Friday, April 20, 2012

இலங்கைத் திருக்கோயில்கள்

இலங்கைத் திருக்கோயில்கள்

கதிர்காமம், முன்னேஸ்வரம், கேதீச்சரம், பொன்னம்பலவாணர்
திருக்கோயில் என நான்கு பதிவுகளில் எனது இலங்கைப்
பயணம் குறித்து எழுதியுள்ளேன். அதன் நிறைவுப் பகுதியாக
இக்கட்டுரை அமைகிறது.


1. திருக்கோணமலை. 12.03.2011
Thirukoneswaram

நாங்கள் திருக்கேதீச்சரத்திலிருந்து புறப்பட்டு தம்புலா என்ற
இடத்திற்குச்சென்று தங்கினோம். ”ஙிமங்கலா”(Gimengala
hotel)என்ற விடுதியில் தங்கினோம்.

’ஙி’ என்ற தமிழ் எழுத்து பயன்பாட்டில் உள்ளதை இங்கு தான்
பார்த்தோம்.

மறுநாள் திருக்கோணமலை சென்றோம்.

இத்திருக்கோயிலைத் திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

திருக்கோணமலைக் கோயில் ஒரு சிறிய மலைமீது
உள்ளது.
வடக்கு,கிழக்கில் நீலக்கடல் சூழ்ந்துள்ளது.


கோயிலுக்கு முன்னே பெரிய பாறை ஒன்று உள்ளது
பாறையின் ஒருபுறம் திருஞானசம்பந்தரின் திருவுருவச்சிலை
சுதைச்சிற்பமாக வடிக்கப்பட்டு வருகிறது. அவரது கைகளில்
தாளம் உள்ளது. பாறையின் மேலே கல்விளக்குத்தூண்
அமைந்துள்ளது. பாறையின் ஒரு புறம் படிகள் கீழிறங்கி
இன்னொரு புறம் மேலேறி வரும்படியாகக் கட்டப்பட்டு
வருகிறது. அங்கு இராவணன், தன் வீணையைக் கீழே
வைத்துவிட்டு சிவபெருமானை வணங்குவது போல் சிலை
அமைந்துள்ளது.
திருக்கோயில் அமைப்பு:

கிழக்கு நோக்கிய ராசகோபுரம்.

உள்ளே நுழைந்ததும்
கொடிமரம், பலிபீடம் அமைந்துள்ளன.
வலது புறம் அலுவலகம் அமைந்துள்ளது.

மஹாமண்டபம் அஸ்பெஸ்டாஸ் கூரையுடன் கூடியது,
அதைத் தாண்டியதும் அர்த்தமண்டபம் உள்ளது. கருவறையில்
கோணேஸ்வரர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்

விமானம் 3 அடுக்காக அமைந்துள்ளது. அம்மன் திருவுருவம்
தெற்கு நோக்கி உள்ளது. அம்மனின் இடதுபுறம் நடராசர்
திருமேனி அமைந்துள்ளது. தெற்குப்பிரகாரத்தில்
திருமுறைகள், நால்வர், சேக்கிழார் ஆகியோருக்குச் சந்நிதிகள்
உள்ளன. மணிமண்டபம், தெற்குவாசல் ஆகியனவும் உள்ளன.அம்மன் சந்நிதியில் தனியாகக் கொடி மரம், பலிபீடம்
உள்ளன. மேற்கு பிரகாரத்தில் பிள்ளையார், லிங்கம், முருகன்
திருவுருவங்கள் உள்ளன. இங்குள்ள முருகனை
அருணகிரியார் பாடியுள்ளார் .

“நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொ ணாமலை தலத்தொரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில்-வருவோனே
நிகழ்த்தும் ஏழ்பவ கடற்சூறை யாகவெ
எடுத்த வேல்கொடு பொடித்தூள தாயெறி
நினைத்த காரியம் அநுக்கூல மேபுரி-பெருமாளே.”

என்று அவர் பாடியுள்ளார்.

வடக்குப் பிரகாரத்தில் ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது.
வடமேற்கில் உற்சவர், பைரவர் சந்நிதி, யாகசாலை உள்ளன.
கிழக்குப்பிரகாரத்தில் வாயிலில் வடபுறம்-நாகலிங்கம்,
சூரியன் சந்நிதிகள் உள்ளன. கிழக்குப் பிரகாரத்தில் வாயிலில்
தென்புறம்-சந்திரன் சந்நிதி உள்ளது.

பூசை நேரம்: காலை 6.30, 11.30, 4.30
நடை சாத்தல்: 11.00, 1.00, 7.00

கோவிலுக்கு வடக்கில் தேர் நிலையுள்ளது.

குடமுழுக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.கோயிலுக்கு
வெளியே பாறைப்பகுதிகளில் பெரிய பிளவு அமைந்துள்ளது.
இதனை இராவணன் வெட்டு என்கிறார்கள். இராவணன்
வாளால் வெட்டியதால் இது ஏற்பட்டது என்கிறார்கள்.


