ஞாயிறு, 13 ஜூன், 2021

ஸ்லைட் ராக் ஸ்டேட் பார்க் (Slide Rock State Park)










ஸ்லைட் ராக்  ஸ்டேட் பார்க் 


அரிசோனாவில் "அன்னையர் தினத்தில்" சென்று வந்த இடங்களின் தொடர் பதிவு.  சென்ற பதிவு  மலைப் பாதை பறவைகளும்,  மலர்களும்


ஸ்லைடு ராக் ஸ்டேட் பார்க்  அரிசோனாவின் பக்கத்தில் உள்ள செடோனா என்ற ஊரின் வடக்கே 7 மைல்  தூரத்தில் ஓக் க்ரீக் கேன்யானில்  உள்ளது. அரிசோனாவின் மாநில பூங்கா. அரிசோனா மாநில பூங்காக்கள் நிறுவனம் மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் வன சேவை நிறுவனமும் சேர்ந்து பராமரிக்கிறது.

'ஸ்லைட் ராக்  ஸ்டேட் பார்க்'  போகும் போது"midgley bridge"  இந்த புகழ் பெற்ற பாலம் வழியாக வந்தோம். வழியில் இறங்கி இந்த பாலத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

இந்த பாலத்தின் அடியில் பாதை இருக்கிறது, சுற்றிலும் உள்ள  சிவப்பு மலைகளில்  மலைப்பயணம் (மலையேற்றம் செய்ய)  போக வசதியாக பாதை செல்கிறது.

நன்றி- கூகுள்


இதன் சிறப்பு இரண்டு மலைகளுக்கு இடையில் பாலம் கட்டப்பட்டு இருப்பது.

பாலத்துக்கு அடியில் நீர் தேக்கமும் பாறைகளும் அழகாய் இருந்தது.  பாறைமேல்   ஒரு அழகிய பெண்  தன் இரண்டு வளர்ப்பு செல்லங்களுடன்  "சூரியகுளியல்" செய்து கொண்டு இருந்தார். தண்ணீரில் மரங்களின் நிழல் தெரிவது அழகாய் இருந்தது என்று எடுக்க போனேன் அந்த பெண்ணும் படத்தில் இடம் பெற்று விட்டார்.

பாலத்தின் அருகிலிருந்து சுற்றிலும்  சிவப்பு நிற மலைகளின்    அழகிய தோற்றங்களைப் பார்த்தோம். இந்த இடம் மக்கள் விடுமுறையில் வந்து செல்ல விரும்பும்  சுற்றுலாத்தளம்.


பாலத்தின் அருகிலிருந்து எடுத்த மலை படங்கள்.

மலையின்  மேல் பகுதியில் ஆந்தையார் அமர்ந்து இருப்பது போன்ற தோற்றம்.

கீழே  தெரியும் மலைதான் வேறு கோணத்தில் ஐவர் மாநாடு போல் இருக்கிறது.

இந்த மலை எப்படி  தெரிகிறது உங்களுக்கு சொல்லுங்களேன்

ஸ்லைட் ராக் பார்க்கில் மக்கள் கூட்டம்   இருந்தது.  கூட்டம் இல்லா பகுதியை தேடி இயற்கையை ரசித்து வந்தோம்.

அரிசோனா மக்களுக்கு கோடையில் குளுர்ச்சி தரும் சுற்றுலாத்தளமாக இருக்கிறது. அரிசோனாவின் ஆரம்பகால விவசாய வளர்ச்சிக்கு  எடுத்துக்காட்டாக இருந்த இடமாம். முன்னர் ஆப்பிள் தோட்டமாக இருந்ததாம், தோட்டத்திற்கு நீர்பாசன வசதி செய்தது இப்போது கோடையில் மக்கள் குளித்து விளையாட ஏற்ற இடமாக உள்ளது. இந்த இடத்தை சுற்றிப்பார்க்க கட்டணம் உண்டு.

இந்த பூங்காவில் மலையேற்றம் செய்ய விருப்பபடுபவர்களுக்கு மூன்று மலையேற்ற பாதைகள் இங்கு இருக்கிறது.

அழகிய சிற்றோடை நீர்வீழ்ச்சி என்கிறார்கள். வழுக்கும் படுக்கை  அமைப்பு, அதனால் தான் "ஸ்லைட் ராக்" என்று பெயர்.

ஓங்கி வளர்ந்த மரங்கள் மலையை எட்டப்பார்க்கிறது.

பழைய வீடுகள் நிறைய இருக்கிறது இங்கு. பின்பிறம் மலைகள் வேறு வண்ணத்தில் இருக்கிறது.

