிய தமிழ் பெயர். குழந்தைகள் ரசித்துப் பார்க்கவும் கற்றுக் கொள்ளவும் ஏற்ற இடம். அவர்களுக்காக உருவாக்கியிருக்கும் activities அனைத்தும் பாராட்டுக்குரியது. இப்படி உறுமியபடி உலவும் பிரமாண்ட டைனாசர் சிலையொன்று பெங்களூர் விஸ்வேஸ்வரய்யா ம்யூஸியத்தில் உண்டு. கரடி மேல் நிழல் தவிர்க்க முடியாதுதான். சிறு வயதில் கவின் ஆற்றியிருக்கும் உரை மிக அருமை.

  பதிலளிநீக்கு