புதன், 2 ஜூன், 2021

மலைதரிசனம்


பெல் ராக் என்று அழைக்கப்படுகிறது இந்த மலை.

அரிசோனாவில் "அன்னையர் தினத்தில்" சென்று வந்த இடங்களின் தொடர் பதிவு.

அமைதிப் பூங்கா பார்த்தபின்  போய் தங்கிய விடுதியின் படங்கள்,  மற்றும் பெல்ராக் மலை , அதற்கு பக்கத்தில் இருக்கும் மலைகள் படங்களின் தொகுப்பு இந்த பதிவில்.


அரிசோனாவிற்கு அருகில் இருக்கும் செடோனா என்ற இடத்தில் இந்த மலை   அமைந்து இருக்கிறது.  இது தியானம் செய்ய ஏற்ற இடமாக சொல்கிறார்கள்.

உலகம் முழுவதிலும் உள்ள ஆன்மீக நாட்டம் உள்ள மக்கள் இங்கு வந்து செல்கிறார்களாம். 

பழங்குடியினர் கிரிவலம் வருவது போல் இந்த மலையை சுற்றி வந்து வணங்குவார்களாம்.

இங்கு வந்த பின் அவர்கள் ஆன்மீக தேடலுக்கு நிறைய செய்திகள் கிடைக்கிறதாம். "இங்கு வந்து மலைதரிசனம் செய்து  அறிவொளி   பெற்று வீட்டிற்குச் செல்லுங்கள் , அதைத்தான் நாங்கள் உண்மையான செடோனா நினைவு பரிசு என்று  சொல்கிறோம்."

என்று இந்த மலையைப்பற்றிய செய்தியில் படித்தேன்.  
மலையேறும் குழுக்களும் வருகிறார்கள். நடந்தும் ,சைக்கிளிலும் போகிறார்கள் மலைப்பாதையில்.

செடோனவில் மிக அழகிய இடங்கள் 100 இருக்கிறதாம். நாங்கள் தங்கிய விடுதியில் இந்த புத்தகம் வைத்து இருந்தார்கள்.
 


சகல வசதிகளுடன்  உள்ள விடுதி.   

இரவு மருமகள் இடியாப்பம், வெஜிடபிள் இஷ்டு செய்தாள் . 


மேலே  ஒரு அறை  அங்கு இருந்தும் மலை அழகை ரசிக்கலாம்

ஒவ்வொரு வீட்டுக்கும்  ஒரு பறவையின்  பேர் வைத்து இருந்தார்கள்.
 நாங்கள்


தங்கி இருந்த வீட்டுக்கு  Quail  பறவை பேர்.

 காலையில் பனித் துளி விழுந்து இருக்கும்  இலைகள்
மாலையில் வீட்டு வாசலிருந்து எடுத்த படம். கோவில் கோபுரம் தோற்றம் 


மாலை நேரம் சூரிய ஒளி

மாலை நேரம்எடுத்த மலை படம்
முன்னால் சின்னதாக கோவில் தோற்றம் கொடுத்த மலை  இருக்கிறது,இந்த படம் காலையில் எடுத்த படம்

சிங்கம் போன்ற தோற்றம் தரும் மலை

நாங்கள் தங்கி இருந்த வீட்டுக்கு முன் இருந்த நீச்சல் குளம்

இரவு மிதமான சூடான தண்ணீர் வருமாம். மிகவும் சுத்தமாக பராமரிக்கிறார்கள், நாங்கள் பயன்படுத்தவில்லை.

பெல்ராக் பக்கத்தில் இருக்கும்  அழகிய மலை

மலையில்  கண்ணாடி கோப்பை போல் தெரியும் ஒரு பகுதி.
மதுக் கோப்பை தோற்றம் என்கிறார்கள்.



மலையின் சில பகுதிகள் சிற்பங்கள் செதுக்கியது போல் இருக்கிறது  

அழகிய மேடை, இங்கு வந்து தங்குபவர்கள் விழா நடத்தலாம் 


இரவு நேரத்தில்  நெருப்பு மூட்டி  குளிர் காய்ந்து கொண்டு உறவுகளுடன் அமர்ந்து உரையாடி கொண்டு விழாவை ரசிக்கலாம்.




விடுதியிலிருந்து மலைஅருகே போகும் வழி இருக்கிறது.
  நாங்கள் மறு நாள் பெல்ராக் அருகில்  போய் பார்க்க  போனோம். போகும் வழியில் பார்த்த பறவைகள்   மலர்கள் அடுத்த பதிவில்.  