ஆப்பிள் பழங்கள் கிடைக்கும் போல! நாங்கள் பார்க்க போகவில்லை.


பழைய கால எந்திரங்கள் (விவசாயத்திற்கு பயன்படுத்திய கருவிகள் ) வழி எல்லாம் காட்சிக்கு வைத்து இருக்கிறார்கள்.

ஓரமாக இருக்கும் ஆப்பிள் மரங்களில் காய், பழங்களை காணோம்.

மலை வீட்டில் கதவு தெரிவது போல் இருக்கிறது

பூனையார் தொப்பி போட்டுக் கொண்டு நிற்பது போன்ற தோற்றம்

குகை பாதை போல உள்ளே வட்டக்கல் இருக்கிறது.

மரங்களுக்கு இடையில் தெரியும் முகம் பூனை , புலி முகம் போன்று எனக்கு  தோன்றியது.

நீர் நிலைக்கு போகும் வழியில் இந்த அறிவுப்பு பலகை. மக்கள் இதன் படி  நடக்கிறார்கள்.நீர் நிலை மிக சுத்தமாக குப்பைகள் இல்லாமல் இருந்தது.


இந்த சின்ன நீர் வீழ்ச்சியை மக்கள் ரசித்து அதில் குதித்து விளையாடுவதுபார்க்கலாம் யூடியூப்  

காணொளியில். இதற்கே இப்படி மகிழ்ந்து போகிறார்கள், நம் குற்றாலத்தை கண்டால் இவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நாங்கள் போன போது இவ்வளவு தண்ணீர் இல்லை. இருந்தாலும் இதில் மக்கள் வழுக்கி கொண்டு வந்து விழுந்து எழுந்து சுற்றிலும் மகிழ்ச்சி அலையை பரப்பி குளிக்கும் காட்சி கண்கொள்ளா காட்சிதான்.





நான் எடுத்த காணொளி



மேலே இருந்து வழுக்கி கொண்டே வந்து நடுவில் கொஞ்சம் பள்ளமாக இருக்கும் இடத்தில் விழுகிறார்கள் மீண்டும் அது போல் விளையாடுகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் எல்லாம் விளையாடி களிக்கிறார்கள். நான் குழந்தைகளை மட்டும் படம் எடுத்தேன்.

பேரனும் சிறிது நேரம் விளையாடினான்

அமானுஷ்ய  தோற்றம் தந்த மரம். மரத்தின் கீழ் அதன் பேர் போட்டு இருக்கிறது தூரத்திலிருந்து ஜூம் செய்து எடுத்த படம் பக்கத்தில் போக வில்லை அதனால் மரத்தின் பெயர் தெரியவில்லை.

கயிறு கட்டி இருக்கும் வரை நீர் விளையாட்டு விளையாடலாம்





இங்கு  அன்னையர் தினத்திற்கு கேக்  வெட்டி கொண்டாடினார்கள்  .

வளர்ப்பு செல்லத்துடன் குழந்தைகள் 


வீட்டுக்கு திரும்பி வரும் வழியில் பார்த்த அழகிய  காட்சி (காரிலிருந்து எடுத்த படம்)


அன்னையர் தினத்தில் பார்த்த இடங்களின் தொடர் பதிவு நிறைவு பெற்றது. மீண்டும் வேறு பதிவுடன் சந்திப்போம்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!


47 கருத்துகள்:

  1. ஒரு சிறப்பான சுற்றுலா.   ரசித்து ரசித்து நிறைய படம் எடுத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //ரசித்து ரசித்து நிறைய படம் எடுத்திருக்கிறீர்கள்//
      இன்னும் நிறைய எடுத்தேன் . எல்லாம் போடவில்லை.

      நீக்கு
  2. அந்தப் பாலத்தில் என்ன விசேஷம் என்று சொல்லி இருக்கலாம்.  அங்கிருந்து சுற்றிலும் தெரியும் மலைகள் அழகு.    மாலியின் மேல் ஆந்தை போல...  ஆமாம், அப்படித்தான் இருக்கிறது.  அதற்கு அடுத்த மூன்றாவது படம் கும்பாபிஷேகம் நடக்கும் சிறு கோவில் போல இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் பாலத்தின் சிறப்பு கேட்டதால் மீண்டும் ஒரு படம் கூகுளிலிருந்து போட்டு இருக்கிறேன் பாருங்கள். வனப்பகுதியாக , மலை பகுதியாக இருந்தது அந்த பகுதி. இரண்டு மலைகளுக்கு இடையில் அந்த பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. பாலத்தில் இருந்து பார்த்தால் சுற்றி வர நான் எடுத்த மலைகளைப் பார்க்கலாம்.
      https://www.youtube.com/watch?v=Y-XSocrI7uc இந்த காணொளி பாருங்கள் மிக சின்ன காணொளிதான் இதன் அழகு முழுமையாக தெரியும்.
      மலையை பற்றிய உங்கள் கருத்துக்கள் அருமை.

      நீக்கு
    2. அம்மாடி..  இந்தக் காணொளியில் பாலத்தின் சிறப்பு தெரிகிறது.  முதுகுத்தண்டு சிலீர் என்கிறது!

      நீக்கு
    3. பார்த்து விட்டீர்களா! நம்மால் இந்த அளவு எடுக்க முடியாது.

      இந்த காணொளியும் போட்டு இருக்கலாம் நிறைய காணொளி என்றால் பார்க்க சிரமம் என்று போடவில்லை.

      நீக்கு
    4. காணொளி இணைத்து விட்டேன் ஸ்ரீராம்.

      நீக்கு
  3. மலைவீட்டில் கதவு - நம் கோவில் சிற்பங்கள் வைக்க இடம் செதுக்கி இருப்பர்களே அதுபோல இருக்கிறது! அடுத்த படத்தில் பூனையின் முகம் என்பதைவிட குழந்தையின் முகம் போல இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மலைவீட்டில் கதவு - நம் கோவில் சிற்பங்கள் வைக்க இடம் செதுக்கி இருப்பர்களே அதுபோல இருக்கிறது!//

      ஓ! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி தெரிவதுதான் மலையின் அதியசம்.

      //பூனையின் முகம் என்பதைவிட குழந்தையின் முகம் போல இருக்கிறது.//

      மீண்டும் பார்த்தேன் குழந்தை முகம் தெரிகிறதா என்று. முதலில் ஒன்று நினைத்து விட்டதால் காட்சியில் அதுவே வருகிறது.

      நீக்கு
  4. மற்ற படங்களும் சுவாரஸ்யம்.  இரண்டு காணொளிகளும் பார்த்து ரசித்தேன். அந்த மரத்தில் அபப்டி என்ன அமானுஷ்யம்?  அந்தக் கண் போல தெரிவதினாலா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விட்டலாச்சாரியா படத்தில் மரங்கள் நடந்து பயமுறுத்தும் மரத்தில் இப்படி அதன் உடல்பாகத்தில் சின்ன சின்ன கண் போல இருக்கும் சிறு வயதில் பார்த்து பயந்து இருக்கிறேன். அது நினைவுக்கு வந்தது.
      படங்களை, காணொளிகளை ரசித்துப் பார்த்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  5. அழகான படங்கள். கேள்விப்படாத இடங்கள். மரங்கள், மலைகள், அது சார்ந்த இடங்கள், சின்னஞ்சிறிய நீர்வீழ்ச்சி எல்லாம் அழகு. நன்கு ரசனையோடு எடுக்கப்பட்ட படம். எனக்கு மலையில் திருமால் பள்ளி கொண்டிருப்பது போல் தெரிகிறது. வலப்பக்கமாக! எப்போதும் போல் இல்லாமல் மாறாகப் படுத்துக் கொண்டு இடக்கையைத் தலைக்கு வைத்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //எனக்கு மலையில் திருமால் பள்ளி கொண்டிருப்பது போல் தெரிகிறது. வலப்பக்கமாக! எப்போதும் போல் இல்லாமல் மாறாகப் படுத்துக் கொண்டு இடக்கையைத் தலைக்கு வைத்திருக்கிறார்.//

      ஆஹா! ஸ்ரீரங்கம் திருமால் பள்ளி கொண்டு இருப்பது போல் இருக்கா!
      நானும் பார்த்து வணங்கி கொண்டேன்.

      நீக்கு
  6. பேரனும் நன்கு ரசித்து விளையாடி இருப்பான். காணொளிகள் இப்போது சரிவர வரலை. பின்னர் வந்து பார்க்கிறேன். அமானுஷ்ய மரம் பார்க்கவே அமானுஷ்யம். தமிழில் நெடுந்தொடர்கள் எடுக்கப் பயன்படும். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேரன் மிகவும் ரசித்து விளையாடினான். காணொளிகள் மெதுவாக பாருங்கள் சின்ன சின்ன காணொளிகள்தான்.

      //அமானுஷ்ய மரம் பார்க்கவே அமானுஷ்யம். தமிழில் நெடுந்தொடர்கள் எடுக்கப் பயன்படும். :)//

      நீங்கள் கதை எழுதிவிடுங்கள், நெடுந்தொடருக்கு. உங்களுக்கு இது போல திகில் தரும் படங்கள் பிடிக்கும் தானே!
      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  7. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரோபோ வந்துவிட்டது திடீரென! :(

    பதிலளிநீக்கு
  8. அழகான இடம்... வர்ணனை போலவே படங்களும் தெரிகின்றன... காணொளியும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      படங்களை, காணொளியை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  9. அழகான படங்கள் மலையின் நிறம் சிகப்பாக இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      செடானா முழுவதும் சிவப்பு மலைதான்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. அழகிய இயற்கை இடங்கள். மலைகள்,நீர்வீழ்ச்சி, மலைகளுக்கிடையே பாலம் என பதிவு முழுவதும் பார்க்க, படிக்க ஸ்வாரஸ்யமாக இருந்தது. நேரில் பார்த்திருக்கும் போது உங்களுக்கு இந்த இயற்கை காட்சிகள் இன்னமும் மனதிற்கு உற்சாகத்தை தந்திருக்கும் இல்லையா?

    சுற்றிலும் மலைகள் அவ்வளவு அற்புதமாக இருக்கின்றன. மலைகளில் இயற்கை செதுக்கிய சிற்பங்களில் பல உருவங்கள் தெரிகின்றன. படங்கள் ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்த்தேன். நீங்கள் சொன்ன அந்த மலை படம் பெரிதாக்காமல் பார்த்த போது ஒரு பெரிய ஓடமாகவும் (படகு) மக்கள் அதில் அமர்ந்திருப்பது போலும் தெரிந்தது. நீங்கள் சொன்ன உருவங்களும் அந்த மலைகளில் தெரிகிறது. அங்கு இருந்த பழமையான விவயாச கருவி படங்களையும், மற்ற விபரங்களையும் தந்ததற்கு நன்றி.

    நீங்கள் அழகாக எல்லா படங்களையும் எடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். வழுக்கும் பாறைகள் நமக்கு கொஞ்சம் கால் சரியாக ஊன்றவில்லை என்றால் கீழே விழுந்து விடுவோம் எனத் தோன்றுகிறது. அங்கு அடிக்கடி வந்து போகும் அவர்களுக்கு நன்றாக பழகி இருக்கும். உங்கள் பேரனும் அந்த குட்டி நீர் வீழ்ச்சியில் நன்றாக விளையாடி மகிழ்ந்தாரா?

    காணொளிகள் நன்றாக உள்ளது. நீங்கள் எடுத்த காணொளியும் அழகாக உள்ளது. அமானுஷ்ய மரம் என்று அந்த மரத்திற்கு ஏன் பெயர் வந்ததோ? அதனருகில் யாரும் செல்ல மாட்டார்கள் போலும்.. நீங்களும் எல்லா இடங்களையும் ரசித்துப் பார்த்து எங்களுக்கும் அழகான படங்களாகவும், விபரங்களாகவும் தந்துள்ளீர்கள். நானும் உங்களுடன் வந்தது போன்ற உணர்வைப் பெற்றேன்.

    அன்னையர் தின கேக் அழகாக உள்ளது. நீங்கள் வீட்டுக்கு திரும்பும் போது மரங்களின் அணிவகுப்பாக எடுத்த படமும் அழகாக உள்ளது. அழகான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமையாக உள்ளது. அழகிய இயற்கை இடங்கள். மலைகள்,நீர்வீழ்ச்சி, மலைகளு//

      நன்றி.

      //இந்த இயற்கை காட்சிகள் இன்னமும் மனதிற்கு உற்சாகத்தை தந்திருக்கும்
      இல்லையா?//

      உண்மை. மக்களைப் பார்க்காமல் பார்த்தது உற்சாகம், அவர்களின் ஆனந்த கூக்குரல் இன்னும் மகிச்சியை தந்தது.

      //ஒரு பெரிய ஓடமாகவும் (படகு) மக்கள் அதில் அமர்ந்திருப்பது போலும் தெரிந்தது//

      ஓ! அருமை.

      //நீங்கள் அழகாக எல்லா படங்களையும் எடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். வழுக்கும் பாறைகள் நமக்கு கொஞ்சம் கால் சரியாக ஊன்றவில்லை என்றால் கீழே விழுந்து விடுவோம் எனத் தோன்றுகிறது.//

      உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

      வழுக்கு பாறைகள் கீழே விழ செய்கிறது. நிறைய பேர் விழுந்து சிரிப்புடன் எழுந்து போனார்கள். குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடி களித்தார்கள்.

      //உங்கள் பேரனும் அந்த குட்டி நீர் வீழ்ச்சியில் நன்றாக விளையாடி மகிழ்ந்தாரா?//

      ஓரமாக நின்று விளையாடினான்.

      //காணொளிகள் நன்றாக உள்ளது. நீங்கள் எடுத்த காணொளியும் அழகாக உள்ளது. அமானுஷ்ய மரம் என்று அந்த மரத்திற்கு ஏன் பெயர் வந்ததோ?//

      காணொளிகளை கண்டது மகிழ்ச்சி.
      அமானுஷ்ய மரம் என்று நான் தான் பேர் வைத்தேன். அவர்கள் வைத்த பேர் படிக்கவில்லை, பக்கத்தில் போய் பார்த்தால் தெரியும் பேர்.


      //அழகான படங்களாகவும், விபரங்களாகவும் தந்துள்ளீர்கள். நானும் உங்களுடன் வந்தது போன்ற உணர்வைப் பெற்றேன்.//
      அனைத்தையும் ரசித்துப்பார்த்து அருமையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

      கமலா.


      நீக்கு
  11. கோமதிக்கா முதலில் நீரோடை, சிறிய நீர்வீழ்ச்சி கண்ணில் பட்டு விட்டதால் அதைத்தான் பார்த்து பார்த்து ரசித்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு நீரோடைகள், அருவிகள் என்றால் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். உடனே இறங்க நினைப்பேன். இந்த நீரோடை நீர் வீழ்வது செம அழகு. நான் வந்திருந்தால் கண்டிப்பாக இறங்கியிருப்பேன். ஹாஹாஹாஹா

    அமெரிக்காவில் நம்மூர் போல் நீர்வீழ்ச்சியில் நீரோடைகளில் இறங்க அனுமதி இல்லை, இப்படிக் குளித்து விளையாட அனுமதி இல்லை என்று நினைத்தேன். ஆனால் அனுமதித்திருக்காங்களே.

    நம்மூர் மக்கள் என்றால் எண்ணை, ஷாம்பூ சோப்பு துணி அலசல் என்று எல்லாம் செய்திருப்பாங்க. பாருங்க என்ன சுத்தமா இருக்கு எல்லாமே.

    இங்கு நாங்கள் எந்த நீர்வீழ்ச்சி ஆறு, ஓஒடைகள் என்று போனாலும் சோப்பு ஷாம்பு எதுவும் பயன்படுத்தால்தான் குளிப்போம். விளையாடுவது.

    ரொம்ப ரசித்தேன். பேரனும் விளையாடியது சூப்பர்...நல்லா மகிழ்ச்சியா விளையாடியிருப்பார்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழக வளமுடன்

      //எனக்கு நீரோடைகள், அருவிகள் என்றால் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். உடனே இறங்க நினைப்பேன். இந்த நீரோடை நீர் வீழ்வது செம அழகு. நான் வந்திருந்தால் கண்டிப்பாக இறங்கியிருப்பேன். ஹாஹாஹாஹா//

      எனக்கும் பிடிக்கும்.அந்த இடம் போவாதாக முன்பே திட்டம் போட்டு இருந்தால் எல்லோரும் வேறு உடை கையோடு எடுத்து வந்து இருக்கலாம். அங்கு கூட்டமாக இருந்தால் டிக்கட் கிடைக்காது என்றான் மகன் . இரண்டு மூன்று தடவை நினைத்து டிக்கட் கிடைக்காத காரணத்தால் பார்க்கவில்லை என்றான்.

      இந்த முறை கிடைத்து விட்டது. பேரனுக்கு அங்கு உள்ள கடையில் கால்சட்டை வாங்கினோம். மகனும் , பேரனும் மட்டும் நீரோடையில் விளையாடினார்கள்.

      //அமெரிக்காவில் நம்மூர் போல் நீர்வீழ்ச்சியில் நீரோடைகளில் இறங்க அனுமதி இல்லை, இப்படிக் குளித்து விளையாட அனுமதி இல்லை என்று நினைத்தேன். ஆனால் அனுமதித்திருக்காங்களே.//

      இங்கு இப்போது எல்லோரும் தடுப்பு ஊசி போட்டு விட்டார்கள், அதனால் மாஸ்க் கூட தேவையில்லை என்று சொல்லி விட்டார்கள்.

      குழந்தைகளுக்கு 12 வயது முடிந்தவுடன் ஊசி போடச் சொல்கிறார்கள்.

      //நம்மூர் மக்கள் என்றால் எண்ணை, ஷாம்பூ சோப்பு துணி அலசல் என்று எல்லாம் செய்திருப்பாங்க. பாருங்க என்ன சுத்தமா இருக்கு எல்லாமே.//

      ஆமாம்.


      //இங்கு நாங்கள் எந்த நீர்வீழ்ச்சி ஆறு, ஓஒடைகள் என்று போனாலும் சோப்பு ஷாம்பு எதுவும் பயன்படுத்தால்தான் குளிப்போம். விளையாடுவது.//

      அதுதான் நல்லது. அருவி அனைத்தையும் கழுவி களைந்து விடும் சோப் , ஷாம்பு வேண்டியது இல்லை, அருவியின் மருத்துவ குணங்கள் கிடைக்காமல் போய் விடும்.

      //ரொம்ப ரசித்தேன். பேரனும் விளையாடியது சூப்பர்...நல்லா மகிழ்ச்சியா விளையாடியிருப்பார்!!//
      நீங்கள் ரசித்தற்கு நன்றி, பேரனுக்கும் மகிழ்ச்சி வெளியே வரவே மனதில்லை.




      நீக்கு
  12. பால்ம், அதைச் சுற்றிய மலைகள், நீர்த்தேக்கம் எல்லாமே மிக மிக அழகாக இருக்கின்றன அக்கா.

    அருமையான இடம். இப்பாலத்தைப் போல எங்கள் ஊர்ப்பக்கம் தொட்டிப்பாலம் என்று மாத்தூர் எனும் இடத்தில் பரளி ஆற்றின் மேலே தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப் பாலமாகும். நடைபாதை யும் கூடவே தொட்டியும் ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்குத் தண்ணீர் போகும் தொட்டி வழியே சுற்றுப்பட்டு பல ஊர்களுக்கு பாசனத்திற்காக. அருமையான இடம் கோமதிக்கா. கூகுளில் தேடினால் படம் கிடைக்கும். பாத்தீங்கனா நேரில் போக ஆசைப்படுவீங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாகர்கோவிலில் இருக்கும் போது சிறு வயதில் பார்த்து இருக்கிறேன் கீதா.நாங்கள் அப்போது நாகர் கோவிலில் இருந்தோம். அப்பா அழைத்து சென்று இருக்கிறார்கள்.

      நம் நாட்டில்தான் மிக அழகான தொங்கு பாலங்கள், தொட்டி பாலம், மலைகளுக்கு இடையே பாலங்கள் என்று மிக அருமையான பாலங்கள் இருக்கே!

      நம் நாட்டில் பார்க்க எத்தனையோ அழகான இடங்கள் இருக்கிறது, பார்க்க கூடி வரும் இடங்களை இறைவன் அருளால் பார்க்கிறோம்.

      நீக்கு
  13. ஆந்தையார் போலத்தான் இருக்கிறார் மலையின் மேலே...

    இந்த மலை எப்படி தெரிகிறது உங்களுக்கு சொல்லுங்களேன்//

    நாயன்மார்கள் வரிசையாக இருப்பது போலவும், அந்த மலையின் பின்னே ஆஞ்சநேயர் கை கூப்பி இந்தப்பக்கம் ராமரைப் பார்த்து இருப்பது போலவும் டக்கென்று தோன்றியது..கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆந்தை தெரிகிறதா? மகிழ்ச்சி.

      //நாயன்மார்கள் வரிசையாக இருப்பது போலவும், அந்த மலையின் பின்னே ஆஞ்சநேயர் கை கூப்பி இந்தப்பக்கம் ராமரைப் பார்த்து இருப்பது போலவும் டக்கென்று தோன்றியது..கோமதிக்கா//

      ஆஹா! அருமை. அதுதான் ஒவ்வொருவர் பார்வையில் தோன்றுவதை சொல்லுங்கள் என்று கேட்டேன்

      நீக்கு
  14. வீடுகள் நிறைய இருக்கிறது இங்கு. பின்பிறம் மலைகள் வேறு வண்ணத்தில் இருக்கிறது.//

    மலைமேலும் வீடுகள் அடுக்கடுக்காக நம் ஊர் மலைப்பகுதியைப் பார்ப்பது போல இருக்கு..

    ஆமாம் பூனையார் தொப்பி போட்டது போல..

    கயிறு கட்டி இருக்கும் இடம் அந்தப் படம் செமையா இருக்கு அக்கா. ஹையொ நீர் நிலை அழகுதான்..அதுவும் மலைகள் சூழ்ந்து...

    காரிலிருந்து எடுத்த படமும் செமையா இருக்கு அக்கா.

    எல்லாம் ரொம்ப ரொம்ப ரசித்தேன்..

    உங்களுக்கு வெகு சிறப்பான அன்னையர்தினப் பரிசு. மகனுக்கும் எல்லோருக்கும் வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மலைமேலும் வீடுகள் அடுக்கடுக்காக நம் ஊர் மலைப்பகுதியைப் பார்ப்பது போல இருக்கு..//
      ஆமாம்.

      //ஆமாம் பூனையார் தொப்பி போட்டது போல..//
      தெரிகிறதா உங்களுக்கு! மகிழ்ச்சி.

      //கயிறு கட்டி இருக்கும் இடம் அந்தப் படம் செமையா இருக்கு அக்கா. ஹையொ நீர் நிலை அழகுதான்..அதுவும் மலைகள் சூழ்ந்து...//

      ஆமாம், கீதா.


      //உங்களுக்கு வெகு சிறப்பான அன்னையர்தினப் பரிசு. மகனுக்கும் எல்லோருக்கும் வாழ்த்துகள்!//

      அனைத்தையும் ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கும், வாழ்த்துக்கள் சொன்னதற்கும் நன்றி கீதா.



      நீக்கு
  15. படங்கள், தகவல்கள் என இந்தத் தொடர் பதிவு/பயணப் பதிவு முழுவதுமே வெகு சிறப்பும்மா. மிகவும் ரசிக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //படங்கள், தகவல்கள் என இந்தத் தொடர் பதிவு/பயணப் பதிவு முழுவதுமே வெகு சிறப்பும்மா. மிகவும் ரசிக்க முடிந்தது.//

      பயண்ப் பதிவு முழுவதும் உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
      நன்றி வெங்கட்.

      நீக்கு
  16. மிகவும் வித்தியாசமான படங்கள்! அந்த பாலத்தைப்பார்க்கையில் பயமாக இருக்கிறது! ஸ்ரீராம் சொல்வது சரியே!
    //மலையின் மேல் பகுதியில் ஆந்தையார் அமர்ந்து இருப்பது போன்ற தோற்றம்.//
    எனக்கென்னவோ பிள்ளையார் அமர்ந்திருப்பது போலத்தோன்றுகிறது!
    //பூனையார் தொப்பி போட்டுக் கொண்டு நிற்பது போன்ற தோற்றம்//
    கண் மூடிய பெண்ணின் சிலை போலத்தெரிகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்

      //மிகவும் வித்தியாசமான படங்கள்! அந்த பாலத்தைப்பார்க்கையில் பயமாக இருக்கிறது! ஸ்ரீராம் சொல்வது சரியே!//

      பாலம் உங்களை கவர்ந்து விட்டது அறிந்து மகிழ்ச்சி.


      //மலையின் மேல் பகுதியில் ஆந்தையார் அமர்ந்து இருப்பது போன்ற தோற்றம்.//
      எனக்கென்னவோ பிள்ளையார் அமர்ந்திருப்பது போலத்தோன்றுகிறது!//

      பிள்ளையார் தெரிந்தாரா? நல்லது.


      //பூனையார் தொப்பி போட்டுக் கொண்டு நிற்பது போன்ற தோற்றம்//
      கண் மூடிய பெண்ணின் சிலை போலத்தெரிகிறது!//

      ஓ! ஒவ்வொருவர் கண்ணுக்கு தெரியும் காட்சிகள் மிக அருமையாக இருக்கிறது.
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  17. அன்னையர் தினப் பரிசாக அமைந்த இனிய சுற்றுலா. இயற்கை எழில் மனதைக் கவருகின்றது. அருமையான படங்கள். மேகங்களைப் போல மலைகளிலும் பல உருவங்களைக் கற்பனை செய்ய முடிகின்றது.

    அமானுஷ்ய (?) மரத்தின் விவரம் வேர்ப்பகுதியில் பதித்திருப்பதை நீங்கள் குறிப்பிட்டதால் கவனிக்க முடிந்தது. நல்ல ஏற்பாடு. மலை வீடுகள் இருக்கக் கூடுமோ? வட்டப் பாறை சுரங்கப் பாதைகளை நினைவூட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

    //மேகங்களைப் போல மலைகளிலும் பல உருவங்களைக் கற்பனை செய்ய முடிகின்றது.//
    ஆமாம் ராமலக்ஷ்மி.


    //அமானுஷ்ய (?) மரத்தின் விவரம் வேர்ப்பகுதியில் பதித்திருப்பதை நீங்கள் குறிப்பிட்டதால் கவனிக்க முடிந்தது.//

    மரங்களின் பேர் இருந்தது. நான் என் கற்பனையில் அமானுஷ்ய மரம் என்றேன்.
    மலைகளில் வீடுகள் இருக்கிறது. முன்பு ஆப்பிள் பண்ணை அமைத்தவர்களின் வீடுகள் இருக்கிறது.
    வட்டப்பாறை சுரங்கப் பாதை போன்று காட்சி அளித்தது.

    உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  19. அன்பின் கோமதி மா. வாழ்க வளமுடன். பதிவு முழுவதையும் மீண்டும் பார்ககிறேன். மலைகளின் வித விதமான காட்சிகள். மலைகளுக்கு நடுவே பாலம்! அதிலிருந்து நீங்கள் எடுத்த படங்கள் என்று அனைத்துமே. மகிழ்வைத் தருகன்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      மெதுவாக பாருங்கள் நேரம் கிடைக்கும் போது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  20. பாலங்களின் படங்கள் மிக அருமை.
    பல கோணங்களில் படங்கள் எடுத்திருக்கிறீர்கள்.
    நல்ல உஷ்ணம் வரும் முன் போய் வந்திருக்கிறீர்கள்.
    நல்ல வேளை. இப்போது எல்லா இடங்களிலும் மழை கூட இல்லாமல்
    கொதிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாலங்களின் படங்கள் மிக அருமை.
      பல கோணங்களில் படங்கள் எடுத்திருக்கிறீர்கள்.//
      நன்றி அக்கா.

      //நல்ல உஷ்ணம் வரும் முன் போய் வந்திருக்கிறீர்கள்.
      நல்ல வேளை. இப்போது எல்லா இடங்களிலும் மழை கூட இல்லாமல்
      கொதிக்கிறது.//
      ஆமாம் அக்கா, இப்போது 7 மணிக்குத்தான் செடிக்கு தண்ணீர் விட தோட்டம் பக்கம் போகிறோம். அவ்வளவு வெயில். அனல் காற்று அடிக்கிறது. நடைபயிற்சி இல்லை மாலையில் 115 `F வெப்பம் தகிக்கிறது.

      நீக்கு
  21. மலைப்பாறைகளின் வடிவங்கள் ஆச்சரியப்
    படவைக்கின்றன.
    அனுமன் முகம், ரிஷபம் போல, இன்னும்
    சயனக்கோலம் என்று வித விதமாக இருக்கும்
    காட்சிகள். இயற்கையின் அருமை
    எல்லாவற்றையும் விட மிகப் பிடித்தது சின்னம் சிறு அருவிகளும்,
    அதில் ஆட்டம் போடும் சிறு குழந்தைகள்,

    பெரியவர்கள் எல்லாமே உற்சாகம்.

    தண்ணீர் தான் எத்தனை அருமை.
    நீங்கள் எடுத்திருக்கும் காணொளிகளும்
    மகிழ்ச்சி தருகின்றன.

    அன்னையர் தின கேக் பார்க்கவே அருமை.
    மருமகளுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலைப்பாறை வடிவங்கள் ஆச்ச்சியம் தந்தது உண்மை.

      //அனுமன் முகம், ரிஷபம் போல, இன்னும்
      சயனக்கோலம் என்று வித விதமாக இருக்கும்
      காட்சிகள். இயற்கையின் அருமை
      எல்லாவற்றையும் விட மிகப் பிடித்தது சின்னம் சிறு அருவிகளும்,
      அதில் ஆட்டம் போடும் சிறு குழந்தைகள்,//
      உங்களுக்கு தெரிந்த வடிவங்கள் அருமை.
      சிறியவர்களின் மகிழ்ச்சி பெரியவர்களுக்கு தொற்றிக் கொண்டு அவர்களும் விளையாடினார்கள் அதையெல்லாம் படம் எடுக்க வில்லை நான்.


      காணொளிகள் பார்த்தது மகிழ்ச்சி அடைந்தீர்களா மகிழ்ச்சி அக்கா.

      உங்கள் வாழ்த்துக்களை சொல்கிறேன் மருமகளிடம்.

      நீக்கு
  22. அமானுஷ்ய மரம்:)
    நல்ல பார்வை. கணுக்கள் வெட்டப் படும் போது
    வித விதமாகக் காட்சி யளிக்கும். நம் வீட்டு வேப்ப மரம், விளா மரம்
    இப்படித்தான் இருக்கும்.
    உங்கள் கற்பனை இனிமை அன்பு கோமதி மா.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்பனையை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி அக்கா
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  23. மிகவும் அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் மாதேவி , வாழ்க வளமுடன்
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு