செவ்வாய், 26 மே, 2020

சிற்றுண்டியும், வற்றலும்



//என் அம்மா செய்யும் சிறு கொழுக்கட்டையில் தேங்காய் , சிவப்பு மிளகாய், உப்பு வைத்து அரைத்து கடுகு உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை போட்டுத்  தாளிதம் செய்வார்கள் . //

மணிக்கொழுக்கட்டை பதிவில் என் அம்மா செய்யும் முறையைக் குறிப்பிட்டு இருந்தேன்.
கொழுக்கட்டை மாவில் கொழுக்கட்டைகள் செய்துகொள்ள வேண்டும். தேங்காய்த்துருவல், மிளகாய், உப்பு வைத்து தண்ணீர் இல்லாமல், படம் நாலில் உள்ளதுபோல்  இப்படிப் பொடி செய்துகொள்ள வேண்டும்.  கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துப் பெருங்காயத்தூள் கொஞ்சம் போட்டு, வெந்த கொழுக்கட்டையில், தேங்காய்த்தூள், ஒரு ஸ்பூன் நெய்விட்டுப்   பிரட்டினால் சுவையான  காரக் கொழுக்கட்டை தயார்.

வாழைக்காய் அப்பளம் எங்கள் ப்ளாக்கில்  திங்கள் கிழமை பதிவாக எளிதான முறையில் செய்முறை  கொடுத்தேன் . அதை படித்த நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்.

வாழைக்காய் அப்பளம்  2013 ல் என் தளத்தில் போட்டு இருந்தேன். கொஞ்சம் வேறு முறையில் இருக்கும். படித்துப் பாருங்கள்.

- "வலைச்சரத்தில்" இந்தப் பதிவு இடம்பெற்றது. இடம்பெற்றதை  மகிழ்ச்சியோடு யாரெல்லாம் வந்து சொன்னார்கள், பின்னூட்டங்களில்  என்று அறிந்து கொள்ளலாம்.

வாழைக்காய் செய்முறைகள் இன்னும் என்ன என்ன எல்லாம்  செய்யலாம் அதை பின்னூட்டங்களில் கலந்து உரையாடி இருப்பார்கள்.  இந்தப் பழைய பதிவைப் படித்தால் தெரிந்துகொள்ளலாம். எங்கள் ப்ளாகில் பகிர்ந்த வாழைக்காய் வற்றலுக்கும் இந்த வாழைக்காய் வற்றலுக்கும் என்ன வித்தியாசம் என்று  தெரிந்து கொள்ளலாம்.


வெயில் வீணாகப் போகாமல் வற்றல், வடகம்  போட்ட காலங்கள், இப்போதைய நிலைமையைச் சொல்லி இருப்பேன் இப்படி:-

//அக்கம் பக்கத்து வீடுகளில் கூழ்வடகம் போடவில்லையா? என்றும்  முடித்துவிட்டீர்களா? என்றும் ஒருவருக்கு ஒருவர்   கேட்டுக் கொள்வார்கள்
.
 திருநெல்வேலியில் சாலைக்குமரன் கோவிலின் எதிரில் அருமையான வீட்டுமுறையில் போட்ட வடகம், வத்தல் கிடைக்கும். சென்ற முறை அங்கு சென்றிருந்தபோது அதை வாங்கி வந்துவிட்டேன்.  அங்கு வாங்கியதைக் குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டேன். நம்மால் இப்போது செய்ய முடியவில்லை. வீட்டில் எல்லோரும், கஷ்டப்படுத்திக் கொள்ளாதே! போதும். வத்தல் எல்லாம் போட்டு வத்தலாய்க் காய்ந்தது எல்லாம் போதும்! என்கிறார்கள்.

முன்பெல்லாம் இரவு சுடச் சுட சாதம் , வத்தக் குழம்பு , மிளகு ரசம், , துவையல், வத்தல் , வடகம்தட்டு நிறைய வறுத்து வைத்துச்  சாப்பிட்ட காலங்கள் போய்விட்டது. இப்போது இரவு, பலகாரம் தான். குழந்தைகளுக்கும் விதவிதமாய் டிபன் தான் வேண்டி இருக்கிறது. வத்தல் வடகம் பொரிப்பது குறைந்து விட்டது.//

ருசியாக இருந்தது அந்த வாழைக்காய் தட்டைகள்-(பூரிகள்!)

இந்த முறை ஆசைப் பட்டதே தப்பு,  வெயிலே இல்லை, பால்கனியில். 
இரண்டு வாழைக்காயை  வேகவைத்து விட்டேன், பச்சைமிளகாயைய்ப் பார்த்தால் பச்சையாக இல்லை. பழுத்த பச்சைமிளகாய் தான் இருந்தது, பரவாயில்லை என்று அதை உப்பு பெருங்காயத்தோடு சேர்த்து அரைத்து விட்டேன். வெயில் இல்லையே. தட்டை போல்தானே இருக்கிறது. இப்படியே பொரித்துப் பார்த்தால் என்ன என்று  இரண்டை எண்ணெயில் போட்டேன். போட்டால் பூரி போல் பொங்கி நன்றாக எண்ணெய் குடித்துக் கொண்டு இருந்தது. இவ்வளவு எண்ணெய் குடித்தால் உடம்புக்கு ஆகாதே என்று  ஆளுக்கு இரண்டு மட்டும் போட்டு வெந்து எடுத்து விட்டு மீதி மாவை அப்பளமாக இட்டுக் காய வைத்து விட்டேன்.

100 ரூபாய்க்கு காய் கொண்டு வந்து கொடுத்தார்கள் எங்கள் வளாகத்தில். நிறைய வெண்டைக்காய் இருந்தது, என் கணவர் வெண்டைக்காய் வற்றல் போடு என்றார்கள்.  வெயிலே சரியாக இல்லை இந்த வீட்டில்.  இருந்தாலும்  வெண்டைக்காயை வெட்டிக் காய போடும் பையில் போட்டுக் கொடியில் மாட்டிக் காய வைத்து எடுத்துக் கொண்டேன். மூன்று  நாள் ஆச்சு, ஈரப்பசை போய் காய. அப்புறம் தயிரைக் கடைந்து உப்பு போட்டுப்  பிசறிக்  காய வைத்து எடுத்து இருக்கிறேன்.

கடையில் வாங்கிய மிதுக்கு வற்றல், சுண்டை வற்றலில் மோரே போடவில்லை அதையும் மோரில் போட்டு காய வைத்து எடுத்தேன்.  அவற்றையும்  ஈரம் போகும் வரை இப்படி வெயிலில் நகர்த்தி நகர்த்திக் காய வைத்து எடுத்துப் பின்னர் காய்ப்பையில் போட்டுக் கொடியில் போட்டுக் காய வைத்து எடுத்து விட்டேன்.

12 மணிக்குப் பக்கம் தான் கொடிகட்டி இருக்கும் இடத்திற்கு வெயில் வரும், அப்புறம் இரண்டு மணிக்கு எல்லாம் பால்கனிக்குள் வரும். வீட்டுக்குள் மூன்று மணி வரை இருக்கும், வெயில். 

மூன்றாவது படத்தில் வெண்டைக்காய் வற்றல் , சுண்டைக்காய்வற்றல்,  மிதுக்கு  வற்றல்  காய்கிறது.  கடைசி படத்தில் கொடியில் வாழைக்காய் வற்றல் காய்கிறது.
கொல்லேஜ்  முறையில்  எடுத்து விட்டேன் மேஜை மேல் வைத்து இந்த படத்தை.

எப்போடியோ காய வைத்து எடுத்து விட்டேன் வற்றலை இன்னும்  இரண்டு நாள் காய்ந்தால் நல்லது.


ஆந்திரா பெசரட்டு( நம்மூரில் பச்சைப்பயிறு தோசை)

எல்லோருக்கும் தெரிந்தது தான்.  ஒரு டம்ளர் பச்சைப் பயிறு, கால் டம்ளர்  பச்சரிசி,  வரமிளகாய்  அல்லது பச்சை மிளகாய் நான்கு, நான் இரண்டும் போட்டேன். (பச்சைமிளகாய் இரண்டு சிறியது, சின்ன வரமிளகாய் இரண்டு.)
கொஞ்சம் பெருங்காயத்தூள், கொஞ்சம் இஞ்சியோடு ரவை பக்குவத்தில்  அரைத்த மாவுடன் கொஞ்சம் தேங்காய்த்துருவல், வெங்காயம், கருவேப்பிலை -மற்றும் சோம்பு இஷ்டப்பட்டால் சேர்க்கலாம். இஷ்டமில்லையென்றால் வேண்டாம்.

வெங்காயத்தைத் தோசை மாவில் கலந்து செய்வேன் , (இது செய்த அன்று வெங்காயம் போடவில்லை.)  சிலர் மேலே தூவிச் செய்வார்கள்.

இதற்குத் தேங்காய்ச் சட்னியும் தக்காளி சட்டினியும் செய்வார்கள். 
இரண்டு தக்காளி, ஒரு  பெரியவெங்காயம் , 10 மிளகாய் வற்றல்  கொஞ்சம் பெருங்காயம், உப்பு  வதக்கி அரைத்த சட்னி  செய்தேன்.

சமையல் குறிப்புகள் வற்றல் போட்ட கதை எல்லாம் எப்படி இருக்கு என்று சொல்லுங்கள்.

                                         வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

67 கருத்துகள்:

  1. வா..வ் அக்கா விதவிதமான வற்றல். பார்க்கவே ஆசையா இருக்கு. பார்சலில் அனுப்புங்க எனக்கும். அம்மாவும் வற்றல் போடுவார்கள். காகம் வராமல் காப்பது என்னோட, தம்பியோட வேலை. ஸ்கூல் இல்லையெனில் இருப்போம் காவல். ஊறுகாய் போட்டால் எடுத்து சுவைத்துக்கொண்டிருப்போம். அதை நினைத்துக்கொண்டேன்.. அது மினுக்கு வற்றல்தானே.
    காரக்கொழுக்கட்டை சூப்பர் இது. செய்யனும். பார்க்க சூப்பரா இருக்கு. எல்லா படங்களும் அழகா எடுத்திருக்கிறீங்க. கொலாஜ் மாதிரி எடுத்தது அழகா இருக்கு.
    //முன்பெல்லாம் இரவு சுடச் சுட சாதம் , வத்தக் குழம்பு , மிளகு ரசம், , துவையல், வத்தல் , வடகம்தட்டு நிறைய வறுத்து வைத்துச் சாப்பிட்ட காலங்கள் போய்விட்டது// அதை நினைத்தால் கவலையா இருக்கும்.
    பெசரட்டு தெரியும் ஆனா செய்யதில்லை. செய்து பார்க்கனும்.
    வாழைக்காய் பூரியை பார்க்க நான் முதன்முதல் செய்த பூரி மாதிரி இருக்கு. இப்படிதான் எண்ணெய் குடித்திருந்தது.(திருமண்ம் ஆகி வந்த புதிது.)
    அங்கு இப்ப வெயில்தானே. உங்களுக்கு குறைவா இருக்கா. சூப்பரா இருக்கு அக்கா உங்க சமையல் குறிப்புகள். உங்க சமையல் குறிப்பு, அனுபவங்களையும் பதிவிடுங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்

      பார்சலில் அனுப்பி விடுகிறேன்.

      முன்பு காவல் காப்பது பெரிய வேலைதான். 11 மணி வரை காவல் காப்பேன் அப்புறம் கொஞ்சம் காய்ந்தபின்னால் துணியால் மூடி காய வைத்து விடுவேன். மூடி வைக்கவில்லை என்றால் காய்ந்த பின் பறவைகள், அணில்கள் அத்தனையும் காலி செய்து விடும்.

      நல்ல வெயில் இருந்தால்தான் மூட முடியும் வீட்டு வேலைகள் முடியும் வரை அப்படி மூடி வைப்பேன், அப்புறம் டிரான்ஸ்சிஸ்டர், கதை புத்தகத்துடன் மாடிக்கு போய் மாலை வரை மாடியில் இருந்து பார்த்துக் கொள்வேன். அவை எல்லாம் மனதில் உற்சாகம் கரை புரண்ட காலங்கள்.

      பூரி மாவை தளர்த்தியாக பிசைந்து விட்டால் எண்ணெய் குடிக்கும்.
      பெசரட்டு முன்பு பிடிக்காது என் கணவருக்கு இப்போது உடலுக்கு நல்லது என்பதால் சாப்பிட ஆரம்பித்து இருக்கிறார்கள். அடிக்கடி செய்வது இல்லை . சூடாய் சாப்பிட்டால்தான் நன்றாக இருக்கும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி அம்மு.

      நீக்கு
  2. ஆஆஆஆவ் இன்றும் கோமதி அக்காவோடு அதிராவும் போஸ்ட் போட்டிருக்கிறேனே.. இதை இப்போதான் பார்க்கிறேன், இல்லை எனில் நான் தான் 1ஸ்ட்டூஊஊஊஊ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      இப்போது கொஞ்ச நாளாக அக்காவும், தங்கையும் பேசி வைத்துக் கொண்டு போட்டது போல் பதிவுகள் போடுவது வழக்கமாய் போய் விட்டது.

      நீக்கு
  3. இன்று ஒரே கல்லில் பல மாங்காய்கள்... ஒரே சாப்பாட்டுப் படமாகப் போட்டு என் விரதத்தைக் கலைக்கப் பார்க்கிறா கோமதி அக்கா ஹா ஹா ஹா.. பார்க்கப் பார்க்க வாயூறுது... இப்படிக் கார வகைகள்தான் எனக்கும் பிடிக்கும்..

    சிறு கொழுக்கட்டைத் தாளிதம் சூப்பர்...

    //வாழைக்காய் அப்பளம் //

    ஓ அங்கு போய் ரெசிப்பி பார்க்கிறேன்... நானும் நேற்று அப்பளம் செய்தேனே:)) விரைவில் வரும் போஸ்ட்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரதமா எப்போது இருந்து?
      ஒரே சமயத்தில் போட்டால் உங்களுக்கு நல்லதுதானே விடுமுறை வரப்போகிறது. நீங்கள் காணாமல் போவதற்கு (பதிவு பக்கம்) வாய்ப்பு இருக்கே!

      //ஓ அங்கு போய் ரெசிப்பி பார்க்கிறேன்.//

      பின்னூட்டங்கள் நன்றாக இருக்கும் பழைய பதிவர்கள் இப்போது பதிவு பக்கம் வராதவர்கள் பின்னூட்டங்கள் படிக்கலாம்.

      உங்கள் அப்பளம் பதிவு படிக்க ஆவல்.

      நீக்கு
  4. // "வலைச்சரத்தில்" இந்தப் பதிவு இடம்பெற்றது. இடம்பெற்றதை மகிழ்ச்சியோடு யாரெல்லாம் வந்து சொன்னார்கள், பின்னூட்டங்களில் என்று அறிந்து கொள்ளலாம்.
    //

    ஓ கோமதி அக்கா அப்போ சமையலில் கலக்கிப் போட்டு, இப்போ சமையல் குறிப்பேதும் போடாமல் இருக்கிறீங்கள்.

    //வெயில் வீணாகப் போகாமல் வற்றல், வடகம் போட்ட காலங்கள்,//
    ஹா ஹா ஹா இப்போது என் காலம் இப்படித்தான் ஓடுகிறது.. நேரமே இல்லாமல்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஓ கோமதி அக்கா அப்போ சமையலில் கலக்கிப் போட்டு, இப்போ சமையல் குறிப்பேதும் போடாமல் இருக்கிறீங்கள்.//

      நிறைய எல்லாம் போஸ்ட்போடவில்லை அதிரா ஒன்று இரண்டுதான்.

      அப்போது சமையல் பதிவு போடுபவர்கள் கேட்டுக் கொண்டதால் அந்த பதிவுகளும் போட்டேன். ஜலீலா, ஆசியா கேட்டுக் கொண்டதால்.

      //ஹா ஹா ஹா இப்போது என் காலம் இப்படித்தான் ஓடுகிறது.. நேரமே இல்லாமல்//

      முடிந்த போது இந்த மாதிரி காலங்களை அனுபவித்து மகிழுங்கள் அதிரா.
      அப்புறம் குழந்தைகள், நம் மனம் எல்லாம் மாறும்.



      நீக்கு
  5. ////அக்கம் பக்கத்து வீடுகளில் கூழ்வடகம் போடவில்லையா? என்றும் முடித்துவிட்டீர்களா? என்றும் ஒருவருக்கு ஒருவர் கேட்டுக் கொள்வார்கள்//
    இப்படி ஆராவது கேட்கும்போதுதான், நமக்கும் செய்யும் ஆர்வம் அதிகமாகிறது.

    //வீட்டில் எல்லோரும், கஷ்டப்படுத்திக் கொள்ளாதே! போதும். வத்தல் எல்லாம் போட்டு வத்தலாய்க் காய்ந்தது எல்லாம் போதும்! என்கிறார்கள்.//
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கோமதி அக்கா, ஏதோ பெரிய வயதாகிவிட்டவர் போலவே பேசுறீங்கள்.. அப்படி நினைக்காதீங்கோ.. வெளிநாடுகளில்.. ஓடி ஓடி உழைச்சு, பிள்ளை வளர்த்து எல்லோரையும் அனுப்பிப்போட்டு, 60 களில்தான் உண்மையில் வாழ்க்கையை 30 வயசுபோல அனுபவிக்கின்றனர்.. நம் நாடுகளில்தான், பிள்ளைகள் திருமணம் முடிச்சிட்டாலே பெற்றோருக்கு வயசாகிவிட்டது.... என் அம்மா வயசானவ, அப்பா வயசானவர் என்கின்றனர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    இப்போதான் ஃபிறீயாக இருக்கிறீங்கள், நன்கு ஓடி ஓடி வேலைகள் செய்யுங்கோ.. அப்போதுதான் மனதுக்கும் உடம்புக்கும் நல்லது.

    ஒரு பிள்ளை சொல்கிறா.. என் அம்மா வயசானவ, அவ இப்பவும் வேலைக்குப் போகிறா என, பார்த்தால், அவவுக்கு 48 வயசாம் ஹையோ ஹையோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்படி ஆராவது கேட்கும்போதுதான், நமக்கும் செய்யும் ஆர்வம் அதிகமாகிறது.//

      இப்போது அக்கம் பக்கத்தில் கேட்க ஆள் இல்லை.
      ஆனால் பதிவில் ஏஞ்சல், அதிரா எல்லாம் வற்றல் போட்டு ஆசையை ஏற்படுத்தி விட்டார்கள்.

      //இப்போதான் ஃபிறீயாக இருக்கிறீங்கள், நன்கு ஓடி ஓடி வேலைகள் செய்யுங்கோ.. அப்போதுதான் மனதுக்கும் உடம்புக்கும் நல்லது.//

      ஆமாம், அதுவும் சரிதான். மனதுக்கும் உடம்புக்கும் நல்லதுதான்.


      நீக்கு
    2. நம் நாட்டில் பெண்கள் சீக்கீரம் வயதாகி விட்டதாக நினைப்பு வரும்படி சூழ்நிலை இருக்கிறது.பெண்ணை கலயாணம் செய்து கொடுத்து பேரன், பேத்தி எடுத்து விட்டால் வயதானவர். 50 வயது மூதாட்டி என்று பேப்பரில் , செய்திகளில் சொல்வார்கள்.

      சொல்லி சொல்லியே வயதாகி விட்ட சிந்தனையை ஏர்படுத்தி விடுவார்கள்.
      வெளி நாட்டில் முதியவர்கள் உற்சாகமாய் மால்களில் வேலை செய்வது பார்க்க ஆச்சிரியமாய் இருக்கும். பல மணி நேரம் நிற்கிறார்களே!

      நீக்கு
  6. நானும் பொரிப்பதை முடிஞ்சவரை தவிர்ப்பேன் கோமதி அக்கா, கிரில் ல அல்லது அவணில போட்டு விடுவேன்.. அசைவ உணவுகளை.. சில மரக்கறிகளையும் தான்..

    வெள்ளிக்கிழமைகளில், தவிர்க்க முடியாது, பப்படம் வடகம் பொரிப்பேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், முடிந்தவரை பொரிப்பதை தவிர்க்கலாம்தான். குழந்தைகளுக்கு செய்ய வேண்டுமே செய்து கொடுங்கள் அவர்களுக்கு. அவர்கள் வேண்டாம் பொரித்தது என்று சொல்லும் வரை.

      வெள்ளிக்கிழமை சைவம் என்பதால் பப்படம், வடகம் பொரிப்பீர்களோ!

      நீக்கு
  7. //இந்த முறை ஆசைப் பட்டதே தப்பு, வெயிலே இல்லை, //
    ஆஆஆ என்னாதிது? ஸ்கொட்லாண்டைவிட மோசமாக இருக்கும்பொல இருக்கே ஹா ஹா ஹா.. இனித்தானே வெயில் காலம்...