கோவில் தரிசனம் முடிந்தவுடன் மதியம் உணவு நேரம் வந்து
விட்டது. திருக்கோணமலை ஊருக்குள்ளே உணவகங்கள்
உள்ளன. சைவ உணவகத்தைத் தேடித் தேடிக் கண்டு
பிடித்தோம். மண் சட்டியில் தயிர் வாங்கி கொண்டு வந்து
இருந்தோம். அந்த உணவகத்தில் காய் குழம்பு எல்லாம் ஒரு
தட்டில் போட்டு கொடுத்துவிடுகிறார்கள். தயிர் கிடையாது.
நாங்கள் வாங்கிப் போன தயிரை வைத்து மனதுக்கு
திருப்தியாக உண்டோம். உணவகத்தில் கொடுத்த மோர்
மிளகாய் நன்றாக இருந்தது.

சைவ உணவகம் இருப்பிடம்:
அன்னபூரணி சைவ உணவகம்,
415 dockyard road,trincomalee
Ph.026 5678888, 02656799999

திருக்கோணமலையிலிருந்து கண்டியை நோக்கிப்
புறப்பட்டோம். கண்டி செல்லும் பாதையில் 5.கி.மீ சென்று
மேற்கில் கிளைச்சாலையில் 4 கி.மீ சென்றால் கன்னியா
நீரூற்று அமைந்துள்ளது.

இவ்விடத்தில் வெந்நீர் ஊற்றுக்கள் பல உள்ளன.நீர்ப்பரப்பில்
நீர்க்குமிழிகள் உள்ளிருந்து வந்தவண்ணம் இருந்தது.தரை
பாசிபிடித்துவழுக்குகிறது. எச்சரிக்கையாகச் செல்லவேண்டும்.நீர் சூடாகவே உள்ளது.நீராடலாம். மலைப்பகுதிகளில் நடந்து
வந்த எங்களின் கால்களுக்கு அந்த வெந்நீர் இதமாக இருந்தது.


தம்பூலா என்ற இடத்தில் புத்தர் கோயில் உள்ளது.

இக் கோயிலை வெளியிலிருந்து தரிசனம் செய்தோம்.


கண்டியில் குயின்ஸ் விடுதியில் (Queens Hotel)தங்கினோம்.

>
கொண்டிருந்தது.பெருந்திரளான மக்கள் பார்வையாளராக இருந்தனர்.
பெரும்பாலான மக்கள் குடையைப் பிடித்துக்கொண்டிருந்தனர்.
மழை பெய்யாத அந்த இரவு நேரத்தில் ஏன் குடை பிடித்திருக்
கிறார்கள் என்று பார்த்தபோது அவர்கள் நின்றுகொண்டிருந்த
மரங்களின் எல்லாக்கிளைகளிலும் கொக்குப்போன்ற வெள்ளை
நிறப்பறவைகள் நிறைந்திருந்தன.அவற்றின்எச்சம் மழை
போலப் பொழிந்து கொண்டிருந்தது. அருகில் ஒரு கோயில்
திருக்குளம் போல நீர்நிலை உள்ளது. அதன் நீளமான பக்கச்
சுவர்களில் நிறைய விளக்கு மாடங்கள் இருந்தன.விசேஷ
காலங்களில் அதில் விளக்குகள் வைப்பர்களாம்.கண்டி நகரில் புத்தரின் பல் வைக்கப்பட்டுள்ள கோயிலுக்குச்
சென்றோம். முக்கிய இடமான சந்நிதி எப்போதும் திரையிடப்
பட்டே இருக்கிறது. புத்தரின் வரலாறு,புத்தரின் பல்
அவ்விடத்திற்கு வந்த வரலாறு முதலியவற்றை விளக்கும்
பெரிய ஓவியங்கள் உள்ளன.புத்தரின் திருவுருவம் உள்ள
மண்டபம் உள்ளது.கோயில் அழகிய அகழியால்
சூழப்பட்டுள்ளது.

***

2.கண்டி சிவன் கோயில் 13.03.11
கண்டிகண்டியில் ஸ்ரீ செல்வவிநாயகர் திருக்கோயில் முக்கியமாகக்
கருதப்படுகிறது. ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ சந்திரசேகர
மூர்த்தி பெருமான் கோயில் என்றும் இதைக்கூறுவர்

திருக்கோயில் அமைப்பு:

கோயிலினுள் நுழைந்ததும் பலி பீடம் கொடிமரம் முதலியவை
காணப்படுகின்றன. அடுத்ததாக நந்தியின் திருவுருவம் உள்ளது.
கல்லில் அமைந்த இந்த நந்தி திருவுருவத்தின் வாயில் ஒரு
பட்டாம்பூச்சி அமர்ந்திருப்பதுபோல் வடிக்கப்பட்டிருக்கிறது.
சோமசுந்தரர் சந்நிதி கிழக்கு நோக்கியும், மீனாட்சியம்மன்
சந்நிதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. சோமசுந்தரர்
சந்நிதிக்குத் தெற்கில், செல்வ விநாயகர் சந்நிதியும் இடப்புறம்
தண்டபாணி சந்நிதியும் உள்ளன. மீனாட்சியம்மன் சந்நிதியின்
அருகில் தெற்கு நோக்கி பஞ்சமுக விநாயகர் சந்நிதி, பள்ளி
யறை, நவக்கிரக சந்நிதி ஆகியவை உள்ளன.

வடமேற்கு திசையில் பஞ்சமூர்த்திகள் உள்ளனர். சூரியன்,
சந்திரன் ஆகியோரின் சந்நிதிகள் வாயிலின் இருபுறமும்
உட்புறம் அமைந்துள்ளன. தெற்குப் பிரகாரத்தில்
கிழக்கிலிருந்து மேற்காக துர்க்கை,நால்வர்,பெருமாள்
சந்நிதிகள் உள்ளன. தெற்கு திசையில் திருவாயில் ஒன்று
உள்ளது. அந்த வாயிலின் அருகில் மணிமண்டபம் உள்ளது.
கன்னி மூலையில் பிள்ளையார் சந்நிதி உள்ளது. மேற்கு
பிரகாரத்தில் சோமாஸ்கந்தர், காசிவிஸ்வநாதர்,விசாலாட்சி,
பஞ்சலிங்கம் ஆகியோருக்குச் சந்நிதிகள் உள்ளன. சிறிய
அழகிய மரத்தேர் ஒன்றும் இங்கே உள்ளது.ஆறுமுகர், ஐந்து
முகங்களைக் கொண்ட பஞ்சலிங்கம், நவக்கிரகம், பைரவர்
ஆகியோருக்கு வடக்குப் பிரகாரத்தில் சந்நிதிகள் உள்ளன.

மாசி மாதம் பெருந்திருவிழா நடைபெறுகிறது. பஞ்சரதபவனி,
பால்குடவிழாக்கள் நடைபெறுகின்றன.

செட்டியார்களால் திருப்பணி செய்யப்பட்டு சிறப்பாக நிர்வாகம்
நடைபெறுகிறது. அரு.லே.சேவு.நா. டிரஸ்ட்டின்
நிர்வாக
அறங்காவலர் கோயிலை நிர்வகித்து வருகிறார்.

***
3.பக்த அனுமான் திருக்கோயில்

நுவரேலியாவிலிருந்து கண்டி செல்லும் வழியில் இராம்போத
ஸ்ரீ பக்த ஹனுமன் ஆலயம் இருக்கிறது.

மேகம் சூழ்ந்த நுவரேலியா

மேகம் சூழ்ந்த இடம் தேயிலைச் செடிகள். இங்குள்ள தேயிலை
நன்றாக இருக்குமாம்.

பக்த அனுமான் திருக்கோயில்

திருக்கோயிலை
அடைய, சாலையில் இருந்து சற்றுதூரம்
மலை மேலே சில படிகள் ஏறிச் செல்லவேண்டும்.
திருக்கோயில் மேற்கு நோக்கி அமைந்து உள்ளது.

இங்கு ஹனுமானின் பேருருவம் வழிபடப்படுகிறது. சீதா,
ராமர், லக்ஷ்மணர் ஆகியோருக்கு விக்ரகங்கள் உள்ளன.
தியானேஸ்வர லிங்கம் ஒரு சந்நிதியில் அமைந்துள்ளது.
சிறப்புப்பூசைகள், அன்னதானம் ஆகியவை நடைபெறுகின்றன

சின்மயா மிஷன் இத்திருக்கோயிலை நிர்மாணித்து
நிர்வகித்து வருகிறது. இங்கு பள்ளி ஒன்றையும்
இந்நிறுவனம் நடத்திவருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில்
சுற்றுவட்டாரத்தில் உள்ள தமிழ்ப்பிள்ளைகள் வந்து
பயின்று வருகின்றனர். கோலம்போடுதல் போன்ற தமிழ்க்
கலாசாரங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. தையல், கர்நாடக
சங்கீதம், ஆங்கிலம், பகவத் கீதை வகுப்புகள் சனி, ஞாயிறு
நாட்களில் நடைபெறுகின்றன. பவுர்ணமி நாட்களில்
அடியார்கள் பலவிடங்களில் இருந்தும் இங்கு வருகின்றனர்.
நாங்கள் போனபோது குழந்தைகளுக்கு கோலம் சொல்லிக்
கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். குழந்தைகள் அழகாய்
கோலம் போட்டுக்கொண்டு இருந்தார்கள் கோலம் நன்றாக
இருக்கிறது என்று பாராட்டியவுடன் வெட்கம் கலந்த சிரிப்பால்
அதை ஏற்றுக் கொண்டனர். கோயிலின் கீழ்த்தளத்தில்
தமிழ் கற்றுக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

இக்கோயிலுக்கு சுவாமி தேஜோமயானந்தர் முன்னிலையில்
08.04.2001ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. வருசாபிசேக
விழாக்கள் நடந்து வருகின்றன

சாலைப் பிரிவின் அருகில் அருள்மிகு வரதராஜ
விநாயகர் கோயில் என்னும் சிறு கோயில் உள்ளது.

***

4. சீதா எலியா (அசோகவனம்)
13.03.11

நுவரேலியாவிலிருந்து கண்டி செல்லும் வழியில் 5 கி.மீ
தொலைவில் ’சீதாஎலியா’ என்னும் இடம் இருக்கிறது.
சீதாதேவி இராவணனால் எடுத்துச்செல்லப்பட்டு
இலங்கையில் சிறைவைக்கப்பட்டாள் என்று இராமாயணம்
கூறுகிறது.

அசோகவனம் என்று சொல்லப்படும் இடம் இதுதான் என்று
கூறுகின்றனர். இலங்கைச் சுற்றுலாக்கழகம் இதன் வளர்ச்சிக்கு
முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

இக்கோயிலில் சீதை, இராமன், இலக்‌ஷ்மணன்
ஆகியோருக்குச் சந்நிதிகள் உள்ளன. நூறு ஆண்டுகளுக்கு
முன் சீதை முதலியோரின் பஞ்சலோகச் சிலைகள்
கண்டெடுக்கப்பட்டு அவை இங்கு வைக்கப்பட்டுள்ளன.
அவை கருத்த நிறத்தைக் கொண்டிருக்கின்றன.இங்கு
குரங்குகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. அசோக மரங்கள்
அதிகமாக இருக்கின்றன .

ஒரு அசோகமரம் தனியாக உள்ளது. சீதாதேவி
அமர்ந்திருந்த இடம் அதுதான் என்று கூறுகிறார்கள்.

அருகில்
ஒரு நீரோடை இருக்கிறது. அனுமானின் பாதங்கள்
ஒரு பாறையில் காணப்படுகின்றன. அனுமன் மரத்திலிருந்து
குதித்த கால் தடங்கள் என்றார்கள்.

அருகில் உள்ள பாறை ஒன்றில்
சீதை தியானம் செய்ததாகக்
கூறப்படுகிறது.

கல்கத்தா மனோஜ் மோடி ஃபவுண்டேஷன், இத்திருக்கோயில்
அமைய உதவியிருக்கிறது. மாமல்லபுரம் ரவிஷங்கர் ஸ்தபதி
உருவாக்கிய சிற்பங்கள் இங்கு அமைந்துள்ளன.
தூண்களில் உள்ள சிற்பங்களில் ராமாயணக்காட்சிகள் உள்ளன.


நடை திறக்க நேரம் ஆகும் போல் இருந்தது அதனால்
கிளம்பலாம் என்று கிளம்பினால் எங்களை காரில் ஏறவிடாமல்
குரங்குகள் தடுத்தன. பயந்து போய் சந்நிதிக்குள் திரும்பிவந்த
போது பார்த்தால் அர்ச்சகர் கோவிலைத் திறந்து
கொண்டிருந்தார். மெய் சிலிர்த்து விட்டது. இவ்வளவு
தூரம் வந்து சீதாதேவியைப் பார்க்காமல் போவதா என்ற
எண்ணத்தைப் பூர்த்தி செய்யத்தான், சீதைக்கு உதவி செய்த
அனுமன் எனக்கும் உதவி செய்து இருக்கிறார்.


5.மாத்தளை முத்துமாரியம்மன் திருக்கோயில்
Matale muthu mariyamman thirukkoyil

மாத்தளையில் அமைந்துள்ள இத்திருக்கோயில் சிறப்பு
வாய்ந்தது. கோவிலின் அருகில் மாவலிகங்கை ஓடுகிறது.

108 அடி உயரமான கோபுரம் உள்ளது. மாசிமகத்தில் திருவிழா
நடைபெறுகிறது. அப்போது ஐந்து தேர்களில் பவனி
நடைபெறுமாம்.

6.கொழும்பு ,சம்மங்கோடு பம்பலப்பிட்டிய, மாணிக்கவிநாயகர்
திருக்கோயில்.
Sammangodu bampalappittiya sri maanikkavinaayakar
thirukkoyil,Lawrence road ,Colomboதண்டாயுதபாணி, பஞ்சமுக விநாயகர், ஆறுமுகர், துர்க்கை,
இடும்பன் சந்நிதிகள் இங்கு உள்ளன.சிறிய மரத்தேர் உள்ளது.

இங்கு எங்கள் வழிபாட்டை முடித்ததும் இலங்கையில்
கோயில்வழிபாடுகள் நிறைவடைந்தன.


***

பம்பலப்பிட்டியில் சிறந்த சைவ உணவுக்குரிய இடம்:
அமிர்தா ஹோட்டல்.

கொழும்புவில் வாணி விலாஸ் என்னும் உணவு விடுதியும்
நன்றாக இருக்கும் என்றார்கள்.


இலங்கையில் ஹிக்குடுவா கடற்கரை,பெண்டொட்டா
கடற்கரை ஆகிய இடங்களுக்குச் சென்றோம்.ஹிக்குடுவா கடற்கரைபெண்டொட்டா கடற்கரையிலிருந்து கார்,ரயில்,படகு இவற்றின்
தோற்றம்.
பெண்டொட்டாஇலங்கையில் பார்த்த சில இடங்கள்:
அநுராதபுரம்,புத்தஸ்தூபி

இது எங்கள் பயணத்தில் இல்லாவிட்டாலும், பயணித்த வழியில்
இருந்ததால் இதையும் பார்த்தோம்.
இலங்கை மன்னார் அருகில் ஓரிடத்தில் பெருக்கமரம்
என்று குறிக்கப்படும் மரம் பார்த்தோம்.உலகில் உள்ள
பெரியமரங்களில் இதுவும் ஒன்றாம். சுற்றளவு
பெரிதாக உள்ளது.மறுநாள் 15.03.2011காலை விமானம் மூலம் புறப்பட்டோம்.

இலங்கைப் பயணம் இறையருளால் இனிதே நிறைவேறி
இந்தியா திரும்பினோம். இலங்கை பயணக்கட்டுரை
இத்துடன் முற்றுப் பெற்றது.

************

55 comments:

baleno said...

நேரில் பயணித்து பார்க்கும் உணர்வை தந்த அருமையான இலங்கை பயண கட்டுரை.அழகிய படங்கள். நன்றி.

அந்த உணவகத்தில் காய் குழம்பு எல்லாம் ஒரு தட்டில் போட்டு கொடுத்துவிடுகிறார்கள். தயிர் கிடையாது.

இந்தியாவில் தமிழகத்தவர்களுக்கு காய் கறி குழம்பு சோற்றுடன் தயிர் மிக முக்கியம் என்று இந்தியா சென்றவர்கள் மூலம் அறிந்திருக்கிறேன். இலங்கையில் அப்படி இல்லை தான்.

Anonymous said...

''..ஙிமங்கலா' - 'ஙி' என்ற தமிழ் எழுத்து பயன்பாட்டில் உள்ளதை இங்கு தான்
பார்த்தோம்....''
இது பொய் . இது சிங்களப் பெயர். அவர்கள் அதை அப்படியே மொழி பெயர்த்து உள்ளனர். இலக்கணம் தெரியாத தவறு.
திருக்கோணமலைக் கோயில் ஒரு சிறிய மலைமீது உள்ளது.
வடக்கு-கிழக்கில் நீலக்கடல் சூழ்ந்துள்ளது.
இந்த இயற்கைத்துறைமுகத்திற்காகத் தானே வல்லரசுகள் அடிபடுகிறது... இலங்கை எனக்குச் சொந்தம், உனக்குச் சொந்தமென்று. இந்;த வல்வரசுகளிற்கு அடிபணிய மாட்டேன் என்பது தானே பிரபாகரனின் கொள்கையாக இருந்தது. நல்ல பயணக் கட்டுரை சகோதரி வாழ்த்துகள். திருகோணமலை, டம்புல, (உள்ளே சுப்பர் றொக் ரெம்பிள் இருக்கிறது.)கன்னியா, தலதா மாளிகை (ஐ மீன் பற் கோயில்) எல்லாம் வாசிக்க நாம் போய் வந்த நினைவு வந்தது. மிக்க நன்றி. ஒரு றிப்பீட்டுக்கு. வாழ்த்துகள் சகோதரி.

ராஜி said...

உங்களோடு நாஙகளும் இலங்கைக்கே வந்தார் போன்று இருந்தது உங்க பயணக் கட்டுரை. படங்களும் அருமை. பகிர்வுக்கு நன்றி

கோமதி அரசு said...

வாங்க baleno, உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க வேதா. இலங்கதிலகம், உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோதரி.

கோமதி அரசு said...

வாங்க வேதா. இலங்கதிலகம், உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோதரி.

கோமதி அரசு said...

வாங்க ராஜி, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

மனம் கவர்ந்த பலமுறை படிக்கவைத்த அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

மிக நீண்ட பதிவு.

மீண்டும் வருவேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

கோவை மாநகரில் மிகவும் புகழ்பெற்ற கோனி அம்மன் போல இங்கு கோணேஸ்வரருக்கு கோயிலா?

சபாஷ்.

கோனி என்றால் “அரசி” “ராணி” என்று பொருள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நாங்கள் வாங்கிப் போன தயிரை வைத்து மனதுக்கு திருப்தியாக உண்டோம். உணவகத்தில் கொடுத்த மோர் மிளகாய் நன்றாக இருந்தது.//

அடடா, இந்த இடத்தில் என் நாக்கில் நீர் ஊற வைத்துவிட்டீர்கள்.

தயிர்சாதம் + நன்கு வறுபட்ட சூடான மோர்மிளகாய் மிக நல்ல காம்பினேஷன் ஆச்சே.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்னை ஸீதாதேவி அமர்ந்திருந்த அசோக மரத்தையும், அசோக வனத்தையும் கண்டு களித்து வந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

நானும் உங்களுடன் சேர்ந்து வந்தது போல மகிழ்ச்சி ஏற்பட்டது, இந்தப் பதிவினைப்படிக்கும் போது.

அழகான பதிவு.

அபூர்வமான படங்கள்.

அசத்தலான மிக நீண்ட பயணக் கட்டுரை.

மெயில் மூலம் எனக்குத் தனித்தகவல்.

அனைத்துக்கும் நன்றி.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

கோவை2தில்லி said...

அருமையான படங்களுடன், தகவல்களும் இந்த பதிவுக்கு அழகு சேர்க்கின்றன.
குரங்குகள் வம்பு செய்து உங்களை சீதா தேவியை தரிசிக்க வைத்தது மெய் சிலர்க்க வைத்ததும்மா.

இந்த பதிவு அப்டேட் ஆகாமல் போயிருக்கிறது. அதனால் தான் மகளிர் சக்தியிலும் வரவில்லை. என்னுடையதும் அப்படித் தான் சிலசமயம் ஆகும்.

ராமலக்ஷ்மி said...

பயணம் செய்பவர்களுக்கு அவசியாமான குறிப்புகள் தகவல்களுடன் அருமையான பகிர்வு. படங்கள் யாவும் அழகு. கடலின் நீலம் மனதை அள்ளுகிறது. கோவைக்கவி சொன்னது சரியாக இருக்கலாமென்றாலும், ’ஙி’ எழுத்தை நானும் இப்போதுதான் முதன் முறையாகப் ப்யன்பாட்டில் இருப்பதைக் கேள்விப்படுகிறேன். புராணங்களில் படித்த அசோகவனத்தை நேரில் பார்த்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்கும்.

நிறைவான பயணக்குறிப்பு. நன்றி.

KABEER ANBAN said...

அடேயப்பா ! ஒரே கட்டுரையாக இலங்கைப் பயணத்தை முடித்து விட்டீர்களே. படங்களை எல்லாம் ஆல்பம் வடிவில் பெரிதாகக் கண்டு மகிழ்ந்தேன்.

பெருக்க மரம் பிரமிக்க வைக்கிறது. தங்களின் இனிய பயணத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

கோமதி அரசு said...

வாங்க இராஜராஜேஸ்வரி, உங்கள் பாரட்டுக்கள், வாழ்த்துக்களுக்கு நன்றி.

கோமதி அரசு said...

வாங்க கோபாலகிருணன் சார், இயற்கை எழில் கொஞ்சும் திருகோணமலை நீங்கள் சொல்வது போல் ராணிதான்.

7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் தனது பதிகங்களில் திருகோணசப்பெருமானையும், திருகோணமலையின் இயற்கை அழகையும், தென்னகத்தில் உள்ள இராமேஸ்வரத்தில் இருந்தவாறு கோணஸ்வரத்தின் சிறப்பைப் பாடியுள்ளார்.
மேலும், அப்பரும், சுந்தரரும், அருளிய சேத்திரகோவைத் தாண்டகம்,ஊர்த்த்தொகை,திருநாட்டுத்தொகை,, போன்ற பதிகங்களில் திருக்கோண்ஸ்வரம் வைப்புத்த்லமாக பாடப்பட்டுள்ளது, சேக்கிழார் இயற்றிய திருதொண்டர் புராணத்தில் திருகோண்மலையைபற்றி குறிப்பிடுகிறார்.
தேவாரம், புராணம், இதிகாசம், வரலாறு ஆகியவற்றின் மூலம் இதன் பெறுமையை அறியலாம்.

//தயிர்சாதம் + நன்கு வறுபட்ட சூடான மோர்மிளகாய் மிக நல்ல காம்பினேஷன் ஆச்சே.//

நல்ல காம்பினேஷன் தான்.

உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்.

கோமதி அரசு said...

//குரங்குகள் வம்பு செய்து உங்களை சீதா தேவியை தரிசிக்க வைத்தது மெய் சிலர்க்க வைத்ததும்மா.//

இராமாயணத்தில் முக்கியமான இடம் அல்லவா அசோகவனம்! அதை பார்க்காமல் போகலாமா! என்னை தரிசிக்க வைத்த வானரங்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டே வந்தேன் வழி எல்லாம்.

அந்த இடம் (வனம்) மிக மிக அழகாய் இருந்தது ஆதி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ராமலக்ஷ்மி,நீலநிறம், வானுக்கும் கடலுக்கும் நீலம் நிறம் என்ற பாடல் போல் அழகான நீலக் கடல். உங்கள் கேமிராவில் நீங்கள் எடுத்தால் இன்னும் அழகாய் இருக்கும் கடல்.

//அசோகவனத்தை நேரில் பார்த்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்கும்.//

மறக்க முடியாத அனுபவம் தான் ராமலக்ஷ்மி. என்னை வழி மறித்த குரங்குகள் முகத்தில் மட்டும் குங்குமம் பூசியது போன்ற தோற்றம் உடைய குரங்குகள்.
மற்ற குரங்குகளுக்கு அப்படி இல்லை சாதரணமாய் இருந்தன.

சீதாதேவியின் தரிசனம் நெஞ்சை விட்டு நீங்காது.

கோமதி அரசு said...

வாங்க கபீரன்பன், போன மார்ச்சில் போனது இலங்கை. நான்கு பதிவுகள் எழுதினேன் முதலில் இன்னும் இரண்டு பதிவுகளாய் போட வேண்டும் என்று நினைத்து இருந்தேன்.
அதற்குள் திருக்கயிலை பயணத்தொடர், மற்றும் கட்டுரைகள் என்று இதை போட முடியாமல் போனது. அடுத்து தலயாத்திரை போக உள்ளேன் அதனால் இதை நிறைவு செய்து விடுவோம் என்று போட்டு விட்டேன் அதனால் பெரிதாகப் போய்விட்டது.

பெருக்க மரம் எங்களையும் பிரமிக்க வைத்தது.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி கபீரன்பன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

// நடை திறக்க நேரம் ஆகும் போல் இருந்தது அதனால் கிளம்பலாம் என்று கிளம்பினால் எங்களை காரில் ஏறவிடாமல் குரங்குகள் தடுத்தன. பயந்து போய் சந்நிதிக்குள் திரும்பி வந்த போது பார்த்தால் அர்ச்சகர் கோவிலைத் திறந்து கொண்டிருந்தார். மெய் சிலிர்த்து விட்டது. இவ்வளவு தூரம் வந்து சீதாதேவியைப் பார்க்காமல் போவதா என்ற எண்ணத்தைப் பூர்த்தி செய்யத்தான், சீதைக்கு உதவி செய்த
அனுமன் எனக்கும் உதவி செய்து இருக்கிறார்.//
மனதைத் தொட்ட வரிகள் கோமதியம்மா. ஒரு பைசா செலவில்லாமல் எங்களையும் இலங்கை திருக்கோயில்களுக்கு புனித யாத்திரை கூட்டிச் சென்று விட்டீர்கள். கோடி புண்ணியம் உங்களுக்கு. மிக்க நன்றி.

கோமதி அரசு said...

வாங்க புவனேஸ்வரி ராமநாதன், நீங்களும் தான் கோவில்களை நேராக சென்று தரிசனம் செய்வது போல் எங்களை எல்லாம் கூட்டி செல்வீர்கள்.
நம்மை இது போல தரிசிக்க வைத்து அதைப்பற்றி எழுத வைத்த இறைவனுக்கு நன்றி.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

பூவனம் said...

அசோகவன அனுபவம் மறக்க முடியாமல் நிலைத்திருக்கும்...நல்ல படங்களுடன் நல்ல் குறிப்புகள்..நன்றி

கோமதி அரசு said...

வாங்க பூவனம், உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

எத்தனை பெரிய கட்டுரை கோமதி. அத்தனையும் நினைவாகப் பதிந்து வைத்துப் படங்களோடு கொடுத்திருக்கிறீர்கள் ஒரு பயண ஏடாகப் பயன்படுத்தலாமே. நான் இதுவரை இலங்கைக் கோவில்களைப் பற்றி அதிகம் படித்ததில்லை.
தில்லானா மோகனாம்பாளில் வரும் கண்டி கதிர்காமம் பற்றிய எழுத்து னட்டுமே தெரியும். இவ்வளவு விவரமும்,அதுவும் சீதா,ராமை,ஆஞ்சனேயரின் பாதச் சுவடுகள் என்று அனைத்துமே அற்புதம்.பகிர்வுக்கு மிக நன்றி.அம்மா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஊரும் இயற்கையும் அழகு..
படங்களும் விவரிப்புகளும்
நாங்க பார்க்காத இடத்தையும் அழகா சுத்திக்காண்பிச்சமாதிரி தான் அம்மா..:)

கே. பி. ஜனா... said...

அருமையான திருத்தலப் பயணக் கட்டுரை..

பாச மலர் / Paasa Malar said...

மறக்காமல் நினைவில் வைத்திருந்து எத்தனை அழகிய படங்களுடன் பதிவு...வாழ்த்துகள் நன்றிகள்...அசோக வனம் மறக்க முடியாதுதானே..

மாதேவி said...

இலங்கைப் பயணக்கட்டுரை நிறைவாக எழுதியுள்ளீர்கள்.மகிழ்கின்றேன்.

பலஇடங்களையும் கண்டு படங்களுடன் விரிவாகப் பகிர்ந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

கோமதி அரசு said...

வாங்க வல்லி அக்கா, உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
பெரியகட்டுரையாக போட்டு உங்களை கஷ்டப்படுத்திவிட்டேனா?
நாட்கள் போய் கொண்ட்டே இருக்கே முடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதியது.

கோமதி அரசு said...

வா கயல்விழி, நன்கு சுத்தி பார்த்தாச்சா? மகிழ்ச்சி.

கோமதி அரசு said...

வாங்க கே.பி. ஜனா, உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க பாசமல்ர், அசோகவனம் மறக்க முடியாதுதான். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க மாதேவி, இலங்கை பயணக் கட்டுரை அனைத்தையும் படித்து கருத்து சொன்ன உங்களுக்கு நன்றி.

Asiya Omar said...

அருமையான சுற்றுலாப் பகிர்வு. மிக்க நன்றி.மிக அழகான பகிர்வு.

கோமதி அரசு said...

வாங்க ஆசியா. பகிர்வை ரசித்தமைக்கு நன்றி.

மதுரை சொக்கன் said...

மிகச் சிறப்பான பயணக் கட்டுரை,நன்றி.
என் வலைப்பூவுக்கு வாருங்களேன்
http://shravanan.blogspot.com/2012/04/blog-post.html

இராஜராஜேஸ்வரி said...

குழந்தைகள் அழகாய்
கோலம் போட்டுக்கொண்டு இருந்தார்கள் கோலம் நன்றாக
இருக்கிறது என்று பாராட்டியவுடன் வெட்கம் கலந்த சிரிப்பால்
அதை ஏற்றுக் கொண்டனர்

aஅழகுக் கோலம்..

விமலன் said...

நல்ல படப்பிடிப்பு.வாழ்த்துகள்.ரசனை நிறைந்த மனம் எதை மையம் கொள்கிறடு என்பதே இங்கு பேசுபொருளாய்
இருக்கிறது,அதுவே தங்களது படைப்புகளில் தெரிகிறது.
நன்றி,வணக்கம்.

G.M Balasubramaniam said...

தமிழகம் தாண்டி தமிழ் பேசும் நல்லுலகைக் காணக் கொடுத்து வைக்கவில்லை. பாடல் பெற்ற தலங்கள் பலதும் அங்கிருப்பது ஒரு அயல் நாடு என்னும் எண்ணத்தையே போக்கிவிடுமே. எல்லாவற்றையும் பார்க்கக் கொடுத்து வைத்த நீங்கள் உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.

கோமதி அரசு said...

வாங்க பாலசுப்பிரமணியன் சார், நீங்கள் சொன்னது போல் பாடல் பெற்ற தலங்களை பர்ர்க்கவே இலங்கை போனோம்.

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

kavithai (kovaikkavi) said...

சகோதரி தாங்கள் 8க்கும் மேற்படக் கருத்துகள் எழுதிக் குவித்திருந்தீர்கள். ஆச்சரியப் பட வைத்துவிட்டீர்கள். என்னவென்றால் எனது கவிதைகளை கதம்பம் என்று வலையிட்டிருந்தேன். இப்போது நேரமுள்ளு நேரம் இதை பிரித்து (இயற்கை, தமிழ்,காதல் என்று) வகைப் படுத்துகிறேன். சில நேரம் ஒன்றில் கன நேரம் செலுத்தவும் வரும். எனக்கே தெரியாது கூகிள் அதைப் பிறருக்கு அனுப்புகிறது. மிக்க நன்றி சகோதரி. ஆண்டவன் அருள் நிறையட்டும்.
Vetha.Elangathilakam
http://kovaikkavi.wordpress.com

ஸ்ரீராம். said...

திரிகோணமலைக் கோவில் படத்தைப் பார்த்த போது கோபுரம் மிகச் சிறியதாக இருந்தது போலப் பட்டது.கண்டி சிவன் கோவில் படமும் அவ்வாறே தோன்றியது.
வெந்நீர் ஊற்றுகள் நல்ல தகவல்...
’ஙி பயன்பாட்டு ஆச்சர்யத்தை அளித்தது. வேதா பின்னூட்டம் கண்டு விளக்கமும் கிடைத்தது.
அசோகவனம் தகவல்கள் சுவாரஸ்யம்.அங்குள்ள கோவில் கண்டதும் அதன் கோபுரங்கள் பெரியதாக இருப்பது பார்க்க முடிந்தது. குரங்குகள் தடுத்து சன்னதி பார்க்க வைத்தது மிக ஆச்சர்யம்.அழகிய படங்களுடன் மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தது பயணக் கட்டுரை.

கோமதி அரசு said...

வாங்க விமலன், உங்கள் முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வாழ்த்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ஸ்ரீராம், உங்கள் முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கும், பாராட்டுக்கும் நன்றி.

Lakshmi said...

சுற்றுலா பதிவு ரொம்ப நல்லா இருக்கு.

VijiParthiban said...

அருமையான படங்களும் , தகவல்களும் நேரில் பார்க்கும் உணர்வை தந்தது.
அனைத்துக்கும் நன்றி. எனது வலைப்பூ கொஞ்சம் திறந்து பார்த்து வாருங்கள் அக்கா.

Anonymous said...

நலமா?. நலம் நலமறிய ஆவல். இறையருள் கிட்டட்டும்.
வேதா. இலங்காதிலகம்.

கோமதி அரசு said...

வாங்க லக்ஷ்மி அக்கா, உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

நேற்று தான் ஊரிலிருந்து வந்தேன்.

கோமதி அரசு said...

வாங்க விஜி பார்த்திபன்,
உங்கள் முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
உங்கள் வலைப்பூவை அவசியம் பார்க்கிறேன்.

VijiParthiban said...

சுற்றுபயணம் எப்படி இருந்தது கோமதி அக்கா அவர்களே .......

கோமதி அரசு said...

பயணம் நலமாய் அமைந்து மனதுக்கு மகிழ்ச்சி கொடுத்தது விஜி.

VijiParthiban said...

மிக்க மகிழ்ச்சி அக்கா ...

இந்திரா said...

நேரில் தரிசிக்க வேண்டும் என்று ஆவலைத்தூண்டுகிறது உங்கள் பதிவு தகவல்களுக்கு மிகவும் நன்றி அம்மா

அப்பாதுரை said...

இப்பொழுது தான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அருமையாக இருக்கிறது.