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !

---------------------------------------------------------------------------------------------

46 கருத்துகள்:

  1. அழகான காட்சிகள் மிகவும் ரசனையோடு எடுத்து இருக்கிறீர்கள்.

    விபரங்களும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //அழகான காட்சிகள் மிகவும் ரசனையோடு எடுத்து இருக்கிறீர்கள்.//

      ரசித்துப் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  2. கண்ணாடி கோப்பை, சிங்கம் ஆகியவை போன்று தோற்றம் தருவது வியப்பில் ஆழ்த்தியது... அனைத்து படங்களும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //கண்ணாடி கோப்பை, சிங்கம் ஆகியவை போன்று தோற்றம் தருவது வியப்பில் ஆழ்த்தியது.//

      ஆமாம், எங்களுக்கும் வியப்பாக இருந்தது.

      அனைத்து படங்களையும் ரசித்துப் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  3. கோம்திக்கா படங்கள் எல்லாம் அட்டகாசம் போங்க...

    அந்த விடுதி வாவ் அதன் வடிவம் வித்தியாசமாக அழகா இருக்கு. இருங்க முதல்ல கண்ணுல பட்டதற்கு இது. எல்லாம் பார்த்து வாசித்துவிட்டு வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்

      //அந்த விடுதி வாவ் அதன் வடிவம் வித்தியாசமாக அழகா இருக்கு.//

      ஆமாம் கீதா.

      நீக்கு
  4. கையில் இடியாப்ப மாவு, காய் எல்லாம் கொண்டு போயிருந்தீங்களோ அக்கா?

    நீங்களும் மாமாவும் முன்பு சென்றிருந்த போது ஒரு விடுதியில் தங்கிய படங்கள் எல்லாம் போட்டிருந்தீங்களே அதுவும் நினைவுக்கு வந்தது கோமதிக்கா..அப்பவும் நீங்க சமைச்சு சாப்பிட்டது தாத்தாவும் பேரனும் விளையாடியது எல்லாம். அந்த விடுதியும் கூட அழகாக இருந்தது.

    பனித்துளி இலைகள் செம கோமதிக்கா...அழகு!!!!

    அட! அங்கு நம்மூர் கோவில் கோபுரம் போன்ற மலை தெரிகிறதே...

    மாலை நேரம் எடுத்த மலையின் படத்தில் அந்த மலை என்ன அழகு இறைவன் பெரிய உருவமெடுத்து தன் கைகளை இருபுறமும் நாற்காலியில் வைத்திருப்பது போல வைத்து அமர்ந்திருப்பது போல இருக்கு அக்கா.

    காலையில் வித்தியாசமான கோண்ம் வித்தியாசமான தோற்ற்ம்...
    சிங்க மலையும் அழகு...

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா , எப்போதும் எல்லாம் கொண்டு போய் விடுவோம்.
      தோசை மாவு, அரிசி, பருப்பு, புளி என்று சமைக்க தேவையான பொருட்கள் காரில் இருக்கும். ஐஸ் வாங்கி நிறைத்த பெட்டியில் தயிர், பால் எல்லாம் கொண்டு போய் விடுவோம். மருமகள் அந்த பொருட்களை வைத்து அருமையாக சமைத்து தந்து விடுவாள்.தங்கும் விடுதியில் காலை உணவு தருவார்கள். ஆனால் இப்போது கொரனோ காலம் என்பதால் காலை உணவையும் மருமகளே தயார் செய்து விடுகிறாள்.

      //நீங்களும் மாமாவும் முன்பு சென்றிருந்த போது ஒரு விடுதியில் தங்கிய படங்கள் எல்லாம் போட்டிருந்தீங்களே அதுவும் நினைவுக்கு வந்தது கோமதிக்கா..அப்பவும் நீங்க சமைச்சு சாப்பிட்டது தாத்தாவும் பேரனும் விளையாடியது எல்லாம். அந்த விடுதியும் கூட அழகாக இருந்தது. //
      ஆமாம் , எங்கு சென்றாலும் நல்ல அழகான விடுதியாக தேர்வு செய்வார்கள் மகனும், மருமகளும் .பழைய நினைவுகளை மறக்காமல் சொன்னது மகிழ்ச்சி கீதா.

      நீக்கு
    2. //பனித்துளி இலைகள் செம கோமதிக்கா...அழகு!!!!//
      ரசிப்பீர்கள் என்றுதான் இந்த பகிர்வு

      அட! அங்கு நம்மூர் கோவில் கோபுரம் போன்ற மலை தெரிகிறதே...
      ஆமாம் கீதா.

      மாலை நேரம் எடுத்த மலையின் படத்தில் அந்த மலை என்ன அழகு இறைவன் பெரிய உருவமெடுத்து தன் கைகளை இருபுறமும் நாற்காலியில் வைத்திருப்பது போல வைத்து அமர்ந்திருப்பது போல இருக்கு அக்கா.

      நல்ல கற்பனை, நானும் அப்படி பார்த்து ரசித்தேன்

      காலையில் வித்தியாசமான கோண்ம் வித்தியாசமான தோற்ற்ம்..
      மலைகள் ஒவ்வொரு கோனத்தில், ஓவ்வொரு நேரத்தில் அழகோ அழகு கீதா.
      சிங்க மலையும் அழகு...

      சிங்க மலையை வேறு ஒரு இடத்தில் வேறு கோணத்தில்படம்எடுத்தேன் அதை அடுத்த பதிவில் பகிர்கிறேன்.

      நீக்கு
  5. நீச்சல் குளம், சுத்தம், விடுதி இருக்கும் இடம் சுற்றி இயற்கை எல்லாமே மனதைக் கவர்கிறது

    பெல் ராக் அருகில் மலை இந்தப் படம் மிக அழகு. பெல் ராக் பக்கத்தில் இருக்கும் அந்த மலை, நம்மூர் இராமாயணப் படத்தில் கும்பர்கர்ண்ன் உறங்குவதைக் காட்டுவார்களே அது போன்று இருக்கிறது

    மதுக்கோப்பை உருவம் சூப்பர். இயற்கையின் விளையாட்டால் இன்னும் சில வருடங்களில் இதன் உருவம் மாறும் வாய்ப்பு இருக்கும் இல்லையாக்கா?

    விழா நடத்தும் அளவிற்கான இடம், மேடை போன்றவை அங்குகுளிர் காய்ந்து அமர்ந்து பார்க்கும் இடம் எல்லாம் அத்தனை அழகாக இருக்கின்றன...மிகவும் ரசித்தேன் கோமதிக்கா

    நன்றி கோமதிக்கா பகிர்விற்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீச்சல் குளம், சுத்தம், விடுதி இருக்கும் இடம் சுற்றி இயற்கை எல்லாமே மனதைக் கவர்கிறது//

      ஆமாம் கீதா, ரம்மியமாக இருந்தது. கொரோனா காலம் சளி பிடித்துக் கொள்ள கூடாதே என்று மகனும், பேரனும் குளிக்கவில்லை. இல்லையென்றால் அவர்களும் குளித்து மகிழ்ந்து இருப்பார்கள்.

      //பெல் ராக் பக்கத்தில் இருக்கும் அந்த மலை, நம்மூர் இராமாயணப் படத்தில் கும்பர்கர்ண்ன் உறங்குவதைக் காட்டுவார்களே அது போன்று இருக்கிறது//

      நல்ல கற்பனை.

      //மதுக்கோப்பை உருவம் சூப்பர். இயற்கையின் விளையாட்டால் இன்னும் சில வருடங்களில் இதன் உருவம் மாறும் வாய்ப்பு இருக்கும் இல்லையாக்கா?//

      ஆமாம் , அந்த பள்ளத்தில் இருக்கும் மரங்கள் வளர்ந்து கோப்பையை மறைக்கலாம். அப்போது அதன் தோற்றம் மாறும்.

      //விழா நடத்தும் அளவிற்கான இடம், மேடை போன்றவை அங்குகுளிர் காய்ந்து அமர்ந்து பார்க்கும் இடம் எல்லாம் அத்தனை அழகாக இருக்கின்றன...மிகவும் ரசித்தேன் கோமதிக்கா//

      அனைத்தையும் ரசித்துப் பார்த்து ரசனையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா.


      நீக்கு
  6. புதிய இடம், படங்கள் மிக அருமை. இலையில் பனித்துளி - ரொம்ப நல்லா வந்துள்ளது.

    ரிசார்ட்டில் சென்று தங்கி, அங்கேயே சமைத்துச் சாப்பிட்டீர்களா?