    பொதுவாக வாழைக்காய் எண்ணெய் குடிக்கும் என்பார்கள் கோமதி அக்கா.

    // மீதி மாவை அப்பளமாக இட்டுக் காய வைத்து விட்டேன்.
    //
    ஆஆஆ இது நல்ல ஐடியா, வெயிலில் காய்ந்தால் எண்ணெய் குடிக்காது.

    அதுசரி வெண்டிக்காய் வத்தலை, இபடி மோர்மிளகாய்போல பச்சையாக மோரில் ஊற வைத்துக் காயவிடுவீங்களோ? நான் நினைச்சேன் கொஞ்சம் அவிச்சுப்போட்டுக் காய விடோணும் என... கத்தரிக்காயையும் இப்படி வத்தல் போடலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அக்கா இடையில என் கொமெண்ட்ஸ் ஐக் கவனிக்காமல் ஓடி விட்டா... என் கேள்விக் கென்ன பதில்?:)

      நீக்கு
    2. நீங்கள் சொன்னது போல் அவிச்சுப் போட்டு கத்திரிக்காய் வத்தல் போடலாம் அதிரா. ஆனால் கத்திரிக்காய் அதிகமாய் வெந்துவிட கூடாது . முக்கால் வேக்காடு வெந்தால் போதும். உப்பு அளவாய் போட வேண்டும் . வத்த குழம்பில் போடும் போது அந்த உப்பு வேறு ஏறும். நான் கத்திரிக்காய் வற்றல் மட்டும் போட மாட்டேன். எனக்கு கத்திரிக்காய் மிகவும் பிஞ்சாக கொல்லை கத்திரிக்காய் என்று கொண்டு வந்து கொடுப்பார்கள் அதை காயவிட்டு சமைக்க பிடிக்காது. எண்ணெய் கத்திரிக்காய், கத்திரிக்காய் சாதம், கத்திரிக்காய் கூட்டு, கத்திரிக்காய் கொத்சு செய்ய பிடிக்கும்.
      பதில் சொல்லி விட்டேன். உங்கள் கேள்விக்கு வேறு யாருக்கோ பதில் சொல்லி இருக்கிறேன்.(ஸ்ரீராமுக்கு சொல்லி இருக்கிறேன்)

      காலை மருமகளுக்கு பிறந்தநாள் கேக் செய்து இருந்தான் பிறந்தனாள் விழாவை ஸ்கைப்பில் கொண்டாடினோம் நேர் அலையாக அதனால் ஓடி விட்டேன்.
      12 மணிக்குதான் அவர்கள் போனார்கள் அப்புறம் சமையல் வேலை அது முடிந்து இப்போதுதான் எட்டி பார்க்கிறேன் .

      நீக்கு
  8. ஆஹா வத்தல்கள் அருமை, காயப்போட்டு எடுப்பதில்தான் பெரும் போராட்டம், நேற்று என் அப்பளம், 2 நிமிட இடைவெளியில் எடுத்துவிட்டேன், இல்லை எனில் மழையில் குளிச்சிருக்கும்.. இங்கு மழை பெய்வதும் தெரியாது, கண்ணால் பார்த்துத்தான் கண்டு பிடிப்போம் பல சமயம் கர்ர்ர்:)).. வீட்டுக்குள் பெரிசாக வெளிச்சத்தம் வராது.

    பதிலளிநீக்கு
  9. ஆவ்வ்வ் பாசிபயறுத் தோசை அழகு.. புளிக்க வைக்கத் தேவையில்லையோ.. தக்காழி நாம் வீட்டில் எடுப்பதில்லை, எப்போதாவது ஆசைக்கு ஒன்றிரண்டு வாங்கி பிரியாணிக்கு சேர்ப்பேன்.. எங்களுக்கு அலர்ஜி.. மூக்கு கண் கடிக்கும் சாப்ப்பிட்டால்.

    பதிவில சமையலாகப் போட்டுக் கலக்கிட்டீங்கள்.. அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாசிப்பயறு தோசை புளிக்கவைக்க தேவையில்லை அரைத்தவுடன் செய்யலாம்.

      தக்காளி அலர்ஜியோ! சரி சரி அப்போ சாப்பிட வேண்டாம்.

      உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி நன்றி.

      நீக்கு
    2. இன்று மருமகளுக்கு பிறந்த நாள் அதனால் பையன் கேக் செய்து அசத்தி விட்டான்.
      அடுத்த பதிவில் அந்த படம் போடுகிறேன்.

      நீக்கு
    3. மருமகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோமதி அக்கா, போஸ்ட்டில் பார்க்கிறேன் கேக் படங்கள்.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    விதவிதமான சிற்றுண்டிகள், வடகம் போட்ட கதைகள், மற்றும் சமையல் குறிப்புகள் அடங்கிய இந்தப் பதிவு அமர்க்களமாக உள்ளது.

    கொழுக்கட்டைகள் படங்கள், செய்முறைகள் எல்லாமே நன்றாக உள்ளது. காரக் கொழுக்கட்டைகள் செய்முறை சிறப்பாக இருக்கிறது. அதன் விபரங்கள் அழகாக சொல்லியுள்ளீர்கள்.

    எல்லா கொலாஜ் படங்களும் மிகவும் அழகாக வந்துள்ளது. அன்று நீங்கள் செய்த (உங்கள் பாணியில்) மணிக் கொழுக்கட்டைகள் இட்லி அரிசி ஊற வைத்து நானும் செய்தேன்.நன்றாக வந்தது. அன்று உங்களை நினைத்துக் கொண்டேன்.

    நீங்கள் செய்த வத்தல் வடகங்கள் நன்றாக இருக்கிறது. வெய்யில் நன்றாக அடித்தால், ஒரு வாரத்தில் வடகங்கள் நன்கு காய்ந்து விடும் எடுத்து டப்பாக்களில் பத்திரப்படுத்தி விடலாம். எனக்கும் இங்கு வெய்யில் பற்றாக்குறைதான். தவிர குழந்தைகள் இருப்பதால் நேரமும் கிடைக்கவேயில்லை.

    வடகம் கிடைக்கும் இடம் பற்றி (திருநெல்வேலியில்) சொன்ன தகவலுக்கு நன்றி.

    /வத்தல் , வடகம்தட்டு நிறைய வறுத்து வைத்துச் சாப்பிட்ட காலங்கள் போய்விட்டது/

    ஆமாம்..அது ஒரு காலம். இப்போது கொஞ்சம் எண்ணெய் பலகாரம் இரவு சாப்பாட்டுடன் சாப்பிட்டாலும், ஏதோ ஒரு வகையில் தொந்தரவு செய்கிறது.

    பெசரட் தோசை அழகாக வந்துள்ளது. நானும் இப்படித்தான் இந்த தோசைக்கு சேர்த்து அரைப்பேன். இதற்கு தொட்டுக் கொள்ள நீங்கள் செய்த சட்னி மிகவும் பொருத்தம். இதற்கு இஞ்சி சட்னியும் செய்திருக்கிறேன்.ஆனாலும் எங்கள் வீட்டில் தேங்காய் சட்னிதான் விருப்பம்.

    படங்கள் பகிர்வுகள் என பதிவு நன்றாக உள்ளது மிகவும் ரசித்தேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      கோவில் போன பதிவுகள், மகன் ஊரில் போன பதிவுகள் எல்லாம் இருக்கு பதிவிடாமல்.

      ஆனால் , எல்லோரும் சமையல் பதிவுகள் போட்டவுடன் போட ஆசை வந்து விட்டது. பிள்ளைகள் இன்று என்ன சமைத்தீர்கள்? என்று கேட்பார்கள் அவர்களுக்கு என்று படம் எடுத்து போடுவேன். அதனால் அவற்றை இங்கு பதிவாக்கி விட்டேன்.

      சாலைக்குமரன் கோவிலின் எதிரில் உள்ள கடையில் எல்லா வடகமும், வற்றலும் கிடைக்கும். நன்றாக இருக்கும். சாலைக்குமரனை பார்த்து கொண்டே இருக்கலாம்.
      முருகனை பார்க்க வாய்ப்பு கிடைத்தால் வற்றலும் வாங்கலாம்.

      வெயில் இல்லை, இலைவடாம் போடலாம் அதற்கு வெயில் தேவை இல்லை.
      அண்ணியும், தங்கையும் வடகம், வற்றல் போட்டு இருக்கிறார்கள் தருகிறேன் என்றார்கள். அவர்களும் இங்கு வர முடியவில்லை, நானும் போக முடியவில்லை.

      படங்களை, பதிவை ரசித்து விரிவாக கருத்து சொன்னதற்கு நன்றி.




      //அன்று நீங்கள் செய்த (உங்கள் பாணியில்) மணிக் கொழுக்கட்டைகள் இட்லி அரிசி ஊற வைத்து நானும் செய்தேன்.நன்றாக வந்தது. அன்று உங்களை நினைத்துக் கொண்டேன்.//

      ஆஹா ! ஒரு நாள் புரையேறியது நீங்கள் என்ன நினைத்துகொண்டு இருந்ததால் என்று இப்போது தெரிகிறது.


      நீக்கு
  11. காலையில் காபி சாப்பிடும் நேரத்தில் இதை எல்லாம் போட்டு சாப்பிடும் ஆசையைத் தூண்டி விடுகிறீர்கள்.   பச்சைப்பயறு தோசை ரொம்பவே கவர்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      நான் இரவே போட்டு விட்டேன் பதிவு, நீங்கள் காப்பி சாப்பிடும் நேரம் பார்த்து இருக்கிறீர்கள். பச்சை பயிறு தோசை நன்றாக இருக்கிறதா?நன்றி.

      நீக்கு
  12. இந்த வருடம் நாங்கள் வத்தல் வடகம் பக்கம் போகவில்லை.  வெண்டைக்காய் வத்தலை என்ன செய்வீர்கள்?  வறுத்து வெறுமேயும் சாப்பிடலாம், குழம்பிலும் போடலாமோ?  இதுவரை செய்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புது வீடு மாற்றிய வேலைகளால் சோர்வாக இருக்கும், அடுத்த முறை வத்தல் வடகம் போட்டு அசத்தி விடுவார்கள் உங்கள் பாஸ்.
      பாஸ் என்றதும் நினைவுக்கு வருது , வாழைக்காய் அப்பள சுட்டி பதிவை படித்து பாருங்கள் உங்களை அப்பாதுரை சார் எப்படி கலாய்த்து இருக்கிறார் என்று.

      வெண்டைக்காய் வற்றலை வறுத்து அப்படியே சாப்பிடலாம், மோர் குழம்பில் வறுத்து போடலாம். கீதாசாம்பசிவம் கூட சொல்லி இருக்கிறார்கள் பாருங்கள் அப்படியே சாப்பிடுவேன் குழம்பில் போடுவேன் என்று.

      அந்தக்காலத்தில் மழைகாலத்தில் காய்கறி வரத்து அதிகம் இருக்காது, கோடை காலத்தில் போடும் கத்திரி, அவரிய, வெண்டை, கொத்தவரங்காய் , பாவைக்காய், சுண்டைக்காய், மணத்தக்காளி, மித்துக்கு காய் , இவற்றில் வற்றல் போட்டு வைத்து இருப்பதை குழம்பில் போட்டும் வறுத்தும் சாப்பிடுவார்கள். மாவற்றலும் உண்டு.

      நீக்கு
  13. வெயில் வீட்டுக்குள் வராமலேயே இவ்வளவும் செய்து, மெதுவாய் காயவைத்தும் எடுத்து வைத்து விட்டீர்கள்?  அதென்ன, பையில் போட்டுக் காய வைக்கும் முறை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெயில் குறைவாய் இருப்பதால் அது அடிக்கும் இடத்தில் போட வசதி வேண்டும் இல்லையா? துணிபை, அல்லது இது மாதிரி பையில் போட்டு காய வைக்கிறேன்.

      உங்களுக்கு அனுப்பிய வாழைக்காய் அப்பள பதிவில் துணியை கொடியில் கட்டி அதில் அப்பளங்களை காய வைத்து எடுத்தேன். இதை அப்படி போட்டால் பறவைகள் கொத்தி கொண்டு போய் விடும் அதனால் இந்த பைகளில் போட்டு காய வைத்தேன்.

      நீக்கு
  14. கொழுக்கட்டையை இப்படி தேங்காய் சிவப்பு மிளகாய் கலவை போடுவது போல பேபி உருளைக் கிழக்கிலும் போடலாமோ...  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேபி உருளையை ரோஸ்ட் பண்ணி, பருப்பு ரசம் அல்லது தயிர் சாத்த்துக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடாமல் இப்படியா?

      நீக்கு
    2. பேபி உருளையில் போடலாம் என்று நினைக்கிறேன் எண்ணெய் கத்தரிக்காயில் தேங்காய் மசாலா கலவை போல இருக்கும். ஆனால் நெல்லை சொல்வது போல் எல்லோருக்கும் பிடிக்க வேண்டுமே!
      ஸெய்து பாருங்கள் நன்றாக இருந்தால் சொல்லுங்கள் செய்து பார்ப்போம்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  15. விதம் விதமான வற்றல்,, வடகங்கள் முடிந்தவரை போட்டிருக்கிறீர்கள். வாழைக்காய் அப்பளம் முன்னர் படித்த நினைவு இருக்கிறது. ஆனால் செய்து பார்க்கவில்லை. ஒரு முறை இரண்டு வாழைக்காயிலாவது செய்து பார்க்க வேண்டும். இங்கேயும் இப்போல்லாம் வடாம், வற்றல் வகைகள் செய்தாலும் செலவு ஆவதில்லை. குழந்தைகளும் வேண்டாம் என்று சொல்கின்றனர். அவங்களுடைய விருப்பங்கள் எல்லாம் மாறி விட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //வடகங்கள் முடிந்தவரை போட்டிருக்கிறீர்கள்.//

      சரியாக சொன்னீர்கள் கீதா முடிந்தவரைதான்.
      செய்து பாருங்கள் காரத்தட்டை போல இருக்கும்.

      ஆமாம், இப்போது சிறியவர்கள்தான் என்ணெய் பலகாரம் சாப்பிடுவது இல்லை.
      விருப்பங்கள் ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு மாதிரி மாறும் தானே!


      நீக்கு
  16. வெண்டைக்காய் வற்றல் இங்கேயும் ரொம்பப் பிடிக்கும். மோர்க்குழம்புக்குத் தான் இல்லை எனில் வெண்டைக்காய் வற்றலை வறுத்துப் போடுவேன். சாம்பார் சாதம், வத்தக்குழம்பு சாதம் ஆகியவற்றோடு தொட்டுக்கொள்ளவும் வறுத்து வைப்பேன். கொத்தவரை, அவரை, கத்திரி, பாகற்காய் எல்லா வற்றலும் போடுவேன். குழம்பிலும் இவற்றை எல்லாம் போடலாம். கொத்தவரை வற்றல் குழம்பு எங்க அனைவருக்கும் பிடித்தமானது. நான் வறுத்து அப்படியே சாப்பிடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் கணவருக்கு கூழ் வற்றலை விட இது போன்ற வற்றல்கள்தான் பிடிக்கும்.
      என் அத்தைக்கு(மாமியார்) மிகவும் பிடிக்கும் இவர்கள் ஊருக்கு போனால் இவர்கள் பேரச்சொல்லி "உனக்கு பிடிக்குமே"என்று செய்தேன் என்று வறுத்து தருவார்கள்.
      இங்கு பால் கஞ்சி வைத்தால் கொத்தவரை, வெண்டை, சுண்டைக்காய், மிதுக்கு வற்றல் மோர் மிளகாய் வறுப்பேன் தொட்டுக் கொள்ள.
      அப்படியே வறுத்து சாப்பிடலாம்தான்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  17. ஆந்திரா பெசரெட் மிக அருமை. முதலில் படத்தைப் பார்த்து கருவேப்பிலை அதிகமாக அரைத்த அடை என்றே நினைத்தேன்.

    படங்களும் அழகாக வந்திருக்கு.

    இதுக்கு இட்லி மி பொடி அருமையாக இருக்கும்.(நல்லெண்ணெயுடன்)

    அனேகமா இன்றோ நாளையோ செய்ய முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      ஆந்திரா பெசரெட் பிடித்து இருக்கா மகிழ்ச்சி.
      இடலி பொடி நன்றாக இருக்கும் தான்.
      கறுப்பு உளுந்து தோசைக்கு தக்காளி சட்னி வைத்தாலும் நான் இட்லி மிளகாய் பொடி வைத்து சாப்பிட எனக்கு பிடிக்கும்.

      செய்யுங்கள்.

      நீக்கு
  18. வெண்டைக்காய் வற்றல் அழகாக இருக்கு. இதைச் சாப்பிட்டு பல யுகங்களாகிவிட்டன. என்று மீண்டும் வாய்க்குமோ தெரியலை.

    மணிக்கொழுக்கட்டையும் அழகு. அதையும் செய்யவேண்டும். (இங்கு கொடுத்திருக்கும் முறையில்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெண்டைக்காய் வற்றல் சாப்பிட்டு பல யுகமா!
      நினைத்தால் எல்லாம் வாய்க்கும். வெயில் அடிக்கிறது என்கிறீர்கள்.
      செய்து பாருங்கள், மணிக்கொழுக்கட்டையை அம்மா இதை சிறு கொழுக்கட்டை என்பார்கள்.

      நீக்கு
  19. வெயிலுக்காக பால்கனியில் வந்து அமர்ந்து சுதர்ஸனக் க்ரியா செய்துகொண்டிருக்கிறேன். இப்போ சூரியன் மறைந்து மழை வரப்போவதுபோல மேகமூட்டம்.

    நேற்று இரவு புயல் காத்து, மழை என 25 நிமிடங்கள் கொட்டியது.

    உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?

    சாலைக்குமரன் கோவில்... சென்றவருடம் இருமுறை சென்றிருந்தோம். அதன் எதிரில் உள்ள வற்றல் வடாம் கடையா? அடுத்தமுறை பார்க்கணும்.

    அப்பக்கொடி உங்களுக்குத் தெரிந்திருக்குமே... எங்கு கிடைக்கும் என்பது தெரியுமா? நீங்கள் உபயோகிப்பீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுதர்ஸனக் க்ரியா செய்யும் போது வெயில் கிடைத்ததா?இங்கு மழை வருகிற மாதிரி இருந்து ஏமாற்றி சென்று விட்டது. காத்தும் இடி, மின்னல் அதிகமாய் மிரட்டியது.

      சாலைக்குமரன் கோவில் எதிரில் வற்றல் வடாம் இருக்கிறது எல்லா வற்றல்களும் கிடைக்கும். வெங்காய வடகம் மிக நன்றாக இருக்கும். ஜானகிராம் ஓட்டலில் தங்கி இருந்தோம். வெளியில் போய் ஆட்டோ டிரைவரிடம் பக்கத்தில் ஏதாவது வற்றல் வடகம் கடை இருக்கா என்று கேட்டோம் அவர் சொன்னதுதான் இந்த கடை. கோவிலுக்கும் போய் முருகனை தரிசனம் செய்து வடகங்கள், அப்பளங்கள் எல்லாம் வாங்கி வந்தோம்.

      அப்பக்கொடி கேள்வி பட்டு இருக்கிறேன் சமைத்தது இல்லை.
      ஒரு ஆச்சி வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன் பாளையம் கோட்டையில் . அது கிடைக்காத போது அதலக்காய் (பாவைக்காய் போல்) அல்லது மணத்தக்காளி போட்டு செய்வார்கள் என்று சொல்வார்கள். அந்த கடையில் கேட்டால் சொல்வார்கள்.

      உங்கள் கேள்வி என் அம்மா, மாமியாரிடம் கேட்டால் தெரியும் அவர்கள் இல்லை, சின்னமாமியார் திருநெல்வேலியில் இருக்கிறார்கள் அவர்களிடம் கேட்டுச் சொல்கிறேன்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
    2. http://andhimazhai.com/news/view/bharathi-mani-30-04-2015.html அப்பக்கொடி பற்றி பாரதிமணி

      நீக்கு
    3. கீசா மேடம்.. பாரதி மணி அவர்களின் பதிவை அப்போது படித்திருக்கிறேன். நான் நெல்லையில் அப்பக்கொடியைத் தேடினேன். நாட்டு மருந்துக்கடையில் ஸ்டாக் இல்லை என்று சொல்லிட்டாங்க. மோர்க்குழம்பு மாதிரி அப்பக்கொடி போட்டு என் பெரியம்மா செய்வார்கள். அது அவ்வளவு ருசியாக இருக்கும்.

      நீக்கு
    4. திரு பாரதி மணி அவர்களின் நேர்காணல் படித்தேன்.
      எங்கு கிடைக்கும் என்ற நெல்லைத்தமிழன் அவர்கள் கேல்விக்கு பதில் கிடைத்து விட்டது.
      நன்றி.

      நாகர்கோவிலில் சிறு வயதில் இருந்து இருக்கிறேன். என் அம்மாவுக்கு கண்டிப்பாய் தெரிந்து இருக்கும்.

      நீக்கு
  20. உப்பு, காரம் பெருங்காயம் இல்லாமல் வெல்லம் சேர்த்துச் செய்தால் இனிப்பு பெணெரெட் நல்லா இருக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிப்பு தோசையாக செய்யலாம். நானும் செய்து பார்க்கிறேன் ஒரு முறை.
      வெல்லம், ஏலக்காய், தேங்காய் துறுவல் சேர்த்தால் நல்லா இல்லாமல் போகுமா?
      பச்சைபயிறில் இனிப்பு சுண்டல் செய்வோம் நாங்கள்.
      சினை இடலி என்று செய்வோம். குழந்தை உண்டானவர்களுக்கு இட்லி மாவில் நடுவில் இந்த இனிப்பு சுண்டலை வத்து மேலே ஒரு கரண்டி மாவை விட்டு வேக வைத்து கொடுப்பார்கள். எனக்கு பிடிக்காது. நான் காய்கறி கலவையை நடுவே வைத்து வெஜிடபிள் இடலி செய்து சாப்பிடுவேன்.

      நீக்கு
  21. எனக்கு சிறு வயது முதலே எல்லா வகையான வத்தல், வடகம் ரொம்ப பிடிக்கும்.

    படங்களை பார்க்கும்போது ஆசையாக இருக்கிறது. சில விசயங்களை பணத்தால் வாங்க முடியாது என்பார்கள்.

    என்னால் இந்த சின்ன ஆசைகளைகூட தற்போது நிறைவேற்ற இயலாத வாழ்க்கைச்சூழல்.

    எதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும் அது ராக்கெட்டில் பறப்பதாக இருக்கட்டும் அல்லது இந்த வடகங்களை சுவைப்பதாக இருக்கட்டும். இதுகூட விதியின் செயலே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      உங்கள் ஊரில் அடிக்கும் வெயிலுக்கு வற்றல் போட்டால் இரண்டு நாளில் காய்ந்துவிடும்.
      அங்கு உள்ள ஆச்சிமார்கள் எல்லா வற்றலும் வெயில் காலத்தில் நிறைய போட்டு வைத்துக் கொள்வார்கள். கல்யாணத்திற்கு மாப்பிள்ளை வீட்டாருக்கு படி கணக்கில் வற்றல் வடகம் கொடுப்பார்களே!

      சில விஷயங்களை பணத்தால் வாங்க முடியாது ஒத்துக் கொள்கிறேன்.
      ஆனால் வற்றல்கள் இப்போது கிடைக்கிறது. அம்மாவிடம்ச்சொல்லி வறுத்து தரச்சொன்னால் வறூத்து தருவார்கள்.

      வாழ்க்கைச்சூழலை மாற்றி அமைத்து கொள்ள வேண்டும் ஜி. எவ்வளவு நாளாய் நீங்களும் வருந்தி, மற்றவர்களையும் வருந்த செய்ய போகிறீர்கள்?

      அவன் இன்றி ஒரு அணுவும் அசையாதுதான். இருந்தாலும் முயற்சி செய்தால் அவன் நம் கையை பிடித்து அழைத்துசெல்வான்.

      கவலைபட்டுக் கொண்டு இருக்காமல் மனதை மாற்ற முயற்சி செய்யுங்கள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  22. மிகவும் அருமையாக செய்துள்ளீர்கள் அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  23. சிறப்பாக வந்திருக்கிறது அம்மா...

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வத்தல்கள் அனைத்தும் போட்டு அசத்திவிட்டீர்கள். பெசரைட் அழகாக வந்திருக்கிறது.

    இங்கும் பால்கனியில் வெய்யில் கிடையாது அடிக்கடி மழை வேறு ஒருவாறு மோர் மிளகாய் வற்றல் போட்டு எடுத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //வத்தல்கள் அனைத்தும் போட்டு அசத்திவிட்டீர்கள். பெசரைட் அழகாக வந்திருக்கிறது.//

      நன்றி.

      மழையோடு கிடைக்கும் வெயிலில் மோர் மிளகாய் வற்றல் போட்டு விட்டீர்களா பேஷ் பேஷ்.

      உங்கல் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  26. கோமதிக்கா மணிக்கொழுக்கட்டை, வற்றல்கள், பெசரட்டு எல்லாமே நன்றாக வந்திருக்கிறது.

    நானும் இங்கு சுண்டைக்காய் வற்றல் போட்டேன். ஜவ்வர்சி வடாம், கூழ் வற்றல், இலை வடாம் போட்டேன். இன்னும் கொஞ்சம் போடலாம் என்று நினைத்தப்ப மழை வரத் தொடங்கிவிட்டது. நான் ஆரம்பித்ததும் லேட் தான்.

    கொத்தவரங்காய் வற்றல், வெண்டை கத்தரி வற்றல் போட வாங்கினேன். பகலில் நல்ல வெயில் வருகிறதுதான். என்னவோ போடாமல் சாப்பிட பயன்படுத்தி விட்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்

      //மணிக்கொழுக்கட்டை, வற்றல்கள், பெசரட்டு எல்லாமே நன்றாக வந்திருக்கிறது.//

      நன்றி.

      உங்கள் வற்றல் போடும் வேலையை மழை வந்து கெடுத்து விட்டதா? சற்று ஓய்வு எடுக்க சொல்கிரது போலும்.

      அடுத்து வாங்கி போட்டுவிடலாம் மற்ற வற்றல்களை. வெயில் வரும் இது மாதிரி வற்றல்கள் எப்போது வேண்டுமென்றாலும் போடலாம்.

      நீக்கு
  27. வாழைக்காய் அப்பளம் முன்பு செய்தது சமீபத்தில் செய்யவில்லை. நீங்கள் போட்டதும் போட ஆசை வந்ததுதான். பார்ப்போம்.

    அக்கம் பக்கத்து வீடுகளில் கூழ்வடகம் போடவில்லையா? என்றும் முடித்துவிட்டீர்களா? என்றும் ஒருவருக்கு ஒருவர் கேட்டுக் கொள்வார்கள்//

    ஹா ஹா ஹா அக்கா இப்படிக் கேட்டுட்டா அப்புறம் நம்ம ஸ்டேட்டஸ் என்னாகுறது…நம்ம மானம் கப்பலேற்ற முடியுமா…நாமளும் கோதாவில் இறங்கிடுவோமெ!! இது கூட ஒரு வகைல நல்லதுன்னு கூட நான் நினைப்பேன். இப்ப கூட பாருங்க திங்க பதிவுகள் அல்லது நீங்க போடுறது அதிரா , ஏஞ்சல் போடுறது எல்லாம் பார்க்கறப்ப ஆஹா நாம செஞ்சு எவ்வளவு நாளாச்சுனு சில ரெசிப்பிகள் மீண்டும் செய்வதுண்டு.

    ஸோ இதுவும் நல்லதுக்கே… இல்லையா அக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழைக்காய் அப்பளம் போட்டு விடுங்கள்.

      //நாமளும் கோதாவில் இறங்கிடுவோமெ!! இது கூட ஒரு வகைல நல்லதுன்னு கூட நான் நினைப்பேன்//

      எல்லாம் நன்மைக்குதான் கீதா.

      இப்போது நீங்கள் எல்லோரும் போடும் பதிவுகளில் ஆசை வந்து தான் போட்டுக் கொண்டு இருக்கிறேன்.


      நீக்கு
  28. வீட்டில் எல்லோரும், கஷ்டப்படுத்திக் கொள்ளாதே! போதும். வத்தல் எல்லாம் போட்டு வத்தலாய்க் காய்ந்தது எல்லாம் போதும்! என்கிறார்கள்.//

    நோ நெவர்!! அதை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் நமக்கு முடியும் என்றால் போட்டுவிட வேண்டியதுதன. அது நம்மை சுறு சுறுப்பாக வைக்கும்.
    என் மகன் என்னை மேலும் மேலும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறான். அம்மா எல்லாம் செய் டாக்குமென்ட் செய். உனக்கு வயசே ஆகலை.

    வெளிநாட்டுல எல்லாம் 80 வயசுலயும் கார் ஓட்டி தனியா போவாங்க உங்களுக்கே தெரியுமே கோமதிக்கா. நம்ம நாட்டுல ஏனோ பெண்கள் குழந்தை பெற்றதுமே ..ஹையோ உடம்பு ஏதோ ஆகிவிடும் என்றும் 40 வயதிலேயே இடுப்பு வலி முதுகு வலி என்று வந்து வேலைகளைக் குறைத்துக் கொண்டு விடுவதும் பார்க்க முடிகிறது. அதற்குக் காரணம் நம் வளர்ப்பு முறை என்றே சூழ்நிலை. 40 ஆனால் கிழவி என்பாங்க…50 நா வயதானவர்னு சொல்லிடறாங்க. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    நாமே நம்மை வயதாகவில்லைனு சொல்லி ஓடி ஆட வேண்டியதுதன கோமதிக்கா…உங்களுக்கு வயசாகவே இல்லையாக்கும் கேட்டேளா!! நீங்க யங்கோ யங்கு. பின்னே கால் வலி இருந்தும் மலை ஏறிப் போய் வந்தீங்களே சமணமலை எல்லாம்…அப்புறம் என்ன!!!!! ஜமாய்ங்க எஞ்சாய் கோமதிக்கா…

    கீதா

    பதிலளிநீக்கு
  29. //நோ நெவர்!! அதை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் நமக்கு முடியும் என்றால் போட்டுவிட வேண்டியதுதன. அது நம்மை சுறு சுறுப்பாக வைக்கும்.//

    ஆமாம், நீங்கள் சொல்வதும் சரிதான்.

    நம் நாட்டில் மற்றவர்களை சார்ந்தே பழகி விட்டோம். தனித்து இயங்க முடியாது.

    குழந்தை பெற்றவுடன் வேலைக்கு போகும் பெண்களும் இருக்கிறார்கள். ஒரு பிள்ளை பெற்றுவிட்டு உடம்பு முடியவில்லை என்று சொல்பவர்களும் நீங்கள் சொல்வது போல் இருக்கிறார்கள்.

    //நாமே நம்மை வயதாகவில்லைனு சொல்லி ஓடி ஆட வேண்டியதுதன கோமதிக்கா…உங்களுக்கு வயசாகவே இல்லையாக்கும் கேட்டேளா!! நீங்க யங்கோ யங்கு//

    ஆஹா ! தங்கை அக்காவிற்கு ஒரு கூடை ஐஸ் வைத்து விட்டார். இதோ எழுந்து ஓடுகிறேன்.
    கொரோனா காலம் முடியட்டும் மலைமேல் ஏறி வருவோம் கீதா.

    இலங்கை பதிவு சுட்டி கேட்டார் அது கொடுத்தேன் . இப்போது கொஞ்சம் டேஸ்போர்ட் மாற்றம் என்பதால் வியூ போய் பார்க்காமல் எடிட் போய் விட்டேன் போல அப்டேட் அழுத்தாமல் பப்ளிஸ் அழுத்தி விட்டேன் பதிவு புதிதாக போட்டது போல் இலங்கை தொடர் வந்து இருக்கு. அதை என்ன என்று பார்க்க வேண்டும்.

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.



    பதிலளிநீக்கு
  30. வத்தல் வடகம்லாம் சூப்பரா இருக்குக்கா .எனக்கு மிதுக்கு  வத்தல் காய் எப்படி இருக்கும்னு தெரியலை .அது கோவக்காய் மாதிரி இருக்குமா ?ஊரில்  இருந்து முந்தி வற்றல் வாங்கி வந்தது  இங்கே வறுத்து பொறிச்சிக்குழம்பில் சேர்ப்பேன் .தீர்ந்ததும் அதோட சாப்பிட கிடைக்கலை .
    இங்கே வெயில் இம்முறை நல்லா இருந்தது விதவித அப்பளம் வடாம் எல்லாம் போட்டாச்சு .பதிவில் போடத்தான் நேரமில்லாம இருக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
      கோவக்காய் போல்தான் இருக்கும்.
      அது வற்றலாகத்தான் கிடைக்கும் அதை வாங்கி மோர் கலந்து காய வைப்பேன்.
      திருநெல்வேலி பக்கம் காய் கிடைக்குமோ என்னவோ தெரியவில்லை.
      கல்யாணவீட்டில் இந்த மிதுக்கு வற்றல் இலையில் கண்டிப்பாய் உண்டு.

      வத்தல் வடகம் எல்லாம் போட்டு முடித்து விட்டீர்களா? நல்லது.
      நேரம் கிடைக்கும் போது பதிவுகள் போடுங்கள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.




      நீக்கு
  31. சிற்றுண்டியும், வற்றலும்...மிக சிறப்பு மா

    இப்பொழுதும் எங்கள் வீட்டில் சில நாட்கள் இரவில் சாதமும் ரசமும் அப்பளமும் தான் ..

    வாழைக்காய் தட்டைகள்-ஆஹா

    ஆந்திரா பெசரட்டு..எங்க சின்னவருக்கு மிக விருப்பமான தோசை மா

    எல்லா வத்தலும் சூப்பரா வந்து இருக்கு ...இந்த வருடம் நான் எந்த வடகமும் போடவில்லை ...இப்பொழுது மழையும் ஆரம்பித்துவிட்டது ...

    ஆனால் எனக்கும் சேர்த்து அம்மா வற்றல் போட்டு இருக்கிறார்கள் ..போகும் போது எடுத்து வரணும் ...

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
    இரவில் சுடச்சுட சாதம் சாப்பிட்ட காலங்கள் , அதுவும் மழைகாலத்தில் ரசம் சாதம் சொர்க்கம்தான்.

    பெசரட்டு சின்னவருக்கு பிடிக்கும் என்று கேட்டு மகிழ்ச்சி.
    அம்மா போட்டு இருப்பதால் எப்படியும் வற்றல் வடகம் கிடைத்துவிடும்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு