என் கணவர் தொப்பி அணிந்து முன்னால் போகிறார்கள் இந்த படத்தில் . (2017ல் அமெரிக்கா வந்த போது எடுத்த படங்கள்)
எவ்வளவு சொகுசாக தந்தையின் தோளின் மேல் மகன், அவர் கரங்கள் தரும் பாதுகாப்பு ! தன் கையால் கழுத்தை கட்டி இருக்கும் மகனின் கைகள் பார்க்க பார்க்க மகிழ்ச்சி தரும்.
மகள் தந்தையின் தோளின் மேல் நம் ஊரிலும் திருவிழாக்களை காண தன் குழந்தைகளை தோளில் தூக்கி காட்டுவார்கள் தந்தைகள். அந்த படங்களை முன்பு பகிர்ந்து இருக்கிறேன். இந்த முறை வெளி நாட்டு தந்தைகள்.
அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
2015ல் ஜனவரி மாதம் கங்கை கொண்டசோழபுரம் போன போது.
என் மகன் எப்போதும் சிறு வயதில் அப்பா போடும் சட்டை போல் வேண்டும் என்பான். இருவருக்கும் ஒரே மாதிரி சட்டை எடுத்து தைக்க கொடுப்போம் தீபாவளிக்கு.
2015 ல் வந்து இருந்த போது தனக்கும் அப்பாவிற்கும் ஒரே மாதிரி சட்டை எடுத்து வந்தான் , அதை அடிக்கடி போட்டுக் கொள்வார்கள் ஆசையாக.
இரண்டு பேரும் பேசினால் காலம் நேரம் தெரியாது நிறைய விஷயங்கள் பேசுவார்கள். (கொடைக்கானல் போன போது)
தங்கை கணவரின் உறவினர் தன் நண்பர்களுடன். தோளில் குழந்தைகளை தூக்கி வைத்து இருக்கும் படம்
முகநூலில் வந்து இருந்தது, தந்தையர் தினத்திற்கு என்று எடுத்து வைத்தேன். தந்தைகளின் பெருமை சொல்ல வேண்டுமோ!
தந்தையின் தோளில் ஏறி இந்த உலகத்தைப் பார்க்காத குழந்தை ஏது? தந்தையின் தோளின் மீதும் முதுகில் உப்பு மூட்டை, யானை, குதிரை சவாரி செய்யாத குழந்தைகள் உண்டோ!
அலைபேசியில் எனக்கு நிறைய தந்தையர் தின வாழ்த்துக்கள் வந்தது அதில் இது எனக்கு பிடித்து இருந்தது.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------
பழைய நினைவுகளை படங்களோடு பகிர்ந்து கொள்வது மகிழ்வான விசயம்.
பதிலளிநீக்குதந்தையின் தோளில் ஏறி இந்த உலகத்தைப் பார்க்காத குழந்தை ஏது ?
சிலருக்கு இறைவன் இந்த துர்பாக்கியத்தை கொடுத்து இருப்பது வேதனையே...
எனது வாழ்த்துகளும்கூடி...
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குபழைய நினைவுகளை நினைத்துப்பார்ப்பதுதான் என் மகிழ்வான நேரமாக இருக்கிறது.
அதை அன்பான நம் நட்புகளுடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியே!
//தந்தையின் தோளில் ஏறி இந்த உலகத்தைப் பார்க்காத குழந்தை ஏது ?
சிலருக்கு இறைவன் இந்த துர்பாக்கியத்தை கொடுத்து இருப்பது வேதனையே...//
ஏன் இப்படி சொல்கிறீர்கள் ? புரியவில்லை.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
எனது குழந்தைகள் எனது தோளில் ஏறிப்போன அனுபவங்கள் இல்லையே...
நீக்குநீங்கள் வெளி நாட்டில் இருந்தீர்கள். இப்போது உங்கள் பேரக்குழந்தைகளை தோளில் ஏற்றி விளையாடுங்கள் . மகன் வீட்டுக்கு போய் கொஞ்ச நாள் இருந்து வாருங்கள் ஜி எல்லாம் நலமாகும். வரும் காலங்களை மகிழ்ச்சியாக பேரக்குழந்தைகளுடன் களித்து இருங்கள்.அப்போது மகனை ம்களை தோளில் சுமக்கவில்லை என்ற மனவேதனையை பேரக்குழந்தைகள் மூலம் மறந்து விடுங்கள்.
நீக்குநீங்களும் உங்கள் அப்பாவும் இருக்கும் படம் பொக்கிஷம், இல்லை? அப்போதெல்லாம் கேமிரா வைத்திருப்பப்பதே அபூர்வம். பெரும்பாலும் ஸ்டுடியோ சென்றுதான் படம் எடுப்பார்கள்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குஎன் அப்பா காமிரா வைத்து இருந்தார்கள் மிக அழகாய் படம் எடுத்துக் கொண்டே இருப்பார்கள். நிறைய ஆல்பம் வீட்டில் உண்டு.
என் கணவரிடம் காமிரா கிடையாது முன்பு என் குழந்தைகளை ஸ்டுடியோவிலிருந்து(மாயவரத்திலிருந்து) காமிராமேன் வந்து படம் எடுத்து விட்டு போவார் , அப்புறம் அவர் வரச்சொல்லும் நாளில் போய் வாங்கி வருவார்கள்.
மகள்தான் முதல் காமிரா வாங்கி தந்தாள், அப்புறம் மகன் வாங்கி தந்தான். சார் இதெல்லாம் ஆடம்பர செலவு என்று முதலில் வாங்கித் தரவில்லை, அப்புறம் அவர்களும் காமிரா வாங்கி தந்து இருக்கிறார்கள்.
உங்கள் அப்பாவின் கையெழுத்து அழகாக இருக்கிறது. ஆனால் என்ன எழுதி இருக்கிறார் என்று புரிந்துகொள்வது சற்று சிரமமாக இருக்கிறது.
பதிலளிநீக்குஅப்பா எழுதி இருப்பது ராமரைப் பற்றிய பாடல். பஜனை பாடல். அவர்கள் வாங்கும் ஆன்மீக புத்தங்களில் அவர்கள் இப்படி எழுதி வைத்துக் கொள்வார்கள். புத்தகம் வீட்டில் இருக்கிறது பார்த்து என்ன எழுதி வைத்து இருக்கிறார்கள் என்று படித்து சொல்கிறேன்.
நீக்குஅப்பா, அம்மா எழுதி தந்த பாடல்கள் உள்ள டையிரி ஜன்னலில் வைத்து இருந்தேன் மாயவரத்தில் ப்ரு முறை ஜப்பசி மாதம் 10 நாள் விடாமல் புயல் மழை இருந்தது அதில் சாரல் அடித்து அழிந்து விட்டது பாடல்கள் நிறைய எஞ்சியவை சில . என் கண்களிலும் மழைதான் சில நாள், இப்படி பார்க்காமல் விட்டு விட்டேனே! என்று.
ஒரு முறை
நீக்குஸாரும் உங்கள் மகனும் இருக்கும் படங்கள் அருமை. அதுவும் ஒரே மாதிரி சட்டை போட்டுக்கொண்டு... பேசிக்கொண்டு...
பதிலளிநீக்குதந்தை பற்றிய தேர்ந்தெடுத்த வாசகம் அருமை.
என் கணவரும், மகனும் ஒரே மாதிரி சட்டை போட்ட படம் முன்பும் போட்டு இருக்கிறேன். சொ சிறு வயதில் மாயவரத்தில் இரவு நேரம் வானத்தைப்பார்த்துக் கொண்டு நட்சத்திரங்களின் பேர்களை குழந்தைகளுக்கு சொல்வார்கள். என்னிடம் பேச்சு குறைவு குழந்தைகளிடம் நிறைய பேசுவார்கள்.
நீக்குவாசகம் பிடித்து இருந்தது அறிந்து மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
அன்பின் கோமதி வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅடே இதே தலைப்பில் அப்பா பற்றியே
எழுதினேன். தேவகோட்டைஜி சொன்னதும்
வந்து பார்த்தேன்.
சென்ற அப்பாக்களும் இன்றைய அப்பாக்களும்
நலமாக இருக்கட்டும்.
அப்பா பிள்ளை படங்கள் மிக அற்புதம் . அதுவும் தங்கள் குடும்பப்
படம் மிக அழகு..மாமனார், சார், மகன் ,பேரன்
தலைமுறைப்படமும் தாங்களும் அப்பா தோளில் இருக்கும் படமும் மிகச் சிறப்பு.
தங்கள் மகன் , சகோதரர்களுக்கு இனிய தந்தையர் தின வாழ்த்துகள்.
வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
நீக்கு//அடே இதே தலைப்பில் அப்பா பற்றியே
எழுதினேன். தேவகோட்டைஜி சொன்னதும்
வந்து பார்த்தேன்.//
அப்படியா அக்கா நீங்களும் பதிவு போட்டு இருக்கிறீர்களா ? மகிழ்ச்சி. வருகிறேன். அக்கா, தங்கை இல்லையா ! இருவருக்கும் ஒத்த கருத்துக்கள் இருப்பதில் ஆச்சிரியம் இல்லை.
எல்லா அப்பாக்களுக்கும் நலமாக இருகட்டும் அதுதானே நமக்கு வேண்டும்.
//படம் மிக அழகு..மாமனார், சார், மகன் ,பேரன்
தலைமுறைப்படமும் தாங்களும் அப்பா தோளில் இருக்கும் படமும் மிகச் சிறப்பு.//
பேரன் இன்று சொல்கிறான் இந்த படங்களை பார்த்து விட்டு பெரிய தாத்தா(கோவை தாத்தாவை பார்த்து விட்டேன்) மதுரை தாத்தா இருவரையும் பார்க்கவில்லை என்ன அவசரம் நான் பிறப்பதற்கு முன் போய் விட்டார்கள் சாமியிடம்? நான் பிறக்கும் வரை இருந்து இருக்கலாம் என்கிறான். (மருமகளின் அப்பா, மற்றும் என் அப்பாவை சொல்கிறான்) எத்தனை வயதானலும் அப்பா, அம்மா என்றால் தேடல் இருக்கிறது நம்மிடம்.
உங்கள் வாழ்த்துக்களை சொல்லி விடுகிறேன்.
என் அப்பான் படத்தை வீட்டியோ ஒன்று செய்தான் மகன் அதை தனியாக இன்னொரு நாள் போடுகிறேன். அந்த வீடியோவை தம்பி தங்கைகளுக்கு அனுப்பி வைத்தேன் அவர்களுக்கு மிகவும் ஆனந்தம். அப்பாவை நேரில் பார்ப்பது போல் இருக்கிறது அப்பா சிரிப்பது அழகு என்றார்கள். அவர்கள் எல்லாம் சின்னவர்கள் அப்பா இறைவனிடம் செல்லும் போது.
உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.
ரேவதியும் இதே தலைப்பில் எழுதி இருக்கிறார்கள். உங்கள் குடும்பத்து நாலு தலைமுறையையும் ஒரே இடத்தில் காண மகிழ்ச்சி. உங்கள் கணவரும் இருந்திருந்தால் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடி இருக்கும். கொடுத்து வைக்கவில்லை. தந்தை, மகன் இருவரும் ஒரே மாதிரி ஆடை அணிந்து இருப்பதும் பார்க்க மனதுக்கு நிறைவு. எங்க பையரும் அதிகம் அவர் அப்பாவுடன் தான் பேசுவார். பெண் தான் என்னிடம் மணிக்கணக்காய்ப் பேசுவாள். அனைத்துப் படங்களும் அருமை. அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குவல்லி அக்காவிற்கு தேவகோட்டை ஜி இந்த தலைப்பில் நான் எழுதி இருப்பதை சொன்னர்களாம். மனது சில நேரம் ஒரே மாதிரி சிந்திக்கும் எனக்கும் அக்காவிற்கும்.
//உங்கள் கணவரும் இருந்திருந்தால் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடி இருக்கும். கொடுத்து வைக்கவில்லை.//
ஆமாம் கீதா , கொடுத்து வைத்து இருந்த வரை அனுபவித்தாகி விட்டது. இருக்கும் நாள்களில் அந்த மகிழ்ச்சிகளை அசை போட்டு மகிழ்வாக வாழ முயற்சிக்க வேண்டும்.
அவர்கள் இருக்கும் போது தந்தையர் தின பரிசுகள் பிள்ளைகள் இருவரும் அனுப்புவார்கள் மகிழ்ந்து போவார்கள். நம் காலத்தில் இப்படி இல்லை பரிசு பொருட்கள் அப்பாவுக்கு கொடுத்தது இல்லை என்பார்கள். தன் அப்பாவைப்பற்றி அவர்களின் குணநலன்களை அந்த சமயம் பேசி மகிழ்வார்கள்.
தந்தையர் தின வாழ்த்துக்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
உங்கள் அப்பா அச்சு அசப்பில் டைரக்டர் ஸ்ரீதர் மாதிரியே இருக்கிறார்.
பதிலளிநீக்குJayakumar
வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
நீக்குநீங்கள் சொல்வது சரிதான், நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
அப்பா தினத்திற்கான பதிவும் படங்களும் அருமை கோமதிக்கா.
பதிலளிநீக்குஒரு சில மகன்களே அப்பாவோடு நன்றாகப் பேசி மகிழ்வார்கள். மிகவும் நெருக்கமாகப் பழகுவார்கள். உங்கள் மகனும் அவர் அப்பாவும் சேர்ந்து இருக்கும் படங்கள் மனதை நெகிழச் செய்தது.
நல்லதொரு புரிதல்..அன்பு...
கீதா
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
நீக்குஅப்பாவும் மகனும் பேச ஆரம்பித்தால் நாம் பேசுவது காதில் விழாது, நாம் குறுக்கே கேள்விகள் கேட்டாலும் பிடிக்காது இருவருக்கும். தொந்திரவு இல்லாமல் பேச வேண்டும்.
இருவரும் நல்ல நண்பர்கள். மகன் சொல்வான் ஒரு போது அப்பா எனக்கு அட்வைஸ் செய்தது இல்லை என்று. நீங்கள் சொல்வது போல் நல்ல புரிதல் இருந்தது இருவரிடமும்.
மகன் மகள் இருவரும் வெகு தூரத்தில் போய் வசிப்பது கொஞ்சம் வருத்தம் இருந்தது ஆனாலும் அவர்களிடம் காட்டிக் கொள்ள மாட்டார்கள்.
கோமதிக்கா நீனள் உங்கள் அப்பாவைப் போலவே இருக்கீங்க. மகன் உங்கள் சாயலில்..
பதிலளிநீக்குஅப்பா மகன் உறவு ரொம்ப மகிழ்வான விஷயம். ஒரே போல சட்டை சேர்ந்து அமர்ந்து பேசுவது எல்லாம் வாவ் போட வைத்தது. இது கண்டிப்பாக இறைவனின் அருள் ப்ளஸ் மாமா மகனிடம் காட்டிய அன்பு, புரிதல் வளர்ப்பு என்று பலதும்....இறைவன் அருள் கண்டிப்பாகக் கிடைக்கும்.
ரசித்தேன் கோமதிக்கா.
கீதா
//கோமதிக்கா நீனள் உங்கள் அப்பாவைப் போலவே இருக்கீங்க. மகன் உங்கள் சாயலில்..//
நீக்குநீங்கள் சொல்வது போல்தான் பலரும் சொல்வார்கள்.
//இது கண்டிப்பாக இறைவனின் அருள் ப்ளஸ் மாமா மகனிடம் காட்டிய அன்பு, புரிதல் வளர்ப்பு என்று பலதும்....இறைவன் அருள் கண்டிப்பாகக் கிடைக்கும்.//
இது போதும் கீதா. இறை ஆசியும் அப்பாவின் ஆசியும் குழந்தைகளை வழி நடத்தி செல்ல வேண்டும்.
பதிவை ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.
தந்தையர் தினத்திற்கான பதிவும் படங்களும் அருமை
பதிலளிநீக்குவணக்கம் மதுரை தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குஅன்பான மகளின் தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.
பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
கோமதிக்கா உங்கள் அப்பாவின் இரு கையெழுத்துகளும் பொக்கிஷம். நன்றாக இருக்கிறது. கையெழுத்தை விட நம் அன்புதான் அதைப் பார்க்கும் போது நமக்கு ஏற்படும் பரவசம் அதுதான் அங்கு.
பதிலளிநீக்குகீதா
மீண்டும் வந்து அப்பாவின் கையெழுத்தை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி. அப்பாவின் கடிதங்கள் வைத்து இருக்கிறேன் கீதா.
நீக்குஅன்பு நாலுனாளுக்கு ஒரு தடவை கடிதம் எழுது அம்மா எதிர்பார்க்கிறாள் அதுதான் கடைசியில் முத்தாய்ப்பாக இருக்கும் . அம்மா என்றால் அன்பு என்று குழந்தைகள் சொல்லும் காலத்தில் அப்பா என்றால் அன்பு என்று சொன்னவள் நான்.
கல்யாணம் ஆனபுதிதில் எதற்கு எடுத்தாலும் "என் அப்பா அப்பா" என்று சொல்லி அவர்களை எரிச்சல் படுத்தி இருக்கிறேன்.
அப்பாவின் எழுத்துக்கள் நீங்கள் சொல்வது போல் பரவசம்தான்.
மிகவும் நன்றி கீதா மீள் வரவுக்கு.
அந்த காலத்துப் படங்கள் தான் எத்தனை எத்தனை அழகு... மனிதர் தம் முகங்களில் தான் எத்தனை தெளிவு - அடுத்தது காட்டும் பளிங்கு போல!..
பதிலளிநீக்குவணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குகறுப்பு வெள்ளை படங்கள் எப்போதும் அழகுதான்.
//மனிதர் தம் முகங்களில் தான் எத்தனை தெளிவு - அடுத்தது காட்டும் பளிங்கு
போல!..//
அப்பாவின் நண்பர்களும் அப்பாவை போன்ற தனமை உடையவர்கள்தான்.
அப்பாவின் நினைவுகளுடன் இனிய பதிவு.. மனம் நெகிழ்கின்றது..
பதிலளிநீக்குஅப்பாவை நினைக்கும் போதெல்லாம் மனம் நெகிழ்ந்துதான் போகும் . அப்பா எல்லோர் வாழ்க்கையிலும் ஒளி ஏற்றியவர்கள் அல்லவா!
நீக்குநம்மையும் வளர்த்தெடுத்த வேளையில் நமது எதிர் காலம் குறித்து எப்படியெல்லாம் அந்த
பதிலளிநீக்குஅந்த ஆத்மாக்கள் கவலைப்பட்டனவோ!..
எவ்விதத்தில் கைமாறு செய்யப் போகின்றோம்!..
அப்பாக்களுக்கு கைமாறு என்றும் அவர்கள் நினைவை போற்றுவது தான். எப்போதும் அவர்கள் ஆசியில்தான் வாழ்கிறோம்.
நீக்குதங்களது பதிவுகள் சிலவற்றுக்கு வர இயலவில்லை.. மன்னிக்கவும்..
பதிலளிநீக்குபரவாயில்லை, உடல் நிலை இப்போது பூரண நலம் பெற்று விட்டது இல்லையா?
நீக்குநேரம் கிடைக்கும் போது வாருங்கள். நான் வாரம் ஒரு பதிவு போடுகிறேன், சில நேரம் வெகு நாட்கள் ஆகிறது. மனம் ஒன்ற வேண்டும். தோட்டத்திற்கு வந்த பற்வைகள் என்னை பதிவு போடு எங்களை மறந்து விட்டாயா என்கிறது விரைவில் போடுவதாகச் சொல்லி இருக்கிறேன். முடிந்த போது பதிவை வந்து பாருங்கள்.
இந்த பதிவுக்கு வந்து கருத்துக்கள் கொடுத்தற்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. தந்தையர் தினத்திற்கு அழகான படங்களை தந்து பதிவாக்கிய விதங்கள் அருமையாக உள்ளது.
உங்கள் தந்தையுடன் நீங்கள் இருக்கும் படம், உங்கள் தந்தையின் கையெழுத்து படம், உங்கள் கணவரும் மகனும், ஆசைப்பட்டு ஒரே மாதிரி உடையணிந்து இருக்கும்/பேசி மகிழும் படங்கள் என உங்கள் மலரும் நினைவுகளை நீங்கள் பொக்கிஷமாக பாதுகாத்து பகிர்ந்தது கண்டு மிகவும் மகிழ்வடைகிறேன். இந்த நினைவுகள் தரும் இன்பமே நமக்கு அலாதியானதுதான்.
பெற்றவர்களின் நினைவுகள், அவர்கள் நம்மிடம் காட்டிய பாசங்கள் நாம் இருக்கும் வரை உடன் வருவது. அவர்களை அன்புடன் நினைவு வைத்து நாம் தினமும் மானசீகமாக அவர்களுடன் வாழ்வதும் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன்கள். அவர்களும் எங்கிருந்தாலும் நம் நலனுக்காக மனதாற வாழ்த்துவார்கள். அந்த இனிமையான நினைவுகளே நம் வாழ்வில் நாம் நிம்மதியாக வாழ நமக்கு கிடைக்கும் எனர்ஜி டானிக்.
நீங்கள் பகிர்ந்த படங்கள் அனைத்துமே நன்றாக உள்ளன. நீங்கள் பகிர்ந்த தந்தையர் தின வாசகமும் நன்றாக உள்ளது. உண்மைதான்... ஆழ்ந்த வரிகள். தந்தையின் ஆழ் மனது பாசம் எப்போதும் கண்களுக்கு தெரிவதில்லை.
உங்கள் அன்பான மகனுக்கும், வருங்காலத்தில் சிறந்த தந்தையாக தன் குழந்தைகளை வளர்க்கப் போகும் உங்கள் பேரனுக்கும் என் தந்தையர் தின வாழ்த்துகளை கூறி விடுங்கள். இனிமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்கு//பதிவு அருமையாக உள்ளது. தந்தையர் தினத்திற்கு அழகான படங்களை தந்து பதிவாக்கிய விதங்கள் அருமையாக உள்ளது.//
நன்றி.
//உங்கள் மலரும் நினைவுகளை நீங்கள் பொக்கிஷமாக பாதுகாத்து பகிர்ந்தது கண்டு மிகவும் மகிழ்வடைகிறேன். இந்த நினைவுகள் தரும் இன்பமே நமக்கு அலாதியானதுதான்.//
ஆமாம் கமலா , சரியாக சொன்னீர்கள் நினைவுகள் தரும் இன்பம் அலாதியானதுதான்.
//பெற்றவர்களின் நினைவுகள், அவர்கள் நம்மிடம் காட்டிய பாசங்கள் நாம் இருக்கும் வரை உடன் வருவது. அவர்களை அன்புடன் நினைவு வைத்து நாம் தினமும் மானசீகமாக அவர்களுடன் வாழ்வதும் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன்கள். அவர்களும் எங்கிருந்தாலும் நம் நலனுக்காக மனதாற வாழ்த்துவார்கள். அந்த இனிமையான நினைவுகளே நம் வாழ்வில் நாம் நிம்மதியாக வாழ நமக்கு கிடைக்கும் எனர்ஜி டானிக்.//
ஆமாம் கமலா, உண்மைதான் நீங்கள் சொல்வது.நாம் இருக்கும் வரை நினைவுகள் உடன் வரும், வரவேண்டும் அதுதான் மகிழ்ச்சி. மானசீகமாக வாழ்வதும் அவர்களுக்கு செலுத்தும் நன்றி கடன் தான்.நினைவுகள் வாழ உதவும் எனர்ஜி டானிக் தான்.
என் அப்பாவின் அன்பு வெளிப்படையாக தெரியும் சிரிக்கும் போது கண்களும் சிரிக்கும் கண்ணில் ஓரத்தில் சிறு நீர் துளிர்க்க சிரிப்பார்கள்.உடல் குலுங்க சிரித்து தன் மகிழ்ச்சியை மற்றவர்களுக்கு தொற்ற செய்வார்கள். தன் வருத்தங்களை வெளி காட்டியதே இல்லை ஒரு போதும்.
//உங்கள் அன்பான மகனுக்கும், வருங்காலத்தில் சிறந்த தந்தையாக தன் குழந்தைகளை வளர்க்கப் போகும் உங்கள் பேரனுக்கும் என் தந்தையர் தின வாழ்த்துகளை கூறி விடுங்கள். இனிமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.//
உங்களை போன்ற அன்பானவர்கள் கொடுக்கும் வாழ்த்துக்களுக்கு மகன் , பேரன் கொடுத்து வைத்தவர்கள். வாழ்த்துக்களை சொல்லி விடுகிறேன்.
உங்கள் அன்பான விரிவான கருத்துக்கு நன்றி.
இனிமையான நினைவுகள் அம்மா...
பதிலளிநீக்குதந்தையர் தின வாழ்த்துகள்...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குஆமாம் தனபாலன் இனிமையான நினைவுகள்தான்.
தந்தையர் தின வாழ்த்துக்களுக்கு நன்றி.
அருமையாக பகிர்ந்துள்ளீர்கள். அழகிய படங்கள்.
பதிலளிநீக்குஅப்பாவின் நினைவுகள் மறக்க முடியாதவை.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குஆமாம் மாதேவி , அப்பாவின் நினைவுகள் என்றும் மறக்க முடியாதுதான்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
மிக அழகிய நினைவலைகள் கோமதி அக்கா.. அழகாகத் தொகுத்துப் போட்டிருக்கிறீங்கள்.
பதிலளிநீக்குஉங்கட அப்பாவின் ஆங்கில கை எழுத்து மிக மிக அழகு.
நீங்கள் உங்கள் அப்பா போலவே இருக்கிறீங்கள்... எல்லாமே நேற்று நடந்ததுபோல மனதில இருக்குது, ஆனா காலம் எங்கோ போய் விட்டது....
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
நீக்குநினைவலைகளின் தொகுப்பு பிடித்து இருப்பது மகிழ்ச்சி அதிரா.
//உங்கட அப்பாவின் ஆங்கில கை எழுத்து மிக மிக அழகு.//
ஆமாம் அதிரா அழகாய் எழுதுவார்கள் அழகாய் பேசுவார்கள்.
//நீங்கள் உங்கள் அப்பா போலவே இருக்கிறீங்கள்...//
அப்பாவின் ஜாடை இருக்கிறேன், உயரம் இல்லை நான்.
//எல்லாமே நேற்று நடந்ததுபோல மனதில இருக்குது, ஆனா காலம் எங்கோ போய் விட்டது....//
ஆமாம் அதிரா, காலம் யாருக்காவும் காத்து இருப்பது இல்லை, ஓடுகிறது.
போன் பதிவை படித்து விட்டீர்களா?
உங்கள் கருத்துக்கு நன்றி.
தந்தையர் தினத்திற்கான பதிவு சிறப்பு. படங்களும் அழகு.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ். வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
மலரும் நினைவுகளுடன் தந்தையர் தினத்திற்கு சிறப்பான பகிர்வு. தந்தையுடன் தாங்கள் இருக்கும் படமும், சாரும் மகனும் ஒரே மாதிரி சட்டை அணிந்திருக்கும் படமும் குறிப்பாக மிக அருமை.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குமலரும் நினைவுகளை படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.