வியாழன், 10 ஜூன், 2021

மலைப் பாதை பறவைகளும், மலர்களும்பெல்ராக் மலைப்பாதையில்   சைக்கிளில் போக தயார் நிலையில் நிற்கிறார்கள். 


அரிசோனாவில் "அன்னையர் தினத்தில்" சென்று வந்த இடங்களின் தொடர் பதிவு.  சென்ற பதிவு மலைதரிசனம்
தலைக்கவசம் அணிந்து பயணம்.  பாதையில் மரங்களின் வேர்களும், கற்களும் கிடக்கிறது. பாதுகாப்பு  தலைக்கவசம் அவசியம்தான்.

மலைக்கு பின் பகுதியில் பட்ட மரம் போல் இருக்கிறது அதில் சின்னக்குருவி
ஓங்கி வளர்ந்த பைன் மரத்தின் உச்சியில் அமர்ந்து இருக்கும் குருவி


பறவையின் மேல் பகுதி இறகு நீலவண்ணத்தில் இருக்கிறது
எங்களுக்கு பிடித்த மரம் என்று சொல்கிறதோ!

கரிச்சான் குருவியும் , இன்னொரு வகை குருவியும்

சூரிய ஒளியில் கரிச்சான் குருவியின் உடல் பள பள வென்று  மின்னுகிறது
ஒவ்வொரு  மரத்திலும் பறந்து பறந்து அமர்ந்த கரிச்சான்
கரிச்சான் குருவி என்றுதான் நினைக்கிறேன்
காற்றில் அதன் தலைமுடி பறக்கிறது
பைன் மரத்தில் கலர்க் குருவி


 காய்ந்த மரக்கிளையில் மஞ்சள் குருவி 

உச்சியில் கொண்டையுடன் ஒரு  குருவி
 பைன்மரத்தின் காய் பறவை போல் தோற்றம் கொடுத்து ஏமாற்றியது என்னை.
பைன் மரத்தில் தேன் சிட்டு அமர்ந்து இருந்தது,  ஜூம் செய்யும் போது  பறந்து விட்டது


இரண்டு Quail   பறவைகள் இந்த மரத்திற்கு கீழ் புதரில் கூடு கட்டி இருந்தது போல! உள்ளே போய் வந்து கொண்டு இருந்தது. படம்  எடுக்கலாம் என்று நினைத்த போது ஒன்று புதருக்குள் போய் விட்டது, ஒன்று மரத்தில் அமர்ந்தது.

பறவைகளை தேடித் தேடி படம் எடுப்பது மகிழ்ச்சியை தந்தது எனக்கு. அதன் ஒலிகள் மேலும் மகிழ்ச்சியாக இருந்தது.
பெல்ராக் மலையில் இருவர் ஏறி நின்று இருந்தார்கள். மிகவும் ஓரமாக நின்று பேசிக் கொண்டு இருந்தார்கள். 

                        வெகு தூரத்திலிருந்து எடுத்த படம். 

மரங்களின் இடைவெளியே தெரியும் சூரிய ஒளி எப்போது மகிழ்ச்சி தரும் காட்சி எனக்கு

மலை அருகே போக இன்னும் நடக்க வேண்டும் போல் இருந்தது, காலை 11 மணிக்கே வெயில் ஆரம்பித்து விட்டது. அதனால் அங்கிருந்து கிளம்பி விட்டோம். காலை உணவாக தோசையை  தக்காளி சட்னி, மிளகாய் பொடியுடன் சாப்பிட்டு விட்டோம். மதியத்திற்கு புளியம்சாதம், தயிர் சாதம் செய்து எடுத்துக் கொண்டோம். (எல்லாம் மருமகள்தான் செய்தாள்)


மலைக்கு போகும் பாதை அருகே  குட்டியாக பூக்கும் ரோஜா  பூச்செடிகள் வைத்து இருந்தார்கள். அதில் குட்டி சிவப்பு ரோஜாவில் தேனீ தேன் அருந்துகிறது.

எங்களை  இங்கு அழைத்து அமரவைத்து  கவின் அன்னையர் தின பரிசுகள் கொடுத்தான், எனக்கும், மற்றும் அவன் அத்தை, அம்மாவுக்கும்.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பரிசு கொடுத்து மகிழ்வித்தான்.😍 🎉🎉🎉🎁🎁🎁😍😍


நமக்கு அன்பான ஆதரவான வார்த்தைகள் போதும். ஆனால் அவர்களுக்கு இப்படி பரிசு கொடுப்பதில் மகிழ்ச்சி. அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன்.


வரும் வழியில்  உணவு சாப்பிட  சென்ற இடம் அடுத்த பதிவில்.
இயற்கை வளம் நிறைந்த இடம். ரசித்து அங்கு அமர்ந்து உணவு உண்டு விட்டு மாலை வீடு வந்தோம்.


வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !
---------------------------------------------------------------------------------------------

42 கருத்துகள்:

 1. பறவைகளை அழகாக படம் எடுத்து இருக்கிறீர்கள்.

  கற்களுக்காகவும், முட்களுக்காகவும் தலைகவசம். நம்மூரில் பிரதான பெரிய சாலையில் சென்றாலே அணிய மறுக்கிறார்களே...


  தொடரகிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   //பறவைகளை அழகாக படம் எடுத்து இருக்கிறீர்கள்.//

   நன்றி.

   //நம்மூரில் பிரதான பெரிய சாலையில் சென்றாலே அணிய மறுக்கிறார்களே...//

   அணிந்தால் நல்லது.
   உங்கள் கருத்துக்கு நன்றி
   தொடர்வதற்கும் நன்றி.   நீக்கு
 2. சைக்கிளில் மலைப்பயணம்.   உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.  சைக்கிளுக்கு தலைக்கவசம் புதுசு என்றாலும் அவசியம்தான் என்று தெரிகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   இங்கு சாலையில் சைக்கிள் ஓட்டி செல்பவர்களும் தலைக்கவசம் அணிகிறார்கள்.
   மலை பாதை என்றால் மேலும் மிக அவசியம்.
   வீட்டுக்கு அருகில் சைக்கிள் ஓட்டி செல்லும் குழந்தைகளும் தலைக்கவசம் அணிந்துதான் செல்கிறார்கள்..

   நீக்கு
  2. @ஸ்ரீராம்: சைக்கிள் ஓட்டும்பொழுது தலைகவசம் அணிவது புதுசு இல்லை, நம் ஊரிலேயே இப்போது பெரும்பாலும் சிறுவர்கள் தலைக்கவசம் அணியாமல் சைக்கிள் ஓட்டுவது இல்லை.

   நீக்கு
  3. நம்மூரிலும் இப்போது தலைக்கவசம் அணிந்து சைக்கிள் ஓட்டுவது வந்து விட்டதுதான். தலை அடிபடாமல் பாதுகாப்பது மிகவும் முக்கியமாகி இருக்கிறது.

   நீக்கு
 3. சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் குருவியைப் பார்த்தால் ஏதோ கவிதை எழுத யோசித்துக் கொண்டிருப்பது போல தெரிகிறது!!  பைந் மரத்தின் காய் வித்தியாசமாய் இருக்கிறது.  நான் பறவைக்கூடு என்று நினைத்தேன்.

  பதிலளிநீக்கு
 4. மலையின்மீது இருவர்...  எப்படி அங்கு ஏறினார்கள் என்று யோசிக்க வைக்கும் படம்!  ஓரமாக நின்றிருப்பபது போல தோன்றினாலும் பத்திரமாகவே நின்றிருப்பார்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மலையின் மீது நடந்து செல்ல ,சைக்கிளில் செல்ல பாதை இருக்கிறது. பத்திரமாக நிற்பார்கள் நமக்கு பார்க்க பயமாக இருக்கிறது .

   நீக்கு
 5. கோமாச்சி!  பாட்டி பெயரோடு சேர்த்து நீட்டிவிட்டான் கவின்!  பரிசும் கொடுத்து அசத்தி இருப்பதும் நெகிழ்ச்சி, பாராட்டுக்குரிய செயல்.  அப்படிச் செய்யவேண்டும் என்று தோன்றி இருக்கிறதே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கோமாச்சி! பாட்டி பெயரோடு சேர்த்து நீட்டிவிட்டான் கவின்! //
   அப்படித்தான் அழைப்பான்.

   சும்மவே அடிக்கடி பரிசு பொருள் கொடுப்பது போல் விளையாடுவான். "சர்ப்ரைஸ் கிப்ட்" என்று.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. வெகு தூரத்திலிருந்து எடுத்த படம், தேனீ தேன் அருந்தும் படம் உட்பட, படங்கள் ஒவ்வொன்றும் ரசிக்க வைத்தன...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

   படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 7. மலை ஏறும் இளைஞர்கள் மனதை மகிழ்விக்கின்றனர். பாதுகாப்போடு செல்வது இன்னமும் நன்மையே! நம் ஊரில் தலைக்கவசம் அணிய மறுப்பவர்களே அதிகம். :( பேரனின் பரிசு அசத்துகிறது. நான் அங்கே இருக்கையில் பெண்ணின் பெண்கள் இருவரும் பலூனெல்லாம் வாங்கிக் கொண்டு வந்து சிவப்புச் செரிப் பழங்கள் உள்ள கேக் வாங்கிக் கொடுப்பார்கள். எனக்குக் கேக் ரொம்பப் பிடிக்கும் என்பதால்! ஸ்ட்ராபெரியிலும் சாக்லேட் வாங்குவார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

   //பாதுகாப்போடு செல்வது இன்னமும் நன்மையே! நம் ஊரில் தலைக்கவசம் அணிய மறுப்பவர்களே அதிகம்.//

   ஆமாம்.

   //பேரனின் பரிசு அசத்துகிறது//
   நன்றி.

   //நான் அங்கே இருக்கையில் பெண்ணின் பெண்கள் இருவரும் பலூனெல்லாம் வாங்கிக் கொண்டு வந்து சிவப்புச் செரிப் பழங்கள் உள்ள கேக் வாங்கிக் கொடுப்பார்கள். எனக்குக் கேக் ரொம்பப் பிடிக்கும் என்பதால்! ஸ்ட்ராபெரியிலும் சாக்லேட் வாங்குவார்கள்.//

   வருகிறது அடுத்த பதிவில் அன்னையர் தினத்திற்கு கேக் வெட்டியது.

   அழகான இடத்தில் கேக் வாங்கி வந்து மகிழ்வித்தார்கள்.இறைவன் அருளால் இந்த ஆண்டு அன்னையர் தினம் மகிழ்வாய் அமைந்து விட்டது, பல நினைவுகளுடன்.

   நீக்கு
 8. சாலையோரங்களில் இம்மாதிரிக் குட்டிக் குட்டி ரோஜாச்செடிகள் நெருக்கமாய்ப் புதர் போல் வளர்ந்திருக்கும். எங்க பெண் பூவைப் பறிக்காதே என்பாள். பையர் வீட்டுக்கு அருகே அரளிச்செடிகள் வேலி ஓரமாகக் காணக் கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //எங்க பெண் பூவைப் பறிக்காதே என்பாள். பையர் வீட்டுக்கு அருகே அரளிச்செடிகள் வேலி ஓரமாகக் காணக் கிடைக்கும்.//

   ஆமாம் இங்கு பேரனுக்கும் பறிக்க கூடாது செடியில் இருந்தால்தான் பூ அழகு என்பான்.
   மகன் வீட்டில் அரளி பூக்கள் மூன்று வண்ணத்தில் இருக்கிறது.
   வெளி நாட்டவர் வீட்டு வாசலில் அரளி செம்பருத்தி, தங்கபுஷ்பம் மலர்கள் மலர்ந்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 9. பறவைகள், இயற்கைக் காட்சிகள் படங்கள் மிக அழகு

  பேரனின் அன்பு...அவன் கொடுத்த பரிசில் தெரிந்தது.

  விளிம்பில் நிற்பது போலத் தெரிந்தாலும், நல்ல இடைவெளி இருக்கும்னு தோணுது. இருந்தாலும் காற்றடித்தால் ஆபத்துதான்.

  தோசை மிளகாய்ப்பொடி - ஆஹா அருமையான காம்பினேஷன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

   //பறவைகள், இயற்கைக் காட்சிகள் படங்கள் மிக அழகு//

   நன்றி.

   //விளிம்பில் நிற்பது போலத் தெரிந்தாலும், நல்ல இடைவெளி இருக்கும்னு தோணுது. இருந்தாலும் காற்றடித்தால் ஆபத்துதான்.//

   ஆமாம், காற்றடித்தால் ஆபத்துதான்.

   //தோசை மிளகாய்ப்பொடி - ஆஹா அருமையான காம்பினேஷன்.//

   ஆமாம் பஞ்சு போன்ற தோசைக்கு மிளகாய்ப்பொடி மிகவும் நன்றாக இருக்கும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.
   நீக்கு
 10. கோமதிக்கா படங்கள் எல்லாம் அட்டகாசம் போங்க வழக்கம் போல..

  தேன் சிட்டை நானும்ப் படம் பிடிக்க முயன்று முடிந்ததே இல்லை.

  நிறைய பறவைகள் எடுத்து வைத்திருக்கிறேன் ஆனால் பலதும் கேமராவில் கண்ணிற்கே தெரியாத நிலையில்...கேமரா ஜூம் செய்தாலும் அதன் திறன் அவ்வளவுதான். வீட்டருகில் இருக்கும் ஏரியில் எடுத்தவைதான்.

  எப்போது போடப் போகிறேனோ...பார்ப்போம்...சில பழுதடைந்த கணினியில் இருக்கிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
   தேன்சிட்டை தேன் குடிக்கும் போது, அமர்ந்து இருக்கும் போது படம் எடுத்து பதிந்து விட்டேன். இருந்தாலும் அந்த இடத்தில் எடுக்க ஆசை முடியாமல் போய் விட்டது.
   நீங்கள் எடுத்த படங்களை பதிவு போடுங்கள். முடிந்த போது.
   ஏரிக்கு நிறைய வகை பறவைகள் வருமே!
   எல்லாம் விரைவில் சரியாகும்.

   நீக்கு
 11. வித விதமான பறவைகள், கரிஞ்சான் குருவி தான் இல்லையா அது? இங்கும் இப்படி ஒரு குருவி வருகிறதி வாசலில் இருக்கும் மின்சார கம்பியில் அமர்ந்திருக்கும்...அதையும் எடுத்திருக்கிறேன் ஆனால் மிகச் சிறியதாக இருக்கு....

  பூக்களில் தேனி அழகு! பூக்களும்.

  ஹப்பா மலை உச்சியில் இருவர் எப்படி நிற்கிறார்கள்...ஒரு வேளை ஃபோட்டோவில் அது விளிம்பின் அருகில் போலத் தெரியுதாக இருக்கும் கோமதிக்கா...

  கீதா

  பதிலளிநீக்கு
 12. பைன் மரத்துக் காய்கள் வித்தியாசமாக இருக்கிறதே அக்கா ஒரு வேளை முதிர்ந்தவையோ இனிதான் பூ போன்று வருமோ? ...இங்கு நம் வீட்டில் ஊட்டியிலிருந்து எடுத்து வந்த பைன் மரப் பூக்கள்/காய்கள்? கூம்பாக இருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு பெட்டியில் இருக்கிறது...வெளியில் இல்லை.

  இது வித்தியாசமாக இருக்கு..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நியூஜெர்சியில் இருக்கும் போது கூம்பு வடிவில் நிறைய பைன் காய்களை சேகரித்து எடுத்து வண்ணம் தீட்டி கண்ணாடி பாட்டிலில் வைத்து இருக்கிறாள் மருமகள் அழகாய்.

   இது கிடை மட்டத்தில் இருந்தது.

   நீக்கு
 13. சைக்கிள் பயணம் நல்ல விஷயம்...அங்கெலலம் சைக்கிளுக்கும் தலைக்கவசம் உண்டு. இங்கு நம்மூரில் வண்டி ஓட்டினாலே போடுவதில்லை. அங்கு பாதுகாப்பு அம்சங்கள் வலுவான சட்டங்கள்...

  படங்கள் அனைத்தையும் மிகவும் ரசித்தேன் கோமதிக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காரில் பின் பக்கம் சைக்கிளை வைத்து கட்டிக் கொள்ள வசதி இருக்கிறது. சைக்கிளை எடுத்து வருவது இந்த மாதிரி இடங்களில் ஓட்டுவதற்குத்தான்.
   பாதுகாப்பு அம்சங்கள் சட்டங்கள் நல்லதுதான் இல்லையா?

   படங்களை ரசித்து கருத்துக்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா.

   நீக்கு
 14. பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 15. படங்கள் அனைத்துமே அழகு.

  கோமாச்சி! ஆஹா... அழகாக அழைத்திருக்கிறாரே கவின்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

   //கோமாச்சி! ஆஹா... அழகாக அழைத்திருக்கிறாரே கவின்.//

   ஆமாம் அழகாய் அழைப்பான்.
   தினம் "ஆச்சி வாழ்க்கை என்ன தெரியுமா? "என்று பாடுவான் என்னை பார்க்கும் பொழுதெல்லாம்.

   படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 16. வணக்கம் சகோதரி

  பதிவு அருமையாக உள்ளது. மலை பிரதேச காட்சிகள் நன்றாக உள்ளது. சூரியன் மரங்களுகிடையே ஒளி விட்டு பிரகாசிக்கும் இயற்கை காட்சிகள், மரங்களில் அமர்ந்து இயற்கையை ரசிக்கும் குருவி படங்கள் பூக்களின் படங்கள் அனைத்துமே அழகாக உள்ளது. நீங்கள் ஒவ்வொன்றையும் அருமையாக படம் எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  குருவிகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக மிக அழகாக இருக்கின்றன. பைன் மரத்தில் உங்களை ஏமாற்றி தெரிந்த குருவி படத்தை நான் பெரிதாக்கி பார்க்கும் போது எனக்கு பிள்ளையார் மாதிரி தெரிந்தது.:)

  தங்களுக்கு தங்கள் பேரன் தந்த பரிசு அழகாக நன்றாக இருக்கிறது. தங்கள் பெயரை அழகாக அழைத்து எழுதியுள்ளார். அவருக்கும் வாழ்த்துகள். அடுத்தப் பகுதியையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
   படங்கள் ஒவ்வொன்றையும் ரசித்து அதை குறிப்பிட்டு கருத்து சொன்னது மகிழ்ச்சி.

   //நான் பெரிதாக்கி பார்க்கும் போது எனக்கு பிள்ளையார் மாதிரி தெரிந்தது.:)//

   ஓ! தேடுகின்ற கண்களுக்குள் பிள்ளையார் அருமை.

   பேரனை வாழ்த்தியது மகிழ்ச்சி, நன்றி.
   உங்கள் கருத்துக்கு நன்றி.
   ஆவலுடன் எதிர்ப்பார்ப்பதற்கும் நன்றி கமலா.

   நீக்கு
 17. இந்தப் பதிவைப் பார்க்காமல் விட்டேனே . கண்டு விட்டு வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 18. வாழ்க வளமுடன் அன்பு கோமதி
  எத்தனை அழகான படங்கள் . அதுவும் அந்த மஞ்சள் குருவி மிக அழகு. இத்தனை வறண்ட பிரதேசத்திலும்பறவைகளுக்கு உணவு வைத்திருக்கிறார் இறைவன்.
  அங்கும் வீடு கட்டிக் குடும்பம் நடத்துகின்றன.
  அந்தப் பைன் கோன் படம் மிக அழகு.

  வித விதமான கோணங்களில் அருமையாகப் படம் எடுத்திருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மஞ்சள் குருவி உங்களுக்கு பிடித்து இருக்கா? மகிழ்ச்சி.

   //இத்தனை வறண்ட பிரதேசத்திலும்பறவைகளுக்கு உணவு வைத்திருக்கிறார் இறைவன்.
   அங்கும் வீடு கட்டிக் குடும்பம் நடத்துகின்றன.//

   ஆமாம், இறைவனின் கருணை.

   //அந்தப் பைன் கோன் படம் மிக அழகு.//


   //வித விதமான கோணங்களில் அருமையாகப் படம் எடுத்திருக்கிறீர்கள்.//
   நன்றி அக்கா.

   நீக்கு
 19. கொண்டைக் குருவி மிக அழகு.
  நீல இறகுகள் கொண்ட பறவையும், கரிச்சான் குஞ்சு.

  படங்களும் சிறப்பு.
  பேரன் ,பெண், மருமகள் எல்லோரும்
  அன்னையர் தினத்தைக் கொண்டாடினது
  நெகிழ்ச்சி.
  அருமை. எல்லா நாட்களும் நம் நாட்கள் தான்.
  சாரும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  இன்னும் நிறையப் பயணங்கள் மகிழ்வோடு நடக்க வேண்டும்.
  இறைவன் அருள் எப்பொழுதும் நம்முடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கொண்டைக் குருவி மிக அழகு.
   நீல இறகுகள் கொண்ட பறவையும், கரிச்சான் குஞ்சு.//

   அந்த பறவைகளை பார்க்க
   பார்க்க ஆசையாக இருந்தது .
   //எல்லா நாட்களும் நம் நாட்கள் தான்.
   சாரும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.//

   ஆமாம், சாரும் இருந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் .நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

   //இன்னும் நிறையப் பயணங்கள் மகிழ்வோடு நடக்க வேண்டும்.
   இறைவன் அருள் எப்பொழுதும் நம்முடன்.//

   வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா. இறைவன் எப்போதும் உடன் இருந்து காக்க வேண்டும்.

   உங்கள் அன்பான கருத்துக்களுக்கு நன்றி அக்கா.
   நீக்கு
 20. என்ன அழகு எத்தனை அழகு.. அத்தனையும் சூப்பர் கோமதி அக்கா.

  பூப் பறிஞ்ச்சான் குருவிகளா எனப் பாடல் .. என எங்கோ கேட்டதுண்டு.. அப்போ அவை கரிச்சான் குருவிகளோ... கொண்டையுடன் அழகு.

  மதேர்ஸ் டேக்கு பேரனின் எழுத்தில்... கோமாச்சியும் அழகு ஹா ஹா ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்

   //என்ன அழகு எத்தனை அழகு.. அத்தனையும் சூப்பர் கோமதி அக்கா.//

   அத்தனையும் பிடித்து இருக்கா அதிரா! மகிழ்ச்சி.


   //அப்போ அவை கரிச்சான் குருவிகளோ... கொண்டையுடன் அழகு.//

   நான் அப்படித்தான் நினைக்கிறேன் அதிரா.

   //பூப் பறிஞ்ச்சான் குருவிகளா எனப் பாடல் .. என எங்கோ கேட்டதுண்டு..//
   நான் கேட்டதில்லை அதிரா. அந்த பாடலை பதிவு செய்யுங்கள் ஒரு நாள்.

   //மதேர்ஸ் டேக்கு பேரனின் எழுத்தில்... கோமாச்சியும் அழகு ஹா ஹா ஹா...//

   நன்றி அதிரா.

   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.


   நீக்கு
 21. அழகான படங்கள்..
  பறவைகளும் பசுமை மிக்க மரங்களும் சோலைகளும் இயற்கையின் பெருங்கொடை... இனிய பதிவு...

  வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
   உடல் பூரண நலம் பெற்று விட்டதா?

   //பறவைகளும் பசுமை மிக்க மரங்களும் சோலைகளும் இயற்கையின் பெருங்கொடை...//

   ஆமாம், நீங்கள் சொல்வது சரி இயற்கையின் பெருங்கொடைதான்.

   உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு