போன மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை இந்த நீர்நிலை பார்க்க போனோம். அந்த இடம் மிகவும் அழகாய் இருந்தது. வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் தான் இருந்தது. அந்த நீர் நிலையில் வாத்துக்களும், பறவைகளும் நிறைய இருந்தது.
அழகான நீர் நிலையும், நிழல் தரும் மரங்களும், பறவைகளும்,விலங்குகளும்,(நாய்கள்) மற்றும் அங்கு பார்த்த மனிதர்களும் மகிழ்ச்சியாக இருப்பதைப்பார்த்த போது இந்த பாடல் நினைவுக்கு வந்தது.
திருவருட்பா
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண்ணீரே
உகந்ததண்ணீரிடைமலர்ந்த சுகந்த மண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில் உறும்பயனே ஆடையிலே யெனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்தருளே.
- இராமலிங்க அடிகளார் (வள்ளலார்)
வள்ளலார் பாடல் பள்ளியில் மனப்பாடச் செய்யுள் நமக்கு .
இந்த பாட்டில் சொல்வது போல உலக வாழ்க்கையில் உழலும் போதும், கோடை போன்ற துன்பம் ஏற்படும் போதும் நிழல் தரும் மரமாக , கனி தரும் மரமாக இறைவன் இருக்கிறான். நமக்கு மட்டும் அல்ல எல்லா உயிர்களுக்கும்தான்.
கோடையிலே இளைப்பாற்றி கொள்ள சிறந்த இடமாக இருந்தது இந்த இடம்.
மரத்தின் நிழலில் இளைப்பாற்றிக் கொள்ளும் வாத்துக்கள்