    ஏன் நீச்சல் குளத்தை உபயோகிக்கலை (பேரனாவது?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //படங்கள் மிக அருமை. இலையில் பனித்துளி - ரொம்ப நல்லா வந்துள்ளது.//
      நன்றி .

      ஆமாம், இரவு உணவு, காலை உணவு அங்கு சாப்பிட்டோம், மதியத்திற்கு சமைத்து எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டோம்.

      //ஏன் நீச்சல் குளத்தை உபயோகிக்கலை (பேரனாவது?)//

      அவர்கள் சுத்தமாகத்தான் பராமரிக்கிறார்கள் இருந்தாலும் கொரோனா காலம் என்பதால் வேண்டாம் என்று குளிக்கவில்லை.

      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  7. அந்த மலை பார்க்கக் கவர்ச்சியாய் இருக்கும் அதே நேரம்  எங்கே மழை பெய்தால் கரைந்து விடுமோ என்றும் பயமாக இருக்கிறியாது!  அர்த்தமற்ற கவலைகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //அந்த மலை பார்க்கக் கவர்ச்சியாய் இருக்கும் அதே நேரம் எங்கே மழை பெய்தால் கரைந்து விடுமோ என்றும் பயமாக இருக்கிறியாது!//

      மழை பெய்தால் கரையாது வலுவான மலைதான். கவலை வேண்டாம்.

      நீக்கு
  8. எல்லாப் படங்களும் அழகு.  ஆம்..   அந்தத் தோற்றத்தில் மலையைப் பார்க்க சிங்கம் நினைவுக்கு வருகிறது!  மதுக்கோப்பை மலையும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆம்.. அந்தத் தோற்றத்தில் மலையைப் பார்க்க சிங்கம் நினைவுக்கு வருகிறது! மதுக்கோப்பை மலையும் அழகு.//

      ரசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      நம் கற்பனைக்கு ஏற்ற மாதிரி மலைகள் தோற்றம் கொடுக்கிறது ஸ்ரீராம்.

      நீக்கு
  9. வெயிலில் மலை ஏறினால் ஊடும்.  மழையில் ஏறினால் வழுக்கும்!  இதெல்லாம் படங்கள் பார்க்கும்போது மனதில் தோன்றுபவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வெயிலில் மலை ஏறினால் ஊடும். மழையில் ஏறினால் வழுக்கும்! இதெல்லாம் படங்கள் பார்க்கும்போது மனதில் தோன்றுபவை!//

      மலையேறும் காலம் அறிந்து தான் மலையேறுபவர்கள் ஏறுவார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  10. நல்ல அருமையான தொகுப்பு. அதிகம் யாரும் போகாத பகுதிகளாய் இருக்கின்றன. ரேவதி ஒருவேளை போயிருப்பாங்களோ என்னமோ! நாங்க யு.எஸ். போனால் பயணத்தை அவ்வளவாய் விரும்புவதில்லை. வெளியில் சாப்பிட ஒத்துக்கறதில்லை. கையில் அதிகம் எடுத்துப் போவதெனில் வீட்டில் எல்லோருக்கும் தயார் செய்ய நேரம் ஒத்துழைக்காது. ஆகவே நாங்கள் பயணத்தை முடிந்தவரை தவிர்ப்போம். பெண்ணுக்குக் கோபம் வரும். என்ன செய்வது! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      அருகில் இருக்கும் இடம் அதிக கூட்டம் இல்லா இடம் என்றுதான் மகன் தேர்வு செய்தான்.
      கூட்டம் கூடும் இடங்களை தவிர்க்கும் காலமாக இருக்கே!

      மகனுக்கு தான் பார்த்து ரசித்த இடங்களை நாங்களும் பார்க்க வேண்டும் என்று ஆசைபடுவான்.

      //வெளியில் சாப்பிட ஒத்துக்கறதில்லை. கையில் அதிகம் எடுத்துப் போவதெனில் வீட்டில் எல்லோருக்கும் தயார் செய்ய நேரம் ஒத்துழைக்காது. ஆகவே நாங்கள் பயணத்தை முடிந்தவரை தவிர்ப்போம். பெண்ணுக்குக் கோபம் வரும். என்ன செய்வது!//

      :))))//

      என்ன செய்வது? நம் உடல் நிலைக்கு ஏற்ற மாதிரிதானே போகும் இடத்தில் பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டி இருக்கிறது.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. ஙே!!!!!!!!!!!!!!!!!! மலையைப் பற்றியும் படங்கள் பற்றியும் சொல்லி இருந்த இரண்டு கருத்துகள் எங்கே போச்சு? !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! அடிக்கடி இப்படி ஆகிறது! இணையம் காரணமா? அல்லது ப்ளாகர் ஏற்கலையா தெரியலையே!

      நீக்கு
    3. மலையின் தோற்றம் விதவிதமாகத் தோன்றுவது அருமை. கோப்பை மாதிரி இருப்பதும் சிங்க முகத்துடன் காணப்படுவதும் காண்பதற்கு அரிது! விழா மேடையும் அதை ஒட்டிய அமர்விடமும் நல்ல ரசனையுடன் ஏற்படுத்தி இருக்காங்க. பெல் ராக் மலை பற்றிக் கூட ஏதோ சொல்லி இருந்தேன். இப்போ நினைவில் வரலை. :))) சிற்பங்களைப் போல் காணப்படும் மலைப்பகுதிகள் கொஞ்சம் கொஞ்சம் கயிலை மலையை நினைவூட்டத்தான் செய்கிறது.

      நீக்கு
    4. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      உங்கள் ஒரு கருத்து தான் வந்து இருந்தது, ஏன் மற்றவை வரவில்லை என்று தெரியவில்லை.

      புது ப்ளாகர் மாற்றம் காரணமோ!




      //மலையின் தோற்றம் விதவிதமாகத் தோன்றுவது அருமை//

      மலையின் தோற்றம் வித விதமாக தோன்றுவது பார்ப்பதுதான் மகிழ்ச்சி.
      //கோப்பை மாதிரி இருப்பதும் சிங்க முகத்துடன் காணப்படுவதும் காண்பதற்கு அரிது!//

      ஆமாம், இயற்கையின் அதிசயம்.

      நீங்கள் சொன்னது போல் அந்த தங்கும் விடுதியில் அமர்ந்து மலை அழகை கண்டு ரசிக்க ரசனையுடன் ஏற்படுத்தி இருக்கிறார்கள் அனைத்தையும்.

      நமக்கு எந்த மலையை பார்த்தாலும் கயிலையாகத்தான் காட்சி அளிக்கும், நம் மனநிலை அப்படி.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.





      நீக்கு
    5. ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!! இப்போவும் இரண்டு தான் வந்திருக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! பெல்ராக் பற்றி எழுதினவை மட்டும் மறையக் காரணம்?????????????????????????????????????????

      நீக்கு
    6. என்னாச்சு தெரியவில்லையே! வந்த கருத்துக்களுக்கு பதில் கொடுத்து விட்டேன்.

      நீக்கு
  11. அழகான காட்சிகள் மா. உங்கள் மூலம் எங்களுக்கும் அந்த இடங்களின் அழகை பார்த்து ரசிக்க முடிந்தது. நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  12. அருமையான இடம். அழகிய படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  13. செடோனா, மந்திர பூமி.

    அத்தனை படங்களும் மிக ரசனையுடன் எடுத்திருக்கிறீர்கள் கோமதிமா.
    வாழ்க வளமுடன்.
    சிங்க மலை நம் அஹோபிலத்திலும் இருக்கிறது.
    இயற்கையின் வினோதங்களை ரசிக்கத் தெரிந்த, அனுபவிக்கத் தெரிந்த மகனுக்கும்
    மருமகளுக்கும் வாழ்த்துகள்.

    எனக்கும் உங்கள் பழைய பதிவு நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்

      //அத்தனை படங்களும் மிக ரசனையுடன் எடுத்திருக்கிறீர்கள் கோமதிமா.
      வாழ்க வளமுடன்.//

      நன்றி அக்கா.

      //சிங்க மலை நம் அஹோபிலத்திலும் இருக்கிறது.//

      ஓ! அப்படியா?

      //இயற்கையின் வினோதங்களை ரசிக்கத் தெரிந்த, அனுபவிக்கத் தெரிந்த மகனுக்கும்
      மருமகளுக்கும் வாழ்த்துகள்.//

      நன்றி அக்கா.

      //எனக்கும் உங்கள் பழைய பதிவு நினைவுக்கு வந்தது.//

      மறக்க முடியாத நினைவுகள் அவை.



      நீக்கு

  14. மதுக்கிண்ண மலையும் மிக அற்புதம் . இந்தக் காட்சியை வைத்து மெக்கனாஸ் கோல்ட் திரைப்படம் . வந்தது.
    கீதா சாம்பசிவம் சொன்ன மாதிரி இங்கே
    போயிருந்தோம்.
    அங்கே தங்க முடியாததால் , காலையிலிருந்து இரவு வரை இருந்து விட்டு இரவுக்கு
    க்ராண்ட் கான்யான் சென்று விட்டோம்.

    படங்களைப் பார்க்கும் போது மீண்டும் செல்ல ஆசை வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மதுக்கிண்ண மலையும் மிக அற்புதம் . இந்தக் காட்சியை வைத்து மெக்கனாஸ் கோல்ட் திரைப்படம் . வந்தது.//

      நானும் பார்த்தேன் இந்த திரைப்படம் , ஆனால் மறந்து விட்டது.

      //அங்கே தங்க முடியாததால் , காலையிலிருந்து இரவு வரை இருந்து விட்டு இரவுக்கு
      க்ராண்ட் கான்யான் சென்று விட்டோம்.//

      க்ராண்ட் கான்யானிலும் தங்கும் விடுதிகள் நன்றாக இருக்கும்.


      //படங்களைப் பார்க்கும் போது மீண்டும் செல்ல ஆசை வருகிறது.//

      ஓ ! மகிழ்ச்சி.


      நீக்கு
  15. இந்தத் தொற்றுக் காலத்தில் இத்தனை முன்னேற்பாடுடன்
    உணவுப் பொருட்களைக் கொண்டு வந்த மருமகளுக்குப்
    பாராட்டுகள்.
    எங்களுக்கும் இது போல ஏற்பாடுகளே பிடிக்கும். இந்த ஊரில் வெளியே சாப்பிட ஏதுவான் உணவே அதிகமாகக் கிடைக்காது.
    யானைப் பசிக்கு சோளப்பொரி கதைதான். !!
    அதுவும் நாள் முழுவதும் அலைந்து திரிவோமா....

    கையில் உணவிருப்பது நன்மைதான்.
    அற்புதமான பயணம் மேற்கொண்ட அனுபவத்திற்கு மிக நன்றி அன்பு கோமதி மா.
    வாழ்க வளமுடன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்தத் தொற்றுக் காலத்தில் இத்தனை முன்னேற்பாடுடன்
      உணவுப் பொருட்களைக் கொண்டு வந்த மருமகளுக்குப்
      பாராட்டுகள்.//

      எத்தனை பயணம்! வரும் உறவினரை எல்லாம் அழைத்து சென்று பழகி விட்டார்கள்.
      காலை உணவு தங்கும் விடுதியில் கொடுப்பார்கள் ,அதையும் போய் சாப்பிட பயம் அதனால் சாப்பிடவில்லை. எல்லாம் கையில் எடுத்து போய் விட்டோம்.இரண்டு நாள் தான் சனிக்கிழமை போனோம், ஞாயிறு வீடு திரும்பி விட்டோம்.


      //எங்களுக்கும் இது போல ஏற்பாடுகளே பிடிக்கும். இந்த ஊரில் வெளியே சாப்பிட ஏதுவான் உணவே அதிகமாகக் கிடைக்காது.
      யானைப் பசிக்கு சோளப்பொரி கதைதான். !!
      அதுவும் நாள் முழுவதும் அலைந்து திரிவோமா...//

      ஆமாம் , கையில் கொண்டு போய் விட்டால் நல்லது.
      இடங்களை பார்க்க அலைந்து திரியும் போது நேரமும் மிச்சபடும் கையில் உணவு இருந்தால். உணவுக்காக ஓட்டலில் காத்து இருக்கும் நேரம் சேமிப்பாகும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  16. அருமை
    அழகு
    மலைகளின் படங்கள் மனம் கவர்கின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்

      மலைகளின் படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  17. மிக அழகிய படங்கள்.. மலையைப் பார்க்க, சிற்பி செதுக்கிய சிற்பம் போல இருக்குது, இயற்கை எவ்வளவு அழகாகச் செதுக்கி இருக்குது.

    தங்கிய விடுதி சூப்பர்... கொரோனா காலத்துக்கு ஏற்ற தனி விடுதி... அழகாகவும் அமைதியாகவும் இருக்குது... அங்கும் குயி/யெ.. ல் பறவைகள் இருக்கின்றன போலும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்

      //மலையைப் பார்க்க, சிற்பி செதுக்கிய சிற்பம் போல இருக்குது, இயற்கை எவ்வளவு அழகாகச் செதுக்கி இருக்குது.//

      ஆமாம் அதிரா.

      //தங்கிய விடுதி சூப்பர்... கொரோனா காலத்துக்கு ஏற்ற தனி விடுதி... அழகாகவும் அமைதியாகவும் இருக்குது... அங்கும் குயி/யெ.. ல் பறவைகள் இருக்கின்றன போலும்...//

      ஆமாம் அதிரா, அழகாவும் அமைதியாகவும் இருந்தது. பறவைகளின் இனிய கானம் மட்டும்தான் கேட்கும். மக்களின் ஆரவாரம் இல்லா இடம்.

      காலமாற்றத்தால் இப்படி மனிதர்களை கண்டு பயப்படும் நிலை வந்து இருக்கிறது.
      முன்பு திருவிழாக்களில் 1000 தலை கண்டாலே புண்ணியம் என்றார்கள்.

      ஆமாம்,Quail பற்வைகள் இருக்கிறது.

      உங்கள் ஊர் எப்படி இருக்கிறது? உங்கள் பள்ளி வேலை ஆரம்பித்து விட்டதா? விடுமுறையா?

      முடிந்த போது வாருங்கள் வலைத்தளத்திற்கு.
      உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது. கருத்துக்கு நன்றி.



      நீக்கு
    2. எங்களுக்கு இப்போ வெதர் நன்றாக இருக்கிறது கோமதி அக்கா. இன்னும் சில நாட்களில் சமர் ஹொலிடே ஆரம்பமாகிவிடும் இங்கு.

      நீக்கு
    3. அதிரா, மீண்டும் வந்து பதில் சொன்னது நன்றி .
      பேரனுக்கு விடுமுறை ஆரம்பித்து விட்டது.ஆகஸ்ட் மாதம் பள்ளி திறக்கும் .

      நீக்கு
  18. வணக்கம் சகோதரி

    நலமா? எப்படி இருக்கிறீர்கள்.? பதிவு அருமையாக உள்ளது. மலைகளின் அழகை நன்றாக படம் எடுத்து விளக்கமாக அதன் விபரங்களையும் சொல்லியிருக்கிறீர்கள். பெல்ராக் மலைதான் எவ்வளவு அழகாக செதுக்கிய சிற்பம் போன்ற தோற்றங்களுடன் அமைந்துள்ளது.பதிவு உங்களுடன் பயணித்த மன அமைதியை தந்தது. என் மன மாற்றத்திற்கு இப்படி உங்கள் பதிவுகளை படிப்பது நன்றாக உள்ளது. விடுபட்ட பதிவுகளையும் படிக்கிறேன்.

    மலையின் அற்புத தோற்றங்களை அழகான கணங்களில் படமெடுத்திருப்பதற்கு பாராட்டுக்கள். சிம்மம் போன்ற அமைப்பும், மது கோப்பை போன்ற அமைப்பும் உள்ள படங்களை ரசித்தேன். பதிவு அருமையாக உள்ளது சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      நலமாக இருக்கிறேன் கமலா இறையருளால்.

      //பதிவு உங்களுடன் பயணித்த மன அமைதியை தந்தது. என் மன மாற்றத்திற்கு இப்படி உங்கள் பதிவுகளை படிப்பது நன்றாக உள்ளது. விடுபட்ட பதிவுகளையும்
      படிக்கிறேன்.//
      மனமாற்றத்தை தேடி கொள்ள வேண்டியதுதான் நாம், குழந்தைகளை, பேரன் பேத்திகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் இருக்கே உங்களுக்கு. பதிவு மன அமைதி தந்தது என்று அறியும் போது மனது மகிழ்ச்சியாக இருக்கிறது.

      உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி கமலா.



      நீக்கு
  19. மிக அழகான படங்கள். இயற்கை காட்டும் ஜாலம் அற்புதம். ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் மண்ணால் ஆன மலையோ என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடஷேவரன், வாழ்க வளமுடன்
      மண்ணால் ஆன மலை இல்லை, சிவப்பு கற்களால் ஆன நல்ல வலுவான மலைதான்.
      இயற்கையின் ஜாலத்தை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு